Writer Jeyan M R - எழுத்தாளர் ஜெயன் எம்.ஆர்

Writer Jeyan M R -  எழுத்தாளர் ஜெயன் எம்.ஆர்

தமிழ் எழுத்துகளை என் கையெழுத்தில் படியுங்கள்.... Tamil kavithai & stories

06/01/2024

என் அடுத்த நாவல் #ஆழ் #கொற்றவை வெளியீடாகச் சென்னை புத்தகக் கண்காட்சி 2024, கடை எண் 313- ல்…

‎Mooper 24/05/2022

‎Mooper ‎Fiction & Literature · 2022

Mooper by JEYAN MICHAEL - Books on Google Play 23/05/2022

Mooper by JEYAN MICHAEL - Books on Google Play Mooper - Ebook written by JEYAN MICHAEL. Read this book using Google Play Books app on your PC, android, iOS devices. Download for offline reading, highlight, bookmark or take notes while you read Mooper.

Mooper 22/05/2022

Mooper Mooper

Mooper ebook by JEYAN MICHAEL - Rakuten Kobo 22/05/2022

Mooper ebook by JEYAN MICHAEL - Rakuten Kobo Read "Mooper" by JEYAN MICHAEL available from Rakuten Kobo. Our people were not trained to survive, they were trained to sacrifice their lives. Our honour is more precious than our...

Panuval Bookstore 28/09/2021

Panuval Bookstore Panuval was founded in April, 2011 as an online bookstore to sell Tamil books exclusively. In September 2013, we opened a physical bookstore at Thiruvanmiyur, Chennai. We have curated Tamil books in a variety of categories including literature, politics, science, art, history, children books, health...

08/06/2016

மனிதன் இல்லை என்றால்
இவ்வுலகம் எப்படி இருந்திருக்கும்!
நூலை கிழிக்கும் வெட்டுக் கிளிகள்
புல்லை வெட்டிக் கொண்டிருக்கும்!
கூடையில் விரியும் பூக்கள்
தண்டிலேயே பூத்திருக்கும்!
சாக்கடை புழுக்கள்
நிலத்தில் உழுது கொண்டிருந்திருக்கும்
தூக்கிலிடப்பட்ட மர விழுதுகள்
மண்ணை முட்டியிருக்கும்!
விழுந்தவை விழுந்த
இடத்திலேயே முளைத்திருக்கும்!
ஒற்றை அறிவு
இரட்டை அறிவையும்
சைவத்தை அசைவமும்
கால் நடையை
காட்டு மிராண்டியும்
மானை புலியும்
தின்று கொண்டிருந்திருக்கும்!
எச்சத்தை புழுக்களும்
தின்று கொண்டிருந்திருக்கும்!
நாற்றம் மருகி மணமாகிருக்காது!!!
உயிர் வகைகள் மருகியிருக்காது!!!
அது அது அப்படியே இருந்திருக்கும்.
எல்லாம் படைத்த கடவுள்களோ
பேண ஆளின்றி
அனாதைகள் ஆக்கப்பட்டிருப்பார்கள்!!!
- ஜெயன் எம் ஆர்

கூட்டாண்மை (CSR) 03/06/2016

இது நான் பதிவு செய்த ஒரு டாக்குமெண்டிரி.... நண்பர்களுக்கு பகிருங்கள். https://youtu.be/ehhh07YLxL8

கூட்டாண்மை (CSR) கார்ப்பரேட்டுகள் மட்டுமல்ல கையேந்தி பவனாக இருந்தாலும் மனசு இருந்தால் போதும்... அதிகமாக பகிந்து அடுத்த மழைக்குள் நீர் நிலைகளை தூர்வாரி சென்னையைக் காப்போம்...

28/05/2016

என் "மழலி" புத்தகம் சென்னை புத்தக கண்காட்சியில் மேன்மை வெளியீடு அரங்கு எண் 476-லில் கிடைக்கும்...

Photos from Writer Jeyan M R -  எழுத்தாளர் ஜெயன் எம்.ஆர்'s post 30/03/2016

என் புத்தக வெளீயீட்டு விழாவிற்கு நண்பர்கள் அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்...

15/03/2016

சாதி இரண்டொழிய வேறில்லை... அந்த இரண்டும்தான் ரோட்ல வெட்டுப் பட்டு சாகுது...
மிருகத்தைக் கூட இப்படி போட்டு வெட்ட மாட்டாங்க..

24/12/2014

Merry Chrisrmas & Happy New Year...
--------------------------------------------
திரும்பி பார்க்காதீர்கள்,

அங்கே
விழி எட்டும் தூரம்
கரடு முரடாகத்தான் தெரியும்
அதில் நாம் சிரித்ததை விட
பார்த்து சிரித்தவர்கள்தான்
இருப்பார்கள்...

நம் மேல்
விழுந்த கற்கள்
இன்னும் அங்கே கிடக்கும்,
கிடக்கட்டும்

கைக் கொட்டி
இகழ்ந்தவர்களும்
முன் புகழ்ந்து,
பின் உமிழ்ந்தவர்களும்
இரத்த சுவடுகளாக
அங்கேயே கிடக்கட்டும்...

எனக்கு தெரியும்,
நட்பென்றவர்களில்
நான்கு பேரைக்கூட
நம்மால் அடையாளம்
கண்டிருக்க முடியாது!!!

ஏதோ ஒரு சக்தி
எங்கோ ஒருவர்
எட்டும் தூரத்திலோ
எட்டா ஓரத்திலோ
சிவமாய் காத்துக் கொண்டிருக்கிறார்
நம்மை வீழ விடாமல்...

ஏதோ, இதுவரை
நாம் யாரும் தோற்கவில்லை
என்பதும் உண்மைதானே?

ராசிபலம்
தினபலன்
பச்சி பலன்
எண் கணித ஜோதிடம்
பிறந்த நாள் ஜோதிடம்
கை ரேகை ஜோசியம்
நாடி ஜோசியம்

சனிப் பெயர்ச்சி காக்கும்
குருப் பெயர்ச்சி காக்கும்
என்றெல்லாம்
இதோ இதோ என்று
இன்றுவரை வந்துவிட்டோம்.

கண்கள் மூடிக்கொள்கிறேன்,
இனி அந்த பக்கம்
திரும்ப மாட்டேன்...
நீங்களும் வேண்டாம்!!!

நாளைகளின் மறுநாள்...
பாதைகளில்,
பாசம் பதனிடப்படும் நாள்.

கண்ணம்மா போல்
துணைவி - அவளுக்கு
பாரதியாக ஒரு புலவன்,

சான்றோன் என்று சொல்ல
ஒரு புதல்வன்
ஈன்றோனைக் காக்க
ஒரு புதல்வன்,

விரல் இடுக்குகளில்
கைக் கோர்த்துக்கொள்ள
மனிதர்கள்,

நெற்றியில் முத்தமிட்டு,
கைப்பிடித்து மைல்களிட
உறவுகள்,

இவை எல்லாவற்றில்
மேல்,

ஒரு நண்பன்...
உடுக்கை இழந்தவன்
கைபோல் ஒரு நண்பன்,

உறவாட இவை
எல்லாம் வேண்டும்
என்று கண்ட கனவுகளையும்,
மீதம் கிடக்கும்
லட்சியங்களையும்,
புது வருடத்திற்கு
அழைத்துச்செல்வோம்,

இனி
குறுகலாய்,
புன்னகையாய் இல்லாமல்
மகிழ்ச்சியாய்
வாய்விட்டு சிரிப்போம்...

வாழ்த்துக்கள்...

-ஜெயன் எம். ஆர்

Timeline photos 09/10/2014

Goal! The Dream Begins...
-----------------------------------
2005 - வெளிவந்த திரைப்படம்...

"குடும்பத்தை காப்பாற்று, நான் சொல்லும் வேலையைச் செய்... என்று என் அப்பா சொல்கிறார். அவர் சொல்வது நல்லதற்குதானே?"

"ஆம்... நல்லதுதானே சொல்கிறார்"

"ஆனால் அது என் லட்சியத்தைப் பாதிக்கிறதே... எனவே என் அப்பா சொல்வதும் தவறுதான்...அது சுய நலம்... நான் கேட்கப் போவதில்லை... நான் சாதிக்க வேண்டும்"

சிறு வயதிலேயே ஆஸ்துமாவுடன், ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் , தன் அப்பாப் பேச்சைக் கேட்காமல் தன் பாட்டியின் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறி உலகம் அறிய வெற்றிப் பெறும் ஒரு கதைதான் இப்படம்...

பார்க்க வேண்டிய வரிசையில், The dream Begins...

Timeline photos 01/10/2014

எப்பொழுதும் நானே
வெற்றிப் பெற வேண்டுமென்று
விடுகதையை எளிதாக
என்னிடம் கேட்பாள்.

நானோ அவளை விடுவிக்க
மனமில்லாமல் இன்னும்
எளிதாக எளிதாக என்று
அவளிடம் தோற்றுக் கொண்டே
இருப்பேன்!!!

-ஜெயன் எம். ஆர்

01/09/2014

“உன் அம்மா வைத்த
பெயரும் உனக்கு அழகுதான்!- ஆனால்
என் குழந்தை நீ – எனவே
உனக்கு இன்று நான் பெயர் வைக்கிறேன்” – இது அவள்

“ஆஹா... அப்படி என்றால்
அம்மாவிற்கு பெயர் வைத்த முதல்
குழந்தை என்ற பெயர் என்னைச் சேரட்டும்
உனக்கும் நான் பெயர் வைக்கிறேன்...” இது அவன்

- ஜெயன் எம் ஆர்

Timeline photos 30/07/2014

என்ன செய்தீர்கள் இதுவரை???
********************************************

தேக மாற்றமும்
இன மாற்றமும்
வந்தேறாத வயதில்,

ஆண் என்றும்
பெண் என்றும்
பிரிவறியா வயதில்,

பிறப்புறப்புகள்
புணர்கையெனும்
காமமென்றொன்று உண்டென்று
அறியா வயதில்,

பிஞ்சு என்று
என் தாய்
கொஞ்சும் வயதில்,

பலாத்காரம்
காரத்தில் சேர்ந்ததா
என்றியா என்னை,

தன் வெறிகொண்ட
ஒற்றை நரம்பின்
உணர்விற்கு
உணவாக உண்ட அவனை
என்ன செய்தீர்கள் இதுவரை???

பிராணி கூட
பிணைய,
இணையான
இணை தேடும்
நம்மில்,
என் வளரா
வெறும் நீர் கொண்ட
தேகத்தை வன்மையாக
கிளித்து புணர்ந்த
அந்த ஓரறிவு
உடல் உண்ணியை
என்ன செய்தீர்கள் இதுவரை???

ஒன்று, உயிர்
என்னை விடும்...
இல்லை வலி கொல்லும்
என்றறிந்தும்
பருவமேய்யாத என்னை
வன் புணர்ந்து,
அவன் மார்பளவில்
உடல் முழுவதையும் இறுக்கி,
மூச்சைடைத்து
துவண்டு போய்
துடிதுடித்து
இறந்த என்னைப்
புதைத்தீர்கள் – இல்லை
எரித்தீர்கள்...
ஆனால் அவனை
என்ன செய்தீர்கள் இதுவரை???

இன்னும், இன்னும்
என்னை
வேட்டையாடும் அவனை
என்ன செய்தீர்கள் இதுவரை????

- ஜெயன் எம் ஆர்

Timeline photos 10/07/2014

நல்ல உலக சினிமாவில் இன்று... The Terminal...
***************************************************************
விக்டர் நாவோஸ்கி (Viktor Navorski) தனது சொந்த ஊரான ககோஷியாவிலிருந்து (Krakozhia) நீயூயார்க் வருகிறார். அவர் நியூயார்க் விமான நிலையத்தை அடையும் இடத்திலிருந்து திரைப்படம் ஆரம்பிக்கிறது.

இவர் சரியாக நியூயார்க் வந்த நேரம் தனது சொந்த ஊரான ககோஷியாவில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக அந்த நாட்டிலிருந்து யாரும் அமெரிக்கா நாட்டிற்கு அந்த நாட்டு மக்கள் வரவும், இந்த நாட்டில் இருப்பவர்கள் கரகோஷியாவிற்கு திரும்பி செல்லவும் அனுமதி மறுக்கப் படுகிறது.

எனவே விமான நிலையத்திற்குள் வந்த விக்டர் அமெரிக்கா நகரத்திற்குள் செல்லவும், அல்லது மீண்டும் ஊருக்கும் செல்லவும் முடியாத நிலை ஏற்படுகிறது.

சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாத விக்டர் மிகவும் சிரமபடுகிறார். தனது கடவு சீட்டு (Passport) மற்றும் அயல் நாட்டு நுழைவு சான்று(visa) இவைகளை காவல் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு அந்த விமான நுழைவு சாலையிலேயே (Terminal) தங்க வேண்டிய நிலை வந்து விடுகிறது.

முதல் நாள் விக்டருக்கு உணவு உண்ண ஒரு சீட்டும், தேவைப்பட்டால் தொலைப்பேசியின் அழைக்க ஒரு சீட்டும் கொடுக்கப் படுகிறது. அன்று அதை வைத்து அவர் வாழ்கை நகர்கிறது. தொலைபேசியில் அழைக்க முயற்சித்தும் பலன் இல்லாமல் போகிறது அவருக்கு.

அந்த விமான நிலையத்தில் இருக்கும் ஒரு தொலைக்காட்சியில், செய்தியாக ஓடிக் கொண்டிருந்த தனது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் கலவர நிகழ்ச்சிகளைப் பார்த்து கண்ணீர் விடுகிறார்.
அதே நேரம், அந்த விமான நிலையத்தில் சுங்க அதிகாரியாக இருந்த பிராங்க் டிக்ஸன் (Frank Dixon ) மேல் அதிகாரியாக வேலை மாற்றம் செய்யப்படுகிறார். எனவே அரசு சார்பில் அதிகாரிகள், பாதுகாப்பு வசதிகள் நிலையத்தில் எவ்வாறு இருக்கிறது என்று பார்வை இட வருதாக தகவல் வர டிக்ஸன் எப்படியாவது விக்டரை தகுந்த காரணம் கண்டு கைது செய்ய முயல்கிறார். அதற்கான முதல் வழியாக அவரை எப்படியாவது விமான நிலையத்தை விட்டு வெளியேற செய்து, வெளியே சென்றதும் கைது செய்ய திட்டமிடுகிறார். அதற்காக அடுத்த நாள் அவருக்கு உணவு அருந்த கொடுத்த சீட்டை தடை செய்கிறார். எனவே சாப்பிட பணம் இல்லாத விக்டர் பசியில் சிரமப்படுகிறார்.

தன் பசியை ஆற்ற விமான நிலையத்தில், பயணிகளால் நிறுத்தப் பட்ட பார ஊர்தியை மீண்டும் அதன் சேமிப்பு இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி பணம் பெறுகிறார். அப்படி அன்று பசியாறுகிறது. பிறகு அதுவும் தடை செய்யப்படுகிறது.

அன்று இரவு, கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த ஒரு கட்டிடத்தில் உறங்க அவர் இடம் தேடும் பொழுது, முழுவதும் பணி முடிக்க படாத ஒரு சுவர் அவர் கண்ணில் பட அதை இவர் சுத்தமாக, முழுவதுமாக வண்ணம் தீட்டி அந்த வேலை முடிக்கிறார். விடிந்த பிறகு அவரின் பணியைப் பார்த்த அந்த கட்டிட பணியின் நிற்வாகி அவரை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்.

அந்த நாட்களில் விமான பணி பெண்ணாக வேலைப் பார்க்கும் ஒரு பெண், அமீலியா ( Amelia) என்பவர் அவருக்கு அறிமுகமாகிறார். இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். அமீலியா தன்னைக் காலித்தவர் வேறு ஒருவரை திருமணம் செய்து சில வருடங்கள் ஆகிவிட்டது என்றும், என்றாலும் அவர் ஒரு நாள் கண்டிப்பாக என்னை ஏற்றுக் கொள்வார் என்றும் சொல்கிறாள். அவருக்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார். மேலும் தனக்கு நெப்போலியன் மிகவும் பிடிக்கும் என்றும். அவரின் அளவு கடந்த தன் நம்பிக்கை தனக்கு பிடிக்கும் என்றும் கூறுகிறார். அதற்கு காரணுமும் கூறுகிறார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று எல்லாரும் சொல்லும் வேளையில் தான் படித்த ஒரு புத்தகத்தில், அவர் தற்கொலை செய்ய முடிவு செய்து விசம் குடித்தார். ஆனால் தான் விசம் சாப்பிடுவது சாதரண மக்கள் போல் அல்லாமல் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட வேண்டும் என்று அதிகமாக சாப்பிட்டு, அதுவே வாந்தி எடுத்து அவர் உயிர் பிளைத்து விட்டார் என்று சொல்கிறார். அதே போல்தான் தானும் என்று சொல்கிறாள்.

இது ஒரு புறமிருக்க, டிக்ஸன், விக்டர் செய்து வந்த கட்டிட வேலைக்கும் தடையை உருவாக்குகிறார். அந்த நேரம் அங்கே உணவு விடுதியில் வேலை செய்யும் ஒருவன், விக்டருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறான். அதாவது குடியேற்ற அதிகாரியாக (Immigration Officer) வேலை செய்யும் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவளை பற்றிய தகவல்களை சேகரித்து தந்தால் உனக்கு உண்ண உணவு தருகிறேன் என்றும் சொல்கிறான். இவரும் செய்கிறார். கடைசியாக அவளும் அவன் காதலை ஏற்றுக்கொள்கிறாள். இருவரும் திருமணம் செய்து கொண்டு விமான நிலையத்தில் உலா வருகிறார்கள்.

இப்படி சென்று கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள், விக்டரின் தாய் மொழிக்கு சொந்தகாரரான ஒருவன், தான் வாங்கிய மருந்துகளுக்கு கட்டண ரசீது இல்லாமல் வந்ததால் அவனை கைது செய்ய காவல் அதிகாரிகள் டிக்ஸன் உட்பட பலர் முயல, அவன் கையில் கத்தியை வைத்து மருந்தை திரும்ப கேட்டு மிரட்டுகிறான்.

அப்பொழுது விக்டரை அவனிடம் அவன் தாய் மொழியில் பேசி அவனை கைது செய்ய உதவ அழைக்கிறார் டிக்ஸன். மேலும் அதற்கு ஈடாக விக்டரை சொந்த ஊருக்கு அனுப்பி விடுவதாக உறுதி கூறுகிறார் டிக்ஸன்.

அவரும் செல்ல, மருந்துகளுடன் வந்தவன், என் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை எப்படியாவது நான் இந்த மருந்தை எடுத்து செல்ல வேண்டும் என்று காலை பிடித்து கெஞ்ச, விகடரும் மனம் இறங்க, அந்த மருந்துகள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிக்கு, மிருகத்துக்கு என்று அவனை காப்பாற்றி விடுகிறார். இதை புரிந்து கொண்ட டிக்ஸன், அவனிடம் சபதம் செய்கிறார், “நான் இங்கே இருக்குவரை நீ இந்த விமான நிலையத்தை விட்டு வெளியே நீயூயார்க் நகரத்திற்குள் செல்ல முடியாது, விடமாட்டேன்” என்று. மேலும் விக்டருடன் காதலி போல் பழகி வந்த அமீலீயாவை அழைத்து மிரட்டவும் செய்கிறார் டிக்ஸன்.

வெளியே வந்த அமீலியா, விக்டரிடம் அவர் யார் என்றும், எதற்கு இங்கு வந்தாய் என்றும் கட்டாயப் படுத்தி கேட்கிறாள். அதற்கு விக்டர் தன்னிடமிருந்த ஒரு பெட்டியிலிருந்து ஒரு குழு புகைப்படத்தை எடுத்து அவளிடம் காட்டுகிறார். “இந்த புகைப்படம் 1958-ல் ஒரு பத்திரிகையில் வந்த புகைபடம். இதில் இருப்பவர்கள் எல்லாரும் உலக புகழ் வாய்ந்த நட்சத்திரங்கள். இவர்கள் அனைவரிடமும் ஆட்டோகிராப் வாங்க என் அப்பா ஆசைப்பட்டார். ஒருவரை தவிர எல்லாரிடமும் வாங்கி விட்டார். ஆனா இதில் இருக்கும் ஜாஸ் இசை கலைஞர் ஒருவரிடம் மட்டும் ஆட்டோகிராப் வாங்குமுன் என் அப்பா இறந்து விட்டார். அதை வாங்கதான் நியூயார்க் வந்திருக்கிறேன்” என்று சொல்கிறார். அதை கேட்டதும் அமீலியா அவரை முத்தமிடுகிறார்.

இந்த கதைகளை கேட்டதும் அந்த விமானத்தில் வேலை செய்யும் பலருக்கு இவர் கதாநாயகன் போல் ஆகிறார். அதில் ஒருவர் இந்தியாவை சேர்ந்த வயாதனவர். துப்புறவு பணி செய்பவர். விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பணி.

இந்தியாவில் ஒரு குற்றத்திலிருந்து தப்பித்து, நாடு விட்டு ஓடி வந்து இங்கு வந்து யாருக்கும் தெரியாமல் வேலை செய்வதாக கூறுகிறார்.

ஒன்பது மாதங்களுக்கு பிறகு தனது சொந்த நாடான ககோஷியாவில் போர் முடிவுவிற்கு வந்து விட்டது என்று அறிவிப்பு வருகிறது. இந்த செய்தி வந்ததும், அமீலீயா தான் காத்திருந்த காதலனுடன் வந்து, ஒரு நாள் அமெரிக்கா குடியேற்ற அனுமதி சீட்டை, உனக்காக தன் காதலன் வாங்கி கொடுத்தாக சொல்லி விக்டருடன் கொடுக்கிறாள். எதுவும் புரியாமல் பார்க்கும் விக்டரை, டிக்ஸன் அழைக்கிறார்.

“உன்னை நீயூயார்க் செல்ல அனுமதிக்க மாட்டேன். நீ உன் நாட்டிற்கு சென்று விடு. மீறி நீ நியூயார்க் செல்ல ஆசைப் பட்டால், உனக்கு உதவிய எல்லாரையும் சிறையில் அடைப்பேன்.” என்று அந்த வயதான இந்தியர் உட்பட ஒவ்வொருவர் பெயராக சொல்ல விக்டர் தன் திரும்பி நாட்டிற்கே செல்கிறேன் என்று ஒத்துக் கொள்கிறார்.

ஆனால் அந்த இந்தியர் கையில் தரையை சுத்தம் செய்யும் குச்சியுடன் அந்த விமானை தளத்திற்குள் ஓடி அந்த் விமானத்தை நிறுத்துகிறார். “என்னை கைது செய்தாலும் பராவில்லை. நீ நியூயார்க் செல்ல வேண்டும்” என்கிறார். டிக்ஸன் எவ்வளவு கட்டளைகள் இட்டும் கேட்காமல் காவலாளிகள் அவரை நியூயார்க் நகரத்திற்குள் அனுமதிக்கிறார்கள்.

ஒரு வாடகை வண்டியை பிடித்து அந்த ஜாஸ் கலைஞரைப் பார்க்க செல்கிறார் விக்டர். அங்கு சென்று ஆட்டோகிராப் கேட்கிறார். அந்த ஜாஸ் கலைஞர் இந்த பாடல் முடியும் வரை காத்திருங்கள் என்று கூற காத்திருந்து கையெழுத்து வாங்குகிறார் விக்டர்.
மீண்டும் சாலைக்கு வந்து ஒரு வாடகை மகிழுந்தில் ஏறுகிறார். அந்த வண்டியில் ஓட்டினர் கேட்கிறார், “எங்கே செல்ல வேண்டும்” என்று. அதற்கு இவர் “வீட்டிற்கு...ஹ்ம்... வீட்டிற்கு...” என்கிறார். திரைப்படம் முடிகிறது.

சில நொடிகள் அப்படியே திரையை பார்த்துக் கொண்டிருந்தேன்.

- ஜெயன் எம் ஆர்

Timeline photos 08/07/2014

நிறமாறும் ஓந்திகள்..

அவன் பெயர் மறந்து போயிருந்தாலும் அந்த சிறுவனை என்னால் மறந்து விட முடியாது. எனவே அவனுக்கு என் பெயரை சூட்டி அழைக்கப் போகிறேன். அவன் பெயர் இன்று முதல் ஜெயன் ஆவான். ஜெயன் ஆனான்.

வயது ஆறு என்ற எண்ணை கடக்கும் பொழுது அவனுக்கு சுய அறிவு வந்தது. அதாவது தன்னை அடையாளம் கண்ட நாட்கள் கொண்ட வயது அது. அந்த ஆறில் நடந்த காட்சிகளில் சில மறந்து போனாலும் மனதில் பதிந்த சில காட்சிகள் அவனுக்கு எப்பொழுது மறப்பதில்லை. அதில் ஒன்று அந்த எதிர் வீட்டு மாமர தோட்டத்தில் வாழ்ந்து வந்த நிறம் மாறும் பச்சோந்தி...

அன்று கோடையில் அவன் அந்த மாமரத்தில் பிஞ்சு மாங்காய்கள் பறிக்க சென்றிருந்தான். கோடையில் கண்குளிர பூத்து, வாய் கனிய உணவாகும் முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் என்றால் அவனுக்கு எவ்வளவு பிடிக்குமோ, அதேப் போல் துவர்ப்பு கலந்த பல் கூசச் செய்யும் அதன் அந்த மாங்காய் பிஞ்சுகள் அவனுக்கு மாம்பழத்தை விட பிடிக்கும்.

ஆறு வயதில் மரம் ஏறுவதை யாரும் பார்த்துவிட்டால் இன்று அவன் துவர்பு ஆசை அத்துடன் நின்றுவிடும் என்று அவனுக்கு தெரிந்ததால் மெல்ல மெல்ல யார் கண்களிலும் அகப்படாமல் அவன் வயதை விட சில மடங்கு உயரமான மாமரத்தில் மெல்ல ஏறுனான்.

மரக்கிளைகளில் கண்ணுகெட்டும் தூரத்தில் காய்த்து தொங்கிய இளம் காய்கள், கைக்கு எட்ட கொஞ்சம் சிரமப்பட்டது. எப்படியும் எட்டிவிடலாம் என்று கிளையில் நின்றவாறு கையை நீட்டினான். எட்டவில்லை. கைக்கு சற்று தூரத்தில் நின்று சிரித்தது மாங்காய். இன்னும் உடலை முடிந்த வரை நீளச் செய்து கையை நீட்டினான். காயோ எட்டா கனிபோல், கையின் நீள விரலான நடு விரலில் உராய்ந்து சென்று, ஓரமாய் ஊசலாடி இவனை பார்த்து மீண்டும் சிரித்தது. ஏளனமா செய்கிறாய், விடமாட்டேன் உன்னை என்பது போல் தன் வலது காலை ஒரு சிறு கிளையில் முன் வைத்து எட்டினான். மாங்காய் பிஞ்சு அவன் கை எட்டும் வரை எட்டினான். மீண்டும் எட்டினான், கையில் அகப்படுவது உறுதி என்று எண்ணியவாறு மாங்காயின் மீது கை வைத்த நேரம் நிறம் மாறி பச்சை நிறம் தரித்து மாங்காய் மேல் ஒட்டி இருந்த ஒரு ஓந்தி இவன் கையின் மேல் ஏறியது.

பதட்டத்துடன் கையை மாங்காயிலிருந்து எடுத்து அருவருப்பில், ஓணானை தட்டி விட உடலை அசைத்தான். அசைத்ததில் இவன் வலது காலை அவன் நின்றிருந்த கிளையும் தட்டிவிட்டது.
அவ்வளவுதான்...
கிளைகள் வழியே சுழற்றி விடப்பட்ட ஜெயன் சறுக்கி பந்தாடப் பட்டு வேகமாக கீழே மண் தரையில் விழுந்தான்.
ஆறு வயது சிறுவன் என்பதால் உடைந்த தன் வலது கை எழுப்பிய வலியால் அவன் நாவை அடக்க முடியவில்லை. ஓவென்று அழ ஆரம்பித்தான்.

பிறகு அவன் மீண்டும் அந்த இடத்திற்கு வர இரண்டு வாரங்கள் ஆனது. இனிமேல் எனக்கு தெரியாமல் மரம் ஏறுனால் காலை உடைத்து விடுவேன் என்ற பயமுறத்தல் எல்லாம் அவனை எதுவும் செய்யவில்லை. ஏற்கனவே கை உடைந்துதானே இருக்கிறது இதற்கு மேல் காலை உடைத்தாலும் அவனுக்கு புது வலியா வரப்போகிறது. துணிந்து விட்டான்.

இருந்தாலும் அவன் மரம் ஏற முடியாது, தோளில் தொடங்கும் வலது கை மறுபுறம் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னும் உடைந்த கை சரியாகவில்லை.
மாமரம் அருகில் வந்த ஜெயனுக்கு மாமரக் காய்களை தேடுமுன், அந்த பச்சோந்தி ஞாபகம்தான் வந்தது.
மாமரத்தை சுற்றி சுற்றி தேடினான். பச்சை நிறம் படிந்த காய்கள் ஒன்று விடாமல் தேடினான். அவன் கண் ஏனோ அவனை ஏமாற்ற ஆரம்பித்தது. தன் இடது கரங்களினால் கைக்கு எட்டும் கிளைகளை பிடித்து அசைந்தான். அவன் ஆறு வயது பலம், காற்றை விட வேகமாக அவனால் கிளைகளை அசைக்க முடியவில்லை. “எங்கே போய் தொலைந்தாய்?” என்று மொத்த பலத்தையும் தன் இடது கைகளில் கொண்டு வந்த ஜெயன் பேய் ஆட்டம் ஆட ஆரம்பித்தான்.

ஆனால் இம்முறை பச்சோந்தி மாங்காயில் அமரவில்லை கிளையில் அமர்ந்திருக்கிறது. இவன் வேகத்தால் பயந்து போன அது வேகமாக கீழே ஓடி மறைந்தது.
இவனுக்கு ஒரே விந்தையாக இருந்தது. நேற்று வந்தது பச்சை நிறத்தில் வந்தது. இன்று வந்தது மரத்தின் நிறத்தில் இருக்கிறதே என்று எண்ணிவாறு தன் இடது கையால் ஒரு கல்லை தரையிலிருந்து எடுத்தான்.

“சீ... சீ... இது வேறொன்று... தப்பு செய்தது பச்சை... அதைதான் கல்லால் அடிக்க வேண்டும்...”

“அப்பா... நேற்று நம் வீட்டில் இருப்பது போன்று ஒரு பெரிய பல்லியை மாமரத்தில் பார்த்தேன். ஆனால் அது பச்சை நிறத்திலிருந்தது. இன்று பார்த்தது பழுப்பு நிறத்தில் இருந்தது. அந்த பச்சை பல்லி மீண்டும் எப்பொழுது வரும் அப்பா...”

“அது பல்லி இல்லை. அதற்கு பெயர் பச்சோந்தி... ”

ஜெயனுக்கு புரிந்திருக்கும் என்று அவன் அப்பா நினைதாலும் அவன் புரிந்து கொண்டது வேறு...

“அப்பா அந்த மரத்தில் இருப்பது அந்த பச்சை பல்லிதான், சரியா அப்பா?”

“அது பல்லி இல்லை பசோந்தி...”

ஆக அவனுக்கு ஒன்றும் மட்டும் தெரிந்தது அந்த மரத்தில் ஒரு பச்சோந்தி, ஒரே பச்சோந்திதான் இருக்கிறது.

அடுத்த நாள் அவன் செல்லும் பொழுது அவன் இடது கையில் ஒரு கல்லுடன் சென்றான். இவன் மரத்தின் அருகே சென்றது தரையிலிருந்த பச்சோந்தி, ஓடிச் சென்று மரத்தின் ஏறிக் கொண்டது. கோபம் வந்த ஜெயன், “இன்று என்ன செம்மண் நிறத்திலா இருக்கிறாய்?” என்று வேகமாக தன் இடது கையால் கல்லை தூக்கி பச்சோந்தியை பார்த்து எறிந்தான்.

அவனுக்கு வலது கை பழக்கம் என்பதால், அவன் பயன்படுத்திய இடது கைக்கு வேகம் போதவில்லை. ஆனாலும் அவன் குறி பார்த்தது தலை தப்பினானும் அது பச்சோந்தியின் வாலை துண்டித்தது.

துண்டாகிய வால் சிதறி அவன் முன்னால் விழுந்து துடி துடித்து மரித்தது.

“என் வலது கையை முறித்ததால் இன்று தப்பித்து விட்டாய். என் கை மட்டும் மீண்டும் பலம் பெறட்டும்...” என்று உறுமிக் கொண்டான்.

“அப்பா என் கை சரியாக இன்னும் எத்தனை நாள் ஆகும்?”
“ஒரு மாசம்...”

இவன் சிந்திக்க ஆரம்பித்தான். ஒரு மாசம். என்றால் எவ்வளவு நாள் அவனுக்கு தெரியவில்லை. கணக்கு போட்டு பார்த்தும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு புரிந்தது, ‘ஒரு மாசம் என்றால் ரொம்ப நாட்கள்’ என்று.

இன்றும் அந்த மரம் அருகே சென்றான். இடது கையால் கல்லை மரத்தை நோக்கி வீசிப் பார்த்தான். அவன் வீசிய கல் மாமரத்தில் உயரத்தில் பாதியைக் கூட எட்ட முடியவில்லை. மீண்டும் எறிந்தான்.
மீண்டும் எறிந்தான்.

பச்சோந்தியின் வாலுடன் கல்லின் உயரம் உயர ஆரம்பித்தது. அதே நேரம் வலது கை கழுத்திலிருந்து கீளிறங்கி இருந்தது. அது இன்னும் அவன் இடது கைக்கு தோதுவாக மாறியது.

மீண்டும் வீசினான்.

மீண்டும் மீண்டும் வீசினான்.

தினம் தினம் முறிந்த வால்தான் அவனுக்கு அடையாளம். தெரியாமல் கூட இன்னொரு பச்சோந்தியை கல்லால் அடித்து விடக்கூடாது. உறுதியாகவும், கவனமாகவும் இருந்தான்.

காய் பிஞ்சுகள் காயாக மாறியிருந்த நேரம் அவன் கல்லின் உயரம் மாமரத்தின் உயரத்தை மிஞ்சியது.

“நான் வெற்றிப் பெற்று விட்டேன்...” என்று மரக்கிளையில் ஓளிந்திருந்த பச்சோந்தி கேட்க சத்தமிட்டான்.

பச்சோந்திக்கு இவன் மொழி தெரிந்திருந்தால் உண்மையில் அது பயந்திருக்கும்.

ஒரு பெரிய கல்லை எடுத்தான். வலியிலிருந்த மீண்டிருந்த வலது கையை மறந்து இடது கையால் ஒரு கல்லை எடுத்துபச்சோந்தியை பார்த்து வீசினான்.

அது இவன் கல்லைப் பார்த்து சிரிந்து விட்டு ஓடியது.
அன்று இவனுக்கு எஞ்சியது மரத்தை சுற்றி மீண்டும் மீண்டும் அவன் வீசிய சில கற்களும் முற்றிய சில மாங்காய்களும்தான்.

அன்று ஜெயன் அப்பா பேசுவதை கேட்டான், “மாமரத்தில் காய்கள் முற்றிவிட்டது. நாளைப் பறித்து பழுக்க வைக்க வேண்டும்” என்று. இவன் மனம் பதற ஆரம்பித்தது.
அதற்கு முன், இன்னும் ஒரு நாளில் அந்த பச்சோந்தியை கொன்று விட வேண்டும். உறுதி செய்தான். ஒரு நாள் பொறுத்துக் கொள்ளவே மனம் மறுத்தது. இரவு முழுவதும் உறங்கவில்லை அவன்.
மறுநாள் கற்களை மரதடியில் எறிய எறிய பொறுக்காமல், சேகரித்து எடுத்து சென்றான். இடைவெளியில்லாம் பச்சோந்தியை சாகும் வரை எறிய வேண்டும் என்ற எண்ணத்தில்.

ஆனால் அவனுக்கு தோல்வி காத்துக் கொண்டிருந்தது. மரத்தின் அடியில் சென்ற அவன் அதிர்ந்து நின்றான். மரக் கிளைகள் ஒடிந்து தொங்கியது. மாவிலைகள் தரையில் சிதறி கிடந்தது. மரத்தை எட்டிப் பார்த்தான். காய்கள் பறிக்கப்பட்டிருந்தது.

அப்படி என்றால் பச்சோந்தியும் இனி அதற்கு உணவு இங்கு கிடைக்காது என்று ஓடி இருக்குமா?

தேடினான்...

மரத்தடியில் கல்லடிப் பட்டு இறந்து கிடந்தது அந்த பச்சோந்தி. அதன் அருகில் இரத்த காயத்துடன் ஒரு கல்லும்.

“அப்பா... மாங்காயை தின்றதற்காகவா அதற்கு மரண தண்டனை கொடுத்தாய்? கொன்றாய்...?”

“பச்சோந்தி மாங்காய் சாப்பிடாது.”

“பிறகு ஏன் மரத்தில் எப்பொழுதும் இருக்கிறது.”

“அதுதான் அது தங்குமிடம்...”

அது வீட்டில் நான் ஏறிச் சென்றதால்தான் என் கையை அது உடைத்ததா?

அடுத்த நாள் அந்த மரத்தின் அருகில் சென்று பார்த்தான் ஜெயன். பச்சோந்தியின் உடலை பாதி அளவு தின்றிரிந்தது கறையான்கள்.

அடுத்த நாள் முழுதாய் தின்றிருந்தது.

அடுத்து சில நாட்கள் வெறும் எலும்புகள் மட்டும்தான் இருந்தது. பிறகு மழை பெய்ய அதுவும் மறைந்து போனது.
ஆனால்

அது இறந்து கிடந்த அந்த அடையாளம் மட்டும் இவன் கண்களில் பதிய ஆரம்பித்தது.

இன்னும் ஜெயன் அந்த மாமரத்திற்கு செல்லும் பொழுது அந்த இடம் மனதில் வந்து போகும். அவனை பொறுத்தவரை அந்த மாமரத்தில் மூடுதான் அந்த பச்சோந்தியின் கல்லறை.
அந்த நிறமாறி பச்சோந்தியால் ஜெயனின் வலது கை பழக்கம், இடது கைபழக்கம் ஆனது.

ஜெயனாகி நானும் தினம் தினம் நிறமாறிக் கொண்டு மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் பச்சோந்திகளுடன்...

- ஜெயன் எம் ஆர்

Photos from Writer Jeyan M R -  எழுத்தாளர் ஜெயன் எம்.ஆர்'s post 29/05/2014

என் ஒற்றைத் தண்டவாளம் சிறுகதை ஜெயப்பிரியா முரசு பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது... நண்பர்கள் அனைவரும் என் நன்றிகள்... ஜெயன் எம் ஆர்.

Timeline photos 29/05/2014

ஜன்னல் தேவதை...
----------------------------------------
அழகு, காதல், பாசம், அன்பு
எத்தனை தலைப்புகள் உனக்கு,

அழகில் கொஞ்சம்
காதலுடன் கொஞ்சம்
பாசமிட்டு கொஞ்சம்
அன்பென்று கொஞ்சம் - என்றென்று
வாசல் தெளிக்கையில்
அத்தனையும் மொத்தமாய்
எடுத்து எப்படி அந்த
சின்ன இடையில் பிணைக்கிறாய்?!
“ஆச்சரியம்!!!”

பின்னோக்கி
ஒரு கால் விரல் பதித்து
அதன் மேல் உன் அழகு
மொத்தத்தையும் அமரவிட்டு
சிலைபோல் அமர்ந்து
கோலங்கள் போட
புள்ளிகள் வைப்பாயே...

அந்த கோலத்தை
பார்க்கத்தான் என்
கண்கள் விடிக்கும் முன்
மனம் விழித்துக் கொள்கிறது தினமும்...
“அழகு!!!”

நாளையும் கிழக்கு
நோக்கியே அமரு…
என்னுடன் கதிரவனும்
காத்திருக்கிறான்!!!!

ரொம்ப நாள்
சந்தேகம் எனக்கு
ஏன் பூக்காரி உன்
வீட்டின் வாசல் முன்
வந்ததும் "மல்லி, முல்லை "
என்று கூவுவதை நிறுத்தி விடுகிறாள்!?
அப்படி வீசுகிறதே உன் வாசனை...
“நறுமணம்!!!”

உன் வீட்டில் மட்டும்
அசையா பொருள் கூட
அழகிற்கு காவல் இருக்கிறது
எப்படி?

உன்னை பார்க்க வேண்டி
எட்டிப்பார்த்தால் குக்கர் கூட
கூக்குரலிடுகிறதே!
“அரவணைப்பு!!!”

இவ்வளவு நேரம்
கண்ணாடி முன் என்ன செய்கிறாய்? - என்று
கேட்கும் தாயிடம் சொல்கிறாள்,

"அம்மா எப்பவே வந்துட்டேம்மா
ஆனால் இந்த அழகு
மட்டும் இன்னும் கண்ணாடி
முன்னாடியே நிற்கிறது" என்று…
“உண்மை!!!”

கால அட்டவணையை
பார்த்து ஒன்று ஒன்றாக
பையில் அடுக்கிக் கொண்டிருந்தாள்,

இடமில்லாமல் மிஞ்சிய
கணக்கு புத்தகத்தை
மட்டும் தன் மார்போடு
அணைத்துக் கொண்டாள்.

பையினுள் அழுகை
சத்தம் கேட்டு
கொண்டே இருந்தது.
“துயரம்!!!”

கம்பிகள் வழியாக
பார்த்துக் கொண்டிருந்த
என்னை அவள் பார்த்துவிட்டாள்.

பார்த்ததும் 'பட்' என்று
கதவை அடைத்தாள்,
கோபத்தில் என் ஜன்னல்
என் கன்னத்தில்
'படார்' என்று அறைந்தது.
“வலி!!!”

வெளியே வந்ததும்
பத்தில் முந்திக் கொண்ட
ஒரு ஜோடியில் கால் நுழைத்து
வெளியே வந்தாள்
தெரு வழியே,
தேர் மேல் கோபுரமாய் மிதந்தாள்…
“பயணம்!!!”

அட்ச ரேகையாக
ஒரு அடியையும்
தீர்க்கமாக ஒரு அடியும்
வைத்து நடந்தாள் - அவள்
பின்னாலேயே நீண்டது
என் ஆயுள்ரேகை...

“ஆஹா… காதல்…”!!!

- ஜெயன் எம். ஆர்

Timeline photos 27/05/2014

புவி ஈர்ப்பை விட
உன் விழி ஈர்ப்புதான்
தினம் தினம்
அதிகமாகிக்
கொண்டே போகிறது...

- ஜெயன் எம் ஆர்

Timeline photos 23/04/2014

களைந்த மை மேல் வரைந்த ஓவியம் போல் மேலுடை களைந்து ஓருடையுடன் ஆவாள்.

அந்த ஆறு, உண்மையில் அழகு. சின்ன பாறைகள் மேல் ஏறி இறங்கியும் பெரிய குன்றுகளில் ஓரம் உரசியும், சிறு பள்ளம் வருகையில் சறுக்கி நிறைத்தும், மேடு பள்ளம் வருகையில் தாவி குதித்தும், பெண்ணின் சிணுங்கல் போல் ஓடிக்கொண்டே இருந்தது.

பாறைகளில் படிந்த பாசிகளின் கவனத்திற்கு அவள் ஆற்றினுள் இறங்கிய பொழுது, அந்த அழகில் அடங்கிய நான், நகர மனமில்லாமல் ஒரு குன்றில் அமர்ந்து கொண்டேன்.

“நீ அடங்க மாட்டாயா? முதலில்...” அவள் முடிக்கும் முன் என் பேச்சை ஆரம்பித்தேன், கவிதை வேண்டுமே எனக்கு...

“நான் அடங்குவது இருக்கட்டும், தூரத்தில் வரும் நீரைப்பார்... அடங்காமல், முன்னால் ஓடும் நீரை முந்தி தள்ளிக் கொண்டு ஆடி வருவதை, அதை என்ன செய்யப் போகிறாய்?”

“அது வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம், முதலில்...” மீண்டும் அவளைத் தொடர விடாமல் மறித்தேன்.

“பார்... முன்னால் செல்லும் ஒவ்வொரு நீரையும் எப்படி ஓரம் தள்ளிவிட்டு ஓடி வருகிறது...”

“போதும் கவிதை சொல்கிறேன் என்று என் உயிரை வாங்காதே...”

“என்னை விலை சொல், எவ்வளவு டன் காதல் வேண்டும், உன் உயிரை என் உயிர் வாங்க?”

“இப்பொழுது மட்டும் என்ன செய்கிறாய்? கவிதை என்கிற பெயரில் உயிரை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்?”

“எடுத்தது உன் உயிரை இல்லை, என் உயிரை... உயிரும் உயிரும் சேரும் பொழுது, மெய் உயிர் பெறும் அல்லவா?”

“போதும்... இதற்கும் மேல் நீ எதுவும் சொல்ல வேண்டாம். முதலில்...” என்று அவள் தொடராமல் நான் என்ன பேசுகிறேன் என்று பார்ப்பதற்காகவே தன் பேச்சை நிறுத்தினாள். ஆனால் நான் அவள் பேசட்டும் என்று அமைதியாக இருந்தேன். தன் கைகளால் தன் அழகில் ஐக்கியமாக வரும் நீரை தன் கைகளால் அள்ளி என் மீது வீசி சொன்னாள்,
“டேய்... வந்து குளி... உன் கவிதைகளை கொஞ்ச நேரம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு...”

“அந்த நீர் எவ்வளவு வேகமாக ஓடி வந்தது, அதன் ஆசையை கெடுத்து விட்டாயே, இப்படி என் மேல் தூக்கியடித்து அதை கொன்று விட்டாயே...” என்றேன்.

என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்து கொண்டிருந்தாள், நான் நிறுத்தாமல் தொடர்ந்தேன், இன்னும் எனக்கு கவிதை கிடைக்கவில்லை,

“ஒன்று தெரியுமா? இந்த ஆறில் எவ்வளவு நீர்த்துளிகள் இருக்கிறது, அதில் சில துளிகள் மட்டும்தான் நிலம் வழியே உடல் இறங்கி கருவறையை அடைந்து நிலத்தடி நீர் ஆகிறது. மீதி எல்லாம் கடலில் உப்பாகி வீணாகிறது...”
“நீ எங்கே வருகிறாய் என்று புரிகிறது”
அவள் கன்னங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன், இன்னும் சிவக்க ஆரம்பிக்கவில்லை.

“உன்னையே சுழலாய் சுற்றி வரும் நீரை இன்னும் காக்க வைக்காதே, முதலில் நீரில் மூழ்கு, உன் அழகில் கொஞ்சம் அடையட்டும் அவைகள்...”
சிரித்து விட்டு நீரில் மூழ்கினாள், சுற்றி சுற்றி வந்த சுழல், அவள் மூழ்கியதும் அவள் தலைக்கு மேல வட்டமிட்டு அவளுடன் அதுவும் நீரில் மூழ்கியது. சில நொடிகள் முக்குளித்தவள் தன்னை அழுத்திய நீரை ஓரம் தள்ளிவிட்டு மேல் எழுந்து நீரை அள்ளி என் மேல் வீசினாள்.

அழகு...

“பார்த்தாயா... தலை மேல் ஏறியவை கீழ் இறங்குவதை...”

சொல்ல சொல்ல மீண்டும் மூழ்கினாள்,

“நீ இப்படியே பேசிட்டு இரு, நான் கிளம்புகிறேன்...” என்று மெல்ல நீர் விட்டு தரை நோக்கி நடந்தாள்.

“நீ எழுந்து வருவது எப்படி இருக்கிறது தெரியுமா, மழை ஓய்ந்து, அருவி போல் ஆற்றில் விழுந்து கொண்டிருந்த நீர் களைப்பாகி சொட்டு சொட்டாய் முடிவடையுமே, அந்த அழகை ஒத்தது” என்றேன்.
இப்பொழுது கன்னத்தைப் பார்த்தேன், கொஞ்சம் வெட்கம் தெரிந்தது.

“உன் மேல் ஒட்டிக் கொண்ட துளிகளை மட்டும் துடைத்து விடாதே, உன் அழகு குறைந்து விடும்...” என்றேன்.

அவள் காதில் எதையும் வாங்கிக் கொள்ளாதது போல் மெல்ல பச்சையப் பாசிகள் காலில் பதிய நடந்து அருகில் வந்து கொண்டிருந்தாள்.

“நீ காலடி வைக்கும் பொழுது உன்னுடன் கூடைய நீர் துளிகள் உன் கூந்தலை பிடித்து மீண்டும் ஆற்றுக்குள் இழுப்பதைப் பார்.. துரோகிகள்...”

மீண்டும் அடுத்த அடி வைத்தாள்.

“ஒர் காதலன் கண் முன்னாலே, என்னவளை அடைய நினைக்கிறது துரோகிகள். . . " என்று கையிருந்த கற்களை அவள் குளித்த இடத்தில் வீசினேன்.

என் அருகில் வந்து தன் ஈர கையால் என் மேல் கை வைத்து,

“போதும்... குளி...” என்று என்னை ஆற்றில் தள்ளினாள். அவள் கன்னத்தைப் பார்த்தவாறு நானும் குதித்தேன். இப்பொழுது அவள் கன்னம் சிவந்திருந்தது.

“கிடைத்தது விட்டது கவிதை...” என்று நீரில் விழுந்த நான் சத்தமிட்டேன். நீர் துளிகள் கோபத்தில் அலையாகி என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டது...

- ஜெயன் எம் ஆர்

Timeline photos 21/04/2014

*************************
தாய்க்கு பின்
துண்டித்த தொப்பிள்
கொடியை மீண்டும்
காதல் கொண்டு
கருவறையோடு
இணைத்தள் அவள்...
***

எனக்கு இரண்டு
குழந்தைகள் என்றாய்...
இன்னொன்று என்று
என்னைக் காட்டினாய்...
***
காதல் என்ற
பெயரில் என்
கைக் குட்டை கனவுகள்
அத்தனையையும் திருப்பி
தந்தவள் அவள்...
***
உன் அக்கறையிலேயே
இவ்வளவு காதல்
வடிகிறதே...

உன் அக் கரை
எப்படியிருக்கும்
ஒரு ஒற்றையடி விடு
பார்த்து விட்டு வருகிறேன்...

- ஜெயன் எம் ஆர்

Timeline photos 09/04/2014

இன்று - விஜய பங்குனி 20
**************************************

பெருமழைக் காலம்...

கையில் தேநீருடன் அருகில் வந்து அமர்ந்தாள்.

“எனக்கு ஒரு சந்தேகம் டா. ஏன் கவிதை ஒரு வரிக்கு ரெண்டு வார்த்தை மூணு வார்த்தைன்னு மட்டும் எழுதுறாங்க?”

“கவிதைன்னா அப்படிதான்...”

“நீ ஏன் அப்படி எழுதணும்...”

“ஏன்னா? “

"மழையை பாரு... எவ்வளவு அழகா இருக்கு இல்ல. ஒரு கவிதை சொல்லு”

“சரி எனக்கு டீ ... உனக்கு? சாப்பிட்டியா?" என்றேன்.

“இப்ப போய் நான் டீ சாப்பிடுவேனா?"

"லூசு... குளிர்லதான் டீ சாப்பிடுவாங்க. "

"இப்ப டீ சாப்பிட்டா குளிர் கலஞ்சிராது. . . கலஞ்சிடுச்சினா எதுக்கு மழை? அனுபவிக்கணும். “

“அப்புறம் ஏன் போத்தியிருக்கிற?”

“ஆமால்ல... நல்லாயிருக்குமில்ல...” என்றவாறு போர்வையை தரையில் வீசினாள்.

“அடப்பாவி போர்வைதான் இவ்வளவு நேரம் உன்னை போர்த்திட்டு இருந்திச்சா?”

“ஏண்டா?”

“அங்க பாரு மழையில கிடந்து அழுற்றத பாரு... நீ போர்த்துன போர்வை.”

“கவிதை சொல்ல சொன்னா பாரு...” என்றவாறு என் கன்னத்தில் தட்டினாள். அவள் கையை பிடித்தேன்.

“உன் கையை பாரு... குளிரை நீ அனுபவிக்கல. குளிர்தான் உன்னை அனுபவிக்குது.

“டேய்... நீ இருக்கும்போது குளிர் எல்லாம் ஜெயிக்க முடியுமா!....”

“அடடா... வெட்கம்...” என்றதும் என்னிடமிருந்து அவள் கையை விடுவித்து மழையைப் பார்த்தாள்

“போடா... எனக்கு குளிர் அவ்வளவு பிடிக்கும்." தலையை திருப்பியவாறு சொன்னாள்

"உனக்கு குளிர் புடிக்குதோ என்னமோ. குளிருக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு..."

“ஹேய்....”

“உண்மை...”

“எப்படி...”

“அங்கே தரையில பாரு. மழை என்ன குதி குதிக்குதுன்னு...”

“அடப்பாவி மழை தரையில விழுறுதுக்கு இப்படி ஒரு விளக்கம் யாரும் கொடுக்க முடியாது...”

“சும்மா சொல்லலேமா... குதிக்குற குதில அந்த இடமே பள்ளமா மாறுது பாரு... “

“போதும் போதும்...” என்றவாறு கூரையிலிருந்து வரும் நீரை என் முகம் மேல் அள்ளி இறைத்தாள்.

“அடடா.... டீ-யை விட மழைத் தண்ணீர் சுடுதே...”

“மழைத்தண்ணி சுடுதா உனக்கு. கொஞ்சம் அதிகம்தான்...”

“ஆமா உன் கையால வேண்டாம் போன்னு தூக்கி வீசுனா வேறு என்னவாகும் நீர். அதுதான் ஆவி ஆகுது, சுடுது...”

“ இது நல்லா இருக்கே...”

“இன்னும் கொஞ்சம் அழகான கவிதை சொல்லவா?”

“சொல்லு சொல்லு...”

“குளிரை இன்னும் அனுபவிக்கணுமா? கீழே இறங்கி மழையை கொஞ்சம் நனையவிடு பார்ப்போம்.”

“மழைதானே என்னை நனைக்கும்?”

“ இறங்கிப்பார் தெரியும்...”

அவள் அழகில் மழை நனைய ஆரம்பித்தது.

தண்ணீர் சொட்ட சொட்ட முன்னாடி வந்து நின்று கேட்டாள்,

“கவிதை?”

அவள் ஈர முடியை தட்டி விட்டு சொன்னேன்,

“ இதை விட அழகான கவிதையா?”

“போதும்டா...”

“போதும்ன்னு சொல்லும்போழுது உன் அழகு மட்டும் இன்னும் இன்னும் என்கிறதே....”

“அழகு மட்டுமில்ல டா... மனசும்தான்... உன் பேச்சைவிட அழகான இங்கு எதுமே இல்லைடா... அவ்வளவு அழகு...” என்றவாறு நீர் சொட்ட சொட்ட அணைத்தாள்.

கவிதை....

- ஜெயன் எம். ஆர்

Timeline photos 04/04/2014

இன்று - விஜய பங்குனி 20
*********************
நண்பன் அடிக்கடி
சொல்வான்
இவளைப் போல் காதலி – ‘நீ
கொடுத்து வைத்தவன் டா’ என்று...

ஆம்... நான் கொடுத்து
வைத்தவன்தான் – கொடுத்ததை
வாங்கிக் கொண்டு
காதலை
தின வட்டி
நொடி வட்டி என்று
வட்டி வட்டியாக
திருப்பித் தருகிறாள்...
***
எல்லா காதல்களும்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படலாம்

ஆனால்,
எனக்கு சொர்க்கமே
காதலில்தான்
நிச்சயிக்கப்பட்டது... (எப்புடி!!!???)

- ஜெயன் எம் ஆர்

Telephone

Website