Portal Rasmi SJKT ST Philomena Convent
School
தமிழே! அமுதே! எனதுயிரே!
அனைவருக்கும் SPC குடும்பத்தினரின் 2024-இன் உலக தாய்மொழி தின வாழ்த்துகள்!
International Mother Language Day 2024!
2023/2024-ஆம் ஆண்டு தவணையின் பள்ளி இறுதி விடுமுறை 09.02.2024 முதல் 10.03.2024 வரை. 11.03.2024- ஆம் திகதி பள்ளி மீண்டும் தொடங்கும்.
Cuti akhir persekolahan bermula pada 09.02.2024 sehingga 10.03.2024. Sesi persekolahan bagi tahun 2024 akan bermula pada 11.03.2024. Selamat Bercuti.
அனைவருக்கும் SPC குடும்பத்தினரின் மனமார்ந்த இனிய சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
SPC Family wishing everyone a Happy Chinese New year !
06.02.2024 - அன்று YRSK மண்டபத்தில் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கானப் பிரியாவிடை விருந்து நடைபெற்றது. இவ்விருந்தினை ஆறாம் ஆண்டு வகுப்பாசிரியர்களான ஆசிரியை திருமதி துர்கா மற்றும் ஆசிரியை திருமதி சந்திரவள்ளி அவர்களின் வழிகாட்டலுடன் ஆறாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியைச் சுயமாகவே ஏற்பாடு செய்து சிறப்பாக வழிநடத்தினர். இந்நிகழ்வு ஆறாம் ஆண்டு மாணவர்களுடன் ஆடல் பாடல் என பல அங்கங்களுடன் மகிழ்ச்சியாக நிறைவுற்றது. நமது பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சாந்தி ஆறுமுகம் அவர்கள் மாணவர்களுக்குப் பல அறிவுரைகளைக் கூறி மனதார வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு ஆண்டு காலமாக தங்களின் ஆரம்பக் கல்வி பயணத்தை புனித பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியில் கற்று இனிதே விடைபெறும் நமது குழந்தைகள் மென்மேலும் வாழ்க்கையில் சிறக்க SPC குடும்பத்தினரின் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Sambutan Majlis Perpisahan Tahun 6 telah diadakan pada 6.2.2024 yang lalu di Dewan YRSK. Majlis telah dirancang dan dikendalikan sepenuhnya oleh murid-murid tahun 6 dibawah bimbingan guru kelas Pn Thurga dan Pn Sandiravali. Guru besar Pn Sandi telah memberikan nasihat agar murid - murid ini akan berjaya di peringkat persekolahan menengah. Pelbagai jenis persembahan dan acara penyampaian hadiah turut diadakan. Warga SPC mengucapkan Selamat Maju Jaya dan bersinarlah anda seperti permata tidak kira dimana anda berada.
08.02.2024 - அன்று 'பள்ளிக்குச் செல்வோம் வாருங்கள்' நிகழ்வு மற்றும் 'பரிவார்ந்த ஆசிரியர்' என்ற நடவடிக்கை தொடர்பாக டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
Salah satu program Unit Bimbingan dan Kaunseling daripada 'Program Jom ke Sekolah' dan 'Program Guru Penyayang' ialah menyambut Hari jadi. Murid-murid yang lahir pada bulan Disember, Januari dan Februari diberi penghargaan dengan memberi hadiah kecil iaitu penanda buku dan coklat. Warga SPC mengucapkan Selamat Hari Jadi.
வட கிந்தா மாவட்ட கல்வி இலாகா அளவிலான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவை இணைந்த STEM துறைக்கான விருது வழங்கும் நிகழ்வில் நமது பள்ளிக்கு முதல் நிலை பரிசு கிடைத்துள்ளது. STEM துறையில் நமது பள்ளி மாணவர்களின் சாதனை மிகவும் அளப்பரியது என்றால் அது மிகையாகாது.
SPC telah dinobatkan sebagai johan dalam penglibatan dan pencapaian STEM cemerlang bagi kategori SJKT/C. Penglibatan dan pencapaian murid-murid SPC dalam STEM sangat memberangsangkan dan mengharumkan nama SPC. Tahniah dan syabas
நமது பள்ளியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கோ மாணவர் மற்றும் கருவள நடுவ கோ மாணவர்களுக்குப் பதவி வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இம்மாணவர்களுக்கு முறையானப் பாரங்கள் வழங்கி நேர்முகத் தேர்வு நடத்திய பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவர்கள் தங்களின் கடமையைச் சிறப்பாகச் செய்ய SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Pelantikan pengawas dan pengawas pss dalam kalangan murid-murid tahun 3. Lantikan dibuat setelah beberapa saringan temuduga diadakan. Warga SPC mengucapkan tahniah dan semoga murid-murid ini menggalas tanggungjawab yang diamanahkan dengan baik.
01.12.2023 முதல் 02.12.2023 வரை குரு கல்கிடார் தேசியப்பள்ளியில் நடைபெற்ற சீருடை இயக்கத்தின் முகாமில் நமது பள்ளி மாணவிகளான மித்ரா ஸ்ரீ சிவபாலன் மற்றும் ஜெயஸ்ரீ சிவபாலன் ஆகியோர் சிறப்பாகக் கலந்து கொண்டனர். இம்முகாமில் மாணவர்கள் தங்களின் கட்டொழுங்கு, தன்னம்பிக்கை மற்றும் சிந்தனை ஆற்றலை வலுப்படுத்தும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கலந்து கொண்ட மாணவிகளுக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Meetrasri Sivabalan dan Jeyeshree Sivabalan telah mengambil bahagian sebagai peserta jemputan untuk
Program perkhemahan selama 2 hari pada 01-12.2023 - 2.12.2023 di SK Guru Kalgidar untuk membina keyakinan dan pembangunan diri , mempelajari teknik pemasangan khemah serta mencabar minda dan fizikal. Tahniah dan syabas.
07.02.2024 - அன்று பள்ளியில் பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை நமது பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரான திருமதி தவமணி மாணிக்கம் அவர்கள் திறந்து வைத்தார்.
ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரை அனைத்து வகுப்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வகுப்புசார் மதிப்பீடு அடைவு , SPC-யின் நனிச்சிறந்த 20 மாணவிகளுக்கு சிறப்பு விருது, இணைப்பாடத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கானச் சிறப்புப் பரிசு, பள்ளிக்கு முழு வருகையளித்த மாணவர்களுக்கானச் சிறப்புப் பரிசு, அருந்தகை மாணவர் விருதும் வழங்கப்பட்டன.
இறுதியாக, நமது அழைப்பினை ஏற்று சிறப்பு வருகையளித்த முன்னாள் தலைமையாசிரியரான திருமதி தவமணி மாணிக்கம் அவர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருக்கும், வருகையளித்த அனைத்து பெற்றோர்களுக்கும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உறுதுணையாக விளங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் SPC குடும்பத்தினரின் மனமார்ந்த நன்றியினையும் பரிசுப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Hari Anugerah Kecemerlangan telah dirasmikan oleh Mantan Guru Besar Pn Thavamani Manickam. Trofi dan sijil diberikan kepada murid-murid yang cemerlang. Selain itu, anugerah khas untuk pencapaian kokurikulum, tokoh murid dan juga kehadiran penuh turut diberikan. Seluruh warga SPC mengucapkan tahniah dan terima kasih kpd semua pihak
பேரா மாநிலத் தமிழர் திருநாள் இயக்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் சான்றோர் வேடப் போட்டியில் நமது பள்ளி மாணவிகள் கீர்த்திஷா அன்பழகன் மற்றும் திவாஷினி திவாகர் ஆகியோர் சிறப்பாகக் கலந்துக் கொண்டனர். மாணவிகளுக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Kirthisha Anbalagan dan Divashini Divaagar telah mengambil bahagian dalam Pertandingan Pakaian Beragam Tokoh India anjuran Persatuan Tamilar Thirunal Negeri Perak. Syabas dan tahniah daripada kami seluruh warga SPC.
வள்ளலார் 200 மாணவர் மாநாடு சன்மார்க்க பேச்சுப் போட்டியில் மாணவிகள் மித்ரா ஸ்ரீ சிவபாலன் மற்றும் சௌமித்தா சக்திவேல் ஆகியோர் சிறப்பாகக் கலந்துக் கொண்டு ரொக்கப் பரிசு ரிக்கிட் மலேசியா 50, வெற்றிக் கேடயம், பரிசுப் புத்தகம் மற்றும் நற்சான்றிதழும் பெற்றுள்ளனர். அப்போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மாணவிகளுக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும்
பாராட்டுக்களும் உரித்தாகுக.
Meetrasri Sivabalan dan Saumeetha Sakthivel telah mengambil bahagian dalam Pertandingan Syarahan sempena Konvensyen Vallalar yang telah diadakan baru - baru ini. Wang tunai RM 50, trofi, buku dan sijil telah menjadi milik murid- murid ini. Warga SPC, mengucapkan tahniah dan syabas atas kejayaan ini.
இன்று நமது பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர் அறிமுக நாள் சிறப்பாக நடத்தப்பட்டது. முதலில் பெற்றோர்களுக்குப் பள்ளியின் தொடர்பான விளக்கவுரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முன்னறி மதிப்பீடு பிறகு அன்பளிப்பு பையும் வழங்கப்பட்டது. பெற்றோர்களிடம் அறிவிக்கப்பட்ட பாரங்கள் பெற்றுக்கொள்ளுதல், பாட நூல் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டு உடை மற்றும் காற்சட்டை அளவெடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. சிறப்பாக வருகையளித்து SPC குடும்பத்தாருடன் இணையும் புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் SPC குடும்பத்தினரின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Orientasi Tahun 1 telah berlangsung pada hari ini. Murid-murid Tahun 1 telah diberi Ujian diagnosis dan goodies bag. Aktiviti yang telah diadakan semakan borang bersama ibu bapa, pengedaran buku teks, tempah dan ukur baju sukan. Warga SPC mengucapkan ribuan terima kasih kepada ibu bapa murid tahun 1 sebagai ahli keluarga baru.
31.01.2024 - அன்று நமது பள்ளியில் திருமுறை ஓதும் போட்டி மற்றும் வேதாகமப் போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் அனைவரும் சிறப்பாக இப்போட்டியில் பங்கெடுத்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். பள்ளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சமய வகுப்பினை நடத்தும் ஐயா சிவத்திரு சண்முகம் அவர்களுக்கும் சிவத்திரு கமலநாதன் அவர்களுக்கும் பள்ளியின் சார்பில் பொன்னாடை ,மாலை மற்றும் அன்பளிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டது. போட்டியின் ஏற்பாட்டாளர்களான ஆசிரியை திருமதி கோகிலா செல்வி அவர்களுக்கும் ஆசிரியை திருமதி செவத்தியம்மாள் அவர்களுக்கும், திருமுறை ஓதும் போட்டிக்கு நீதிபதியாக வருகையளித்த சிவத்திரு சண்முகம், சிவத்திரு கமலநாதன், சிவத்திரு பழனியப்பன், சிவத்திரு ஏகாம்பரம் பெரியன் பிள்ளை, சிவத்திரு இளம்பரிதி, திருமதி தேன்மொழி, சிவத்திரு முனியம் ஆகியோர் மற்றும் வேதாகமப் போட்டிக்கு நீதிபதியாக வருகையளித்த திருமதி ஜெனி ஜோசப், குமாரி ஐரின் ஜோசப் ஆகியோருக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு பிரேம்குமார் அவர்களுக்கும், சிறப்பாகக் கலந்துக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் SPC குடும்பத்தினரின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Pertandingan Thirumurai dan Pertandingan Kuiz Bible telah berlangsung pada 31.01.2024 di SPC. Pn.Gogila Selvi dan Pn. Sevathiammal telah dirancang dan diketuai untuk Pertandingan ini. Semua murid SPC yang terlibat telah menunjukkan bakat sendiri. En.Sanmugam dan En.Kamalanathan telah diberi penghormatan dengan pemberian ponnadai dan kalungan cendana oleh YDP PIBG En.Premkumar. Warga SPC mengucapkan ribuan terima kasih kepada Pn.Gogilaselvi dan Pn.Sevathiammal, semua hakim yang mengetuai Pertandingan Thirumurai dan Pertandingan Kuiz Bible, YDP PIBG En. Premkumar, semua guru SPC serta semua murid yang terlibat.
2023 - ஆம் ஆண்டின் முதல் தேசிய அளவிலான தமிழ் எழுத்துக்கூட்டும் போட்டியில் நமது பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திருமதி செவத்தியம்மாள் அவர்களும் 11 மாணவர்களும் கலந்துக் கொண்டனர். ஆசிரியை திருமதி செவத்தியம்மாள் அவர்கள் மூன்றாம் நிலையில் வென்று நற்சான்றிதழும் கோப்பையும் பெற்றுள்ளார் . கலந்துக் கொண்ட அனைத்து மாணவர்களும் நற்சான்றிதழ் பெற்றுள்ளனர். சிறப்பாகக் கலந்துக் கொண்ட ஆசிரியை திருமதி செவத்தியம்மாள் அவர்களுக்கும் மாணவர்களுக்கும் SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Guru SPC Pn.Sevathiammal dan 11 murid melibatkan diri dalam Pertandingan First National Tamizh Spelling Bee 2023. Pn.Sevathiammal telah memenangi tempat ketiga dengan Sijil Pencapaian dan Trofi serta semua murid menerima Sijil penyertaan. Warga SPC mengucapkan tahniah dan syabas kepada Pn.Sevathiammal dan semua murid yang terlibat .
29.01.2024 - அன்று நமது பள்ளி மாணவர்களின் இறுதியாண்டு சோதனை, வகுப்பறை மதிப்பீட்டின் முடிவுகளையும் அரசாங்கத்தால் வழங்கப்படும் ரி.ம150 நிதி உதவியையும் பெற்றுக் கொள்ள பெற்றோர்கள் வருகையளித்தனர். தங்கள் குழந்தைகளின் கல்வி தரத்தை அறிந்துக் கொள்ள சிரமம் பாராது வருகையளித்த பெற்றோர்களுக்கு SPC குடும்பத்தினரின் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Pemberian pelaporan Ujian Akhir Tahun serta Bantuan awal persekolahan telah berlangsung pada 29.01.2024 di SPC. Semua waris telah hadir ke Sekolah untuk menerima keputusan UASA dan Bantuan awal persekolahan RM150. Warga SPC merakamkan ribuan terima kasih!
28.1.2024 அன்று பேராக் மாநில பள்ளிகளுக்கிடையிலான தைக்குவாண்டோ போட்டி Aeon Big Falim- இல் நடைபெற்றது. ஆண்டு 1 படவரியைச் சேர்ந்த மாணவி சாரா என் சம்சன் சோலமன் இப்போட்டியில் Jumping front kick மற்றும் Punching பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் Sparring பிரிவில் வெள்ளி பதக்கமும் நற்சான்றிதழையும் பெற்றுள்ளார். மாணவிக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Sarah Ann Samson Solomon telah melibatkan diri dalam Pertandingan Taekwondo antara Sekolah-sekolah Negeri Perak yang telah berlangsung di Aeon Big Falim pada 28.01.2024. Sarah Ann telah menerima Pingat Emas dan Sijil dalam kategori Jumping front kick dan Punching serta menerima Pingat Perak dalam kategori Sparring. Warga SPC mengucapkan tahniah dan syabas!
கடந்த 19.01.2024 முதல் 20.01.2024 வரை ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான இணைப்பாட இயக்க முகாம் ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது. ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளர் திரு.சண்முகவேலு மற்றும் திரு.விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலுடன் இம்முகாம் இனிதே நடந்து முடிவுற்றது. இம்முகாமில் 64 மாணவர்களும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் கலந்துக் கொண்டு வற்றாத ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கினர். இம்முகாமில் கூடாரம் அமைத்தல், முதலுதவி செய்யுமுறை, உணவு சமைத்தல் மற்றும் மாணவர் படைப்பு என பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்குள்ள சுமார் 10 பயிற்சி ஆசிரியர்களும் அனைத்து நடவடிக்கைகளை சிறப்பான முறையில் நடத்தினர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. மாணவர்களும் தங்களின் முழு ஈடுபாட்டினை வழங்கினர். இம்முகாம் சிறப்புற நடைபெற உதவியும் ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து தரப்பினருக்கும் SPC குடும்பத்தினரின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Program Perkhemahan Sekolah kepada murid tahun 6 telah berlangsung pada 19.01.2024 hingga 20.01.2024 di Institut Pendidikan Guru Kampus Ipoh. Perkhemahan ini berjaya dilaksanakan dengan nasihat dan bantuan Pensyarah IPGK Ipoh En.Sanmugavelu dan En.Vikneswaran. Seramai 64 orang murid tahun 6 serta semua guru SPC terlibat dalam perkhemahan ini. Pelbagai aktiviti menarik telah dilaksanakan dalam perkhemahan seperti pemasangan khemah, pertolongan cemas, masak, serta persembahan dengan unggun api. Seramai 10 orang guru pelatih IPGK Ipoh telah membantu menjayakan semua aktiviti dengan jayanya. Warga SPC mengucapkan ribuan terima kasih kepada semua pihak yang membantu menjayakan Program Perkhemahan.
நமது பள்ளியில் NPQEL பயிற்சியை மேற்கொள்ளும் முனைவர் ரேவதி ராஜகோபால் அவர்களின் ஏற்பாட்டில் Program Sekolah Angkat (Pertubuhan Tulir Malaysia) மற்றும் மலாய் மொழி கற்பித்தல் முறையை வலுப்படுத்தும் பட்டறை நிகழ்வும் 18.01.2024 - அன்று சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு வருகையாளரான பேராசிரியர் முனைவர் விஜயலட்சுமி சுப்ரமணியம் (Presiden Pertubuhan Tulir Malaysia) , திருவாளர் முன்ஷி ஹாஜி அகமட் சலேஹின் ஹாஜி ஷாரி(Ketua Bidang SISC+ PPD Kinta Utara) மற்றும் நமது பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சாந்தி ஆறுமுகம் அவர்களுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது. Pertubuhan Tulir Malaysia நமது பள்ளியை அதிகாரப்பூர்வமாக தத்தெடுத்துக் கொண்டனர். தத்தெடுத்து கொண்டதன் நோக்கம் நமது பள்ளி மாணவர்களின் மலாய் மொழி பாடத்தின் அடைவுநிலையை மேம்படுத்துவதே ஆகும். பட்டறையில் நமது பள்ளியுடன் இணைந்து 13 தமிழ்ப்பள்ளியிலிருந்து மலாய் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களும் கலந்துக் கொண்டனர். இப்பட்டறையில் பேராசிரியர் முனைவர் விஜயலட்சுமி அவர்கள் மலாய் மொழி பாடத்தைக் கற்பிக்கும் முறையை வலுப்படுத்தும் பல பயனுள்ள உத்திமுறைகளைப் பற்றி விளக்கமளித்தார். இவ்வேளையில் SPC குடும்பத்தினர் இப்பட்டறையின் ஏற்பாட்டளாரான முனைவர் ரேவதி ராஜகோபால் அவர்களுக்கும் பேராசிரியர் முனைவர் விஜயலட்சுமி சுப்ரமணியம் அவர்களுக்கும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திருவாளர் பிரேம்குமார் அவர்களுக்கும் அழைப்பை ஏற்று நமது பள்ளிக்கு வருகையளித்த 13 பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறோம்.
Program Sekolah Angkat (Pertubuhan Tulir Malaysia) serta Bengkel Pemantapan Pedagogi Bahasa Melayu telah dirancang oleh peserta NPQEL Dr. Revathi Rajagopal dan diadakan pada 18.01.2024. Prof.Dr.Vijayaletchumy Subramaniam(Presiden Pertubuhan Tulir Malaysia) dan En.Munsyi Haj Ahmad Salehin Haj Shaari (Ketua Bidang SISC+ PPD Kinta Utara) serta Pn.Sandi Arumugam (Guru Besar) telah merasmikan Program dengan jayanya. Pertubuhan Tulir Malaysia telah menerima SPC sebagai Sekolah Angkat dengan tujuannya meningkatkan pencapaian Sekolah dalam subjek Bahasa Melayu. Seterusnya, 13 guru dari 13 buah Sekolah telah dijemput ke Bengkel Pemantapan Pedagogi Bahasa Melayu untuk membantu memantapkan pengajaran subjek Bahasa Melayu di SJKT. Prof.Dr.Vijaletchumy(Pertubuhan Tulir Malaysia) telah berkongsi teknik memantapkan pdpc Bahasa Melayu kepada semua guru Bahasa Melayu SJKT. Warga SPC mengucapkan ribuan terima kasih kepada Dr.Revathi, Prof.Dr.Vijaletchumy, YDP PIBG En.Premkumar serta semua guru Bahasa Melayu daripada 13 buah Sekolah SJKT.
நன்மை பொங்கட்டும் தீமை எரியட்டும், புதுமை பொங்கட்டும் மடமை எரியட்டும், நன்மைகள் பெருக..... SPC குடும்பத்தினரின் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!
Happy Ponggal to everyone!
13.01.2024 - அன்று பகடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு தொடர்பாக உரையாற்ற சுகாதார பிரிவில் பணிப்புரியும் திருவாளர் டாக்டர் டேவிட் ராஜ் சின்னப்பன் அவர்கள் நமது பள்ளிக்குச் சிறப்பு வருகைப்புரிந்தார். அனைத்து மாணவர்களுக்கும் பகடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவே இவ்வுரை ஏற்பாடுச் செய்யப்பட்டது. சிரமம்பாராது வருகையளித்து நமது பள்ளி மாணவிகளுக்குப் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்ட திருவாளர் டாக்டர் டேவிட் ராஜ் அவர்களுக்கு SPC குடும்பத்தினரின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Ceramah Anti Buli dan Gangguan Seksual telah berlangsung pada 13.01.2024 kepada semua murid SPC. Penceramah Dr.David Raj Sinnapan telah sudi hadir ke SPC dan berkongsi pelbagai maklumat yang manfaat kepada murid. Warga SPC mengucapkan ribuan terima kasih kepada Dr.David Raj kerana sudi hadir ke Sekolah.
Gimnastik Perak International RG championship எனும் போட்டியில் ஆண்டு 3 படவரியைச் சேர்ந்த மாணவி கிருபாகிரி த/பெ நல்ல ராஜ் கலந்துக் கொண்டு little Gymnast rope , little gymnast freehand எனும் பிரிவில் 7-ஆம் நிலை பரிசு மற்றும் little gymnast ball பிரிவில் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளார். சிறப்பாகக் கலந்துக்கொண்ட மாணவிக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Kerubahkery Nalla Raj dari kelas 3 Instagram telah melibatkan diri dalam Pertandingan Gimnastik Perak International RG championship dan memenangi tempat ketujuh dalam little gymnast rope, little gymnast freehand serta saguhati dalam little gymnast ball. Warga SPC mengucapkan tahniah dan syabas!
இயங்கலையில் நடைபெற்ற கவிஞர்களைக் கொண்டாடுவோம் - 16 நிகழ்வில் கவிதை ஒப்புவித்தல் போட்டியில் நமது பள்ளியைப் சேர்ந்த ஆறு படவரி மாணவி சுவேக்கா மணிமாறன் முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடியுள்ளார். மாணவிக்கு SPC குடும்பத்தினரின் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Siwekha Manimaran telah melibatkan diri dalam Program Kavinyargalai Kondaduvom-16 dan memenangi Johan dalam Pertandingan melafaz pantun. Warga SPC mengucapkan tahniah dan syabas.
சீர்மிகு மலேசியா 3.0 புதிர்ப்போட்டி 2023-இல் நமது பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் சிறப்பாகக் கலந்துக் கொண்டனர். மாணவி தனீஷா புருசோத்தமன் இப்போட்டியில் மூன்றாம் நிலையில் வெற்றி பெற்று ரிங்கிட் மலேசியா 200 மற்றும் நற்சான்றிதழையும் பெற்றுள்ளார். தொடர்ந்து, மாணவி பிரேமித்தா புருசோத்தமன் மற்றும் சேஷ்வினி நாயர் பிரேம்குமார் ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்று நற்சான்றிதழையும் பெற்றுள்ளனர். மாணவி ஷர்விநாயகி விநாயகசேகரன் பங்கேற்பாளர் சான்றிதழையும் பெற்றுள்ளார். மாணவர்களுக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Seramai 4 murid SPC telah melibatkan diri dalam Pertandingan kuiz Bahasa Tamil. Thaneessha Purushothman telah memenangi tempat ketiga dan menerima hadiah Wang tunai RM200 serta Sijil. Premitha Purushothman dan Seshwiini Nair Premkumar telah memenangi Saguhati. Sharvinayagi Vinayagasegaran telah menerima Sijil penyertaan. Warga SPC mengucapkan tahniah dan syabas!
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம்- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சி 2023 கடந்த 25.12.2023- அன்று முத்தமிழ்ப் பாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது பள்ளியின் 4 படவரியைச் சேர்ந்த மாணவி ஷிவானி ஜீவன் மற்றும் 3 தொலைவரியைச் சேர்ந்த மாணவி தஷ்வினி ஜீவன் அவர்கள் சிறப்பாகக் கலந்துக் கொண்டு திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடியையும் ஒப்புவித்துள்ளனர். மாணவிகளுக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Persatuan Muthamil Paavalar Ipoh telah mengadakan Program pada 25.12.2023 di Dewan Muthamil Paavalar. Murid SPC Shevane Jevan dan Thashviniy Jevan telah melafazkan Thirukural dan Aathichudi dalam Program tersebut. Warga SPC mengucapkan tahniah kepada kedua-dua murid tersebut.
தேசியவகை குனோங் ராபாட் தமிழ்ப்பள்ளியிலிருந்து மாற்றலாகி நமது பள்ளிக்கு வருகையளித்திருக்கும் ஆசிரியை திருமதி வாணி இராமன் அவர்கள் தங்களின் பணியை இனிதே தொடர SPC குடும்பத்தினர் வாழத்துகளைக் கூறி வரவேற்கின்றனர்.
Kami warga SPC dengan berbesar hati mengalu - alukan kehadiran guru baharu Pn Vani Raman yang bertukar dari SJKT Gunung Rapat. Semoga dapat menabur bakti dengan cemerlang di SPC.
17 ஆண்டு காலமாக தேசியவகை புனித பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியில் தனது பணியைச் சிறப்புற செய்து பல மாணவ செல்வங்களை உருவாக்கியவர் ஆசிரியை திருமதி தினமலர் வெங்கிடாசலம் அவர்கள். ஆசிரியை திருமதி தினமலர் வெங்கிடாசலம் தற்பொழுது இணைப்பாட பொறுப்பாசிரியராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். அவருக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Sekalung penghargaan dan tahniah kami titipkan kepada Pn Thinamalar Vengidasalam atas kenaikan pangkat sebagai PK Kokurikulum. Beliau akan menggalas tugas baharu ini di SJKT Methodist. Terima kasih diucapkan atas jasa dan budi baik beliau selama 17 tahun berkhidmat sebagai pendidik di SPC. Semoga beliau sukses menjalankan tugas baharu dengan cemerlang.
நாளை 2.1.2024(செவ்வாய்) அன்று பள்ளி இனிதே துவங்கவுள்ளது. மாணவர்கள் அனைவரும் தவறாது வருகையளிக்க வேண்டும்.
Sekolah akan dibuka semula pada 2.1.2024(Selasa). Murid-murid diminta menghadiri ke Sekolah.
வெற்றிகள் பதியட்டும் தோல்விகள் தேயட்டும் புன்னகை பூக்கட்டும் முயற்சிகள் முளைக்கட்டும்! அனைவருக்கும் SPC குடும்பத்தினரின் புத்தாண்டு வாழ்த்துகள்🌹
Happy new year to everyone 🌹
மாணவி சஷ்மிதா சாஷா திருச்செல்வன் இணையத்தில் நடத்தப்பட்ட சுதந்திர நாள் தொடர்பாக கைவினை பொருட்கள் உருவாக்கும் போட்டியில் தங்க விருது மற்றும் தனித்திறமை வெளிப்படுத்தும் போட்டியில் புல்லாங்குழல் இசைத்து வெண்கல விருதையும் பெற்றுள்ளார். மாணவிக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.
Murid Sashmitha Sasha Thiruchelvan telah melibatkan diri dalam Pertandingan menghasilkan kraf tangan mengenai mereka dan memenangi Anugerah Emas serta memenangi Anugerah Gangsa dalam Pertandingan menunjukkan bakat sendiri. Warga SPC mengucapkan tahniah dan syabas.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Ipoh
30100
Opening Hours
Monday | 08:00 - 17:00 |
Tuesday | 08:00 - 17:00 |
Wednesday | 08:00 - 17:00 |
Thursday | 08:00 - 17:00 |
Friday | 08:00 - 17:00 |
Lebuh Cator
Ipoh, 30450
SK Cator Avenue is one of the best primary school in Ipoh.
Sekolah Izzuddin Shah
Ipoh, 31400
"Page ini khasnya untuk pelajar2 sekolah izzuddin shah batch ke 45, umumnya utk sesiapa sahaja...inshaALLAH, respon anda, harapan kami"
Ipoh
Have been teaching for more than 15 years covering primary and secondary schools 拥有15年中小学教学经验
NO 1, HALA KLEBANG 8, TAMAN KLEBANG RIA CHEMOR
Ipoh, 30010
Pendaftaran 2023 dibuka kini..Daftar segera & tempat adalah terhad!!!
No. 25, Laluan Sungai Pari 7, Taman Pertama
Ipoh, 30100
怡保第一花园幼儿园 Kindergarten at Taman Pertama, Ipoh, Perak.
D/A Bangunan Persekutuan Ipoh, Jalan Dato' Seri Ahmad Said
Ipoh, 30450
Tel : 052410224