PNR Roadway

PNR Roadway Movers Private Limited

01/09/2023

இன்று September 1 எங்கள் தந்தை அவர்களின் நினைவுதினம் ..!

நாங்கள் விழும் போது எழ வைத்து , அழும் போது தோள் கொடுத்து, சிரிக்கும் தருணத்தில் சிந்திக்க வைத்து கோபக் கொப்பளிப்பில் அரவணைத்து, நட்பு, உறவு, நேசம், மொழி உணர்த்தி , உலகம் உருண்டை தான் ஆனால் அது உள்ளங்கை தூரமென காட்டி முடியாத ஒன்றுமில்லை எனவுரைத்து ,நமக்கிடையே சுவரின்றி எப்போதும் பாதுகாத்து ,உருண்டு புரண்டு ,கட்டி கதைபேசி எளிமை என்பதை அதைவிட எளிதாக வாழ்ந்து பிரதிபலித்து என்னை இப்போதும் எப்போதும் பிரமிக்க வைக்கும் பிரபஞ்சம் நீங்கள் மட்டுமே அப்பா..!

நாங்கள் காண நீங்கள் எடுக்காத அவதாரம் ஏது?
எழுதி தீரவில்லை எங்கள் எழுதுகோலுக்கு..!
தந்தையாய் ,தோழனாய் ,ஆசிரியனாய் ,சகோதரனாய் ,கதை சொல்லியாய் ,மருத்துவ சேவையாய் ,அன்பு கானகமாய் ,எனக்கு நீ வாழ்ந்து காட்டாத
கவிதை படிமம் ஏதும் உண்டா அ்அப்பா..?

ஆயிரம் முறை கோவில் வலம் வந்தும் கடவுள் ஏன் பேசுவதில்லை என்றெண்ணி பின் பள்ளி வயதில் கண்டறிந்தேன் எப்போதும் என்னுடனே பயணித்த
கடவுள் நீங்கள் மட்டுமே அப்பா..!

உங்கள் கரம் பற்றிய பால்யம் தொட்டு கடைசியாக உங்களை முத்தமிட்டு வழியனுப்பும் வரை இருவரும் கலக்காத உரையாடல் ஏது இங்கே எல்லாம் அடியுணர்வோடு கலந்துவிட்ட ஆழ் படிமங்கள் அப்பா...!

எங்கள் வாழ்வின் ஒவ்வொரு பருவமும் கடக்கும் போதும் நீங்கள் அள்ளி தெளித்த அனுபவங்கள் ஒன்றா இரண்டா புத்தகமும் ,நூலகமும் ஒன்றிணைந்த பேரேடு அப்பா..!

பிரமிப்பு என்ற வார்த்தையின் வீரியத்தை உங்கள் எளிய வாழ்க்கை,வெற்றி,தோல்விகளை கையாண்ட விதம் கண்டு உங்கள் கரடு முரடான பயணத்தின் வலிமையைகண்டு நீங்கள் சொல்லிய ஒரு வார்த்தைகள் எல்லாம் அடி நெஞ்சில் ஆழமாய் விதைத்து இருக்கிறோம் அப்பா ..!

இப்போதும் வெற்றி பெறுவது மட்டும் வாழ்க்கை அல்ல வாழ்க்கை பாதை அனுபவங்களை அதன் போக்கிலேயே அனுபவித்து கடப்பது தான் ஆத்மார்த்த பயணம் என்பதை உங்கள் காலங்கலில் இறுதியில் கண்ட முகச்சுருக்க கோடுகள் அது வறண்ட வயோதிக கோடுகள் அல்ல வலுவான வாழ்க்கை பயணத்தின் மேடுபள்ளங்களின் வலிகள் அதில் தளராது நீங்கள் கண்டெடுத்த வெற்றிகளின் அழுத்த சுவடுகள் அப்பா..!

நீங்கள் இல்லாத ஒவ்வொரு நொடிகளும் தனிமை பயணங்கள் உண்மையில் கடப்பது மிகக் கடினம் தான் அப்பா..!

இருண்ட மழைநாளில் திசையற்று ஒற்றையாய் தனித்து பறக்கும் சிறு பறவை போல் ,இலக்கின்றி திரியும் மனதை
கட்டி இழுக்க முயறசி செய்ய வைத்து அதற்கும் ஒத்திகை நடத்தி அழுத்தமாக சொல்லிவிட்டு தானே
பயணித்திருக்கின்றீர்கள் என்பது உங்கள் மறைவிற்கு பிறகுதான் நாங்கள் அறிகிறோம் அப்பா..!

நீங்கள் ரசித்து கடந்த வாழ்க்கையின் அர்த்தமுள்ள பயணத்தை விட்டு சென்ற பாதச் சுவடுகளின் மீது முடிந்தவரை பயணிப்போம் நீங்கள் எங்கலோடு இல்லை என்பது கனவாகி ,பொய்க்காதா என்று இப்போதும் விம்முகிறேன் உங்களை இனி எங்கு காண்பேன் அப்பா"..?!

பரந்த பால்வெளியில் எங்கு நீங்கள் இருந்தாலும் மகிழ்ச்சியும்,சந்தோஷமும் பூத்து மலரட்டும் அங்கு அதன் முதல் விதை உங்களுடையதாவே இருக்கும் அப்பா..!

"அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு"
என்ற வள்ளுவரின் குரலாய் வாழ்ந்து
பயணித்த உங்களை ஆரத் தழுவி கனவு என்ற நினைவில் முத்தமிட வேண்டுகிறேன் அப்பா..!

எப்பிறவி நாங்கள் எடுத்தாலும் எங்கள் "அப்பா" என்றும் நீங்கள் மட்டுமே அப்பா..!
பொங்கி வழியும் கண்ணீரோடு உங்கள் நினைவில் உங்கள் மகன் நடராஜ் அப்பா..!

19/08/2022
Want your business to be the top-listed Transport Service in Erode?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Website

Address

Tamilnadu
Erode

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Other Transportation Services in Erode (show all)
Shakthy Transolutions Pan India Service Shakthy Transolutions Pan India Service
Erode, 638002

SHAKTHY TRANSOLUTIONS Pan India Logistics ERODE Mobile Number : 9384703835 All over India FTL OPEAR

Sktourstravelserode Sktourstravelserode
Erode, 638001

welcome to all

Top Packers & Movers Erode - 9360056001 Chennai,Bangalore Hyderabad Agarwal Top Packers & Movers Erode - 9360056001 Chennai,Bangalore Hyderabad Agarwal
33, III MAIN Road, PERIYAR NAGAR
Erode, 638001

Top Packers & Movers Erode (9629096370, 9786629192) - Get Best Price List & Charges - Packers and Mo

Home Packers and Movers in Erode, Tamil Nadu - Chennai, Bangalore,Hyderabad Home Packers and Movers in Erode, Tamil Nadu - Chennai, Bangalore,Hyderabad
No:174, Priyadurai Complex, Near Railway Station, Nadar Medu, Railway Colony
Erode, 638002

Aero Star Packers & Movers has a dedicated team of professionals who serves our clients anytime, any

-------RWdY------Bby ------ -------RWdY------Bby ------
Chinnappllam
Erode, 638311

Dharani Travels Dharani Travels
Opposite To Palani Andavar Kovil, Bhavani Main Road, K. R. Palayam, Bhavani (P. O)
Erode, 638301

We provide tourist busses 54 seate(A/C & Non A/C). We organize Industrial Visits with and without fo

DDP Transport and Acting Driver service DDP Transport and Acting Driver service
Erode, 638001

All medicines available with reasonable price. Get concentrate on New medicine

TTS Bus Transports TTS Bus Transports
Erode, 638004

Servicing people..... Since 1969

Raghu Sivasakthi Transports Raghu Sivasakthi Transports
Erode, 638514

The next passion of life

SRT - Shree Raajaganapathy Transport SRT - Shree Raajaganapathy Transport
Erode, 638004

U Need Goods Transport , Then Call Us For Perfect Support

Top Packers & Movers Erode 9360056001 - Transportation Household Shifting Top Packers & Movers Erode 9360056001 - Transportation Household Shifting
Erode, 638004

Top Packers & Movers Erode - 9360056001 Best Price& Quote - Transportation Household Shifting Service