Naws Mhd

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Naws Mhd, Business, Kandy.

Photos from Naws Mhd's post 21/10/2023

பாதை விதிமுறை பலகை சில...

31/12/2021
06/07/2021

ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு..!

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (05) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிறுமி ஒருவரை இணையத்தில் பாலியல் விற்பனைக்கு விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் இதை சுட்டிக்காட்டியிருந்தார்.

விசாரணைக்கு இடையில், பாடசாலைகள் ஆரம்பிக்கும் வரை குழந்தைகள் ஆபாச வலைத்தளங்களை அணுகுவதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யுமாறு சி.ஐ.டி மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்திடம் நீதவான் கோரிக்கை விடுத்தார்.

கைப்பேசிகள் அல்லது கணினிகள் குழந்தைகளின் கைகளுக்கு கிடைப்பதை தடுக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய நீதவான் பெற்றோர்கள் பணிக்காக வீட்டிலிருந்து சென்றிருக்கும் போது குழந்தைகள் இந்த சாதனங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.

இதுபோன்ற சூழ்நிலையில், குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகலாம் என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.ஐ.டி மற்றும் சிறுவர்கள் பணியகத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

04/07/2021

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன

குறித்த சுகாதார வழிகாட்டல்கள் நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அமுலாகவுள்ளன.

இந்த சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவெளியிட்டுள்ளார்

01.பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க, ஆசன கொள்ளளவில் 50 சதவீதமானோருக்கு மாத்திரமே அனுமதி

02.மேல் மாகாணத்தில் இந்த எண்ணிக்கை 30 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

03.தனியார் / வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கேற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

04.ஆடைத்தொழிற்சாலைகள் உட்பட ஏனைய தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி

05.அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களைக்கொண்டு இயங்க அனுமதி.

06.சேவை அவசியத்துக்கு ஏற்ப, கடமைக்கு அழைக்கப்படக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவன பிரதானி தீர்மானிக்கலாம்.

07.வீட்டிலிருந்து பணியாற்றக்கூடியவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவது சிறந் ததாகும்.

08.திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி இல்லை. இருப்பினும் மணமகன் மற்றும் மணமகள் உட்பட ஆகக்கூடியது 10 பேரை மாத்திரம் கொண்டு பதிவு திரு மணத்தை நடத்தலாம்.

09.கொரோனா தொற்று இல்லாமல் ஒருவர் உயிரிழந்தால், சடலத்தைப் பொறுப்பேற்று 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்குகளை முன்னெடுக்க வேண்டும், இறுதிக் கிரியைகளில் 15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்

10.வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் அடகுப்பிடிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி, இச்சந்தர்ப்பத்தில் ஒரே தடவையில் மொத்தமாக 10 வாடிக்கையாளர்கள் மாத்திரமே சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

12.வீட்டில் இடம்பெறும் விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

13.மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

14.சமூக களியாட்ட விடுதிகளுடனான மதுபான சாலைகள், இரவு நேரக் களியாட்ட விடுதிகள், சூதாட்ட மற்றும் பந்தய நிலையங்கள் என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

15.சிறப்பங்காடிகள் மற்றும் ஆடை விற்பனை நிலையங்களில், அவற்றின் மொத்த இடப்பரப்பில் 25 சதவீதமான அளவு வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே ஒரே தட வையில் அனுமதி.

16.விற்பனை நிலையங்களை சுகாதார வழிமுறைகளுக்கமைய, திறக்க முடியும். ஒரே தடவையில் 3 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே உள்நுழைய முடியும்.

17.உடற்பிடிப்பு நிலையங்களை (ஸ்பா) திறப்பதற்கு அனுமதி.

18.சிகையலங்கார நிலையங்களில் சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பணிகளை முன்னெடுக்க முடியும்.

19.சிறைச்சாலை, முதியோர் மற்றும் சிறுவர் விடுதிகளுக்குச் செல்ல பார்வை யாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

20.திரையரங்குகள் மற்றும் நூதன சாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

03/07/2021

திருகோணமலையிலும் தடம் பதித்தது டெல்டா…! இலங்கையில் மேலும் 13 பேருக்கு தொற்றுறுதி!

இந்தியாவின் கொடிய 'டெல்டா' வகை திரிபுபெற்ற வைரஸ் பாதிப்புடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்டு வருபவர்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில் திருகோணமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தீவிரமாக பரவிவரும் டெல்டா திரிபு தொற்றாளர்கள் கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, கொழும்பு தெமட்டகொட பகுதியில் டெல்டா திரிபுடைய 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், புதிதாக டெல்டா திரிபுடைய 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photos from Naws Mhd's post 03/07/2021

துவிச்சக்கரவண்டியில் சென்றவர்
லொறி மோதி மரணம் - சாரதி தப்பியோட்டம்
அட்டாளைச்சேனையில் சம்பவம்

எஸ் ஜே புஹாது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவமானது வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த மண்லொறி பிரதான வீதியால் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதி தப்பிச் சென்றுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தின் சிசிடிவி காட்சியும் தற்போது பெறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி சென்ற சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

03/07/2021

மகிந்த பசிலுடன் ஜனாதிபதி விசேட பேச்சுவார்த்தை

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில்ராஜபக்சவிற்கிடையில் இன்று விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய பல மாற்றங்கள் பசில்ராஜபக்சவிற்கான அமைச்சர் பதவி குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Want your business to be the top-listed Business in Kandy?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Kandy

Other Business in Kandy (show all)
Kings Court Reception Hall Kings Court Reception Hall
32/2/5th Mile Post (Kings Court) Ambatenna
Kandy

The Kings court Reception Hall is one of the most affordable and elegant facilities available in Amb

LEE'S Mobile & Accessories LEE'S Mobile & Accessories
Kandy
Kandy, 2000

Wifimart.lk Wifimart.lk
Katugastota Road, Katugastota
Kandy, 20800

ENJOY WIFI HOTSPOT, ROUTER,TELECOMMUNICATIONS & SMART WATCHES ITEMS IN LOW PRICES..

Mamico Mobile Corner Mamico Mobile Corner
No 36 Reservoir Road-kandy
Kandy, 20000

Maxima Auto Sale Maxima Auto Sale
384, Kandy Road, Bothalapitya, Gampola
Kandy

Kortingen NL Kortingen NL
N0 6, Bodhiyangana Mawatha
Kandy

if you are looking for a reasonable and awesome photographer, you are at the right place. :)

IBuy Petti Kade IBuy Petti Kade
40/10
Kandy, 20000

I can order anything for you and i have items as well.

Shalwar plaza Shalwar plaza
Kandy
Kandy, 20000

Wholsale shalwars, catalogs Kids dress Bedsheets House hold items u can get from us for best rate

Ikman Shop Ikman Shop
Ground Place, Hanthana
Kandy, 20000

Yellow  PLANs Yellow PLANs
104/3, Kotuwegedra Road, Hanguranketha
Kandy, 20710

LED KANDY LED KANDY
Gonogoda, Madawala
Kandy

[email protected]

Abacus_Spot Abacus_Spot
Sirimalwatte
Kandy, 20250

We Sell Future Gadgets ...!