Masihudeen Inamullah

Masihudeen Inamullah

It is my personal page where I promote unity, peace, justice, equality and harmony among diverse sec

01/12/2023

திக்ருல்லாஹ்:

அல்லாஹ்வை நினைவிற் கொள்ளல், ஞாபகப்படுத்தல், சந்தர்ப்ப துஆக்களை தவறாது பொருளுணர்ந்து ஓதுதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் அவற்றை நினைவூட்டல்..

அதே போன்று தொழுகைக்குபின்னர் ஓதுகின்ற அவ்ராதுகள் திக்ருகளை துஆக்களை ஓதிவரல்..

இவை தவிர்த்து நினைவிற்கு வரும் போதெல்லாம் ஒரு திக்ரை, இஸ்திஃபாரை, ஸலவாத்தை, துஆவை பொருளுணர்ந்து ஓதிக் கொள்வது..

சதாவும் எமது உள்ளங்களை பசுமையாக வைத்திருக்கவும் அல்லாஹ்வுடன் ஆன்லைனில் இருக்கவும் உதவும், அவை எம்மை ஷைத்தானின் ஆதிக்கத்தில் இருந்தும் தீங்குகள் இடர்களில் இருந்தும் பாதுகாக்கும், வாழ்வில் பல வசந்தங்களை கொண்டுவரும்!

இந்த மகத்தான வெள்ளி விடியலில் உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் எம்மையும் நினைவிற் கொள்ளுங்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
01.12.2023

29/11/2023

Post Al-Aqsa Strom and Arab-Peace Initiative!

Al-Aqsa Strom irrespective of the parties involved has no doubt brought the Palestinian Issue to the forefront in the global geo-political agenda.

It has become crystal clear that no other multi-national and multi-national issues related overtly or covertly will not be resolved untill and unless the Palestinian issue is resolved.

Arab-Peace Initiative proposed by then Saudi Monarch Abdullah Bin Abdul Aziz in 2002 endorsed by Arab League Beirut Summit and International community could only be the basis for immediate resumption of negotiations.

It's high time for parties directly involved to recognize the new stakeholders to the conflict with shared values and common interests without committing political blunders of sidelining any.

Apart from regular partners in the region Egypt KSA, Jordan, Syria and Lebanon, Turkey Qatar and Iran too have become unavoidable stakeholders in any future moves towards a pragmatic permanent and durable solution together with other influential members of Arab League and OIC

Unilateral moves of Biden Administration of US in concurrence of far-right extremist arpathied Netanyahu Administration of Israeli regime has come under vehement condemnation of overwhelming majority of at UN and global public opinion!

With the occurrence of Al-Aqsa Strom the Neo-liberal Neo-Colonial and imperialist agenda of global north has been exposed apart from the emergence of their counterparts both in the regional and global stage.

Arab-Peace initiative could be the cribble exit for the global north and Israeli regime to prevent further escalation of the tension in the Middle-East towards an spill-over in the region detrimental to a prolonged cold-war or the 3rd World war.

Russian War on Ukraine and the emerging Trade-War in the Indo-Pacific region have direct implications over the US backed Israeli War on Palestine.

It's high time for Arab League, Organisation of Islamic Cooperation and the Council of Gulf Cooperation to shed international divisions in order to find cribble mechanisms at their levels to push Arab Peace Initiative to the next level.

Masihudeen Inamullah
Former Consul General of Sri Lanka in Jeddah.
Former Political Expert Analyst at the Embassies of KSA and Qatar in Colombo.
Former GS of NSC
29.11.2022

25/10/2023

இத்தனை அழிவுகள் மரணங்கள் காயங்கள், பசி, தாகம் என்பவற்றிற்கு மத்தியிலும் காஸாவில் களவு கொலை, கொள்ளை, பிணக்குகள், சண்டை சச்சரவுகள் முண்டியடித்தல்கள், துஷ்பிரயோகங்கள் எதுவுமே இல்லையாம்!

காவல் துறையினர் இல்லை, பாதுகாப்பு படைகள் இல்லை, கைவிடப்பட்ட வீடுகள், தகர்ப்பட்ட கடைகள், பல் பொருள் அங்காடிகள், இலத்திரணியல் பொருட்கள் காட்சி கூடங்கள், எதிலும் எவரும் கைவைப் பதில்லையாம்!

யார் எவரென்று அறியாமல் கையிலிருப்பதை பகிர்ந்து உண்ணல், பருகுதல், நீண்ட வரிசைகளில் காத்திருத்தல், பெண்கள் பெரியவர்கள், சிறார்களை முற்படுத்தி கவனித்தல் என பண்பாடுகள் உச்சத்தில் இருக்கின்றனவாம்!

இது தான் அவர்களது ஆன்மீக பண்பாட்டுப் பலம்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
25.10.2023

TikTok · Masihudeen Inamullah 19/10/2023

https://vt.tiktok.com/ZSNMLQnyQ/

TikTok · Masihudeen Inamullah Check out Masihudeen Inamullah's video.

18/10/2023

🇵🇸
ඊශ්‍රායලයට ඔවුන් කලාපයේ සාමයෙන් සිටිය යුතුද නැතිනම් නිමක් නැති යුද්ධයක සිටිය යුතුද යන්න තීරණය කිරීමට කාලයයි!

ශුද්ධ වූ අල් කුර්ආනයේ ඉගැන්වීම් සහ මුහම්මද් සල්ලල්ලාහු අලෙයිහි වසල්ලම් තුමාණන්ගේ සම්ප්‍රදායන්ට අනුකූලව මුස්ලිම්වරුන්ට ග්‍රන්ථයේ හෝ වෙනත් ඇදහිලිවල පුද්ගලයන් කෙරෙහි ප්‍රකාශිත හෝ රහසිගත වෛරයක් නොමැත.

තම පැවැත්මට විශ්වාසයට හා ගෞරවයට තර්ජනයක් වන අය හැර වෙනත් කිසිදු ජනතාවක් කෙරෙහි වෛරයක් නැත, එබැවින් කිසිවෙකුට තර්ජනයක් නොවන නමුත් ඔවුන් ක්‍රියා කරන්නේ ආරක්ෂාව සඳහා පමණි!

පලස්තීන ජනතාවගේ ප්‍රතිරෝධය වන්නේ ඔවුන් බලහත්කාරයෙන් ඉවත් කළ හෝ විවෘත සිරගෙවල්වලට ඔවුන්ව ස්ථානගත කළ ආක්‍රමණිකයන්ගේ ග්‍රහණයෙන් තම මාතෘ භූමිය මුදා ගැනීමට ඔවුන්ට ඇති නීත්‍යානුකූල අයිතියයි.

පලස්තීනය යනු මුස්ලිම්වරුන්ගේ පමණක් නොව සැබෑ යුදෙව්වන් සහ කිතුනුවන් එහි ඉතිහාසය පුරාම සාමයෙන් එකට ජීවත් වූ අයයි.

ඊශ්‍රායලය යුදෙව් රාජ්‍යයක් බව ප්‍රකාශ කිරීම ජාත්‍යන්තර ප්‍රජාව මුලා කිරීමට සහ යුරෝපයේ සහ වෙනත් රටවලින් මිනිසුන් ඇද ගැනීමට සියොන්වාදී කුමන්ත්‍රණකරුවන් විසින් ගොතන ලද අමූලික බොරුවකි.

1946 දී ලෝක සිතියමේ ඊශ්‍රායලය නමින් රටක් නොතිබුණි, එය මැදපෙරදිග කලාපය කෙරෙහි ඔවුන්ගේ අවශ්යතා ආරක්ෂා කර ගැනීම සඳහා යටත් විජිත බලවතුන් විසින් නිර්මාණය කරන ලද්දකි!

අනවසර පදිංචිකරුවන්ගෙන් බහුතරයක් මැදපෙරදිග කලාපයේ තම අවශ්යතා ආරක්ෂා කර ගැනීම සඳහා සියොන්වාදීන් සහ යටත් විජිත ආක්‍රමණිකයන් විසින් තමන්ව බිල්ලන් බවට පත් කිරීම සඳහා රවටා ඇති බව නොදැන සිටිති.

සියොන්වාදී රාජ්‍යය ආරක්ෂා කිරීම සඳහා එක්සත් ජනපදය සහ සහචරයින් එක්සත් ජනපදයේ සහ යුරෝපයේ බදු ගෙවන්නන්ගෙන් ඩොලර් බිලියන ගනන් පොම්ප කරන කාරනය ඊශ්‍රායලය නව යටත් විජිතවාදී බලවතුන්ගේ අතේ ඇති මෙවලමක් මිස අන් කිසිවක් නොවන බවට පැහැදිලි සාක්ෂියක් මිස අන් කිසිවක් නොවේ.

ඊශ්‍රායලය එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩලයේ සහ ආරක්ෂක මණ්ඩලයේ සහ එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලයේ සහ යුරෝපා සංගමයේ සහ අනෙකුත් ලෝක සංසදවල සියලුම ජාත්‍යන්තර නීති යෝජනා අඛණ්ඩව උල්ලංඝනය කිරීමට එකම හේතුව වන්නේ ඇගේ බටහිර ස්වාමිවරුන්ගේ ආරක්ෂාව යටතේ සිටීමයි.

සියොන්වාදී රාජ්‍යය යටත් විජිත බලවතුන් විසින් නිර්මාණය කර ඇති අතර යුදෙව් ජනතාව ආරක්ෂා කිරීමේ මුවාවෙන් කලාපය තුළ ඔවුන්ගේ න්‍යාය පත්‍රය ක්‍රියාත්මක කිරීම සඳහා මැද පෙරදිග උපායමාර්ගික හවුල්කරුවෙකු ලෙස න්‍යෂ්ටික රකුසා ලෙස වර්ධනය කර ඇත.

ඔවුන් පලස්තීන ජනතාව සමඟ යුද්ධයක නියැලෙනවාද නැතහොත් සාමයෙන් කරට කර ජීවත් වීම සඳහා ඔවුන් සමඟ සාම ගිවිසුමකට එළඹෙනවාද යන්න ඊශ්‍රායල ජනතාවට තීරණය කිරීමට කාලයයි.

ඊශ්‍රායලයේ දේශපාලන පක්ෂ සහ ඔවුන්ගේ නායකයින් තමන් නියෝජනය කරන බව කියන ජනතාව බිල්ලන් බවට පත් කරමින් තම නව යටත් විජිත ස්වාමිවරුන්ට දිගටම සේවය කරන්නේද යන්න තීරණය කළ යුතුය!

මසිහුදීන් ඉනාමුල්ලාහ්
18.10.2023 || SHARE

14/10/2023

அரபுலக நயவஞ்சகத்தின் மீதான பலஸ்தீன் மக்களின் பலத்த தாக்குதல்!
🇵🇸
மேலைத்தேய நவகாலனி நலன்களின் கேந்திர நிலையமாக தொழிற்படும் இஸ்ரேல் தனது வழமைபோல எஜமானர்களை துணைக்கு அழைத்துள்ளமை பிராந்திய பூகோல அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலாதிக்க சக்திகளின் பூகோல மற்றும் மத்திய கிழக்கு புவியரசியல் மூலோபாயங்களை பலஸ்தீன் மக்களது எழுச்சி கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

முதலாம் இரண்டாம் உலகப் போருடன் அரங்கேற்றப்பட்ட சர்வதேச சதிகளும், மேலாதிக்கப் போட்டா போட்டிகளும் பனிப்போர்களும், ஆக்கிரமிப்புகளும், மத்திய கிழக்கில் மையமாகக் கொண்டிருந்த மூலோபாய நகர்வுகளும் பலஸ்தீன் மக்களின் போராட்டத்தினால் தீர்க்கமான ஒரு கட்டத்திற்கு நகர்த்தப் பட்டுள்ளது.

உத்மானிய சாம்ராஜ்ய வீழ்ச்சியுடன் அரபுலக நயவஞ்சகம் அரங்கேறுகிறது முதலாவது இறையில்லமும் பலஸ்தீன் இராச்சியமும் மேலைத்தேய மேலாதிக்க சக்திகளிடம் பறிபோகின்றன!

சர்வதேச ஸியோனிஸ சாம்ராஜ்ய கனவின் பங்காளர்களாக அரபுலக குட்டி ஸுல்தான்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலவந்தமாகவே உள்வாங்கப் படுகிறார்கள், மத்திய கிழக்கிலும் அரபு வலைகுடாவிலும் வல்லரசுகளின் படைமுகாம்கள் அமைக்கப்படுகின்றன!

யுக்ரேன் ரஷ்ய மோதலை மையப்படுத்திய மேலாதிக்க சக்திகளின் பூகோல மத்திய கிழக்கு மூலோபாயங்களை புதிய பரிமாணங்களுக்கு நகர்திக் கொண்டிருந்த வேளையில் பலஸ்தீன் மக்கள் தருணம் பார்த்து மெளனம் கலைந்து காரியத்தில் இறங்கி விட்டமை மேலைத்தேய மேலாதிக்க சக்திகளை கதிகலங்கச் செய்துள்ளமை அவர்களது புவியரசியல் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகும்!

அமெரிக்காவின் மத்திய கிழக்கு மற்றும் வலைகுடா நேசநாடுகள் தமது மக்களது எழுச்சிக்கு உணர்வலைகளுக்கு முன்னால் மண்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் ஸியோனிஸ சாம்ராஜ்யமாகிய இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பிற்கு கொண்டுவருவதற்கான புதிய வரைபடங்களை தயார் செய்து கொண்டிருந்த அரபுலக நயவஞ்சக ஆட்சியாளர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர், தமது நகர்வுகளை இடைநிறுத்த நிர்பந்திக்கப் பட்டுள்ளனர்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் மத்திய கிழக்கு சூராவளி சுற்றுப் பயணம் எதிர்பார்த்த அனுகூலங்களைத் தரவில்லை, பலஸ்தீனப் போராளிகளின் தாக்குதல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு அரபுத் தலைமையும் ஏன் பலஸ்தீன் அதிகாரசபை அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூட கண்டிக்கவில்லை.

மாறாக, சர்வதேச சட்டங்களையும் மானுட நியாய தர்மங்களையும் அத்துமீறும் இஸ்ரேலின் அராஜகங்களை காட்டுதர்பார் அடாவடித்தனங்களை சர்வதேச சமூகம் கண்டிக்கும் நிலையில் வெள்ளை மாளிகையின் உள்வீட்டு தேர்தல் மற்றும் புவி அரசியலும் கேள்விக்குறியாகியுள்ளன!

சர்வதேச நிகழ்ச்சி நிரலில் யுக்ரேன் ரஷ்ய மோதலை விஞ்சிய நிலையில் பலஸ்தீன் இஸ்ரேல் மோதல் தீர்க்கமான புதிய களநிலவரங்களை தோற்றுவித்துள்ளது !

முதலாம் இரண்டாம் உலக மகா யுத்தங்களிற்கு பின்னரான வரலாறு பலஸ்தீன் மக்களது கண்ணீராலும் இரத்தத்தினாலும் மீண்டும் எழுதப்படுகிறது, ஆனால் அவர்களோ முஸ்லிம் உலகமோ மூன்றாம் உலகப் பேரழிவை விரும்பவில்லை, அமைதியையும் சமாதானத்தையுமே வேண்டி நிற்கிறார்கள்!

தொடரும்

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
14.10.2023

Photos from Masihudeen Inamullah's post 13/10/2023

அகிலமெங்கும் ஈமானிய இரத்தத்தை அல்குத்ஸ் எனும் இதயம் பீய்ச்சிக்கொண்டு பாய்ச்சுக் கொண்டிருக்கிறது!

அரபுலக குட்டி ஸுல்தான்களது அரண்மனைச் சுவர்கள் கூட ஈமானிய இதயங்களின் துடிப்பால் அதிர்கின்றன!

சத்தியம் ஒரு போதும் செத்துப் போவதில்லை என்பதனை அன்பையும் அறத்தையும் நேசிக்கும் அனைத்து மாந்தர் மனங்களும் சாட்சி பகரும் தருணமிது!

இதயங்களை ஈமானிய ஈரத்தினால் பசுமையாக வைத்திருக்கவே சோதனைகளை நியதியாக வைத்துள்ளான் இறைவன்!

அதுவே உண்மையான வெற்றி!

12/10/2023

ඊශ්‍රායලය" අවසන් හුස්ම හෙළයි!

ඊශ්‍රායලය අවසන් හුස්ම හෙළයි, මෙම මාතෘකාව යටතේ හෙබ්‍රෙව් පුවත්පත "Haaretz" සුප්‍රසිද්ධ සියොන්වාදී ලේඛකයාගේ (Ari Shavit) ලිපියක් ප්‍රකාශයට පත් කළේය: අපි ඉතිහාසයේ වඩාත්ම දුෂ්කර මිනිසුන්ට මුහුණ දෙන බව පෙනේ, ඔවුන්ට හඳුනා ගැනීම හැර විසඳුමක් නැත, ඔවුන්ගේ අයිතිවාසිකම් පිළිගෙන වාඩිලෑම අවසන් කිරීම හැර.

ෂබිත් සිය ලිපිය ආරම්භ කළේ මෙසේ පවසමිනි: අප ආපසු නොපැමිණීමේ ලක්ෂ්‍යය පසු කර ඇති බව පෙනේ, වාඩිලාගැනීම අවසන් කිරීමට, පදිංචි කිරීම නැවැත්වීමට සහ සාමය ළඟා කර ගැනීමට “ඊශ්‍රායලයට” තවදුරටත් නොහැකි විය හැකිය. තවදුරටත් මේ රටේ සියොන්වාදය ප්‍රතිසංස්කරණය කිරීමට, ප්‍රජාතන්ත්‍රවාදය සුරැකීමට, ජනතාව බෙදීමට නොහැකි බව පෙනේ.

තත්ත්වය මෙසේ නම් මේ රටේ ජීවත්වීමේ රසයක් නැති බවත් “Haaretz” හි ලිවීමේ රසයක් නැති බවත් “Haaretz” කියවීමේ රසයක් නැති බවත් ඔහු වැඩිදුරටත් පැවසීය.

මීට වසර දෙකකට පෙර රගල් ඇල්ෆර් යෝජනා කළ පරිදි රට හැර යාම අපි කළ යුතුයි. "ඊශ්‍රායලය" සහ යුදෙව් බව අනන්‍යතාවයේ අත්‍යවශ්‍ය සාධකයක් නොවේ නම් සහ සෑම "ඊශ්‍රායල්" පුරවැසියෙකුටම විදේශ ගමන් බලපත්‍රයක් තිබේ නම්, තාක්ෂණික අර්ථයෙන් පමණක් නොව, මනෝවිද්‍යාත්මක අර්ථයෙන්ද, කාරණය අවසන් වේ. ඔබ මිතුරන්ගෙන් සමුගෙන සැන් ෆ්රැන්සිස්කෝ, බර්ලින් හෝ පැරිස් වෙත යා යුතුය.

එතැන් සිට නව ජර්මානු ආන්තික ජාතිකවාදයේ භූමියෙන් හෝ නව ඇමරිකානු අන්ත ජාතිකවාදයේ භූමියෙන් යමෙකු සන්සුන්ව බලා "ඊශ්‍රායල් රාජ්‍යය" අවසන් හුස්ම හෙළන අයුරු බලා සිටිය යුතුය. අපි පියවර තුනක් පසුපසට ගෙන යුදෙව් ප්‍රජාතන්ත්‍රවාදී රාජ්‍යය ගිලී යන අයුරු බලා සිටිය යුතුය. ප්‍රශ්නය තවම විසඳිලා නැතුව ඇති.

අප තවමත් ආපසු නොපැමිණීමේ ලක්ෂ්‍යය පසු කර නොතිබිය හැකිය. වාඩිලෑම අවසන් කිරීමට, පදිංචි කිරීම් නතර කිරීමට, සියොන්වාදය ප්‍රතිසංස්කරණය කිරීමට, ප්‍රජාතන්ත්‍රවාදය සුරැකීමට සහ රට බෙදීමට තවමත් හැකි විය හැකිය.

ලේඛකයා තවදුරටත් මෙසේ පැවසීය: “මම නෙතන්යාහු, ලිබර්මන් සහ නව-නාසිවරුන්ගේ ඇස්වලට මගේ ඇඟිල්ල තැබුවෙමි, ඔවුන්ගේ සියොන්වාදී ව්‍යාකූලත්වයෙන් ඔවුන් අවදි කිරීමට, වාඩිලෑම අවසන් කරන්නේ ට්‍රම්ප්, කුෂ්නර්, බිඩෙන්, බරක් ඔබාමා සහ හිලරි ක්ලින්ටන් නොවේ.”

ජනාවාස නවත්වන්නේ එක්සත් ජාතීන්ගේ සංවිධානය සහ යුරෝපා සංගමය නොවේ. යථාර්ථය හඳුනාගෙන පලස්තීනුවන් මේ භූමියේ මුල් බැසගෙන සිටින බව නව දේශපාලන භාෂාවක් නිර්මාණය කිරීමෙන් ඊශ්‍රායලය තමන්ගෙන් ගලවා ගැනීමට හැකි ලොව එකම බලවේගය ඊශ්‍රායල් ජාතිකයන්ම වේ. මෙහි නොමැරී ජීවත් වීමට තුන්වන මාර්ගය සොයා බලන ලෙස මම ඔබෙන් ඉල්ලා සිටිමි.

Haaretz පුවත්පතේ ලේඛකයා සනාථ කරයි: ඔවුන් පලස්තීනයට පැමිණි දා සිට, "ඊශ්‍රායෙල්වරුන්" තමන් ඉතිහාසය පුරා යුදෙව් චරිතයට සියලු රැවටීම් යොදාගත් සියොන්වාදී ව්‍යාපාරය විසින් නිර්මාණය කරන ලද බොරුවක ප්‍රතිඵලයක් බව වටහාගෙන ඇත.

හිට්ලර් සමූලඝාතනය ලෙස හැඳින්වූ දෙය ගසාකෑම සහ අතිශයෝක්තියට නැංවීමෙන්, පලස්තීනය “පොරොන්දු වූ දේශය” බවත්, සොලමන් දේවාලය පිහිටා ඇත්තේ අල්-අක්සා පල්ලිය යට බවත් ලෝකයට ඒත්තු ගැන්වීමට ව්‍යාපාරයට හැකි විය. මේ අනුව, වෘකයා න්‍යෂ්ටික රකුසා බවට පත් වන තෙක් ඇමරිකානු සහ යුරෝපීය බදු ගෙවන්නන්ගේ මුදලින් කිරි උරා බොන බැටළු පැටවෙකු බවට පරිවර්තනය විය.

පලස්තීනය ඔවුන් බොරු කීවාක් මෙන් මිනිසුන් නැති දේශයක් නොවන බැවින් ඔවුන්ට පලස්තීනයේ අනාගතයක් නොමැති බව "ඊශ්‍රායෙල්වරුන්" තේරුම් ගනී.

පලස්තීන ජනතාවගේ පැවැත්ම පමණක් නොව, "ඊශ්‍රායෙල්වරුන්ට" වඩා ඔවුන්ගේ උසස් බව පිළිගන්නා තවත් ලේඛකයෙක් මෙන්න - වාමවාදී සියොන්වාදී ගිඩියොන් ලෙවි, ඔහු පවසයි:

පලස්තීනුවන් අනෙකුත් මානව වර්ගයාට වඩා වෙනස් ස්වභාවයක් ඇති බව පෙනේ. අපි ඔවුන්ගේ ඉඩම අල්ලා ගත් අතර, අපි ඔවුන්ගේ තරුණයින්ට ගණිකාවන්, සහ මත්ද්‍රව්‍යවලට ඇබ්බැහි වූවන් ලෙස හැඳින්වුවෙමු.

අපි කිව්වා අවුරුදු කිහිපයක් ගත වන අතර, ඔවුන්ට තම මව්බිම සහ ඔවුන්ගේ භූමිය අමතක වනු ඇත, පසුව ඔවුන්ගේ තරුණ පරම්පරාව 1987 Intifada පුපුරා ගියේය. අපි ඔවුන්ව සිරගෙවල්වල දමා, “අපි ඔවුන්ව සිරගෙවල්වල ඇති කරන්නෙමු”යි කීවෙමු.

වසර ගණනාවකට පසු, ඔවුන් පාඩම ඉගෙන ගෙන ඇතැයි අප සිතූ පසු, ඔවුන් 2000 වසරේ සන්නද්ධ නැගිටීමක් සමඟ භූමිය කා දමමින් අප වෙත පැමිණියේය. අපි ඔවුන්ගේ නිවාස කඩා වසර ගණනාවක් වටලන බව කීවෙමු. වටලෑම සහ විනාශය නොතකා ඔවුන් අපට පහර දීමට නොහැකි මිසයිල ලබා ගත්හ. ඒ නිසා අපි බිත්ති සහ කටු කම්බි යොදා ඔවුන් සඳහා සැලසුම් කරන්න පටන් ගත්තා. .

ඊට පස්සෙ අන්තිම යුද්දෙදි අපිව මරනකන්ම පොලව යට ඉඳන් උමං හරහා අපි ළඟට ආවා. අපි ඔවුන් සමඟ අපගේ මනසින් සටන් කළෙමු, පසුව ඔවුන් "ඊශ්‍රායල්" චන්ද්‍රිකාව (ආමෝස්) අල්ලා ගත්හ. තර්ජන විකාශනය කිරීමෙන් ඔවුන් "ඊශ්‍රායලයේ" සෑම නිවසකටම භීෂණය ගෙන එයි, ඔවුන්ගේ තරුණයින්ට "ඊශ්‍රායල්" චැනල් 2 හි පාලනය අල්ලා ගැනීමට හැකි විය.

සාරාංශයක් ලෙස, ඉතිහාසයේ වඩාත්ම දුෂ්කර මිනිසුන්ට අප මුහුණ දෙන බව පෙනේ, ඔවුන්ගේ අයිතිවාසිකම් හඳුනාගෙන වාඩිලෑම අවසන් කිරීම හැර ඔවුන්ට විසඳුමක් නැත.

ලිපි මාතෘකාව: "ඊශ්‍රායලය" අවසන් හුස්ම හෙළයි!"

ලේඛකයා: Ari Shavit මූලාශ්රය: Hebrew පුවත්පත Haaretz. කරුණාකර ලිපිය බෙදා ගන්න

11/10/2023

இன்ஷா அல்லாஹ்,
இந்தவார ஜும்ஆ பிரசங்கங்களை ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் மற்றும் முதலாவது இறையில்லம் தொடர்பில் புதிய தலைமுறைகளுக்கு புரியும் விதத்தில் அமைத்துக் கொள்வதோடு மிக விரைவில் சமாதான முன்னெடுப்புகள் ஆரம்பமாகவும், பலஸ்தீன் தேசம் மலர்வதற்கும் அங்கு அமைதி சமாதானம் நிலவுவதற்கும் துஆ பிரார்தனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாகங்கள் மேற்கொள்தல் வேண்டும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍️ 11.10.2023

06/10/2023

அவர்களுடைய தந்தை ஸாலிஹான நல்ல மனிதராக இருந்தார்!

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வினால் அறிவு ஞானம் வழங்கப்பட்ட நல்லடியாருடன் (கிழ்ரு-அலை) கடல் பயணத்தில் இருந்த போது ஒரு பட்டினத்தை அடைந்தனர்.

அங்குள்ள பட்டினவாசிகளிடம் தாம் வழிப்போக்கர்கள் இங்கு உங்களுடன் தங்கிவிட்டு எமது பயணத்தை தொடரலாமா என்று கேட்கிறார்கள், அவர்களோ இல்லை அறிமுகமில்லாத நீங்கள் இங்கு தங்க முடியாது என மறுத்து விட்டார்கள்!

சரி, வேறு எங்காவது செல்வோம் என இருவரும் நடந்து செல்ல ஊர் எல்லையில் ஒரு சுவறு சரிந்து விழும் நிலையில் சாய்ந்திருப்பதை அந்த மகாஞானி காண்கிறார், அருகில் சென்று அதனை தள்ளி நிமிர்த்தி சரி செய்து விடுகிறார்கள்.

உடனே மூஸா (அலை) அவர்கள் பொறுமையிழந்து அந்த நல்லடியாரிடம் ஏன் இந்த வேண்டப்படாத வேலை?, அவர்கள் உம்மை தம்மோடு விருந்தினராக தங்கிச் செல்லவும் அனுமதிக்க வில்லை, அப்படியென்றால் இந்த சிரமத்திற்கு கூலியாவது பெறலாமே? எனக் கேட்கிறார்கள்.

மூஸாவே, இதற்குத் தான் நான் ஏற்கனவே உம்மிடம் "வேண்டாம், என்னுடன் பயணிக்க உமக்கு பொறுமை இல்லை!" எனச் சொன்னேன் இவ்வாறு கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பதாயின் இத்தோடு போய்விடும் என்று கடிந்து கொள்கிறார்.

இவ்வாறு மூன்று விசித்திரமான செயல்களை அந்த நல்லடியாரான ஞானி செய்த போதெல்லாம் மூஸா (அலை) பொறுமையிழந்து விளக்கம் கேட்டு திட்டு வாங்கிக் கொண்டார்கள்.

பின்னர் இருவரும் பிரிந்து செல்லும் நேரத்தில் அவற்றிற்கு அந்த நல்லடியார் விளக்கம் சொல்லுகிறார்:

சரிந்து விழும் நிலையில் இருந்த அந்த சுவற்றின் கீழ் பட்டினத்தில் வசிக்கும் இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சேர வேண்டிய புதையல் இருந்தது, அவர்கள் பெரியவர்ளாகிய பின் அதனை கண்டெடுக்க வேண்டும், சுவறு விழுந்து விட்டால் புதையல் வெளிவந்து வேறு எவரேனும் எடுத்துக் கொள்வார்கள் என்று கூறிவிட்டு..

அந்த சிறுவர்களது தந்தை ஸாலிஹான நல்லடியாராக இருந்தார் என விபரித்தார்கள், ஸாலிஹான நல்லடியார்கள் தமது சந்ததிகள் குறித்து அல்லது அவர்களுக்காக தாம் விட்டுச் செல்லும் செல்வங்கள் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்ற மகத்தான ஒரு செய்தியை அவர் நபி மூஸா (அலை) அவர்களுக்கு உணர்த்துகிறார்கள்!

ஸாலிஹான அல்லாஹ்வின் நல்லடியார்களது வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் அவர்கள் விட்டுச் செல்லும் நல்ல சந்ததிகள் வாழ்விலும் வாழ்வாதாரங்களிலும் அல்லாஹ்வின் அருள் விருத்தி பாதுகாப்பு உத்தரவாதம் இருப்பதனை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

அடுத்த இரு சம்பவங்கள் குறித்தும் பின்னர் பார்ப்போம், அதுவரை (இன்றைய) புனித ஜும்மாஹ் தினத்தில் ஓதுமாறு ஊக்கப்படுத்தப் பட்டுள்ள ஸூரதுல் கஹ்ஃபில் வருகின்ற அந்த கதைகளை பொருளுணர்ந்து ஓதி அறிந்து கொள்ள முயற்சிப்போம்!

அன்பின் உறவுகளே,
எம்மையும் எமது பெற்றார், உடன் பிறப்புகளையும் மனைவி மக்களையும், உற்றார் உறவினர்கள், ஆசான்களையும் அன்பிற்குரியவர்களையும் உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
06.10.2023 || SHARE

03/10/2023

உடலும் உயிரும் ஆயுளும் ஆரோக்கியமும் அமானிதங்களாகும்!
🧠🫀🫁
அல்லாஹுத் தஆலா படைப்புகளில் எல்லாம் மிகச் சிறந்த வடிவமைப்பில் மனிதனைப் படைத்துள்ளான்.

அவனது உடலுறுப்புகள், அங்க அவயவயங்கள், நாடி நரம்புகள், தசைநார்கள், ஐம்புலன்கள் அவற்றின் இயற்கையான நுண்ணிய கட்டமைப்புகள், கலங்கள் நிறமூர்த்தங்கள் என அனைத்திலும் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் இருப்பதாகவும் அவனது படைப்பாற்றலை அறிந்து அவனுக்கு நன்றியுடையவர்களாக இருந்து படிப்பினைகள் பெறுமாறும் அவன் கட்டளை இடுகிறான்.

அதேபோன்று ஒரு மனிதன் தனது உடலுக்கோ உயிருக்கோ தீங்கிழைத்துக் கொள்வது பெரும்பாவமாக ஹராமாக்கப் பட்டுள்ளது, ஒருவர் தனது உயிரை தற்கொலை மூலம் மாய்த்துக் கொண்டால் அவர் நிராகரிப்பாளராக மரணிக்கிறார், நேரடியாகவே நரகிற்குச் செல்கிறார் என இஸ்லாம் எச்சரிக்கிறது.

மனிதனது உடல் உள மூளை ஆரோக்கியத்தை கெடுக்கும் அனைத்துவிதமான உணவு பானங்களும் போதை வஸ்துகளும், புகைத்தலும் தீய பழக்க வழக்கங்களும் ஹராமானவையாகும்!

அவற்றை மிகவும் சிறப்பாக பேணுவதும் ஆரோக்கியமாக வைத்திருப்பதும், பாதுகாத்துக் கொள்வதும் வணக்க வழிபாடுகள் போன்று நன்மை தரும் காரியங்களுமாகும்!

உயிர்களை வாழவைப்பது, பசிக்கு உணவளிப்பது, நீர்வளங்களை ஏற்படுத்துவது, சதகா ஸகாத் தான தர்மங்கள் என ஏழை எளியவர்களை வாழ வைப்பது எவ்வளவுக்கு எவ்வளவு பிரதானமோ அதே போன்றே உயிர்களை காவு கொள்ளும் தீமைகளை தவிர்ப்பதும் தடுப்பதும் மார்க்கம் விதியாக்கும் கடமைகளாகும்.

இஸ்லாம் மனிதனுக்கு ஆகுமாக்கிய ஹலாலான தூய்மையான ஆகாரங்கள், பழக்க வழக்கங்கள் யாவும், அதேபோன்று ஹராமென தடுத்தவைகளும் அவனது உடல் உள ஆரோக்கியத்தை பேணுவதற்கான கட்டுப்பாடுகள் ஆகும்.

ஒரு தனியாளாக தனது ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் உணவு பானங்கள் பழக்கவழக்கங்களை மது புகைத்தல் போதைகளில் இருந்து தம்மை தற்காத்துக் கொள்வது போன்று குடும்ப உறுப்பினர்களது விடயத்திலும் ஒரு விசுவாசி கரிசனை கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக தாம் வாழும் சமூகம் தேசம் என கூட்டு வாழ்வில் கூட்டுப் பொறுப்புடன் செயற்படுவது சத்திய சன்மார்க்கத்தின் கட்டளையாகும், அத்தகைய சமூகத் தீமைகள் குற்றச் செயல்களில் இருந்து மக்களை சந்ததிகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பான சூழலை உலகை கட்டி எழுப்புவது விதிக்கப்பட்ட கூட்டுப் பொறுப்பாகும்.

புகையிலை மது போன்றவற்றை வாங்கி நூகர்வது மட்டுமன்றி அவற்றை விற்பனை செய்வதும் ஹராமாகும், போதைப் பொருள் பாவனை மட்டுமன்றி அவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோ சந்தைப்படுத்துவதும் மிகப் பெரும் பாவமாகும்.

நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதும் மனித குல விமோசனத்திற்காக அனுப்பப்பட்ட சிறந்த உம்மத்தின் தலையாய பண்பாகும்!

புகைத்தல், மது அபாயகரமான போதை வஸ்த்துகள் என்பவற்றிற்கு எதிரான போராட்டங்களில் இன மத குல சமய வேறுபாடுகளுக்கு அப்பால் களத்தில் இறங்கி போராடுவதும் எழுதுவதும் பேசுவதும் விளிப்புணர்வை ஏற்படுத்துவதும், அரச யந்திரங்களுடன் பாதுகாப்பு தரப்பினருடன் ஒத்துழைப்பதும் யுகத்திற்கான (ஜிஹாத்) அறப்போராட்டமாகும்!

இஸ்லாமிய அழைப்புப் பணி அறப்பணி அறப்போராட்டம் என்பவை உம்மத்தின் விகிதாசரங்களுக்குள் மட்டுப்பட்ட வணக்க வழிபாடுகளும், சமய சாஸ்திரங்களும், கிரியைகளும் மாத்திரம் அல்ல, அது ஒட்டு மொத்த மனித குலத்தின் விமோசனத்திற்குமான அமைதியான அழகிய ஆரோக்கியமான வளமான உலகை உருவாக்கும் காருண்யத் துதாகும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
03.10.2023

02/10/2023

🗳️
அரசியலை அந்நியமாகப் பார்ப்பதன் விளைவு!

அரசியலை ஒரு சாக்கடையாக பார்க்கும் நிலை நெடுங்காலமாக இருந்து வருவதை அறிவோம்!

அதிகார மோகம், கட்சிவெறி, பிளவுகள், பிணக்குகள், மக்களது வரிப்பணத்தில் சுகபோகம் அனுபவிக்கும் சுரண்டல்கள், ஊழல் மோசடிகள், ஆட்சிக் கதிரைகளைக் கைப்பற்றவும் தக்க வைத்துக் கொள்ளவும் பஞ்சமா பாதகங்களைப் புரிதல், சதி மோசடிகள், பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுதல் என அனைத்து விதமான சீர்கேடுகளினதும் தலங்களாக களங்களாக அரசியல் அரங்குகள் இருப்பதே அது சாக்கடையாக பார்க்கப்படுவதற்கான காரணமாகும்!

ஆக, சமூகத்தில் தேசத்தில் கெளரவமாக வாழ விரும்புபவர்கள், கல்வி உயர்கல்விச் சமூகத்தினர், சமய சன்மார்க்கத் தலைமைகள் என உண்மை நீதி நேர்மை மற்றும் உயரிய நாகரீகம் பண்பாடுகளை நேசிப்பவர்கள் தாமோ தமது பிள்ளைகள் சந்ததிகளோ அரசியல் செய்வதனை விரும்புவதில்லை!

இவ்வாறான மனநிலையின் காரணமாக தேசத்தின் சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற பொறுப்பை காவாலிகளிடமும் பாதாள உலக கோஷ்டிகளிடமும், இனமத வெறியர்களிடமும், குறுக்கு வழிகளில் முதலீட்ட விரும்பும் பண முதலைகளிடமும், ஊழல் மோசடிப் பேர்வழிகளிடமும், போதை வஸ்த்து, ஆயுதம் ஆட்களை கடத்துவோரிடமும் மக்கள் விட்டு விடுகின்றனர்.

ஆனால், மக்களுக்காக மக்களால் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் ஜனநாயகத்தில் மேலே சொன்ன சகல நாகரீகமான நேர்மையான தேச சமய சமூக பற்றுள்ள வகையறாக்களும் நம்பிக்கை கொண்டு தேர்தல் காலங்களில் வாக்களிக்கச் செல்வதோடு கெளரவ வேடங்களில் அரங்கேறும் காவலிகளையும் காடையர்களையும் தெரிவு செய்து கொள்கின்றனர்.

ஊராட்சி, நகராட்சி, மாகாண ஆட்சி, மத்திய ஆட்சி என சகல ஆட்சிக் கட்டமைப்புகளிலும் ஊழல் மோசடிப் பேர்வழிகளை பஞ்சமா பாதகங்கள் புரியும் பாதாள உலகத்தினரை பாதிக்கு மேல் மக்களுக்காக மக்களே தெரிவு செய்து கொள்கின்றனர்.

விளைவு நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது, மொத்த தேசிய உற்பத்தியை விடவும் 110% கடன் சுமை அதிகரித்துள்ளது, நாட்டின் வளங்கள் விற்கப்படுகின்றன, மக்கள் மீதான தலைவீத கடன் பத்து இலட்சத்தை தாண்டி விட்டது, பணவீக்கம் அதிகரித்து விலைவாசிகள் உயர்ந்து மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், சுகாதாரத்துறை பாதிக்கப்பட்டிருக்கிறது, தரமற்ற உணவு, மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப் படுகின்றன, போஷாக்கின்மை அதிகரித்திருக்கிறது..!

கல்வி உயர்கல்வித் துறை பாதிக்கப்பட்டுள்ளது, ஆறு இலட்சம் மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சை எழுதும் நாட்டில் 35000 பேருக்கு மாத்திரமே பல்கலைக் கழகங்களில் இடமிருக்கிறது, வேலவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது, வருடாவருடம் நிபுணத்துவம் இல்லாத பணியாட்களாக சுமார் மூன்று இலட்சம் இளைஞர்கள் மாதர்கள் மத்திய கிழக்கிற்கு படை எடுக்கிறார்கள், நாட்டில் தொழில் செய்பவர்களும் வாழ்க்கைச் செலாணிக்கு ஈடுகொடுக்கும் ஊதியம் போதாமையால் தவிக்கின்றனர்.

இப்போது நாம் சொன்ன நேர்மையான நல்ல மனிதர்கள் படித்தவர்கள் துறைசார் நிபுணர்கள்.. இது தமக்கும் தமது பிள்ளைகள் சந்ததிகளுக்கும் வாழ உகந்த நாடு இதுவல்ல என நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கேடுகெட்ட வங்குரோத்து கொந்தராத்து அரசியல் கலாசாராத்தை முழுமையாக மாற்றியமைக்க களமிறங்கும் தேசப்பற்றாளர்கள் தேசத்துரோகிகளாக தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு வருகிறது.

இயற்கை வளங்கள், மனித வளங்கள் நிறைந்த எழில்மிகு எங்கள் தேசம் மீட்கப்பட வேண்டும், இந்த தேசத்தைவிட வேறு எந்த தேசமும் எமக்கோ எமது சந்ததிகளுக்கோ நிரந்தரமான நிம்மதியான வாழ்விடமாக அமையப் போவதில்லை, நாட்டை விட்டு எங்கு தான் ஓடி உழைத்தாலும் சேமிப்புக்களுடன் இந்த நாட்டிற்கே நாம் மீள வேண்டும், எமது கூட்டம் குடும்பங்களும் உறவுகளும் இங்கேதான் வாழப் போகிறார்கள்!

நீதியை நிலை நிறுத்துவதும் அநீதி அக்கிரமங்களுக்கு எதிராக எழுந்து நிற்பதும் தார்மீகக் கடமையாகும், சகல சமய சன்மார்க்கங்களும் போதிக்கும் யுகத்திற்கான அறப்பணியும் போராட்டமுமாகும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍️ 02.10.2023

01/10/2023

வேடிக்கை மனிதர், Funny Fellows!

தேடிச் சோறு நிதந் தின்று -
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம் வாடித் துன்பமிக உழன்று -
பிறர் வாடப் பல செயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?

-மகாகவி பாரதி-

உண்டு களித்து தினம், ஊரு பலாய் பேசி, உருட்டுப் புரட்டுகள் பல செய்து, உறவுகள் போக ஊர் வம்புகளும் வளர்த்து, வாங்கிக் கட்டி, நிம்மதி தொலைத்துக் கவலையில் வாடி, திக்குமுக்குத் தெரியாது திணறியடித்துக் காலம் கடத்திக் கிழடு தட்டிப் பின் இஸ்ராயீல் அழைப்பேற்று வாழ்வைத் தொலைத்த வேடிக்கை மனிதனாய் மண்ணறையில் சென்று வீழ்வேன் என நீயெனை நினைத்தாயோ..ஷைத்தானே!?

01/10/2023

திங்கள் முதல் வெள்ளிவரை..!

திங்கள் கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு முன்னரே அலாரம் அடிக்கிறது, மனைவி எழுந்து அவசர அவசரமாக கணவரையும் பிள்ளைகளையும் எழுப்பி விடுகிறார்.

அவசர அவசரமாக காலையில் ஸுபஹு தொழுது விட்டு தேநீர் அருந்தி காலைக்கடன்களை முடித்துவிட்டு கணவரும் மனைவியும் அல்லது கணவர் மாத்திரம் தொழிலுக்கும் பிள்ளைகள் வயதிற்கேற்ப பாடசாலை பல்கலைக் கழகம் அல்லது தொழில் என கிளம்பி விடுகிறோம்.

எல்லோரும் கல்வி தொழில் என வாழ்வாதாரத்திற்கான உழைப்பை நாடி தேவைகள், அடிப்படைத் தேவைகள், ஆசைகள், பேராசைகள் என்ற ஆயிரம் கனவுகள் திட்டங்களுடன் ஒவ்வொரு திசையிலும் பறப்பட்டுச் செல்கிறோம்.

நிச்சயிக்கப்பட்ட நேரம் வரை எமக்கு நிர்ணயிக்கப்பட்ட ரிஸ்கை வாழ்வாதாரத்தை தேடும் எமது ஓட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும், எப்போது எங்கே எப்படி எமக்கான அழைப்பு வரும் என்பதனை நாம் அறியமாட்டோம்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கிழமை நாட்களில் அதிகாலை எழுந்திருக்கும் நாம் வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை தினங்களில் பெற்றோரும் பிள்ளைகளுமாக சற்று ஓய்வெடுக்கிறோம் தாமதமாக எழுந்திருக்கிறோம், சில வீடுகளில் பெற்றோர் எழுந்தாலும் பிள்ளைகள் சற்று ஓய்வெடுக்கட்டும் என்று இருந்து விடுகிறோம்.

கேள்வி என்ன வென்றால், வார நாட்களில் நாம் கல்வி தொழில் என்பவற்றிற்காக தானா எழுந்திருக்கிறோம், ஸுபஹு தொழுவதற்காக எழுந்திருப்பதாயின் வார இறுதி நாட்களில் விடுமுறை நாட்களில் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் விடுமுறை தந்திருக்கிறார்களா? என்பது தான்.

சில மத்திய கிழக்கு நாடுகளில் வியாழன் மாலை (வெள்ளி இரவு) விடிய விடிய கேளிக்கைகளில் இருந்துவிட்டு வெள்ளிக்கிழமை சுபஹும் தொழாமல் ஜும்மாஹ் நேரம் வரை நித்திரை கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கிறது !

எமது மனச்சாட்சிகளை கை வைத்து கேட்போம்? எந்த கல்விக்காக, எந்த தொழிலுக்காக; வாழ்வாதாரத்திற்காக நாம் அதிகாலை கண்விழித்து ஓடுகிறோமோ அவை எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதனை ஏன் மறந்து விடுகிறோம்.?

அடுத்த நாள் பொழுது விடிந்ததன் பின்னரும் நித்திரை செய்யலாம் என முந்திய நாள் பின்னிரவு வரை விழித்திருந்து பொழுது போக்கும எமது உள்ளத்தில் இறையச்சம் எந்த அளவில் இருக்கிறது என்பதனை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்ததுண்டா..?

நாங்கள் கல்வியிலும் தொழிலிலும் ஹலாலான உழைப்பிலும் வாழ்வாதாரத்திலும் கொண்டுள்ள பற்றுதல் நம்பிக்கை விசுவாசம் ஆர்வம் எமது வாழ்வையும் மரணத்தையும் இரணத்தையும் காலம் நேரம் அளவு இடம் என சகல வற்றையும் கழாவிலும் கத்ரிலும் நிர்ணயிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் விடயத்தில் இரண்டாம் பட்சமாகிறதா..?

இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் நாம் எங்கு எந்த நிலையில் எந்த தினத்தில் இருந்தாலும் இறையுணர்வடன் இறையன்புடன் இறையச்சத்துடன் கடமையான நபிலான வணக்க வழிபாடுகளில் கவனமாக இருந்து அவற்றை முதன்மைப்படுத்தி எமது வாழ்வாதார இலக்குகளையும் முயற்சிகளையும் முழு நேர இபாதத்களாக மாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.

இங்குதான் எமது ஆன்மீகப் படித்தரம் அந்தஸ்து பரீட்சிக்கப்படுகிறது!

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களனைவரையும் எல்லையில்லா தன் கருணை கூர்ந்து பொருந்திக் கொள்வானாக.! ஆமீன்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
22.09. 2017||SHARE || மீள்பதிவு

அன்பர்களே,
என்னையும் எனது பெற்றார் உடன் பிறப்புகளையும் மனைவி மக்களையும் ஆசான்களையும் அன்பிற்குரியவர்களையும் உங்கள் உயரிய ஆத்மார்த்தமான துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

28/09/2023

இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) தான் ஒரு மன்னராகவோ செல்வந்தராகவோ இருப்பதனை ஏன் விரும்பவில்லை?

ஒரு முறை இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அமர்ந்திருக்கின்ற நிலையில் மற்றொரு வானவர் வருகை தருகின்றார்.

ஆச்சரியமாக அவரைப்பார்த்த இறைதூதர் (ஸல்) அவர்களிடம் ஜிபரயீல் (அலை) அவர்கள், படைக்கப்பட்டதற்கு பின்னர் இதுவே இந்த வானவர் முதன் முறையாக உலகிற்கு அனுப்பப் பட்டுள்ளார், அல்லாஹ்விடமிருந்து பிரத்தியேகமான ஒரு செய்தியை கொண்டுவந்துள்ளார், நீங்கள் உமது இரக்ஷகனுடன் பணிவாக நடந்து கொள்ளுங்கள் என ஆலோசனை கூறுகிறார்கள்.

வருகை தந்த வானவர் இறைதூதரைப் பார்த்த்து ஒரு மன்னராகவும் நபியாகவும் இருக்க விரும்புகிறீர்களா அல்லது ஒரு சாதாரண அடியாராகவும் நபியாகவும் இருக்க விரும்புகிறீர்களா? என கேட்கிறார்கள்.

உடனே இறைதூதர் (ஸல்) அவர்கள் தான் ஒரு சாதாரண அடியாராகவும் நபியாகவும் இருக்கவே விரும்புவதாக கூறிவிடுகிறார்கள்.

ஆட்சியை அதிகாரத்தை செல்வங்களை நிலையற்ற இம்மை வாழ்விற்கான சாதனங்களாக சுகபோகங்களாக (சோதனைகளாக) பார்த்த இறைதூதர் (ஸல்) அவர்கள் நிரந்தரமான மறுமை வாழ்வின் சுகபோகங்களையே தேர்ந்தெடுக்கின்றார்கள்.

ஒரு முறை உமர் ரழி அவர்கள் இறைதூதர் (ஸல்) அவர்களைக் காண வருகிறார்கள், தனது வீட்டிற்குள் தரையில் ஈச்சம் ஓலைகளால் வேயப்பட்ட ஒரு பாயில் படுத்திருந்த முஹம்மத் ஸல் எழுந்திருக்கிறார்கள் அவரது மேனியில் ஓலைகளின் அடையாலம் பதிந்திருக்கிறது, தோலினால் செய்யப்பட்டு காய்ந்த சருகு புற்களால் நிரப்பப் பட்ட தலையணை காணப்பட்டது, வீட்டின் சுவற்றில் தோல்கள் கொழுகப்பட்டிருந்தன, வீட்டினுள் தோலை பதப்படுத்துவற்கான குர்ழ் எனும் ஒருவகை இலைகள் குவிக்கப் பட்டிருந்தன..

அல்லாஹ்வின் தூதரே நீங்கள் தரையில் பாயில் படுத்திருக்க உரோம பாரசீக மன்னர்கள் கைஸரும் கிஸ்ராவும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என உமர் ரழி வினவ, அவர்களுக்கு துன்யாவும் எமக்கு ஆகிராவும் தரப்பட்டிருக்கிறது என இறைதூதர் (ஸல்) பதிலளித்தார்கள்.

இதே கேள்வி விசுவாசிகளின் உள்ளத்தில் ஏற்படுவது இயல்பானதே, பிரபஞ்சம், உலகம் வாழ்வு மரணம் இம்மை மறுமை போன்ற இன்னோரன்ன விடயங்களை ஒரு விசுவாசி எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கான முன் உதாரணமாகவே இறைதூதர் ஸல் அவர்கள் தனது வாக்கையும் வாழ்வையும் அமைத்துக் கொண்டார்கள் அதுவே அல்லாஹ்வின் நாட்டமாகவும இருந்தது.

இறைதூதர் ஸல் அவர்கள் ஒரு துறவியாகவோ சந்நியாசியாகவோ துன்யா வாழ்வைத் துறந்தவர்களாகவோ இருக்கவில்லை அவர் அன்றைய சமூகத்தில் இருந்த வாழ்வாதார தொழில்களை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கிற ஒரு மனிதராகவே இருந்தார்கள்.

ஷாம்தேசத்திற்கும் ஏனைய தேசங்களிற்கும் அரேபிய தீபகற்பத்தினூடாக செல்கிற வணிக கரவான்கள் மக்கா மதீனா போன்ற பல நகரங்களை வர்த்தக மையங்களாக கொண்டிருந்தன.

நுபுவ்வத்திற்கு முன்பிருந்தே அத்தகைய கரவான்களில் பயணித்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இறைதூதர் ஸல் அவர்கள் கதீஜா நாயகியின் வாணிப நடவடிக்கைகளை பொறுப்பேற்று செய்தார்கள் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நுபுவ்வத்திற்குப் பின்னரும் அவரது வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்தன.

அதே போன்றே அன்றைய நபித் தோழர்களும் அன்றாடம் உழைப்பவர்களாகவே இருந்தார்கள், மிகப்பெரும் தனவந்தர்களும் இருந்தார்கள், ஜும்மாஹ் தினங்களில் கூட தொழுகைக்காக அழைக்கபாபட்டால் வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறும் தொழுகை நிறைவுற்றவுடனேயே புறப்பட்டுச் சென்று அல்லாஹ் அருளியுள்ள செல்வங்களை திரட்டிக் கொள்ளுமாறே அல்குர்ஆன் கற்றுத் தருகிறது.

செல்வத்தை முறையாக திரட்டுதல் முறையாக கையாளுதல் முறையாக நிர்வகித்தல் முறையாக செலவு செய்தல் போன்ற அனைத்து விடயங்களும் அல்குர்ஆன் சுன்னா மூலம் எமக்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றன, உலகிலேயே அறிமுகமான முதன்மையான நீதியான நேர்மையான பொருளாதார நிதியியல் சித்தாந்தங்களை இறைதூதர் ஸல் அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த உலக வாழ்வு மறுமைக்கான விளை நிலம் என்பதனை தனது வாக்காலும் வாழ்வாலும் இறைதூதர் ஸல் அவர்கள் இந்த உம்மத்திற்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தை செல்வம் செல்வாக்கை தனது பாதங்களிற்கு கீழ் வைத்துக் கொண்ட கருணை நபி உலகின் கடைக்கோடி மனிதனின் எளிமையான வாழ்வையே தேர்ந்தெடுத்ததன் மூலம் இவ்வுலக வாழ்வின், அடைவுகளின் யதார்த்தத்தை உலகறியச் செய்தார்கள்.

பாயில் படுத்துறங்கி எழுந்த இறைதூதரின் (ஸல்) மேனியில் பதிந்திருந்த ஓலைகளின் அடையாளம் கண்டு தங்களுக்கு ஒரு மெத்தையை செய்து தரட்டுமா என்று கேட்ட தோழர்களிடம்; ஒரு மரநிழலில் தங்கிச் செல்லும் வழிப்போக்கன் போன்றவன் நான்; உலக வாழ்வு அத்தகையதே என்றார்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍🏻 08.10.2021|| SHARE (மீள்பதிவு)

Telephone