திருக்குர்ஆன் நற்செய்தி மலர்
இறைவனின் நற்செய்திகள் எளிய தமிழில் அனைத்து மக்களுக்கும்...
லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பது இஸ்லாத்தின் மூல மந்திரம். என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் பொருள்: வணக்கத்துக்கு உரியவன் இறைவனைத் (அரபு மொழியில் அல்லாஹ்) தவிர யாரும் இல்லை. முஹம்மது நபி இறைவனின் தூதராவார் என்பதே. இதை ஏற்றுக் கொள்பவரே முஸ்லிம், இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத யாரும் முஸ்லிமாக முடியாது. இறைவனுக்கு பதிலாக இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதோ, சமாதிகளுக்கு வணக்கம் செய்வதோ மன்னிப்பே இல்லாத பாவமாகும். இதைச்செய்பவர்கள் மறுமையில் நிரந்தரமாக நரக நெருப்பில் இருப்பார்கள் என்று குர்ஆன் எச்சரிக்கிறது
தர்கா என்பது என்ன? இவை எப்படி வந்தன?
எங்கு நீங்கள் தர்காவைப் பார்கிறீர்களோ அங்கு எல்லாம் முஸ்லிம் பெரியவர்கள் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தன வாழ்நாளில் சிறந்த சேவைகள் ஆற்றினார்கள். "லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற கொள்கையை மக்களிடையே போதித்து வந்தார்கள். மக்களிடையே தங்கள் சேவை காரணமாக பிரபலமானார்கள். அவர்கள் இறந்தபின் என்ன நடந்தது? அவர்களுக்கு சமாதிகள் எழுப்பப்பட்டன. அவர்கள் போதித்த கொள்கையை சரிவர புரிந்து கொள்ளாத சில மக்கள் அவர்கள் மீது இருந்த அன்பின் காரணமாக அவர்களது சமாதிகளை அடிக்கடி கண்டு வரவும் அலங்கரிக்கவும் தொடங்கினர். அந்த பெரியவர்களை அழைத்துப் பிரார்த்திக்கவும் தொடங்கினர்.அப்பெரியவர்களின் உறவினர்களில் சிலர் மக்களின் இந்த மூட பழக்கத்தை முதலீடாக வைத்து பணம் சம்பாதிக்க தலைப்பட்டனர். சமாதியின் தலைமாட்டில் ஒரு உண்டியலை நிறுவினர். செல்வம் சேரத் தொடங்கியது.
மேலும் பல மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டன. உங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையா?.... தீராத வயிற்று வலியா?..... வியாபாரத்தில் தோல்வியா?.... அனைத்துக்கும் இங்கு தீர்வுகள் உண்டு! இதோ இங்கு வந்து இந்த அவுலியாவிடம் கேளுங்கள்! இதோ இந்த தாயத்தை கட்டிக் கொள்ளுங்கள்!..... என்பன போன்ற விளம்பரங்கள் வயிறு வளர்போரால் பரப்பப்பட்டன. இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த தர்காக்கள் வளர்ந்து இன்று பாமரர்களின் அன்றாட உழைப்பின் கனிகளை கறந்து உண்ணக்கூடிய முதலைகளாக திகழ்கின்றன!
எங்கெல்லாம் தர்க்காக்களைக் காண்கின்றீர்களோ அவையெல்லாம் ஏக இறை வழிபாட்டிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக ஷைத்தான் செய்து வரும் சூழ்ச்சி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!
இங்கு பள்ளிவாசலுக்கும் தர்காவுக்கும் என்ன வேறுபாடு ? என்பதையும் உங்களுக்கு தெளிவு படுத்துவது அவசியமாகிறது.
தர்காவுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை! உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..
#ஜாதிகள்_ஒழிய_கொள்கை_அவசியம்
உலகமெங்கும் ஐவேளை இறைவிசுவாசிகளால் நிறைவேற்றப்படும் தொழுகையை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.
= உலகின் அத்தனை இறைவிசுவாசிகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறைப் பள்ளியான கஅபா வை நோக்கியே தொழுகை நிகழ்த்துகிறார்கள். இதன் சூட்சுமம் அளவிலடங்காதது
= படைத்தவனை மட்டுமே வணங்குவோம் படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல என்ற கொள்கை முழக்கம் பூமி உருண்டையின் மீது அயராது ஒலிப்பது உங்களுக்குக் கேட்கிறதா?
= என் உடல்,பொருள் ஆவி அனைத்தும் உனக்கே சொந்தம்! இறைவா நீயே மிகப்பெரியவன்! என்று அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி விட்டு இறைவிசுவாசிகள் உலகெங்கும் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களுக்கு விரையும் காலடி ஓசை உங்களுக்குக் கேட்கிறதா?
= ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறம் என்று நம்மைப் பிரித்து வைத்திருந்த தடைகளை உடைத்தெறிந்து ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கையின் கீழ் உலகோர் அனைவரும் ஒருங்கிணையும் காட்சி உங்களுக்குப் புலப்படவில்லையா?
= ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள். இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?
= சிதறிக்கிடக்கும் பாமரனையும் படித்தவனையும் ஏழையையும் செல்வந்தனையும் பெரியவர்களையும் சிறுவர்களையும் பாகுபாடின்றி ஒருசில நொடிகளில் உலகெங்கும் ஆங்காங்கே சீராக அணிவகுக்கச் செய்யும் விந்தையை எந்த இராணுவமும் செய்யக் கண்டிருக்கிறீர்களா?
= ஒவ்வொரு தொழுகைக்கும் ஒழு (அதாவது அங்கத்தூய்மை) செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?
Click to continue
https://www.quranmalar.com/2012/10/blog-post_5640.html
உலகில் நாம் காணும் மதங்கள் அவற்றை நிறுவியவரின் பெயரை அல்லது உருவான இடங்களின் பெயரை அல்லது இனத்தின் பெயரைத் தாங்கி நிற்பதைக் காணலாம். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது ஒரு வெற்று மதம் அல்ல, மாறாக அகில உலக மக்களுக்கும் பொதுவான ஒரு கொள்கை சார்ந்த வாழ்க்கை நெறி.
அதனால்தான் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மனிதருடனோ, ஒரு இனத்துடனோ, ஒரு சமுதாயத்துடனோ அல்லது ஒரு தனிப்பட்ட நாட்டுடனோ தொடர்பு கொண்டதாக இல்லை. ஆம், இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இதன் இன்னொரு பொருள் கீழ்படிதல் அல்லது ஒழுங்கு என்பதாகும். அதாவது இவ்வுலகைப் படைத்தவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழும் போது உண்டாகும் அமைதியே இஸ்லாம் என்று அறியப்படுகிறது. மழை, காற்று, நீர் போன்ற அருட்கொடைகளைப் போன்று இந்த மார்க்கம் எல்லா மொழியினருக்கும் எல்லா சமுதாயத்திற்கும் எல்லா காலத்தவருக்கும் பொருத்தமானது மற்றும் பொதுவானது.
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இறைவேதம் திருக்குர்ஆன் அனைத்து மனிதகுலமும் ஒரே ஒரு ஆன்மாவில் இருந்து தோன்றியதே என்பதை மிகத்தெளிவாக அறிவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் வலியுறுத்துகிறது. அத்துடன் நில்லாமல் அவற்றை வலுக்கட்டாயமாக இஸ்லாத்தை ஏற்றோரிடையே நடைமுறைப்படுத்திக் காட்டுவதை உலகம் அறியும்.
உலக அமைதிக்கான அஸ்திவாரம்
இஸ்லாத்தை ஒரு மதம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஒரு கொள்கை சார்ந்த வாழ்வியல் என்று பார்க்கும்போதுதான் இன்று பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள காழ்ப்புணர்வுகள் அகலும். இதன் அருமை பெருமைகளும் இதன் தேவையும் புரியும். இன்று மனிதகுலத்திற்கு பெரிதும் தேவைப்படும் அமைதி என்பது இறைவன் வழங்கும் இந்த வாழ்வியலை மக்கள் ஏற்று வாழ முற்படும்போதுதான் ஏற்பட வழியுள்ளது. ஏனெனில் மனிதர்களுக்கிடையே சகோதரத்துவமும் சமத்துவமும் நிலைநாட்டப் படாதவரை அமைதி என்பது எட்டாக்கனியே!
click to continue
சமத்துவம் இதன் தனித்துவம் உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..
உங்களை நீங்களே பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்....
= சினிமாப் படங்களில், சின்னத் திரைகளில் யாரோ எவரோ கட்டிப் பிடித்து ஆடுகிற காட்சிகளை நீங்கள் பார்ப்பதுண்டா?
= சினிமா போஸ்டர்கள், பத்திரிகைகளில் வரும் ஆபாச செய்திகள், விளம்பரங்கள் உங்கள் கவனத்தை ஈர்ப்பதுண்டா?
= இரட்டை அர்த்தமுள்ளதும் இல்லாததுமான சினிமா பாடல்கள் உங்கள் காதுக்கு மகிழ்ச்சி அளிப்பதுண்டா?
= உங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் மேற்கண்டவாறு உள்ள பாடல்களையும் உடல் சேட்டைகளையும் காட்சிகளையும் குடும்ப அங்கத்தினர்களோடு ஒன்றாக அமர்ந்து ரசிக்கின்றீர்களா?
‘உண்டு’ என்பது உங்கள் பதிலானால்... விபச்சாரம் செய்வதற்குரிய ஒரு படியில் கால்வைத்து விட்டீர்கள் என்றே அர்த்தம். இதற்கு அடுத்த படி, நாமே செய்து பார்த்தால் என்ன தவறு இருக்கிறது? என்று அதற்குரிய முயற்சியில் இறங்கிவிட மனம் முயலும். ஷைத்தான் அதற்கான நியாயங்களையும் கற்பித்து உங்களை கவிழ்த்துவிடவும் வாய்ப்புண்டு!
முதலில், பிறர் செய்வதைப் பார்க்கின்ற போது நமக்கு அருவருப்பாகத் தெரியவில்லை, கூச்சமாக இல்லை என்றால், அதைப் பார்க்கத்தக்கதாக நமது மனம் மாறிவிட்டதெனில், அடுத்ததாக நாமே அதைச் செய்தால் என்ன? என்று நமது எண்ணங்களில் தோன்றிவிடும். நமது செயல்களில் அதற்குரிய வழிகளைத் தேடி முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலை வந்துவிடும். இப்படித்தான் மனிதனின் மனநிலை படைக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் இதைக் கூட்டாக குடும்ப அங்கத்தினர்களோடு நீங்கள் பார்க்கும்போது அதற்கு அங்கு அங்கீகாரமும் கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் கவனியுங்கள்.
= இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்து நபிகளார் கூறினார்கள்:
''உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து விடட்டும். இது இறைநம்பிக்கையின் பலவீனமான நிலையாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
= விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 17:32) என்கிறது இறைவனின் வசனம்.
விபச்சாரத்திற்கு நெருங்குதல் என்றால் இதுபோன்ற கேடுகெட்ட காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ரசிப்பது, குழைந்து குழைந்து பேசுவது, கணவன் மனைவி அல்லாத ஆண் பெண் இருவர் கொஞ்சுவது போன்றவை தான்.
விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்! உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..
இஸ்லாமியர்கள் மதத்தை போதிக்கவில்லை மனிதத்தை தான் போதிக்கின்றார்கள் #hindumuslimunity #islamic #jih # ...
*மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் ‘பெல்’ நிறுவன இயக்குநர்கள் குழுவில் பாஜக நிர்வாகிகள்: மாஜி ஒன்றிய நிதி, எரிசக்தி செயலாளர் பரபரப்பு புகார்*
*_பீஜேபீ கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வளவு வேண்டுமென்றாலும் தில்லுமுல்லு செய்யலாம் என்பதற்கு ஒர் ஆதாரம்_*
புதுடெல்லி: வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் ‘பெல்’ நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவிகளில் நியமிக்கப்பட்ட பாஜக நிர்வாகிகளை திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய நிதி மற்றும் எரிசக்தி செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து எதிர்கட்சிகள் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை கூறிவரும் நிலையில், முன்னாள் ஒன்றிய நிதி மற்றும் எரிசக்தி செயலாளர் டாக்டர் இ.ஏ.எஸ்.சர்மா, தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குனர்கள் பதவிகளில் பாஜக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘பெல்’ நிறுவன இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பணித் தகவல்கள் குறித்த விபரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
‘பெல்’ குழுவில் நான்கு பாஜக நிர்வாகிகள் ‘சுயாதீன’ இயக்குநர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
‘பெல்’ நிறுவனத்தின் உள்விவகாரங்களில், அவர்கள் தலையிட வாய்ப்புள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைய சில்லுகளில் பதிக்கப்பட்ட ரகசிய மூலக் குறியீட்டை உருவாக்குவது உள்ளிட்ட விஷயங்களை மேற்பார்வையிடும் தேர்தல் ஆணைய செயல்பாடுகளில் தலையிட, ஒரு அரசியல் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டும் அது புறக்கணிக்கப்பட்டது.
ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதிலோ, தேர்தல் வெளிப்படைத்தன்மை குறித்தோ எந்த அக்கறையும் இல்லை என்பதையே இந்த விஷயங்கள் காட்டுகின்றன.
‘பெல்’ இயக்குநர்கள் குழுவில் ராஜ்கோட் பாஜக மாவட்டத் தலைவர் மன்சுக்பாய் ஷாம்ஜிபாய் கச்சாரியா, மேலும் இருவர் பாஜக ஆதரவாளர்கள் பதவியில் உள்ளனர்.எனவே தலைமை தேர்தல் ஆணையம், தனது தேர்தல் செயல்முறைகளை பேணுவதில் தீவிரமாக செயல்படுவதாக இருந்தால், புதியதாக நியமிக்கப்பட்ட அரசியல் சார்புடைய நபர்களை திரும்பப் பெறுமாறு சம்பந்தப்பட்ட ‘பெல்’ அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில், அது ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு பாதகமான சூழலை உருவாக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்
மறுமைக்காக வறுமையை ஏற்ற வல்லரசர்கள்
--------------------
நபிகள் நாயகமும் சரி, அவருக்குப்பின் வந்த கலீபாக்களும் சரி, சொந்தத் தேவைக்காக அரசுப் பணத்தில் கை வைப்பது இஸ்லாமியச் சட்டத்திற்கு முரணானது என்பதால் அதில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அதனால்தான் அரசுக்கருவூலம் நிரம்பி வழிந்தபோதும் சொந்த வாழ்வை வறுமையிலேயே கழித்தனர்.
நபிகளாரின் மரணத்துக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் கலீபா அபூபக்கர்(ரலி). (கலீபா என்றால் ஜனாதிபதி அல்லது மக்களின் தலைவர் என்று பொருள்.)
= ஆட்சியாளராக பதவி ஏற்ற பின் ஜனாதிபதி அபுபக்கர் தனது மக்களிடம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
’மனிதர்களே! உங்கள் தலைவனாக நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். நான் உங்கள் எல்லோரையும் விடவும் சிறந்தவன் என்று நான் எண்ணவில்லை. நான் சத்தியம் தவறாது நடந்தால் நீங்கள் எனக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் பிழை செய்தால் நீங்கள் என்னைத் திருத்த வேண்டும். உங்கள் விவகாரங்களில் நான் இறைவனின் கட்டளைப்படி நடந்து கொள்ளும் போது நீங்கள் எனக்கு கட்டுப்பட வேண்டும். இறைவனின் தூதர் சென்ற வழியில்தான் நானும் செல்வேன். நான் நேர்மையை கைக் கொண்டு ஒழுகினால் நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் கோணல் வழி சென்றால் என்னை நேர்வழிப்படுத்துங்கள்.’ –(ஹூகூகல் இன்சான், பக்கம் 160)
= அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் அரசு அலுவல்கள் காரணமாக அதுவரை செய்துகொண்டிருந்த வியாபாரத்தை தொடர முடியாததால் அவர் அரசுக் கருவூலத்தில் இருந்து ஒரு ஊதியத்தை பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டார். ஒரு சிறு தொகையை ஊதியமாகப் பெற அவரும் ஒப்புக்கொண்டார்.
எளிமையான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கையில் ஒருநாள் தன் மனைவி உணவோடு ஒரு இனிப்புப் பதார்த்தத்தையும் பரிமாறினார். ஆச்சரியப்பட்ட அபூபக்கர் ‘இது எங்கிருந்து உனக்கு?’ என்று மனைவியை வினவினார்.
“நீங்கள் தினமும் செலவுக்குத் தரும் பணத்தில் இருந்து சிறுகச்சிறுக சேமித்து வைத்தேன். அதில் இருந்து செய்ததுதான் இந்த இனிப்பு”
“சேமிக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெற்று வந்துள்ளேனா? இது கூடாது!” என்றார் அபூபக்கர்.
தன் அடுத்தமாதம் முதல் ஊதியத்தின் அளவைக் குறைக்க ஆணையிட்டார் அபூபக்கர்!
ஊதிய உயர்வு கோரி போராட்டங்கள் நடப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஊதியக் குறைவு கோரிப் போராடியவர் பற்றி எங்காவது கேட்டிருக்கிறோமா?
அபூபக்கருக்குப் பின் உமர்!
= அபூபக்கர் அவர்களுக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர் உமர்(ரலி) அவர்கள். இவரது ஆட்சியில் மதீனாவில் தோன்றிய சிற்றரசு சில ஆண்டுகளில் மாபெரிய பேரரசானது. அன்றைய வல்லரசுகள் உமரின் காலடியில் வீழ்ந்தன். பாரசீகம், இராக், சிரியா, பாலஸ்தீனம், லிபியா, எகிப்து, ஆர்மீனியா, இன்றைய ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் வரை அவரது சாம்ராஜ்ய எல்லை விரிந்தது. அவ்வளவு பெரிய வல்லரசுகளை ஆட்டிப்படைத்த கலீபா உமரின் வாழ்வு எவ்வாறு இருந்தது? இதோ . 18 ம் நூற்றாண்டின் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான வரலாற்றாசிரியர் கிப்பன் அந்தஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்:
“தொலிக்கோதுமையினால் செய்யப்பட்ட ரொட்டி அல்லது பேரீத்தம் பழங்களே அவரது உணவாகவும், சாதரண தண்ணீரே அவரது பானமாகவும் இருந்தது. அவரது சட்டை பணிரெண்டு இடங்களில் தையல் போடப்பட்டிருந்தது. பாரசீக இராஜதந்திரி ஒருவர் மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்க மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசலின் படிக்கட்டுகளில் ஏழைகளோடு ஏழையாக உமர் உறங்கிக் கொண்டிருக்க கண்டார்.”
( Gibbon – தனது In The Decline and Fall of the Roman Empire என்ற நூலில்)
உமர் என்ற பெயரைக்கொண்ட இன்னொரு கலீபாவை பிற்காலத்தில் சரித்திரம் கண்டது. அவர் தான் உமர் பின் அப்துல் அஜீஸ் என்பார். ஒரு சமயம் அவருக்குத் தனிப்பட்ட செலவுக்காக ஒரு திர்ஹம் தேவைப்பட்டது. தம் மனைவி பாத்திமாவிடம் வந்து, “கைச் செலவுக்குப் பணம் வேண்டும். ஒரு திர்ஹம் இருந்தால் தா” என்று கேட்டார் கலீஃபா.
மனைவிக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. “இவ்வளவு பெரிய ஆட்சியாளராக இருந்தும் ஒரு திர்ஹம்கூட உங்களிடம் இல்லையே?” என்றார்.
கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் அமைதியாகக் கூறினார்: “நரகத்தின் நெருப்பு விலங்குகளைவிட இந்த நிலைமை மேலானது.” பாத்திமா பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டார். இறையச்சத்துடனும் மறுமையில் பதில் சொல்ல வேண்டும் என்ற உணர்வுடனும் ஒரு நாடு ஆளப்பட்டால் இந்த உலகமே சுவனமாக மாறிவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ராஜா ஒரு இளைஞன்.... தனது பட்டப் படிப்புக்குப் பிறகு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர விண்ணப்பித்திருந்தான். அவன் படித்த படிப்புக்கு அந்தக் கம்பெனியில் மட்டும்தான் வேலை கிடைக்கும் நாளை காலைப் பத்து மணிக்கு அவனுக்கு சென்னையில் இன்டர்வ்யூ. தனது ஊரில் இருந்து சென்னை செல்ல ஒரே ட்ரெயின் தான் உள்ளது. அதுவும் இன்று இரவு பத்து மணிக்குப் புறப்படுகிறது.... இதோ இன்னும் சில நிமிடங்களே உள்ளன வண்டி புறப்படுவதற்கு...... ரயில் நிலையத்தை அப்போதுதான் அடைந்தான் ராஜா... ஆனால் அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது அவனுக்கு... தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு... அவனது பரமவிரோதிகளான சொக்கலிங்கமும் நடராஜனும் அவன் முன்பதிவு செய்திருந்த அதே கம்பார்ட்மெண்ட்டில் அவனது இருக்கைக்கு அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். ரமேஷுக்கு அவர்களை அறவே பிடிக்காது.... வெறுப்பென்றால் அவ்வளவு வெறுப்பு... இவர்களோடு அமர்ந்து நான் பயணம் செல்வதா?..... முடியவே முடியாது..... ஏறிய அதேவேகத்தில் ரயிலில் இருந்து இறங்கியும் விட்டான் ராஜா!
தூர நின்று யோசித்தான் ராஜா. ஆனால் நாளை எனக்கு நடக்க இருப்பதோ அவ்வளவு முக்கியமான இன்டர்வ்யூ! இந்த வண்டியை விட்டு விட்டால் வேறு வழியே கிடையாது. இவ்வாய்ப்பை தவற விட்டால் எனது எதிர்காலமே கேள்விக்குறிதான்! எனக்கு வாழ்வா அல்லது சாவா என்பதைத் தீர்மானிப்பது நாளைய இன்டர்வ்யூ...... என்ன செய்ய? இவர்களுக்காக எனது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவதா?
இல்லை இல்லை எனக்கு என் வேலை முக்கியம்! நோக்கம் முக்கியம்!.எதிர்காலம் முக்கியம்!... வருவதை சந்திப்போம்!.... ஒரு தீர்மானத்தோடு கம்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தான் ராஜா!
இங்கு ராஜாவின் நிலையில் புத்தியுள்ள யாராக இருந்தாலும் அவ்வாறுதானே தீர்மானிப்பார்கள்! ....ஏன் இந்த உதாரணம் சொல்லப் படுகிறது தெரியுமா?
click to continue
ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா? உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..
ஆனால் மறுமையே சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
(குர்ஆன் : 87:17)
கொலை, கொள்ளை, விபச்சாரம் என்றெல்லாம் பல பாவங்கள் இருக்கும்போது இந்த இணைவைக்கும் பாவத்தை ஏன் பாவங்களில் எல்லாம் தலையாயது என்கிறான் இறைவன்? அப்படியென்ன விபரீதம் இதில் இருக்கிறது? பெரும்பான்மையான மக்களால் இப்பாவம் பரவலாக செய்யப்பட்டு வருவதால் இதன் விபரீதம் மக்களால் உணரப்படாமலேயே தொடர்கிறது. ஆனால் சற்று கவனமாக சிந்தித்தால் இது நம்மையும் நம் நாட்டையும் அழித்துக் கொண்டிருக்கும் எவ்வளவு கொடிய புற்றுநோய் என்பதை அறிந்து கொள்வீர்கள்:
1. இது மிகப்பெரிய நன்றி கேடு : நம்மைப் படைத்தது மட்டுமல்ல , ஒன்று விடாமல் நம் தேவைகளை ஒவ்வொரு நொடிகளும் அயராது நிறைவேற்றி வருபவன் அந்த மாபெரும் கருணையாளன். நாம் தாயின் கருவறையில் உருவானது முதல் நமக்கு உணவு, நீர் , காற்று, தாய் தந்தை அரவணைப்பு, என்று தொடங்கி நாம் மரணத்தைத் தழுவும் வரை நம் மீது அவன் காட்டிவரும் கருணை அளப்பரியது. நமது தேவைகளை நிவர்த்தி செய்யும் விதம் நமது உடலையும் , உறுப்புக்களையும், இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் வடிவமைத்து இயக்கி வருபவன் அவன். அவற்றுக்கு நாம் நன்றி காட்ட வேண்டாமா? இந்த அருட்கொடைகளில் ஏதாவது ஒன்று தடைபடும் பொது நாம் படும் பாட்டை சிந்தித்துப் பாருங்கள். ஆனால் இணைவைத்தல் என்ற செயல் மூலம் என்ன செய்கிறோம்? அவனுக்கு காட்ட வேண்டிய நன்றியறிதலை ஒரு உயிரற்ற உணர்வற்ற ஒரு பொருளுக்கு நாம் காணிக்கையாக்குகிறோம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.
என்ற குறள் இறைவனின் விஷயத்தில் நூறு சதவீதம் உண்மை. ஆம் அவர்களுக்கு உய்வில்லைதான். நரக நெருப்புதான் அவர்களுக்கு மறுமையில் காத்திருக்கிறது.
2. பாவங்கள் பெருக மூல காரணம் இது : மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக கடவுளைப் பற்றிய பயம் வேண்டும். அதாவது என்னைப் படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான். உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வந்ததன் விளைவு மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. ஆக, இந்த இறைவனுக்கு இணை வைக்கும் செயல்தான் இன்று நாட்டில் காணப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் குழப்பங்களுக்கும் மூல காரணம் அல்லது ஊற்றுக் கண் என்றுணரலாம். அப்படிப்பட்ட கடவுள் பயமற்ற தலைமுறைகள் உருவாகும் போது பாவங்கள் கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன.
ஒரு உதாரணமாக, எவரது வீட்டிலாவது சில நண்பர்கள் மது அருந்தக் கூடுவார்களாயின், அப்போது அங்கு ஏதாவது சாமிப்படங்களோ சிலைகளோ இருந்தால் முதலில் அதை மூடிவிட்டு தங்கள் பாவத்தைத் தொடர்வதை நீங்கள் காணலாம். அதுதான் கடவுள் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஊறியிருப்பதே அதற்குக் காரணம்!
Click to know more
சிலைவழிபாட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்? உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..
1. இது மிகப்பெரிய நன்றி கேடு : நம்மைப் படைத்தது மட்டுமல்ல , ஒன்று விடாமல் நம் தேவைகளை ஒவ்வொரு நொடிகளும் அயராது நிறைவேற்றி வருபவன் அந்த மாபெரும் கருணையாளன். நாம் தாயின் கருவறையில் உருவானது முதல் நமக்கு உணவு, நீர் , காற்று, தாய் தந்தை அரவணைப்பு, என்று தொடங்கி நாம் மரணத்தைத் தழுவும் வரை நம் மீது அவன் காட்டிவரும் கருணை அளப்பரியது. ஆனால் இணைவைத்தல் என்ற செயல் மூலம் என்ன செய்கிறோம்? அவனுக்கு காட்ட வேண்டிய நன்றியறிதலை ஒரு உயிரற்ற உணர்வற்ற ஒரு பொருளுக்கு நாம் காணிக்கையாக்குகிறோம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.
என்ற குறள் இறைவனின் விஷயத்தில் நூறு சதவீதம் உண்மை. ஆம் அவர்களுக்கு உய்வில்லைதான். நரக நெருப்புதான் அவர்களுக்கு மறுமையில் காத்திருக்கிறது.
2. பாவங்கள் பெருக மூல காரணம் இது : மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமா
சிலைவழிபாட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்? உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..
#இஸ்லாம்_என்ற_வாழ்வியல்_கொள்கை
#படைத்தவனை_அறிவதற்கே_பகுத்தறிவு
#
#இஸ்லாம்_என்ற_வாழ்வியல்_கொள்கை
#இஸ்லாம்_என்றால்_என்ன?
#வணக்கத்திற்குரிய_இறைவன்_யார் ?
யாரிடம் பிரார்த்திக்கிறோம் என்ற தெளிவு நமக்கு மிக அவசியம். நம்மைவிட பலவீனமான அல்லது உயிரற்ற அல்லது உணர்வற்ற பொருட்களிடம் நமது கோரிக்கைகளை சமர்பிப்பது வீண் என்பது தெளிவு!
படைத்த இறைவனை விட்டுவிட்டு படைப்பினங்களை - அவை உயிரோடு இருப்பவையாயினும் சரி இறந்தவை ஆயினும் சரி - வணங்குவதும் அல்லது அவற்றிடம் பிரார்த்திப்பதும் நமது பொருளையும் நேரத்தையும் வீணடிப்பது மட்டுமல்ல, இச்செயல் மிகப் பெரும் பாவம் ஆகும்.
இறைவன் கேட்கிறான்:
" அல்லாஹ்வே அவனுடைய அடியானுக்கு போதுமானவனாக இல்லையா? " (அல்குர்ஆன் 39:36)
(அல்லாஹ் என்றால் வணக்கத்துக்குத் தகுதி வாய்ந்த இறைவன் என்று பொருள்)
இறந்து போன நல்லோர்கள், மகான்கள், இறைத்தூதர்கள் மற்றும் இதர நல்லடியார்களிடம் துன்பங்களை நீக்கவும், தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யவும் வேண்டிப் பிரார்த்திப்பது வீணும் பெரும் பாவமும் ஆகும்.
= இறைவன் கூறுகிறான்: “ இறைவனை விடுத்து இறுதி நாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைப்பவர்களை விட மிக வழிகெட்டவர்கள் யார் இருக்க முடியும்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள் ” (திருக்குர்ஆன் 46:5)
சிந்தித்து செயல்படச் சொல்கிறான் இறைவன்:
= “ துன்பத்திற்குள்ளானவர் இறைஞ்சும்போது அவருக்குப் பதில் அளிப்பவன் யார்? மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார்? மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்” (27:62).
= " நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்து அழைத்தாலும், அவர்கள் உங்கள் அழைப்பைச் செவியேற்கமாட்டார்கள், செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள், மறுமைநாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள், யாவற்றையும் நன்கு அறிந்தவனைப் போன்று அவர்கள் எவருமே உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள்". (அல்குர்ஆன்35:14)
= உண்மையான அழைப்பு (பிரார்த்தனை அல்லாஹ்வாகிய) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் சத்திய மறுப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. (அல்குர்ஆன்: 13:14)
மறுப்போருக்கான தண்டனை!
இறைவனின் எச்சரிக்கைகளுக்குப் பிறகும் அதை மீறி எவரும் இப்பாவத்தைச் செய்தால் அவர்களின் புகலிடம் நரகமே!
= ‘ இறைவனை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகிறானோ அவன் நரகில் நுழைவான்' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி). நூல்: புகாரி.
================
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html
நாம் ஏன் பிறந்தோம்?
http://quranmalar.blogspot.com/2014/05/blog-post_15.html
#அல்லாஹ்_என்றால்_யார்?
#படைத்தவனை_அறிவதற்கே_பகுத்தறிவு
#படைத்தவனை_அறிவதற்கே_பகுத்தறிவு
#இஸ்லாம்_என்ற_வாழ்வியல்_கொள்கை
#படைத்தவனை_அறிவதற்கே_பகுத்தறிவு
#தொழுகை_நடத்திவரும்_புரட்சிகள்
உலகமெங்கும் ஐவேளை இறைவிசுவாசிகளால் நிறைவேற்றப்படும் தொழுகையை சற்றே கூர்ந்து கவனியுங்கள்.
= உலகின் அத்தனை இறைவிசுவாசிகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறைப் பள்ளியான கஅபா வை நோக்கியே தொழுகை நிகழ்த்துகிறார்கள். இதன் சூட்சுமம் அளவிலடங்காதது
= படைத்தவனை மட்டுமே வணங்குவோம் படைப்பினங்கள் வணக்கத்துக்கு உரியவை அல்ல என்ற கொள்கை முழக்கம் பூமி உருண்டையின் மீது அயராது ஒலிப்பது உங்களுக்குக் கேட்கிறதா?
= என் உடல்,பொருள் ஆவி அனைத்தும் உனக்கே சொந்தம்! இறைவா நீயே மிகப்பெரியவன்! என்று அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி விட்டு இறைவிசுவாசிகள் உலகெங்கும் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களுக்கு விரையும் காலடி ஓசை உங்களுக்குக் கேட்கிறதா?
= ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறம் என்று நம்மைப் பிரித்து வைத்திருந்த தடைகளை உடைத்தெறிந்து ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கையின் கீழ் உலகோர் அனைவரும் ஒருங்கிணையும் காட்சி உங்களுக்குப் புலப்படவில்லையா?
= ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள். இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?
= சிதறிக்கிடக்கும் பாமரனையும் படித்தவனையும் ஏழையையும் செல்வந்தனையும் பெரியவர்களையும் சிறுவர்களையும் பாகுபாடின்றி ஒருசில நொடிகளில் உலகெங்கும் ஆங்காங்கே சீராக அணிவகுக்கச் செய்யும் விந்தையை எந்த இராணுவமும் செய்யக் கண்டிருக்கிறீர்களா?
= ஒவ்வொரு தொழுகைக்கும் ஒழு (அதாவது அங்கத்தூய்மை) செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?
= தொழுகையாளிகளின் வாழ்விலிருந்து சோம்பலை விரட்டி அவர்களது வாழ்வை திட்டமிட்டு அமைத்துக்கொள்ள தொழுகை வழிவகுப்பதைக் கண்டீர்களா?
= ஐவேளை இறைவனோடு தொடர்பு கொள்வதன் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும் இருக்கும் வண்ணம் நடுநிலையான வாழ்க்கைத் திட்டத்தை தொழுகை அமுல் படுத்துவதைக் கண்டீர்களா?
= தொழுகையாளிகளின் வாழ்வில் சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை அன்றாடம் அடைந்து கொண்டிருப்பதை கவனித்தீர்களா?.
= தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் ஆன்மீக ரீதியாக அடையும் பெரும்பலன்களுடன் நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா (சாஷ்டாங்கம்) செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?
= உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார். இவ்வாறு தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் தொழுகையாளிகளுக்குள்ளன.
= இவ்வளவு புரட்சிகளை நிகழ்த்தி மானிடர்க்கு அளவில்லா நன்மைகளைத் தந்து கொண்டிருக்கும் இவ்வுலகளாவிய இயக்கத்தில் இணையாமல் நீங்கள் ஒதுங்கி நிற்கலாமா? சிந்தியுங்கள்
இஸ்லாம் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை கற்பிக்கிறது:
ஒன்றே மனிதகுலம்: அனைத்து மனித குலமும் ஒரு ஆண் – பெண் ஜோடியில் இருந்து உருவானதே. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தவரே என்ற உண்மை.
ஒருவனே இறைவன்: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த இறைவன் ஆவான். அவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்பினங்களே. படைப்பினங்கள் எதுவும் வணக்கத்திற்கு உரியவை அல்ல.
இறைவனின் கண்காணிப்பும் இறுதி விசாரணையும்: இந்தக் குறுகிய தற்காலிக வாழ்வை இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ளான். இங்கு நமது செயல்கள் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று இறைவனின் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன. அன்று புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் நிரந்தர வாழ்விடங்களாக விதிக்கப்பட உள்ளன.
மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு அல்லது எண்ணத்தளவில் விட்டுவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் இஸ்லாம் வழங்குகிறது. இஸ்லாத்தை ஏற்று வாழ முற்படுபவர்களுக்கு ஐந்து விடயங்கள் கடமையாக்கப்பட்டுள்ளன. இவை இஸ்லாத்தின் தூண்கள் என்றழைக்கப்படுகின்றன:
1. கொள்கைப் பிரகடனம்:
“வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. மேலும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்ற வாசகத்தை மனதார ஏற்று வாயால் மொழிதல். அரபு மொழியில் "லா இலாஹ இல்லல்லாஹ். முஹம்மதுர் ரசூலுல்லாஹ்")
ஆத்மார்த்தமாக மேற்கூறப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை இதயத்தில் உறுதி செய்து வாயால் மொழிந்தால் அந்த நொடியிலிருந்து ஒரு முஸ்லிமாகி விடுகிறார். எந்த ஒரு மத குருவின் முன்னிலையோ யாருடைய சாட்சியமோ அல்லது ஒரு வழிபாட்டுத்தலத்தில் பதிவு செய்யும் அவசியமோ அங்கு இல்லை!
ஆம், இம்மார்க்கத்தை ஏற்க மன மாற்றமும் குண மாற்றமும் தவிர வேறு எந்த மாற்றங்களும் முக்கியம் இல்லை. ஆனால் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். மீணடும் படைத்தவன் அல்லாதவற்றை கடவுள் என்று சொல்வதோ கற்பனை உருவங்களை வணங்குவதோ தொழுகையை விடுவதோ தீமைகள் பக்கம் செல்வதோ கூடாது!
இதைத் தொடர்ந்து ஐவேளைத் தொழுகை, ஜகாத் எனும் கட்டாய தானம், நோன்பு, ஹஜ்ஜ் போன்றவைக் கடமையாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் தனிநபர் நல்லொழுக்கத்தையும் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதையும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதை நீங்கள் காணலாம்.
click to continue
ஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள் உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..
மரணத்தை விரும்பிக் கேட்க வேண்டாம்
-----------------------------------
நாம் ஒவ்வொருவருக்கும் இந்த தற்காலிக உலகம் என்பது பரீட்சைக் கூடம் போன்றது. நமக்கு விதிக்கப்பட்ட தவணையில் இதற்குள் வந்து போகிறோம். நாம் இவ்வுலகில் செய்யும் நன்மை தீமைக்கு ஏற்ப நமது மறுமை அமையும். இந்த பரீட்சைக் களத்தில் நமது சாதனைகளுக்கும் நாம் சந்திக்கும் சோதனைகளுக்கும் ஏற்ப அது சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ அமையலாம். எனவேதான் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள்:
"உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாகவேண்டும் என்றிருந்தால், 'இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!' என்று கேட்கட்டும்."
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி. 5671
நோயும் பாவ நிவாரணமும்:
நமது பாவங்களைக் கழுவி தூய்மையானவர்களாக ஆக்க கருணையாளனான இறைவன் ஏற்படுத்தித் தரும் ஒரு வாய்ப்பே நோய் என்பதை நாம் உணர வேண்டும். எனவே நோய் வரும்போது நாம் செய்து போன பாவங்களைப் பற்றியும் செய்து கொண்டிருக்கும் பாவங்கள் பற்றியும் நினைத்துப் பார்த்து இறைவனிடம் பாவங்களை மன்னிக்குமாறு மன்றாட வேண்டும். நமது பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்பட வேண்டுமானால் கீழ்கண்ட நிபந்தனைகளை நாம் பேண வேண்டும்.
· பாவத்தை` பாவம் என்று உணர வேண்டும்.
· மனம் வருந்தி உண்மை இதயத்தோடு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோர வேண்டும்.
· மீண்டும் அதே பாவத்துக்குத் திரும்பக்கூடாது.
அதே வேளையில் .....
பிறருக்கு பாதிப்பு ஏற்படும் தீங்குகள் செய்திருந்தால் அவ்வாறு பாதிக்கப் பட்டவர்களிடம் மன்னிப்பு கோரி அவர்கள் மன்னிக்காத வரை இறைவன் அப்பாவங்களை மன்னிக்க மாட்டான் என்பதையும் நாம் அறியவேண்டும்.
நோய் நிவாரணத்துக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதற்க்கு முன்பாக நமது செயல்பாடுகளையும் நமது உடைமைகளையும் சம்பாத்தியங்களையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது பிரார்த்தனைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் நமது உணவும் உடையும் உடைமைகளும் தூய்மையான முறையில் சம்பாதிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். உதாரணமாக நமது உணவு, உடை, உறைவிடம் போன்றவை களவு, மோசடி, விபசாரம், வட்டி போன்ற பாவமான வழிகளில் சம்பாதிக்கப் பட்டதாக இருக்குமானால் நமது பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப் படுவதில்லை.
பெருமானார் நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிட்டார்கள். “அவன் நெடிய பயணம் மேற்கொண்டு புழுதி படிந்து அழுக்கடைந்த நிலையில் புண்ணியத்தலத்துக்கு வருகின்றான். தனது இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தி 'என் இறைவனே!'(என்று இறைஞ்சுகிறான்). ஆயினும் அவன் உண்ணும் உணவு பருகும் நீர் உடுத்தியிருக்கும் ஆடை அனைத்துமே ஹராமானவை - தடுக்கப்பட்ட வழியில் வந்தவை. அவன் முழுமையான ஹராமிலேயே வளர்ந்துள்ளான். அவ்வாறெனில் இத்தகையோனின் இறைஞ்சுதல் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” (முஸ்லிம்)
அவ்வாறு நம்மிடம் இருக்கும் சம்பாத்தியம் தடுக்கப்பட்ட வழிகள் மூலம் பெறப்பட்டதாக இருந்தாலோ, அல்லது நாம் யாருக்காவது வேறு விதமான மோசடிகளோ அநியாயமோ செய்து இருந்தாலோ, அல்லது பிறர் பொருட்களையோ உடமைகளையோ அநியாயமான முறையில் அபகரித்து இருந்தாலோ உடனடியாக இறைவனுக்கு பயந்து அவற்றிலிருந்து மீண்டு விட வேண்டும். காரணம் நாம் செய்த அநியாயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மை மன்னிக்காதவரை இறைவன் நம் பாவத்தை மன்னிப்பதில்லை.
முழு நூலையும் வாசிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்
திருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும் உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..