I Plus Mobile Store

A+ Grade Imported iPhones 
Colombo ⦿ Kalmunai ⦿ Islandwide delivery

23/05/2020

நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும்.

ஈத் முபாரக்
வாழ்த்துக்கள்.

06/11/2019

மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிண்ணியாவில்...

மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிண்ணியாவில்...

01/11/2019

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் மு.கா. தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை. நன்றி வசந்தம் ரீ.வி

01/11/2019

மு.கா. தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து கிண்ணியாவில் நடைபெற்ற கூட்டத்தில் மு.கா. தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை. நன்றி சக்தி ரீ.வி.

01/11/2019

அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை

ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் மு.கா. தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை. நன்றி சக்தி ரீ.வி.

19/10/2019

THURUVAM NEWS: காணொளியின் உண்மைத்தன்மை என்ன?: சஜித் மேடையில் ரவூப் ஹக்கீம் விளக்கம்

காணொளியின் உண்மைத்தன்மை என்ன?: சஜித் மேடையில் ரவூப் ஹக்கீம் விளக்கம்

thuruvamnews.com

19/10/2019

THURUVAM NEWS: இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்: அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப

இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்: அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

thuruvamnews.com

17/10/2019

THURUVAM NEWS: உதுமாலெப்பை எங்களிடம் வருவதால் ‘சீரோ’ ஆகமாட்டார் ‘ஹீரோ’ ஆகுவார்: மீளிணைப்பு நிகழ்வில

உதுமாலெப்பை எங்களிடம் வருவதால் ‘சீரோ’ ஆகமாட்டார் ‘ஹீரோ’ ஆகுவார்: மீளிணைப்பு நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

thuruvamnews.com

15/10/2019

THURUVAM NEWS: இனவாதக் கும்பல்கள் சங்கமித்துள்ள மொட்டு அணியை மக்கள் நிராகரிக்க வேண்டும்: திருகோணமலை

இனவாதக் கும்பல்கள் சங்கமித்துள்ள மொட்டு அணியை மக்கள் நிராகரிக்க வேண்டும்: திருகோணமலையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

thuruvamnews.com

14/10/2019

அமைச்சர் ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதானது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்புவதற்கான திருகுதாளமே ; அமைச்சர் ரவூப் ஹக்கீம்

14/10/2019

இனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்: காத்தான்குடியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் காட்டம்

இனவாதிகளின் பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லாவினால் வாய்திறக்கவே முடியவில்லை. அவரே இப்போது இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறார் என்பதைவிட மிக மோசமான அரசியல் வங்குரோத்து நிலைமை இருக்கமுடியாது. இவர் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் காட்டமாகத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) காத்தான்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

இந்த ஜனாதிபதி தேர்தலில் காத்தான்குடி முக்கியமானதொரு பேசுபொருளாக இருக்கப் போகின்றது. ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முழுநாடும், ஏன் சர்வதேசமும் அவதானம் செலுத்தும் இடமாக காத்தான்குடி மாறியிருக்கிறது. இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், முழு சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் வேலையை இங்குள்ள அரசியல் பிரமுகர் செய்துகொண்டிருக்கிறார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், சமூகத்தின் மீதான நெருக்குவாரங்களை கவனத்திற்கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளைத் துறந்து, பலமானதொரு செய்தியை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் சொன்னோம். அரசியல் வேறுபாடுகளை மறந்து சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற சூழலில், தன்னையும் தனது சுயநலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முழு சமூகத்தையும் அடகுவைக்கின்ற வங்குரோத்து அரசியல் மிகவும் ஆபத்தானது.

அவருடைய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் மிகவும் பக்குவமாக நடந்துகொண்டன. அவரது பல்கலைக்கழக விவகாரத்துக்கும் டொக்டர் ஷாபியின் விவகாரத்துக்கும் நாங்கள் வித்தியாசம் பார்க்கவில்லை. இரண்டையும் இனவாத பிரச்சினைகளாகவே நோக்கினோம். அவரையும் பாதிக்காமல், சமூகத்தையும் பாதிக்கமால், இனவாதிகளுக்கு தீனியும்போடாமல் நாங்கள் மிக நேர்மையாகவும் பக்குவமாகவும் நடந்துகொண்டோம்.

முஸ்லிம்களின் வாக்குகளை பகல் கொள்ளையிட்டு எதிரணி வேட்பாளர்களின் காலடியில் கொண்டுபோய் கொட்டுவதை காத்தான்குடி மக்களோ அல்லது நாட்டு முஸ்லிம்களோ அனுமதிக்கமாட்டார்கள். நாங்கள் அமைச்சு பதவிகளைத் துறந்து, இனவாத நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்த ஹிஸ்புல்லாவுக்கு ஆறுதல் கொடுத்தோம். ஆனாலும், அவருடைய பக்குவமில்லாத செயற்பாடுகள் பிரச்சினைகளை மேலும் விஸ்வரூபமெடுக்க வைத்துள்ளது.

தாக்குதல் நடைபெற்ற பின்னர் ஹிஸ்புல்லா பள்ளிவாசல் ஒன்றுக்குள் வைத்து பக்குவமில்லாமல் பேசியதையும் அதனால் ஏற்பட்ட விபரீதங்களை எல்லோரும் அறிந்திருப்பீர்கள். கடந்த தேர்தலில் யாருடன் நின்றார், பின்னர் பின்கதவால் சென்று எப்படி தேசியப்பட்டியலை கொள்வனவு செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். அதன்பின்னர் நடந்தேறிய கூத்துக்களின் ஓர் அங்கமாக சர்ச்சைக்குரிய ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.

நான் என்ன சொன்னாலும் காத்தான்குடி மக்கள் கேட்பார்கள் என்ற இறுமாப்பில் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களை மக்கள் தற்போது அடையாளம் கண்டுள்ளனர். தனது எஜமானர்களின் கூலிப்படையாக இருந்துகொண்டு சமூகத்தை விலைபேசி விற்கின்ற பிற்போக்குத்தனமான அரசியல்வாதிகளை மக்கள் தூக்கிவீச வேண்டும். ஒரு வாக்கேணும் ஹிஸ்புல்லாவுக்கு அளிக்கப்படுவது துரோகத்தனத்துக்கு துணைபோவதாகும்.

கிராமப்புற சிங்கள மக்கள் மத்தியில், முஸ்லிம்களை வேறுபடுத்தி தூரப்படுத்திக்காட்டும் ஆபத்தான விளையாட்டை இப்போது அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். தன்னைத்தோனே ஜனாதிபதி என்று கூப்பாடுபோடும் அரசியல் கோமாளி மக்கள் இப்போது தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர். இப்படியானவர்களின் சுயரூபம் வெளுத்து, தனிநபர் அரசியல் விரைவில் முடிவுக்கு வரப்படும்.

ஊர் மக்களுக்காக போராடுகிறேன் என்று, அந்த ஊரையே படுகுழிக்குள் தள்ளவிடுகின்ற வேலையைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறார். வெளிச்சக்திகளுக்கு சோரம்போன ஒருசில முஸ்லிம் பெயர்தாங்களிகளின் செயற்பாடுகளினால் மனமுடைந்துபோயிருக்கும் இந்த மண்ணை இன்னுமொரு நெருக்கடிக்குள் தள்ளவிடுவதை நாம் அனுமதிக்க முடியாது. காத்தான்குடி என்பது முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் முளைவிட்ட மண். அதை பாதுகாப்பது எங்களின் கடமை.

ஜனாதிபதி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பாடம் கற்பிக்கவேண்டும் என்றால் அந்த வேலையை செய்திருக்கவேண்டியது நான்தான். முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதில் களமிறங்கியிருந்தால் அதற்கு ஓரளவுக்கு நியாயம் கற்பித்திருக்கலாம். ஆனால், அது பிரயோசனமற்ற வேலை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இந்நிலையில் தனது இருப்பை தக்கவைப்பதற்காக சமூகத்தை அடகுவைத்துள்ள வேட்பாளரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளரை தீர்மானிப்பதற்கு முன்னரே, சஜித் பிரேமதாசதான் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துவிட்டது. சஜித் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் இப்போது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக இருந்துகொண்டிருக்கிறது. சிறுபான்மை மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இவரைவிட சாத்தியமான வேறொரு வேட்பாளர் இல்லை.

பொதுத் தேர்தல் வருகின்றபோது முஸ்லிம் கட்சிகள் ஒன்றாக போட்டிட வேண்டும் என்று மக்கள் உற்சாகப்பட்டார்கள். அப்போதுதான் முஸ்லிம்களின் வலிமையை உறுதிப்படுத்த முடியும். காத்தான்குடியில் இருப்பவர்கள் தனிமனித அரசியலிருந்து விடுபட்டு இயக்க அரசியலுக்குள் வந்தாக வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகள் இயக்க அரசியலுக்குள் இருப்பதே பாதுகாப்பை பெற்றுத்தரும்.

முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் தேர்தல் காலங்களில் அடக்கிவாசிக்குமாறு எதிரணியினரால் பணிக்கப்பட்டுள்ளன. அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய இனவாத பாடகர் ஒருவர் இராஜினாமா செய்ததாக நாடகம் காட்டினார்கள். எங்களால் மாத்திரம்தான் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் என்ற இறுமாப்பில் இருப்பவர்கள் ஆட்சி, எவ்வளவு அடக்குமுறையாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

ஏப்ரல் 21 தாக்குதல் நடந்தவுடனேயே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு நாட்டை பாதுகாப்பதற்கு தயார் என்று கோத்தாபய அறிவித்திருந்தார். நாட்டில் அச்சமும் பீதியும் நிலைத்திருப்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு மொட்டு அணியினர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் அச்சமும் பீதியும் நீங்கவேண்டும் என்றால், சிறுபான்மையினர் முதலில் பீதியில் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும். வாக்களிக்காமல் விடுவது அதைவிட பிழையான செயற்பாடாகும்.

சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் குறித்து சஜித் பிரேமதாச கவனத்திற்கொள்ளவில்லை என்று சிலர் பேசுகின்றனர். அதற்கான உத்தரவாதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையாகும். அவருடனான எனது உறவின் அடிப்படையில் எனது தெரிவு மிகவும் பக்குவமானது. சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கும் உத்தரவாத்தை காரணம்காட்டி, கிராமப்புற மக்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கு எதிரணி தயாராக இருக்கின்றது. இந்த விவகாரத்தை நாங்கள் மிகுந்த தூரநோக்குடன் சாணக்கியமாக கையாள வேண்டும்.

இலங்கை, தென்னிந்தியா மற்றும் மாலைதீவைச் சேர்ந்த முஸ்லிம்களை ஒன்றிணைத்து வலையமைப்பு ஒன்றை நான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். முஸ்லிம்கள் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு இது மிகப்பெரிய அரணாக இருக்கும். எதிர்காலத்தில் வருகின்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு நாம் என்றும் தயார்நிலையில் இருக்கவேண்டும். நாடுகடந்த வலைப்பின்னலின் ஊடாகத்தான் எங்களது பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும் என்றார்.

03/10/2019

ஈரான் தூதுவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

இலங்கைக்கான ஈரானிய இஸ்லாமிய குடியரசின் தூதுவர் முஹம்மத் ஸய்ரி அமிரானி இன்று (03) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்து, நீர் வழங்கல், நிர்ப்பாசன செயற்திட்டங்கள் மற்றும் உயர்கல்வி தொடர்பில் கலந்துரையாடினார்.

03/10/2019

பிரான்ஸ் தூதுவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் எரிக் லவெர்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று வியாழக்கிழமை (3) அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

நீர் வழங்கல், கழிவு நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் பிரான்ஸ் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி குறிப்பிட்ட அந்நாட்டு தூதுவர் நவீனமயமாக்கல் பற்றியும் நிபுணத்துவத்தை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் தெரிவித்தார்.

இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் நீர் முகாமைத்துவம், நீரியல் தொடர்பான பாடநெறிகளின் ஊடாக பிரான்ஸ் நாட்டு மாணவர்களும் நன்மையடைவதற்கான வழிவகைகள் பற்றியும் பேசப்பட்டது.

பிரான்ஸ் நாட்டு அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் நீர்கொழும்பு, காலி உனவட்டுன, களனி பேலியகொட, யாழ்ப்பாணம், அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் கழிவுநீர், முகாமைத்துவ செயற்திட்டங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதரகத்தின் பொருளாதார ஆலோசகர் ஹேர்வே சர்னலியும் கலந்துகொண்டனர்.

03/10/2019

மு.கா. சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

தந்தைக்கு அஷ்ரப் ஆதரவளித்தது போன்று எனக்கு ஹக்கீம் ஒத்துழைப்பதை மதிக்கிறேன். மு.கா.வினருடனான சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

02/10/2019

சர்வதேச விவகாரங்களுக்கான தேசிய ஜனநாயக நிறுவன பிரதிநிதிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சந்திப்பு

தேர்தலுக்கு முந்திய மதிப்பீட்டை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள அமெரிக்க வொஷிங்டன் நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் சர்வதேச விவகாரங்களுக்கான தேசிய ஜனநாயக நிறுவனத்தின் தூதுவர் கார்ல் இன்டர்பேத் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று புதன்கிழமை (02) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கையில் தேர்தல்களின்போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்து இதன்போது நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். பாயிஸும் கலந்துகொண்டார்.

02/10/2019

எனது தந்தைக்கு அஷ்ரஃப் ஆதரவளித்ததுபோல எனக்கு ரவூப் ஹக்கீம் ஆதரவளிக்க முன்வந்திருப்பதை பெரிதும் மதிக்கிறேன்: அமைச்சர் சஜித் பிரேமதாச

எனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியதுபோல, தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தனது வெற்றியை முன்னிட்டு ஆதரவு வழங்குவதை பெரிதும் மதிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (02) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட சந்தித்து ஒன்றரை மணி நேரமாக கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது படையினர் நிலைகொண்டுள்ள மற்றும் வனபரிபால திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வட, கிழக்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் வட மாகாண முஸ்லிம்களின் நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

புத்தளத்தில் உக்கிரமடைந்துள்ள அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இங்கு எடுத்துரைக்கப்பட்டதுடன், முஸ்லிம்களுடைய பாதுகாப்பை உரியமுறையில் உத்தரவாதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் குடியிருப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. கல்முனை விவகாரம் குறித்தும், பொதுவாக நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதிநிதிகளாலும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

இவற்றுக்கு பதிலளிக்கும்போது ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியதாவது;

அரசியல் மற்றும் பூகோள ரீதியில் நெருக்கடிகளுக்குள்ளாகியிருக்கும் இலங்கையை உன்னத நிலைக்கு கொண்டுவருதில் நான் கூடுதல் கவனம் செலுத்துவேன். நாட்டுப் பிரஜைகளான பௌத்தர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் எனது நம்பகத்தன்மை பற்றி கிஞ்சித்தும் சந்தேகிக்கவோ அதுபற்றி இருமுறை சிந்திக்கவோ தேவையில்லை.

தீவிரவாதத்தை நான் ஆதரிப்பவனல்ல. ஆனால், அளுத்கம, அம்பாறை மற்றும் திகன முதலான சம்பவங்கள் ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்கு வழிகோலியுள்ளதாக நம்பப்படுகின்றது.

மேலும், குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியின் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த தீய சக்திகள் செயற்பட்டுள்ளன.

உண்மையான, நேர்மையான பௌத்தராக எனது தந்தை என்னை வளர்த்ததால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளேன் என்றேர்.

01/10/2019

உயர் கல்வி, நீர் வழங்கல், சுகநல பாதுகாப்பு தொடர்பில் மாலைதீவு தூதுவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சு

மாலைதீவு தூதுவர் உமர் அப்துல் ரஸ்ஸாக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று (01) உயர் கல்வி அமைச்சில் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான உயர் கல்வி, நீர் வழங்கல் மற்றும் சுகநல பாதுகாப்பு முதலான விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினர்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கை பல்கலைக்கழகங்களில் சந்தர்ப்பமளிக்கும் வரைமுறைகளுக்கு அமைவாக மாலைதீவு மாணவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்க கலந்தாலோசிக்கப்பட்டன.

மேலும், இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களில் மருத்துவம், சட்டம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் முதலான துறைகளில் அடிப்படை தகைமைகளை பெற்ற மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி கற்கை நெறிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

மாலைதீவு அரசாங்கம் இலங்கை பல்கலைக்கழக கிளையை அமைப்பதற்கு அந்நாட்டில் ஒரு தீவை வழங்க முன்வந்துள்ள நிலையில், இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்களின் கிளையை மாலைதீவில் அமைப்பதற்காக இரு நாடுகளினதும் துறைசார்ந்த உயரதிகாரிகளை கொண்ட ஒரு குழுவை அமைத்து அதற்கான நடவடிக்கைகளை சட்டபூர்வமாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இலங்கையும் மாலைதீவும் இத்துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக அமைச்சரவைத் தீர்மானங்களுக்கு அமைவாக ஏற்கனவே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதுதவிர நீர் வழங்கல், சுகநல பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு முதலான விடயங்களில் இரு நாடுகளுக்கிடையிலான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, அமைச்சின் மேலதிக செயலாளர் எல். மங்கலிகா, இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம். குணரத்ன, அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர் மற்றும் மன்சூர் ஏ. காதிர் உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

29/09/2019

குருநாகலில் நடைபெற்ற நிகழ்வில்...

குருநாகலில் நடைபெற்ற நிகழ்வில்...

29/09/2019

152 மில்லியன் ரூபா செலவில் அபுக்காகம குடிநீர் வழங்கல் திட்டம் திறப்பு

குருநாகல் மாவட்டத்தில் அபுக்காகம குடிநீர் வழங்கல் திட்டத்தை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நேற்று (28) பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைத்தார். நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் 152 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் சுமார் 1000 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

29/09/2019

முஸ்லிம் சமூகம் அபிவிருத்தியை விட நிம்மதியையே எதிர்பார்க்கின்றது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

அபிவிருத்தியை விட நிம்மதியான வாழ்க்கையையே இன்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது. சீர்குழைந்துள்ள இயல்பு வாழ்க்கையை மீட்டிக்கொள்வதற்கான தருணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட பன்னவ சந்தி – லோலன்வௌ வரையிலான வீதி மற்றும் பன்னவ கிராமிய குடிநீர் திட்டம் ஆகியவற்றை மக்கள் பாவனைக்காக நேற்று சனிக்கிழமை (28) திறந்துவைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எங்களது தெரிவு தொடர்பில் குழப்பங்கள் இருந்தால், எமது தீர்மானம் எந்த விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று ஆராயவேண்டும். அந்த தெரிவு முஸ்லிம்களைப் பொறுத்தவரை தனிநபர்களைப் பொறுத்த விடயமல்ல. சமூகம் சார்ந்த முடிவுகளையே நாங்கள் எடுத்தாக வேண்டியிருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தை நாட்டிலுள்ள ஏனைய சமூகங்கள் அச்சத்தோடும் சந்தேகத்தோடும் பார்க்கின்ற ஒரு நிலவரத்தை உருவாக்குவதற்கு சில சக்திகள் திட்டமிட்டு செயற்பட்டன. இதன் விளைவாக நாங்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இனியும் இந்தமாதிரியான நெருக்கடிகள் வரமாட்டாது என்பதற்கு எங்களுக்கு எவ்வித உத்தரவாதங்களும் இல்லை. இப்படியானதொரு சூழலில்தான் நாங்கள் தீர்மானமிக்க இன்னுமொரு தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளோம்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த பேராபத்துதான் எங்களது மனதில் நிலைத்திருக்கும். அதேமாதிரியான ஒரு பயங்கரவாதத்தையே ஒக்டோபர் 26ஆம் திகதி இந்த நாட்டில் நடத்தினார்கள். அதுவும் ஒருவிதமான பயங்கரவாதம்தான். அதில் உயிர்கள் கொலை செய்யப்படுவது ஒருபுறமிருக்க, நாட்டின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது. இப்படியான அட்டகாசங்கள் நடந்ததை நாங்கள் மறந்துவிட முடியாது.

நான் 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள் நடத்திய அட்டாகசத்தை நான் வேறெந்த நாளும் கண்டதில்லை. பாராளுமன்றத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகள் நடந்தாலும், இப்படியொரு ஜனநாயக மீறல் அட்டூழியம் நிகழ்ந்ததை யாரும் பார்க்கவில்லை.

நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இருந்த காரணத்தினால் நாங்கள் எல்லோரும் தைரியமாக வாதாடி, சட்டவிரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தோம். பதவியிலிருக்கும் ஜனாதிபதியின் தற்துணிவைப் பாவித்து, பின்கதவால் ஆட்சியை பறிக்க வந்தவர்கள், இப்போது முன்கதவால் ஆட்சியைத் தாருங்கள் என்று உங்கள் முன் வந்திருக்கிறார்கள். இவர்களை நாங்கள் தெளிவாக அடையாளம்காண வேண்டும்.

இந்த அரசாங்கம் செய்தது போதாது. அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகள், ஊழல்கள் என்று பல கதைகள் வந்தாலும், எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக இருப்பது நாட்டின் பாதுகாப்பு. இதைத்தான் எல்லோரும் தேர்தலில் தூக்கிப் பிடிப்பார்கள். பயங்கரவாத்தை இனி தலைதூக்க விடமாட்டோம். எல்லோரும் புதர்களுக்குப் பின்னாலும் பிசாசைப் பார்ப்பதுபோல் மாறிவிட்டது. அதிலும் முஸ்லிம் சமூகத்துக்குள்தான் ஒழிந்து கொண்டிருக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பயங்கரவாத கும்பலை கூலிக்கமர்த்திய சக்திகள் யார் என்பதையும் நாங்கள் அடையாளம் காணவேண்டும். இது வெளியிலிருந்து கூலிக்கு அமர்த்தப்பட்ட ஒரு கும்பல். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. ஆனால், நாங்கள் எங்களுக்குள் ஒரு சுயவிமர்சனம் செய்து இனிமேல் இதுபோன்ற விடயங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வதற்கு மற்றவர்களைவிட நாங்கள் உசாராக இருக்க வேண்டும்.

இப்படியான சூழலில் எங்களுடைய வேட்பாளர் தெரிவில் நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும். எங்களால் மட்டும்தான் ஒழுக்கத்தையும், புதுவிதமான அரசியல் கலாசாரத்தையும் உருவாக்க முடியும். நாங்கள்தான் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்று சொல்லிக்கொண்டு திரிகின்ற ஆட்களினால் அவற்றை செய்ய முடியாது. நாங்கள் பீதியும் பயமும் உள்ளதொரு வாழ்க்கைக்கு மீண்டும் செல்லமுடியாது.

தற்போதைய அரசாங்கத்திலும் எங்களுக்கு பெரியதொரு நிம்மதி இருக்கவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அளுத்கம, பேருவளை சம்பவங்களை காரணம்காட்டி அரசாங்கத்தை மாற்றினோம். ஆனால், திகன, கண்டி, அம்பாறை, குருநாகல், புத்தளம் போன்ற இடங்களில் அடி வாங்கினோம். இந்த அரசாங்கம் தொடர்பில் திருப்திப்படுவதற்கு எங்களுக்கு எந்த விடயங்களும் இல்லை.

எங்களது அமைச்சர்கள் எல்லோருமாக ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்துதான், எங்களுக்கு எதிரான அர்த்தமில்லாத பழிகளை ஓரளவுக்கு சமாளித்தோம். எங்களுக்கெதிராக மீண்டும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த இனவாதிகளிடமிருந்து எமது சமூகத்தை காப்பாற்றுவதற்காகவே நாங்கள் கூட்டாக பதவிகளைத் துறந்தோம்.

எங்களுக்கு இந்த அரசாங்கத்திலிருந்த நம்பிக்கை போய்விட்டது. ஆனால், ஒரு குழுவாக இருந்து சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு நிறைய படிப்பினையை நாங்கள் படித்திருக்கிறோம். இவ்வளவு அராஜகம் செய்த கும்பல் இப்போது எந்த தரப்பிலிருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் இதையெல்லாம் அலசி ஆராய்ந்த பின்னர்தான் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

முன்னைய யுகங்களைவிட பல மடங்கு துன்பங்களை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். ஆனால், கடந்த ஒரு வருட காலமாக அனுபவித்த கஷ்டங்களுக்குப் பின்னாலிருக்கும் சக்திகள் ஆட்சிமாற்றத்தை கொண்டுவருவதற்கு திட்டம்போட்டு செய்த சதிகளில் நாங்கள் எல்லோரும் மாட்டிக்கொண்டோம்.

சமூகத்துக்கு இதுவரை காலமும் இருந்துவந்த சுதந்திரங்களை பறிக்கவேண்டும் என்ற நோக்கில் இப்போது மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஒரு நாட்டுக்குள் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும் என்று பேசுகின்றனர். வேட்பாளர்கள் இப்படியான பிரசாரங்களையே முன்னெடுத்து வருகின்றனர். இவற்றை முறியடிப்பதற்கு எங்கள் மத்தியில் ஒற்றுமை இருக்கவேண்டும். எங்களுடைய வாக்குகளை ஒன்றுதிரட்டி இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.

28/09/2019

முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒற்றுமையாக செயற்படுவதுதான் சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாகும்: குருநாகலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதுபோன்று, எதிர்காலத்திலும் அதை செயற்படுத்துவதுதான் எங்களது சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நகர திட்டமிடல் அமைச்சினால் 28.8 மில்லியன் ரூபா செலவில் குருநாகல் மாவட்டத்தில் குரீகொடுவ பிரதேசத்தில் காபட் வீதியாக விஸ்தரிக்கப்பட்ட சின்னகொல்ல வீதியை இன்று (28) திறந்துவைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

தவறாக வழிநடத்தப்பட்ட சிறியதொரு கும்பலினால் நடாத்தப்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்னணியில் தொடர்ந்தும் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகின்ற சமூகமாக முஸ்லிம்கள் இருந்துகொண்டிருக்கின்றனர். இவற்றுக்கெதிராகப் போராடி, ஓரளவுக்காவது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்ற சூழல் உருவாகி வருகின்றது. இந்த சூழ்நிலையில் எதிர்கால ஆட்சி தொடர்பில் என்ன முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற நிலைக்கு மக்கள் எல்லோரும் வந்திருக்கிறோம்.

இந்த நிலையிலும் நாங்கள் கடந்தகால சம்பவங்களை மறந்துவிடாமல், சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதன் விளைவாக என்ன தாக்கங்களை ஏற்படுத்த முடிந்ததோ, அதேபோன்று எதிர்காலத்திலும் இந்த ஒற்றுமையை பேணுவதுதான் எங்களுக்கான சிறந்த வழியாக இருக்கும் என்பதை நாங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

நாட்டைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களுடைய எதிர்காலம் குறித்த விடயத்தில் எல்லோரும் மூக்கு நுழைக்கின்ற காலமாக இது மாறியிருக்கின்றது. வேறுயாரும் எங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதை விட, நாங்களாகவே எங்களது விடயத்தில் ஆக்கபூர்வமான முடிவுகளுக்கு வரவேண்டும்.

எங்களது அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகள் பலவற்றை நாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். அடிக்கடி பலவிதமான கலவரங்களையும் அனர்த்தங்களையும் அட்டூழியங்களையும் சந்தித்திருக்கிறோம். அவற்றின் வெளிப்பாடாகத்தான், குருணாகல் மாவட்டத்தில் மிகப்பெரிய அனர்த்தங்களை நாங்கள் எல்லோரும் சந்திக்க நேரிட்டது.

இந்தப் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து மீண்டுவரும் நிலையில், இல்லாத பொல்லாத பழிகளை எங்களது சமூகத்தின் மீது சுமத்தும் நோக்கில் வைத்திய நிபுணர் ஒருவருக்கெதிரக அரங்கேற்றப்பட்ட சதி எல்லோருக்குமே தெரியும். நாங்கள் நீதி, நியாயத்துக்காக நீண்டநாட்களாக போராடிபோதும், நாட்டில் சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் எப்படியெல்லாம் செயற்பட்டார்கள் என்பதை நாங்கள் எல்லோரும் கண்கூடாகப் பார்த்தோம்.

எந்த ஆதாரமும் இல்லாமல், முஸ்லிம் என்ற காரணத்துக்காக வேண்டுமென்றே பழிசுமத்துகின்ற விடயத்தில் நாங்கள் எல்லோரும் வேற்றுமைகளை மறந்து தெளிவாக பேசவேண்டிய இடங்களில் பேசியிருக்கிறோம். கடைசியில் குற்றம்சுமத்திய எல்லோரும் வெட்கித் தலைகுனிகின்ற அளவுக்கு பின்வாங்க வேண்டிய ஒரு நிலவரம் அவர்களுக்கு ஏற்பட்டது.

இதே விவகாரங்களையும் விசமத்தனமான பிரசாரங்களையும் அடிப்படையாக வைத்துத்தான் புதிய பிரசாரங்கள் ஆரம்பிக்கும். இந்த விடயங்களை மனதில் வைத்துக்கொண்டுதான் எதிர்கால முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும். அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது. கொஞ்சம் துணிகரமான விதத்தில் இவற்றை எதிர்கொள்வதற்கு எங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இது நாங்கள் பிறந்த நாடு. எங்களுடைய சந்ததிகள் வாழவேண்டிய நாடு. அதற்கு கௌரவமாக கண்ணியமாக பின்புலத்தை நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக எங்களுக்கிருக்கின்ற அத்தனை பலத்தையும் பிரயோகித்து, தைரியமாக நியாயத்துக்காக பேசுகின்ற ஒரு சமூகமாக எங்களை இனங்காட்டிக் கொள்ள வேண்டும்.

நெருக்கடிகளிலிருந்து இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் எங்களது வாழ்க்கையை திருப்திகரமாக மாற்றிக்கொள்வதற்கான பின்புலத்தை நாங்கள் அமைத்தாகவேண்டும். அதற்காக எங்களது கைகளில் இருக்கும் வாக்குரிமை என்ற ஆயுதத்தை மிகப் பக்குவமாக பாவித்தாக வேண்டும். அப்போதுதான் நாங்கள் எதிர்பார்க்கின்ற வெற்றியை அடைந்துகொள்ள முடியும்.

போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் நாங்கள் தற்போது விஸ்தரித்துள்ள பாதையை பக்கத்திலிருக்கின்ற மடிகே கிராமத்துக்கும் அங்கிருக்கின்ற மக்களுக்கும் ஏற்றவகையில் நீட்டித்தரவேண்டும் என்ற கேரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அந்த விடயத்தை செய்துகொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அதேபோன்று இந்த பிரதேசத்தின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் நோக்கில் கட்டுபொத்த, பமுனாகொடுவ நீர் வழங்கல் திட்டத்துக்காக தெதுரு ஓயா ஆற்றிலிருந்து நீரைப் பெறுவதற்காக புதிய நீர் வழங்கல் திட்டமொன்றை நாங்கள் அமுல்படுத்தவுள்ளோம். இதன்மூலம் இரு கிராமங்களும் குழாய் மூலமான நீரை பெற்றுக்கொள்ள முடியும். பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியில் அதை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

24/09/2019

சவூதி - இலங்கை இடையிலான 45 வருட உறவு ஒத்துழைப்பின் அடையாளமாகும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

சவூதி அரேபியாவுக்கு இலங்கைக்கும் இடையே 1974இல் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது அதன் 45ஆவது வருட பூர்த்தியை நினைவுகூருகிறோம். இரு தரப்பிலான உறவுகள் நிலையான நட்பின் வெளிப்பாடாகவும், பரஸ்பரம், புரிந்துணர்வு மற்றும் நெருங்கிய ஒத்துழைப்பு என்பவற்றின் அடையாளங்களாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று (23) கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற சவூதி அரேபியாவின் 89ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

சுமார் 136,000 இலங்கையர் தற்போது சவூதியில் வசித்துவருகின்றனர். தமது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் தாயகத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பெரும் பங்காற்றும் இவர்கள், சவூதி அரேபியாவின் பொருளாதார அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கின்றனர்.

மத்திய கிழக்கில் இலங்கையின் முக்கியமான வர்த்தக பங்காளியாக சவூதி அரேபியா திகழ்கிறது. சவூதி அரேபியாவுக்கான ஏற்றுமதி பொருட்களில் தேயிலை 25% ஆகும். இலங்கையின் உற்பத்திகளை இறக்குமதி செய்யும் பங்காளி நாடுகளில் சவூதி அரேபியா 23ஆவது இடத்தை பெறுவதோடு, சவூதியின் இறக்குமதியாளர்கள் பட்டியலில் இலங்கை 82ஆவது இடத்திலுள்ளது. இரு நாடுகளினதும் இருதரப்பு வர்த்தக பெறுமானம் 2018இல் 327.77 அமெரிக்க டொலர் மில்லியன்களாகும்.

இலங்கை சவூதியோடு 7 இருதரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளதோடு, அதன்மூலம் நமது கூட்டுறவு பல துறைகளிலும் சக்திமிக்கதாக பரிணாமிக்கின்றது. கடந்த பல ஆண்டுகளில் நமது இருநாடுகளின் மக்களிடையேயும் உள்ள கலாசார தொடர்பும் வலுவடைந்து வந்திருக்கின்றது. கொழும்புக்கும் சவூதிக்கும் இடையே நாளாந்தம் விமான பயணங்கள் மேற்கொள்ளப்படுவதோடு ரியாத், தமாம் மற்றும் ஜித்தா போன்ற நகரங்களையும் அது இணைக்கின்றது.

மத்திய கிழக்கிலிருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளில் சவூதி பயணிகள் மிகக்கூடுதலாக உள்ளனர். 2018இல் மாத்திரம் 34703 விமானப் பயணங்கள் இலங்கைக்கு வந்து சேர்ந்திருப்பதாக பதியப்பட்டுள்ளது. சவூதிக்கான கிரமமான ஹஜ் யாத்திரை தூதுக் குழுவுக்கு சவூதி அரசு வழங்கும் ஒத்துழைப்பும் உதவிகளும் இரு நாட்டு கலாசார உறவுகளை மேலும் உறுதிமிக்கதாக்க உதவுகின்றது.

சவூதியின் அபிவிருத்திக்கான முதலீடுகள் மூலம் 1981 முதல் இலங்கைக்கு பல்வேறு அபிவிருத்திகளுக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. களுகங்கை திட்டம், பதுளை செங்கலடி பாதை, வயம்ப பல்கலைக்கழக அபிவிருத்தி, கொழும்பில் அமைக்கப்பட்ட Epilepsy வைத்தியசாலை மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் என்பன இதில் உள்ளடங்கும்

மேலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முகமாக சவூதியின் பாராளுமன்ற தூதுக்குழுவொன்றும் சூரா கவுன்சில் தலைமையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் கபீர் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பெளசி, காதர் மஸ்தான் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

21/09/2019

மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் எனும் மாமனிதனைப் பற்றிய சிறு தொகுப்பு

மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் எனும் மாமனிதனைப் பற்றிய சிறு தொகுப்பு.

21/09/2019

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான முயற்சி எங்களுடைய தலையீட்டால் முறியடிக்கப்பட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.

20/09/2019

ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பு

ஐ.தே.கட்சியின் கூட்டணிக் கட்சிகளோடு கலந்துரையாடடி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானத்திற்கு வர வேண்டும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது...

20/09/2019

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பு

20/09/2019

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதபதி முறைமையை ஒழிப்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் அவசர அவசரமாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நடைபெற்றுவரும் அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் பிதரமர் தலைமையில் கூட்டமொன்று நடந்தது.

இதில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம் உள்ளடங்கலான பல அமைச்சர்கள், இந்த முயற்சிக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்யும் எந்தவொரு முயற்சிகளும் வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே செய்யப்பட வேண்டுமென அவர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை அமைச்சர்களான சம்பிக்க, ஹரீன் பெர்னாண்டோ உட்பட்ட பல அமைச்சர்கள் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிகிறது.

இவ்வளவு காலமும் இதனை செய்யாமல் - ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு செய்வது மக்கள் மத்தியிலும் அதிருப்தியை உண்டுபண்ணுமென அமைச்சர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டினர்.

நன்றி நவமணி. (வை.எம்.ஆஷிக்)

18/09/2019

ஐ.தே.கட்சியின் பிரபல்யமான உறுப்பினருக்கே தாம் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு அமைச்சர் ஹக்கீம்.

ஐ.தே.கட்சியின் பிரபல்யமான உறுப்பினருக்கே தாம் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனை அவர் கூறியுள்ளார்.

Want your business to be the top-listed Computer & Electronics Service in Moratuwa?
Click here to claim your Sponsored Listing.

Our Story

எதுமாதிரியும் இல்லாமல் புதுமாதிரியான இணையத்தளம்

Videos (show all)

மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் எனும் மாமனிதனைப் பற்றிய சிறு தொகுப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.
ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பு
பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 19வது நினைவு தின நிகழ்வில்...

Telephone

Website

Address

128, Navoda Garden
Moratuwa

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Other Mobile Phone Shops in Moratuwa (show all)
Kasun Mobile Solutions Kasun Mobile Solutions
30/1 St Mary Road, Katukurunda
Moratuwa, 10400

The concept iUnlocKing Unlock was born out of the clear need in the market for a trusted and special

SMD Mobile SMD Mobile
1/4, Block M, Soysapura
Moratuwa

MaxS Mobile MaxS Mobile
Moratuwa
Moratuwa

KN Mobiles KN Mobiles
Moratuwa Rawathawatha
Moratuwa, 10400

all kinds of displays and mobile phone Repairs 0712072249

Esh Mobiles Esh Mobiles
132/A Bandaranayaka Mawatha, Katubedda
Moratuwa, 10040

Come to EsH Mobiles to get your phone, service, accessories, repairs done all in one place.

Laser phone arcade Laser phone arcade
No 180/14 Soysapura Road
Moratuwa, 10400

Sabee Mobile - Moratuwa Sabee Mobile - Moratuwa
No. 49, Main Street
Moratuwa, 10400

Nimzell Mobile Nimzell Mobile
Thelawala Road
Moratuwa

Mobile Arcade Mobile Arcade
51/5, Pedro Lane, Moratumulla
Moratuwa, 10400

You can buy all mobile accessories.

Burti'S shop Burti'S shop
St Blasius Road
Moratuwa, 10400

සාධාරණ මිලකට විශ්වාසනීය සේවාවක්

Mobi Crown Mobi Crown
No 2/3 Bandaranayaka Mawatha Katubadda
Moratuwa

King of the all kind of mobile phone and computers 💯✅

whoneed.lk whoneed.lk
Moratuwa, 10400

One Stop Get�