Ashraff ABM
Management Consultant and Development Professional holding BA Hons & MBA in HRM
Thank you, Department of Manpower and Employment. It has been a productive and pleasant year.
Thank you Allah for giving me this opportunity to work with a good team, may be at the last lap of my public service career. Who knows, if Allah willing, I will be back sooner than later.
Anyway, amid all the difficult times the country was going through we were able to wrap up a deal with Korean Employment Information Service to develop e- PES portal, started to build partnerships with chambers, govt and other international counterparts, developed the conceptual model for Labour Market Information System - still a long way to go.
We were able to innovate a creative cost based performance evaluation method with the contribution of the field staff. We pitched the idea that career guidance is a right of every child.
Department needs to build an enduring partnership with research institutes, chambers and the education sector in order to realise its potential and deliver the results it is expected to.
I may join UNDP as a Management Specialist Insha Allah.
நளீம் ஹாஜியார்: செல்வத்தால் போராடிய முன்மாதிரி ஆளுமை!
الحاج محمد نظيم المجاهد بالمال أسوةً!
உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர் (நளீமி)
தலைவர் – மிஷ்காத் ஆய்வு நிறுவனம்,
முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளர் – ஜாமியாஹ் நலீமியாஹ் இஸ்லாமியாஹ்
நளீம் ஹாஜியார் என்ற உயர்ந்த மனிதர் உருவாக பின்னணியாக அமைந்த காரணிகள் எவை? அப்படி ஒரு மனிதனை உருவாக்க உந்து சக்தியாக எவை இருந்தன? அவரில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்திய ஆளுமை அல்லது ஆளுமைகள் யாவை என்று தேடினால் எதனையும் கோடிட்டு வரையறுத்துக் காட்ட முடியாத ஒரு திகைப்புக்கே உட்படுவோம்.
ஒரு மிகச் சிறிய குடும்பத்தின் அங்கத்தவர். வறுமையோடு போராடப்போய் 5ம் வகுப்போடு தமது அறிவு தேடும் வாழ்வை நிறுத்திக் கொண்டவர். பின்னர் பல வகையில் உழைத்து மாணிக்க கல் பட்டை தீட்டும் தொழிலில் சேர்ந்து படிப்படியாக முன்னேறியவர்.
மிகவும் பாரம்பரியப் போக்கும் தரீக்கா செல்வாக்கும் கொண்ட ஊரில் வளர்ந்து உருவானவர். எந்த இயக்கத்திலும் சேர்ந்து கொள்கைப் போதனை பெறாதவர்.
ஒரு பணக்காரன் சமூக சேவைகளில் ஈடுபடுவதும் பல ஆயிரங்களை செலவழிப்பதும் பெரும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. அத்தகையவர்களை நாம் வரலாற்றிலும் காணலாம். தற்போது பல ஊர்களிலும் நாம் அவதானிக்கலாம். அதுவல்ல நளீம் ஹாஜியாரிடம் காணப்படும் விஷேசம்.
மேற்சொன்ன வகையில் எல்லாமே எதிர்மறைச் சூழ்நிலையாக இருந்தும் நளீம் ஹாஜியார் என்ற பெரும் ஆளுமை உருவானது தான் ஆச்சரியமானது.
ஒரு பணக்காரன் ஒரு பாரம் பரிய மத்ரஸாவை உருவாக்கலாம்; அதற்காக செலவிடலாம்; ஏழை மாணவர்கள் பலருக்கு உதவிகள் வழங்கி அவர்களைப் படிக்கச் செய்யலாம்; ஏழைகளின் திருமணங்களுக்கு உதவலாம்; பள்ளிகள் கட்டிக்கொடுக்கலாம்; அல்லது கட்ட உதவலாம். இவை எல்லாம் இயல்பானவை. ஆங்காங்கே நாம் அவதானிப்பவை. ஆனால் நளீம் ஹாஜியார் அப்படி சாதரணமாக எல்லோரும் சென்ற பாதையில் போகவில்லை. தமக்கொரு புதிய பாதையை அது கடினமாக இருப்பினும் அவர் அமைத்துச் கொண்டார்.
நளீம் ஹாஜியாரின் வாழ்க்கைப் போக்கை இப்போது அவதானிப்போம். வறுமையிலிருந்து கடின உழைப்பால் அவர் விடுபடுகிறார். பிறருக்காக உதவும் பண்பு அவரிடம் இயல்பாகவே ஒட்டிக்கொள்கிறது. தரீக்கா சூழ்நிலையால் நல்ல பக்தியுள்ள வராகவும் இஸ்லாமிய அனுஷ்டானங்களில் கவனமுள்ளவராவும் தன்னை வளர்த்துக்கொள்கிறார். இளமைப் பருவத்திலேயே அக்கால வழமைக்கு மாற்றமாக ஹஜ்ஜும் செய்கிறார். ஆனாலும் குருட்டு பக்தியோ பிழையான வணக்க சம்பிரதாயங்களோ அவரிடம் ஒட்டிக் கொள்ளவில்லை.
ஆரம்பத்தில் நளீம் ஹாஜியார் ஏழைகளுக்கு உதவுகிறார். பள்ளிகள் கட்ட உதவிகள் பல புரிகிறார். ஆனால் அப்போக்கு அவரைத் திருப்தியுறச் செய்யவில்லை என்பது அவர் பிற்பட்ட காலங்களில் செயற்பட்ட முறைகளிலிருந்து விளங்குகிறது. நளீம் ஹாஜியார் சமூக மாற்றமொன்றின் அவசியத்தைப் புரிந்து கொள்கிறார். அது பாரம்பரிய மத்ரஸாக்களுக்கு அப்பாற்பட்டதொரு வேலைத்திட்டத்தின் மூலமே சாத்தியம் என்பதையும் அவர் புரிந்து கொள்கிறார்.
நளீம் ஹாஜியார் ஒரு புரட்சியாளரல்ல: ஸைய்யித் குதுப், மௌலானா மௌதூதி போன்ற புரட்சிகர சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் படித்து அப்பின்னணியில் சமூக மாற்றம் குறித்து அவர் சிந்திக்கத் தெரிந்தவரல்ல. ஆனால் படிக்காத மேதைகள் பலரை உலகு கண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. தனது சமூகத் தையும் பாரம்பரிய மத்ரஸாக்களையும், மேற்கத்தியக் கல்வி பயின்றோரையும் நளீம் ஹாஜியார் கூர்ந்து அவதானித்தார். தனது சமூகம் ஒரு பாரிய மாற்றத்தை வேண்டி நிற்கிறது என்பதை அவர் புரிந்து கொள்கிறார்.
இப்பின்னணியில்தான் ஏ.எம்.ஏ. அஸீஸ், நீதிபதி மர்ஹூம் ஏ.எம். அமீன் போன்ற மேற்கத்தைய அறிவுப் பின்னணியைக் கொண்டவர்களோடும் தொடர்பு வைக்கிறார். மௌலவி தாஸீன் நத்வி, மௌலவி ஏ.எல்.எம் இப்றாஹீம் போன்ற சமூகத்தில் அப்போது வித்தியாசமான போக்குக் கொண்டவர்கள் என்று கணிக்கப்பட்டவர்களோடும் தொடர்பு வைக்கிறார்.
இந்தப் பின்னணியில் ஒரு பணக்காரன் பெரிய எந்த சிந்தனைப் பின்னணியும் இல்லாமல் புரட்சிகரமான இஸ்லாமியக் கல்வி நிறுவனமொன்றை உரு வாக்கியமை உண்மையில் ஒரு ஆச்சரியப்படத்தக்க விடயம் என்பதில் சந்தேகமில்லை.
வித்தியாசமான கல்வித்திட்டம், வித்தியாசமான உடையும் நடைமுறையும் இலங்கை பாரம் பரிய சிந்தனை ஏற்காத அறபுலக அறிஞர்களின் நூல்கள் கொண்ட வாசிகசாலை, இலங்கையின் பாரம்பரிய போக்கால் ஏற்க முடியாத முதலாவது அதிபர், அஷ் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, யூஸுப் அல் கர்ளாவி போன்ற சிந்தனையாளரக்ளின் வருகை இவை போனற்றவற்றை நளீம் ஹாஜியார் மிகவும் இலகுவாக ஏற்றுக்கொள்கிறார்.
நளீமிய்யா ஆரம்பித்தாயிற்று. ஆனால் அது இந்த வித்தியாசமான சூழ்நிலையில் உடனே பயன் கொடுக்கும் என ஒரு போதும் நம்ப முடியாத, துவங்கி மிக ஆரம்ப காலத்திலேயே நீதிபதி அமீன், அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ் இருவரும் மரணித்து விடுகிறார்கள். இப்போது மிகப் பாரிய தளம்பலுக்கும் பல குழப்ப நிலைகளுக்கும் நளீமிய்யா உட்படுகிறது. நளீம் ஹாஜியாரைத் தவிர வேறொருவராக இருந்திருந்தால் இது நடைமுறைச் சாத்தியமல்ல என்று கண்டு நளீமிய்யா மூடப்பட்டிருக்கும் அல்லது பாரம்பரிய மத்ரஸாவாக மாறி இருக்கும். அப்படியொரு நிலைமை நிகழவிருந்ததை நளீமிய்யாவோடு நெருங்கிய தொடர்புள்ள வர்களும், நளீமிய்யாவின் ஆரம்ப கால மாணவர்களும் அறிவர்.
ஆனால் நளீம் ஹாஜியார் விடாப்பிடியாக நின்றார். வீசிய எல்லாப் புயல்களையும் எதிர் கொண்டார். ஈற்றில் நளீமிய்யா- சமூகம் எதிர்பார்க்கும் உயர் கல்வி நிறுவனமே என்பதை முஸ்லிம் சமூகம் ஒப்புக்கொண்டது.
நளீமிய்யாவின் விளைவுகள் என்ன?
இஸ்லாமிய அறிவுப் பகுதியில் காத்திரமான பல பங்களிப்புகளை அதன் மாணவர்கள் செய்தார்கள்; செய்கிறார்கள். நவீன இஸ்லாமிய சிந்தனையை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்களும், அறிமுகப்படுத்திக் கொண் டிருப்பவர்களும் அவர்களே. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உருவாகிய ஸகாத் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் நூலொன்றை அவர்கள் தயாரித்து வெளியிட்டார்கள். இஸ்லாமிய பத்திரிகை, சஞ்சிகைகள் ஆரம்பித்து நடாத்துகிறார்கள்.
இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்களின் உந்து சக்தியாவும், பல ஊர்களில் இஸ்லாமிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கும் சக்தியாகவும் அவர்கள் திகழ்கி றார்கள்.
வேறு பல துறைகளில் நுழைந்து, படித்து அரச நிறுவனங்களில் அமர்ந்து தன் சுயத்தை இழக்காது சமூக உணர்வோடு பணி புரியும் பல நளீமீக்களை நாம் காணமுடியும்
ஆசிரியர்களாவும் அதிபர்களா கவும் இருந்து இஸ்லாமிய உணர்வோடும், சமூகப்பற்றோடும் உழைக்கும் நளீமிக்களையும் பரவலாக நாம் காண முடியும்.
அல்லாஹ்வின் பேரருளால் இந்த நாட்டின் இஸ்லாமிய மாற்றத்திற்கு நளீமிக்களின் பங்களிப்பு மகத்தானது என்பதனை எதிர்கால வரலாறு இன்ஷா அல்லாஹ் நிச்சயம் பறைசாற்றும்.
நளீம் ஹாஜியாரின் வரலாற்றுப் பங்களிப்பைக் காட்ட இது ஒன்றே போதும். ஆனால் இத்தோடு நிற்க முயலவில்லை. அவர் முஸ்லிம் சமூகமெங்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் படித்து விட்டு, தொடர்ந்து படிக்க முடியாது நிற்கும் மாணவர்கள் பற்றி சிந்தித்தார். தொழில் நுட்பத் துறையில் எத்தைகைய ஈடுபாடுமற்ற தன் சமூகம் அப்பகுதியல் நுழைவது காலத்தின் தேவை என்றுணர்ந்தார். இக்ரஃ தொழில் நுட்பக் கல்லூரியை ஆரம்பித்தார்.
அறிவில் சிறியவர் போல் வாழ்ந்து இவ்வளவு பெரும் உண்மைகளை தன் வாழ்வில் காட்டிய அந்த மனிதர், வரலாறு மிக அருமையாகவே காணும் மனிதன் என்பதில் சந்தேமில்லை.
தான் சம்பாதிக்கத் துவங்கியது முதல், பணத்தாலேயே இறைபாதையில் போராடி வாழ்ந்த அந்த முஜாஹித்துக்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக! சிறுபான்மை சமூகத்தின் முதல் முக்கிய அடிப்படை ஜிஹாத் பணத்தின் மூலமான ஜிஹாத் தான் என உணர்த்திய அம் மனிதர் எம் செல்வந்தர்களுக்கு முன்மாதிரியாக அமைவாராக!
உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர் (நளீமி)
Ifthar at the independence Square with friends and families. Masha Allah great effort by the Sri Lanka Muslim Civil Society .
Gender discussion from an islamic purspective. It's refreshing so worth watching for those who are interested the issue of Gender
Last year at Safari Park Hambantota
Great performance, Hon Minister.
Innovation by Qatar for FIFA
ஆயிரக்கணக்கான வக்பு சொத்துக்களை வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாதிருப்பது ஏன்? வக்பு சட்டம் அவசியமற்றதா?
#அனுபவக் குறிப்புகள்-10.2
,
வேலியே பயிரை மேய்ந்த கதை
அனுராதபுர நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர் அனுராதபுரம் ஸஹிரா கல்லூரியில் எனது வகுப்புத் தோழர். அந்தக் காலத்தில் ஒரு மேட்டுக்குடி என்று சொல்லத்தக்க முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ஒரு இடைவெளியை வைத்துக் கொண்டாலும் மனம் திறந்து பேசுபவர்; கலகலப்பாகச் சிரிப்பவர்; சிரித்துக்கொண்டே பேசுபவர். வெறுமனே பேசுவதற்காக பேசும் வெட்டிப் பேச்சுப் பேர்வழி அல்ல; ஏதாவது முக்கிய தேவைக்கு மட்டுமே பேசுவார். பேச்சு வழக்கிலும் தமிழை மிக சிறப்பாக கையாள்வார்.
அந்த அழைப்பு அவரிடமிருந்து வந்த முதல் அழைப்பு என்று கூடச் சொல்லலாம். ஒரு சின்னப் பீடிகையோடு தனது கையறு நிலையை அவருக்கே உரிய அழகிய அமைதியான தொணியில் ரத்தினச் சுறுக்கமாக சொல்லி முடித்தார்.
தந்தை ஆரம்பித்த கடையை இவர் தான் பொறுப்பேற்றிருந்தார். அந்தக்கடை துவிச்சக்கர வண்டிகள் விற்க பிரபல்யமாயிருந்தது. பாடசாலை நாட்களில் நான் ஒரு "ரலீ" பைசிக்கில் அங்கு வாங்கியிருக்கிறேன்.
அது ஒரு வெள்ளிக்கிழமை; இருவர் வந்து துவிச்சக்கரவண்டிக்கு பாவிக்கும் "டைனமோ" இருக்கிறதா என்று விசாரித்துள்ளனர். டைனமோக்களைப் பார்த்து விட்டு விலையையும் இருப்பி உள்ள டைனமோக்களின் எண்ணிக்கையும் விசாரித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.
சற்று நேரத்தில் ஒரு பொலிஸாருடன் உள்ளே வந்துள்ளனர். அவர் குற்றப்பிரிவில் வேலை செய்பவர். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு வரப்பட்ட துவிச்சக்கர வண்டிகளது டைனமோக்கள் காணாமல் போயுள்ளன. களவாடியவர்களை விசாரித்ததில் அவை இங்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது என்று அந்தப் பொலிஸ் அதிகாரி சொல்லியுள்ளார்.
நமது நண்பர் குறித்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்தளித்துள்ளார். தங்களது நிரந்தர ஏஜன்ட் அல்லாத யாரிடமும் தாம் எந்தப் பொருளும் கொள்வனவு செய்வதில்லை என்றும் இந்த டைனமோக்கள் கொள்வனவு செய்யப்பட்ட பற்றுச்சீட்டையும் (invoice) சமர்ப்பித்துள்ளார்.
என்றாலும் குறித்த பொலிஸ் அதிகாரி விடுவதாக இல்லை. பிரச்சனை ஏன் ? இவற்றைக் கொடுத்து விடுங்கள் என்று பவ்யமாக வேண்டியுள்ளார்.
கடையில் இருப்பில இருந்த டைனமோக்களின் எண்ணிக்கை 30. இன்றைய விலையில் ரூபா 150,000 பெறுமதி இருக்கும். அப்படிக் கொடுத்து விட்டால் பண ரீதியான நஷ்டத்தை விடவும் குறிப்பிட்ட குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொண்டதாய் போய்விடும் என்பதே நண்பரின் கவலை.
அவர்களது கோரிக்கைக்கு உடன்படாததால் குறித்த 30 டைனமோக்களையும் எடுத்துக் கொண்டு தங்களோடு பொலிஸ் நிலையம் வருமாறு கேட்டிருக்கிறார்கள். நண்பர் போகாமல் சேவகர் ஒருவரோடு 30 டைனமோக்களையும் அனுபியுள்ளார்.
சற்று நேரத்தில் பொலிஸிலிருந்து அழைப்பொன்று வந்துள்ளது. உங்களையும் விசாரிக்க வேண்டும்; உடனே வாருங்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.
நண்பர் பொலிஸ் நிலையம் சென்றதும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விசாரனை ஏதும் செய்யவில்லை. இவற்றை கொடுத்து விடுங்கள் என்று கேட்டிருக்கிறார். உடன்படாததால், இல்லாவிட்டால் கூட்டுக்குள் போக வேண்டி வரும் என்று மிரட்டி உள்ளார்.
நண்பன் உரிய ஆவணங்களைக் காட்டி தனது நிலையை விளக்க முயற்சித்தும் பயனில்லை. அந்த ஆவணங்களை யாரும் பரிசீலிக்கவில்லை. குற்றவாளியாக தீர்ப்பளித்து 30 டைனமோக்களையும் அபகரித்து குறித்த அரச தரப்புக்கு வழங்குவதிலேயே அந்த உயரதிகாரி குறியாய் இருந்துள்ளார்.
இது அரச அராஜகங்களில் ஒருவகை. பொதுவாக பொலிஸார் அரசியல் அழுத்தங்களால் இவ்வாறு செயற்படுவதுண்டு. நமது நண்பர் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. எனவே அந்த முழு நாளும் பொலிஸ் நிலையத்திலேயே காலம் கரைந்துள்ளது.
அனுரதபுரத்தின் அந்நாளின் சிற்றரசர் சமூக சேவை அமைச்சர் சம்பந்தப்பட்டது என்று அறியக் கிடைக்குள்ளது. அமைச்சருக்கு நெருக்கமான ஒரு முஸ்லிம் வியாபாரியை நாடியுள்ளார். குறிப்பிட்ட வியாபாரி அமைச்சரின் அல்லக்கைகளிடத்தில் விசாரித்து விட்டு அமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவோ அவரது ஆட்களோ சம்பந்தம் இல்லை என்று அறிவித்தது மட்டுமல்லாது, "30 டைனமோத்தானே!, விட்டு விடுங்கள்! " என்று உபதேசம் வேறு செய்துள்ளார்.
அதன் பிறகு தான் நண்பனுக்கு நமது ஞாபகம் வந்துள்ளது. அதுதான் அந்த அழைப்பு. உடனடியாக அநுராதபுரம் SSPக்கு அழைப்பெடுத்தேன். முன்பின் கண்டு அறிமுகமில்லை. ஆனால் பொலிஸ் தொலைபேசி பரிவர்தனை மூலமாக அழைப்புச் செல்கின்ற போது உரிய அறிமுகம் சரியாகவும் முறைப்படியும் நடப்பதால் உடனடி தொடர்பு கிடைக்கும்.
SSP காரியாலயத்தில் இருக்கவில்லை. தனது விடுதிக்கு பகலுணவுக்காக சென்றிருந்தார். நான் அவசரம் என்றமையால் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தை தொடர்புபடுத்தினார்கள். பிரச்சினையை செவியுற்ற SSP, பிப.2.00 மணியளவில் தனது காரியலாயத்தில் வந்து சந்தித்திக்குமாறு வேண்டினார்.
நண்பர் குறித்த நேரத்துக்கே அங்கு சென்றுள்ளார். அவர் போகும் போதே குற்றப்பிரிவைச் சேர்ந்த காண்ஸ்டபில் அங்கே SSP அறையின் முன் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அவருடன் ஓஐசீயும் அங்கு இருந்திருக்கிறார்கள்.
மூவரையும் அறையினுள் அழைத்து SSP விசாரித்ததில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. Log book ல், குறித்த சுற்றிவழைப்பு அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் பதிவாகியில்லை.
SSP, நண்பனது வாய்மொழி மூலத்தைப் பெற்றுக்கொண்டு முறைப்படி விசாரனை ஒன்றை ஆரம்பிக்குமாறு ASP ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளார். நண்பனது டைனமோக்களை எடுத்து வந்தவர்களே அதே வண்டியில் திருப்பிக் கொண்டு போய் கடையில் ஒப்படைத்துள்ளனர்.
மட்டுமல்லாமல் குறித்த குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியும் காண்ஸ்டபிலுக்க்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்; குறித்த முறைகேடு தொடர்பான ஒழுக்காற்று விசாரனை என அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சில வாரங்களுக்குப் பின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தனக்கு நெருக்கமான முஸ்லிம் வியாபாரி ஊடாக நண்பனை சமாதானப்படுத்தி குறித்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு கேட்டுள்ளார். அந்தக் காண்ஸ்டபில் எங்கோ நண்பனைக் கண்ட போது தான் சபாநாயகரது வீட்டுக் காவலனாக தரம் குறைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லிக கவலைப்பட்டுள்ளார்.
இங்கு ஒரு தொலைபேசி அழைப்பு அநியாயம் இழைக்கப்பட்ட ஒருவருக்கு நியாயம் பெற்றுக்கொடுத்தது என்று சொல்வதை விட அதிர்ஷ்டவசமாக அங்கு ஒரு நல்ல அதிகாரி SSP ஆக இருந்திருக்கிறார் என்பதே உண்மை. இன்றும் ஆங்காங்கே நல்லவர்கள் இல்லாமல் இல்லை.
ஆனால் சட்டத்தின் ஆட்சி என்று இதனைக் கருத முடியாது; இந்த நாட்டில் அன்றும் இன்றும் அறிமுகமும் அதிகாரமும் செல்வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கு உரிய ஒரு ஆடம்பரப் பொருளே நீதியும் நியாயமும்.
இந்த நாட்டின் ஆட்சி முறையை Protocracy என்று கூறலாமே அன்றி Democracy என்று அழைக்க முடியாது. Protocracy என்பது செல்வம் அல்லது செல்வாக்குள்ளவர்களின் ஆட்சி. இதுதான் இங்குள்ளது; இது மாற வேண்டும். அப்படியான மாற்றம் மக்களிடத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேணடும்.
இந்த வகையில் எனது நண்பனின் துணிவும் உண்மைக்கான அவரது போராட்டமும் மெச்சப்பட வேண்டும். இதே மனநிலை திசைப்படுத்தலும் பிரசைகளிடம் வர வேண்டும்; அதற்காக போராடுவதை பிரசைகள் தமது கடமையாகக் கொள்ள வேண்டும். அதற்கு சாதகமான பொறிமுறையொன்று அரசுக்குள் இருக்க வேண்டும். அப்பொழுது சட்டத்தின் ஆட்சி சாத்தியமாகும்.
ஏ.பீ.எம்.அஷ்ரப்
19.09.2022
#அனுபவக் குறிப்புகள் - 10.1
சட்டத்தின் ஆட்சி வெறும் கனவு தானா?
அனுபவக் குறிப்புகள் - 09 ன் பின் நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது. காரணம் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு நினைவுகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.
"அஷ்ரப் நீங்க பொலிஸில் இருந்திருக்க வேண்டும்" என்ற பேச்சு அக்குரணைக்கு போகும் போதெல்லாம் பவ்மி நானா மற்றும் மஷூர் நானா ஆகியோர் வாயில் வரத் தவறுவதில்லை. சந்திப்புகளும் நீண்ட இடைவெளியின் பின்னர் நடப்பதால் அந்தச் சம்பவமும் எனக்கு மறந்து போயிருக்கும். மீண்டும் கேட்டு ஞாபகப்படுத்திக் கொள்வதுண்டு. அதுவும் அவர்கள் அந்த சம்பவத்தை கூறும் விதமே சுவாரஷ்யமானது. அந்த சுவாரஷ்யத்தை என்னால் உங்களுக்குத் தர முடியாது.
ஒருநாள் அக்குரணையிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. அக்குரணைக்கு முதல் முதலில் போனது உயர்தர விஞ்ஞானப் படிப்புக்காக அக்குரணை அஸ்ஹர் பாடசாலைக்குத்தான். அன்று அக்குரணையின் அழகை ரசிக்க முடியவில்லை. ஆனாலும் விஞ்ஞான கல்வியை தொடர முடியாத சூழல் உருவானதால் நளீமியா சென்ற பின்னர் பல முறை நண்பர்களோடு அக்குரணை சென்றுள்ளேன். குறிப்பாக, நண்பன் ரூமியின் நட்பு இறுதியில் குடும்ப உறவாக மாறியது. எனது சிறிய தந்தை ஆசிரியர் ரஹுர்டீன் அவர்கள் ரூமியின் தங்கையைத் திருமணம் முடித்ததன் காரணமாக அக்குரண அலவத்துகொட நிரந்தர 'Destination' ஆனது. கண்டியில் எங்கு சென்றாலும் இறுதியில் அக்குரணையில் கால்பதிக்காது அந்தப் பயணம் முடியாது.
அந்த அழைப்பை மஷூர் நானா எடுத்திருந்தார். மிகவும் பதற்றமும் படபடப்பும் அவர் தொனியில் இருந்தது. பெரிய தொரு பிரச்சனையைச் சொன்னார். துரும்பைத் தூணாக்குவது அவரது உரையாடல் கலை. வியாபாரக் கொடுக்கல் வாங்கலால் வந்தது இம்தியாஸ் நானாவுக்கு பெரும் சோதனை. இம்தியாஸ் நானா ஜப்பானிலிருந்து வந்திருந்தார். இடையில் வாகன வியாபாரம் செய்தார். அக்குரணையைச் சேர்ந்த ஒரு முஸ்லிமுக்கு ஒரு வேனை விற்று உள்ளார்.
வேன் இம்தியாஸ் நானாவின் பெயரில் இருக்கவில்லை. open paper இல் கைச்சாத்திட்டு வியாபாரம் செய்கிற வழக்கம் இருக்கிறது. அதாவது உரிமை மாற்றும் ஆவணத்தில் வாங்குபவரின் விபரங்களை எழுதாது உரிமையாளரிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு பணத்தைச் செலுத்தி விடுவார்கள். தன்னிடமிருந்து வாகனத்தை கொள்வனவு செய்பவருக்கு உரிமை மாற்றும் பத்திரத்தையும் ஏனைய ஆவணங்களையும் வழங்கி வாகனத்தை விற்று விடுவார்கள். இடையில் நடந்த இந்தக் கொடுக்கல் வாங்கல்களுக்கு எந்தத் தடயமும் இருக்காது.
ஐந்து லட்சம் ரூபா பெறுமதிக்கு காசோலையைக் கொடுத்து வேனை வாங்கிக் கொண்ட ஏமாற்றுக்காரன் சட்டப்படி வாகன உரிமையைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளான். ஆனால் காசோலைக்கான பணத்தை மட்டும் குறித்த கணக்கில் இடவில்லை. இம்தியாஸ் நானா குறித்த தினத்தில் வங்கியில் காசோலையைப் பணமாக்க முயன்ற போது வங்கி காசோலையை மறுத்தது (ரிட்டன்- return பண்ணியது). அதைவிடப் பெரிய அநியாயம் என்னவென்றால் இந்த ஏமாற்றுக்காரன் பொலிஸில் இம்தியாஸ் நானாவுக்கெதிராக முறைப்பாடு ஒன்று செய்தது தான்; என்னுடைய காசோலையை இந்த இம்தியாஸ் திருடிவிட்டார் என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு.
காசோலையை வைப்பிலிட்டவருக்கும் காசோலை உரிமையாளருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் நடந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. காசோலை உரிமையாளரோ இம்தியாஸ் நானா தனது காசோலையை களவாடியதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸின் பார்வையில் ஏமாற்றுக்காரன் விடயத்தில் எதுவும் செய்வதற்கில்லை. ஆனால், காசோலையை வைப்பிலிட்ட இம்தியாஸ் நானா மீதுதான் சந்தேகம் எழ முடியும். இங்கு இம்தியாஸ் நானாவுக்கு இரண்டு அடிகள்- ஒன்று அவரது வேனுக்கான கொடுப்பனவு மறுக்கப்படுகிறது, மற்றது கள்ளக்குற்றச்சாட்டு வேறு. இது வழக்கு கிழக்கு என்று இழுபட்டால் இம்தியாஸ் நானா மாமியார் வீட்டில் கம்பி எண்ண வேண்டி வராது தான். ஆனால் அது பல வருடங்களாக இழுபடும் என்பதும் அதனால் அவருக்கும் அவரது உற்றார் உறவினருக்கும் ஏற்படக்கூடிய சீரழிவும் உள அழுத்தங்களும் அதிகம்.
கண்டி டிஐஜிக்கு தொலைபேசி மூலம் பிரச்சினையை விளக்கினேன். ஐந்து நிமிடத்தில் என்னைத் திருப்பி அழைத்த டிஐஜி, "மாத்தளை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு சொல்லியுள்ளேன்" என்றதோடு அவரை தொடர்பு கொண்டு விளக்குமாறும் என்னைக் கேட்டுக் கொண்டார். நான் அவ்வாறே செய்தேன். பிரச்சினையை விளங்கிக் கொண்ட பொலிஸ் அதிகாரி இருதரப்பையும் அழைத்திருக்கிறார். முறைப்பாடு செய்தவரிடம், "நீ தான் மோசடி செய்திருக்கிறாய்" என்று கடுமையாகச் சொல்லி ஓர் உதை கொடுத்திருக்கிறார். பின்னர் குற்றம் சுமத்தியவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள, பொலிஸ் நிலைய கூட்டில் அடைத்து விட்டார். " ஐந்து லட்சம் ரூபாவை செலுத்தினால்தான் வீடு செல்லலாம்; இல்லாவிட்டால் மாமியார் வீடுதான்" என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இம்தியாஸ் நாற்றுக்கு ஐந்து லட்சம ரூபாவும் மறுநாளே கிடைத்rவிட்டது. பிரச்சனையும் முடிந்தது.
இதுதான் இலங்கையில் காவல் துறை பிரச்சினைகளைக் கையாளும் விதம். நம்முடைய ஒருவருக்கு காரியம் ஆகியதால் இந்த வழிமுறை சரி என்று சொல்ல முடியாது. சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல் என்பது ஜனநாயக ஆட்சி முறையின் முதுகெலும்பு. நமது சட்டம் அறிமுகத்துக்கும், அதிகாரத்துக்கும் விதவிதமான லஞ்சத்துக்கும் தான் வேலை செய்கிறது. இந்தப் பிரச்சினையில் நான் ஏமற்றுக்காரனின் உறவினராக இருந்திருந்தால் அல்லது என்னை விடப் பலமான ஒருவரது ஆதரவு அவருக்கு இருந்திருந்தால் முடிவு வேறாகவே இருந்திருக்கும்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த பிரசைகள் ஜனநாயகத்தைக் கற்று அதனை நிலைநிறுத்த இயங்க வேண்டும். மறுபுறத்தில் காவல்துறை நேர்மையாக இருந்தால் மக்கள் மோசடியை நினைத்தும் பார்க்க மாட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது. மேலும், கொடுக்கல் வாங்கலில் எழுத்து மூல ஆதாரங்களை சாட்சியுடன் வைத்திருப்பது சட்டத்தின் பார்வையில் மட்டுமல்ல; மார்க்கத்திலும் கடமையாகும்.
எங்கு/எதை வாசித்தாலும் புதிய அறிவொளி பிறக்கிறது என்பதல்ல ஆச்சரியம்; கல்லாதது கடலளவு என்பது மீண்டும் மீண்டும் துலாம்பரமாவது தான்!
What a human- animal relationship !
Great
“நெறி பிறழாத வாழ்க்கையும் மகத்துவமும் எப்போதும் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. ”
– டேவிட் ஸ்டார் ஜோர்டான்
#அனுபவக் குறிப்புகள் - 09
நினைத்தாலே சிரிப்புத்தான்!
அன்று எனக்கிருந்த பெரிய கட்டுச்சாதனம் பொலிஸ் திணைக்கள அடையாள அட்டையாகும். பயணங்களின் போது அதன் பயன்பாடு மிக மிக அதிகம். வாகனத்திலிருந்து இறங்கத் தேவையில்லை. அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பது சுலபம். தனியாகப் பயணம் செய்தால் நான் வாகனங்களிருந்து இறங்குவதில்லை. ஆனால், கூட்டாகப் பயணித்தால் எனது திணைக்கள அடையாள அட்டடையைப் பாவிப்பதில்லை. வாகனங்களிலிருந்து இறங்கி தேசிய அடையாள அட்டையையே பயன்படுத்துவேன்.
எனது நண்பர்களோடு பயணிக்கின்ற போது இதுவே ஒரு பெரிய பேசு பொருள், விவாதம், விமர்சனம் என ஏராளம். இன்றும் எனது நண்பர்கள் அந்த அனுபவங்களைச் சொல்லிச் சிரிப்பது வழக்கம். ஒருமுறை கிழக்கு மாகாணத்துக்க வேனில் பயணித்தோம். நாங்கள் 5-6 பேர் இருப்போம். அம்பாறை செல்வதாக இருந்தால் கொழும்பிலிருந்து சோதனைச் சாவடிகள் 10-15 ஐத் தாண்ட வேண்டும். ஏறி-இறங்கவும், வரிசையில் சிலவேளை உச்சி வெய்யிலில் காத்திருக்கவும் வேண்டும். இது களைப்பை இரட்டிப்பாக்கி விடும்; பயண நேரத்தையும் கூட்டி விடும். அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எசகு பிசகாகினால் கதை கந்தல்தான். இங்கு மொழியின் வகிபாகமும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, பொதுவாக எல்லோரும் அங்கீகாரம் கூடிய அடையாள அட்டை ஒன்று இருபபதை விரும்புவர். அரச திணைக்கள அடையாள அட்டை மற்றும் பல்கலைக்கழக / கல்லூரி அடையாள அட்டை என்பவற்றைப் பாவித்து இந்தச் சோதனைச் சாவடிகளை வேகமாகக் கடந்து செல்வதை பலர் ஒரு பெரிய சாதனையாகக் கருதுவர்; சிலர் பாக்கியமாகவும் கொள்வதுண்டு. 4-10 பேர் பயணம் செய்யும் கார் - வேன்களில் போகும் போது அங்கீகாரமுள்ள ஒருவர் இருந்தால போதும் எல்லோருக்கும் சொகுகு பயணம் தான். ஒரு டாக்டர், ஒரு வழக்கறிஞர், ஒரு அதிபர் - ஆசிரியர் என்று அந்தச் சலுகைக்கு பல முகங்கள். பாதுகாப்பு தரப்பில் ஒரு கீழ் மட்ட உத்தியோகத்தர் இருந்தாலும் போதும்.
வாகனத்தில் ஏறிய கணம் முதல் இது தான் பேச்சு: "அஷ்ரப் , இன்று நமக்குச் சுதந்திரம் . இறங்குவதும் இல்லை; ஏறுவதும் இல்லை" என்பதுதான் பேச்சு. முதலாவது சோதனைச் சாவடியை நெருங்கியவுடன், "உனது ID ஐக் கொடு. போ போ. அவசரமாகக் கொடு. தாமதித்தால் இறக்கி விடுவார்கள்" என்று முன்னால் தள்ளிவிட்டார்கள். தேசிய அடையாள அட்டையை நீட்டியவுடன் முன்னே நடக்கச் சொன்னார்கள். நண்பர்களையும் இறக்கி விட்டார்கள். பெரிய ஏமாற்றமும் எரிச்சலும் எங்களுக்குள்ளே சிறு இடைவெளியை உருவாக்கத்தானே செய்யும். நமது குறும்புத்தனங்களுக்கு பழகிய நண்பர்கள் இதனை இன்னொரு ஷேட்டையாகத்தான் பார்ப்பார்கள்; கொள்கை விளக்கம் சொன்னால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகச் சொல்வார்கள்.
வழமையான கெடுபிடிகள் முடிந்து வேனில் வந்து ஏறியதுதான் தாமதம். சாரமாரியாக விமர்சனக் கணைகள் அடியேனைக் குறிவைத்தன. "அடுத்த சோதனைச் சாவடியில் இந்தச் ஷேட்டை வேண்டாம்" என்று கண்டிப்பான கட்டளை. ஏகமனதாக தீர்மானம் நிறைவேறினாலும், அடியேன் சந்தர்ப்பத்தைக் கொள்கை பரப்புக்குப் பயன்படுத்தி அடுத்த சோதனைச் சாவடி வரை பெரிய கலாட்டா தான். எப்படியோ அடுத்த சோதனைச் சாடியிலும் மாற்றமில்லை; அதே அனுபவம்.
இப்படியாக இன்னொரு சாவடியிலும் அதே காவடி ஆட்டம். அதன் பிறகு பேச்சு வேறு தலைப்புக்குத் தாவும். எல்லா சோதனைச் சாவடிகளிலும் இறங்கி ஏறிக் களைத்து எமது Destination - பிரயாண முடிவுப் புள்ளியை எட்டி விடுவோம். அங்கு ஆரம்பமே இதுதான். "இன்று அஷ்ரபுடன் வந்ததால் சோதனையைச் சாவடிகளில் காவடி தூக்கியிருக்க மாட்டீங்களே!" என்று ஆரம்பிப்பார்கள். மீண்டும் நமக்கு நண்பர்களால் நல்ல விருந்து படைக்கப்படும்.
வடக்கில் காயமுற்ற பாதுகாப்புத் தரப்பினர் சிகிச்சை பெறும் வைத்திய சாலைகளில் பாதுகாப்புக் கெடுபிடிக்ள் அதிகமாக இருக்கும். அப்படியான வைத்தியசாலைகளுக்கு மனைவியோடு சென்றாலும் இந்த எதிர்பார்ப்பு இருக்கும். வைத்திய சாலை வாயில்களில் வரிசைகளில் மனைவியோடு நீண்ட நேரம் நின்று தேசிய அடையாள அட்டையைக் காட்டி வைத்திய சாலை சென்று வருவதில் பெரிய சுகமும் பெருமையும் இருந்திருக்கிறது. மனைவிக்கு "இவனைக் கல்யாணம் முடித்ததில் இந்த சுகமும் இல்லை" என்ற மாதிரி ஏமாற்றம் தான்.
ஒரு நாள் நண்பர்கள் இருவரும் அவர்களது மனைவியருமாக நாங்கள் விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். பொலிஸ் சோதனைச் சாவடியைக் கண்டவுடனே, "அஷ்ரப் இறங்க முடியாது. office ID கையில் தானே. முன்னே அமர்ந்து கொள்ளுங்கள்" என்றெல்லாம் இரண்டு நண்பர்களிடமிருந்தும் கட்டளை வந்தது. ஒருவர் கணக்காளர். கட்டாரில் இருந்து விடுமுறையில் வந்திருந்தார். மற்றவர் அவரது மைத்துனன்; ஒரு சட்டத்தரணி. அவரது ID க்கும் அதே செல்வாக்கு இருந்தது; இருக்கிறது. ஆனால் அவருக்கு நம்முடைய IDஐத்தான் காட்ட வேண்டும் என்ற பிடிவாதம்.
களணிப்பாலம் வந்தது. சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டோம். நம்மை இறக்கிவிட்டார்கள். வழமை போல தேசிய அடையாள அட்டையைக் காண்பித்தேன். வண்டியைச் சோதனையிட வேண்டுமென்றனர். கட்டாரிலிருந்து வந்த நண்பர் நச்சரித்தார். "இப்போதாவது அந்த ID ஐக் காட்டுங்களே" என்றார். சட்டத்தரணிக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர் தான் சாரதி; எனவே இறங்கவில்லை. மனைவியோடும் தங்கையோடும் ஏதேதோ சொல்லிச் சிரித்துக்கொண்டார்.
பின் கதவைத் திறந்தும் மீண்டும் கட்டார் நண்பர் நச்சரித்தார். நான் சிரித்துக் கொண்டே, "அவர் அவரது கடமையைச் செய்யட்டுமே; நம்மிடம் மறைக்க எதுவுமில்லையே" என்று தமிழில் தான் கூறினேன், அரைகுறையாக தமிழ் தெரிந்திருந்த பாதுகாப்பு அதிகாரி, "எங்களுக்கும் தமிழ் தெரியும். நீங்கள் எங்களை ஏளனம் செய்வதை அனுமதிக்க முடியாது" என்று குமுறினார். அது ஒரு பெரிய வாய்த் தர்க்கமாகவே மாறிவிட்டது. அவர் ஒரு RESERVE பொலிஸ் காண்டபிள். அப்பொழுது நான் ID ஐக் காட்டி, "உன்னைப் பற்றி சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் செனவிரத்ன சேரிடம் முறையிடுவேன்" என்று எச்சரித்து விட்டு வர வேண்டியதாயிற்று.
இது, நமது லோயருக்கு பெரிய வாய்க்கரிசியாகப் போய் விட்டது. "முதலிலேயே ID ஐக் காட்டியிருந்தால் இப்படியெல்லாம் நடக்காது தானே. மற்றது அவசர காலச் சட்டத்தின் கீழ் உங்களை மட்டுமல்ல எங்களையும் அல்லவா கூட்டில் போட்டிருப்பான். இவ்வளவில் தலை தப்பியது போதும்" என்றார். சிரிப்பலை வேனைக் குலுக்கியது. இப்படியாக நம்மையறியாமலேயே வழக்கறிஞர் வீட்டை அடைந்தோம். உணவு வேளையிலும் இதுதான் கதை. எப்படியும் இந்த நிகழ்ச்சிகள் அடியேனை ஆசுவாசப்படுத்துமே அன்றி மனம் தளர வைக்காது.
அந்த RPC பின் நம்பரையும் எழுதிக் கொண்டேன். அவரது நடத்தைக்கு நாம் எந்த வகையிலும் பொரறுப்பல்ல. அவர் ஏதோவொரு prejudice ன் அடிப்படையில் எதிர்வினை - reaction காட்டியுள்ளார். ஆகவே, அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற மனநிலை ஏற்பட்டிருந்தது. Reserve சேவைக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.ஏ.எஸ். செனவிரட்னா அவர்கள் என் விடயத்தில் நல்லபிப்பிராயம் கொண்டிருந்தார். எனவே ஒரு முறைப்பாடு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் சாத்தியம் அதிகமாகவே இருந்தது.
அந்தச் சம்பவத்தின் பின் ஓரிரு வாரங்கள் முறைப்பாடு செய்வது தொடர்பில் சுய ஆலோசனை செய்து வந்தேன். அப்படி முறைப்பாடு செய்தால் அதன் விளைவு அந்தக் காண்ஸ்டபிலின் வாழ்க்கையை நிச்சயம் பாதிக்கும். அவர் நிரந்தர சேவையைச் சேர்ந்தவரல்ல. எனவே திரு. ஏ.எஸ். செனவிரட்னா பெரும்பாலும் பெரிய விசாரணையின்றியே அவரை சேவை நிறுத்தம் செய்வார்; அல்லது குறித்த சம்பவம் நமக்கெதிராகவும் திரும்பலாம். எதுவும் சாத்திமே; குரங்கு ஆப்பிழுத்த கதையாகவும் மாறலாம். ஆகவே, அந்த விடயத்தை களணிப் பாலத்திலேயே விட்டுவிடுவது நல்லது என்றது மனம்.
இப்பொழுது நமது "ஈ.கோ" வாபஸ் பெறத் தொடங்கியது. மனச்சாட்சி பேசத் தொடங்கியது. எனக்கும் எனது நண்பருக்கும் சிங்களம் தெரிந்திருந்தது. ஆகவே தமிழ் தெரியாத அந்த சிங்கள உத்தியோகத்தர் முன்னிலையில் நாங்கள் சிங்களத்திலேயே பேசி இருக்க வேண்டும். அப்போது தேவையில்லாத சந்தேகங்களுக்கு இடமிருந்திருக்காது. இது தொடர்பாடலில் முக்கியத்துவம் வாய்ந்ததொரு அம்சமாகும்.
அதிலும் நமது நாட்டின் துணைக் கலாச்சாரம் (Sub - Culture) இருக்கிறது. வேற்று மொழியாளர்களுடன் சம்பாசிக்கின்ற வேளைகளில் நமக்குள்ளே நமது மொழியில் அவர்களைப் பற்றி ஏளனமாகப் பேசிக்கொள்ளுதல் என்ற துர்நடத்தை இல்லாமலும் இல்லை. எனவே, அந்தப் பொலிஸ் உத்தியோகத்தரது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பினும், தொடர்பாடல் கலையை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை. இதனை எனக்கு உணர்த்த எனது மனட்சாட்சி பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.
அடுத்த தொடர், அடியேனின் தலையீட்டால் சில நண்பர்கள் சின்னச் சின்ன அடாவடித்தனங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட கதைகளைச் சுமந்து வரும்.
கத்தியை தீட்ட வேண்டும். மொழி - நிறைய வாசிக்க வேண்டும; சரியாகப் பேச வேண்டும்; அதிகம் எழுத வேண்டும். இல்லா விட்டால்?
#அனுபவக் குறிப்புகள் - 08
தொழில் வாழ்க்கையில் மேல் - முகாமை (MANAGING-UP) முக்கியமானது.
பொலிஸ் திணைக்களத்தில் மொத்தம் ஒரு வருடம் வேலை செய்தாயிற்று. பதவிப் பெயர் பிரளயம் நடந்தும் ஆறு மாதம் கடந்து விட்டது. எனது மனைவிக்கு புத்தளத்தில் ஒரு தொழில் கிடைத்திருந்தது. எனவே, நானும் புத்தளம் செல்வதென்று தீர்மானமாயிற்று. புத்தளம் புனர்வாழ்வு அலுவலகத்தில் வேலை செய்த திட்டப் பணிப்பாளர் நஸீர் நானா மாற்றலாக முயற்சிப்பதாகக் கூறினார். எனவே, அங்கு மாற்றாலாகிச் செல்லலாமென்று திட்டமிட்டேன். அதுபற்றிப் பேச துறைமுக அபிவிருத்தி, புனர் நிர்மாணம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஜனாப். ஜுனைத் அவர்களை சந்திக்கச் சென்றேன்.
பொலிஸ் தலைமையகத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த 'பிரிஸ்டல் பில்டிங்'கில் செயலாளர் ஜுனைத் அவர்களைச் சந்தித்தேன். ஜனாப். ஜுனைத் அவர்களைப் பற்றி SLIDAக்காலங்களில் அதிகமாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் இள வயதிலேயே முன்னாள் ஜனாதிபதி திரு. R. பிரேமதாச அவர்களால் உள்நாட்டலுவல்கள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டவர். உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்களை (AGA) மாவட்ட அதிபர்களின் அதிகாரங்கள் அனைத்தும் பெற்ற பிரதேச செயலகங்களாக மாற்றிய பெரும் பணியைச் செய்தவர் அவரே. ஆங்கிலம், சிங்களம், ஜப்பான் மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். நிர்வாக சேவையில் ஒரு ஜாம்பவான் என்று சொல்லலாம். அவர் அமைச்சர் அஷ்ரப் அவர்களின் அமைச்சுச் செயலாளராக இணைந்தது வரலாற்றில் அவர் செய்த பெரும் தவறு என்பது எனது கணிப்பு. இல்லாதிருந்திருந்தால் இன்றும் போற்றப்படும் ஒரு பெரும் ஆளுமையாக இருந்திருப்பார்.
ஜனாப். ஜுனைத் அவர்கள் செக்கச் செவேலென அழகாக இருப்பார். சீர்மையாக ஆடையணிந்திருப்பார். கம்பீரமான தோற்றமுடையவர். அன்பும் அச்சமும் கலந்த உணர்வு அவரது கீழ் ஊழியர்கள் அனைவர் மத்தியிலும் இருந்தது.
ஸலாம் சொல்லிக்கொண்டே சென்ற நான், அவரை அணுகி சுய அறிமுகம் செய்தவாறே கைலாகு கொடுத்தேன். ஆங்கிலத்தில் எனது வருகையின் நோக்கத்தை விளக்கினேன். புத்தளத்தில் ஜனாப். நஸீர் இருப்பதாகவும், கொழும்பில் அமைச்சுக் காரியாலயத்தில் வெற்றிடம் இருப்பதாகவும், அதற்கு என்னை எடுப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார். ஆனால், "எனது தேவை புத்ளதத்திற்குப் போவது என்பதையும் ஜனாப். நஸீர் அங்கிருந்து மாற இருப்பதாக கூறியதனால் தான் நான் உங்களை சந்திக்க வந்தேன்" என்றும் மீண்டும் சொல்ல வேண்டி இருந்தது.
அதற்கிடையில் பொலிஸ் திணைக்களத்தில் நடந்த ரகளைகளையும் சொல்லி அங்கிருந்து விலக அவரது தலையீடு தேவைப்படும் என்றும் சொல்லி வைத்தேன். "பொலிஸ் மாஅதிபர் உங்களை விடுவிக்க வேண்டும். அது விடயத்தில் தலையிட முடியாது. ஆனால் பொது நிர்வாக அமைச்சில் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களிடம் பேச முடியும்" என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.
அன்று முதல் இன்றுவரை அரசியல் தலைவர்களை நாடுவதை நான் விரும்பவில்லை. எனது முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது ஜனாப். ஜுனைட் உடனடியாக பொலிஸ் மாஅதிபருடன் கதைத்து என்னை விடுவிக்குமாறு வேண்டுவார் என்பதுதான். ஆனால், அவரோ அதனைச் செய்ய முடியாது என்று கூறியதோடு நான் திணைக்களத் தலைவர் ஊடாத அதனைச் செய்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். நான் விரும்பியிருந்தால் அமைச்சர் அஷ்ரப் அவர்களைச் சந்திதிருக்கலாம். என்றாலும் அந்த அரசியல் அணுகு முறைகள் எப்போதுமே நமது அகராதியில் இருந்ததில்லை.
இறுதியாக ஜுனைட் சேர் சொன்ன ஒரு விடயம் அவர் மீது ஏற்படுத்திய ஏமாற்றத்தைப் போக்கியது. அவர் என்னிடம் "நீங்கள் ஆங்கில மொழி மூலம் படித்தவரா?" என்றார். "இல்லை. நான் பட்டப்படிப்பு வரை தமிழில் தான் படித்தேன்" என்று கூறினேன். "இல்லை நீங்கள் ஆங்கிலத்தை சரளமாகவும் சிறப்பாகவும் பேசும் விதத்தில் நான் அப்படி நினைத்தேன்" என்றார். கோடை காலத்தில் உச்சி வெயிலில் நடந்து போகின்ற போது குளிரான தண்ணீர் தலையில் கொட்டியது போலிருந்தது. இப்போதும் எனது பிள்ளைகள் எனது ஆங்கில உச்சரிப்பில் பிழை காண்பார்கள். சுமார் 23 வருடங்களுக்கு முன் எனது SLAS நண்பர்களும் எனது ஆங்கில மொழியை மெச்சியதாக ஞாபகம். ஆனால், இடையில் என்ன நடந்தது என்று கேட்கத் தோன்றுகிறது. பொலிஸ் திணைக்களத்தில் ஆங்கில மொழியையே உயரதிகாரிகளுடனை எழுத்து- பேச்சு தொடர்பாடலுக்கு பயன்படுத்த வேண்டியிருந்தது. தீட்டத் திட்டத்தானே கத்தி கூர்மையாகும்!
ஜுனைட் சேரின் கலந்துரையாடலில் பெற்ற பாடம் திணைக்களத் தலைவருடனான கொடுக்கல் வாங்கலில் வெளியார் தலையீட்டை நாடக் கூடாது என்பது தான். அன்றிலிருந்து இன்று வரை அதனை நான் பேணி வருகிறேன். கணவன்- மனைவி உறவும் திணைக்களத் தலைவருடனான உறவும் வெளியார் தலையீடு இல்லாதபோதுதான் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆகவே, திரு. இந்திரா டி சில்வாவை மீண்டும் நெருங்க வேண்டியிருந்தது. உறவு சீரான பின்னர் தனிப்பட்ட தேவை நிமித்தம் புத்தளத்துக்கு மாற்றம் தேவை என்ற கருத்தை அவரிடம் பவ்வியமாக நேரடியாக எத்தி வைத்தேன். மாற்றல் கோரி கடிதமும் கொடுத்தேன். பிரதி உத்தியோகத்தர் -replacement later - பின்னர் வழங்குவது என்ற அடிப்படையில் என்னை உடனடியாக மாற்றுமாறு பொலிஸ்மா அதிபரைத் தூண்டியவர் அவர். ஆனால், இப்போது பிரதி உத்தியோகத்தர உடனடியாக தரல் என்ற அடிப்படையில் மாற்றலுக்கான பரிந்துரையை வழங்கினார். அதாவது இட மாற்றம் உடன் கிடைக்காது. பொலிஸ் திணைக்களத்திருந்து மாறிச்செல்வதில்லை என்று நான் 6 மாதங்களுக்கு முன்னர் எடுத்த முடிவு சரி என்பதை உணர்ந்த போது உடம்பு புல்லரித்தது. புகழனைத்தும் படைத்தவனுக்கே! என்றாலும் திரு. இந்திரா சில்வாவைச் சந்திக்கின்ற ஒவ்வொரு வேளையும், நான் replacement பின்னர் பெற்றுத்தரும் அடிப்படையில் மாற்றலுக்கு சிபார்சு செய்யுமாறு வேண்டுவேன். இறுதியில் திரு. இந்திரா டி சில்வா அவர்கள் அதனைச் செய்தார்.
பிற்பட்ட காலத்தில் எனது மேலதிகாரியாக இருந்த கல்வியமைச்சின் ஓய்வு பெற்ற செயலாளர் திரு. சுனில் ஹெட்டியராச்சி "அஷ்ரப் எவ்வளவு வேலை செய்தாலும் போதாது; உனது Boss Management திறம்பட இல்லாவிட்டால்" என்று அடிக்கடி சொல்வார். இதுவரையிலும் எனது " மேல் - முகாமை" (Managing up or Boss Management) திறமாகத் தானிருக்கிறது. அன்று ஜுனைட் சேர் பொலிஸ் மா அதிபருக்கு கதைத்து எனது மாற்றத்தைப் பெற்றுத் தந்திருந்தால் தொடர்ந்தும் அந்தக் கெட்ட பழக்கம் என்னோடு இருந்திருக்கும்.
SLIDA ல் சிரேஷ்ட ஆலோசகராக இருந்த போதும் எனது MBA கற்கைக் காலத்திலும் அதிகமான முகாமைத்துவ நூல்களை வாசித்திருக்கிறேன். களத்தில் விளங்கிப் புரிந்த அளவுக்கு இந்த Boss Mangement தத்துவத்தை வேறு எந்த முகாமைத்துவ பாடங்களிலும் தெளிவாகப் படித்ததில்லை. களப் பயிற்சியே பயிற்சிகளிலெல்லாம் சிறந்த பயிற்சி!
ஏ.பீ.எம். அஷ்ரப்
09.08.2022
Videos (show all)
Website
Opening Hours
Saturday | 09:00 - 16:15 |
Sunday | 09:00 - 17:00 |