Agni Media
Media
தமிழக ஆளுநர் அவர்கள் பங்காரு அடிகளார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்
கொடுத்த லஞ்சம் போதாது என்றும் இன்னும் 15 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றும் லஞ்சம் கேட்ட பொதுப்பணித்துறை அதிகாரி பணியிட நீக்கம்
அருந்ததிய மக்களை இழிவாக பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை கண்டித்து ஏரியூரில் ஆர்ப்பாட்டம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரத்தின் போது அருந்ததிய மக்களை வந்தேறிகள் என்று இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி சீமானை கண்டித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் ஏரியூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
|| இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
* ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ₨50 உயர்ந்து ₨470க்கு விற்பனை
* ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ₨100 உயர்ந்து ₨550க்கு விற்பனை
* சூப்பர் டீசல் ₨75 உயர்ந்து ₨520க்கு விற்பனை
|
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல்நிலைய தூய்மைப் பணியாளர் மதுரை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
தடம் மாறும் மாணவர் சமுதாயம்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மரு.அன்புமணி ராமதாஸ் MP மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒகேனக்கல்லில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி அவர்கள் ஆய்வு.
நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு, பிரதமர் கேர்ஸ் நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்
ஆழ்ந்த இரங்கல்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும் தர்மபுரி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணார் சா.பெ. வெங்கடேஸ்வரன். MLA அவர்களின் தாயார் இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏரியூர் காவல் நிலைய எல்லைக்குள் தொடர் வேட்டை
500 மது பாட்டில்கள் காவல் உதவி ஆய்வாளர் செல்வம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மூலம் 26/05/2021 நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடக மதுபாட்டில்கள் ஏரியூர் காவல் துறையினரால் பறிமுதல்.
ஏரியூர் பகுதிகளில் கர்நாடக மதுபான பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஏரியூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது அதன்பேரில் என்று தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஏரியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சேகர் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் நெருப்பூர் அருகே 150 பாட்டில்களை பறிமுதல் செய்து மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கண்டனம்
கடலூரில் வேறு ஒரு நோயாளிக்கு செலுத்துவதற்காக ஆக்சிஜன் குழாயை அகற்றியதால், கணவர் உயிரிழந்துவிட்டதாக, மனைவி புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி இன்று (மே 21) வெளியிட்ட அறிக்கையில், "கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சி, நடுவீதியில் வசித்து வந்த கண்ணன் முதலியார் என்பவருடைய மகன் ராஜா (வயது 49) கொரோனா பெருந்தொற்று காரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கடந்த 8 ஆம் தேதி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், நேற்று காலை வரை அவருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார்கள் என்றும், நேற்று (20.5.2021) காலை சுமார் 9 மணி அளவில் நோயாளி காலை உணவு அருந்தும் போது அங்கு வந்த பணியில் இருந்த அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவருடைய வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு வெளியேற முற்பட்டனர் என்றும், அதை தடுக்க முயன்ற அவருடைய மனைவி கஸ்தூரியை தடுத்துவிட்டு, வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் சென்று விட்டனர் என்றும், அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.மேலும், போராடிய அவருடைய மனைவியை கீழே தள்ளிவிட்டனர் என்றும், இதை சற்றும் எதிர்பாராத அவருடைய மனைவி அழுதபடியே தன்னுடைய கணவரை காப்பாற்ற முயன்ற போது நோயாளி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்து விட்டார் என்றும் ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வலம் வருவதை பார்க்கும் போது நெஞ்சு பதைப்பதைக்கிறது.இவ்வளவு பெரிய ஒரு கொடூரமான சம்பவம் கடலூர் அரசு தலைமை மருத்துவனையில் நேற்று காலையில் நடந்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.இதனை விரைந்து விசாரித்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்".இவ்வாறு எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி அவர்கள் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை செய்தார்
ஏழாம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் இன்று சென்னையில் அம்மா உணவகத்தில் வெளியிலிருந்த பெயர் பலகைகளை திமுகவினர் பெயர்த்து எடுத்து எறிந்தனர்.
தமிழக வீரர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி !!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பான பந்துவீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன், ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் அவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்று அங்கும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சோந்த நடராஜன் புகழ் மேலும் உயர்ந்தது. தமிழகமே அவருக்கு வாழ்த்து கூறியது. இந்த சூழலில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கா விளையாடி வருகிறார். அவர் முதல் 2 போட்டிகளில் மட்டும் விளையாடிய நிலையில், அதன்பிறகு சன்ரைசர்ஸ் விளையாடிய ஆட்டங்களில் அவர் இடம்பெறவில்லை. அவரின் முழங்காலில் காயம் காரணமாகத் தான் ஆடவில்லை என அணி நிர்வாகம் கூறியது.இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் நடராஜன்.
நடராஜனின் காயத்தை ஆய்வு செய்த பிசிசிஐ மருத்துவக் குழுவினர், அவருக்கு முழங்காலில் சிறிய அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். அதன்படி இன்று அவருக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடராஜன், "இன்று எனக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. என்னைக் கனிவுடன் கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவினர், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள்,அனைவருக்கும் நன்றி. பிசிசிஐ அமைப்புக்கும், நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கூவாகம் திருவிழா ரத்து: கரோனா ஒழிய வேண்டி திருநங்கைகள் சிறப்பு வழிபாடு.
உலகளாவிய அளவில் கரோனாவால் பொதுமக்கள் பாதித்து அவதியுற்று வரும் நிலையில், தொற்று நோய் ஒழிந்திட வேண்டி சேலத்தில் திருநங்கைகள் ஆடிப் பாடி , கும்மியடித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
உலகம் முழுவதும் வாழும் பொதுமக்கள் கரோனா தொற்று நோயால் பாதிப்படைந்து அவதியுற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் அலை கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். மேலும், இதுவரை 1.90 லட்சம் பேர் இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தினமும் 15,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், கரோனா தொற்று நோய் ஒழிந்திட வேண்டி, சேலத்தில் திருநங்கைகள் கும்மியடித்துச் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, சந்தப்பேட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், திருநங்கைகள் திரளாகக் கலந்து கொண்டனர். உலக அளவில் கரோனா தொற்று நோய் மக்களிடையே பரவாமல், ஆரோக்கியம் மேம்பட வேண்டி சிறப்புப் பிரார்த்தனை மற்றும் பூஜைகளை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் திருநங்கைகள் நடத்தினர்.
இதில் திருநங்கைகள் அம்மனுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி, 108 தேங்காய் உடைத்து, கற்பூர தீ ஜூவாலையை வட்டமிட்டபடி ஆடி, பாடி, கும்மியடித்து சிறப்புப் பிரார்த்தனை மற்றும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, ''ஆண்டுதோறும் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று வழிபாடு நடத்துவோம். இன்று (27-ம் தேதி) கூவாகம் திருவிழா கரோனா தொற்றால் நடத்தப்படவில்லை. அதனால், சேலம், செவ்வாய்ப்பேட்டை, சந்தப்பேட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்குத் திரளாக வந்து, கரோனா தொற்று நோய் தீரவும், பொதுமக்கள் ஆரோக்கியத்துடன், இயற்கை வளம் செழிக்க வாழ்ந்திட வேண்டியும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு, அம்மனுக்கு
அங்கவஸ்திரம் சாற்றி, படையலிட்டு, கற்பூரம் ஏற்றி கும்மியடித்துச் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டோம்" என்றனர்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ். இவர், அமைச்சருடன் டி.கல்லுப்பட்டி அருகே டி.குண்ணத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அம்மா கோயில் வளாகத்திலேயே வசித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி போஸ் காலமானார்.
சென்னையில் நேற்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயகுமாருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது
கொரோனா சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 14.77 கோடியாக அதிகரித்துள்ளது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 14.77 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகளில் தொழில் தேவைக்கான ஆக்சிஜன் தயாரிப்பை நிறுத்தி மருத்துவத் தேவைக்காக ஆக்சிஜனை அனுப்பிவைக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதனைப் பயன்படுத்திக்கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், எங்களால் தினமும் 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்துதர முடியும். அதனால் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கவேண்டும் என மனு செய்தது. தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி தரலாம் என மத்திய அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையின்போது தமிழகம் சார்பில் முன் வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, இதுகுறித்து நாளை ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 9:15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பான்யூவாங்கி: கடலில் திடீரென மாயமான இந்தோனேஷிய நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் கிடைத்ததை தொடர்ந்து, அதில் இருந்த 53 வீரர்களும் ஆக்சிஜன் இல்லாமல் இறந்திருக்க கூடும் என்று இந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் வணக்கம்
முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
636810
Dharmapuri
வீர #வன்னியர் குல சத்திரியர் வம்சம் ஒரு துளி...💧 முக்குளம் ஊராட்சி., காரிமங்கலம் ஒன்றியம்.,
Bazzar Street
Dharmapuri, 636701
Dharmapuri News, Events, Social services, Survey etc
Dharmapuri, 636701
For Latest updates about in and around Dharmapuri. *News *Events *Jobs *Social Activities *Blood donations *Movie updates and ticket *Directories
Dharmapuri
Dharmapuri district, which came into existence from 02.10.1965 is situated in the North western Corn
Dharmapuri
தருமபுரி மாவட்ட நிகழ்வுகளை தெரிந்துக்கொள்ள நமது பக்கத்தை பின்தொடரவும்...!
I/Print , SMA Polytechnic Complex , Krishnagiri Main Road , Broker Office
Dharmapuri, 636701
Prints, Media, Advertising
Dharmapuri, 636701
Photography includes Wedding, Commercial, Product, Industrial, Celebrations,Events,....