Healer Baskar தற்சார்பு வாழ்வியல்

Healer Baskar தற்சார்பு வாழ்வியல்

தற்சார்பு வாழ்வே எதிர்கால வாழ்வின் அச்சாணி

05/07/2022
17/02/2022

வெந்தயத்தின் மருத்துவக் குணங்கள்!
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்

16/02/2022

உங்கள் வாழ்க்கை மாற நல் வார்த்தைகளை பதிவு செய்யுங்கள் |

07/02/2022

மூச்சுத்திணறல் நோய் சிகிச்சையில் பலர் இறப்பது நாம் அறிந்ததே . அதுவும் oxygen வைத்த சில நாள்களில் சிகிச்சை பலனின்றி இறப்பது ஏன் ?
இப்போது வரும் கிருமி தொற்றால் நமது சுவாசப்பாதை, மற்றும் நுரையீரல்களில் பாதிப்பு ஏற்படுகிறது . இரண்டு நாட்கள் வரை இங்கே இருந்து பல்கிப்பெருகும் கிருமிகள் மெல்ல தனது வேலையை காட்ட தொடங்குகிறது. தொண்டையில் இருந்து நுரையீரல் ஆரம்பம் வரை உள்ள சுவாசப்பாதையில் கபத்தை - சளியை உறைய செய்கிறது .
முதல்நிலை - இவ்வாறு சிறிதளவு சளி உறையும்போது லேசான இருமலும், தொண்டைவலியும், கரகரப்பும் இருக்கும்.
இரண்டாம் நிலை - இந்த சளி அதிக அளவில் படிந்து சுவாசத்தை தடை செய்யும்போது லேசான மூச்சு திணறல் ஏற்படும். ஆனால் சமாளித்து கொள்ளலாம்.
மூன்றாம் நிலை - சளி இன்னும் சற்று அதிகமாக உறையும்போது பெருமளவு காற்று செல்வது தடைபடும். இப்போது சற்று ஆபத்தான நிலை. இப்போதுதான் நாம் மருத்துவமனை செல்கிறோம்.

அங்கே உடனே நமக்கு oxygen சிலிண்டர் வைக்கப்படுகிறது . சிலிண்டரின் உள் காற்று அழுத்தம் அதிகம் இருப்பதால் சளியின் உறைதலை தடையை தாண்டி oxygen வேகமாக செல்லும் .இப்போது நோயாளி சுகமாக உணர்வார்.
நான்காவது நிலை - ஆனால் உள்ளே உள்ள நோயின் தன்மை அப்படியே இருப்பதால் மேலும் மேலும் சளி உறைய துவங்கி சுவாசப்பாதையை , நுரையீரலை முழுவதும் பாதித்துவிடும். இப்போது சிலிண்டரில் உள்ள காற்றும் உள்ளே செல்ல முடியாமல் மூச்சு திணறல் அதிகமாகி உடனடி மரணம் நிகழ்கிறது.

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும் ?
நீங்கள் எப்போது இரண்டாம் நிலை அளவில் தொல்லையை உணர்கிறீர்களா அப்போது கீழேயுள்ள பொருட்களை கொண்டு ஆவி பிடித்தல் வேண்டும். அடுத்து கபசுர குடிநீர் அருந்துவது.

நமது முக்கிய குறிக்கோள் சுவாசப்பாதையில் உறைந்த சளியை இளக செய்வதும் , வெளியேற்றுவதும் ஆகும். அடுத்தது அந்த கிருமிக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குதல். இரண்டையும் செய்து விட்டால் போதும். இயல்பாக பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள்.
இஞ்சி , மிளகு, மஞ்சள், துளசி, கற்பூரவள்ளி , பூண்டு, கல்லுப்பு , வேப்பிலை , எலுமிச்சை , ஓமம் , வெற்றிலை ஆகிய பொருட்களை 2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள். தினமும் ஒரு முறையாவது கபசுர குடிநீரை தவறாமல் அருந்துங்கள்.
நன்றாக ஓய்வு எடுங்கள். தேவையான உறக்கம் கொள்ளுங்கள். இனிப்பு, புளிப்பு பொருட்களை பெருமளவு தவிர்த்து விடுங்கள்.

தொற்று ஏற்படுத்தும் கிருமியின் ph value 5.5 to 8.0 . எனவே அதைவிட அதிக ph value உள்ள பொருட்கள் இந்த பிரச்சினையை எளிதில் தீர்க்கும். நாம் ஆவி பிடிப்பதில் உள்ள பொருட்கள் இந்த வகையே.

Photos from Healer Baskar தற்சார்பு வாழ்வியல்'s post 06/02/2022

தற்சார்பு வாழ்வியல்

14/10/2021

இஞ்சி நமக்கு எளிதாக கிடைக்க கூடிய அருமருந்தாகும்..இஞ்சிச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து, 2 அல்லது 3 நாட்களுக்குத் தினமும் மூன்று வேளைகள் குடித்தால் வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாகும்.

இஞ்சியை இடித்துச் சாறு எடுக்கவும். ஒரு தேக்கரண்டி அளவு சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளைகள், 7 நாட்களுக்குப் பருகினால் சளியுடன் கூடிய இருமல் கட்டுப்படும்.
இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் 48 நாட்கள் ஊறவைக்க வேண்டும். தினந்தோறும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டு வர வேண்டும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்துவர, நரை, திரை, மூப்பு அணுகாது. தேகம் அழகுபெறும். மனம் பலப்படும். இளமை நிலைத்திருக்கும்.
சுக்கைப் பொடி செய்யவும். அரைத் தேக்கரண்டி அளவு பொடியைச் சிறிது தண்ணீர் கலந்து சூடாக்கி, பசை போலச் செய்து கொண்டு வலி இருக்கும் இடத்தில் பசையைப் பரவலாகத் தடவினால் தலைவலி தீரும்.

இஞ்சிச் சாறும் வெங்காயச் சாறும் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து, சிறிதளவு தேன் சேர்த்து உள்ளுக்குள் சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும்.

13/10/2021

வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

* வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

* உணவில் வெக்காயம், பூண்டு சேர்த்து சாப்பிட டான்ஸில், ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். மேலும் கொலஸ்ட்ரால் குறையும்.

* ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம்கொண்டது வெங்காயம். வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* பாதத்தில் தேங்காய் எண்ணெய் தேய்க்கவும். பிறகு உங்கள் அடி பாதத்தின் வளைவு பகுதியில் வெங்காயத்தை வைத்து அதன் மேல் சாக்ஸ் அணிந்துக் கொள்ளுங்கள். ஓர் இரவு முழுக்க இதை விட்டுவிடுங்கள். இது நச்சுக்கள் குறைய பெருமளவு உதவும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

13/10/2021

பதநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டும் கிடைக்கும் ஒரு பானம் தான் பதநீர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.

ஏனெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இது கோடையில் தான் அதிக அளவில் கிடைக்கும். எனவே கடைகளில் விற்கப்படும் கண்ட ஜூஸ்களை குடிப்பதற்கு பதிலாக, இப்பதநீரை வாங்கி குடியுங்கள்.

உடல் உஷ்ணம் :-

கோடையில் விற்கப்படும் பதநீர் குளிர்ச்சியானது. எனவே இப்பதநீரைக் குடிப்பதால், உடல் உஷ்ணம் குறையும்.

சோர்வை நீக்கும் :-

கோடையில் அதிகப்படியான வெயிலால் ஏற்படும் சோர்வானது பதநீர் குடிப்பதால் நீங்கும்.

மலச்சிக்கல் :-

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், பதநீரைக் குடித்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்களால் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் நீங்கும். மேலும் வயிற்றுப் புண் இருந்தாலும் குணமாகும்.

ஆரோக்கியமான பற்கள் :-

பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டாலும் அதனைத் தடுக்கும்.

பித்தம் குறையும் :-

கோடையில் பதநீர் குடித்து வந்தால், அதில் உள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள பித்தத்தைக் குறைத்து, இரத்த சோகையையும் விரட்டும்.

13/10/2021

கொய்யாப்பழம் - விலை மட்டும்தான் குறைவு; மருத்துவ குணங்கள் ரொம்ப காஸ்ட்லி...

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப்பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவை.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கலைப் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

13/10/2021

கண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி.!

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையா‌ள்வா‌ர்க‌ள்.

பொதுவாக க‌ண்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌றிய ‌பிர‌ச்‌சினைகளை உடனடியாக ‌தீ‌ர்‌க்க வே‌ண்டியது‌ ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனோ தானோ வெ‌ன்று ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌‌ன் க‌ண் பா‌ர்வை‌க்கே ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌கிறது.

கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.

இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும்.

கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.

22/09/2021

வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

♥சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

⚜ ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.

♥கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும்.

⚜ நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

♥கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

⚜ சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

♥கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

22/09/2021

வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. அந்த வெற்றிலையின் விலைதான் இன்று ஒரு கெட்டு 7000 ரூபாய்.

வெற்றிலையை உபயோகிக்கும் முறை: வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை உண்டு.

1) நுரையீரல் பலப்பட வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

2) வயிற்றுவலி நீங்க: 2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.

3) சர்க்கரையின் அளவு கட்டுப்பட: வெற்றிலை – 4, வேப்பிலை – ஒரு கைப்பிடி, அருகம் புல் – ஒரு கைப்பிடி சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

4) விஷக்கடி குணமாக: உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

5) இருமல் குறைய: வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.

6) அஜீரணக் கோளாறு அகல: வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

7) தோல் வியாதிக்கு: 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

😎 தலைவலி நீங்க: வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

9) தீப்புண் ஆற: தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

10) வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.

11) வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.

12) தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும்.

13) இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.

14) புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.

15) வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.

21/09/2021

இயற்கை முறையில் வயிறை சுத்தம் செய்ய மல சிக்கலை தடுக்க இயற்கை வழி🌸🌼

தேவையான பொருட்கள் :

சோம்பு - 1 ஸ்பூன்

தண்ணீர் - 1 1/2 கப்

விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன்

உப்பு - சிறிது

செய்முறை :

கடாயில் தண்ணீர் , சோம்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்

பின் இதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்
பின் சூடாக இருக்கும் போதே இதனுடன் விளக்கெண்ணெய் , சிறிது உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.

வயிற்றில் தங்கி உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறி விடும்
உடல் எடை குறையும்...

21/09/2021

"எட்டு" நடைப் பயிற்சி...

ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச்சிறந்ததாகும்

பயிற்சியும் செய்முறையும்

கீழ்கண்ட படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்ல முறையில் பயன் பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.. மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம். முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிராண முத்திரையில் நடக்கலாம் பலன்கள்

தினமும் “எட்டு” நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள் கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன் பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும் வாழ்க வளமுடனும் நலமுடனும்...

21/09/2021

தேங்காயை அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்.....!

காலையில் சிறிதளவு புதிய பச்சை தேங்காயை மென்று தின்பதால் உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடையச் செய்கிறது. தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலில் கீட்டோன் சத்துக்கள் கிடைக்கப்பெற்று, கால் கை வலிப்பு நோய் குறைவதற்கு பெருமளவு உதவுகிறது.

தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு, முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல் அரிப்பு போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் போக்குகிறது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, அளவுக்கு மீறிய உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு இளம்வயதிலேயே உடலளவில் முதுமையான தோற்றம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தேங்காயை அடிக்கடி மென்று தின்ன வேண்டும்.

தேங்காயில் சைட்டோகைனின், கைநெட்டின் டிரான்ஸ் – சீட்டின் போன்ற வேதிப்பொருட்கள் அதிகமுள்ளது. இவை நமது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரியாக பராமரித்து, உடலுக்கு பலத்தை தருவதோடு இளமையான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிவதைத் தடுத்து, தொந்தி ஏற்படாமல் காக்கிறது. உடல் நலனை சீராக்குகிறது.

பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.

20/09/2021

பயன்தரும் முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்...!

முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி ஆகியவை மன வளம், நியாபக சக்தி ஆகியவற்றைப் பாதுகாக்க உதவுகிறது

ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது.

முருங்கை இலை சாறு இரத்தசுத்தம் செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க உதவுகின்றது.

முருங்கை இலையில் உள்ள பாக்டீரீயா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது, உங்களுடைய சருமத்தில் உண்டாகின்ற தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சினைகள் போன்றவற்றில் இருந்து உங்களைக் காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர்ப் பாதையில் ஏற்படுகின்ற தொற்றுக்களைப் போக்கவும் உதவுகிறது.

முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

20/09/2021

சீரகத்தை கொதிக்கவைத்து குடிப்பதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!!

நாம் உண்ணும் உணவில் அதிக அளவில் தேவையற்ற வேதிப் பொருட்கள் கலந்திருக்கின்றன. இவை வயிற்றை அடைந்து பல கெடுதல்களை உருவாக்குகின்றன.

குறிப்பாக, உணவு உண்ட சில மணி நேரங்களில் இரைப்பையில் இருக்கும் அமிலத்தில் நிகழும் வினைகளால் வாயு உருவாகிறது. இவை பல நேரங்களில் உணவுக்குழாய் வழியாக மேலேறி வெளியேறாமல் இருந்துவிடும்.

நாள் முழுக்க வாயுத் தொல்லையால் அவதிப்படுவோர் அதிகம். இதனால், இவர்களது வயிறு பானை போலப் பெரிதாக இருக்கும். இதனைச் சரிசெய்ய, நீரில் சீரகத்தை இட்டுக் கொதிக்க வைத்த நீரை குடித்தால் இந்த தொல்லை முழுதாக நீங்கும்.

சமையலில் சைவ, அசைவ உணவுகளை சமைக்கும்போது எண்ணெய்யில் சீரகத்தைப் பொறிப்பது வழக்கம். உணவில் சுவையைக் கூட்ட மட்டுமல்ல, வயிற்றில் வாயுத் தொந்தரவைக் குறைப்பதற்கும் இது பயன்படுகிறது. மேலும் இவை செரிமானப் பிரச்சனைகளுக்கு எளிதாகத் தீர்வை அளிக்கக்கூடியது.

குழந்தைகள் சாப்பிடாமல் அடம்பிடிக்க முக்கியமான காரணம் பசியின்மை. காலநிலை, உடல் வெப்பம், மலம் கழிக்காமல் இருத்தல் உட்படப் பல காரணங்கள் இதன் பின்னிருக்கின்றன. இதனைச் சரிப்படுத்த சீரக நீரை குடித்தால் உடலுக்கு நல்லது.

காலை உணவுக்குப் பிறகு பகல் 11 மணியளவில் இந்த நீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும். அடுத்த 2 மணி நேரத்தில் மதிய சாப்பாடு எங்கே என்று கேட்பார்கள். பாரம்பரிய உணவு முறைகளின் அவசியம் மட்டுமல்ல, நவீன உணவுகளால் ஏற்படும் கெடுதல்களும் கூட இதனால் நீங்குகின்றன

சாக்லேட், செயற்கை இனிப்புகள், அதீத காரமான உணவுகள், துரித உணவகங்களில் தயார் செய்யப்படுபவை போன்றவற்றால் குழந்தைகள் அதிக அளவில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதனைத் தீர்க்க சீரகம் உதவுகிறது.

பல்வலி, சொத்தைப்பல், வாய்ப்புண் போன்ற தொந்தரவுகளுக்கும் சீரக நீர் அருமையான மருந்து. இதனைக் கொப்பளிப்பதன் மூலமாக வாயில் உள்ள கிருமிகள் அழியும்; வலி தானாக மறையும்.

20/09/2021

#பல் முளைக்கும் வயதுடைய குழந்தைகளுக்காக செதுக்கி அவர்கள் கைகளில் கொடுக்கும் போது விளையாட்டாக அதை வாயில் வச்சு கடிப்பாங்க..

கடிக்கும் போது ஈட்டி மரத்தால் செய்த மரப்பாச்சியின் சுவை அந்த குழந்தையின் நாவின் வழியாக உமில் நீருடன் வயிற்க்குள் போகும்..

இப்படி உடம்பில் உள்புகும் போது குழந்தைகளுக்கு உள்ள

செரிமான கோளாறு, தொழுநோய் பிரச்சனை,வயிற்றுப்போக்கு உபாதாகள் ஏற்படாது..

சொல்லப்போனா இதுவும் ஓர்வகை தடுப்பூசிதான்..

அதனாலேயே அந்த காலத்துல கைகளில் மரபொம்மைகளை கொடுத்திருக்காங்க பெரியவங்க நம்ம விளையாடி மகிழ..

ஆனா இப்போ மரபொம்மைகளுக்கு பதிலா சீனா பிளாஸ்டிக் பொம்மையை வீம்புக்கு விலை கொடுத்தே வாங்கி பெருமைகொள்கிறோம்..!

நம்ம நாயா அலைஞ்சு சேர்த்து வைக்கிற காசு,சொத்து,வீடு,சொகுசு வாகனம், பொன், பொருள் இவை எல்லாத்தையும் விட உயர்ந்தது ஒன்னு இருக்கு தெரியும்ங்களா?

அதுதான் நோயில்லா பெருவாழ்வு..

என் அப்பா 69 வயசுல காலமானார்னா

நான் அதை விட ஒரு நாள் அதிகமா வாழ்ந்து காட்டனும்..

அதே போல என் பிள்ளைகளும் என்னை விட ஒருநாளாவது அதிகமா வாழனும் நோயில்லாம..

இதை விட பெரும் செல்வம் வேறு என்ன நான் கொடுக்க முடியும் நம் பிள்ளைகளுக்கு..

குறிப்பு..

மரப்பாச்சி பொம்மை அந்தந்த ஊர் இயற்கை அங்காடிகளிலும்,

ஊர் சந்தைகளிலும் கிடைக்கும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுங்க..

20/09/2021

தினமும் ஒரு நிமிடம் இந்த பந்தை கொண்டு மசாஜ் செய்யுங்கள்.... உடலில் மாயங்கள் நிகழுமாம்!*

புண்ணான பாதங்களை சரிசெய்ய பயன்படுத்தும் அற்புதமான பொருட்களுள் ஒன்று தான் ஸ்பைக்கி மசாஜ் பந்து. இது சிறு சிறு முட்களைக் கொண்ட பந்தாகும்.

இந்த ஸ்பைக்கி பந்து முதலில் டென்மார்க்கில் மனச்சோர்வு கண்டறியப்பட்ட மனநல நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது எனப்படுகின்றது.

இந்த வகை பந்துகளை நாம் வீட்டிலேயே, ஒருசில ஆரோக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு தருகின்றது.

அந்தவகையில் இந்த பந்தை கொண்டு மசாஜ் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

கால் மூட்டுக்களில் இருக்கும் காயங்களில் இருந்து விரைவில் விடுபட, முட்களைக் கொண்ட பந்துகளைக் கொண்டு பாதங்களில் மசாஜ் செய்வது நல்லதாம்.
ஸ்பைக்கி பந்துகளை பாதங்களுக்கு அடியில் ஒரு நிமிடம் வைத்து தினமும் 10-20 நிமிடம் சுழற்றும் போது, உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, உடல் மற்றும் மனம் அமைதியாகும். இதன் விளைவாக இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
அடிக்கடி தலைவலி வருமாயின் ஸ்பைக்கி பந்தை கால்களுக்கு அடியில் வைத்து மசாஜ் செய்யுங்கள்.
வாரத்திற்கு 3 முறை 10 நிமிட பாத மசாஜ் மேற்கொள்வதால், மனநிலை மேம்படும், மன பதற்றம் சரியாகும் மற்றும் இரத்த அழுத்தம் குறையும்.
ஸ்பைக்கி பந்துகளைக் கொண்டு பாதங்களுக்கு மசாஜ் கொடுப்பதால், மன பதற்றம் குறைவதாக புற்றுநோயாளிகள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த முறை மன இறுக்கத்தையும் சரிசெய்ய உதவும்.
ஸ்பைக்கி பந்தை பாதங்களுக்கு அடியில் வளைவான பகுதியில் வைத்து மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதால் நிச்சயம் குதிகால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஸ்பைக்கி பந்துகளைக் கொண்டு தினமும் பாதங்களுக்கு மசாஜ் கொடுத்து, போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். முக்கியமாக நல்ல ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

20/09/2021

மூட்டுவலிக்கு சிறந்த பாட்டி வைத்தியம்!

பெரும்பாலும் 55 வயதைத் தாண்டியப் பெண்களிடம் காணப்படும் மூட்டு வலிக்குக் காரணம், முதுமையை அடையும்போது, எலும்புகளின் முனைகளை மூடியுள்ள குருத்தெலும்புகள் தேய்ந்து முற்றிலும் அரிக்கப்படும்.

இந்த நிலையில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படும் பிரச்னையே மூட்டுவலியாகும்.

மூட்டுவலிக்கு முக்கிய காரணங்களாக பரம்பரை, அதிக உடல் எடை, அதிக நேரம் சம்மணமிட்டு உட்கார்ந்து இருத்தல், சத்தான உணவுகளை உண்ணாமல் இருத்தல், எலும்பு முறிவு போன்றவற்றால் மூட்டு வலிக்கு வரக்காரணமாகும். இதற்கு எளிய முறை தீர்வு எமது முன்னோர்கள் கையாண்ட எளிய முறையினை நாமும் கையாளுவோமாக..

👉வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும்.

👉விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும்.

👉பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும். சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கிக் கட்டலாம்.

👉சுக்கை, எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்துப் பத்துப் போடலாம்.

👉குப்பைமேனி இலையுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.
சதகுப்பை விதையை அவித்து, பின் சதகுப்பை வேருடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.
நீர்ப்பிரம்பி இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டலாம்.

👉கருஞ்சீரகத்தை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.

👉ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம்.

👉ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

👉இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

19/09/2021

நெல்லிக்காய் கறிவேப்பிலை சாரம்.:

தேவையான பொருட்கள்.: பெரிய நெல்லிக்காய் - 2, கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு,
வறுத்துப் பொடித்த ஆளிவிதைப் பொடி - கால் டீஸ்பூன்,
தேன் (விரும்பினால்) – ஒரு டீஸ்பூன்,
தண்ணீர் - 200 மில்லி.

செய்முறை.:
நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

அதனுடன் ஆளிவிதைப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

இதைக் காலை, மாலை என இருவேளையும் 100 மில்லி பருகலாம்.

விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துப் பருகலாம்.

பயன்கள்.:
இது ஒரு காயகல்பமாகும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ரத்தக் கொதிப்பைச் சீராக்கும். புற்றுநோயைத் தடுக்கும். ரத்த சோகையை விரட்டும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மாரடைப்பு வராமல் தடுக்கும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி-யும், கறிவேப்பிலையில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது.

19/09/2021

♥இரவில் #தொப்புளில் தினமும் ஒரு சொட்டு #எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் #நன்மைகள்!!

♥நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூமீயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

♥அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும், ஆண்களிடம் கண்டு கொள்ளாமலும் வைத்திருக்கிறோம். இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய் துளி விட்டதும் அடுத்த நொடியை குழந்தை நிப்பாட்டுவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

♥வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை.

♥அப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவீர்களா? தொடர்ந்து படியுங்கள்

#கண்பார்வை :
♥தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது

#பாதவெடிப்பு, #சருமபிரச்சனை :
♥உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

#மூட்டுவலி :
♥முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

#உடல்சோர்வு :
♥உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

#நரம்புபாதிப்புகள் :
♥நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

#தேங்காய்எண்ணெய் :
♥தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

#விளக்கெண்ணெய்
♥இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.

#வேப்பெண்ணெய் :
♥வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

#எலுமிச்சை எண்ணெய் :
♥எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.

#பாதாம் எண்ணெய் :
♥சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

#ஆலிவ் எண்ணெய் :
♥தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

Want your practice to be the top-listed Clinic in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Chennai
600024