Institution of Kalkudah Community - Qatar

Institution of Kalkudah Community - Qatar

"serving on the welfare and betterment of the Kalkudah society with Almighty's satisfaction"

Photos from Institution of Kalkudah Community - Qatar's post 26/10/2024

கல்குடா சமூக நிறுவனம்- கத்தார் (IKC-Q) மூன்றாவது நிர்வாகத் தெரிவு

கல்குடா சமூக நிறுவனம் கத்தாரின் (IKC-Q) மூன்றாவது நிருவாகத் தெரிவு 25.10.2024ம் திகதி வெள்ளிக்கிழமை Islamic Cultural Center - Asian Town இல் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கல்குடாவை சேர்ந்த கத்தாரில் வசிக்கும் பல சகோதரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

27 உறுப்பினர்களை உள்ளடக்கிய நிருவாகமானது ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டதோடு அமைப்பின் செயற்பாட்டை வினைத்திறனாக செயற்படுத்த முதற்கட்டமாக 3 பதவிநிலை உறுப்பினர்களை உள்ளடக்கிய செயற்குழுவும் தெரிவுசெய்யபட்டது

புதிய செயற்குழுவின் விபரம் பின்வருமாறு:

01. தலைவர் - T.R துவான் அஸ்ஹர்

02. பொதுச் செயலாளர் - அஸீம் ஹனீபா

04. பணிப்பாளர் ( நிதி முகாமைத்துவக் குழு )- M. சமீர்

அத்தோடு IKC-Q இன் யாப்பின்படி அடுத்த நிர்வாக கூட்டத்தில் மீதமாக உள்ள பணிப்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Azeem Haneefa
General Secretary
IKC - Q

13/10/2024

அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்

*ஜனாஸா அறிவித்தல்*

*எமது அமைப்பின் நிருவாக உறுப்பினர் லெப்பைத்தம்பி அவர்களின் மூத்த சகோதரர் 13/10/2024 இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக..

IKC-Q அமைப்பின் பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும் 09/10/2024

IKC-Q அமைப்பின் பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும்

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.10.2024ம் திகதி வியாழக்கிழமை இரவு இஷா தொழுகை பின்னர் கல்குடா பிரதேச கத்தார் வாழ் சகோதரர்கள் அனைவரையும் அழைத்து IKC-Q அமைப்பின் புதிய நிருவாகத்தை தெரிவுசெய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைவரும் அன்றைய நாளில் நமது IKC-Q அமைப்பிற்காக நேரத்தினை ஒதுக்கி புதிய சிறந்த நிருவாகம் ஒன்றினை அமைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

குறித்த நிகழ்வினை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்கு அன்றைய தினம் வருகை தரக்கூடிய உறுப்பினர்களின் பெயர் விபரங்களை திரட்டுகின்றோம். எனவே வழங்கப்பட்டுள்ள Google form link ஊடாக சென்று உங்களது விபரங்களை வழங்குவதோடு உங்களது தொடர்பிலுள்ள நண்பர்கள் அனைவருக்கும் இதனை தெரியப்படுத்தி அவர்களது வருகையினையும் உறுதிப்படுத்துமாறு அன்பாய் வேண்டிக்கொள்கின்றோம்.

உங்களுக்கென பிரத்யேகமாக ஏதேனும் வாட்சப் குழுக்கள் இருந்தால் (OBA, SPORTS CLUB) போன்றவைகள் அவற்றிலும் Share பன்னுங்கள்

IKC-Q அமைப்பின் பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.10.2024ம் திகதி வியாழக்கிழமை இ...

30/08/2024

*கத்தார் நாட்டில் தொழில் வாய்ப்பை இழந்த மற்றும் தொழில் நிமித்தம் வருகை தந்து பல மாதங்களாக தொழிலை பெற்றுக்கொள்ளாத சகோதரர்களுக்கு உலருணவுப் பொதிகள் விநியோகம்*

IKC-Q அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவர் சகோதரர் நாசர் (TOYOTA) அவர்களது வேண்டுகோளின் அடிப்படையில் அவரது முகாமையாளரிடமிருந்து கத்தார் நாட்டில் தொழில் வாய்ப்பை இழந்த மற்றும் தொழிலொன்றை பெற்றுக்கொள்வதற்காக சிரமப்படும் சகோதரர்களுக்கு வழங்குவதற்கென உலருணவுகளை கொள்வனவு செய்வதற்கான கூப்பன் கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த கூப்பன் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட உலருணவுப் பொருட்கள் இரண்டாம் கட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட 05 சகோதரர்களுக்கு நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே கடந்த 21.08.2024 அன்று முதற்கட்டமாக 05 சகோதரர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
-அல்ஹம்து லில்லாஹ்-

குறித்த உதவியினை வழங்கிய, அதனை பெற்றுத் தந்த சகோதரர் நாசர் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து விநியோகம் செய்த சகோதரர் பௌசுல் அமீன் மற்றும் சகோதரர் றியாத் ஆகியோருக்கு IKC-Q அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வண்ணம்,
செயலாளர்
IKC-Q

Photos from Institution of Kalkudah Community - Qatar's post 21/08/2024

*கத்தார் நாட்டில் தொழில் வாய்ப்பை இழந்த மற்றும் தொழில் நிமித்தம் வருகை தந்து பல மாதங்களாக தொழிலை பெற்றுக்கொள்ளாத சகோதரர்களுக்கு உலருணவுப் பொதிகள் விநியோகம்*

IKC-Q அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவர் சகோதரர் நாசர் (Toyota) அவர்கள் அவரது முகாமையாளரிடமிருந்து கத்தார் நாட்டில் தொழில் வாய்ப்பை இழந்த மற்றும் தொழிலொன்றை பெற்றுக்கொள்வதற்காக சிரமப்படும் சகோதரர்களுக்கு வழங்குவதற்கென உலருணவுகளை கொள்வனவு செய்வதற்கென கூப்பனை பெற்று வழங்கியிருந்தார்.

குறித்த கூப்பன் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட உலருணவுப் பொருட்கள் முதற்கட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட 05 சகோதரர்களுக்கு நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டிருந்தது.
-அல்ஹம்து லில்லாஹ்-

குறித்த உதவியினை வழங்கிய, அதனை பெற்றுத் தந்த சகோதரர் நாசர் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய உதவிய மற்றும் விநியோகத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் IKC-Q அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வண்ணம்,
செயலாளர்
IKC-Q

17/08/2024

IKC-Q பிரதிநிதிகள் மற்றும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை- கட்டார் கிளை பிரதிகளுக்கிடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கல்குடாப் பிரதேசத்தின் தாய்ப் பாடசாலைகளுல் ஒன்றான வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை தற்போது அதன் நூற்றாண்டை கடந்து கல்விப் பணியில் உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது என்ற செய்தியை பகிர்ந்துகொள்வதில் IKC-Q மகிழ்வடைகிறது.

அதன் ஓர் அங்கமாக "நூற்றாண்டுக்கான எமது பங்களிப்பு" எனும் தொனிப்பொருளில் IKC-Q பிரதிநிதிகள் மற்றும் அந்நூர் தேசிய பாடசாலை பழைய மாணவர் அமைப்பு கட்டார் கிளையின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்று 16.08.2024 வெள்ளிக்கிழமை தோஹா முன்தஸாவிலுள்ள சோழன் உணவகத்தில் நடைபெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் பாடசாலையின் நூற்றாண்டை சிறப்பிப்பதற்கான பங்களிப்புகள் மற்றும் பாடசாலையிலிருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோள்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையப்பட்டதோடு எதிர்காலத்தில் பாடசாலைக்கென காத்திரமான செயற்றிட்டமொன்றை அந்நூர் தேசிய பாடசாலை கட்டார் கிளையுடன் இணைந்து மேற்கொள்ளல் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

தகவல்
செயலாளர்
IKC-Q

Photos from Institution of Kalkudah Community - Qatar's post 20/07/2024

கத்தார் - கல்குடா சமூக நிறுவனத்தால் (IKC-Q) ரிதிதென்ன இக்ரஃ பாடசாலைக்கு கதிரைகள் அன்பளிப்பு

பாடசாலை மாணவர்களின் எதிர்கால கல்வி முன்னேற்றம் கருதி பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மற்றும் இக்ரஃ ஆசிரிய நலன்புரிச்சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கத்தார் கல்குடா சமூக நிறுவனத்தால் (IKC-Q) கதிரைகள், அலுமாரி அன்பளிப்புச்செய்யும் நிகழ்வு நேற்று 19.07.2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தலைமையில் பிரதி அதிபர் திருமதி எஸ்.எச்.எம்.ஜெஸீர், ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 40 கதிரைகளும் அலுமாரியும் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன் போது IKC-Q அமைப்பு பற்றியும் அதன் மூலம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி, சமூக முன்னெற்றப்பணிகள் மற்றும் கத்தாரில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் அமைப்பின் தலைவர் எஸ்.எம். சனூஸ் நளீமி இரத்தினச்சுருக்கமாக எடுத்துரைத்தார்.

அத்துடன், எமது வேண்டுகோளை முன்னிலைப்படுத்தி கஷ்டப்பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக இத்திட்டத்தை முன்னெடுத்து கதிரைகளையும் அலுமாரியையும் பெற்றுத்தந்தமைக்காக IKC-Q அமைப்புக்கும் நிதியுதவி செய்த மற்றும் இதற்காக உழைத்த அனைவருக்கும் பாடசாலைச்சமூகம் சார்பாக அதிபர் நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தார்.

அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதி அதிபர் திருமதி எஸ்.எச்.எம்.ஜெஸீர், IKC-Q அமைப்பின் தலைவர் எஸ்.சனூஸ் நளீமி, செயலாளர் ஐ.றணீஸ், நிருவாகப்பொறுப்பாளர்களான துவான் அஸ்ஹர், எம்.எம்.முஸம்மில், திட்ட இணைப்பாளர் எம்.ஜே.எம்.ஜெஸீர் மற்றும் இக்ரஃ ஆசிரிய நலன்புரிச்சங்கத்தின் தலைவர் ரீ.எல்.ஏ.ஷகி, பொருளாளர் வீ.ரீ.எம்.இர்ஷாத், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுச்செயலாளர் எச்.எம்.ஜெளபர் ஹுசைன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

22/06/2024

IKC-Q DRESS PROJECT - 2024

நன்றி நவிலல்.

கல்குடா சமூக நிறுவனம் - கத்தார் (IKC-Q) அமைப்பானது கல்குடாவிலுள்ள பல்வேறு சமூக நிறுவனங்களோடு இணைந்து பல்வேறு காத்திரமான சமூக சேவைப் பணிகளில் ஈடுபடும் ஓர் அமைப்பாகும். கடந்த நோன்புப் பெருநாளை முன்னிட்டு அல் இஸ்லாஹ் சமூக சேவை அமைப்போடு ஒன்றினைந்து கூட்டு ஸகாதுல் பித்ர் செயற்றிட்டத்தை கல்குடாப் பிராந்தியத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

இம் முறை ஹஜ் பெருநாளை முன்னிட்டு HAPPY AID அமைப்போடு ஒன்றினைந்து "ஏழைகளுக்கு உடையளிப்போம்" எனும் மகுடம் தாங்கி புத்தாடை விநியோக செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தியிருந்தது.

குறித்த செயற்றிட்டம் தொடர்பாக நாம் எமது வட்சப் குழுமங்களிலும் எமது முகநூல் பக்கத்தினூடாகவும் The Hotline மற்றும் Kalkudah Nation போன்ற இணைய நாளிதழ்களூடாகவும் உங்களது பங்களிப்புகளை எதிர்பார்த்து எமது பதிவுகளை பகிர்ந்துகொண்ட போது உங்களது பங்களிப்புகளை மனமுவந்து நீங்கள் வழங்கியிருந்தீர்கள்.

குறிப்பாக MENZONE, ARS KIDS , SARA TEXTILES மற்றும் SMS FASHION ஆடையக உரிமையாளர்கள் பெறுமதியான ஆடைகளை தந்துதவி எமது செயற்றிட்டத்தை விரிவுபடுத்தியிருந்தனர்.
வழமை போல எமது IKC-Q அமைப்பின் அங்கத்தவர்களது நிதிப் பங்களிப்பாலும் மற்றும் வேறு சில நாடுகளில் தொழில் நிமித்தமாக வதியும் ஒரு சில சகோதரர்களின் பங்களிப்பாலும் எமது செயற்றிட்டம் 750,000/- எனும் பாரிய மைல்கல்லை எட்டியிருந்தது.

சுமார் 330 பயனாளிகள் எமது செயற்றிட்டம் மூலம் இவ் வருடம் புத்தாடைகளை அணிந்துள்ளனர் என்பது சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டியதொரு அம்சமாகும்.

இச் செயற்றிட்டத்துக்கு நிதியால், ஆடைகளால், முகநூல் பதிவுகளால், ஆலோசனைகளால், மற்றும் பிரார்த்தனைகளால் பங்களிப்புச் செய்த அனைவரையும் நன்றியுனர்வுடன் நாம் நினைவுகூற கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களது பொருளாதாரங்களிலும், குடும்பங்களிலும், ஆரோக்கியத்திலும் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என உளமாற பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

இவ்வண்ணம்,
நிர்வாகம்,
IKC-Q

19/06/2024

இறை உதவியால் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்ட IKC-Q புத்தாடை விநியோக செயற்றிட்டம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு கல்குடா சமூக நிறுவனத்தின் (IKC-Q) ஏற்பாட்டில் HAPPY AID இன் பங்குபற்றுதலுடன் *ஏழைகளுக்கு உடையளிப்போம்* செயற்றிட்டம் வெற்றிகரமாக இம்முறை கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.

கத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள், மற்றும் பிற நாடுகளில் தொழில் நிமித்தம் வசிக்கும் சகோதரர்களின் நிதிப் பங்களிப்புகளோடும் உள்ளூர் ஆடையக உரிமையாளர்களின் உடைகள் பங்களிப்புகளோடும் இப்பணி நடைபெற்றிருந்தது.

குறித்த எமது செயற்றிட்டத்துக்கு 336,470/- பெறுமதியான ஆடைகளும் ஒரு சகோதரரிடமிருந்து 16,500/- பெறுமதியான பாடசாலை பைகளும் கிடைக்கப்பெற்றிருந்தன.

நிதிப் பங்களிப்பாக IKC-Q உறுப்பினர்களிடமிருந்து கத்தார் றியாழாக (*4184Qr - 348,700/-*) உம் இலங்கை ரூபாவாக 34,000/- உமாக சேர்த்து மொத்தமாக *382,700/-*கிடைக்கப்பெற்றிருந்தது. அவுஸ்திரேலியா நாட்டிலிருந்து சகோதரர் கியாஸ் அவர்களிடமிருந்து *15,000/-* கிடைக்கப்பெற்றிருந்தது.
*குறித்த செயற்றிட்டத்துக்கான மொத்த நிதி அளவீடாக 750,000/- மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.*

செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக 11.06.2024 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட *10 குடும்பங்களை சேர்ந்த 35 பயனாளிகளுக்கு* புத்தாடைகள் வழங்கிவைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 12.06.2024 ஆம் திகதி காகித நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள 3 குடியேற்ற கிராமங்களில் வதியும் *85 குடும்பங்களை சேர்ந்த 170 பயனாளிகளுக்கு* ஆடைகள் வழங்கிவைக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக 13.06.2024 இல் மாஞ்சோலை பக்ரு வீட்டுத்திட்டத்தில் *15 குடும்பங்களை சேர்ந்த 25 பயனாளிகளுக்கு* ஆடைகள் வழங்கிவைக்கப்பட்டதோடு காவத்தமுனையில் *04 குடும்பங்களைச் சேர்ந்த 10 பயனாளிகளுக்கும்* ஆடைகள் வழங்கிவைக்கப்பட்டன.

மேலதிகமாக அறபா நகர் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்திற்கு சில புத்தகப் பைகள் கையளிக்கப்பட்டதுடன் ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு புதிய ஆடைகள் மற்றும் பாவித்த நல்ல முறையில் காணப்பட்ட ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டன. செயற்றிட்டத்தின் இறுதியாக ரூபா 5000 பெறுமதியான 40 டோக்கன்கள் தெரிவு செய்யப்பட்ட *40 குடும்பங்களைச் சேர்ந்த 80 பயனாளிகளுக்கு* வழங்கி வைக்கப்பட்டன.

மொத்தமாக எமது செயற்றிட்டத்தின் மூலம் சுமார் *330 பயனாளிகள்* புத்தாடைகள் அணிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இச்செயற்திட்டத்திற்கு பொருளாதார ரீதியாக மற்றும் ஏனைய வடிவில் உதவிகளை வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கு அவர்களது பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் மென்மேலும் அபிவிருத்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

செயலாளர்
IKC-Q

15/06/2024

அனைவரும் புரிந்துணர்வுடன் சாந்தி சமாதானத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

நாளைய தினம் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் IKC-Q அமைப்பின் வாழ்த்துக்கள்.

05/06/2024

ஏழைகளின் சிரிப்பில் நாமும் பங்காளிகளாவோம்.

தொடர்ந்தும் நாம் உங்களது பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். இதில் நீங்கள் உங்களது அன்பளிப்பினை ஆடைகளாகவோ அல்லது பணமாகவோ வழங்க முடியும் என்பதோடு நீங்கள் வெளிநாடுகளிலோ அல்லது உள்நாட்டிலோ எங்கு வசிப்பவராக இருப்பினும் கீழ் உள்ள தொடர்பிலக்கங்களுக்கு வாட்சப் மூலம் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் அல்லது கீழ் உள்ள வங்கி கணக்கிற்கு நேரடியாக வைப்பு செய்துவிட்டு +974 5993 8992 என்ற வாட்சப் இலக்கத்திற்கு பற்றுச்சீட்டினை அனுப்பி வைங்கள்.

Qatar
Sanoos naleemi - +97430429202
Hanees - +97430887110
Muzammil - +97474484600

Sri Lanka
Haris - +94776057538
Rifkha - +94754802855
Hasmeer - +94767801701

MIM. Ranees
8014504736
Commercial Bank, Vch

UM Haris
110853718741
Sampath Bank

அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும் படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக்கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய) நாவினால் நிறைவேற்றித் தருவான்' எனக் கூறினார்கள். [நூல் புஹாரி :1432]

04/06/2024

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சகோதரர் ஒருவர் எமது செயற்றிட்டத்துக்கு சுமார் 15,000/- பணத்தொகையை அனுப்பிவைத்துள்ளார். அல்லாஹ் அவரது செல்வத்திலும் ஆரோக்கியத்திலும் அபிவிருத்தியை உண்டாக்குவானாக என நாம் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்தும் நாம் உங்களது பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். இதில் நீங்கள் உங்களது அன்பளிப்பினை ஆடைகளாகவோ அல்லது பணமாகவோ வழங்க முடியும் என்பதோடு நீங்கள் வெளிநாடுகளிலோ அல்லது உள்நாட்டிலோ எங்கு வசிப்பவராக இருப்பினும் கீழ் உள்ள தொடர்பிலக்கங்களுக்கு வாட்சப் மூலம் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்.

Qatar
Sanoos naleemi - +97430429202
Hanees - +97430887110
Muzammil - +97474484600

Sri Lanka
Haris - +94776057538
Rifkha - +94754802855
Hasmeer - +94767801701

ஏழைகளின் சிரிப்பில் நாமும் பங்காளிகளாவோம்.

Photos from Institution of Kalkudah Community - Qatar's post 28/05/2024

IKC-Q Dress Project - 2024.

Contribution No : 03

ஹைறாத் வீதி வாழைச்சேனையில் அமையப்பெற்றுள்ள SARA TEXTILES ஆடையக உரிமையாளர் நண்பர் முபீன் அவர்கள் எமது செயற்றிட்டத்துக்கு சுமார் 83,920/- பெறுமதியான புத்தாடைகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.

தொடர்ந்தும் நாம் உங்களது பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். இதில் நீங்கள் உங்களது அன்பளிப்பினை ஆடைகளாகவோ அல்லது பணமாகவோ வழங்க முடியும் என்பதோடு நீங்கள் வெளிநாடுகளிலோ அல்லது உள்நாட்டிலோ எங்கு வசிப்பவராக இருப்பினும் கீழ் உள்ள தொடர்பிலக்கங்களுக்கு வாட்சப் மூலம் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்.

Qatar
Sanoos naleemi - +97430429202
Hanees - +97430887110
Muzammil - +97474484600

Sri Lanka
Haris - +94776057538
Rifkha - +94754802855
Hasmeer - +94767801701

ஏழைகளின் சிரிப்பில் நாமும் பங்காளிகளாவோம்.

22/05/2024

HELP DRESS - 2024

Let's come together to support our community.

For More Information:
Qatar
Sanoos naleemi - +97430429202
Hanees - +97430887110
Muzammil - +97474484600

Sri Lanka
Haris - +94776057538
Rifkha - +94754802855
Hasmeer - +94767801701

Al Quran about charity

﴿مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ﴾
[ البقرة: 261]
The parable of the spending of those who spend their wealth in the way of Allah is like planting a seed of grain. Seven rays sprout from it! Each ray contains one hundred grain beads. Thus Allah multiplies the benefits of good deeds to those who seek Him. And Allah is Most Generous, All-Knowing

Photos from Institution of Kalkudah Community - Qatar's post 21/05/2024

IKC-Q Dress Project - 2024.

Contribution No : 02

பிரதான வீதி ஓட்டமாவடியில் அமையப்பெற்றுள்ள ARS KIDS ஆடையக உரிமையாளர் நண்பர் றிஸ்வான் அவர்கள் எமது செயற்றிட்டத்துக்கு சுமார் 40,550/- பெறுமதியான சிறுவர்களுக்கான புத்தாடைகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.

தொடர்ந்தும் நாம் உங்களது பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். இதில் நீங்கள் உங்களது அன்பளிப்பினை ஆடைகளாகவோ அல்லது பணமாகவோ வழங்க முடியும் என்பதோடு நீங்கள் வெளிநாடுகளிலோ அல்லது உள்நாட்டிலோ எங்கு வசிப்பவராக இருப்பினும் கீழ் உள்ள தொடர்பிலக்கங்களுக்கு வாட்சப் மூலம் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்.

Qatar
Sanoos naleemi - +97430429202
Hanees - +97430887110
Muzammil - +97474484600

Sri Lanka
Haris - +94776057538
Rifkha - +94754802855
Hasmeer - +94767801701

19/05/2024

ஏழைகளின் சிரிப்பில் நாமும் பங்காளிகளாவோம்....

அன்பிற்குரிய கல்குடா வாழ் உறவுகளே, எமது IKC-Q அமைப்பானது ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஏழைகளுக்கு உடையளிப்போம் என்ற தொனிப்பொருளில் புத்தாடை விநியோகச் செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

எமது செயற்பாட்டின் பங்காளர்களாக நீங்களும் மாற வேண்டுமா????

01. புதிய ஆடைகளாக எம்மிடம் ஒப்படையுங்கள்.

02.குறித்த ஆடைக்கான பணத்தொகையை எம்மிடம் ஒப்படையுங்கள்.

03. எமது செயற்றிட்டம் பற்றிய தகவல்களை பிறருக்கு தெரியப்படுத்துங்கள்.

04. உங்களுக்குத் தெரிந்த நன்கு பரிச்சயமான ஆடையக உரிமையாளர்களிடம் அணுகி நீண்ட நாட்கள் விற்பனையாகாது தேங்கிக் கிடக்கும் ஆடைகளை எம்மிடம் ஒப்படையுங்கள்.

05. கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய இராச்சியம் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் மேலும் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் என உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களூடாக எமது செயற்றிட்டத்துக்கான பங்களிப்பை பெற்றுத் தாருங்கள்.

உங்களது பங்களிப்புகளை எதிர்பார்த்தவர்களாக......

19/05/2024

IKC-Q Dress Project - 2024.

Menzone ஆடையக உரிமையாளர் நண்பர் சாக்கிர் ஹுசைன் அவர்கள் எமது செயற்றிட்டத்துக்கு சுமார் 86,000/- பெறுமதியான புத்தாடைகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.

தொடர்ந்தும் நாம் உங்களது பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். புத்தாடைகளாகவோ அல்லது பணமாகவோ எங்களிடம் வழங்க முடியும்.

18/05/2024

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்

நமது IKC-Q அமைப்பு "ஏழைகளின் சிரிப்பில் நாமும் பங்காளிகளாவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு பெருநாள் ஆடைகளை கொள்வனவு செய்ய வசதியற்ற குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரு ஆடைத் தொகுதி ஒன்றினை வழங்க திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் அதற்கான முன்னெடுப்பாக வயதுகளுக்கு ஏற்ப ஒருவருக்கு செலவாகும் ஆடை விபரங்களை பதிவிட்டுள்ளோம்.

இதில் நீங்கள் உங்களது அன்பளிப்பினை ஆடைகளாகவோ அல்லது பணமாகவோ நீங்கள் வெளிநாடுகளிலோ அல்லது உள்நாட்டிலோ எங்கு வசிப்பவராக இருப்பினும் கீழ் உள்ள தொடர்பிலக்கங்களுக்கு வாட்சப் மூலம் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்.

Qatar
Sanoos naleemi - +97430429202
Hanees - +97430887110
Muzammil - +97474484600

Sri Lanka
Haris - +94776057538
Rifkha - +94754802855
Hasmeer - +94767801701

தான தர்மம் பற்றி அல்குர்ஆன்

﴿مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ﴾
[ البقرة: 261]
அல்லாஹ்வுடைய வழியில் தங்கள் பொருள்களைச் செலவழிப்போர்களின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றதாகும். அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன! ஒவ்வொரு கதிரும் நூறு தானிய மணிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு அல்லாஹ் தான் நாடுவோருக்கு அவர்களுடைய நற்செயல்களின் பயன்களை பன் மடங்காக்குகின்றான். மேலும் அல்லாஹ் அதிகமதிகம் வழங்குபவனும், யாவற்றையும் நன்கு அறிபவனுமாய் இருக்கின்றான்.

தர்மம் பற்றி நபி மொழி

அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும் படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக்கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய) நாவினால் நிறைவேற்றித் தருவான்' எனக் கூறினார்கள். [நூல் புஹாரி :1432]

15/05/2024

காலஞ்சென்ற கேணிநகர், நாவலடி லைலத்தும்மாவின் (ஓய்வுபெற்ற ஆசிரியர் ஓட்டமாவடி கபூர் மெளலவியின் மனைவி மற்றும் சகோதரர் ஹனீஸ் அவர்களின் தாயார்) ஜனாஷா இன்று (15) மஃரிப் தொழுகையுடன் கேணிநகர், நாவலடி ஜும்ஆப்பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஜனாஷா தற்போது அவரது கேணிநகர், நாவலடி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

14/05/2024

IKC-Q அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் அன்புச்சகோதரர் ஹனீஸ் அவர்களின் தாயார், ஓய்வுபெற்ற ஆசிரியர் கபூர் மெளலவி அவர்அளின் மனைவி செய்லத்தும்மா சற்றுமுன் காலமானார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியூன்

14/05/2024

IKC-Q கல்குடா வாழ் மக்களுடன் இணைந்து...
PROJECT - 08

"ஏழைகளின் சிரிப்பில் நாமும் பங்காளிகளாவோம்."

05/05/2024

அனைவரும் சிறந்த பெறுபேறுகளை பெற பிரார்த்திக்கின்றோம்

உங்களுடன் நாம்...

05/05/2024
Photos from Institution of Kalkudah Community - Qatar's post 03/05/2024

ALBUM-02

IKC-Q LUNCH GATHERING

26.04.2024
Al Dosari Park - Shahaniya

Photos and Edit:
Mohamed Rifath Rushan

Photos from Institution of Kalkudah Community - Qatar's post 28/04/2024

சிறப்பாக நடைபெற்ற IKC-Q பகற்போசன ஒன்றுகூடல்.

கடந்த 26.04.2024ம் திகதி வெள்ளிக்கிழமை அல் தொசாரி பார்க் (Al Dosari Park) இல் பகல்போசனத்துடனான ஒன்றுகூடல் ஒன்றினை மிகச்சிறப்பாக IKC-Q ஏற்பாடு செய்திருந்தது.
-அல்ஹம்துலில்லாஹ்-

இந்நிகழ்வில் கத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்விற்கு முழுமையான அனுசரணையினை அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் சகோதரர் அஜ்வத் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

அந்தவையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற நிதி உதவியினை வழங்கிய சகோதரர் அஜ்வத் அவர்களுக்கும், சமையல் வேலைகளை செய்த, வாகன வசதிகளை வழங்கிய, மற்றும் இதர உதவிகளை வழங்கிய இந்நிகழ்வுடன் தொடர்புபட்ட அனைத்து IKC-Q உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு, அவர்கள் அனைவரினது தேக ஆரோக்கியத்திற்கும் பொருளாதார அபிவிருத்திற்கும் மென்மேலும் இறைவன் உதவிசெய்ய வேண்டும் என IKC-Q அமைப்பு சார்பாக பிரார்த்தித்துக்கொள்கிறோம்.

Videos (show all)

KALKUDAH CRICKET CARNIVAL QATAR (SEASON-I)-2024Team Introduction - 02SEMMANODAI SUPER KINGS
KALKUDAH CRICKET CARNIVAL QATAR (SEASON-I)Event of Players Auction
KALKUDAH CRICKET CARNIVAL QATAR (SEASON-I)Let’s Rigister to play together!!!கல்குடா பிரதேச கத்தார் வாழ் சகோதரர்கள் அனைவர...

Website