ACJU - Udunuwara

Udunuwara Divisional Branch of All Ceylon Jamiyyathul Ulama, Sri Lanka

16/06/2024

🔸ஈதுல் அழ்ஹா உடைய தினத்தில் செய்ய வேண்டிய சுன்னத்தான அமல்கள்

🌐 https://acju.lk/phocadownloadpap/1445-Dhul%20Hijjah-eid%20sunnah.jpg

Photos from ACJU - Udunuwara's post 14/06/2024

🔸உழ்ஹிய்யா வழிகாட்டல்

🌐 https://acju.lk/phocadownloadpap/

Photos from ACJU - Udunuwara's post 14/06/2024

🔸துல் ஹிஜ்ஜஹ் வழிகாட்டல்

🌐 https://acju.lk/downloads-ta/download-posters-ta

10/06/2024

உழ்ஹிய்யா வழிகாட்டல் 2024

ACJU/FRL/2024/15/398
2024.06.10 (1445.12.03)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யா கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர். உழ்ஹிய்யா கொடுப்பது பற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் 'உமது இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.' (108: 02) என்று குறிப்பிட்டுள்ளான்.

இஸ்லாம் வழிகாட்டியுள்ள சகல நெறிமுறைகளையும் பேணி இவ்வணக்கத்தை நிறைவேற்றுவதோடு எமது நாட்டில் நடைமுறையிலுள்ள விலங்குச் சட்டம் (Animal Act No. 29 of 1958) கூறும் விடயங்களையும் கட்டாயம் கவனத்திற் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வேண்டிக் கொள்கின்றது.

ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க வேண்டும் என்பது மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில், ஒட்டகம் கிடைக்கப்பெறாமையினால் ஆடு அல்லது மாட்டையே உழ்ஹிய்யாவாகக் கொடுக்க முடியும். அவையல்லாத எதுவும் உழ்ஹிய்யாவாக நிறைவேற மாட்டாது. இது பற்றிய ஜம்இய்யாவின் வழிகாட்டல் இவ்விணைப்பில் காணப்படுகின்றது.

https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1734-2019-08-05-11-45-09

உழ்ஹிய்யாவுடைய அமல்களை நிறைவேற்றுவோர் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:

1. உழ்ஹிய்யா கொடுக்க எண்ணமுள்ளவர்கள் துல்ஹஜ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உடல் உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும் தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.

2. ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்குத் தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13 ஆம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.

3. ஓர் ஒட்டகம் அல்லது ஒரு மாட்டில் ஏழு நபர்கள் மாத்திரமே கூட்டுச்சேர முடியும். ஏழு நபர்கள் இணைந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஒட்டகத்தையோ உழ்ஹிய்யாவாக நிறைவேற்றுவதை விட, தனித்தனியாக ஒவ்வொருவரும், ஓர் ஆட்டை அல்லது ஒரு மாட்டை அவரவர் வசதிக்கேற்ப உழ்ஹிய்யா கொடுப்பது ஏற்றமானதாகும். குடும்பத்திலுள்ள பொறுப்பாளர் ஓர் ஆட்டை அல்லது மாடு, ஒட்டகத்திலிருந்து ஏழிலொரு பங்கை உழ்ஹிய்யாவாக கொடுப்பது தன் குடும்பம் சார்பாக போதுமாகி விடும். என்றாலும் தனித்தனியாக கொடுப்பது சிறந்ததாகும். இச்சிறப்பினை அடைந்து கொள்ள ஒவ்வொருவரும் தனது சக்திக்கேற்ப முயற்சிக்க வேண்டும்.

4. பலர் ஒன்றுசேர்ந்து கூட்டாக உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் போது பேணப்பட வேண்டிய ஒழுங்குகள் பற்றிய ஜம்இய்யாவின் வழிகாட்டல் இவ்விணைப்பில் காணப்படுகின்றது. அவற்றை சரிவர பின்பற்றி செயற்படல் வேண்டும்.

https://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1380-2018-08-17-12-38-25

5. நம் நாட்டின் சட்டத்தை கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டின் அல்லது ஆட்டின் விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

6. அனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும், அனுமதி பெற்றதை விட கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்துகொள்ள வேண்டும்.

7. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையையும் கொடுப்பது கூடாது.

8. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்படல் வேண்டும்.

9. உழ்ஹிய்யாவுக்குரிய பிராணிகள் அதனது இறைச்சியை குறைக்கக்கூடிய வகையில் இருக்கக்கூடிய குறைகளை விட்டும் நீங்கியிருத்தல் வேண்டும்.

10. அறுப்பதற்காகப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி, கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.

11. உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை ஒன்றுக்கு முன் ஒன்றைக் கிடத்தி அறுக்கக் கூடாது.

12. குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்களை அகற்றும் போது சுகாதார விதிமுறைகளைப் பேணிக் கொள்ள வேண்டும்.

13. அறுவைக்காகப் பயன்படுத்திய இடத்தில் கிருமி நாசினிகளைத் தெளித்து சுத்தத்தை உத்தரவாதப்படுத்தல் வேண்டும்.

14. பல்லின மக்களோடு வாழும் நாம் பிறமத சமூகத்தவர்களின் உணர்வுகள் தூண்டப்படும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது.

15. உழ்ஹிய்யாவுக்காக அறுப்புப் பிராணிகளை வைத்திருக்கும் போதும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் போதும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றியதன் பின்னரும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் அவற்றைப் பகிர்ந்து கொள்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிவாயல் இமாம்கள், கதீப்மார்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும் அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும் ஒழுங்கு முறைகளையும் தெளிவுபடுத்துவதோடு பல்லின மக்கள் வாழ்கின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித்
பதில் செயலாளர் - ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

🔸உழ்ஹிய்யா வழிகாட்டல் - 2024

🌐 https://acju.lk/news-ta/acju-news-ta/3300-acju-fatwa

Photos from All Ceylon Jamiyyathul Ulama - ACJU's post 08/05/2024
02/04/2024

◼️ ஜம்இய்யாவின் பத்வா பிரிவு வழங்கும் ஸகாத் வழிகாட்டல் - 06

16/03/2024

◾️ரமழானில் அல்-குர்ஆனை விளங்கி அமல் செய்வோம்

09/03/2024

2024 ரமழான் மாதத்தில் அமல்களை சிறந்த முறையில் மேற்கொள்வதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள அமல்களின் அட்டவணை கீழுள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு:
https://drive.google.com/file/d/1d6ARC6y_kwLj5LKi_48f8rliaoLhinPe/view?usp=sharing

08/03/2024

2024 ரமழான் மாதத்தினை முன்னிட்டு சிறுவர்களை அமல்களின் பால் ஆர்வப்படுத்தும் முகமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குர்ஆன் மத்ரஸா பிரிவினால் 'சிறுவர்களுக்கான ரமழான் மாத அமல்களின் அட்டவணை' ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

கீழ்வரும் இணைப்பிற்கு சென்று குறித்த அட்டவணையினை பதிவிறக்கம் செய்து இந்த ரமழானில் குழந்தைகளை அமல்களில் ஆர்வமுள்ளவர்களாக மாற்ற வழிகாட்டுமாறு பெற்றோருக்கும், மத்ரஸா முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது.

இணைப்பு:
https://drive.google.com/file/d/1BrVtlbWV9TXDh0mIPCN5ayU_dlEPPT-3/view?usp=sharing

17/02/2024

76th Independence Day Celebrations of Sri Lanka 🇱🇰
ශ්‍රී ලංකාවේ 76 වන නිදහස් දින සැමරුම
இலங்கையின் 76 வது சுதந்திர தின விழா

At Udunuwara Jummah Masjid, Ambarapola

09/02/2024

◾️ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் மதியம் 1.00 மணிக்குள் நிறைவு செய்வது சம்பந்தமாக.

Photos from ACJU - Udunuwara's post 07/02/2024

76th Independence Day Celebrations of Sri Lanka 🇱🇰
ශ්‍රී ලංකාවේ 76 වන නිදහස් දින සැමරුම
இலங்கையின் 76 வது சுதந்திர தின விழா

At Udunuwara Jummah Masjid, Ambarapola

Org. by: ACJU - Udunuwara

Find captions below each highlight

03/02/2024
19/05/2023

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவு வழங்கும்
ஹஜ் வழிகாட்டல்கள் - 02

ஹஜ் கடமையாகுவதற்குரிய நிபந்தனைகள்

1️⃣ முஸ்லிமாக இருத்தல்
2️⃣ சுதந்திரமானவராக இருத்தல்
3️⃣ பருவ வயதை அடைந்திருத்தல்
4️⃣ ஹஜ் செய்வதற்காக செல்லும் பாதை பாதுகாப்பானதாக இருத்தல்
5️⃣ ஹஜ் செய்வதற்காக சென்று வருவதற்குத் தேவையான வாகன வசதியைப் பெற்றிருத்தல். ஹஜ் செய்வதற்காக சென்று வரும் வரை அவருடைய பராமரிப்பில் உள்ளவர்களுக்குத் தேவையான செலவினம் மற்றும் அவர் மீது கடன் இருந்தால் அதை நிறைவேற்றுவ தற்கான தொகை உட்பட ஹஜ்ஜுக்குச் சென்று வருவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றிருத்தல்.

20/04/2023

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவு வழங்கும்

ரமழான் சிந்தனை - 27

நோன்பாளியை தூய்மைப்படுத்தும் ஸகாத்துல் பித்ர்

عنِ ابنِ عباس قال: فرض رسولُ اللهِ زكاة الفطر طهرة للصَّائِمِ مِنَ اللَّعْوِ والرَّفثِ وطعمة للمساكين (سنن ابن ماجه - 1817)

நோன்பாளியின் (நோன்பின் போது ஏற்பட்ட) வீணான செயல்கள், முறையற்ற பேச்சுகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தவும் ஏழைகளுக்கு உணவாக அமைய வேண்டும் என்பதற்காகவும் ஸகாத்துல் பித்ரை நபியவர்கள் கடமையாக்கினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: சுனன் இப்னு மாஜா - 1817)

ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றுவது சம்பந்தமான சில வழிகாட்டல்கள் - ACJU 20/04/2023

ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றுவது சம்பந்தமான சில வழிகாட்டல்கள் - ACJU 2023.04.20 (1444.09.28) அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு 1. ஸகாத்துல் ஃபித்ர் என்பது ரமழான் மாதம் முடிந்து ஷவ்.....

27/03/2023

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவு வழங்கும்
ரமழான் சிந்தனை - 04

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு
திறக்கும் போது பின்வரும் துஆவை ஓதக்கூடியவர்களாக
இருந்தார்கள்:

ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله

தாகம் தீர்ந்தது; நரம்புகள் நனைந்து விட்டன; இன்ஷா அல்லாஹ்
கூலி உறுதியாகிவிட்டது.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு
(நூல்: அபூ தாவூத்: 2357)

மேலும், பின்வரும் துஆவையும் ஓதுவது முஸ்தஹப் என மார்க்க
அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

اللهم لك صمت وعلى رزقك أفطرت
யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு நோற்றேன்
உனது ஆகாரத்தின் மூலமே நோன்பு திறந்தேன்.

15/03/2023

🔅 ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பான வழிகாட்டல்

08/02/2023

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி
🇱🇰 🇹🇷 🇸🇾 🇱🇰 🇹🇷 🇸🇾 🇱🇰 🇹🇷 🇸🇾 🇱🇰 🇹🇷 🇸🇾 🇱🇰 🇹🇷 🇸🇾 🇱🇰 🇹🇷 🇸🇾

2023.02.06 ஆம் திகதி துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் மற்றும் பேரழிவுகளுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் கூடிய விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதற்கான தைரியத்தையும் மன வலிமையையும் அல்லாஹு தஆலா அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம். 🤲

அல்லாஹு தஆலா அப்பகுதி வாழ் மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்து சந்தோஷத்தையும் முழுமையான சுதந்திரத்தையும் அம்மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உளமாரப் பிரார்த்தனை செய்கிறோம். 🤲

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிய முன்வருமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.

Condolence message of ACJU for those affected by the earthquake in Turkey and Syria

https://acju.lk/en/news/acju-news/2856-earthquake-in-turkey-and-syria-eng

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

https://acju.lk/news-ta/acju-news-ta/2857-earthquake-in-turkey-syria

Profile pictures 17/12/2022

All Ceylon Jamiyyathul Ulama - 100 Years of Service
serving humanity since 1924

Remembering the services of Ulama
on 19th of January 2023

Please include in your precious Dua

Photos from ACJU - Udunuwara's post 19/09/2022

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை - கண்டி மாவட்டக் கிளையின் வழிகாட்டலில் உடுநுவரைக் கிளையின் சமூக சேவைப் பிரிவினால் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கெலிஓய, கலுகமுவ பகுதியைச் சேர்ந்த 14 குடும்பங்களுக்கான அடிப்படை மற்றும் வாழ்வாதார உதவிகளைச் செய்யும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (2022.09.10) நடைபெற்றது

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை - கண்டி மாவட்ட நிறைவேற்றுக் குழு, உடுநுவர கிளை உறுப்பினர்கள் மற்றும் கலுகமுவ மஸ்ஜிதுல் ஹுதா நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

30/07/2022

🌙 ACJU Hilaal Calender - Muharram 1444
🌙 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறை நாட்காட்டி - முஹர்ரம் 1444
🌙 සමස්ත ලංකා ඉස්ලාම් ආගමික විද්වතුන්ගේ සභාවෙහි චන්ද්‍ර දින දර්ශනය - මුහර්රම් 1444

Mobile uploads 09/07/2022
Timeline photos 30/06/2022
Want your organization to be the top-listed Non Profit Organization in Kandy?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

76th Independence Day Celebrations of Sri Lanka 🇱🇰 ශ්‍රී ලංකාවේ 76 වන නිදහස් දින සැමරුම இலங்கையின் 76 வது சுதந்திர தின வ...

Telephone

Address

Daskara, Muruthagahamula
Kandy

Other Kandy non profit organizations (show all)
Kandy School Students' Association Kandy School Students' Association
Kandy, 20000

මහනුවර පාසල් ශිෂ්‍ය සංගමය විසින් සිද?

55th Kandy Senkadagala Reveille Open Scout Group 55th Kandy Senkadagala Reveille Open Scout Group
Kandy, 20000

Scouts Creating a better world

ANC Student Council : Kandy ANC Student Council : Kandy
322 Peradeniya Road
Kandy, 20000

The Official page for the ANC Branch Campus Kandy Student Council

Kandy Leisure Kandy Leisure
Kandy, 20000

One Family Srilanka Youth Club Kandy One Family Srilanka Youth Club Kandy
D . S. Senanayake Strwet
Kandy, 20000

We Are Srilankans

Kandy City Mission Kandy City Mission
125, D. S. Senanayake Street
Kandy, 20000

Kandy City Mission is a Christian Charity Organisation based in Kandy, Sri Lanka.

Open.Gov Project Open.Gov Project
Kandy

enabling citizen and government communication

Odex.lk Odex.lk
Kandy, 20650

Learn from the Future Let's Your Future Begins with Us Sri Lanka's Largest Online Education Center

HOPE - Wings for wounded souls HOPE - Wings for wounded souls
Kandy

�"HOPE" is a bond that built up on the humanity and the kindness.

Nippon origami institute - srilanka Nippon origami institute - srilanka
No 540 Pallegama Ampitiya
Kandy, 20000

Rotary Club of Kandy Heritage Rotary Club of Kandy Heritage
Kandy

***The Official page of Rotary club of Kandy Heritage District 3220*** RC Kandy Heritage is the first ever Rotary Club that obtained 100% PHF status at the time of its Cha...

98 GROUP CLUB PCC 98 GROUP CLUB PCC
පිලිමතලාව
Kandy

පිලිමතලාව ජාතික පාසැල් 98 සාමාන්‍ය පෙල සදහා මුහුන දුන් සිසුන්