Kamparmalai UK Foundation

Kamparmalai UK Foundation

Here in the UK we hold events so our cultures and traditions will not be forgotten

Our main objective is to improve our villagers living standard by; helping students, creating employment opportunities and financially assisting those needing medical help.

23/07/2024

திருமதி ரவீந்திரன் வனிதாமணி வேண்டிக்கொண்டதின்படி அவர்களுடைய மகனின் நிலைமை கருதி இன்று குழாக்கிணறு அடித்து கொடிக்கப்பட்டது. பாரதி.
22/07/2024

Photos from Kamparmalai UK Foundation's post 11/07/2024

கம்பர்மலை யுகே ஷ்தாபனம்,
லண்டன்.
10/07/2024.

யாவருக்கும் வணக்கம்,

நீங்கள் திருமதி ரவீந்திரன் வனிதாமணி அவர்கள் எமது ஷ்தாபனத்திடம் உதவி கோரி எழுதியுள்ள கடிதத்தை படித்திருப்பீர்கள், அவர்களுடைய குடும்ப நிலை பரிதாபத்துக்குரியது.
இப்போதுதான் ஒரு சிறிய வீட்டை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள், கிணறும் இல்லை! எதற்கும் இவர் மகன் நிலைமை குறித்து அவர் அடுத்த மாதம் வீட்டுக்கு திரும்ப வரும்போது தண்ணீர் வசதியாவது இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து ,எமது ஷ்தாபனம் அவர்களுக்கு ஒரு குழாக்கிணறு கட்டிகொடுக்கலாம் என்ற முடிவை எடுத்து அதற்கான வேலைகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எமது ஷ்தானத்தின் கையிருப்பில் உள்ள பணத்தில் இருந்தே இந்த வேலையை இவ்வளவு துரிதமாக ஆரம்பிக்க முடிந்தது என்பதை யாவருக்கும் அறியத்தருவதில் மிகுந்த மகிழ்ச்சி.

இத்தோடு சில புகைப்படங்களையும் உங்களுடைய பார்வைக்காக இங்கே தருகிறேன்.

நன்றி,
பாரதி.

Photos from Kamparmalai UK Foundation's post 09/07/2024

கம்பர்மலை யுகே ஸ்தாபனம் ,
லண்டன் .
08 / 07 / 2024 .

யாவருக்கும் வணக்கம்,

இங்கு உதவி கேட்டு, திருமதி ரவீந்திரன்.வனிதாமணி எழுதிய கடிதத்தை உங்கள் பார்வைக்காக தருகிறேன். இவர்கள் மணல் தெருவில் வாழ்ந்த காலம்சென்ற வடி அண்ணாவின் மகள் ஆவார்.
குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு சென்று கட்டிட வேலை செய்து பிழைக்க முற்பட்டடவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டமை மிகவும் வருத்தமளிக்கிறது.

தம்பி , இராசையா சொன்னார் இவருக்கு நெஞ்சுக்கு கிழே உடம்பு இயங்க மாட்டாது என்று , எனவேதான் இவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் .உங்கள் ஆலோசனைகளை தெரிவித்தால் மிகவும் வரவேற்கப்படும்.

நன்றி ,
பாரதி .

Photos from Kamparmalai UK Foundation's post 18/06/2024

கம்பர்மலை யுகே ஸ்தாபனம் ,
லண்டன் .
12/06/2024.

யாவருக்கும் வணக்கம் ,

இன்று எங்கள் கம்பர்மலை யுகே ஸ்தாபனம் 13 வது ஆண்டில் கால்பதித்து தொடர்ந்தும் எமது ஊர் மக்களுக்கான சேவைகளை செய்து வருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியோடு அறியத்தருகிறேன் .
அத்தோடு, இன்றுதான் எங்கள் ஞானவைரவர் ஆலய திருவிழா கொடியேற்றமும் நடைபெற்று இருக்கிறது என்பதையும் அறியத்தருகிறேன். இது ஓர் நல்ல அடையாளம். கோவில் அழகாக, மிக கம்பீரமாக தோற்பமளிக்க கட்டி முடித்து இருக்கிறார்கள் தற்போதைய நிர்வாகத்தினர். முக்கியமாக காரியதரிசி திரு சேகர், அவரது அயராத உழைப்பிற்கும் , முயற்சிக்கும் எமது எல்லோரதும் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
அத்தோடு ,ஊரில் உள்ளவர்களும் , வெளிநாடுகளில் வசிக்கும் எம்மவர்கள் பலரும் அன்பளிப்பாக பணம் வழங்கி இருக்கிறார்கள் , இன்னும் பலர் பலவகையான பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

எமது ஸ்தாபனம் எமதூர் மக்களின் வளர்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்டது ஆனால் தற்போது அயலூர்களான தொண்டமானாறு, கெருடாவில் ,அக்கறை, சோம்பாடு, கரவத்தனை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை ஏன் வன்னிவரை சென்று வேண்டியோருக்கு உதவிகள் பல செய்துகொண்டு வருகிறது, அவை இன்னும் தொடரும்.

கல்விக்கு நாங்கள் முக்கியமளிப்பது யாவரும் அறிந்ததே! அதனால்தான் தொண்டமானாறு கலைவாணி ச ச நிலையம் நடத்தும் சிறுவர் பாடசாலை ஆசிரியருக்கான மாதாந்த சம்பளத்தை தொடர்ந்தும் வழங்கி வருகிறோம் , அத்தோடு அங்கே G.C.E (A/L) படிக்கும் சில மாணவர்களுக்கு புத்தகம் , கொப்பி போன்றவற்றை வழங்கி இருக்கிறோம். ஆனால் எங்கள் ஊரில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை? படிக்கிற பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது! G.E.C படிக்கிற, பாஸ் பண்ணுகிற மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இது பெற்றோரின் பிழையா அல்லது ஒருவருக்கு ஒருவர் கொடைவள்ளல், தியாகி என்று தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் போலி பணக்காரர்களா?

ஊருக்கு யார் நல்லது செய்தாலும் அதை வரவேற்போம் , ஆதரிப்போம்.

Else,the time is now to expose these people
இறுதியாக, தொடர்ந்தும் அன்பளிப்பாக பணம் தந்துகொண்டிருக்கும் அங்கத்தவர் , ஆதரவாளர்கள் அனைவருக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு ,
பாரதி .

26/02/2024

இன்றய தினம்(25.02.2024) தொண்டைமானாறு அக்கரை கிராமத்தை சேர்ந்த இ.புஸ்பலதா அர்களின் மகனின் மருத்துவச் செலவிற்காக ரூபா 25000/:வழங்கி வைக்கப்பட்டது

Photos from Kamparmalai UK Foundation's post 26/02/2024

யாவருக்கும் வணக்கம்,

இங்கு, தொண்டமானாறு அக்கரையில் வசிக்கும் திருமதி இ.புஷ்பலதா அவர்கள் தனது 8 வயதுடைய சிறுவனின் வைத்திய செலவுக்காக எங்கள் ஷ்தாபனத்திடம் உதவி கோரி எழுதியுள்ள கடிதத்தை உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறேன்.
இந்த கடிதத்தையும் அதன் வைத்திய விபரங்களையும் பார்த்த தம்பி Dr இராசையா சொன்னார் "அண்ணெ இந்த உதவியை கட்டாயம் செய்ய வேண்டும்"என்று.
எனவே, இந்த சிறுவனின் வைத்திய செலவுகள் எமது ஷதாபனத்தின் கை இருப்பில் வழங்கப்படும் என்பதை அறியத்தருகிறேன்.

நன்றி,
பாரதி.
(KUKF- 24/02/2024)

02/02/2024
29/01/2024

மரண அறிவித்தல் .

தொண்டமானாறு, ஸ்ரீலங்காவை பிறப்பிடமாகவும் லண்டன் Algate ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு வரதலிங்கம் ஜெயசுதன் அவர்கள் சென்ற புதன்கிழமை (24 / 01 /2024 ) அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை அறியத்தருகிறேன்.
அன்னார் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இறுதி கிரிகைகள் விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
“Rest in Pease Magane”
தொடர்புகளுக்கு :
பாரதி .
Tel No ; 07905872145

Videos (show all)

திருமதி ரவீந்திரன் வனிதாமணி வேண்டிக்கொண்டதின்படி அவர்களுடைய மகனின் நிலைமை கருதி இன்று குழாக்கிணறு அடித்து கொடிக்கப்பட்டத...