Gobichettipalayam (கோபிசெட்டிபாளையம் ) Erode (Dt) ,Tamilnadu
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா.. Gobichettipalayam is located in Erode District. This is a semi rural area. Gobichettipalayam is also called as Gobi.
An old man named Gobi Chetti lived in this place and hence the city gets its name "Gobichettipalayam". Previously Gobichettipalayam was called as Verapandi Gramam, and more documents and records still use that name. Gobichettipalayam is warm and humid for most of the year. Gobichettipalayam is known for the Temple Pariyur Amman and the dam Kodavari. Pariyur Amman temple is dedicated to the goddess
*அருள்மிகு பாரியூர் ஸ்ரீதேவி கொண்டத்து காளியம்மன் தேர்த் திருவிழா 2023 - 2024*
*தமிழ் ஸ்ரீ சோபகிருது ஆண்டு மார்கழி மாதம் 12 ஆம் நாள், டிசம்பர் மாதம் 28-12-2023 வியாழக்கிழமை இரவு பூச்சாட்டுதல்*
*மார்கழி 23 ஆம் நாள், 2024 ஜனவரி 08-01-2024 திங்கட்கிழமை சந்தணகாப்பு* !!!!
*மார்கழி 25 ஆம் நாள், 2024 ஜனவரி 10-01-2024 புதன்கிழமை பச்சை பூஜை* !!!!
*மார்கழி 26 ஆம் நாள், 2024 ஜனவரி 11-01-2024 வியாழக்கிழமை திருக்குண்டம்* !!!!
*மார்கழி 27 ஆம் நாள், 2024 ஜனவரி 12-01-2024 வெள்ளிக்கிழமை இரவு முத்துப்பல்லக்குத்தேர்த் திருவிழா* !!!!
*மார்கழி 28 ஆம் நாள் ஜனவரி 13-01-2024 சனிக்கிழமை காலை முத்துப்பல்லாக்குத்தேர் கோபிச்செட்டிப்பாளையம் வந்தடையும்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருள்மிகு பாரியூர் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதி
மறைந்த நடிகர் மைல்சாமி அவர்கள் நமது பக்கத்து ஊரான சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல் .. பாக்கியராஜ் அவர்களால் தாவணி கனவுகள் படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் .
அவருக்கு நமது ஊர்மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வோம் .
RIP
நமது கோபியில் அனைத்து வகையான டிசைன் ஒர்க்ஸ் (Proffesional Design Works ) ஒரே இடத்தில்.
https://www.facebook.com/nirusstudio
Call : 98437 60960
Gobichettipalayam.
அருள்மிகு பாரியூர் கொண்டத்து காளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரம்...
அருள்மிகு குருநாதா சுவாமி கோயில் தேர் திருவிழா.
வருகிற ஆகஸ்ட் 7 ம் தேதி தேர் திருவிழா ஆரம்பம்.
விழா தெரியும் வரலாறு தெரியுமா ?தெரிஞ்சுக்கோங்க ...
ஈரோடு மாவட்டத்தில் மிகப் பேர் செல்லும் 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா குருநாதசுவாமி திருக்கோயில் திருவிழா. தலவரலாறு சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் வனப்பகுதியில் 600 ஆண்டுகளுக்கு முன் குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி, மூன்று குழவிக்கற்களை மட்டும் நட்டு வழிபட்டனர்.
இந்தக் கோயில் பூசாரி வீட்டுப் பெண்ணை, ஆற்காடு நவாப் திருணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெண் கேட்டுள்ளார். உறவினர்களிடம் கலந்து பின் சம்மதம் தெரிவிப்பதாக நவாபின் ஜவானிடம் பூசாரி கூறினார். உறவினர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை.
அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அப்போது உறவினர் ஒருவருக்கு அருள்வந்து, நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்றுவிடுங்கள், என்று கூறினார். பூஜாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு சென்றனர்.
அடுத்த நாள் நவாப்பின் ஆட்கள் அங்குச் சென்று பார்த்த போது யாரும் இல்லை. கோயில் கோபுரம், குதிரை மற்றும் யானைகள் கட்டும் இடங்களைச் சேதப்படுத்தினர். கற்களுடன் சென்றவர்கள் பல ஊர் கடந்து பசியாலும், பட்டினியாலும் வாடி வதங்கினர். தங்களையே பாதுகாக்க இயலாத நிலையில், தம்முடன் கொண்டு வந்த மூன்று கற்களையும் அருகில் இருந்த ஆற்றில் வீசிவிட்டு, வேறு ஊருக்குச் செல்ல முடிவு செய்து ஓரிடத்தில் படுத்தனர்.
அடுத்த நாள் அனைவரும் புறப்பட்ட போது, தங்களுடைய கூடையில் மூன்று கல் சிலைகளும் இருந்ததைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டனர். அவற்றைத் தங்கள் குலதெய்வமாக வழிபட முடிவெடுத்தனர். அந்தியூரில் உள்ள புதுப்பாளையம் என்ற இடத்திலுள்ள கல்மண்டபத்தை அடைந்தனர்.
பாண்டிய மன்னரிடம் அனுமதி பெற்று மூன்று கற்களையும் வழிபாடு செய்தனர். பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒரு குறுநில மன்னன் இந்த இடத்தில் ஒரு கோயில் கட்டினார். கோயில் சுற்றுப் பிரகார நடுப்பகுதியில் 11 அடி நீளம், 11 அடி அகலம், 11 அடி உயரம் கொண்ட குலுக்கை என்னும் பெட்டகம் உள்ளது. அதனுள் பூஜை பொருட்களை வைத்து வந்தனர். ஆடி மாதத் திருவிழாவில், விழாவிற்கு முந்திய நாள் குலுக்கையைத் திறந்து பூஜைப் பொருட்கள் எடுப்பது வழக்கம். இக்குலுக்கைக்கு நான்கு புறமும் வாசற்படிகள் இல்லை.
மேல்பகுதி வழியாக ஆள் புகுந்து வரும் நுழைவாயில் உள்ளது. கீழே துவாரம் காற்றோட்ட வசதிக்கு அமைத்து அத்துவாரத்தில் பாதுகாப்புக்காகப் பாம்புகளை விட்டு வைத்தனர். ஆகம விதிப்படி விரதம் இருந்து வரும் பூசாரிகளில் ஒருவர் மட்டும் திறப்பார். மற்றவர்கள் அந்தப் பெட்டகத்தில் நுழைய முயற்சித்தால் பாம்பால் கடியுண்டு இறப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. பக்தர்கள் தங்கள் தோட்டங்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களால், தங்களுக்கு ஆபத்து நேராமல் இருக்க, குலுக்கைக்குப் பூக்கள் இட்டு வணங்குகின்றனர். இந்தக் குலுக்கை பார்ப்பதற்குப் புற்று போல உள்ளது.
இங்குள்ள காமாட்சியம்மன் தவமிருக்க அந்தியூர் வனத்துக்குச் சென்றாள். மாய மந்திரத்தில் பிரசித்தி பெற்ற உத்தண்ட முனிராயன் என்பவர் அம்பாளுக்கு வனப்பகுதியை விட மறுத்தார். அவனைக் குருநாத சுவாமியின் சீடரான, அகோர வீரபத்திரர் சண்டையிட்டு அழித்தார். அவன் அழியும் முன், “என் அகந்தையை அழித்த குருநாதா! உன் கையால் அழிவதால், என் பூர்வ ஜன்ம சாபம் நீங்கப் பெற்றேன்.
இவ்வனத்தில் தாய் காமாட்சி அம்மன் தவம் மேற்கொள்ளட்டும். இந்த வனம் இன்றிலிருந்து ஸ்ரீகுருநாதர் வனமாக இருக்கும். நான், அகோர வீரபத்திரனின் எதிரில் கைகூப்பி தலை வணங்கி நிற்க, நீ இங்கேயே அருள்புரிவாய்” என்று வரம் கேட்டான்.
அந்த வரத்தைக் குருநாத சுவாமி கொடுத்தார். இதனடிப்படையில், அசுரகுணம் கொண்டவர்களுக்குக் கூட குருநாத சுவாமி பூர்வ ஜன்ம சாபத்தையும், பாவத்தையும் தீர்ப்பதாக நம்பிக்கையுள்ளது. இந்தக் கோயிலில் சிறிய கல் உருவம் ஒன்றை வீரபத்திரரும், உத்தண்ட முனியும் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர். அந்தக் கல் குன்றாக வளர்ந்துள்ளது. மக்களும், “குருநாதா. உன் குன்று வளர்வதைப் போல் என் குடும்பத்தையும் வாழ வையப்பா” என வேண்டுகின்றனர்.
காமாட்சி அம்மன் தவநிலையில் இருக்கிறாள். அருகில் சித்தேஸ்வரன், மாதேஸ்வரன், நவநாயகிகள், ஏழு கன்னிமார்கள் உள்ளனர். பாட்டன், பாட்டி, நாகதேவதை, தண்டகாருண்யர், தர்ப்பை அம்மன், அண்ணன்மார் என்னும் முன்னுடையார், 18 சித்தர்கள் உள்ளனர். அகோர வீரபத்திரர் எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் உள்ளது.
குதிரைச் சந்தை அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுக்குத்திரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர்.
குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விடத் திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
இத்திருவிழாவைக் காண தமிழகம் எங்கும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.
கோலாகல ஆரம்பம் பாரியூர் திருவிழா 2020
பாரியூர் விழாவிற்கு அனைவரும் வருக மக்களே...
கோபிசெட்டிபாளையம் ALWAYS WELCOMES YOU ...
என்ன நண்பா ஊருக்கு கிளம்பியாச்சா ... சீக்கிரம் வாங்க பஸ் , ரயில் அட லாரியாவது புடுச்சு சீக்கிரம் ஊருக்கு வாங்க ...
உங்க நண்பன் , அம்மா , அப்பா , உங்க மாமா , அத்தை, அத்தை பொண்ணு , பாட்டி , தாத்தா , சித்தப்பா , சித்தி எல்லோரும் உங்களுக்காக Waiting Boss .
வாங்க பாரியூர் , பண்ணாரி , பவானிசாகர் , கொடிவேரினு எல்லா இடத்துக்கும் போய் சுத்தி பாருங்க .. வாய்க்கால்ளையும் தண்ணீர் போகுது .. கொஞ்சம் கவனமா இருங்க ...
தீபாவளி திருநாளுக்கு கோபிசெட்டிபாளையம் வருகை தரும் எனது அருமை உறவுகளே உங்கள் அனைவரயும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் ....
அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ...
நிரம்பியது பவானிசாகர் அணை..
கண்கொள்ளா காட்சி...
மதகுகள் வழியாக சீறி பாய்ந்து வருகிறாள் நம்ம பவானி
பொங்கி வரும் பவானி.
இது எங்கள் அணை அல்ல அன்னை ...
இந்த ஆண்டில் முதன் முதலாய் 100 அடியை தாண்டி நம்ம பவானி சாகர் அணை .
இதோ இன்று இரவு முதல் வெண் பொங்கலை பொங்கி வர போகிறாள் ...
வருக வருக என் பவானி அன்னையே ...
பாரியூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன்
குண்டம் & தேர்த்திருவிழா - 2019
07 - 01 - 2019 -- திங்கள் -- சந்தனக்காப்பு
10 - 01 - 2019 -- வியாழன் -- திருக்குண்டம்
11 - 01 - 2019 -- வெள்ளி -- திருத்தேரோட்டம்
12 - 01 - 2019 -- சனி -- மலர்பல்லக்கு
கொடிவேரி பீச்...
பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் இயற்கையாக உருவான அழகான பீச்.. இதன் அழகை பிளாஸ்டிக், குப்பைகள் இல்லாமல், மணல் திருடப்படாமல் இப்படியே பராமரித்தால் சிறந்த சுற்றுலாத் தலமாக உருவாகும்.. இதற்கு அரசு, அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும்.
பாரியூர் கொண்டத்துகாளியம்மன்
திருவிழா
பாரியூர் கொண்டத்துகாளியம்மன்
திருவிழா
பாரியூர் கொண்டத்துகாளியம்மன்
சந்தனக்காப்பு -- 08-01-2018
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருவிழா - நிகழ்ச்சி நிரல்
08-01-2018 -- திங்கள் மாலை -- சந்தனக்காப்பு
11-01-2018 -- வியாழன் அதிகாலை -- குண்டம்
12-01-2018 -- வெள்ளி மாலை -- தேரோட்டம்
13-01-2018 -- சனி இரவு -- முத்துப் பல்லக்கு
20-01-2018 -- சனி இரவு -- மறு பூஜை
அனைவரும் வருக !! அம்மன் அருள் பெருக !!
நீண்ட மாதங்களுக்கு பிறகு இதோ நம்ம கோபிச்செட்டிபாளையத்தின் அழகும் கம்பீரமும் பசுமையும் ........
பசிப்பவனுக்கு உணவு கொடுக்கவே தலை குனிபவன் இந்த விவசாயி .
தலை நிமிர்ந்து சொல்லுவேன் நான் விவசாயி என்று .
கோபிச்செட்டிபாளையத்தில் ஓர் இனிய உதயம் ...
தமிழ் மணமேடை மேட்ரிமோனி ...
அனைத்து சமுதாய மக்களின் வரன்களும் ஒரே இடத்தில ..
உங்கள் விருப்பம் போல் வரன்களை தேர்தெடுங்கள் ...
எங்கும் இல்லாத சிறப்பாக வரன்களை நேரில் சந்தித்து அறிந்து கொள்ளும் வசதி ....மிகப்பெரிய அலுவலகம் ..
தொடர்புக்கு : 95008 51430
கோபியில் வரலாறு பேசும் மாபெரும் இளைஞர்கள் கூட்டம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்போது பெரியார் திடலில்..
ஜல்லிக்கட்டு எங்களது உரிமை .....
இதை பறிக்க யாராலும் முடியாது ....
ஜல்லிக்கட்டை ஆதரிப்போம் ...
நம் உரிமையை காத்திடுவோம் ....
உங்களது ஆதரவை தாருங்கள் தமிழ் போல் உள்ளம் கொண்ட அன்பு நெஞ்சங்களே .
கோபிசெட்டிபாளையம் நண்பர்களே தீபாவளிக்கு எங்கிருந்தாலும் ஊருக்கு வந்துடுங்க ... எந்த ஊர்ல வேணுனாலும் தீபாவளி கொண்டாடலாம் ஆனா நம்ம ஊர்ல இருக்கற மாதிரி இருக்குமா ..
வாங்க ஜாலிய அப்படியே பவானிசாகர் போகலாம் , கொடிவேரி போகலாம் , பாரியூர் போகலாம் , குண்டேரிப்பள்ளம் போகலாம், பண்ணாரி போகலாம்.
அப்புறம் கடம்பூர் மலை , பர்கூர் மலை , ஆசனூர் மலைக்கு போறவங்க கொஞ்சம் ஜாக்கிரதையா போயிடுவாங்க , வன விலங்குகள் இடம் பெயர்வு நடக்கிறது குறிப்பா யானைகள் அத தொந்தரவு தராம இருந்து நீங்களும் மகிழ்ச்சியா தீபாவளி கொண்டாடுங்க ..ஆனா எங்க போனாலும் பிளாஸ்டிக் குப்பையை போடாம வாங்க ...
பட்டாசு எல்லாம் பாத்து பாதுகாப்பா வெடிங்க ஏன்னா நமக்கு அடுத்தவருசமும் தீபாவளி கொண்டாடணும் அதுக்குதா.
அப்பறம் வாலிப நண்பர்களுக்கு குறிப்பா இளவட்டங்களுக்கு குடி போதையில் வண்டி ஓட்ட வேண்டாம் .. கண்டிப்பாக கீழ் பவானி வாய்க்காலுக்கு மட்டும் போகவேண்டாம் தண்ணீர் அதிகமா போகுது யாரும் போய் குளிக்க வேண்டாம் இப்பவே ரெண்டு பேர் இறந்துட்டாங்க .. இறந்துட்டாங்க ..இறந்துட்டாங்க ..
மலையோரம் இருக்கும் மக்கள் மன்னிக்கவேண்டும் , புது துணி உடுத்தி பலகாரம் சாப்பிட்டு தீபாவளி கொண்டாடுங்கள் , பட்டாசு வெடிக்க வேண்டாம் .. ஏனென்றால் பறவைகள் வன வாழ் உயிரினங்கள் இதில் பெரிதும் பாதிக்க படும் .
அப்புறம் முடிஞ்சா ஏழைகளுக்கு , இல்லாதபட்டவங்களுக்கு , அனாதை இல்லங்களுக்கு , சாலையில் ஆதரவு இல்லாமல் சுற்றி திரிபவர்களுக்கு முடிந்தவரைக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்யுங்கள் , உணவு அளியுங்கள்... தயவு செய்து உணவை வீணாக்காமல் இருங்கள் .. உங்களுக்கு மிஞ்சியது அடுத்தவர்களுக்கு தேவையாக இருக்கும் ..
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் தான் . தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் , உடனே மறக்கவும் ...
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ....
உலகின் மிக சக்தி வாய்ந்த இயந்திரம் ?????
பசித்த வயிறுக்கு உணவு போடும் ஒரே இயந்திரம் ,
நம்ம உழவு இயந்திரம் தானே ...
உழவும் வயலும் பெருக
உலகம் வளமும் பெருகும் ...
கோபி - பங்களாபுதூர் சாலையில் உள்ள இந்த பாலம் 70 ஆண்டுகள் பழமையானது . தற்போது ஒற்றை வழி சாலையாக உள்ள இந்த பாலத்தை மாற்றி புதிய இரட்டை வழி பாலம் கட்ட அரசு முடிவெடுத்து அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் புது பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது .
தடப்பள்ளி வாய்க்காலில் இந்த வருடத்திற்கான முதல் போக தண்ணீர் திறந்துவிடபட்டுஉள்ளதால் .. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .
தங்களது பணிகளை தொடங்கிவிட்டனர் .
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the organization
Website
Address
Gobichettipalayam
638452
Gobichettipalayam
Gobichettipalayam, 638476
All India Congress committee. Erode North District Technical and social media activities
ERODE SATHY MAIN ROAD
Gobichettipalayam, 638453
Gobichettipalayam (also known as Gobi) is a town and municipality in Erode District of Tamil Nadu state, India.
Sub Collector & Sub Divisional Magistrate Office
Gobichettipalayam, 638452
A forum to interact with public.
17a Jaythurkainagar, Seethalasmi Puram
Gobichettipalayam, 638476
Gravity wheel electricity
Govt High School, Kadathur
Gobichettipalayam, 638454
Govt. High school, kadathur, gobichettipalayam
Find Out Our Store On Different Locations Http://tab.fo/OurShopLocations
Gobichettipalayam
Find out our store on different Locations http://tab.fo/OurShopLocations
Kanakkampalayam
Gobichettipalayam, 638505
Our vision : Creating the world where every one live with peace and human dignity. Mission : Working towards overall development of human race.
Katcheri Street
Gobichettipalayam, 638452
Gobichettipalayam is a town and municipality in the Indian state of Tamil Nadu. It is the second largest city and urban agglomeration in Erode district and