மாவீரன் காடுவெட்டி குரு

மாவீரன் காடுவெட்டி குரு

என்றும் மாவீரன் வழியில்

19/03/2023

இனக்காவலன்
மாவீரன் காடுவெட்டியார்!!.

19/02/2023

சிறப்பான கதையம்சமுள்ள அனைவரும் விரும்பும் திரைப்படம்.
அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். ♥️


#பகாசூரன்

06/02/2023

ஒவ்வொரு வன்னியனும்
தன் இதயத்தில்
கோவில் கட்டி வணங்கும்
ஓர் தெய்வம்

#மாவீரன்_காடுவெட்டியார்

Photos from மாவீரன் காடுவெட்டி குரு's post 01/02/2023

♥️🔥 #மாவீரன்_காடுவெட்டியாருக்கு♥️🔥 கோவிலில் #சிலை அமைத்து கும்பாபிஷேகம் நடத்திய கிராமத்தினர்♥️🙏

இன்று மாவீரன் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளிதென்னல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சடையாண்டிக்குப்பம் கிராமத்தில் மாவீரன் குரு அய்யா அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது ♥️🔥

#பிப்_01
#மாவீரன்_காடுவெட்டியார்

30/01/2023

"என் மக்களுக்கு உரிய இழப்பீடு தராமல் ஒரு பிடி மண்ணை கூட நீ அள்ள முடியாது.."
--
அடிமாட்டு விலைக்கு ஏழைகளின் நிலத்தை பிடுங்கினார்கள். அன்றைய ஆளுங்கட்சிகளான அதிமுக, திமுக இரண்டுமே மக்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தருவதில் நாட்டம் காட்டவில்லை. நிலத்தை பிடுங்குவதில் வேகம் காட்டி அவர்கள் வேலையை முடித்தார்கள்..

அப்பாவி மக்கள் அதிக இழப்பீடு வேண்டுமென போராடி பார்த்தார்கள். கொடுக்கிற பணத்தைப்பிடித்துக் கொண்டு கையெழுத்து போடு, இல்லையேல் பணத்தை உன் அக்கவுண்டில் போட்டுவிட்டு நாங்களே ஆக்கிரமித்துக் கொள்வோம் என்றது அரசாங்கம்.

இத்தனை அநியாயம் நடக்கிறதே, பாரம்பரியமாக முன்னோர்கள் வாழ்ந்த ஊரையும், கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த நிலங்களையும் அடிமாட்டு விலைக்கு அரசே பிடுங்குகிறதே, இதை கேட்க யாருமே இல்லையா என மக்கள் வேதனையில் பொறுமிக் கொண்டிருந்த நேரம்.

மக்களுக்காக போராட பாமக வந்தது. மருத்துவர் அய்யாவை அழைத்து வந்து பல போராட்டஙகளை நடத்தினார் மாவீரர். மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் தலைமையிலே மிகப்பெரிய போராட்டத்தை வஞ்சிக்கப்பட்ட எம் மக்களுக்கு ஆதரவாக நிழத்தினார்கள் மாவீரனும் தளபதியும்..

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே, ஏக்கருக்கு பத்து லட்சம் தர வேணடும். நிலத்தை கொடுத்த விவசாயிகளுக்கு படிப்புக்கேற்ற வேலை வீட்டிற்கு ஒருவருக்கு வேண்டும். நெய்வேலியில் எம் மக்களை ஏமாற்றியது போல ஏமாற்ற முடியாது. இதில் சமரசம் கிடையாதென தெளிவாக சொல்லிவிட்டார் மக்கள் காவலர் மருத்துவர் அய்யா..

நிலக்கரி நிறுவனம் அஞ்சியது. போராளிகளை பிரித்தாள அதிமுக திமுகவினரை பயன்படுத்தி வதந்தியை கிளப்பினார்கள். எல்லா மெஷின்களும் வந்திறங்க போகுது. பாமக போராட்டம் பிசுபிசுத்து விட்டது. மருத்துவரும் மாவீரனும் பெட்டி வாங்கி விட்டார்கள் என பொய்களை காற்றில் கொளுத்திப் போட்டார்கள். அப்பாவி மக்கள் சிலரும் நம்பினார்கள். திமுக, அதிமுகவினர் குஷியாகி மக்களை பாமகவிற்கு எதிராக திருப்பி விட்டோம். நீங்க நிலக்கரி எடுக்கும் வேலையை ஆரம்பிக்கலாம். போராட்டம்னு பாமக காரங்க வந்தால் மக்களே ஏற்க மாட்டார்கள் என நிலக்கரி நிறுவன புரோக்கர்களுக்கு உறுதியளித்தார்கள்.

எல்லா மெஷின்களும் வந்திறங்க போகிறது. மக்கள் ஊரை காலி செய்ய வேண்டுமென செய்தி பரவியது. மக்கள் நமக்காக போராட இருந்த ஒரே கட்சியும் இனி வரப்போவதில்லை என நம்பினார்கள் அந்த பணப்பெட்டி வதந்தியால்..

தனது படை பரிவாரங்களோடு வந்தார் ஒரு இளைஞர். மேலூர் கிராமம் தனது முழு நிலங்களையும் இழந்திருந்த கிராமம். அங்கே நின்று பேசினார்.

என் மக்களுக்கு உரிய இழப்பீடு தராமல் இங்கே ஒரு மெஷினரியும் உள்ளே வரக்கூடாது. எங்க அய்யா சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இங்கே ஒரு பிடி மண்ணை கூட எவனும் அள்ள முடியாது. என் மக்களுக்காக எதையும் செய்வேன். அதிகாரம் கையிலிருக்கு அடக்கி ஒடுக்கி விடலாம், கருப்புத்தங்கத்தை வெட்டி எடுத்துவிடலாம் என நினைத்தால் முந்திரிக்காட்டு விவசாயிகளோடு சேர்ந்து போராளிகளாவோம். எம் மக்களை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக எந்த ஆயுதத்தையும் எடுப்போம் வெடிகுண்டு கூட..

பேசிவிட்டு புறப்பட்டார் அவர்..

ஆண்டுகள் 25 ஆகிவிட்டன. ஆட்சிகளும் காட்சிகளும் மாறிவிட்டன. அப்படி பேசியதற்காக வழக்குகள் புனையப்பட்டு நீதிமன்ற படிக்கட்டுகளுக்கும் சிறைச்சாலைகளுக்கும் அலைந்தார் அவர்..

25 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பேசிய வார்த்தை இன்றும் இந்த மக்களை ஏமாற்றி நிலத்தை பிடுங்க நினைத்த அதிகாரம் படைத்தவர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பிடி மண்ணைக் கூட அள்ள முடியவில்லை. இறுதியாக நிலத்தை இழந்த விவசாயிகளுக்கே நிலம் திரும்ப வந்து சேர்ந்தது.

இந்த லட்சியத்திற்காக பாடுபட்ட, வழக்குகளை சுமந்த, சிறை சென்ற மாவீரர் இம்மண்ணைவிட்டு மறைந்து விட்டார். ஆனால் அவரது தியாகமும் போராட்டமும் நீர்த்துப் போகவில்லை. இறுதியில் விவசாயிகளுக்கு நீதி கிடைத்தது.

அவர்தான் இம்மண்ணின் பெருமை.

சிறைக்கு செல்லும் போதும் சிரித்துக் கொண்டே செல்லும் சிம்மக்குரல் தலைமை..

#மாவீரர்_புகழ்_வணக்கம்

29/01/2023

பிப்ரவரி-01

"வன்னியர்களின்
எழுச்சி
நாள்"
--

29/01/2023

கடைக்கோடி வன்னியனும்
கர்ஜித்த ஒரே பெயர்

#மாவீரன்_காடுவெட்டியார்

வாழ்த்த வயதில்லை
வணங்குகிறோம்..

28/01/2023

#அடுத்த சாதியை ஒருபோதும் விமர்சித்ததில்லை!!!

தன் சாதியை விமர்சித்தவனை ஒரு போதும் #விட்டதில்லை!!!!!

தன் சொந்த சாதியை எவருக்காகவும் #விட்டுக்கொடுத்தில்லை

உன் இனமே உன் பெயரைதான் அடையாளமாக காட்டி நிற்கிறது🔥
#மாவீரன்_காடுவெட்டியார்🔥


🔥
🔥

28/01/2023

மே-05 ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம்- சுங்குவார்சத்திரத்தில்
சித்திரை முழு நிலவு பெருவிழா மாநாடு!!

24/01/2023

விசுவாசமாகவும்,
உண்மையாகவும் இருந்தால் மட்டுமே மக்கள் இந்த இடத்தில வச்சி கொண்டாடுவாங்க !!

#மாவீரர்_மறையவில்லை !!

24/01/2023

எதற்காகவும் சமரசமாகாத தலைவர்

தமிழக அரசியலில் சிலர் ஆரியத்தை எதிர்ப்பார்கள், சிலர் திராவிடத்தை எதிர்ப்பார்கள், சிலர் சாதி ஒழிப்பு போர்வையில் நடக்கும் சாதிய வன்ம அநீதிகளை எதிர்ப்பார்கள். ஆனால் வன்னியர்களுக்கு எதிராகவோ பாமாகவுக்கு எதிராகவோ செயல்பட்ட ஆரியத்தையும் திராவிடத்தையும் சாதி ஒழிப்பு போர்வையில் குளிர்காய்ந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலையும் அந்தந்த நேரங்களிலேயே ஒரு சேர எதிர்த்து இன உணர்வை ஊட்டியவர் மாவீரன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கவுண்டர்களாக மாறி வரும் வன்னியர்கள் என்கிற தலைப்பில் வன்னியர்கள் தங்கள் சாதிப் பெயரை வெளிக்காட்டுவதை இழிவாக நினைத்து கவுண்டர் என சொல்லிக் கொள்வதாகவும், வன்னியர்களின் தொழில் அடிதடி ரவுடியிசம் எனவும் ஒரு அவதூறு கட்டுக்கதையை தினமலர் பத்திரிக்கை வெளியிட்டது. வன்னியர் சங்க மாநாட்டு மேடையிலே தினமலரை கண்டிக்க ஆரம்பித்த மாவீரன் அவர்கள் தினமலர் கும்பலின் ஆதி முதல் அந்தம் வரை விலாவாரியாக விமர்சனம் செய்து கண்டனத்தை பதிவு செய்தார்.

அதே மேடையிலேயே வன்னியர் கல்வி அறக்கட்டளை பற்றியும் வன்னியர் சங்க மாநாடு பற்றியும் அவதூறாக பேசிய திராவிட கும்பலையும் தலைவர்களையும் அவர்களது குடும்பம் முதல் குலத்தொழில் வரை விமர்சனம் செய்து, இனி ஒரு முறை வன்னியர்கள் குறித்துப் பேச எவரும் ஒரு கணம் யோசிக்க வேண்டுமென்கிற நிலையை உருவாக்கினார்.

வன்னியர்களையோ மருத்துவர் அய்யாவையோ பாமகவையோ விமர்சனம் செய்கிறவர்கள், யார்? எந்த சமூகம்? சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள்? கூட்டணி நட்புறவு பாதிக்குமா? இவர்களை விமர்சித்தால் வழக்கு வருமா? ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்களா? நாளை ஏதோ ஒரு சிபாரிசுக்காகவோ காண்ட்ராக்டுக்காகவோ இவர்களோடு லோக்கல் அன்ட்ர்ஸ்டான்டிங் செய்யனுமா? ஏதோ ஒரு லாபத்திற்காக அண்டி பிழைக்கும் சூழல் வருமா? இப்படி எதைப் பற்றியும் சிந்திக்காமல் தமது சமூகத்தையும் தலைமையையும் விமர்சனம் செய்கிறவர்களை தடாலடியாக விமர்சனம் செய்து வன்னிய இளைஞர்களை ஒன்றுபடுத்தி வழிநடத்திய பெருமை, மாவீரனுக்குதான் உண்டு.

ஒருவேளை மாவீரன் நலமோடு இருந்திருந்தால் ஜெய்பீம் பட கும்பல் கூட வன்னியர் மீது இப்படி ஒரு கொடூர படுபாதக பழியை போட தயங்கியிருக்கும். அதற்காக மாவீரனுக்கு பின்னர் வன்னியர்களுக்காக நீதி கேட்க யாருமில்லை என சொல்லவில்லை. இதே பொய்பீம் கும்பலை எதிர்த்து தமது கண்டனத்தை ஒலிக்க செய்து, அக்கும்பலை உடனடியாக பணிய வைத்து அவதூறு காட்சிகளை மாற்றியமைக்க துணை நின்றவர் மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் என்பதை மறுக்க யாராலும் முடியாது. வன்னியர்களுக்கு அநீதி நடக்கும் போதெல்லாம் இன்றும் நீதிக்கான குரலாக பாமக மட்டுமே பேசுகிறது.

மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் நாகரீக அரசியலில் மென்மையான வார்த்தைகளை பயன்படுத்துபவர். அத்தகைய தலைவரின் நாகரீகமான கண்ணியம் மிக்க எதிர்ப்புக் குரலைக் கூட விமர்சனம் செய்த, புரிந்து கொள்ளாத சில சினிமா துறையினரின் குணத்தை கண்ட போது, ஜெய்பீம் கும்பலுக்கு பாடம் புகட்ட அன்று மாவீரரின் தடாலடி அரசியலும் தேவை என்பது புரிந்தது.

பல தருணங்களில் தமது தலைமையின் கண்ணசைவுகளுக்கு கருத்துக்களுக்கு தனது தடாலடி அரசியலால், தனது தளபதிகளின் அதிரடி செயல்பாடுகளால், தலைமையின் கருத்துக்களுக்கு களத்தில் வலுசேர்த்து, வன்னிய இனத்தின் உரிமைக்காக இறுதி வரை பாடுபட்ட மாவீரனாரின் புகழைப் போற்றுவோம்.

#மாவீரர்_புகழ்_வணக்கம்

24/01/2023

மாவீரன் பேரச் சொன்னா
அரங்கம் அதிரும்!

ஜல்லிக்கட்டில்..

18/10/2022

வீரப்பனாருக்கு
வீர வணக்கம்!!

13/09/2022

ஆந்திராவில்..

"இனமான தளபதி"
மாவீரன் காடுவெட்டியார்..

எங்கும் ஒலிக்கும்
இவரது கர்ஜனை..


#மாவீரன்_காடுவெட்டியார்

08/06/2022

ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட
நிலங்களுக்கு உரிய சரியான இழப்பீடு கொடுக்காமல், #ஒருபிடி_மண்ணை_கூட_எடுக்க_விடமாட்டேன் சவால் விட்ட சத்திரியன்.

#மீறினால்_கையை_வெட்டுவேன் எனக்கூறி பல வழக்குகளை சுமந்து, இறுதிவரை நிலத்தை எடுக்கவிடாமல் தடுத்த மாவீரன்..

இதனால் தனது துப்பாக்கி லைசென்ஸ் ரத்தானது.

24/05/2022

துணையில்லா வாழ்க்கையில்
துணையாய் உன் குரல்
திரும்பி வா!

நிலையில்லா கூட்டத்தில்
நிலைக்கும் உன் பெயர் எழுந்து வா!!

#காடுவெட்டியார்..💛❤
மாவீரனுக்கு வீரவணக்கம்....

22/05/2022
Want your public figure to be the top-listed Public Figure in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

இனக்காவலன்மாவீரன் காடுவெட்டியார்!!.#Maveeran
மாவீரன் பேரச் சொன்னா அரங்கம் அதிரும்!ஜல்லிக்கட்டில்..
துணையில்லா வாழ்க்கையில்துணையாய் உன் குரல்திரும்பி வா!நிலையில்லா கூட்டத்தில்நிலைக்கும் உன் பெயர் எழுந்து வா!!#காடுவெட்டிய...
எங்களின் காவல் தெய்வமேவணங்குகிறோம்
மலரும் நினைவுகள்...நம் குலசாமி.
தமிழகத்தின் மானம் காத்த மழவராய வன்னியகவுண்டருக்கு 17 ஆம் ஆண்டு நினைனைவேந்தல் தினம் இன்று!!வீரவணக்கம்! தமிழனத்தின் எல்லைச...
ருத்ர தாண்டவம் review ....
#மாவீரன்_காடுவெட்டியார்#மே25  | #மூன்றாம்_ஆண்டு_நினைவேந்தல்
ஜெயங்கொண்டம் பொன்னேரியே தூர் வாரினேன் நானும் மாவீரன் குருவும்  மருத்துவர் அய்யாவின் பேச்சு🔥🔥🔥

Category

Website