Arasan

30/08/2024

டெலிகிராம் நிறுவனருக்கு விதிக்கப்பட்ட தடை!

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவை கடந்த 24 ஆம் திகதி பிரான்சில் கைது செய்யப்பட்டார்.

டெலிகிராம் செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்கு டெலிகிராம் துணை போவதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் அவரது கைதுக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பாவெல் துரோவ் மீதான குற்றச்சாட்டுகளை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து பாவெல் துரோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

5 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.46 கோடி) பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டனர். மேலும் அவர் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும்.

பிரான்சை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு பாவெல் துரோவ் வாரத்திற்கு 2 முறை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30/08/2024

இந்தியா: தமிழ்நாடு

சான் பிரான்சிஸ்கோவில் ரூ1000 கோடி முதலீடுகளை ஈர்த்த தமிழ்நாடு முதல்வர்...!!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சென்னை சிறுசேரியில் ₹450 கோடி முதலீட்டில் நோக்கியா ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 10ஜி, 25ஜி, 50ஜி, 100ஜி உள்ளிட்ட சேவை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சென்னையில் பே பால் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மையம் அமைக்கவும் ஒப்பந்தம்; இந்நிறுவனம் மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்கும். சென்னை செம்மஞ்சேரியில், செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைக்ரோ சிப் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

₹250 கோடி முதலீட்டில் அமைய உள்ள மைக்ரோ சிப் நிறுவனம் மூலம் 1,500 பேருக்கு வேலை கிடைக்கும் சென்னை தரமணியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த செமிகண்டக்டர் உற்பத்தி மையம் அமைக்க அப்ளைட் மெடீரியல்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

30/08/2024

பிரித்தானியாவில் விந்தணு தானத்திற்கு பெரும் வரவேற்பு! ஏன் தெரியுமா?

பிரித்தானியாவில் ஆண்களின் விந்தணுக்களுக்கான தேவை ஏன் உலகளவில் அதிகரித்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது.

தெளிவான பதில் இதோ,

பிரித்தானியாவில் எந்த மருத்துவமனையிலும் ஒரு விந்தணு தானம் செய்பவரிடமிருந்து 10 குடும்பங்களுக்கு மட்டுமே விந்தணுவை வழங்க முடியும் என்ற விதி உள்ளது.

ஆனால் பிரித்தானியாவில் விந்தணு தானம் செய்பவர்களிடமிருந்து விந்தணுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப எந்த தடையும் இல்லை. பிரித்தானியாவில் விந்தணுவின் தேவை அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம்.

பிரித்தானியாவில் இனப்பெருக்க உடல்நலப் பிரச்சனைகள் ஒரு முக்கிய காரணமாகும். பிரித்தானியாவில் பலர், குறிப்பாக பெண்கள் மற்றும் ஒரே பாலின தம்பதிகள், கருத்தரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கருவுறுதல் சிகிச்சைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், விந்தணு தானம் செய்வதற்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இன் விட்ரோ கருத்தரித்தல் (IVF) மற்றும் பிற உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களின் (ART) பயன்பாடு அதிகரித்துள்ளதால் விந்தணு வங்கிகளைச் சார்ந்திருப்பது அதிகரித்துள்ளது.

இப்போதெல்லாம், பலர் திருமணம் மற்றும் பாரம்பரிய குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்துகிறார்கள்.

அதன் பிறகு குடும்பம் நடத்த முடிவு செய்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் கருத்தரிக்கும் திறன் குறைந்து வருவதால் விந்தணு வங்கிகளின் உதவியை நாடுகின்றனர்.

கூடுதலாக, ஒற்றைப் பெண்கள் மற்றும் லெஸ்பியன் தம்பதிகள் பாரம்பரிய இனப்பெருக்க முறைகளுக்கு மாற்றாக விந்தணு தானம் செய்யும் சேவைகளுக்குத் திரும்புகின்றனர்.

பிரித்தானியாவில் விந்தணு வங்கியின் அதிகரித்து வரும் வசதி மற்றும் அணுகல் தேவையை தூண்டியுள்ளது.

விந்தணு வங்கிகள் விந்தணு தானத்தை எளிதாகவும் திறமையாகவும் செய்ய தங்கள் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளன.

இது விந்தணு தானத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் வசதியாகவும் ஆக்கியுள்ளது.

விந்தணு தானம் செய்பவர்களுக்கும், விந்தணுவின் கருவுறுதலுக்கு ஏற்ப பணம் வழங்கப்படுகிறது. இதனால், பலர் இதை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டனர்.

பிரித்தானியாவில் ஒரே பாலின காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்வது, அத்தகைய ஜோடிகளுக்கு விந்தணு தானம் சட்டப்பூர்வ மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விருப்பமாக மாறியுள்ளது.

மேலும், சமூகம் பல்வேறு வகையான குடும்பங்களை ஏற்றுக்கொள்வதால், அதிகமான மக்கள் விந்தணு தானத்திற்கு திரும்புகின்றனர்.

30/08/2024

இந்தியா: தமிழ்நாடு

தனியார் கம்பெனிகளிடம் பிச்சை எடுத்து..அதை நடத்த வேண்டிய அவசியம் என்ன? - ஜெயக்குமார் காட்டம்!

தனியார் கம்பெனிகளிடம் பிச்சை எடுத்து கார் ரேஸ் நடத்த அவசியம் என்ன என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், கார்ப்பரேட் திமுக அரசே! எத்தனையோ இளைஞர்கள் சரியான உணவின்றி விளையாட இடமின்றி எத்தனையோ இடையூறுகளை கடந்து,

விளையாட்டுத்துறையின் மூலம் வெளிச்சத்திற்கு வர வெம்பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்! விளையாட்டிற்கான உடற்தகுதி இல்லாமல் வாய்ப்புகளை இழந்தோர் ஏராளம்! சாதாரண சாப்பாட்டிற்கே வழி இல்லாத விளையாட்டு வீரர்கள் எங்கிருந்து புரதம்(Protein) நிறைந்த உணவெல்லாம் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்?

கடந்த ஆண்டே கார் ரேஸ் நடத்த திட்டமிட்டு மக்கள் பணத்தை வீணடித்தது இந்த விளம்பர அரசு! நடக்காமல் போன கார் பந்தயத்தை நடத்தியே தீருவேன் என சபதம் எடுத்துள்ளார் உதயநிதி.

இம்முறை மக்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்பதற்காக தனியார் கம்பெனிகளின் ஸ்பான்சரில் நடக்கிறது என சப்பை கட்டு கட்டுகிறார் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி. அந்த கம்பெனிகள் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுகளுக்கு எல்லாம்‌ நிதியுதவி அளிக்காதா?

தனியார் கம்பெனிகளிடம் இருந்து பிச்சை எடுத்து அரசாங்கத்திற்கு கார் ரேஸ் நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதனால் யாருக்கு பயன்? ஏற்கனவே மாநகரில் நடக்கும் பைக் ரேஸ்-ஆட்டோ ரேஸ் உள்ளிட்டவற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். என்று பதிவிட்டுள்ளார்.

30/08/2024

சதீஷின் ‘சட்டம் என் கையில்’ - ரிலீஸ் திகதி அறிவிப்பு..!!

‘மெரினா’, ‘வாகை சுடவா’, ‘தாண்டவம்’, ‘எதிர்நீச்சல்’, ‘கத்தி’ உள்ளிட்ட பல்வேறு படங்களின் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் சதீஷ். ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அடுத்ததாக 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சதீஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரும் படம் ‘சட்டம் என் கையில்’.

இந்த படத்தில் நடிகை சம்பதா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'சிக்ஸர்' திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30/08/2024

இந்தியா: தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு..!!

தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்குள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்க மண்ணில் தரையிறங்கியபோது தாய்த்தமிழ் உறவுகள் அளித்த நெகிழ்ச்சியான வரவேற்பில்" என தெரிவித்து புகைப்படங்களை இணைத்துள்ளார்.

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார்.

தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த பிறகு, செப்டெம்பர் 14 ஆம் திகதி அவர் தமிழகம் திரும்புவது போல பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

30/08/2024

ஜப்பானில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு!

ஜப்பானில் முன் எப்போதும் இல்லாத வகையில் அரிசிக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டோக்கியோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் , “இந்த கோடையில் வழக்கமான அரிசியின் பாதி அளவை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜப்பானியர்களை ஒரு நாளைக்கு ஒரு பை ரிசி மட்டுமே வாங்கிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி தட்டுப்பாடு தொடர்பாக விவசாயத்துறை அமைச்சர் டெட்சுஷி சகாமோடோ கூறுகையில்,

பற்றாக்குறை நிலைமை விரைவில் தீர்க்கப்படும். அதுவரை மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். செப்டம்பர் இறுதிக்குள் 40 சதவீத பயிர் கிடைக்கும் நிலையில் புதிய அறுவடை பருவம் தொடங்கியுள்ளது என்றார். அதேவேளை ஜப்பானியர்களின் பிரதான உணவுகளில் ஒன்றாக அரிசி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

30/08/2024

ஆக்லாந்து விமான நிலையத்திற்கு வந்த பெட்டிகளில் பல மில்லியன் டொலர்கள் மதிப்பிலான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து அனுப்பப்பட்ட குறித்த பெட்டிகளில் 16.45 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள 47 கிலோகிராம் மெத்தாம்பெட்டமைனை சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பெட்டிகள் ஆகஸ்ட் நடுப்பகுதியில் கோலாலம்பூரில் இருந்து ஆக்லாந்து விமான நிலையத்திற்கு வந்ததை அடுத்து மேலதிக ஆய்வுக்காக சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்

30/08/2024

காசாவில் 3 நாள் போர் இடைநிறுத்தம்!

இஸ்ரேலும் ஹமாஸும் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் போரை இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதனால் போலியோவுக்கு எதிரான முதல் சுற்று தடுப்பூசியை வழங்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கான பிரசாரம் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. போர் இடைநிறுத்தங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (உள்ளூர் நேரம்) நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா பகுதியில் அவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான ஒப்பந்தங்கள் இன்னும் கையெழுத்தாகாமல் நீடித்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகளுக்கு போலியோ ஏற்படும் அபாயம் உள்ளதால் அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கவில்லை என்றால் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் அறிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

30/08/2024

காமெடி நடிகை மதுமிதாவிற்கு சினிமாவில் வாய்ப்பு குறைய என்ன காரணம்? - அவரே கூறிய விடயம்..!!

தமிழ் சினிமாவில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் ஒரு கல் ஒரு கண்ணாடி.

இந்த படத்தில் சந்தானம்-உதயநிதி காமெடியை அடுத்து மதுமிதாவின் காமெடி காட்சிகளும் செம ஹிட்டடித்தது.

அப்படத்தின் மூலம் ஜாங்கிரி மதுமிதா என ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட இவர் தொடர்ந்து நிறைய படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்தார்.

இடையில் மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், ஆனால் சில காரணங்களால் அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். அதன்பிறகு சில படங்களில் மட்டுமே மதுமிதா நடித்து வருகிறார்.

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள போட் படத்தில் நடிகை மதுமிதா ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். அந்த படத்தில் தனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்றும் ரொம்பவே மெனக்கெட்டு நடித்தேன் என்று மதுமிதா கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், நாம் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முக்கியமான விஷயமே அந்த படத்தில் நடித்தால் வரும் சம்பளம் தான்.

ஆனால் சம்பளம் சரியாக கொடுக்க மாட்டார்கள், நாமும் பல வழிகளில் முட்டி மோதி பார்த்து கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க.

கோபப்பட்டு சம்பளம் எப்போ தான் தருவீர்கள் என கேட்டாலும் இவ ரொம் கோபக்காரி, இவளை ஒப்பந்தம் செய்யாதீங்க என மற்ற தயாரிப்பாளர்களுக்கு சொல்லிடுவாங்க.

அந்த பிரச்சனை தான் இப்போது இங்கே நடந்து கொண்டிருக்கிறது என தனக்கு கிடைக்கும் குறைந்த பட வாய்ப்புகள் குறித்து கூறியுள்ளார்.

30/08/2024

மனித மூளையில் பிளாஸ்டிக் ; அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..!!

மனிதர்களின் மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.

குறிப்பாக, இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் நுழைந்து கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மூளை மாதிரிகளில் 0.5% பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த கண்டுபிடிப்பு, பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீவிரத்தை எடுத்துக்காட்டுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, Cukurova பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Sedat Gundogdu உட்பட பல நிபுணர்கள், பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்கொள்ள உலகளாவிய அவசரநிலை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

30/08/2024

முகேஸ் அம்பானியை முந்தி இந்தியாவின் முதன்மை பணக்காரரான கௌதம் அதானி...!!

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையால் ஏற்பட்ட பாதிப்பை மீட்டெடுத்ததையடுத்து, கடந்த ஆண்டு கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 95வீதத்தால் அதிகரித்து 11.6 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது முகேஸ் அம்பானிக்குப் பதிலாக அவர் முதன்மை இந்திய பணக்கார மாற உதவியது என்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அம்பானியின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு 25வீதத்தால் அதிகரித்து 10.14 இலட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

2024 ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலின் படி இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2023இல் வெளியிடப்பட்ட ஹுருன் அறிக்கையின்படி, அதானியின் சொத்து மதிப்பு 57 வீதத்தால் குறைந்து 4.74 இலட்சம் கோடியாக ரூபாயாக இருந்தது.

அம்பானியின் சொத்து மதிப்பு 8.08 இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற வணிக ஆய்வு நிறுவனம், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அதானியின் நிகர சொத்து மதிப்பு கடுமையாக சரிந்திருந்தது.

இந்தநிலையில், தற்போதைய ஹுருன் அறிக்கையின்படி சிவ் நாடார் மற்றும் குடும்பத்தினர் 3.14 இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது பணக்காரர்களாக உள்ளனர்.

அதேநேரத்தில், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் சைரஸ் பூனவல்லா 2024ஆம் ஆண்டில் 2.89 இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

நடிகர் சாருக்கான் 7,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டியலில் அறிமுகமாகியுள்ளார்.

30/08/2024

விஜய்யின் Goat படத்தின் இரகசியத்தை சொன்ன இயக்குநர் வெங்கட் பிரபு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள `கோட்' (Greatest of all time) திரைப்படம் இரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய், மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் Goat திரைப்படம் மங்காத்தாவை விஞ்சும் அளவுக்கு இருக்கும் என இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

இது என்ன கதைக்களம் என்பதை முன்னோட்டத்தில் கூறிவிட்டேன். ஆனால் அதை எவரும் கண்டுபிடிக்கவில்லை. எல்லோருக்கும் பிடிக்கும் வகையிலும், புரியும் வகையிலும் இந்தத் திரைப்படம் இருக்கும். யாரையும் குழப்பும் அளவுக்கு இந்தத் திரைப்படம் எடுக்கப்படவில்லை.

இந்தப் படம் மங்காத்தாவை விஞ்சும் அளவுக்கு நிச்சயம் இருக்கும். மங்காத்தா படம் உணர்ச்சிபூர்வமான படமாக இல்லாமல், முழுவதும் ஆண்கள் சம்பந்தப்பட்ட படமாகவும் துரோகத்தைக் காட்டும் படமாகவும் இருக்கும்.

ஆனால் இந்தப் படம் அப்படி இல்லாமல் முழுவதும் குடும்பப் படமாக இருக்கும். காந்தி என்ற ஒரு தனிநபர் வாழ்க்கையில் நடந்த ஒரு கதைதான் இது என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

30/08/2024

உலகளவில் மிகவும் பிரபலமான 10 சமூக வலைதளங்களின் பட்டியல் - முதலிடத்தில் இருப்பது எது?

உலகளவில் மிகவும் பிரபலமான 10 சமூக வலைத்தளங்களின் பட்டியல் விபரம் வெளியாகியுள்ளது.

DataReportal இன் சமீபத்திய தரவுகளின்படி, உலகளாவிய பயனர்களின் மொத்த எண்ணிக்கை 5.35 பில்லியனாக உள்ளது.

கூடுதலாக கடந்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் இருந்து புதிதாக 97 மில்லியன் பயனர்கள் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதன் காரணமாக இணையப் பயனர்களின் எண்ணிக்கை 1.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

இவ்வாறான நிலையில் உலக அளவில் அதிய பயனர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக முகப்புத்தகம் (Facebook) தொடர்ந்து முதலிடத்திலுள்ளதாக DataReportal இன் சமீபத்திய தரவுகளில் தெரியவந்துள்ளது.

30/08/2024

முன்னறிவிப்பில்லாது இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய முக்கியஸ்தர்; காரணம் என்ன?

முன்னறிவிப்பு எதுவும் இன்றி இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்நிலையில் இலங்கை பாதுகாப்பு மாநாட்டு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமைந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

30/08/2024

மவோரி மன்னர் Tuheitia Pootatau காலமானார்...!!

மவோரி மன்னர், Tuheitia Pootatau Te Wherowhero இன்று காலமானார்.

சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இன்று காலை அவர் அமைதியாக காலமானதை அவரது செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தினார்.

69 வயதான மாவோரி மன்னர் Tuheitia Pootatau Te Wherowhero வின் மறைவிற்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கிங் சார்லஸ் இன்று காலை (NZT) ஒரு இரங்கல் செய்தியை அனுப்பினார், Tuheitia வின் மரணத்தை அறிந்து தானும் அவரது மனைவி ராணி கமிலாவும் "ஆழ்ந்த வருத்தத்தில்" இருப்பதாகக் கூறினார்.

இதனிடையே மன்னர் Tuuheitia வின் மரணத்தை குறிக்கும் வகையில் அனைத்து அரசு மற்றும் பொது கட்டிடங்கள் நியூசிலாந்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து பாராளுமன்ற கட்டிடத்தின் முன் நியூசிலாந்து கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் Tuheitia Pootatau Te Wherowhero வின் மறைவிற்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்

29/08/2024

மாற்றுத்திறனாளிகளுடன் அந்தகன் படம் பார்த்த பிரசாந்த்!

நடிகர் பிரசாந்த் நடிப்பில், அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அந்தகன். இந்தப் படம் பிரசாந்த்தின் 50வது படம்.

இது ஹிந்தியில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அந்தாதுன் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் ஆகஸ்ட் 9ஆம் திகதி ரிலீஸ் ஆனது. படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தில் பிரசாந்த் உடன், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக் கனி, யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தினை நடிகர் பிரசாந்த் சென்னையில் உள்ள திரையரங்கில் மாற்றுத் திறனாளிகளுடன் அமர்ந்து பார்த்தார். மேலும், படத்தில் பிரசாந்த் பார்வை மாற்றுத் திறனாளியாக நடித்திருந்தார். இதனால்தான் படக்குழு தரப்பில் இருந்து மாற்றுத் திறனாளிகளுடன் அமர்ந்து படம் பார்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாற்றுத் திறனாளிகளுடன் படம் பார்த்த நடிகர் பிரசாந்த் பேசுகையில், உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், உங்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக பேசினார். மேலும் மாற்றுத்திறனாளியாக தான் நடித்ததே மிகவும் சவலானதாக இருந்தது எனவும், அந்த வாழ்க்கையை வாழக்கூடிய உங்களை பார்க்கும்போது மிகவும் உத்வேகமாக இருப்பதாகவும் பேசினார்.

படம் பார்த்த மாற்றுத்திறனாளிகள் பேசுகையில், படம் மிகவும் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டனர். மேலும் பார்வை மாற்றுத் திறனாளியாக இருப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அப்படியான கதபாத்திரத்தை பிரசாந்த் தேர்வு செய்து நடித்திருப்பது மிகவும் சிறப்பு எனவும், பார்வை மாற்றுத் திறனாளியாக பிரசாந்த் சிறப்பாகவே நடித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். அந்தகன் படக்குழுவினரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

29/08/2024

இந்தியா" தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி எப்போது? - கனிமொழி எம்பி தகவல்...!!

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி குறித்து கனிமொழி பேசியுள்ளார்.

சென்னை மைலாப்பூரில் திமுக எம்பி.யும், துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டார். அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது மாணவர்கள் அவரது அரசியல் நுழைவு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி, தனது தந்தை கருணாநிதி கைதின் போது காவல்துறையை நோக்கி சாதாரண கேள்வி எழுப்பியபோது, அதனையும் குற்றமாக எதிர்கொண்டேன்.

அந்த அசாதாரண தருணத்திலும் கலைஞர் ஒரு போராளியாக எதிர்கொண்டார். அதுவே தனது அரசியல் நுழைவு என்று தெரிவித்தார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதும், தான் மாநில அரசியலுக்கு வருவது குறித்தும் கட்சியும், முதலமைச்சரும் முடிவு செய்வார்கள் என்றுத் தெரிவித்துள்ளார்.

29/08/2024

குறைந்து வரும் Y குரோமோசோம்கள்.. இனி ஆண் குழந்தையே பிறக்காதா? - அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வின் முடிவுகள்...!!

மனிதர்களை ஆண்கள் பெண்கள் என தீர்மானிப்பது குரோமோசோம்கள் ஆகும். இந்நிலையில் எதிர்காலத்தில் ஆண் குழந்தைகள் பிற்றக்காத நிலை ஏற்படலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களுக்கு XX குரோமோசோம்களும் , ஆண்களுக்கு XY குரோமோசோம்களும் உள்ள நிலையில் ஆண்தன்மையை தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

X குரோமோசோம்கள் Y குரோமோசோம்களுடன் சேரும்பொழுது ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நிலையில் அவற்றின் அழிவினால், வருங்காலங்களில் ஆண் குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்பட்டு அது இனப்பெருக்க சுழற்சியை உடைக்கலாம்.

தொடக்கத்தில் மனிதனில் உள்ள Y குரோமோசோம்களில் 1,438 மரபணுக்கள் இருந்த நிலையில் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் அவற்றில் 1,393 மரபணுக்கள் அழிந்துவிட்டது.

தற்போது Y குரோமோசோம்களில் 40 மரபணுக்கள் மட்டுமே மிச்சமுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் அவை மொத்தமாக அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனவே 11 மில்லியன் ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கும் விஞ்ஞானிகள் பதில் வைத்துள்ளனர்.

அதாவது, ஸ்பைனி எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவற்றில் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழிந்த பிறகு புதிய வகையான குரோமோசோம்கள் பரிணமித்துள்ளமை கண்டறியப்பட்டது.

எனவே மனிதர்களிடம் Y குரோமோசோம்கள் முற்றிலுமாக அழியும் போது, புதிய வகையிலான பாலினங்கள் உருவாகும் என்று நம்பப்படுகிறதாக ஆராய்ச்சியின் முடிவுகள் ஊடாக தெரியவந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29/08/2024

தெற்கு ஆக்லாந்தில் ரயில் தண்டவாளத்தில் ஒருவர் சடலமாக மீட்பு...!!

தெற்கு ஆக்லாந்தில் ரயில் தண்டவாளத்தில் இன்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Takanini இல், Walters சாலையில் உள்ள லெவல் கிராசிங் அருகே குறித்த நபர் உயிரற்ற நிலையில் காணப்பட்டார்.

இதனையடுத்து காலை 7.30 மணிக்குப் பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்

29/08/2024

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம்...!!

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் குழு மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

குறித்த குழுக்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்​கைகளை முன்னெடுப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகளும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

29/08/2024

இந்தியா: தமிழ்நாடு

நேற்று முளைத்த காளான் அண்ணாமலை..அதை பேச அருகதை இல்லை - செல்வப்பெருந்தகை..!!

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவரும், முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாளையோட்டி, சென்னை. சத்யமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைஅஞ்சலி செலுத்தினார்.

அந்த நிகழ்ச்சியில், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சர்க்கிள் ஃ வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள்,

இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “மகாராஷ்டிராவில் மோடி அரசால் பல கோடி மதிப்பில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை 6 மாதங்கள் கூட தாக்குபிடிக்கவில்லை.

உடைந்து நொறுங்கிவிட்டது. இதுதான் மோடி அரசின் நிலை. ஆனால் கன்னியாகுமரியில் வானுயர நிற்கும் 133 அடி திருவள்ளுவர் சிலை சுனாமியே வந்தாலும் உறுதியாக நிற்கும். தமிழ்நாட்டில் இப்படி எத்தனையோ சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

நேற்று முளைத்த காளான் அண்ணாமலை, இந்திராகாந்தி குறித்து விமர்சிக்க அவருக்கு அருகதை இல்லை. முதலில் அண்ணாமலை வாஜ்பாய் குறித்து படித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்டோரை வாஜ்பாய் புகழ்ந்து பேசியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

29/08/2024

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹரிஸ் செய்த புதிய சாதனை...!!!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ், தேர்தல் பிரசாரத்திற்காக, கடந்த ஒரு மாதத்தில் ரூ.4,528 கோடி நிதி திரட்டி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸ் போட்டியிடுவதுடன், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹரிஸ் படைத்துள்ளார்.

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இதேவேளை, கமலா ஹரிஸின் பிரசாரத்துக்காக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.4,528 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளமை அமெரிக்க தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

29/08/2024

இளைஞர்களுக்கு பாலியல் வீடியோக்களை ஆன்லைனில் அனுப்ப முயற்சித்த Dunedin இளைஞன் கைது...!!

Dunedin இல்‌ 22 வயதுடைய இளைஞர் ஒருவர் இளைஞர்களுக்கு பாலியல் வீடியோக்களை ஆன்லைனில் அனுப்ப முயற்சிப்பதாக வந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பறியும் சார்ஜென்ட் மன்ரோ கூறுகையில், பெற்றோர்கள் இந்த வகையான குற்றங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அறிவுரை என்னவென்றால், ஆன்லைனில் விழிப்புடன் இருக்கவும், நீங்கள் யாருடன் தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் ஆன்லைனில் நட்பாக இருக்கிறீர்கள் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருக்க வேண்டும்" என்று மன்ரோ கூறினார்.

மேலும் இளைஞர்களுக்கான அறிவுரை என்னவென்றால், இத்தகைய சம்பவங்கள் உங்களுக்கு நடக்கிறது என்று நீங்கள் நினைத்தால், விரைவில் நம்பகமான பெரியவர்களிடம் உதவி கேட்கவும்.

இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு தாங்கள் பலியாகிவிட்டதாக நம்புபவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

செய்தி நிருபர் - புகழ்

29/08/2024

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் மரண தண்டனை - மம்தா அதிரடி...!!

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்கம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வரிச்சையில், அரசின் தலைமைச் செயலகம் நோக்கி மருத்துவ மாணவர்கள் பேரணி நடத்தினர். இதனை தடுத்து நிறுத்தியதால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவியது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு நிறுவன நாள் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் நிறுவன நாள் பாலியல் வன்கொடுமைக்குள்ளானவருக்கான நாளாக அர்ப்பணிக்கிறோம்.

மேற்கு வங்க மாநில சட்டசபையில் அடுத்த வாரம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் மரண தண்டனை விதிக்கை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும்.

அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 31 ஆம் திகதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கோரி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். அதில் தாமும் பங்கேற்பேன் என அறிவித்துள்ளார்.

29/08/2024

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து எச்சரிக்கும் அமெரிக்க புலனாய்வு அறிக்கை..!!

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சீர்திருத்தங்களை நிறுத்துவதற்கான சாத்தியமான முயற்சிகள்,சர்வதேச நாணய நிதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க செய்தித்தளத்தின் புலனாய்வு அறிக்கை எச்சரித்துள்ளது.

எனவே மீட்சியை வலுப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பது இன்றியமையாதது என்று குறித்த செய்தித்தளம் வலியுறுத்துகிறது.

தற்போதைய சர்வதேச நாணய நிதியம் ஆதரவு பெற்ற கடன் நிலைத்தன்மைப் பாதையானது பொருளாதாரத்திற்கு பாரிய உந்துதலை வழங்கவில்லை.

என்றாலும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியமான முயற்சிகள், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை இடைநிறுத்துவதற்கும் அச்சுறுத்தலுக்கும் வழிவகுக்கும் என்று செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள், சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு திட்டத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கான திட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டத்தின் தலைவிதியைச் சுற்றி நிச்சயமற்ற தன்மையை எழுப்புகிறது என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எனவே இலங்கையில் பொருளாதார மீட்சியை வலுப்படுத்த, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பது இன்றியமையாதது என்று அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

29/08/2024

அமெரிக்காவில் கடவுச்சீட்டுக்களுக்கு பதிலாக மனித முகம்...!!

அமெரிக்காவில் கடவுச்சீட்டுக்கு பதிலாக முகத்தை காட்டி அவர் யார் என்பதை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடவுச்சீட்டில் உள்ளவர் யார் என்பதை உடனே அடையாளம் காட்டும் செயலி ஒன்றின் மூலம், எளிதாக ஒருவர் விமான நிலையங்களில் இருந்து புறப்படவோ மற்றும் வெளியேறவோ முடிகிறது.

இதேவேளை, ஐரோப்பாவிலும் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, இங்கிலாந்தில் விரைவில் இந்த முறையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், வரும் ஆண்டுகளில் கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசாக்கள் என எதுவுமே தேவைப்படாது என்ற நிலை மேம்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஒருவரின் முகத்தை வைத்தே, அவர் தொடர்பான தகவல்களை அறியும் வசதியை அமெரிக்கா கண்டுபிடித்து அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறது.

2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு சோதனைகளை பலப்படுத்திய அமெரிக்கா, இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் முகத்தை வைத்து ஒருவரை அடையாளம் காணும் பயோமெட்ரிக் (Biometric) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம், போலியான கடவுச்சீட்டை எவரும் பயன்படுத்தமுடியாது.

இந்நிலையில், அமெரிக்க விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இந்த திட்டத்தை 53 விமான நிலையங்களில் அறிமுகம் செய்துள்ளனர்.

அத்துடன், கப்பல்கள் வந்து செல்லும் 39 இடங்களிலும் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

29/08/2024

ஆக்லாந்து பூச்சியியல் நிபுணர் ஸ்டீபன் தோர்ப்பைக் கொலை செய்த நபர் கைது...!!

ஆக்லாந்தில் பூச்சியியல் நிபுணர் ஸ்டீபன் தோர்ப்பைக் கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்கு ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Blockhouse Bay இல் உள்ள Rathlin தெருவில் கடந்த சனிக்கிழமை (24) காலை 54 வயதான ஸ்டீபன் தோர்ப் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொலை விசாரணை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் அவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வேறு யாரையும் தேடவில்லை என்று டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் க்ளென் பால்ட்வின் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்

29/08/2024

வாழை கதை என்னுடையது.. மாரி செல்வராஜ் திருடிவிட்டார்! - பிரபல எழுத்தாளர் புகார்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்தவர்களும் நல்ல விமர்சனம் கூறி வருகிறார்கள்.

மேலும் நல்ல வசூலும் படத்திற்கு குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாழை கதை தன்னுடையது என பிரபல எழுத்தாளர் ஒருவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய வாழையடி என்ற சிறுகதையை எழுதியதாகவும், அச்சு ஊடகத்தில் வந்த அந்த கதையை தற்போது மாரி செல்வராஜ் சினிமா என்ற காட்சி ஊடகத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார் என எழுத்தாளர் சோ தர்மன் கூறி இருக்கிறார்.

சாகித்ய அகாடமி விருது வாங்கிய எழுத்தாளர் தற்போது வாழை படம் பற்றி கூறி இருக்கும் புகார் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Want your business to be the top-listed Media Company in Auckland?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

🔴LIVE :  யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திருவிழா நேரலை - 09.08.2024 (Day-1)
🔴LIVE :  யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திருவிழா நேரலை - 09.08.2024 (Day-1)
குவைத் நாட்டில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து; 49 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - (காணொளி)
Mr. SUG Pathmanathan interview on [ARASAN Channel/FB Live]
TANZI மற்றும் Arasan NZ Trust இணைந்து வழங்கும் 🤝🗓️ Date: 4th of May, 11 AM - 4 PM📍Location: Samoan Assemblies of God Chu...
Panguni uttharam shiva parvathi kalyanam |Auckland Sri Ganesh Temple
Jaffna Central College vs Jaffna St.John's College Big Match
Jaffna Central College vs Jaffna St.John's College Big Match
காவல்நிலையத்துக்கு வரும் பாதிக்கப்பட்டோரிடம் ஆறுதலாகப் பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்குச் செ…
கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்ட…
LIVE மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி! பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப…
LIVE |"Independent singer and composer Sam P Keerthanமனம் திறந்து

Telephone

Address

Auckland
2019

Other Media/News Companies in Auckland (show all)
Indian Weekender Indian Weekender
133 Onehunga Mall Onehunga
Auckland, 1061

The Indian Weekender is NZ's first weekly news-magazine bringing you the latest news and in-depth cov

New Zealand Geographic New Zealand Geographic
28 Customs Street East
Auckland, 1010

The magazine that celebrates New Zealand in all its diversity — its people, places and wildlife.

Republik Republik
1a Scotland Street
Auckland, 1011

An Indie advertising agency in Freeman’s Bay, Auckland.

NZVisionTimes NZVisionTimes
Auckland

NZ Vision Time is a media company based on New Zealand, publishing local Chinese News paper

2023 Waipa Confessions 2023 Waipa Confessions
35 Whitaker Place
Auckland, 1010

Waiparūrū Confessions returns for 2023. Submit a confession here: https://waipaconfess.com

East & Bays Courier East & Bays Courier
4 Williamson Avenue, Ponsonby
Auckland, 1021

We're online: check out the latest edition at www.eastandbayscourier.co.nz

Công ty TNHH SXKD XNK Quận 3 - Trilimex Công ty TNHH SXKD XNK Quận 3 - Trilimex
New Zealand Maritime Museum, Auckland CBD
Auckland, 70000

CÔNG TY TNHH SẢN XUẤT KINH DOANH XUẤT NHẬP KHẨU QUẬN 3 213 Nam Kỳ Khởi nghĩa, P. Võ Thị Sáu Quận 3, TP.HCM

Living NZ Living NZ
Auckland, 1072

Helping others to discover the best of NZ, from jaw-dropping locations to fab food and lifestyle finds. Online magazine coming soon.

Mystery Times Mystery Times
Auckland

Artistic, inspirational, motivational, historical and entertaining community.

HS Consulting, Pasefika Spinoffs with Loabay Online HS Consulting, Pasefika Spinoffs with Loabay Online
10 Robert Ross Place
Auckland, 2103

Digital Content & Marketing designed to reach more for less. We Can & We Will. ASK US HOW 📲📧

Auckland Today Auckland Today
Auckland

Welcome to Auckland Today. We wanted to make it easier for Aucklanders to get updates as they happen. This platform also allow us to showcase our stunning city. Got Breaking New...