DYFI - ERODE
தகுதியுள்ளதே
தப்பிப் பிழைக்கும்!
கிராம உதவியாளர் பணிகளை நிரப்ப தமிழக அரசு முடிவு.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க கலெக்டர்கள் அந்த தகவலை அளித்துள்ளனர்.
அந்த காலியிடங்களை நிரப்புவதற்காக அந்த தகவல் தேவைப்பட்டது. 1.10.2019 தேதியில் இருந்து 30.9.2022 வரை தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது அதிகமாகும்.
உடனடியாக...
இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான (உத்தேசம்) தேதிகளை அரசு கூறியுள்ளது.
அதன்படி தாலுகா அளவில் பத்திரிகைகள் மூலம் 10-ந்தேதி அறிவிப்பாணை வெளியிட வேண்டும். இந்த வேலைக்காக விண்ணப்பம் அளிக்கும் கடைசி தேதி நவம்பர் 7. விண்ணப்பங்களை ஆய்வு செய்து நவம்பர் 14-ந்தேதிக்குள் பரிசீலனை செய்து முடிக்க வேண்டும்.
வாசிப்பு மற்றும் எழுத்து திறன் பரீட்சையை நவம்பர் 30-ந்தேதி நடத்த வேண்டும். நேர்முகத்தேர்வை டிசம்பர் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடத்த வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ந்தேதி வெளியிட்டு அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும் என அரசு செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.
வாய்ப்புள்ள தோழர்கள், நண்பர்கள் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கவும்.
Click here to claim your Sponsored Listing.