Vivekananda Book House near Vayu Lingam
Books on Swami Vivekananda, Sri Ramakrishna and Sri Sarada Devi.
Other spiritual materials like Rudraksha, Darbah Meditation Mats, Spatika, Arunachala Deepam Prasadam, hygienic health products, Pooja things and many more sadhana supportive objects.
ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையம். கிரிவலபாதையில் ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையம். ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையம். கிரிவலபாதையில் ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையம்.TAITALTV | Tidal TV Entertainment | Taital Educationthiruvannamali giriv.....
🙏📚📙🙏📖🙏📘📚🕉️
நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தெய்வத்திருமூவரின் ஆசிகளும், அருள்மிகு அண்ணாமலையாரின் அருளும் தங்களுக்குக் கிடைக்க எமது பிரார்த்தனைகள்.
நமது விவேகானந்தா புக் ஹவுஸ் கீழ்காணும் சேவைகளை வழங்கி வருகிறது என்பதைத் தங்கள் மேலான பார்வைக்கு வைக்கிறோம்.
*ராமகிருஷ்ண மடத்து வெளியீடுகள்*
தமிழ்
தெலுகு
ஆங்கிலம்
ஒரு சில கன்னட, ஹிந்தி புத்தகங்கள்.
*மாலைகள்-மணிகள்*
ருத்ராட்ச , ஸ்படிக , கருங்காலி - மாலைகள், மணிகள்.
*பூஜை பொருட்கள்*
நாட்டுப் பசு திருநீறு
குங்குமம்
ஊதுவத்தி
108 மூலிகை சாம்பிராணி
கப் சாம்பிராணி
பஞ்சகவ்ய ஊதுவத்தி - கப் சாம்பிராணி
*செக்குஎண்ணெய்கள்*
தேங்காய்
வேர்கடலை
எள்
*உணவுபொருட்கள்*
பனங்கிழங்கு
நெல்லிக்காய் - பலவகை
நெய்
தேன்
பட்டர் - பலவகை
நாட்டு சர்க்கரை
தோள் பைகள் - பலவகை
திருநீறு பை - பலவகை
வாழை நார் பொருட்கள்-பல வகை
தேங்காய் எண்ணெய் + மூலிகை குளியல் சேர்ப்பு - பல வகை
நர்மதை பாணலிங்கம் - பலவகை
சிலைகள்,
லேமினேஷன் படங்கள்,
பர்மா தேக்கு போட்டோ பிரேம்கள் - பல அளவுகளில் ,
தமிழ் காலண்டர் ( சித்திரை முதல் பங்குனி வரை )
பஞ்சாங்கம் (ஆற்காடு, பாம்பு, வாசன்)
இன்னும் அநேகம் உள்ளன .
அனைத்தையும் தங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறோம் .
ஆர்டர் கொடுத்தால் அனைத்து வித சிலைகள் செய்து தரலாம் .
அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அன்புடன்,
விவேகானந்தா புக் ஹவுஸ்,
திருவண்ணாமலை.
8939154988
🙏📚🙏📘📖📙🙏📚🙏
சாது மகாத்மாக்களுக்கு,
நமஸ்காரங்கள்.
நமது விவேகானந்தா புக் ஹவுஸில் ஜெயராம் பாடியில் இருந்து வாங்கி வந்த தொப்பி விற்பனைக்கு உள்ளது.
தேவையானவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
89391 54988
🕉️🙏🚼🕉️🙏🚼🕉️🙏🚼
அனைத்து
விதமான கருங்காலி பொருட்களும் கிடைக்கும்
89391 54988
இந்த வகை தேங்காய் எண்ணெயில் செய்த மூலிகை சோப்புகள் இங்கே கிடைக்கும்.
வாழை நார் பொருட்கள். புதிய வரவு. இதன் வருமானம் ஏழை கிராமிய பெண்களின் வாழ்வாதாரம். இது ஒரு லாபநோக்கமற்ற பண்ட பரிவர்த்தனை.
பர்மா தேக்கில் செய்த போட்டோ பிரேம்கள்.
நர்மதை பாணலிங்கங்கள் புதிய வரவு
திரு கார்த்திகை தீப திருவிழா
புதிய வரவுகள். நஞ்சில்லா நல்ல உணவுகள்.
*சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்*
**
*ப* ண்டைய வேதங்களில் மூன்று படிநிலைகள் உள்ளன. முதலில் வருவது கர்மம், இரண்டாவதாக வழிபாடு, மூன்றாவது ஞானம். கர்மத்தாலும் வழிபாட்டாலும் ஒருவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டதும் இறைவன் அவனுள் விளங்குகிறார். இறைவன் ஏற்கனவே தன்னுள் இருப்பதை அவன் உணர்கிறான். மனம் தூய்மை பெற்றதால் மட்டுமே அவன் கடவுளைக் கண்டிருக்க வேண்டும். எனவே கர்மத்தாலும் வழிபாட்டாலும் மனம் தூய்மை அடைகிறது. அவ்வளவுதான். முக்தி ஏற்கனவே நம்மில் உள்ளது. நமக்கு அது தெரியவில்லை. எனவே கர்மம், வழிபாடு, ஞானம் ஆகியவை மூன்று படிகள் ஆகின்றன.
*-சுவாமி விவேகானந்தர்.*
~~~~~~~~~~~~~~~~~~~
சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள். திரட்டு 5.
பக்கம் 198.
~~~~~~~~~~~~~~~~~~~~
*சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்*
~~~~~~~~~~~~~~~~~~~
*சீ* டர் : 'சுவாமிஜி, நீங்கள் ஒரு சாது, உங்கள் வரவேற்பு உபச்சாரத்திற்காகப் பணம் வசூலித்தோம். நீங்கள் கல்கத்தா வரும்முன் அங்கிருந்து தந்தியடித்து, 'நம் நாட்டில் இப்போது பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே எனது வரவேற்பிற்கு ஒரு காசுகூடச் செலவிட வேண்டாம். மொத்தப் பணத்தையும் பஞ்ச நிவாரண நிதிக்காக கொடுத்துவிடுங்கள்' என்று கூறுவீர்கள் என எண்ணினேன். ஆனால் நீங்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை. ஏன் ?'
*சு* வாமிஜி : 'வேண்டுமென்றேதான் நான் அப்படிச் செய்யவில்லை. ஓர் எழுச்சி உண்டாக வேண்டுமென்று விரும்பினேன். ஏன் தெரியுமா? எழுச்சி இல்லாவி்டால் மக்கள் *பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரை* எப்படி அறிவார்கள்? இது எனக்காகவா ஏற்பட்டது ? *அவரல்லவா* இவற்றால் பெருமை பெறுகிறார்! *அவரை* ப்பற்றி அறிய மக்களின் உள்ளத்தில் எவ்வளவு ஆவல் உண்டாகியிருக்கிறது ! இப்போது படிப்படியாக *அவரைப்* பற்றி அறிவார்கள். அதனால் நாட்டிற்கு நன்மை உண்டாகாதா ? உலகின் நன்மைக்காக வந்த *அவரை* அறியாமல் மக்களுக்கு எப்படி நன்மை உண்டாகும் ? *அவரைச்* சரியாக அறிந்து கொண்டால் மனிதர்கள் உருவாக்கப்படுவார்கள். அத்தகைய மனிதர்கள் இருக்கும் நாட்டில் பஞ்சத்தையும் பட்டினியையும் விரட்ட எவ்வளவு நேரமாகும் ? இதனால் எனக்காக கல்கத்தாவில் எழுச்சி உண்டாக வேண்டுமென்று விரும்பினேன். அதன்மூலம் மக்கள் முதலில் *ஸ்ரீராமகிருஷ்ணரின்* செய்தியை அறிந்து கொள்வார்கள். இல்லாவிட்டால் இத்தனை ஆடம்பரங்கள் எனக்கு எதற்கு ? ஒருகாலத்தில் உன் வீட்டில் வந்து எல்லோருமாக விளையாடுவோமே, அதைவிட நான் பெரியவனாகி விட்டேனா என்ன ? அன்று இருந்ததைப் போல்தான் இன்றும் இருக்கிறேன். ஏன் ? என்னிடம் ஏதாவது வேறுபாடு உள்ளதா ? சொல்.'
' *ப* ஞ்சம் என்பது நமது நாட்டைப் பொருத்தவரை ஒரு தீராத வியாதியாகவே ஆகிவிட்டது. வெளிநாடுகளில் எங்காவது இதுபோல் இருக்கிறதா ? இல்லை. ஏன் ? ஏனெனில் அங்கெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்கள்; இங்கோ நடைப்பிணங்கள்தாம் வாழ்கின்றன. *ஸ்ரீராமகிருஷ்ணரைப்* படித்து, அவரை அறிந்து, தன்னலத்தைத் துறக்க அவர்கள் முதலில் கற்றுக் கொள்ளட்டும். அதன்பிறகே பஞ்ச நிவாரணத்திற்கான சரியான முயற்சிகள் செய்யப்படும். நானும் மெள்ளமெள்ள அந்த முயற்சியில் ஈடுபட எண்ணியுள்ளேன். அதை நீங்களே பார்ப்பீர்கள்.'
~~~~~~~~~~~~~~~~~~~~
சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள் திரட்டு 3
பக்கம் 377,378,379.
~~~~~~~~~~~~~~~~~~~~
இவை அத்தனையும் நம்மிடம் கிடைக்கும்.
இன்று (19-6-22) நமது விவேகானந்தா புக் ஹவுஸிற்கு வருகை புரிந்த ஸ்ரீமத் சுவாமி ஜப யக்ஞானந்த ஜீ மஹராஜ் அவர்கள்.
🙏🙏🙏.
இனிய காலை வணக்கம்!
ஜூன் 14
*தினம் ஓர் அமுத மொழி*
✍🏻
பல விதமான பூஜை முறைகளை இறைவனே ஏற்படுத்தியிருக்கிறார். இந்த உலகம் யாருடையதோ அந்த ஆண்டவனே இவைகளையெல்லாம் மக்களின் தகுதிக்கு ஏற்ப அமைத்திருக்கிறார் ஒரு தாய் தன் குழந்தைகளின் ஜீரண சக்திக்கு ஏற்ப உணவு சமைக்கிறாள் அல்லவா!அதுபோல்.
***பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர்.*
👣🌷🌷🌷🌷🌷🌷🌷
இந்த நாள் இறைவன் அருளால் இனிய நாளாக அமையட்டும்!
📣📣📣🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
நம்மிடம் கிடைக்கும் கருங்காலி பொருட்கள். தேவைக்கு கூரியரில் அனுப்பி வைக்கப்படும். தொடர்புக்கு - +91 89391 54988
🙏🙏🙏.
இனிய காலை வணக்கம்!
ஜூன் 07
*தினம் ஓர் அமுத மொழி. *
✍🏻
இறை வழிபாடு ,சாதுக்கள் மற்றும் பக்தர்களின் சேவை,தான தரும்ம் என்று பணத்தை நல்ல வழியில் செலவு செய்பவர்கள்தான் உரிய வழியில் பணத்தைச் செலவழிப்பவர்கள். அவர்களுக்குத்தான் நல்ல பலனும் கிடைக்கிறது.
***பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர்.*
👣🌷🌷🌷🌷🌷🌷🌷
இந்த நாள் இறைவன் அருளால் இனிய நாளாக அமையட்டும்!
📣📣📣🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
*பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பதில்கள்*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
கேள்வி : இறைவனை அடையும் வழி என்ன ?
ஸ்ரீராமகிருஷ்ணரின் பதில் : 'பக்தி நெறியின் வாயிலாக இறைவனைப் பெறலாம். அவரது பாதகமலங்களில் ஒரு முறை பக்தி ஏற்படுமானால் , நாமத்தையும் மகிமையையும் பாடுவதில் சுவை ஏற்பட்டுவிடுமானால் , பிறகு சாதனைகள் செய்து புலன்களை அடக்கவேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பகைவர்கள் தாமாகவே நமக்கு வசப்பட்டுவிடுவார்கள்.
யாருக்காவது புத்திரசோகம் ஏற்பட்டுவிட்டால் , அன்று அவன் யாரிடமாவது சண்டைக்கு போவானா ? விருந்து சாப்பிடச் செல்வானா ? அகங்காரத்துடன் மற்றவர் முன் நடைபோடுவானா ? சுகபோகங்களை அனுபவிப்பானா ?
விட்டில் பூச்சி ஒருமுறை ஔியைப் பார்த்துவிட்டால் பிறகு அது இருட்டில் இருக்குமா ?
~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி
*வேதமுரசு*
வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரமம்
மே 2022 இதழ்
~~~~~~~~~~~~~~~~~~~~
*பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் பதில்கள்*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂
கேள்வி : துறவியின் பெருமை என்ன ?
ஸ்ரீராமகிருஷ்ணரின் பதில் : புத்தகம் படிக்காவிட்டால் அறிவு வராது , ஞானம் வராது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் படிப்பதைவிட கேட்பது நல்லது. கேட்பதைவிட பார்ப்பது நல்லது. காசியைப் பற்றி படிப்பது , காசியைப் பற்றி கேட்பது , காசியை தரிசிப்பது இவற்றில் பெரிய வேறுபாடு இருக்கிறது.
சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு காய்களை அவ்வளவு நன்றாக நகர்த்தத் தெரிவதில்லை. ஆனால் , விளையாடாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மேற்கொண்டு நகர்த்த வேண்டிய விதத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள். அவர்களின் ஆலோசனை விளையாடுபவர்களின் யோசனையைவிடச் சரியாக அமையும்.
நாம் பெரிய அறிவாளிகள் என்று மனிதர்கள் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் , அவர்கள் உலகியல் மனிதர்கள்; தாங்களே விளையாட்டில் ஈடுபட்டிருப்வர்கள் , எனவே காயை எப்படி நகர்த்துவது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. உலகைத் துறந்த சாதுக்கள் பொருட்பற்று அற்றவர்கள்; உலகியல் மனிதர்களை விட அறிவாளிகள் , விளையாட்டில் சேராதவர்கள். ஆகவே காய்களை நகர்த்துவதற்கான யோசனையைச் சரியாக சொல்லித்தர அவர்களால் முடியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளிமலை, ஸ்ரீ விவேகானந்த ஆஸ்ரமத்தின் மாதந்திர இதழான *வேதமுரசு* ஜூன் 2022 பதிப்பில் இருந்து தொகுக்கப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று வருகை புரிந்த சென்னை மடத்துத் துறவியர்கள்.
🙏🙏🙏🙏🙏
*இனிய காலை வணக்கம்*
*மே-28*
*தினம் ஓர் அமுத மொழி*
✍️✍️✍️✍️✍️
*கபடமற்ற மனம் இல்லாவிட்டால் இறைவனிடம் சட்டென்று நம்பிக்கை வராது. உலகியலிலிருந்து இறைவன் வெகுதூரம்.*
*-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.*
🦚🦚🦚📣📣📣🌻🌻🌻
*சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்*
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
*சீ* டர் : 'சமுதாயச் சீர்திருத்தத்தைப்பற்றிச் சுருக்கமாகச் சிறிது கூறுங்கள்.'
*சு* வாமிஜி : 'ஏன், வேண்டிய அளவு நான் உனக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவற்றுள் எதையேனும் ஒன்றைச் செயல்படுத்து. சாஸ்திரங்களைப் படித்தாலும், எனது பேச்சுக்களைக் கேட்டதாலும் நீ பயன் பெற்றாய் என்பதை உலகம் காணட்டும். மனு தர்மம் அது இது என்று எத்தனையோ சாஸ்திரங்களைப் படித்திருக்கிறாய். அவற்றின் அடிப்படை, அவற்றின் நோக்கம் என்னவென்று சிந்தித்துப் பார். அந்த அடிப்படையைச் சிறிதும் மாற்றாமல் வைத்துக் கொண்டு, அவற்றின் சாரத்தைப் பழங்கால ரிஷிகளின் முறைப்படித் தொகுத்து, இக்காலத்திற்கு ஏற்ற சிந்தனைகளைச் சேர்த்து புதிய விதிகளை உருவாக்கு. அந்த விதிகளால் இந்தியாவில் உள்ள எல்லா இனத்தவரும் எல்லா ஜாதியினரும் எல்லா பிரிவினரும் உண்மையான நன்மை அடைய வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள். அத்தகைய ஸ்மிருதி ஒன்றை உருவாக்கு. அதை நான் அதைத் திருத்தி தருகிறேன்.'
*சீ* டர் : 'சுவாமிஜி, அது அவ்வளவு சுலபம் அல்ல. அப்படி ஒன்றை எழுதினாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா ?'
*சு* வாமிஜி : 'ஏன் ஏற்க மாடடார்கள் ? நீ முதலல் எழுது. "காலோஹ்ய்யம் நிரவ *தி* ர் விபுலா ச ப்ருத்வீ ----- காலம் எல்லையற்றது, உலகம் மிகக் பரந்தது." நீ மட்டும் சரியாக எழுதினால் காலம் வரும்போது அது நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும். *உன்னிடம் நம்பிக்கை கொள். நீங்கள்தானே ஒரு காலத்தில் வேத ரிஷிகளாக இருந்தீர்கள்; இப்போது வேறு உடல் தாங்கி வந்திருக்கிறீர்கள், அவ்வளவுதான்.* உங்களிடம் எல்லையற்ற சக்தி இருப்பதை நான் என் ஞானக் கண்களால் காண்கிறேன். அந்தச் சக்தியைக் கிளர்ந்து எழச் செய். எழுத்திரு. எழுந்து வரிந்துக்கட்டிக் கொண்டுச் செயலில் இறங்கு. நிலையற்ற பணத்தையும் புகழையும் வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறாய் ? என் எண்ணம் என்ன தெரியுமா ? எனக்கு முக்தியும் வேண்டாம், வேறெதுவும் வேண்டாம். என் வேலையெல்லாம் இத்தகைய கருத்துக்களை உங்களிடம் கிளர்ந்தெழும்படிச் செய்வது தான். ஒரேஒரு யனிதனை உருவாக்குவதற்காக லட்சம் பிறவிகள் எடுக்கவும் தயாராக இருக்கிறேன்.'
வீரமொழிகள் பகுதி 3.
பக்கம் 243,244.
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
🙏🙏🙏🙏🙏
*இனிய காலை வணக்கம்*
*மே-25*
*தினம் ஓர் அமுத மொழி*
✍️✍️✍️✍️✍️
*உண்மை பேசுவது கலியுகத்தின் தவம். உண்மை பேசுவது, இறைவனைச் சார்ந்து வாழ்வது, பெண்களைத் தாயாக கருதுவது... இவைகள் தவ நெறிகளாகும்.*
*-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.*
🌴🌴🌴📣📣📣🌸🌸🌸