Gandhi Computers

Gandhi Computers

எங்களிடம் அணைத்து வகையான ஆன்லைன் சேவைகளும் உடனே செய்து தரப்படும்

04/05/2024

புதிதாக ஸ்கூல்ல குழந்தைகளை சேர்ப்பவர்களுக்கு...

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்

🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேனுவலாக வழங்கப்படுவது இல்லை.

🔖பிள்ளைகளுக்கு சாதி சான்று பெற பெற்றோரின் சாதி தொடர்பான ஆவணங்கள் அவசியம்.

🔖பெற்றோரிடம் சாதி சான்று இல்லை என்றால் அவர்களின் பள்ளி மாற்றுச் சான்று ஆவணங்களை வைத்து முதலில் அவர்களுக்கு சாதி சான்று பெற்றுக் கொள்ள வேண்டும்.

🔖தந்தையின் சாதியைத்தான் குறிப்பிட்டு சாதிச் சான்று பெற வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

🔖பெற்றோர் இருவரும் வேறு வேறு சாதியாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு சாதிச் சான்று பெறும்போது அம்மா அப்பா இருவரில் யாரேனும் ஒருவரின் சாதியை குறிப்பிட்டு சாதி சான்று பெற்றுக் கொள்ளலாம்.

🔖முதல் குழந்தைக்கு யாருடைய சாதியைக் குறிப்பிட்டு சான்று பெறுகிறோமோ அதையே அடுத்தடுத்த குழந்தைகளுக்கும் பின்பற்ற வேண்டும்.

🔖உதாரணமாக முதல் குழந்தைக்கு தாயின் சாதியையும் இரண்டாவது குழந்தைக்கு தந்தையின் சாதியையும் குறிப்பிடுவது தவறு.

🔖முன்பு சாதிச் சான்று கையால் எழுதி அட்டைகளில் வழங்கப்பட்டு வந்தது. உங்களிடம் அப்படி அட்டையில் வழங்கப்பட்ட சாதி சான்று இருந்தால் அதையே ஆதாரமாக வைத்து இணைய வழியில் விண்ணப்பித்து தற்போது வழங்கப்படும் ஆன்லைன் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுதல் அவசியம்.

🔖உங்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்காக செல்லும்போது இணைய வழி சான்றிதழ்களை தான் கேட்பார்கள்.

🔖சில வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட இணைய வழி சாதி சான்றிதழில் புகைப்படம் இல்லாமல் வரும்.

🔖எனவே தற்போது மீண்டும் விண்ணப்பித்து புகைப்படத்துடன் கூடிய இணைய வழி சாதி சான்றிதழ் பெற்றுக்கொள்ளுதல் நலம்.

🔖சில இடங்களில் பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்கும் போது
பெற்றோர் இருவரின் சாதிச் சான்றும் கேட்பதால் வீட்டில் உள்ள அனைவருக்குமே இணைய வழியில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய சாதி சான்று பெற்று வைத்துக் கொள்ளுவது நல்லது.

🔖பெற்றோர் படிக்காதவர்கள் அல்லது அவர்களிடம் சாதி தொடர்பான ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால் அவர்களுடைய பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு சான்று பெற்று அதையே ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

🔖சில சாதிகளின் கேட்டகிரி மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக முஸ்லிம் என்பது BC முஸ்லிம்(BCM) என்றும் பள்ளர் என்பது தேவேந்திர குல வேளாளர் என்றும் மாற்றப்பட்டுள்ளது. இவர்களும் புதிதாக வேறு சாதி சான்று பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

🔖 திருமணமான பெண்கள் சிலர் கணவர் பெயருடன் இணைத்து சாதி சான்று பெற்றிருக்கலாம். ஆனால் சாதிச் சான்று தந்தை பெயருடன் இருப்பது கட்டாயம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

🔖இது போன்ற தகவல்கள் எனக்கு தெரியுமே என்று சொல்பவர்கள் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.👍

01/02/2024

TNPSC Group 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது.
Total Vacancies: 6244
குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க February 28 கடைசி நாள்!!
மேலும் விவரங்களுக்கு:-
Gandhi Computers
Pudupettai
Attur
097150 87474

25/01/2024

சாதி வருமான இருப்பிட சான்றிதழ்கள் உடனடியாக விண்ணப்பித்து தரப்படும்...

மேலும் தொடர்புக்கு:
#காந்தி_கம்ப்யூட்டர்ஸ்
097150 87474

14/01/2024

மேலும் மத்திய மற்றும் மாநில அரசின் அணைத்து வகையான ஆன்லைன் சேவைகளும் சிறப்பான முறையில் உடனடியாக செய்து தரப்படும், தொடர்புக்கு அழைக்கவும்
#காந்தி_கம்ப்யூட்டர்ஸ்
அரசு பொது இ சேவை மையம்
கடை எண்: 6 நகராட்சி கட்டிடம்
புதுப்பேட்டை, ஆத்தூர்
097150 87474

09/01/2024

ஆதார் அட்டை எண் கொண்டு வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ளும் சேவை உள்ளது.
மேலும் தொடர்புக்கு:
Gandhi Computers
097150 87474

30/12/2023

தொழில் நடத்துபவர்கள் தங்களது தொழிலை பதிவு செய்வதற்கு Udyam Registration உடனடியாக செய்து தரப்படும்.
மேலும் தொடர்புக்கு:

097150 87474

29/12/2023

ஆதார் PVC கார்டு பதிவு செய்துதரப்படும்
மேலும் தொடர்புக்கு:

Whatsapp: 097150 87474

30/11/2023

*விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில்* இணைத்துக்கொள்வதன் மூலம்

கீழ்க்கண்ட தொழில் செய்பவர்கள் பலன் பெறலாம்

1)மரவேலை செய்பவர்கள்
2)முடி திருத்துபவர்
3)கொத்தனார்
4)தங்க வேலை செய்பவர்
5)பூமாலை தொடுப்பவர்
6)சலவை தொழிலாளி
7)தையல்காரர்
8)ஆயுதம் செய்பவர்கள்
9)மீன் வலை செய்பவர்கள்
10)பூட்டு தயாரிப்பவர்கள்
11)கூடை மேட் துடைப்பம் கயிறு உற்பத்தியாளர்கள்
12)சுத்தியல் கருவிகள் செய்பவர்கள்
13)சிற்பம் செய்பவர்கள்
14)பானை செய்பவர்கள்
15)செருப்பு தைப்பவர்கள்
16)கல் உடைப்பவர்கள்
17)பொம்மைகள் தயாரிப்பவர்கள்
18)படகு தயாரிப்பவர்கள்

திட்டத்தின் பலன்கள்
1)ஐந்து நாள் பயிற்சிக்கு *உதவித்தொகை ரூபாய் 2500* வழங்கப்படும்
2) தொழில் துவங்க *கருவிகள் வாங்குவதற்கு ரூபாய் 15,000 இலவசமாக* வழங்கப்படும்
3) முதல் கட்ட *கடனாக ரூபாய் ஒரு லட்சம் (5%)* சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படும்
4) இரண்டாம் கட்ட கடன் தொகை ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்
5) பயிற்சி பெற்றவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

நீங்களும் மேற்கண்ட தொழில் செய்பவறாக இருந்தால் இந்த திட்டத்தில் பயன்பெற உடனே அழையுங்கள் #காந்தி_கம்ப்யூட்டர்ஸ்
©9715087474

26/09/2023

*தமிழ்நாடு அரசின் புதிய அரசாணைப்படி பழைய சாதி சான்று, மற்றும் புகைப்படம் இல்லாமல் இருக்கும் சாதி சான்றிதழ் அனைத்தையும் "புகைப்படத்துடன் கூடிய சாதிச் சான்றிதழ்" பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.*

*அரசு பதிவு கட்டணம் ரூபாய் 60 மட்டும் வேறு எந்த கட்டணமும் கிடையாது.*

*ஆவணங்கள் :*

*1. சாதிச்சான்று*
*2. ஆதார் நகல்*
*3. குடும்ப அட்டை நகல்*
*4. புகைப்படம் ஒன்று*

*(குறிப்பு : பெற்றோர்களுக்கு இந்த புதிய சாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது ஏனெனில், வரும் காலங்களில் பெற்றோருடைய சாதிச்சான்று மிகவும் அவசியம்.,)*

*ஆத்தூர் புதுப்பேட்டையில் உள்ள நமது காந்தி கம்ப்யூட்டர்ஸ் அரசு இ சேவை மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.*

தொடர்புக்கு 097150 87474

20/05/2023

மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களே ஆத்தூர் புதுப்பேட்டையில் அமைத்துள்ள நமது காந்தி கம்ப்யூட்டர்ஸ் (பொது இ-சேவை மையம்) மாநில அரசின் அங்கீகாரம் பெற்றுவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே

 ஜாதி சான்றிதழ்
 இருப்பிடச் சான்றிதழ்
 வருமானச் சான்றிதழ்
 முதல் பட்டதாரி சான்றிதழ்
 விவசாய வருமான சான்றிதழ்
 விதவை சான்றிதழ்
 சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ்
 பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) சான்றிதழ்
 சிறு / குறு விவசாயி சான்றிதழ்
 ஆண் குழந்தை சான்றிதழ் இல்லை
 திருமணமாகாத சான்றிதழ்
 இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOPS)
 ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம் (DWPS)
 ஆதரவற்ற கைவிடப்பட்ட பெண் ஓய்வூதியத் திட்டம் (DDWPS)
 திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியத் திட்டம் (UWPS)
 முதல்வர் உழவர் பத்துகாப்பு திட்டம் (CMUPT)
 மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் (டிஏபிஎஸ்)
 திருமண உதவி

போன்ற பல சேவைகள் குறைந்த கட்டணத்தில் உடனடியாக கிடைக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Gandhi Computers
097150 87474

05/05/2023

தமிழ்நாடு பொறியியல் கல்லூரி அட்மிஷன்..

தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2023-2024ம் கல்வியாண்டில் சேருவதற்கான அட்மிஷன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது.

• Class 10 mark sheet
• Class 11 mark sheet (for TN state board candidates)
• Class 12 mark sheet
• Transfer certificate (optional)
• Community certificate (except OC students)
• Nativity certificate (if candidates with native Tamil nadu have students any one of the classes from 8th to 12th)
• Parents occupation certificate (candidates whose parents are central/state government employee in Tamil nadu for the past 5 years)
• Ex-servicemen certificate
• Differently abled certificate
• Photo
• Signature

Gandhi Computers
097150 87474

04/05/2023

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

02/05/2023

காந்தி கம்ப்யூட்டர்ஸ்
பொது இ சேவை மையம்
************************************************************
கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு..

இந்த 2023-24 கல்வியாண்டில்
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

🔵 2023ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 08 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம்.

🔵 மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக்கொள்ளவும்.

🔵 மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில் [Nationalized bank] சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க பான் கார்டு PAN CARD இல்லாதவர்கள் விடுமுறையில் விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.

🔵 பிறப்பு சான்றிதழ் (Birth certificate) ஒரிஜினல் இல்லாதவர்கள் பஞ்சாயத் போர்டு /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி வைத்து கொள்வது நல்லது.

🔵 சாதி சான்றிதழ் (Community certificate) இல்லாதவர்களும் / ஒரிஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் இது சமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR code-உடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை. மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை.

🔵 பிறப்பிட சான்றிதழ் (Nativity certificate) இல்லாதவர்கள் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது QR codeஉடன் கூடிய digital வடிவில் கொடுக்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்தி, பொறியியல்/ மருத்துவ கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை.

🔵 முதல் தலைமுறை பட்டதாரி (First generation graduate certificate) சான்றிதழை, தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

🔵 வருமான சான்றிதழ் (Income certificate) தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகை மற்றும் வருவாய்வழி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ் தேவையுள்ள மாணவர்கள் இப்பொழுதே இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும். 1-2 வாரங்களுக்குள் கிடைத்துவிடும்.

🔵 நீட் தேர்வு மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு (MBBS/ BDS) விண்ணப்பிக்க விரும்புவர்கள், போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும். மேலும் பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவை.

பெற்றோர்களுக்கான அறிவுரை,

1. மாணவர்களின் பெயர்கள் இதுவரை ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து கொள்வது நல்லது.

2. மாணவர்களின் மாற்று சான்றிதழ் (TC), மதிப்பெண் சான்றிதழ் (10th, 11th and 12th Mark sheets) மற்றும் எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் PDF/JPEG வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும். குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பிகள் (ஜெராக்ஸ்) தேவை.

3. பிள்ளைகளுக்கு +2 பரிட்சை முடிவுகள் வரும் முன்பாக தாங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில்/ எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது என பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது.

4. மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும், எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.

5. கல்லூரி சேரக்கை தகவல்களை நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் அறிந்து வரவும்.

6. தற்பொழுது பெரும்பாலான கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு சேருவதற்க்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

7. பெரும்பாலான தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்/ ஆன்லைன் பதிவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. பிளஸ் 2 ரிசல்ட் வெளியான சில தினங்களில் பொறியியல் கலந்தாய்வு, பொது மருத்துவ கலந்தாய்வு மற்றும் வேளாண் படிப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படலாம்.
*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
அணைத்து சான்றிதழ்களும் உடனடியாக எடுத்து தரப்படும், அணைத்து கல்லூரிகளுக்கும் ஆன்லைன் அட்மிசன் போடப்படும் மற்றும் ஜெராக்ஸ், ஸ்கேனிங், போட்டோ பிரிண்ட் எடுத்து தரப்படும்.
தொடர்புக்கு அழைக்கவும்:-

காந்தி கம்ப்யூட்டர்ஸ்
பொது இ சேவை மையம்
புதுப்பேட்டை
ஆத்தூர்
097150 87474

01/05/2023

Wishing all workers around the world a Happy Labour Day!

26/04/2023

+2 மாணவர்களுக்கு 08/05/2023 அன்று தேர்வு முடிவுகள் பார்க்கப்படும்.

தொடர்புக்கு அழைக்கவும்
Gandhi Computers
097150 87474

22/04/2023
20/04/2023

தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள உதவி
சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான
காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 11.05.2023 அன்று வரை
இனைய வழி மூலம் விண்ணப்பிக்க அணுகவும்

காந்தி கம்ப்யூட்டர்ஸ்
பொது இ சேவை மையம்
புதுப்பேட்டை
ஆத்தூர்
097150 87474

18/04/2023

தொடர்புக்கு :-
097150 87474

18/04/2023

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

தனியார் பள்ளிகளில் *25% சதவீத இட ஒதுக்கீடு

✨✨✨✨✨✨✨✨

*விண்ணப்பிக்கும் தேதி*

*20-04-2023 முதல் 18-05-2023 வரை

✨✨✨✨✨✨✨✨

*L K G வகுப்புக்கு சேரும் குழந்தைகள்*

*01-08-2019 முதல் 31-07-2020*

✨✨✨✨✨✨✨✨

*ஒன்றாம் வகுப்பு சேரும் குழந்தைகள்*

*01-08-2017 முதல் 31-07-2018* வரைக்குள் பிறந்திருக்க வேண்டும்...

*தேவையான ஆவணங்கள்*

குழந்தைகள் பெயரில்

*வருமான சான்றிதழ்*

*குடியிருப்பு சான்றிதழ்*

*சாதி சான்றிதழ்*

*பிறந்த சான்றிதழ்*

*பெற்றோர் ஆதார் அட்டை*

*குழந்தை ஆதார் அட்டை*

*புகைப்படம்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

தேவைப்படும் சான்றிதலுக்கு விண்ணப்பிக்க மற்றும் RTE க்கு பதிவு செய்ய அணுகவும்

காந்தி கம்ப்யூட்டர்ஸ்
போது இ சேவை மையம்
புதுப்பேட்டை போஸ்ட் ஆபிஸ் அருகில்
097150 87474

17/04/2023

அன்பார்ந்த பெற்றோர்களே...

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள், மற்றும் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ்
(RTE - Right To Education), வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்தோர்களின் குழந்தைகளுக்கு என LKG அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பம் இந்த வாரம் அறிவிக்கப்படும். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள
அதற்கு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:-

மாணவரின் புகைப்படம்
பிறப்பு சான்று
சாதி சான்று
இருப்பிட சான்று
வருமான சான்று
ஆதார் அட்டை

இந்த அணைத்து சான்றுகளும், மற்றும் RTE க்கு பதிவு செய்ய
அணுகவும்

காந்தி கம்ப்யூட்டர்ஸ்
போது இ சேவை மையம்
புதுப்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அருகில்
9715087474

14/04/2023

சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இது திகழ்கிறது. அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள,
மகிழ்ச்சியுடன்
#காந்தி_கம்ப்யூட்டர்ஸ்
பொது இ சேவை மையம்
097150 87474

13/04/2023

12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு,

தற்பொழுது 12 ஆம் வகுப்பு படிப்பு முடிந்தவுடன் மேற்படிப்பு படிக்க எந்த கல்வி நிலையத்திற்கு சென்றாலும், சேர்க்கைக்கு தேவையான கூடுதல் ஆவணங்களான

இருப்பிடச் சான்று
வருமானச் சான்று
ஜாதி சான்று
மற்றும்
ஓபிசி இதர பிற்பட்ட வகுப்பினர் சான்றுகளை

முன்கூட்டியே பெற்று தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

கடைசி நேர சிரமங்களை தவிர்க்க இது உதவும்.

#காந்தி_கம்ப்யூட்டர்ஸ்
097150 87474

04/04/2023

ஆத்தூர் புதுப்பேட்டையில் புதியதாக அமைத்துள்ள Gandhi Computersயில் கீழ்க்கண்ட சேவைகள் அனைத்தும் உடனடியாக செய்து தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 🙏

ஜெராக்ஸ் கலர்
பிரிண்ட் அவுட் கலர்
லேமினேஷன்
ஸ்பைரல் பைண்டிங்

பாஸ்போர்ட்
பான் கார்டு
ஆதார் சேவைகள்
குடும்ப அட்டை சேவைகள்
வாக்காளர் அட்டை சேவைகள்

வாகன இன்சூரன்ஸ்
லைப் இன்சூரன்ஸ்
ஆதார் மூலம் பணம் எடுத்தல்
மணி ட்ரான்ஸ்பர்
வங்கி கணக்கு துவங்குதல்
பணமில்லா பரிவர்த்தனை

மொபைல் ரிச்சார்ஜ்
DTH ரிச்சார்ஜ்
Fastag ரிச்சார்ஜ்

வாட்டர் பில்
கரண்ட் பில்
சொத்து வரி மற்றும்
அணைத்து ஆன்லைன் பில் பெமென்ட்

விமான டிக்கெட்
ரயில் டிக்கெட்
பேருந்து டிக்கெட்
திருப்பதி மற்றும் சபரிமலை போன்ற கோவில்கள் முன்பதிவு

வேலைவாய்ப்பு பதிவு/புதுப்பித்தல்
TNPSC போன்ற
அணைத்து வகையான தேர்வுகளும் பதிவு செய்தல்

பட்டா சிட்டா / RSR / EC
Fassai
விவசாயிகளுக்கான காப்பிடு
பிறப்பு / இறப்பு சான்றிதழ்
சிறுத்தொழில் பதிவு சான்று (SSI)
கம்ப்யூட்டர் ஜாதகம்
திருமண பொருத்தம்
குழந்தைகளுக்கு பெயர் தேர்வு
பென்ஷன் மற்றும் வாழ்நாள் சேவைகள்
GST apply
LLR பதிவு
FIR - ஸ்டேட்டஸ்
முதல்வர் காப்பிட்டு திட்டம்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

மற்றும் இது போன்ற அணைத்து ஆன்லைன் சேவைகளும் ஒரே இடத்தில்

காந்தி கம்ப்யூட்டர்ஸ்
நாகராஜ் (Nagi Saravanan)
097150 87474

Want your business to be the top-listed Computer & Electronics Service in Salem?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தனியார் பள்ளிகளில் *25% சதவீத இட ஒதுக்கீடு✨✨✨✨✨✨✨✨*விண்ணப்பிக்கும் தேதி* *20-04-2023 முதல் 18-05-2023 வரை  ✨✨✨✨✨...

Telephone

Address

No. 6 Nagaratchi Building, Pudupettai (Po), Attur(Tk)
Salem
636141

Opening Hours

Monday 8am - 9pm
Tuesday 8am - 9pm
Wednesday 8am - 9pm
Thursday 8am - 9pm
Friday 8am - 9pm
Saturday 8am - 9pm
Sunday 10am - 7pm

Other Internet Service Providers in Salem (show all)
Arun Cable Network & Bsnl Ftth Keeripatty And Malliyakarai Arun Cable Network & Bsnl Ftth Keeripatty And Malliyakarai
Salem, 636107

BSNL FIBER INTERNET UPTO 30 -300Mbps per Month 3300GB and Unlimited Voice Call All Over India 24Hr Free COME AND JOIN A FAST INTERNET....�

Flyon Internet - Fiber Broadband Flyon Internet - Fiber Broadband
Salem, 636102,636108

Best Internet Service provider in Attur We are providing High Speed Internet services in our Attur

JIOFIBER_Salem JIOFIBER_Salem
Salem, 636007

1Month free trial offers

Air River Communication Air River Communication
Salem, 636010

We are providing Internet Services, Cctv, Mobile Signal boosters, Computers, Ups Sales & Services

Think Network Think Network
Salem, 636454

We are Providing Servics in CCTV Camera|| Internet||Solar&UPS||Campus WiFi|| Computers&Laptop Sale||

JPEG MEDIA JPEG MEDIA
Jalakandapuram
Salem, 636501

Internet service provider

Jagath Communications Jagath Communications
Salem, 636009

JAGATH COMMUNICATIONS has strategically partnered with many leading companies in the technology industry. Through these partnerships, JAGATH COMMUNICATIONS is able to offer the lat...