TNEWA 2020
Electrician
போட்டியில்லா தொழில் / Solar Panel / Small Business Ideas 2022 / Vignes Tamizha இனி EB பில் கட்ட தேவை இல்லை. சூரிய ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம். Small Business ideas in new growing field. Tamilnadu Electricians Welfare Associat...
TNEWA TNEWATNEWA
அக்டோபர் 3 தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் எலக்ட்ரீசியன்களின் சந்திப்பு புதிய கிளை உருவாக்கம் திரண்டு வாரீர்
தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலசங்கம் on Twitter “தமிழக அரசு சாரா மின் பணியாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நேற்று ஆகஸ்ட் 15 தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்...
TNEWA உலக எலக்ட்ரீசியன்கள் அனைவருக்கும் வணக்கம்.
நம் தொழிலை பாதுகாக்க எலக்ட்ரீசியன்கள் அனைவரும் ஒன்றிணைவோம்.இன்றே நம் சங்கத்தில் உறுப்பினராக இணைய கீழ்காணும் லிங்கை ஓபன் செய்து அதனை ஆங்கில பெரிய எழுத்துகளில் உங்களின் விவரத்தை நிரப்புங்கள்.சந்தேகங்களுக்கு 9385761142 தொடர்பு கொள்ளுங்கள்.
Google Forms - create and analyze surveys, for free. Create a new survey on your own or with others at the same time. Choose from a variety of survey types and analyze results in Google Forms. Free from Google.
ELECTRICIAN EARNINGS ELECTRICIAN SAFETY AND ELECTRICIAN FAMILY SAFETY
TNEWA உலக எலக்ட்ரீசியன்கள் அனைவருக்கும் வணக்கம்.
TNEWA ELECTRICIAN EARNINGS வழங்கும்
SAMUTHRA PUMPS ன்
ஒரு நாள் பயிற்சி வகுப்பு
நீங்களே சப்மெர்சிபிள் மோட்டாரின் ஸ்டாட்டர் பேனலை அசம்பிளிங், வயரிங் செய்து,ரிப்பேரை சரிசெய்யும் பயிற்சி,சர்கியூட் புத்தக விளக்கங்களுடன் செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.நீங்கள் டெக்னீசியனாக மாறி நீங்களே பணம் சம்பாதிக்கும் ஓர் அரிய பயிற்சி வகுப்பு. வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.பயிற்சி கட்டணம் 500/-.முன்பதிவிற்கான தொடர்புக்கு
TNEWA ELECTRICIAN EARNINGS
ELECTRICIAN CARE 9385761142
கற்பி ஒன்று சேர புரட்சி செய் / karpi ondru ser puratchi sei This movie is dedicated to (சுப்பிரமணிய பாரதி)This movie is all about there is no cast in the world (சாதிகள் இல்லையடி பாப்பா) Written & Directed by: PL.Ajith...
TNEWA உலக எலக்ட்ரீசியன்கள் அனைவருக்கும் வணக்கம்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் நம் எலக்ட்ரீசியன்கள் ஒரு கூட்டாக கண்ணமங்கலம் அனைத்து கட்டுமான மின் மற்றும் பிளம்பர் தொழிலாளர் சங்கம் என்கிற பதிவில் சங்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கடந்த முதல் கொரோனா அலையில் கடந்த ஆட்சிகாலத்தில் வாரிய உறுப்பினர்களுக்கென தனியாக நிவாரண நிதி நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிலையில் எதையுமே பயன்பெற முடியாத நிலை, மற்றும் எவ்வித அரசு வாரிய பலன்களை பெற முடியாத நிலையை நோக்கி நம் சங்கத்தை தொடர்புகொண்ட நிலையில் அச்சங்கத்தின் நிர்வாகிகள் நம் தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலசங்கத்துடன் இணைந்து அரசு வழங்கும் வாரிய பலன்களை பெற தங்களோடு இணைத்துக்கொள்ளுமாறு நம் சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் திரு.M.J. நாகலிங்கம் அவர்களுடனும் மற்றும் மாநில நிர்வாகிகளுடனும் நேரடியாக சந்தித்து ஒப்புதல் வழங்குமாறு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டனர்.அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.அதனை கொண்டாடும் விதமாக இணைப்புவிழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 27/06/2021 அன்று காலை9.00 மணிக்கு இரு சங்கங்களின் இணைப்பு விழா நடைபெறுவதால் அனைத்து மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலசங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.எலக்ட்ரீசியன்களே நாம் பல்வேறு அங்கங்களாகவும் சங்கங்களாகவும் பிரிந்து கிடக்கும் நாம் நமக்குள் இருக்கும் தனிமைவாதத்தை ஒழித்து நமக்கென தனிநலவாரியம் அமைத்து ஒரு புதிய உலகம் படைக்க எலக்ட்ரீசியனே எழுந்து வா!!
சி.மாயாண்டி
மாநில
துணைச் செயலாளர்
(TNEWA)
9385761142
TNEWA உலக எலக்ட்ரீசியன்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலசங்கம் கொரோனா பேரிடர் காலத்தில் வருமானமின்றி தவிக்கும் நமது சங்கத்தின் அனைத்து மாவட்ட கிளைகளுக்கும் நலிவடைந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நம் தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலசங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் திரு. M.J.நாகலிங்கம் அவர்கள் தலைமை மாநில நிர்வாகிகளுடன் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.காரனோடை, மீஞ்சூர்,மணலி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், அம்பத்தூர் போன்ற அனைத்து கிளைகளுக்கும் வழங்கப்பட்டது.
TNEWA உலக எலக்ட்ரீசியன்கள் அனைவருக்கும் வணக்கம்.
*எழுச்சிமிகு எலக்ட்ரீசியனே, உன்னுடன் நான்!*
(நற்றமிழ் செ.வ.இராமாநுசன்)
தி.பி.2052; ஆடவை 04
18-06-2021
*இல்லறம் - உடன்பிறப்பே! நீ கொள்வாய் உயர்பொறுப்பே!*
வணக்கம் என் இளவலே!
குடும்பம் என்றால் கணவன் - மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோர், உடன்பிறப்புகள் என்று இருப்பது வழக்கம். பல நிலைகளில் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை அரசு கொண்டு வந்ததன் விளைவு, இன்றையப் பெற்றோர்கள், ஓரிரண்டு அல்லது ஒரே குழந்தையுடன் வாழ்வை நடத்தி வருகின்றனர்.
ஆனால் உடன்பிறப்புகள் என்று ஒருவருடன் ஒருவர் இணைந்து இருப்பதில் எத்தனை மகிழ்ச்சி கிடைக்கிறது தெரியுமா? குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என வளரும்போது பல உளவியல் தீர்வுகளைப் பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே தீர்த்துக் கொள்வர். நீ உயர்வுகளைக் காண, உன் உடன்பிறப்பு, உயர்பொறுப்பாளராகி விடுவார். உன் இன்னல்கள் தீர, உன் உடன்பிறப்புகளே உனக்கு உறுதுணையாகிடுவார்.
இன்பதுன்பங்களில் பங்கேற்கும் உடன்பிறப்புகள் ஆண் - பெண் என எவராயினும் பெரியவர்கள் ஆன பின்பும் பற்றும்பாசமும் கொண்டு வாழ்வதில் அனைவரின் மனங்களும் பெருமையடைகின்றது. விட்டுக் கொடுக்கும் மாண்புகள் எழிலடைகின்றன. அன்பையும் மகிழ்ச்சியையும் தவிர வேறு எதனை நாம் கொண்டு வந்தோம், நம்மோடு கொண்டு செல்ல?
இன்னொரு முறை உடன்பிறப்புகளாக நாம் அனைவரும் இப்படியே பிறக்க முடியுமா? ஆறாம் அறிவாக நாம் அனைவரும் பெற்றுள்ள பேரறிவாம் பகுத்தறிவு சொல்வதை மட்டுமே கேட்பவர்கள் தான் உண்மையில் பெரும் செல்வந்தர்கள் ஆவர். மற்றவர் யாவரும் இருந்தும் இல்லாதவர்களே!
பெற்றோருடன் இருக்கும் காலத்தை விட உடன்பிறப்புகளுடன் வாழுங்காலமே அதிகமாகும் என்பதை நாம் அனைவருமே ஒப்புக் கொள்வோம். சரிதானே, என் தங்கமே? இன்று நம் எல்லோருக்கும் இன்னொரு உடன்பிறப்பு என்னும் பசுந்தங்கம் கிடைக்கவில்லை. அப்படி உடன்பிறப்புகள் வாய்க்கப் பெற்றவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்களே! கோடி கொடுத்தேனும் உடன்பிறப்பு என்னும் சொந்தத்தைத் தக்க வைத்துக் கொள்வாயாக!
இல்வாழ்வு நாயகனாம் எனதருமைச் செல்வமே! உன்னுடன் பிறந்தவர், உனக்கு மூத்தவர் என்றால், அவர் உனக்கு பெற்றோர்! அவருக்கு நீ மூத்தவர் என்றால் நீயே பெற்றோர்! இதனை உணர்ந்து கொள்பவர்களே உயர்நிலைச் சான்றோர்! நிழலும் வெயிலும், நெருக்கமும் பிரிவும் மாறிமாறி வந்தாலும் அன்பும் பண்பும் என்றென்றும் நிரந்தரமானவை! நிலனாள்பவை! இனி நீ ஆள்க! வாழ்த்துகள்!
*முகத்திரையும் தடுப்பூசியும் கொரோனாவைத் தடுக்கும்! மரக்கன்றுகளை நடுவது மாநிலத்தைக் காப்பாற்றும்! புதிய உலகம்! புதிய வானம்! உரக்கச் சொல்வோம், வெற்றி நமதே!*
TNEWA உலக எலக்ட்ரீசியன்கள் அனைவருக்கும் வணக்கம்.
*எழுச்சிமிகு எலக்ட்ரீசியனே, உன்னுடன் நான்!*
(நற்றமிழ் செ.வ.இராமாநுசன்)
தி.பி.2052; ஆடவை 03
17-06-2021
*இல்லறம் - பெற்றோரே நம் தலைப்பிள்ளைகள்!*
வணக்கம் என் இளவலே!
குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள், நமது பெற்றோர்கள் என இருப்பது வழக்கம். விதிவிலக்காக, திருமணமான உடனேயே மணமக்களைத் தனிக்குடித்தனம் செய்ய வைப்பதும் உண்டு.
பொதுவாக பெண்களுக்கு அலுவலகப்பணி இருந்தாலும், வீட்டில் பெருவாரியானப் பணிகளையும் முடித்து விட்டுதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதில் பெற்றோர்கள் விரும்பி வந்து உதவுவதும் உண்டு; அல்லது நமக்கேன் வம்பு என ஒதுங்கி விடுவதும் உண்டு. ஆனால் அவர்களின் மேற்பார்வை என்பது, உண்மையில் நமக்கு நன்மையையே செய்யும் என்பதை மறுக்க முடியாது.
அதுமட்டுமல்ல! போட்டது போட்டபடி வெளியேறிப் போய்க்கொண்டே இருக்கலாம். வீடு, பிள்ளைகள், எதிர்பாரா உறவுகள், விருந்தினர்கள் என எத்தகையச் சூழலையும் வீட்டுப் பெரியவர்கள் கவனித்துக் கொள்வர். எத்தனையோ பணிகளைப் பார்த்துக் கொள்வது மட்டுமின்றி, நமக்கு பாதுகாப்பு அரணாகவும் இருப்பார்கள்.
எப்போதும் எல்லோரும், மற்றவர்களுக்கு பளுவாக இருக்க விரும்புவதில்லை. ஆனால் நமது கோணத்தில் நாம்தான் தவறாக நினைத்துக் கொள்கின்றோம். திரைப்படம், கடற்கரை, விருந்து நிகழ்வுகள், நண்பர் வீட்டிற்கு செல்வது, அதேபோல் மற்றவர்கள் நம் வீட்டிற்கு வருவது போன்றவை இயல்பான ஒன்றுதான்.
அவ்வேளைகளில் பெற்றோர்களும் சூழலறிந்து நடந்து கொள்வர். இத்தகையக் குடும்பம் வெளியில் இருந்து பார்க்கின்றவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு குடும்பமாகத் தெரியும். இத்தகையப் பெருமைகளை நாம் காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். நமது பெற்றோர்களும் பெரும்பகுதி வாழ்க்கையைப் பல சூழல்களிடையே நடத்தி இப்போதுதான் அமைதியாகி இருப்பர். அவர்களின் மனம், ஒரு குழந்தையின் மனதை ஒத்திருப்பது இயல்பான ஒன்று.
அவர்களைத் தாய்மை உணர்வுகளுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகள் வரின், தனியாக அவர்கள் இருக்கும்போது இலைமறைவு காய்மறைவாகச் சொல்லலாம். குடும்பத்தில் அனைவரும் இருக்கும் போது குறைகளைப் பேசக் கூடாது. உயர்வுடன், மதிப்பிற்குரிய உணர்வுடன்தான் பேச வேண்டும்.
மகனுக்கு திருமணம் முடிந்தவுடன் நான் எப்போது தாத்தா - பாட்டி ஆகப் போகிறேன் என்ற ஏக்கத்துடன் உலா வருபவர்கள் நம் பெற்றோர்கள். பெற்றோரின் பிள்ளையான நீயும் ஒரு பெற்றோர் என்றாவதில் மகிழும் நம் பெற்றோர்கள் உண்மையில் நம் வணக்கத்திற்குரியவர்களே அல்லவா?
'பல்லாண்டுகாலம் வாழ்க!' என்கிற வாழ்த்துகளைப் பெற்றோரிடம், பெற்று மகிழும் நானிலத்து நாயகனே! வானத்து நிலவினைப் போன்றதே நம் வாழ்க்கையும்! பிறந்தோம்; வளர்ந்தோம்; வாழ்ந்தோம்; மறைந்தோம் என்பதே நம் அனைவரின் நிலையும் கூட. இன்னும் சொல்லப்போனால் நீர்க்குமிழி வாழ்க்கையை ஒத்ததே நம் வாழ்க்கை! உனது முதற்பிள்ளையாகப் பெற்றோரைப் பேணுக! உயர்வாழ்வுக் கோமகனாய் வாழுக! வாழ்த்துகள்!
*முகத்திரையும் தடுப்பூசியும் கொரோனாவைத் தடுக்கும்! மரக்கன்றுகளை நடுவது மாநிலத்தைக் காப்பாற்றும்! புதிய உலகம்! புதிய வானம்! உரக்கச் சொல்வோம், வெற்றி நமதே!*
TNEWA உலக எலக்ட்ரீசியன்கள் அனைவருக்கும் வணக்கம்.
*எழுச்சிமிகு எலக்ட்ரீசியனே, உன்னுடன் நான்!*
(நற்றமிழ் செ.வ.இராமாநுசன்)
தி.பி.2052; விடை 21
04-06-2021
*வேலை - செய்வனத் திருந்தச் செய்வதே சிறந்த வேலை!*
வணக்கம் என் இளவலே!
சிறுதொழில் முதலீட்டுப் பணிகளில் தொடங்கி பெருந்தொழில் வணிகம் வரையிலும் பல வேலைவாய்ப்புகளை நமது இளைஞர்கள் துணிந்து மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது.
செய்யும் தொழிலில் அறம் சார்ந்திருக்க வேண்டும். அதாவது முறையாக, சரியாக, ஒருபக்கம் சாராமல் பணியாற்ற வேண்டும். நமது உடனடி அலுவலராக யார் இருந்தாலும் அவர்தான் நமக்கு ஊதியம் வழங்கும் முதலாளி அல்லது அரசு என்று கருதிப் பணியாற்ற வேண்டும்.
செய்யும் பணிகளில் கூட அகவை சார்ந்து நோக்குமிடத்து நோக்கலாம். ஆனால் அஃது அனைத்து இடத்திற்கும் பொருந்தாது. வளமிக்க பகுதியாக நமது வேலை அமைய வேண்டுமானால் நம்முடன் பணியாற்றுகின்றவர்கள் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். பணிந்து நடக்க வேண்டும். அனைவரின் திறமைகளைகளையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
எப்போதும் கடின உழைப்பை வழங்குவது போல நடிக்கக் கூடாது. இயல்பாகப் பணியாற்ற வேண்டும். நகைச்சுவை கலந்து பணியாற்றினால் களைப்புத் தெரியாது. வேலை செய்யுமிடங்களில் அறமல்லாத ஏமாற்றுதல், திருடுதல், பொய் சொல்லுதல் என்பதெல்லாம் நமக்கு இழிந்த பெயரைத் தந்துவிடும். உடன் பணியாற்றும் பெண்களிடமும் ஆண்களிடமும் அளவுக்கு மீறிப் பழகக் கூடாது. மறைமுகமாக எதிர்பார்த்து பணியாற்றுவதும் பழகுவதும் நமக்கு ஏமாற்றத்தையே நல்கும்.
என் அன்பிற்கினிய ஆற்றல்மிகு கடமை வீரனே! வேலை செய்யுமிடத்தும் ஒழுக்க நெறிகளை மேற்கொள்ள வேண்டும். நமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், முறைதவறிப் போகுமானால், எப்போது வேண்டுமானாலும் வழங்கப்பட்டவரால் பறிக்கப்படும் என்பதை மறந்து விடக் கூடாது. செய்வனத் திருந்தச் செய்வதே மிகச் சிறந்த வேலை என்பதை உன் உள்ளத்துள் பதிய வை. உன் வளர்ச்சி என்பது உனது பதவி உயர்விலும், அமைதி நிலையிலும் தான் உள்ளது. உன்னால் முடியும்! உயர்க! வெல்க! வாழ்த்துகள்!
*முகத்திரையும் தடுப்பூசியும் கொரோனாவைத் தடுக்கும்! புதிய உலகம்! புதிய வானம்! உரக்கச் சொல்வோம், வெற்றி நமதே!*
TNEWA உலக எலக்ட்ரீசியன்கள் அனைவருக்கும் வணக்கம்.*
எழுச்சிமிகு எலக்ட்ரீசியனே, உன்னுடன் நான்!*
(நற்றமிழ் செ.வ.இராமாநுசன்)
தி.பி.2052; விடை 20
03-06-2021
*வேலை - அமைப்புசாராப் பணியாளர்களே, நாட்டின் கட்டமைப்பை உறுதி செய்கின்றனர்!*
வணக்கம் என் இளவலே!
தெருவோரம் காய்கறி விற்பனையில் தொடங்கி, மின்பழுதுகளைப் பார்த்து நிறைவேற்றுவது வரை அமைப்புசாராப் பணியாளர்களே முன்னின்று உழைத்து, நாட்டின் கட்டமைப்பை உறுதிப்படுத்துகின்றனர். 'நானே அரசன்! நானே மந்திரி!' என்பது கட்டுப்பாடுகளற்ற நிலையைக் குறிக்கின்றது என்றாலும், அவர்களுக்கானப் பாதுகாப்பு என்பது எப்போதும் கேள்விக்குறிதான்.
நமது நாட்டின் அரசுகள் அண்மைக்காலமாகத் தான் இவர்களைச் சற்றே கண்திறந்து பார்க்கத் தொடங்கி இருக்கின்றது. எனவே தான் இவ்வகைத் தொழிலாளர்களும் தங்களுக்கென சங்கங்களை உருவாக்கி ஒரு முழுமையானத் தோற்றத்தை பெற முயன்று வருகின்றனர்.
சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு அனைத்துமின் பணியாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் தனி நலவாரியத்தை முன்னிறுத்திப் போராடி வருகின்றது. அதற்கு தமிழகம் முழுவதும் உள்ள மின்பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். விரைவில் இவர்கள் வெற்றியைப் பெறுவார்கள். எத்தகைய அமைப்புகளையும் சாராதத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தார்தான் தாயுள்ளத்துடன் சேர்த்துக் கொண்டு வருகின்றனர்.
உலக இயக்கமே ஒருவரையொருவர் சார்ந்த நிலையில்தான் உள்ளது. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டோமெனில் யாரும் எவரையும், எந்த தொழிலாளியையும் ஏளனமாகப் பார்க்க மாட்டோம். அவரை விட நான்தான் உயர்ந்தவன் என்கிற தலைகனத்தையும் கொள்ள மாட்டோம்.
என்னுள்ளத்தே புகுந்து மகிழ்ச்சியை வழங்கும், எழில்மிகு புன்னகை மன்னனே! உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவை மூன்றனையும் உள்ளடக்கியப் பாதுகாப்பு என்பவை தான் உலகத்தை இயக்கி வருகின்றன; அல்லது உலகம் இயங்கக் காரணம் ஆகின்றது. இத்தகையக் கட்டமைப்பு உள்ளவரையில் 'வேலை காலி இல்லை!' என்பதே இல்லை. 'உன்னால் முடியும், தம்பி!' என்ற டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் கட்டுரைகளையும், அவர் எழுதிய நூல்களையும் படித்துப் பார். 'ஏர்ப் பின்னது உலகம்!' என்ற திருக்குறளைப் படித்துப் பார்! உன் பின்னால் இவ்வுலகம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்வாய்! வேலையை உருவாக்கி வெல்க! வாழ்த்துகள்!
*முகத்திரையும் தடுப்பூசியும் கொரோனாவைத் தடுக்கும்! புதிய உலகம்! புதிய வானம்! உரக்கச் சொல்வோம், வெற்றி நமதே!*
*TNEWA உலக எலக்ட்ரீசியன்கள் அனைவருக்கும் வணக்கம்.
எழுச்சிமிகு எலக்ட்ரீசியனே, உன்னுடன் நான்!*
(நற்றமிழ் செ.வ.இராமாநுசன்)
தி.பி.2052; விடை 19
02-06-2021
*வேலை - களத்தில் வேலை பார்க்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள்!*
வணக்கம் என் இளவலே!
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பாதுகாப்புடன் பணியாற்றி வருகின்ற அடித்தளநிலை தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 45% விழுக்காட்டினர் உள்ளனர். இவர்களில் தொழில்நுட்பம் சார்ந்தவர்கள் மற்றும் சாராதவர்கள் உண்டு. எடுபிடி ஆட்கள் என்று முன்பெல்லாம் அழைக்கப்பட்டவர்கள், இப்போது உதவியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் எந்தப் பணியைக் கொடுத்தாலும் சளைக்காமல் உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.
கடுமையான வேலையைப் பார்த்துக் கொண்டே தொழில்நுட்பப் பணியைக் கற்றுக் கொள்வார்கள். பின்னர் அந்தத் தொழிலில் மிகச் சிறந்து விளங்குவர். ஓட்டுநர், மின்பணியாளர், பொருத்துனர், மரத்தச்சர், தோட்டவேலை செய்பவர், விவசாயம், செவிலியர், கொத்தனார், ஒளிப்படக் கலைஞர் எனப் பல்வேறு நிலைகளுக்கு உயர்ந்து விடுவர். இவர்கள் சில இடங்களில் அரசு சார்ந்தும் பணியமர்த்தப்படுவர்.
குறித்த நேரப்பணி என்பது மாறி, வாய்ப்பு கிடைக்கும்போது பணி என்றுதான் இவர்கள் பணியாற்ற நேர்கின்றது. பொதுவாக இவர்களை ஒருங்கிணைக்க அல்லது வழிநடத்த என்று யாருமில்லாததால், தங்களுக்குள் ஒருவரையொருவர் அறியமாட்டார்கள். வேலைக்கேற்ற, முறையான ஊதியமும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் இவர்களில் சிலர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, குறைந்த ஊதியம் என்றாலும், தொடர்ந்து வேலை கிடைக்கிறது என்பதற்காக ஊர்விட்டுஊர் செல்வதும் உண்டு.
எப்படியோ என்றில்லாமல் இப்படித்தான் உழைத்து வாழ்வேன் என சூளுரைத்து பணியாற்றி வருகின்ற என் பண்பின் சிகரமே! நிலையில்லாதப் பணி என்றாலும், உழைத்து உயர்வேன் என்ற எண்ணமுடையத் தொழிலாளர்கள் ஒரேயொரு வேலை என்றில்லாமல் பலதரப்பட்டப் பணிகளையும் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் உண்டு. அதுதான் சிறப்புத் தன்மையும்கூட. எந்த தொழிலையும் முன்னெடுத்துச் செய்ய முடியும் என்றாலும் 'தொழில்நுட்பக் கலைஞன்' என்ற அடிப்படையில் இருந்து மாற மாட்டார்கள். இவர்களைப் பற்றி சிந்திக்கும் நீ, உன்னைப் பற்றியத் தொழில் பெயர் என்னவாக இருக்க வேண்டும் சிந்திக்கத் தொடங்கி விட்டாயா? வாழ்த்துகள்!
*முகத்திரையும் தடுப்பூசியும் கொரோனாவைத் தடுக்கும்! புதிய உலகம்! புதிய வானம்! உரக்கச் சொல்வோம், வெற்றி நமதே!*
TNEWA அனைவருக்கும் வணக்கம்.
*எழுச்சிமிகு எலக்ட்ரீசியனே, உன்னுடன் நான்!*
(நற்றமிழ் செ.வ.இராமாநுசன்)
தி.பி.2052; விடை 17
31-05-2021
*வேலை - மாந்தனின் மணிமகுடம்!*
வணக்கம் என் இளவலே!
ஒவ்வொரு மாந்தனின் வெற்றிக்கும் அடித்தளமாக நான்கு நிலைகளை நாம் தந்திருந்தோம். அவை கல்வி, வேலை, இல்லறம், தொண்டு என்பனவாகும். கடந்த சில நாள்களாக கல்வியைப் பற்றியும் அதன்வழியில் நாம் பெறும் வெற்றியைப் பற்றியும் அறிந்து வந்தோம். இனி வேலை என்பதைப் பற்றி சிந்திப்போம்.
ஒவ்வொருவருக்கும் வேலை என்பது அழகுதனைத் தரும் என்பார்கள். அந்த அழகினை விட நல்ல பாதுகாப்பினையும் தருகின்றது வேலை. நாம் கற்றிருக்கும் கல்வித் தகுதியின் அடிப்படையில் கிடைப்பது தான் வேலை மற்றும் ஊதியம். அதுமட்டுமல்ல, நமக்கு கிடைக்கின்ற பணியினால் நமது வருங்கால வாழ்க்கை, நாம் எதிர்பாராத நிலைக்கு மாறி விடுகிறது.
இன்ன பணிக்குத்தான் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டு படிப்போம்! நாம் எதிர்பார்த்தவாறே அந்த பணியும் கிட்டிவிடும். மகிழ்ச்சி, நமக்கான அடையாளத்தையே மாற்றும். முன்பெல்லாம் படித்து முடித்ததும் அரசு வேலை கிடைத்து விடும். காலப்போக்கில் படித்திருந்தாலும், தகுதித் தேர்வு எழுத வேண்டும்; அதில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் நேர்க்காணல் காணப்பெறலாம். பிறகுதான் அரசின் பணி கிட்டும்.
சென்னையில் வேலை தேடிச் சென்ற நேர்க்காணல் தராத வெற்றியை, சுண்டல் மடித்திருந்தத் தாளின் விளம்பரம், வேலையை வழங்கி இருக்கிறது. கிடைத்த வேலை, பணியாற்றும் இடம், பெறும் ஊதியம் இவற்றை வைத்தே நமக்கான இல்லற வாழ்க்கையை, நல்ல இணையைப் பெற முடிகிறது. இப்படியெல்லாம் காணும் வேலையை நாமும் கண்ணும்கருத்துமாக எதிர்கொள்கின்றோம்.
காலத்தே படித்து கண்ணிற்கு நிறைவான பணியை ஆற்றி வரும் என் கடமை வீரனே! வேலை ஒவ்வொரு மாந்தனுக்கும் மணிமகுடம் அன்றோ? நம் கண்களின் முன்னால் பல ஆயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளன. ஊடுருவிப் பார்த்தால் அரசு சார்ந்தும், தனியார் சார்ந்தும் பன்னூறு பணிவாய்ப்புகள் காத்துள்ளன. அவற்றைக் கைப்பற்ற நீ எடுத்துவரும் முயற்சிகளை நன்கறிவேன்! முயற்சிதான் முன்னேற்றத்தின் முதற்படியாகும். முயல்க! வெல்க! வாழ்த்துகள்!
*முகத்திரையும் தடுப்பூசியும் கொரோனாவைத் தடுக்கும்! புதிய உலகம்! புதிய வானம்! உரக்கச் சொல்வோம், வெற்றி நமதே!*
TNEWA உலக எலக்ட்ரீசியன்கள் அனைவருக்கும் வணக்கம்.
*எழுச்சிமிகு எலக்ட்ரீசியனே, உன்னுடன் நான்!*
(நற்றமிழ் செ.வ.இராமாநுசன்)
தி.பி.2052; விடை 09
23-05-2021
*வெற்றியைக் கைக்கொள்ள, பதுங்கிப் பாயலாம்!*
வணக்கம் என் இளவலே!
தொடர்ந்து இடைவெளி இன்றிப் படிப்பது, ஒரு போராட்டம் போலவிருக்கும். அதனையே சற்று இடைவெளி விட்டு படித்தால் புதிய எழுச்சி கிடைக்கும்; வலிமையைக் கூட்டும். அதனால் வெற்றி கிட்டும். இதற்குப் பெயர்தான், 'பதுங்கிப் பாய்தல்' என்று பெயர்.
இரு ஆட்களுக்குள்ளோ அல்லது குழுவினருக்கிடையோ அல்லது நாடுகளுக்கிடையோ சண்டை மூளும் போது, முதலில் வருகின்றவரைப் பேச விட்டு விடுவர் அல்லது 'ஆடட்டும் விருப்பம் போல' என ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பார் இரண்டாம் குழுவினர். இதனை மேலும் விளக்க வேண்டுமெனில், சடுகுடு என்னும் விளையாட்டினை எடுத்துக் கொள்ளலாம்.
பகைவனை உள்ளே விட்டு, பின்னர் சுற்றி நின்று வளைத்து பிடிப்பர். இதற்கு மறுபெயர் என்னவென்றால் சற்று நூல்விட்டுப் பிடிப்பது என்பதுதான்.
இன்று உலகெங்குமுள கொரோனா தொற்று நோயை விரட்டுவதற்கான ஒரே வழி, நம்மை நாமே அடக்கிக் கொண்டு அமைதியாக இருப்பதுதான். பதுங்குவோம் முதலில்! பின்னர் நம்முடல் வலிமையைப் பெருக்குவதில் காட்டும் அக்கறைதான் கொரோனா மீது பாய்வதற்கான அம்பு ஆகும்.
பதுங்கினாலும், ஓய்வெடுத்தாலும் சிலர் அக்காலத்திலும் சிந்தித்துக் கொண்டேயிருப்பர். இதனால் கொரோனா என்னும் பகைவனின் நெளிவுசுளிவுகளை இனம் காண முடியும். அதற்கொப்ப உப்புநீர் கொப்பளித்தல், நீராவியை நுகர்தல், மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல் நம் வலிமையைப் பெருக்கும். கூடுதலாக நல்ல நூல்களைப் படிப்பது, உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பேசுவதுவும் நெஞ்சிடை உரமேற்றும்.
மாண்புடை மனதின் ஆழ்கடல் அமைதியைக் கொண்டிலங்கும் என் குவலயத்து பசும்பொன்னே! அமைதி! அமைதி!! அமைதி!!! என சற்றே பொறுமையை மேற்கொள்க! எத்தகைய நிலைமைகளிலும் மாற்றங்கள் உண்டு. நம் அனைவரின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு பதுங்கி வாழ்வோமாக! முதலிரண்டு உலகப் போர்களை வரலாற்றில் படித்தோம்! மூன்றாம் உலகப் போரை வாழ்க்கையில் படிக்கின்றோம்! ஒற்றுமை ஒன்றே உயர்வுக்கு வழிகாட்டும். ஒரே காலத்தில் அனைவரும் ஊரில் அடங்கியிருப்போம்! அப்போதுதான் வருங்காலத்தில் வரலாறு நம்மைப் போற்றும். நல்வாழ்த்துகள்!
*முகத்திரையை அணிவோம்! கொரோனாவைத் தடுப்போம்! புதிய உலகம்! புதிய வானம்! உரக்கச் சொல்வோம், வெற்றி நமதே!*
TNEWA உலக எலக்ட்ரீசியன்கள் அனைவருக்கும் வணக்கம்.
*எழுச்சிமிகு எலக்ட்ரீசியனே, உன்னுடன் நான்!*
(நற்றமிழ் செ.வ.இராமாநுசன்)
தி.பி.2052; விடை 08
22-05-2021
*வெற்றியெனும் அடுக்ககத்திற்கு பண்பாடு ஓர் அடித்தளம்!*
வணக்கம் என் இளவலே!
நீயும் நானும் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பது 2052 ஆவது ஆண்டின் தளத்தில் தான். ஆம்! ஆண்டுகளை அடுக்ககமாய் அடுக்கி வைத்துப் பார். எத்தனை உயரத்தில் இந்த தலைமுறை மக்கள் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்று புரியும்.
இன்னும் எத்தனை உயரம் வேண்டுமானாலும் வளரட்டும். ஆனால் அடித்தளத்தில் நம் முன்னோர்கள் உருவாக்கியப் பண்பாடு, ஒழுக்கம் தான் இன்று மட்டுமல்ல, என்றென்றும் நம்மைக் காத்து வழிநடத்திச் செல்லும் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது. தனிமாந்தத் தன்னொழுக்கம் தான், சமூக அளவில் விரிகின்ற போது, பண்பாடு என்றாகின்றது.
உண்மையில் நாகரிக வளர்ச்சியின் அண்மைத் தொடுவானத்தை நாம் தொட்டுக் கொண்டிருக்கலாம். இதற்கு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி துணையாகி இருக்கலாம். ஆனால் இவ்வளர்ச்சியின் எழுச்சிக்குரிய அடித்தளத்தைக் கட்டமைப்பதில் நம் தாய்மொழி தான் முதல்நிலையில் நின்றுள்ளது என்றால் அஃது மிகையில்லை.
கிட்டத்தட்ட 36 நீதி நூல்கள் நம்மைச் செதுக்குகின்றன. திருக்குறளில் தொடங்கி, நாலடியார், நன்னெறி, ஆத்திசூடி போன்றவை மற்றும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டப் பஞ்சதந்திரக் கதைகள், தமிழ் ஈசாப்புக் கதைகள் போன்ற நீதிக்கதை நூல்கள் வரை இவற்றில் அடங்கும்.
'யார் பார்க்கப் போகின்றார்கள்? நான் மட்டும் தானே இங்கே உள்ளேன்!' என்று எண்ணி நெறி தவறுதல் கூடாது. 'உள்ளத்தால் பொய்யாது' ஒழுகவும், 'மனத்துக்கண் மாசிலனாக' இருக்கவும் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னாளில் அஃதே வழக்கமாகி விடும். அதேபோல ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். வஞ்சம், காழ்ப்பு, சினம் என்பவையெல்லாம் நம்முள் தோன்றும் நோய்கள் ஆகும். புற்று நோயைவிடக் கொடுமையானது. தவிர்ப்போம்!
எளியநிலையை என்றென்றும் கைக்கொண்டு, இமயத்தையும் வெல்லுந்திறன் படைத்த என்னெழில் செண்பகமே! போரில் வெற்றியைப் பெற விரும்பும் அரசனின் படையில் உள்ள பல்வேறு துணைக்கருவிகளைப் போன்றதே, நம் வாழ்வின் வெற்றிக்கு நாம் கைக்கொள்ளும் துணைநிலைப் பழக்கங்கள்! முறையாகச் சென்றால் தானே, முதல்வனாகி வெற்றியைப் பெற முடியும்! நானறிவேன், உன் பெரும் வெற்றியை! வாழ்த்துகள்!
*முகத்திரையை அணிவோம்! கொரோனாவைத் தடுப்போம்! புதிய உலகம்! புதிய வானம்! உரக்கச் சொல்வோம், வெற்றி நமதே!*
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
600106
Opening Hours
Monday | 5pm - 9pm |
Tuesday | 5pm - 9pm |
Wednesday | 5pm - 9pm |
Thursday | 5pm - 9pm |
Friday | 5pm - 9pm |
Saturday | 5pm - 9pm |
Sunday | 5pm - 9pm |
6th Lazarstreet Avadi
Chennai, 600071
We Jothi Service Point Dealing all type of Service 1. Electrical Work 2. A/c Service - 3 Phase 3. Invertor 4. Plumbing 5. Solar - Water Heater 6. Lighting 7.Cable Work 8. Theatre ...
Chennai, 600072
In Welfixerr, We do Electrical, Plumbing, Computer Repair & Service, Home Cleaning Service at Domestic Level. We have highly Skilled Technicians to provide reliable and best servic...
Plot No 18, First Avenue Pallava Garden Old Pallavaram
Chennai, 600117
Hibro Online is a One stop solution for all your home maintenance needs. We provide professional service for Electrical,Plumbing,Painting,Carpentry requirements & also Kitchen Bat...
No 3, Kabi Edifice, 5th Main Rd, Goodwill Avenue, Maxworth Nagar Phase 1
Chennai, 600122
KPYD Electrical Works - All types of Electrical services for both Residential and Commercial.
No 18 Anbananthan , 2nd Street, Sanjoy Colony, Mgr Nagar, Chn/78
Chennai, 600078
electrical all kind of work done by smart MEP servicess
600073
Chennai, 600073
home appliances services, electrical, plumbing,painting and home appliances service construction wiring classes
Chennai, 600100
All household Repairs done here.Fans, Mixie, Gas stove,Washing Machine induction stove repairs etc.
Chennai, 600017
Electrical tamizhaI am creating only electrical and plumbing work related videos onlyEmail ID : elec