Srividhya Devi Sri RajaRajeshwari Ambal Temple

Srividhya Devi Sri RajaRajeshwari Ambal Temple

Temple dedicated Devi Sri RajaRajeshwari Ambal located in Chrompet, Chennai

01/05/2023

அருள்மிகு தேவி ஸ்ரீவித்யா ராஜா ராஜேஸ்வரி ஆலயத்தின்
*6-வது புணரோத்தாரண ஜீர்ணோதாரண நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் – அழைப்பிதழ்*
அனைவரும் வருக!!
அம்பாளின் அருள் பெறுக!!

27/04/2023
16/09/2022

7'th Batch of Free Srividya Ta**ra Puja and Ta**ra Yoga weekend classes starting in October.

07/07/2022
01/07/2022

Listen to Bhadrakali Mahatmyam and also participate in Puja-Tarpana from convenience of home on July 8 (Navami-Navratri). Contact number specified in video for free registration.

Srividya Ta**ram
www.srividyatantram.com

🌸Srividya Ta**ra Peedom 🌸
Trusted name for free education on Srividya Ta**ra Puja and Ta**ra Yoga, given online via web conf without compromising on traditional quality.

30/06/2022

இன்று ஆஷாட நவராத்திரி ஆரம்பம்

ஆஷாட நவராத்ரம்: ஸ்ரீ மஹா வாராஹி மஹிமை:

ஸர்வலோகத்திற்க்கும் ஆதிகாரணேச்வரியான ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரியின் பஞ்சபாண ஸ்வரூபமானவளும்!!ஸ்ரீ லலிதையின் சேனாதிபதியும்!! ஸ்ரீ புரத்தில் மரகதமயமான கோட்டையில் கோலகலமாக கோலமுகத்துடன் "போத்ரிணி" எனும் நாமதேயத்துடன் ஜ்வலிப்பவளும்!!

க்ஷிப்ர ப்ரஸாதினியும் அதே ஸமயத்தில் மஹா ரெளத்ரியுமானவளான ஸ்ரீ மஹா வாராஹ்யம்பாளுக்காக கொண்டாடப்படுவதே ஸ்ரீ ஆஷாட நவராத்ரீ!! தேவிக்கு அனைத்து தினங்களுமே நித்யோத்ஸவமே!! இருப்பினும் அம்பாள் க்ஷிப்ர ப்ரஸாதியாக இருந்து அனுக்ரஹிக்கும் ஸமயமே நவராத்ரீ புண்யகாலம்!!

அப்படி தேவீயை ப்ரதானமாக வைத்தும் உபாஸிக்கும் விழாக்களில் நவராத்ரியே ப்ரதானம் அந்த நவராத்ரீகள் நான்கு விதமாக கொண்டாடப்படுகிறது!!

ஸரத்கால நவராத்ரீயில் ஸ்ரீ சண்டிகா பரமேச்வரீயையும் வஸந்த நவராத்ரீயில் ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரீயையும் தை மாதத்தில் ஸ்ரீ ச்யாமளா நவராத்ரீயும் அதே ஆஷாடத்தில் ஸ்ரீ வாராஹி நவராத்ரீயும் அனுஷ்டிக்கப்படுகிறது!!

இந்த ஆஷாட நவராத்ரீ தினங்களில் மஹோக்ர ரூபியாக இருந்தாலும் தேவீ ஸாதகனின் ச்ரத்தா பக்திக்கு மகிழ்ந்து க்ஷணபொழுதில் கடாக்ஷிக்கிறாள்!!

இருப்பினும் ஸ்ரீ ஆஷாட நவராத்ரீ ஸாதகர்கள் மட்டுமே அனுஷ்டிக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது!! இங்கே நமக்குள்ளே பல கேள்விகள் எழலாம் ஏன் அம்பிகையை அனைவரும் தொழக்கூடாதா?! ஸாதகர்கள் மட்டுமே தான் பூஜிக்க வேண்டுமா என்று!! இதில் புரிதல் வேண்டும் வணங்குவது என்பது வேறு உபாஸனை என்பது வேறு!!

மற்ற நவராத்ரீகளை விட ஆஷாட நவராத்ரீ பலமாறுதல்களையும் கடுமையான நியம நிஷ்டைகளையும் கொண்டது!! கண்டிப்பான முறையில் ஸ்ரீ வித்யையில் வாராஹி மூலமந்த்ரத்தை விதிபூர்வமாக ஜபம் செய்பவர்களோ அல்லது ஸ்ரீ குருநாதரின் ஆக்ஞை பெற்றவர்களுக்கு மட்டும் தான் வாராஹி ஜபம்/ ஹோமம் அது எல்லோருக்குமானது அல்ல!!

ஸ்ரீ வித்யையில் கல்பஸூத்ரத்தின் ப்ராஹாரம் ஸ்ரீ வாராஹி ராத்ரீ தேவதை!! சூர்யாஸ்தமன காலத்திற்க்கு பின்பு தான் இவள் பூஜையையோ அல்லது ஜபத்தையோ தொடங்குதல் வேண்டும்!!

ஸ்ரீ வாராஹ்யம்பாளின் ஆக்ஞையும் கருணையும் இருந்தால் மட்டுமே ஒரு உத்தம ஸாதகன் ஸ்ரீ புரத்தினுள் ப்ரவேஸிக்க முடியும்!! ஒவ்வொரு குருமண்டல குருபரம்பரைக்கும் ஸ்ரீ வாராஹி தான் காவல்!!

ஒவ்வொரு ஸாதகனின் உள்விஷய விஷமங்களை களையவும் அஷ்ட பைரவர்களை கொண்டு கண்காணித்து தர்மபரிபாலனம் செய்வதாலே தான் இவள் தண்டநிதீஸ்தா!! ஒரு உத்தம உபாஸகனின் தேஹத்தில் தேவீயின் ஸ்தானம் ஆக்ஞயா சக்ரமே!!

அந்த ஆக்ஞயா சக்ரத்தில் ஜ்வலிக்கும் "ஹம் க்ஷம்"எனும் அக்ஷரங்களில் ஹம் எனும் பீஜம் குருவினுடைய ஸ்வரூபமாகவும் க்ஷம் என்பது ஸ்ரீ வாராஹியினுடைய ரூபமாகவும் ப்ராஹாஸிக்கிறது!!

பிதாவாக ஸ்ரீ காரணகுருவும் மாதாவாக ஸ்ரீ வாராஹியும் இருப்பாதாலே தான் இதற்கு குரு உபதேசம் அவச்யம்!! இருப்பினும் குரு உபதேஸமில்லாதவர்களுக்கு தேவீயினுடைய திருநாமார்ச்சனைகளே போதும்!!

ஆத்மார்த்தத்தை தவிர காம்யார்த்தங்களுக்கு இல்லை வாராஹி மாலை!! வாராஹி மாலையும் ஸ்ரீ வாராஹியும் வேறல்ல

ஸ்ரீ வாராஹ்யை நம:
ஸ்ரீ லலிதாம்பிகாயை நம:

ஜய ஜகதம்ப ஸிவே
ஜய ஜய காமாக்ஷி!!

- ஸ்ரீ மனோஜ் மஹாதேவ்

23/06/2022
11/06/2022

Srividya Ta**ram

20/04/2022

മന്ത്രവിദ്യാപീഠത്തിലെ ഉപനയനം 2022 മെയ് 8 ന്. 9526228183

04/03/2022

Srividya Ta**ram - 3 Day Live Online Video Conf Workshop.

Photos from Srividya Ta**ram's post 17/02/2022
12/02/2022
08/02/2022

Free Puja-Tarpana workshop with Lalitha Khadgamala on Feb 16 (Lalitha Jayanthi) - Srividya Ta**ram

ஸ்ரீவித்யா 06/02/2022

🌷🙏🌷ஓம் ஸ்ரீ மாத்ரே நம :🌷🙏🌷

*வருஷாபிஷேகம்*

*இன்று 06.02.2022 - ஞாயிறு - ரேவதி நக்ஷத்ரம்*

மாலை 3:30 மணி - ஶ்ரீ விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம்

மாலை 4:00 மணி - கலச ஸ்தாபனம், ஆவாஹனம், ஶ்ரீ நவாவரண பூஜை, ஶ்ரீவித்யா ஹோமம்

மாலை 5:00 மணி - விசேஷ அபிஷேகம்

மாலை 6:30 மணி - நவகலச அபிஷேகம்

மாலை 8:00 மணி - மஹா தீபாராதனை

🙏ஜெய் ராஜேஸ்வரி🙏
🙏ஜெய் ஜெய் ராஜேஸ்வரி🙏

http://www.srividhyarajeshwari.com

https://www.facebook.com/srividhyarajeshwari/

ஸ்ரீவித்யா

05/02/2022

Srividya Ta**ram Wishing everyone happy Saraswati Puja. Any education endeavours or sadhana practices started today will bring success with the grace of the Mother of Vidyas.

04/02/2022
02/02/2022

*சியாமளா நவராத்திரி*

(02-02-2022- to -10-02-2022)

ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை
நாம் அறிவோம்.

நவராத்திரியின் வகைகள்
1வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது
வஸந்த நவராத்திரி).
(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

2ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது
ஆஷாட நவராத்திரி.
(ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

3புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது
சாரதா நவராத்திரி.
(புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).

4தை மாதத்தில் கொண்டாடப்படுவது
ச்யாமளா நவராத்திரி.
(தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ச்யாமளா தேவி
ச்யாமளா’ என்றும்,
‘ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும்,
ஸ்ரீமாதங்கி என்றும்,
‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை,

மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள்.

கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.

வேத மந்திரங்களுக்கு
எல்லாம் அதிதேவதை ஆதலால்’மந்திரிணீ’ என்று அறியப்படுபவள்.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.

இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி,
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள்.

அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள்.

அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,
(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள்.

இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.

சரஸ்வதி தேவி அருள்
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே
ஸ்ரீ ராஜ சியாமளா தேவி.

கலைத் தெய்வம் என்றே சொல்கிற ஸரஸ்வதி கையில் வீணை இருக்கிறது.

வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள்.

அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. ‘கச்சபி’ என்பது ஸரஸ்வதியின் வீணை.

ஸங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர்.

இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

ஸரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கறுப்பு. அதனால்தான் ‘சியாமளா’ என்று பெயர்.

சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!

பனிரெண்டு மாதங்களுக்கும் பனிரெண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. பனிரெண்டு நவராத்திரிகள் இருந்தாலும் இந்த நான்கு நவராத்திரி காலங்கள் மிக மிக முக்கியமானவை என்று சாக்த சாஸ்திர நூல்கள் விவரிக்கின்றன.

சியாமளா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஆராதிப்பதும் வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு மலர்கள் சூட்டி வணங்குவதும் விசேஷம். குறிப்பாக, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி அலங்கரிப்பதும் ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம்.

தை அமாவாசைக்குப் பிறகு வருவதே சியாமளா நவராத்திரி.

அதேபோல், சியாமளா நவராத்திரி நாளில் வரக்கூடிய பஞ்சமி திதி ரொம்பவே மகிமை மிக்கது. மகத்துவம் வாய்ந்தது. புத்தியில் தெளிவையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏற்றித் தந்தருளக்கூடியது.

சியாமளா நவராத்திரி காலத்தில், தினமும் அம்பிகையை வழிபடலாம். குறிப்பாக பஞ்சமி திதியில், வீட்டில் உள்ள அம்பாள் திருமேனிச் சிலைகளுக்கோ அல்லது படங்களுக்கோ சந்தனம் குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரித்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடலாம். சியாமளா நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமியை, வசந்த பஞ்சமி என்பார்கள்.

பொதுவாகவே பஞ்சமி திதி என்பது சப்த மாதர்களில் ஒருத்தியாகத் திகழும் வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள். எனவே சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த வழிபாட்டாளர்கள்!

மாணிக்ய வீணா முபலாலயந்தீம் |
மதாலஸாம் மஞ்சுள வாக்விலாஸம் ||
மஹேந்திர நீலத்யுதி கோமலாங்கீம் |
மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி ||

மாதா மரகத சியாமா மாதங்கீ மதசாலீனீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணி கதம்பவன வாஸினி
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பாத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா சுகப்ரியே

25/01/2022

Ashtami Darshan

ஸ்ரீவித்யா 14/01/2022

🌷🙏🌷ஓம் ஸ்ரீ மாத்ரே நம :🌷🙏🌷

*14.01.2022 - வெள்ளி - தை 1*

🌾*தைப் பொங்கல்*🌾

🍁🍁 *திருப்பாவை பாசுரம் 30* 🍁🍁

🌾 வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
🌾திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
🌾அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
🌾பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
🌾சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
🌾 இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
🌾செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
🌾எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

🙏*ஓம் நமோ நாராயணாய நம:*🙏
🙏*ஓம் நமோ நாராயணாய நம:*🙏
🙏*ஓம் நமோ நாராயணாய நம:*🙏

🍁🍁 *திருப்பள்ளியெழுச்சி 10* 🍁🍁

🌾புவனியிற் போய் பிறவாமையின் நாள்
🌾நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
🌾சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று" நோக்கித்
🌾திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்
🌾அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்
🌾 நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
🌾அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
🌾ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!

🙏*திருச்சிற்றம்பலம்*🙏

🙏ஜெய் ராஜேஸ்வரி🙏
🙏ஜெய் ஜெய் ராஜேஸ்வரி🙏

http://www.srividhyarajeshwari.com

https://www.facebook.com/srividhyarajeshwari/

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா 12/01/2022

🌷🙏🌷ஓம் ஸ்ரீ மாத்ரே நம :🌷🙏🌷

*13.01.2021 - வியாழன் - மார்கழி 29*

*போகிப் பண்டிகை*

🍁🍁 *திருப்பாவை பாசுரம் 29* 🍁🍁

🌾 சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
🌾பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
🌾பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
🌾குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
🌾இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
🌾எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
🌾உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
🌾மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்

🍁🍁 *திருப்பள்ளியெழுச்சி 9* 🍁🍁

🌾விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
🌾 விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்
🌾மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே
🌾வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
🌾கண்ணகதே நின்று களிதரு தேனே!
🌾கடலமுதே!கரும்பே!விரும்படியார்
🌾எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
🌾எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

🙏ஜெய் ராஜேஸ்வரி🙏
🙏ஜெய் ஜெய் ராஜேஸ்வரி🙏

http://www.srividhyarajeshwari.com

https://www.facebook.com/srividhyarajeshwari/

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா 07/01/2022

🌷🙏🌷ஓம் ஸ்ரீ மாத்ரே நம :🌷🙏🌷

*07.01.2022 - வெள்ளி - மார்கழி 23*

🍁🍁 *திருப்பாவை பாசுரம் 23* 🍁🍁

🌾 மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
🌾சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
🌾வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
🌾மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
🌾போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
🌾கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய
🌾சீரிய சிங்காசனத்திலிருந்து, யாம் வந்த
🌾காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்

🍁🍁 *திருப்பள்ளியெழுச்சி 3* 🍁🍁

🌾கூவின பூங்குயில்;கூவின கோழி; குருகுகள்
🌾இயம்பின; இயம்பின சங்கம்;
🌾ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
🌾ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
🌾தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்;
🌾திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
🌾யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய்
🌾எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

🙏ஜெய் ராஜேஸ்வரி🙏
🙏ஜெய் ஜெய் ராஜேஸ்வரி🙏

http://www.srividhyarajeshwari.com

https://www.facebook.com/srividhyarajeshwari/

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா 05/01/2022

🌷🙏🌷ஓம் ஸ்ரீ மாத்ரே நம :🌷🙏🌷

*05.01.2022 - புதன் - மார்கழி 21*

🍁🍁 *திருப்பாவை பாசுரம் 21* 🍁🍁

🌾 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
🌾 மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
🌾ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
🌾 ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
🌾தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
🌾மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
🌾ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
🌾போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

🍁🍁*திருப்பள்ளியெழுச்சி 1*🍁🍁

🌾போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
🌾புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர்கொண்டு
🌾ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
🌾எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
🌾சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
🌾திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
🌾ஏற்றுயர் கொடியுடையாய், எனை உடையாய்
🌾எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

🙏ஜெய் ராஜேஸ்வரி🙏
🙏ஜெய் ஜெய் ராஜேஸ்வரி🙏

http://www.srividhyarajeshwari.com

https://www.facebook.com/srividhyarajeshwari/

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா 05/01/2022

🌷🙏🌷ஓம் ஸ்ரீ மாத்ரே நம :🌷🙏🌷

*04.01.2022 - செவ்வாய் - மார்கழி 20*

🍁🍁 *திருப்பாவை பாசுரம் 20* 🍁🍁

🌾 முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
🌾கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
🌾செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
🌾வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
🌾செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
🌾நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
🌾உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
🌾இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்

🍁🍁 *திருவெம்பாவை பாசுரம் 20* 🍁🍁

🌾போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
🌾போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
🌾போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
🌾போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
🌾போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
🌾போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
🌾போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
🌾போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.

🙏ஜெய் ராஜேஸ்வரி🙏
🙏ஜெய் ஜெய் ராஜேஸ்வரி🙏

http://www.srividhyarajeshwari.com

https://www.facebook.com/srividhyarajeshwari/

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா 05/01/2022

🌷🙏🌷ஓம் ஸ்ரீ மாத்ரே நம :🌷🙏🌷

*03.01.2022 - திங்கள் - மார்கழி 19*

🍁🍁 *திருப்பாவை பாசுரம் 19* 🍁🍁

🌾 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
🌾 மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
🌾கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
🌾வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
🌾மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
🌾எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
🌾எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
🌾தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்

🍁🍁 *திருவெம்பாவை பாசுரம் 19* 🍁🍁

🌾உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
🌾அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
🌾எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
🌾எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
🌾எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
🌾கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
🌾இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
🌾எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

🙏ஜெய் ராஜேஸ்வரி🙏
🙏ஜெய் ஜெய் ராஜேஸ்வரி🙏

http://www.srividhyarajeshwari.com

https://www.facebook.com/srividhyarajeshwari/

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா 02/01/2022

🌷🙏🌷ஓம் ஸ்ரீ மாத்ரே நம :🌷🙏🌷

*02.01.2021 - ஞாயிறு - மார்கழி 18*

🍁🍁 *திருப்பாவை பாசுரம் 18* 🍁🍁

🌾 உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
🌾நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
🌾கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
🌾வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
🌾பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
🌾 பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட
🌾செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
🌾வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

🍁🍁 *திருவெம்பாவை பாசுரம் 18* 🍁🍁

🌾அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
🌾விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
🌾கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
🌾தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
🌾பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர்
🌾விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித்
🌾கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
🌾பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

🙏ஜெய் ராஜேஸ்வரி🙏
🙏ஜெய் ஜெய் ராஜேஸ்வரி🙏

http://www.srividhyarajeshwari.com

https://www.facebook.com/srividhyarajeshwari/

ஸ்ரீவித்யா

02/01/2022

*We are Live on FB.... Pls join and support*

https://fb.watch/agUWaBieK3/

Photos from Srividhya Devi Sri RajaRajeshwari Ambal Temple's post 01/01/2022

Videos (show all)

அருள்மிகு தேவி ஸ்ரீவித்யா ராஜா ராஜேஸ்வரி ஆலயத்தின் *6-வது புணரோத்தாரண ஜீர்ணோதாரண நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் – அழைப...

Telephone