Vinayagamoorthy M
"தீதும் நன்றும் பிறர் தரவும் வரும்"
அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் Super Good Films -ன் 92 வது திரைப்படத்தின் முதல் விளம்பரம் இன்று வெளியிடப்பட்டது.
Money Heist - சீரிஸ் 4 வரை இன்று பார்த்து முடித்திருக்கிறேன். (38 episodes)
ஸ்பெயின் நாட்டின் மின்ட் ராயல் எனும் வங்கியை 11 நாட்களில் 9 பேர் எப்படி புத்திசாலித்தனமாகக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதையும் அவர்களில் ஒருவர் 2 வருடத்திற்கு பிறகு மாட்டிக்கொள்ள, அவரை மீட்க அதே கொள்ளையர்கள் மீண்டும் அரசு வங்கியிலிருந்து மிக அதி உயர் பாதுகாப்புடன் இருக்கும் 90 டன் தங்கத்தை எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதையும் விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார்கள். மக்கள் அறியாத அரசு என்ற அமைப்பின் இன்னொரு முகத்தை அம்பலப்படுத்துகிறது இத்தொடர். ஒவ்வொரு பகுதியும் செம. மாஸ்கோ மற்றும் நைரோபியின் மரணங்கள் உண்மையிலேயே வருத்தப்பட வைக்கிறது. முக்கியமாக வங்கி கவர்னரின் பாதுகாவலன் காண்டியா தப்பித்து சென்று கொள்ளையர்களை வேட்டையாடும் பகுதிகள் செம த்ரில்லிங். ரக்கேல், புரொபஸருக்கு ஆதரவாக மாறக்கூடும் என்பதை யூகிக்க முடிந்தது. ரியோ, டென்வர், டோக்யோ, etc... தொடர் முடிந்தும் நினைவில் நிற்கிறார்கள். புரொபசர் கதாபாத்திரம் அறிவுக்கூர்மையின் உச்சம். கொள்ளையர்களாக அறிமுகமாகும் இவர்கள் போகப்போக மக்களுக்கு புரட்சிக்காரர்களாக மாறுகிறார்கள். இத்தொடரை கண்டிப்பாக ஒருமுறையாவது அனைவரும் பார்க்க முயற்சியுங்கள். Crime Drama ரசிகர்களுக்கு இத்தொடர் அருமையான அனுபவத்தை கொடுக்கும். தவறவிடாதீர்கள்.
்யூனிசம்_ஓர்_எளிய_அறிமுகம் – தோழர் இரா.பாரதிநாதன்
பொதுவாக கம்யூனிசம் என்றாலே “சாத்தியமற்ற கற்பனை” என்று சட்டென பகடி செய்யும் பலரையும் நான் சிறுவயது முதலே கண்டிருக்கிறேன். அப்படி பகடி செய்யும் அவர்களெல்லாம் அதைப் படித்து உள்வாங்கி அலசி ஆராய்ந்துவிட்டு பின்னர்தான் விமர்சனம் செய்கிறார்களோ என்றும் நினைத்ததுண்டு. ஆனால், அப்படியெதுவும் இல்லை என்று பின் வளர்ந்த நாட்களில் புரிந்துகொண்டேன்.
மார்க்சியத்தை புரிந்துகொள்ள அறிவு மட்டும் போதாது, சமூக மாற்றத்தை விரும்பும் உள்ளார்ந்த ஆழ்ந்த தேடல் இருக்க வேண்டும் என்பதே முக்கியமான அடிப்படையாக நான் உணர்கிறேன். உலகில் எந்தவொரு அரசியல் தத்துவமும் இந்தளவுக்கு அறிவியல் பூர்வமான சமூகப் பார்வையை மக்களுக்குக் கொடுக்கிறதா எனத் தெரியவில்லை.
இயற்கையையும் சமூக வரலாறையும் கட்டுக்கதைகளின்றி சொல்லும் சமூக அறிவியல் கல்வியான மார்க்சியத்தை நியாயப்படி பள்ளிகளில் பாடமாக்கியிருக்க வேண்டும். ஆனால் ஏறக்குறைய உலகின் எல்லா குழந்தைகளையுமே ஆளும் வர்க்க கருத்துக்களின் ஒற்றைச் சார்பாக தயாரித்து ஆளாக்கி மதம் தோய்த்து சகல வழிகளிலும் அவர்களை சுரண்டவே வழிவழியாய் முனைப்பு காட்டுபவர்கள் இதற்கு எக்காலத்திலும் அனுமதிக்கப் போவதில்லைதான்.
சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் ஒருமுறை மார்க்சிய அடிப்படையை படிப்பது நல்லது. அப்படியான தேடலுடன் என் நட்பு வட்டத்தில் யாரேனும் இருந்தால் இந்த எளிமையான புத்தகம் அவர்களுக்கு துணை செய்யும். மிக அருமையான இந்தப் புத்தகத்தைப் பற்றி; எழுத்து நடை பற்றி; உள்ளடக்கம் பற்றி சுருக்கமாய் சொன்னால் “மிக மிக அருமை”.
புத்தகத்தின் விலை : ரூபாய் 150/-
ஆசிரியர் : இரா.பாரதிநாதன், Bharathi Nathan. வெளியீடு காம்ரேட் பப்ளிகேஷன்ஸ் பிரபாகரன் போன்: 9095143560
புத்தகத்தின் பின்குறிப்பு…
"துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வு எனவும், மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு, ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்டதாக இருக்கிறது? பாவ புண்ணியக் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி முடங்கிவிடுவதா? இல்லை அறிவியல்பபூர்வமான விடையைக் கண்டடைவதா? அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்று சேருமிடம் மார்க்சியமின்றி வேறில்லை"
அத்தத்துவத்தை எளிய மொழியில் யாவருக்கும் புரியும் வகையில் தோழர் பாரதிநாதன் அவர்கள் தந்திருக்கிறார்.
மார்க்சியத்தை புரிந்துகொள்ள முயலும் தொடக்கநிலை வாசகர்களுக்கு இந்நூல் பெருந்துணை செய்யும்"
வி மூ
This is tha trailer of "CARBON" movie. We hope you all like it. Pls watch and support the team...
https://youtu.be/pwoW6ONrMhU
Carbon - Official Trailer | Vidaarth, Dhanya. B | R. Srinuvasan | Sam CS | Benchmark Films - Official | , | | | Music :Composed and Arranged By Sam CS Keys: Sachin Lal, S...
"ரசவாதி" (The Alchemist) - பாலோ கொயலோ
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சான்டியாகோ என்ற ஆடு மேய்க்கும் ஒரு இடையன் தன் கனவை எப்படி அடைந்தான் என்பது பற்றிய கதை.
வாழ்வின் ஒருகட்டத்தில் 'நம்மால் எதுவும் முடியாது, எல்லாம் விதிப்படிதான்' என்று சோர்வடைபவர்கள் தங்கள் கனவுகளை கைவிட்டுவிடுகிறார்கள். இவர்கள் சாதாரண மனிதர்கள். ஆனால் ரசவாதிகள் அப்படியல்ல.
இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒரு ஆன்மா இருக்கிறது. மனிதர்கள் தங்களுக்கு இடையே பல்வேறு மொழிகளில் பேசுவதைப் போல இப்பிரபஞ்சமும் மனிதர்களுடன் பேசுகிறது. அது சகுனங்களை அடிப்படையாகக் கொண்ட மொழி. பிரபஞ்சத்தின் இம்மொழியை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. எவரொருவர் தன் பிறவி நோக்கம் தெரிந்து கொள்ளவும் தன்னுடைய கனவையும் லட்சியத்தையும் இடைவிடாமல் தொடர்ந்து உண்மையாக அடைய முயற்சிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே இப்பிரபஞ்ச மொழியை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறானவர்களுக்கு மட்டுமே தன் கனவை அடைய இப்பிரபஞ்சம் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. இவர்களால் நடக்கப்போவதை எல்லாம் யூகிக்க முடியும். இவர்களே ரசவாதிகள்.
இந்த ரசவாதிகள் & பிரபஞ்சத்தின் மொழியைப் பற்றியும் ஆழமாகப் பேசுகிறது இப்புத்தகம்.
கதையை சுருக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு கீழே கதைச்சுருக்க சுட்டியை இணைத்துள்ளேன். விரும்புவோர் சுட்டியை சொடுக்கிப் பார்க்கவும்.
https://youtu.be/ec4vwprQ09U
"Eat That Frog" - Brian Tracy
ஒரு செயலை நாம் விரைவில் செய்து முடிப்பதற்கு ஒரு அக்கறை உள்ள நண்பனாய் ஆலோசனை சொல்கிறது இப்புத்தகம். நேரத்தை சரியாக நிர்வாகம் செய்வதும், திட்டமிடலும்தான் வெற்றியாளர்களின் அறிகுறி. இதுதான் ஒருவரது வாழ்வில் வெற்றி; தோல்வி; முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்போதிலும் இதை ஒருவரால் பின்பற்ற முடிகிறதா என்று கவனித்தால் வாய்ப்புகள் மிகவும் குறைவே. இதற்கு மிகவும் உதவி செய்கிறது இப்புத்தகம். அருமையான புத்தகம் கண்டிப்பாக ஒரு முறை வாசியுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புத்தகத்திலிருந்து...
"உங்களுடைய ‘செய்யப்பட வேண்டிய வேலைகள்’ பட்டியலில் உள்ள எல்லாவற்றையும் செய்வதற்குப் போதுமான நேரம் ஒருபோதும் இருப்பதில்லை, இனி ஒருபோதும் இருக்கப் போவதும் இல்லை. வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை. முக்கியமான விஷயங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி, அவற்றை முழுமையாக முடிப்பதை அவர்கள் உறுதி செய்கின்றனர். அவர்கள் முதலில் தங்கள் தவளைகளை உட்கொண்டு விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக, உயிருள்ள ஒரு தவளையை நீங்கள் உட்கொண்டுவிட்டால், அன்று அதை விட மோசமான வேறு எதுவொன்றையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்ற நிம்மதியோடு உங்களுடைய அன்றைய நாள் முழுவதும் உங்களால் வேலை செய்ய முடியும் என்ற பழைய கூற்று ஒன்று உள்ளது. உங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கின்ற, ஆனால் உங்கள் வாழ்வின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தைக் கையாள்வதைக் குறிப்பதற்கு, ‘ஒரு தவளையை உட்கொள்வது’ என்ற உருவகத்தை பிரையன் டிரேசி இந்நூலில் பயன்படுத்துகிறார்."
பூமி & வெள்ளை யானை இவ்விரு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தேன்.
பூமி
உழவுத் தொழிலையும் அதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் மாஃபியாக்களையும் பற்றிய மேலோட்டமானத் தகவல்களைக் கோர்த்து படமாக்கி இருக்கிறார்கள். படத்தில் சொல்லப்படும் தீர்வுகள் எதிலும் நம்பிக்கை வரவில்லை. பசுமை விகடன் கட்டுரைகளைப் படிப்பதுபோல் இருக்கிறது.
வெள்ளை யானை
உழவுத் தொழிலின் நடைமுறைச் சிக்கல்களை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்கள். முன்பின் கதை சொல்லலால் படம் சற்று தொய்வாக நகர்கிறது. உழவர்களின் அதே தெரிந்த வழக்கமானப் பிரச்சினைகள். நெல்லுக்கு விலை கேட்டு அலைவது, பூச்சி மருந்து வணிகக் கொள்ளை, பெங்களூர் காட்சிகள் எல்லாம் நல்ல பதிவு. இறுதியாகப் படம் சொல்ல வருவதை ஆழமாகப் பதிவு செய்திருக்கலாம். தனியார்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி உழவுத் தொழில் செய்வதைக் காட்டிலும் அரசு வங்கிகளில் கடன் பெற்று உழவு செய்வது மேலானதுதான். வங்கிக் கடன் பெற்ற தொகை, உழவுக்கு செலவு செய்தது, 90 மூட்டை நெல் விற்றது... இப்படி உழவுக் கணக்கையும் கணக்குப்போட்டு சொல்லியிருக்கலாம். அதனால் கடன், வட்டி தொடர்பான பிரச்சினைகள் மனதில் பதியவில்லை. என்றாலும் உழவர்களின் துயரத்தைப் பேசுகிறது படம்.
மேதகு
இறுதிப்போர் நடந்த 2009 -லிருந்து ஈழம், பிரபாகரன் என்றாலே லேசான மன அழுத்தம் கூடவே இருக்கிறது. இதனாலேயே இப்படத்தை பொறுமையாகப் பார்க்கலாம் என்றிருந்தேன். இன்று பார்த்தேன். மிகவும் தரமான ஆக்கம். வலுவான வசனங்கள். தமிழர்கள் அனைவரும் கட்டாயம் தங்கள் குடும்பத்துடன் காணவேண்டிய நல்ல திரைப்படம்.
கமலி from நடுக்காவேரி
வெளியானபோது அருமையான படம் என்று எல்லோரும் சொன்னார்கள். இப்போதுதான் பார்த்தேன். நதி போன்ற திரைக்கதை. வில்லனோ பரபரப்போ திடீர் திருப்பங்களோ இல்லை. ஆனாலும் சிறிதும் தொய்வில்லாமல் ஈர்ப்புடன் நகருகிறது படம். கிராமத்திலிருந்து ஒரு பெண் படிப்பில் சாதிக்கிறாள் என்பதும் கிராமத்து ஆட்களுக்கு உதாரணமாக ஆகிறாள் என்பதும் நெகிழ்ச்சியை வரவைக்கிறது. இறுதிக்காட்சியில் Quiz நடத்தப்படும்போது நம்மையும் மீறி கண்ணீர் துளிர்க்கிறது. படமாக்கப்பட்ட விதம் அருமை. இயக்குநருக்கும் அவரது குழுவிற்கும் பாராட்டுகள். இன்னும் இப்படத்தைப் பார்க்காதவர்கள் ஒருமுறை (zee5 ல்) குடும்பத்துடன் பார்த்துவிடுங்கள்.
C/O காதல்
தெலுகில் c/o Kancharapalem என்று வெளிவந்த படம் தமிழில் c/o காதல் என்று மீண்டும் எடுத்து வெளியிடப்பட்டது. மிகவும் அருமையான படம். தெலுகில் பார்த்தபோது என்னமாதிரி உணர்வு இருந்ததோ அதே உணர்வு சிறிதும் குறையாமல் தமிழிலும் இருந்தது எனக்கு. முக்கியமாக நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை உட்பட அனைத்துமே தரமாக இருக்கிறது. பார்க்கத் தவறியவர்கள் ஒருமுறை பாருங்கள்.
தாலிபான் இயக்கத்தை துவங்கி ரஷ்யாவை அலறவிட்டு ஆப்கானிஸ்தானை பிடியில் கொண்டுவந்த ஓமர், இறுதியாக மரணத்தை தழுவியபோது அடக்கம் செய்ய ஆட்களும் இல்லை, சவப்பெட்டியும் இல்லை. 13 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை அதிலும் 4 ஆண்டுகளாய் வெளியே வராமல் ஒரே அறைக்குள்ளே மறைந்து இருந்திருக்கிறார். அவர் இறந்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தாலிபான் இயக்கத்திற்கே தெரிந்துள்ளது.
Bynge App -ல் பா.ராகவன் எழுதும் "மீண்டும் தாலிபான்" தொடர் மிக அருமையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. முன்னுரையை மட்டும் வாசிக்கலாம் என்று திறந்து இன்றுடன் வெளியான 10 அத்தியாயங்களையும் நிறுத்தாமல் ஒரே வாசிப்பில் தொடர்ந்து படிக்குமளவுக்கு விறுவிறுப்பாக இருக்கிறது. இயன்றவர்கள் வாசிக்க முயற்சியுங்கள்
"C/o காதல்" - ஹிமாம்பர் ஜஸ்டி
தெலுகில் c/o Kancharapalem என்று வெளிவந்த படம் தமிழில் c/o காதல் என்று மீண்டும் எடுத்து வெளியிடப்பட்டது. மிகவும் அருமையான படம். தெலுகில் பார்த்தபோது என்னமாதிரி உணர்வு இருந்ததோ அதே உணர்வு சிறிதும் குறையாமல் தமிழிலும் இருந்தது எனக்கு. முக்கியமாக நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை உட்பட அனைத்துமே தரமாக இருக்கிறது. பார்க்கத் தவறியவர்கள் ஒருமுறை பார்த்துவிடுங்கள்.
"கமலி from நடுக்காவேரி" - ராஜசேகர் துரைசாமி
வெளியானபோது அருமையான படம் என்று எல்லோரும் சொன்னார்கள். இப்போதுதான் பார்த்தேன். நதி போன்ற திரைக்கதை. வில்லனோ பரபரப்போ திடீர் திருப்பங்களோ இல்லை. ஆனாலும் சிறிதும் தொய்வில்லாமல் ஈர்ப்புடன் நகருகிறது படம். கிராமத்திலிருந்து ஒரு பெண் படிப்பில் சாதிக்கிறாள் என்பதும் கிராமத்து ஆட்களுக்கு உதாரணமாக ஆகிறாள் என்பதும் நெகிழ்ச்சியை வரவைக்கிறது. இறுதிக்காட்சியில் Quiz நடத்தப்படும்போது நம்மையும் மீறி கண்ணீர் துளிர்க்கிறது. படமாக்கப்பட்ட விதம் அருமை. இயக்குநருக்கும் அவரது குழுவிற்கும் பாராட்டுகள். இன்னும் இப்படத்தைப் பார்க்காதவர்கள் ஒருமுறை (zee5 ல்) குடும்பத்துடன் பார்த்துவிடுங்கள்.
"மேதகு" - கிட்டு
இறுதிப்போர் நடந்த 2009 -லிருந்து ஈழம், பிரபாகரன் என்றாலே லேசான மன அழுத்தம் கூடவே இருக்கிறது. இதனாலேயே இப்படத்தை பொறுமையாகப் பார்க்கலாம் என்றிருந்தேன். இன்று பார்த்தேன். மிகவும் தரமான ஆக்கம். வலுவான வசனங்கள். தமிழர்கள் அனைவரும் கட்டாயம் தங்கள் குடும்பத்துடன் காணவேண்டிய நல்ல திரைப்படம்.
பூமி & வெள்ளை யானை இவ்விரு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தேன்.
"பூமி" - லக்ஷ்மண்
உழவுத் தொழிலையும் அதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் மாஃபியாக்களையும் பற்றிய மேலோட்டமானத் தகவல்களைக் கோர்த்து படமாக்கி இருக்கிறார்கள். படத்தில் சொல்லப்படும் தீர்வுகள் எதிலும் நம்பிக்கை வரவில்லை. பசுமை விகடன் கட்டுரைகளைப் படிப்பதுபோல் இருக்கிறது.
"வெள்ளை யானை" - சுப்ரமணியம் சிவா
உழவுத் தொழிலின் நடைமுறைச் சிக்கல்களை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்கள். முன்பின் கதை சொல்லலால் படம் சற்று தொய்வாக நகர்கிறது. உழவர்களின் அதே தெரிந்த வழக்கமானப் பிரச்சினைகள். நெல்லுக்கு விலை கேட்டு அலைவது, பூச்சி மருந்து வணிகக் கொள்ளை, பெங்களூர் காட்சிகள் எல்லாம் நல்ல பதிவு. இறுதியாகப் படம் சொல்ல வருவதை ஆழமாகப் பதிவு செய்திருக்கலாம். தனியார்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி உழவுத் தொழில் செய்வதைக் காட்டிலும் அரசு வங்கிகளில் கடன் பெற்று உழவு செய்வது மேலானதுதான். வங்கிக் கடன் பெற்ற தொகை, உழவுக்கு செலவு செய்தது, 90 மூட்டை நெல் விற்றது... இப்படி உழவுக் கணக்கையும் கணக்குப்போட்டு சொல்லியிருக்கலாம். அதனால் கடன், வட்டி தொடர்பான பிரச்சினைகள் மனதில் பதியவில்லை. என்றாலும் உழவர்களின் துயரத்தைப் பேசுகிறது படம்.
"அறம்" (சிறுகதை) - ஜெயமோகன்
வாழ்க்கை முழுதும் வறுமையோடே கழிக்கும் பிரபல (!) அக்கால எழுத்தாளர் ஒருவர் தன் மகளின் திருமணத்திற்கு பண உதவி கேட்டு பதிப்பாளரை அணுகுகிறார். பதிப்பாளரோ எழுத்தாளரை மிகவும் கேவலப்படுத்தி பணம் தராமல் திட்டி அனுப்புகிறார். பதிப்பாளரின் குடும்பத்தை சாபம் விட்டு கதவில் ஒரு சாபக்கவி எழுதி வைத்துவிட்டு வந்துவிடுகிறார் எழுத்தாளர். இயலாமையால் உலகையும் வாழ்வையும் வெறுத்து போதையின் உச்சியில் மூழ்கி மரண வாசலை தொட முனைகிறார் எழுத்தாளர். அவரின் சாபக் கவிதையையும் சூழலையும் தெரிந்துகொண்ட பதிப்பாளரின் மனைவி தன் கணவனை கடுமையாகச் சாடுகிறார். எழுத்தாளரின் சாபம் போகும்படி பண உதவி செய்யச் சொல்கிறார். அவ்வாறே பதிப்பாளர் செய்கிறார். மேலும் எழுத்தாளரை வீட்டுக்கு அழைத்து தங்க நாணயமும் 500 ரூபாய் பணமும் கொடுக்கிறார் மனைவி. ஒரு நாவல் எழுதி மாதம் 30 ரூபாய் சம்பாதிக்கவே தடுமாறும் எழுத்தாளருக்கு இந்த வெகுமதி இன்ப அதிர்ச்சி தருகிறது. அப்படியே தங்கள் குடும்பத்தை வாழ்த்தி அந்தம்மாள் ஒரு கவிதை கேட்க அவ்வாறே எழுதி வைக்கிறார் எழுத்தாளர்.
அக்காலத்தில் எழுத்தை தொழிலாகக் கொண்டவர்களின் வாழ்வை அருமையாகப் பதிவு செய்கிறது இக்குறுநாவல்.
கதையின் ஒலி வடிவம் கீழே...
https://youtu.be/8Jq7TyuxgHc
Season 1 - Special - அறம் - ஜெயமோகன் - Aram - Jeyamohan எழுத்தாளர் ஜெயமோகன் Jeyamohan அவர்கள் எழுதிய 'அறம்' சிறுகதை.இந்தக் கதையை ஏற்கனவே படித்தவர்களுக்குத் தெரியும் இந்தக் ...
"நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?" - ஜெயகாந்தன்
1967 ல் எழுதப்பட்ட சிறுகதை. யாசகம் எடுத்து மட்டும் உண்டு வாழும் ஒரு பிராமண கதாகலாட்சேபரின் மனைவி தன் கணவனுக்கு தெரியாமல் 1 ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டை யதேச்சையாக வாங்கி விடுகிறாள். அவர் எப்போதும் கணவன் சொல்லை தட்டாதவள். யாசகம் தவிர அடுத்த வேளைக்கு பொருள் சேர்ப்பதே மாபாவம் என்று வாழும் அவளது கணவர், லாட்டரியில் பணம் கிடைத்தால் மகா பாவம் என்று சாடுகிறார். கணவனுக்கு பயந்து, லாட்டரி அடிக்கக்கூடாது என்று பகவானிடம் வேண்டுகிறாள் மனைவி. இந்நிலையில் ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுகிறது. லாட்டரி சீட்டை யாருக்கும் தெரியாமல் கிழித்துப் போடும்படியும், வேறொருவருக்கு கொடுத்து நன்றி சேர்த்தாலும் பாவமூட்டைதான் என்று கணவர் கறாராகச் சொல்லிவிட, மனைவி குழம்புகிறார். யாசகம் எடுத்து சாப்பிடுவதில் எனக்கென்ன பெருமை? இவர் போய்விட்டால் பிச்சையெடுத்து சாப்பிடுவதாகத்தானே அவாளெல்லாம் பேசுவா? நான் ஏன் பிச்சை எடுத்து சாப்பிடனும்? என்று தீவிரமாய் யோசிக்கிறார் மனைவி. 1967 ல் 1 லட்சம் ரூபாய் என்பது இப்போதைய ஒரு கோடி ரூபாய்க்கு சமம். இப்ப நான் என்ப செய்யட்டும் சொல்லுங்கோ? என்று அந்த பிராமணப் பெண்மணி வாசகர்களிடம் கேட்கிறார்.
ஆச்சாரப்படி யாசக வாழ்க்கையை பெருமையாக எண்ணும் ஒரு பிராமணனையும் அதைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு பிராமணப் பெண்மணியின் எண்ண ஓட்டத்தையும் அருமையாகப் பதிவு செய்கிறது இச்சிறுகதை.
கதையைக் கேட்க கீழே சொடுக்கவும்...
https://youtu.be/V1Mzc6ZGNFQ
Season 3-நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ? - ஜெயகாந்தன் - Naan Enna Seyyatum sollungo - Jayakanthan ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்க...
"பைத்தியக்காரப் பிள்ளை" - எம்.வி.வெங்கட்ராம்
எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் "பைத்தியக்காரப் பிள்ளை" என்ற சிறுகதையை வாசித்தேன். இதில் நடக்கும் அம்மாவுக்கும் பையனுக்குமான சண்டை போன்றுதான் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் நடக்கிறது. அதிலும் பல குடும்ப்பங்களில் அம்மாவும் மகளுமே மாமியார் மருமகள்கள் மாதிரி சண்டையிட்டுக் கொள்வதையும் பார்க்கலாம். எப்படியான குணம் இருந்தாலும் அம்மாக்களை புனிதமாகவே பதிவு செய்யும் அநேக இலக்கிய வடிவங்களிலிருந்து இச்சிறுகதை மாறுபட்டு அசலைக் காட்டுகிறது. உறவுமுறைகளுக்கிடையே முதலில் சாதாரணமாக நடக்கும் சச்சரவுகளின் முடிவில் தங்கள் வாழ்வையே முடித்துக்கொள்ளும் ஆவேசம் பலருக்கும் வந்திருப்பதை தினமும் ஏதாவதொரு நாளிதழ்களில் காண்கிறோம். இச்சிறுகதையில் வரும் ராஜத்திற்கு கனவில் நெடுநாட்களாய் வெறிநாய் ஒன்று துரத்துகிறது. நிஜத்தில் வெறிநாய் கடித்தால் பைத்தியம் பிடிக்கப்போகிறது என்பது ஊர்களில் வழக்கு. ஆனால் அம்மாவின் தொல்லை தாளாத ராஜத்திற்கு இறுதியில் இரயிலில் தலைகொடுக்கும் அளவுக்கு ஆற்றாமை எழுகிறது. இந்தப் பைத்தியக்காரப் பிள்ளையின் முடிவும், அவன் பிணத்தைப் பார்த்து அம்மா ஒப்புக்கு அழுவதும், பிணத்தைப் பார்க்க போகாமல் அவன் காதலி பேசும் வார்த்தையும் ராஜத்தின்மேல் மிக அதிக இரக்கம்கொள்ள வைக்கிறது. நல்லதொரு சிறுகதை.
சிறுகதையைக் கேட்க கீழே சொடுக்கவும்...
https://youtu.be/tkW5SP30p2A
பைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம் - சிறுகதை|Short Story Follow the channel onWebsite: https://kadha-kelu-kadha-kelu.pinecast.co/Facebook - https://www.facebook.com/kadhakeluseriesRSS Feed - https://pinecast.com/fe...
#சிறைகள்_வாடகைக்கு...
குற்றம் செய்தவர்களை தண்டிக்க அரசு நடத்தும் சிறைக்கூடங்களே தற்போது ஓரளவு வசதியாகவே இருக்கின்றது. (புழல் சிறை நவீனமாகவே இருக்கிறது) ஆனால் சென்னையில் சொந்த வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் பலர் வீடு என்ற பேரில் சிறை கூடங்களையே பெரும்பான்மையாகக் கட்டியிருக்கிறார்கள். ஒரு மனிதன் வாழ குறைந்தபட்ச அளவாக இவ்வளவு இடம் இருக்க வேண்டும்; இவ்வளவு இடத்தைவிட குறைவான அளவிற்கு வாடகைக்கு விடும் வீடுகள் இருக்கக்கூடாது என்றும் சட்டமியற்றி மீறுபவர்களை கடுமையாக தண்டிக்க வழி செய்தால் நல்லது. ஒருநாட்டின்; மக்களின் மன நலன் என்பது அவர்கள் வசிக்கும் இடம் & சூழலையும் பொருத்ததே. காற்றோ வெளிச்சமோ வர துளியும் வழியில்லாமல்கூட இப்படி வீடுகட்டியிருக்கும் இவர்களின் மனநிலை என்ன? வீடு எனும் பேரில் மக்களை சிறைக்கொட்டடிகளில் அடைக்க இவர்கள் ஏன் இவ்வளவு ஆர்வமாய் செயல்படுகிறார்கள்? நடுத்தர வர்க்க மகிழ்ச்சியான முகங்களை சென்னையில் கவனிப்பதே அரிதாக இருக்கிறது. சென்னையில் பலர் தாங்கள் வசிக்கும் சிறைகளுக்கு மாதாந்திர வாடகை செலுத்திக் கொண்டிருப்பது இத்தலைமுறையின் துயரம்.
தேங்காய்க்கும் நிலத்தடி நீருக்கும் என்ன சம்பந்தம்?|Electric boy|Ground water coconut|SFIT|Tamil Series name: தீர விசாரிப்பதே மெய் Episode:38: தேங்காய்க்கும் நிலத்தடி நீருக்கும் என்ன சம்பந்தம்? ================================== Syska bulb https://www.am...
20.11.2020
சமீபத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் "அப்பாவின் வேஷ்டி" என்ற சிறுகதையை வாசித்தேன்.
அப்பா இறந்த பிறகு அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்த வேட்டியைப் பார்த்து மகன் உருகும் சிறுகதை அது. அந்த சிறுகதை மனதை ஆழமாய் ஊடுருவி நின்றது. என் அப்பாவின் கடைசிக் காலத்தில் அவர் வைத்திருந்த எல்லா உடைகளையும் 20 ஆண்டுகளாய் இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். சுடுகாட்டிலிருந்து எடுத்துவந்த அவரது சாம்பலை கேணி முழுதும் தூவிவிட்டு எரிந்துபோன எலும்புத் துகள்களை சுமார் 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தேன். இதெல்லாம் என்னவிதமான பைத்தியக்காரத்தனம் என்று தெரியவில்லை.
மனிதனைத் தவிர எந்தவொரு உயிர்களிடமும் இல்லாத பதவி "அப்பா" என்பது. எல்லா உயிர்களையும் அதனதன் அம்மாக்களே வளர்க்க, மனிதனிலோ கூடுதலாய் இன்னொரு அம்மாக்களாய் அப்பாக்கள். இன்று என் அப்பா மாசிலாமணி அவர்களின் 20 வது நினைவுநாள். இரத்தப் புற்றுநோய் வந்து அவர் இறக்கும் தருவாயில் வயது 60. என் 20 வயதுவரை அவர் இருந்தார். அவர் இருந்தவரையில் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. புரிந்துகொண்ட காலத்தில் அவர் இருக்கவில்லை. இன்னும் கொஞ்ச காலம் எங்களுடன் வாழ்ந்திருக்கலாம்தான். யாரிடம் முறையிடுவது?
இருந்தவரையில் அவர் எது சொன்னாலும் எதிர்ப்பாகவே நடந்திருக்கிறேன். மனம் நோகடித்திருக்கிறேன். அவர் இறப்புக்குப் போய் வந்த பின்னர் அவர் எனக்கு கடைசியாக எழுதிய கடிதம் ஒன்று தாமதமாகக் கிடைத்தது. எனக்காக வேறு யார் இப்படி அக்கறைப்பட்டிருக்க முடியும்? அவர் இல்லாத காலங்களில் தனிமையில் கணக்கின்றி மன்னிப்பு கோரி அழுதிருக்கிறேன். தன் ஒரே மகன் இறந்த பின்னர் என் பாட்டி சந்தித்த இரவுகளோ மிகவும் கொடியது. இரவெல்லாம் ஒப்பாரி பாடி அழுதுகொண்டிருப்பார். பாட்டி மரணித்த பின்னர் அந்தப் பழைய வீடே நினைவு மூட்டைகளாய் வீற்றிருக்கிறது. அப்பாவுடனும் அம்மாவுடனும் வாழ்ந்திருந்த அந்த வீட்டை நெருங்கினால் பயமும் கண்ணீரும் துளிர்க்கிறது. நினைவுகள்தான் எவ்வளவு அடர்ந்த முள்மரக்காடாய் இருக்கிறது !..
*
"அப்பாவின் வேஷ்டி" சிறுகதை -
http://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
பொன்னியின் செல்வன் மறுவாசிப்பு செய்கிறேன். சுந்தர சோழனின் மூத்தப் புதல்வன் ஆதித்த கரிகாலச் சோழனால் தலை கொய்யப்பட்ட வீரபாண்டியனின் சாவுக்கு பழிவாங்க அவனது மனைவி நந்தினி விரித்த சதிவலையில் சிக்கி கடம்பூர் மாளிகையில் உயிரிழந்த ஆதித்த கரிகாலனின் மரணம் இந்த "தலை தீபாவளி"யை சற்று வருத்தமாக்கிவிட்டது.
#பொன்னியின்_செல்வன்
எழுத்தாளர் அமரர் கல்கி அவர்களின் அரும்பெரும் உதவியால் மீண்டும் ஒருமுறை காலச்சக்கரத்தில் ஏறி 1000 ஆண்டுகளுக்கு முன்னரான சுந்தர சோழர் ஆட்சிக் காலத்திற்கு ஒரு மாதம் பயணித்து 2020 -க்கே வந்துவிட்டேன்.
வந்தியத்தேவன், ஆதித்தக் கரிகாலன், ஆழ்வார்க்கடியான், பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், குடந்தை சோதிடர், பழுவூர் இளையராணி நந்தினி, கடம்பூர் சம்புவரையர், கந்தமாறன், மணிமேகலை, தாதிப்பெண் சந்திரமதி, பல்லவன் பார்த்திபேந்திரன், மந்திரவாதி இரவிதாசன், சோமன் சாம்பவன், இடும்பன்காரி, தேவராளன், வீரபாண்டியன், கண்டராதித்த சோழன், செம்பியன் மாதேவி, அருஞ்சய சோழன், திருக்கோவிலூர் மலையமான், இடும்பாளூர் பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி, சிறிய வேளார், அநிருத்த பிரும்மராயர், ஈழத்து ஊமை ராணி மந்தாகினி தேவி, சுந்தர சோழ சக்ரவர்த்தி, இராணி வானமாதேவி, குந்தவை பிராட்டி, அருண்மொழி வர்மன், வானதி, கோடியக்கரை ஊமை வாணி அம்மையார், சேந்தன் அமுதன், படகோட்டி பூங்குழலி, தியாகவிடங்கர், முருகையன், ராக்கம்மா, பெரிய பட்டர், நாகை சூடாமணி விகார புத்த பிட்சுக்கள், பழைய மதுராந்தகன், வைத்தியர் மகன் பினாகபாணி, கருத்திருமன், இலங்கை அரசன் மகிந்தன், துட்டகைமுனு, எல்லாளன்.....
கடந்த ஒரு மாதகாலமாக என்னுடன் உறவாடிக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் அனைவரும் இன்றுடன் விடைபெற்றுக்கொண்டார்கள்.
"சூப்பர் குட் பிலிம்ஸ்" நிறுவனத்தின் 91 வது படம் நண்பரின் இயக்கத்தில் துவங்கியுள்ளது. நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
https://www.nakkheeran.in/cinema/cinema-news/jeeva-new-started-pooja
முப்பரிமாண உலகில் வாழும் மனிதர்கள் 4 பரிமாணத்தை புரிந்துகொள்ள இயலுமா? இதுகுறித்த அருமையான விளக்கக் காணொலி...
https://youtu.be/tA4ATmIqo_k
Secret of 4th Dimension | 4வது பரிமாணத்தில் கடவுள் | Mr.GK JOIN now on Mr.GK community and part of our team: https://www.youtube.com/mrgktamil/join BENEFITS:- * Monthly twice live chat or meet. * Special badge for yo...
5 dimension பற்றி விளக்கும் ஒரு அருமையான காணொலி...
https://youtu.be/XTVNsqDuCRQ
5th Dimension example with Interstellar Tesseract | Mr.GK Throughout Interstellar , you hear mention of “beings from the fifth dimension” communicating tacitly with the crew — that being McConaughey, Anne Hathaway, ...
ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை திட்டம் சீனாவில் எவ்வாறெல்லாம் வலுக்கட்டாயமாக செயற்படுத்தப்பட்டது என்பது குறித்த ஆவணப்படம்.
Hey I’m watching One Child Nation. Check it out now on Prime Video!
https://app.primevideo.com/detail?gti=amzn1.dv.gti.1eb70c80-9671-b01a-f383-190cf5ff1d18&ref_=atv_dp_share_mv&r=web
Watch One Child Nation online - Prime Video Included with Prime November 8. In the 2019 Sundance U.S. Grand Jury Prize-winning documentary One Child Nation, Chinese-born filmmakers Nanfu Wang (Hooligan Sparrow) and Jialing Zhang expose the devastating consequences of China’s One-Child Policy through the stories of those who lived through it...
சினிமாவில் நாம் கேட்கும் SOUND EFFECTS இப்படித்தான் உருவாகிறது | Sound Effects in Tamil Cinema Download Junglee Rummy app and get 100% welcome bonus -https://jrum.my/2NOib இவ்வளவு நாள் நாம் சினிமாவில் கேட்ட சத்தங்கள் இப்படித்தான் உருவாகிறது | How Sound...
Click here to claim your Sponsored Listing.