NEC Lanka - News in Education and Career

NEC Lanka - News in Education and Career

கல்வி மற்றும் தொழில் தொடர்பான செய்திகள்...

02/03/2024

🚨 SCAM ALERT! 🚨

🔥Join with us

✨எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்✨

https://chat.whatsapp.com/FGamrPYlx9AD0rRGTrGl4h

முகநூலில் 🤙
https://www.facebook.com/neclanka.tk

நமது telegram channel இல் இணைந்து கொள்ள- 👇👇👇

Telegram Channel
https://t.me/neclanka

🔥 நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்🔥

❤️Forward This Message💙

02/03/2024

ஜம்இய்யாவின் கல்விப்பிரிவு வழங்கும் O/L மாணவர்களுக்கான இஸ்லாம் பாட வகுப்புக்கள்*

இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு,
👇👇

🌐 https://www.acju.lk/news-ta/acju-news-ta/3205-acju-exam

🔥Join with us

✨எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்✨

https://chat.whatsapp.com/FGamrPYlx9AD0rRGTrGl4h

முகநூலில் 🤙
https://www.facebook.com/neclanka.tk

நமது telegram channel இல் இணைந்து கொள்ள- 👇👇👇

Telegram Channel
https://t.me/neclanka

🔥 நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்🔥

❤️Forward This Message💙

25/02/2024

⁉️ 50 பயனுள்ள தொழில்கள்

உணவு உற்பத்தி, சேவை வழங்கும் வணிகங்கள் மற்றும் வணிகங்களை வாங்குதல் மற்றும் விற்பது உட்பட இலங்கையில் பகுதிநேர முயற்சிகளாக செய்யக்கூடிய 50 பயனுள்ள வீட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்பு மற்றும் சேவை அடிப்படையிலான வணிகங்கள்:

உணவு உற்பத்தி தொழில்கள்:
1. வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா கலவைகள் மற்றும் சுவையூட்டும் கலவைகள்
2. ஜேம் தயாரிப்புகள்
3. கைவினை சொக்லட்டுகள் மற்றும் உணவு பண்டங்கள்
4. வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீகள் மற்றும் வேகவைத்த பொருட்கள்
5. தூய இலங்கை கறி பேஸ்ட்கள் மற்றும் சோஸ்கள்
6. வறுத்த காபி பீன்ஸ் தயாரிப்பு
7. கையால் செய்யப்பட்ட சுவை உப்புகள் மற்றும் உட்செலுத்தப்பட்ட எண்ணெய்கள்
8. ஆரோக்கியமான கிரானோலா மற்றும் மியூஸ்லி கலவைகள்
9. வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய்
10. குர்மெட் பாப்கார்ன் சுவைகள்

சேவை வழங்கும் வணிகங்கள்:
11. சிறிய நிகழ்வுகள் அல்லது இரவு விருந்துகளுக்கான தனிப்பட்ட சமையல்காரர் சேவைகள்
12. சிறப்பு நிகழ்வுகளுக்கான கேக் அலங்காரம்
13. மொபைல் கார் கழுவுதல் சேவைகள்
14. வீட்டை ஒழுங்கமைத்தல் மற்றும் குறைத்தல் சேவைகள்
15. தனிப்பயனாக்கப்பட்ட கிப்ட் பக்கிங் சேவைகள்
16. செல்லப்பிராணி சீர்ப்படுத்தும் மற்றும் சீர்ப்படுத்தும் பொருட்கள் விநியோகம்
17. மொழி பயிற்சி சேவைகள் (எ.கா., ஆங்கிலம், சிங்களம்)
18. ஃப்ரீலான்ஸ் கிராஃபிக் டிசைன் சேவைகள்
19. சிறு வணிகங்களுக்கான சமூக ஊடக மேலாண்மை
20. நிர்வாகப் பணிகளுக்கான மெய்நிகர் உதவியாளர் சேவைகள்

வணிகங்களை வாங்கவும் விற்கவும்:
21. கையால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் மற்றும் பாகங்கள் விற்பனை செய்யும் ஆன்லைன் பூட்டிக்
22. இரண்டாம் கை புத்தக பரிமாற்றம் மற்றும் விற்பனை
23. பழங்கால ஆடைகள் மற்றும் பாகங்கள் மறுவிற்பனை
24. உள்ளூர் கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் சந்தை
25. வீட்டில் அழகு மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் விற்பனை
26. உட்புற ஆலை விற்பனை மற்றும் பரப்புதல் சேவைகள்
27. வீட்டு காய்கறி மற்றும் மூலிகை விற்பனை
28. கையால் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பாகங்கள் விற்பனை
29. பயன்படுத்திய எலக்ட்ரானிக்ஸ் திரும்ப வாங்குதல் மற்றும் புதுப்பித்தல்
30. உள்ளூர் கலைப்படைப்புகள் மற்றும் ஓவியங்கள் விற்பனை

உணவு சேவை வணிகங்கள்:
31. சிறிய நிகழ்வுகள் மற்றும் விருந்துகளுக்கான வீட்டு அடிப்படையிலான உணவு
32. சிறப்பு கேக் பேக்கிங் மற்றும் விநியோக சேவைகள்
33. உணவு தயாரிப்பு மற்றும் விநியோக சேவைகள்
34. புதிய பழச்சாறு மற்றும் ஸ்மூத்தி ஸ்டாண்ட்
35. வீட்டில் ஐஸ்கிரீம் மற்றும் பாப்சிகல் ஸ்டாண்ட்

ஆலோசனை மற்றும் பயிற்சி வணிகங்கள்:
36. வணிக பயிற்சி மற்றும் வழிகாட்டல் சேவைகள்
37. தனிப்பட்ட நிதி ஆலோசனை மற்றும் பட்ஜெட் பட்டறைகள்
38. உடல்நலம் மற்றும் ஆரோக்கிய பயிற்சி சேவைகள்
39. தொழில் ஆலோசனை மற்றும் எழுதும் சேவைகள்
40. பெற்றோர் மற்றும் குழந்தை பராமரிப்பு ஆலோசனை சேவைகள்

வீட்டு மேம்பாடு மற்றும் பராமரிப்பு வணிகங்கள்:
41. தோட்டம் மற்றும் இயற்கையை ரசித்தல் சேவைகள்
42. வீட்டு ஓவியம் மற்றும் அலங்கார சேவைகள்
43. சிறிய பழுது மற்றும் நிறுவல்களுக்கான கைவினைஞர் சேவைகள்
44. தளபாடங்கள் மறுசீரமைப்பு மற்றும் சுத்திகரிப்பு சேவைகள்
45. உபகரணங்கள் பழுது மற்றும் பராமரிப்பு சேவைகள்

நிகழ்வு திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு வணிகங்கள்:
46. சிறிய திருமணங்கள் மற்றும் விருந்துகளுக்கான நிகழ்வு திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு சேவைகள்
47. குழந்தைகள் விருந்து திட்டமிடல் மற்றும் பொழுதுபோக்கு சேவைகள்
48. கார்ப்பரேட் நிகழ்வு திட்டமிடல் மற்றும் மேலாண்மை
49. தீம் அடிப்படையிலான கட்சி அலங்கார சேவைகள்
50. பயணத் திட்டமிடல் மற்றும் பயணத் தனிப்பயனாக்குதல் சேவைகள்

Food Manufacturing Businesses:
1. Homemade spice blends and seasoning mixes
2. Specialty jams and preserves
3. Artisanal chocolates and truffles
4. Homemade cookies and baked goods
5. Authentic Sri Lankan curry pastes and sauces
6. Freshly roasted coffee beans or ground coffee
7. Handcrafted flavored salts and infused oils
8. Healthy granola and muesli mixes
9. Homemade pickles and relishes
10. Gourmet popcorn flavors

Service Providing Businesses:
11. Personal chef services for small events or dinner parties
12. Custom cake decorating for special occasions
13. Mobile car wash and detailing services
14. Home organizing and decluttering services
15. Personalized gift-wrapping services
16. Pet grooming and grooming supplies delivery
17. Language tutoring services (e.g., English, Sinhala)
18. Freelance graphic design services
19. Social media management for small businesses
20. Virtual assistant services for administrative tasks

Buy and Sell Businesses:
21. Online boutique selling handmade crafts and accessories
22. Second-hand book exchange and sales
23. Vintage clothing and accessories resale
24. Local handicrafts and artisanal goods marketplace
25. Homemade beauty and skincare products sales
26. Indoor plant sales and propagation services
27. Homegrown vegetable and herb sales
28. Handmade jewelry and accessories sales
29. Used electronics buyback and refurbishing
30. Local artwork and paintings sales

Food Service Businesses:
31. Home-based catering for small events and parties
32. Specialty cake baking and delivery services
33. Meal prep and delivery services
34. Fresh fruit juice and smoothie stand
35. Homemade ice cream and popsicle stand

Consulting and Coaching Businesses:
36. Business coaching and mentorship services
37. Personal finance consulting and budgeting workshops
38. Health and wellness coaching services
39. Career counseling and resume writing services
40. Parenting and childcare consulting services

Home Improvement and Maintenance Businesses:
41. Gardening and landscaping services
42. Home painting and decoration services
43. Handyman services for minor repairs and installations
44. Furniture restoration and refinishing services
45. Appliance repair and maintenance services

Event Planning and Coordination Businesses:
46. Event planning and coordination services for small weddings and parties
47. Children's party planning and entertainment services
48. Corporate event planning and management
49. Theme-based party decoration services
50. Travel planning and itinerary customization services

இந்த பகுதி நேர வணிகங்கள் இலங்கை சந்தையில் பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் அதே வேளையில் தொழில்முனைவு மற்றும் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.

🔥Join with us

✨எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்✨

https://chat.whatsapp.com/FGamrPYlx9AD0rRGTrGl4h

முகநூலில் 🤙
https://www.facebook.com/neclanka.tk

நமது telegram channel இல் இணைந்து கொள்ள- 👇👇👇

Telegram Channel
https://t.me/neclanka

🔥 நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்🔥

❤️Forward This Message💙

19/02/2024

⁉️ Webomatrics உலக பல்கலைக்கழக தரப்படுத்தலில் இலங்கை பல்கலைக்கழகங்கள் பின்தங்கி இருப்பதற்கும் அதிலும் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கையிலேயே பின்தங்கி இருப்பதற்கும் காரணங்கள் எவை?
By: Dr Ziyad Aia

உலக பல்கலைக்கழக தரப்படுத்தல்கள் பல்வேறு வகையான சுயாதீன நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களால் செய்யப்படுகிறது.

அவற்றின் தரப்படுத்தல்:

✅ பல்கலைக்கழகத்தின் மாணவர் எண்ணிக்கை / கொள்ளளவு,

✅ Carriculum,

✅ மாணவருக்கு ஆசிரியருக்கு இடையிலான விகிதாசாரம் (ஒரு ஆசிரியருக்கு எத்தனை மாணவர்கள்)

✅ பல்கலைக்கழகத்தின் வளாகம்,

✅ உள்ளக வசதிகள்,

✅ Library,

✅ இணைய மற்றும் கணினி வசதிகள் போன்ற இன்னோரன்ன விடயங்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்.

பொதுவாக இத்தகவல்கள் அப்பல்கலைக் கழக இணையதளங்களிலும் மற்றும் அவர்களை தொடர்பு கொண்டு பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். (இதில் பல மிகைப்படுத்தல்கள் காணப்படும்.)

இருந்த போதிலும் வெபோமேட்ரிக்ஸ் தரப்படுத்தலானது இவற்றிலிருந்து சற்று வேறுபட்டது.

💞 ஒரு பல்கலைக்கழகத்தின் Output என்ன என்ற அடிப்படையில் அதன் தரப்படுத்தல் அமையும்.

இதனாலேயே இந்த தரப்படுத்தல் பிரபல்யமானதும் பல பல்கலைக்கழகங்கள் இதில் முதல் இடங்களை பெற போட்டி போடுகின்றன.

Webomatrics ஆனது Spainஐ தளமாக கொண்ட Independent ஆய்வு நிறுவனமாகும்.

2004 முதல் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
6 மாதங்களுக்கு ஒருமுறை (January & July) தரப்படுத்தல் Update செய்யப்படும்.

இதன் தரப்படுத்தல் புள்ளிகள் பின்வரும் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

🛑 01. Visibility (Web Contents Impect) - 50%
பல்கலைக்கழகம் தமது இணைய பக்கத்தில் வெளியிடும் தகவல்கள், Papers, Research Articles அடிப்படையில் வழங்கப்படும்.
ஒரு பல்கலைக் கழகத்துக்கு Faculty அடிப்படையில் பல இணைய தளங்கள் (Subnets) இருந்தால் அவையும் கருத்தில் கொள்ளப்படும்.

இதில் மறைமுகமாக மாணவர் எண்ணிக்கை, Number of Faculties செல்வாக்கு செலுத்தும்.

🛑 02. Transparency (Openness) - Top cited researchers - 10%
இது அப்பல்களைக்கழக Citation உடன் Google scholar தேடல் தளத்தில் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் பெறப்படும்.

பொதுவாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பேராசிரியர்களின் தகைமை இதில் செல்வாக்கு செலுத்தும்.

🛑 03. Excellence (or Scholer) - Top cited papers - 40%
கடைசி 5 வருடங்களுக்கான தரவுகள் (2017-2021) இதில் கருத்தில் கொள்ளப்படும்.
Number of papers amongst the top 10% most cited in each one of the all 27 disciplines of the full database.

இவ்வாறே அந்த 100 புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

⁉️ இதில் இலங்கை பல்கலைக்கழகங்கள் பின் தங்க என்ன காரணம்?

பொதுவாக இலங்கை பல்கலைக்கழகங்கள் எப்படியாவது பட்டதாரிகளை படிப்பித்து வெளியாக்குவதிலேயே குறியாக உள்ளன. மாறாக Research Papers, Publications இல் ஆர்வம் குறைவு.

கடந்த பத்து வருடங்களில் இதில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுகின்றன.

பொதுவாக Research, Thesis, papers என்பவை இறுதி ஆண்டு பரீட்சையின் போதே சோதிக்கப்பட்டு
(Dissertation) அதில் பரிச்சைகள் நடத்தப்பட்டு இறுதியாக சித்தி பெறுவதில் குறிப்பிட்ட அளவு புள்ளிகள் சேர்க்கப்படும். பின்னர் அந்த Thesis பல்கலைக்கழக இணையத்தில் (eLibrary) Upload செய்யப்படும்.

எல்லா Faculty களுமே இந்த Thesis க்கு பெரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. சில பாடசாலை ஒப்படை Levelக்கே இருக்கும்.

எல்லா Thesis களும் மதிப்பீடு செய்யப்பட்டு இணையத்தில் Upload செய்யப்படுவதுமில்லை.

இதனால் இல.01 க்கான புள்ளிகளில் பாரிய அடி விழுகிறது.

இல.02ஐ பொறுத்தவரையில் பல திறமையான பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்வதும் எமது அரச பல்கலைக்கழகங்களில் தரமான வெளிநாட்டு விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள முடியாமலும் இருப்பது பாதிப்பு செலுத்துகிறது.

இல.03ஐ பொறுத்தவரையில் இலங்கை பல்கலைக்கழகங்கள் பாரிய பின்னடைவை சந்திக்கின்றன. என்னதான் Thesis, Research Paper என்று அந்தந்த பல்கலைக்கழக இணைய Library தளங்களில் Upload செய்யப்பட்டாலும் (இதில் சமீப காலமாகத் தான் Hard Copyஇல் இருந்து Digital eLibraryக்கு மாறியது) உலக தரம் வாய்ந்த Journal களில் publish பண்ணப்படுவதில்லை.

இறுதியாண்டு பரீட்சையில் எப்படியோ pass ஆகி விட வேண்டும் என்பதற்காக மாத்திரமே அந்த Thesis கள் Submit ஆகுகின்றன.

தரம் வாய்ந்த Journal களில் அவை Publish ஆவது என்றால் பல படிமுறைகளில் Review Processக்கு உள்ளாகியே ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கு சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை செல்லலாம்.

பல்கலைக்கழகம் Pass ஆகி வெளியாகிவிட்டால் பின்னர்
யாரும் இதன் பின்னால் செல்வதில்லை. அதன் தேவையும் உணரப்படுவதில்லை. இதுவே பின் தங்கி இருப்பதற்கு மிகப் பிரதான காரணம் எனலாம்.

⁉️ இலங்கைக்குள் கொழும்பு பல்கலைக்கழகம் முதலிடத்தில் வர பிரதான காரணங்கள்:

தரம் வாய்ந்த விரிவுரையாளர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தை நோக்கியே படை எடுப்பது.

Eg:
உலக தரப்படுத்தலில் அதிசிறந்த Top 2% விஞ்ஞானிகளில் 9 பேர் கொழும்பு பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
(Commentsஐ பார்க்க.)

கொழும்பு பல்கலைக்கழகத்தில் அதிக Research Papers வெளியாவது Post Graduate Institute of Medicine (PGIM) இலிருந்தே.
இது Post Graduate கற்கை என்பதால் அவ்வாறான Research Paperகள் உலக தரத்தில் உள்ள Journalகளிலும் பிரசுரமாகின்றன.
இதற்கு மிக முக்கிய காரணம் அவ்வாறான மருத்துவத்துறை சார்ந்தோர் தமது Fellowshipக்காக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயிற்சிக்கு செல்ல வேண்டி இருப்பதால் அவர்களுக்கு இந்த பிரசுரங்கள் added advantage ஆக அமைகின்றன.

Colombo பல்கலைக்கழகத்தில் அதிக பப்ளிகேஷன்களை வெளியிட்டு இருப்பது Post Graduate Institute of Medicine PGIM)யே. கொழும்பு பல்கலையில் Engineering Faculty இல்லாத போதும் அந்த குறையை நிவர்த்தி செய்வது இந்த PGIMமே.

மறுபுறம் இரண்டாவது இடத்தில் உள்ள பேராதனை பல்கலை Engineering Faculty அதனுடன் சேர்த்த Post Graduate Engineering studies போன்றவற்றால் தமது Research Outputsஐ தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பேராதனை பல்கலை தமது நிலையை முன்னுக்குக் கொண்டு வர மருத்துவ பட்டப்பின் படிப்பு நிருவகத்தை (PGIM) பேராதனையிலூம் உருவாக்க எடுத்த முயற்சி கொழும்பு பல்கலைக்கழகத்தால் முறியடிக்கப்பட்டது. அவ்வாறில்லை எனில் பேராதனை பல்கலைக்கழகமே முதலிடத்தை பெற்றிருக்கும்.

⁉️ தென்கிழக்கு பல்கலைக்கழகம் பின்தங்கி இருப்பதற்கான காரணங்கள்:

இணையத்தில் Research Papers, Thesis வெளியிடுவதில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு சளைத்தது அல்ல என்பது அவர்களின் இணையத்தை பார்த்தால் புரியும்.

இருந்தாலும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் புதியவர்களாக இருப்பதால் உலக தரம் வாய்ந்த நிலையை அடைய சில காலம் எடுக்கும். கிழக்கு போன்ற பகுதிகளில் கொழும்பில் உள்ள பிரபல பேராசிரியர்கள் வருவது குறைவு என்பதால் அந்த மட்டத்தை அடைவது தற்போதைக்கு கடினம்.

அதேபோல் மாணவர் எண்ணிக்கை குறைவு. தற்போது தான் Engineering Facultyயே புதிதாக ஆரம்பித்திருப்பது, மருத்துவ பீடம் இன்மை போன்றவை அதன் பின் தங்கிய நிலைக்கு காரணங்கள் எனலாம்.
By: Dr Ziyad Aia



🔥Join with us

✨எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்✨

https://chat.whatsapp.com/FGamrPYlx9AD0rRGTrGl4h

முகநூலில் 🤙
https://www.facebook.com/neclanka.tk

நமது telegram channel இல் இணைந்து கொள்ள- 👇👇👇

Telegram Channel
https://t.me/neclanka

🔥 நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்🔥

❤️Forward This Message💙

19/02/2024

Campus/ colleges என பெயர் வைத்த தனியார் கல்வி நிறுவனங்கள் அதிமானவை உண்மையில் பல்கலைக் கழகங்கள் அல்ல. அவைகளுக்கு சொந்தப் பட்டப் படிப்புக்களை வழங்க UGC இன் அங்கீகாரம் (accreditation) இல்லை. UGC அனுமதி வழங்கிய தனியார் நிறுவனங்களின் பெயர்களை UGC இன் இணையதளத்தில் காணலாம்.

ஏனைய (Campus/ college) தனியார் நிறுவனங்கள் பொதுவாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புக்களை வழங்கும் முகவர்களாகவே இயங்குகின்றன. மாணவர்கள் எந்த பல்கலைக்கழகப் பட்டத்தை கற்கப்போகிறோம் என அறியாமல் ABC Campus ல் degree இருக்கிறது என்கிறார்கள். ஆனால் ABC Campus வேறொரு பல்கலைக் கழகத்தின் பட்டப் படிப்பை வழங்குவதாக இருக்கும்.

ஒரு நிறுவனத்தில் பட்டப்படிப்பை தொடர முன் பின்வரும் கேள்விகளுக்கு விடை தேட வேண்டும்.

1. அது எந்த பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது,

2. அந்த பல்கலைக்கழகம் UGC யால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா (recognised)?

3. IAU/ WHED தளத்தில் இருக்கிறதா?

4. குறித்த பட்டப் படிப்பை வழங்க அந்த பல்கலைக் கழகத்திற்கு அந்த நாட்டு அதிகாரம் பெற்ற அமைப்பின் (authorised body, eg MQA in Malaysia) அனுமதி இருக்கிறதா?. சில பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு உளநாட்டில் அனுமதியில்லாத பட்டங்களை இலங்கையில் வழங்குகின்றன.

#இதேபோல் Diploma செய்வதானால்

1. அந்த Diploma வை எந்த நிறுவனம் அங்கீகரித்துள்ளது (accredited)?

2. அந்த நிறுவனம் அவ்வாறு அங்கீகாரம் வழங்க அனுமதியுள்ளதா ( eg Skills Development council Canada ஒரு போலியான அங்கீகாரம் வழங்கும் கம்பனியாகும், நிறைய போலிகள் இருக்கின்றன)?

3. உள்நாட்டில் TVEC அனுமதி பெற்ற பாடநெறிகளை அவர்களது இணையதளத்தில் காணலாம். அதிகமாக UK நிறுவனங்களின் பாடநெறிகள் இலங்கையில் பிரபல்யமாக இருக்கின்றன. அவைகளை ofqual அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. குறித்த நிறுவனங்களின் பாடநெறிகளை (accredited) அவர்களது இணையதளத்திலும் ofqual இணையதளத்திலும் உறுதிப்படுத்தலாம்.

4. நேரடியாக குறித்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தலாம்.

5. மேலும் Diploma accredited ஆ அல்லது endorsed ஆ என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சில நிறுவனங்கள் endorse பாடநெறையை accredited என ஏமாற்றி வழங்குகின்றன (இணைப்பு).

6. அங்கீகாரம் இல்லாத (unaccredited ) diploma மற்றும் endorsed certificates களை உங்கள் மேற்படிப்பிற்கு பயன் படுத்துவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.

வெறுமனே Campus/ colleges என்ற பெயரை நம்பி பணத்தையும் நேரத்தையும் இழந்து விடாமல் நன்றாக ஆராய்ந்து உங்களுக்கு பயன் தரக்கூடிய அங்கீகாரமுள்ள Diploma , degree பாடநெறிகளை உரிய முறையில் படியுங்கள்.



🔥Join with us

✨எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்✨

https://chat.whatsapp.com/FGamrPYlx9AD0rRGTrGl4h

முகநூலில் 🤙
https://www.facebook.com/neclanka.tk

நமது telegram channel இல் இணைந்து கொள்ள- 👇👇👇

Telegram Channel
https://t.me/neclanka

🔥 நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்🔥

❤️Forward This Message💙

22/01/2024

O/L ரிசல்ட் வந்ததிலிருந்து, நான் செய்த வேலை, இருக்கின்ற எல்லா ஸ்கொலர்ஷிப் தார நிறுவனுங்களுக்கும் அப்ளிகேஷன் போட்டதுதான். பைத்துல்மால் நிதியம் மாதம் ஒன்றுக்கு 1000/-ம், SMM Hussain நிதியம் 1200/-ம் தந்தார்கள்.

இந்தக் காசுகள் பேங்கிற்கு வந்து விழும் நாளில், நான் ராஜாஷ் புத்தகக் கடையிலும், நூரி நூல் நிலையத்திலும் நிற்பேன். சில நாட்களில் மூன்று நான்கு மாத காசை சேர்த்து எடுத்துக் கொண்டு, கொழும்புக்கு சென்று புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறேன். அப்போதைய கொழும்புப் பயணம் இப்போது போன்று A/C பஸ் பயணமல்ல. மன்னம்பிட்டியை செக் பொயிண்டை தாண்டுவதற்குள், டங்குவார் அறுந்துவிடும்.

எக்சாமுக்கு போகும் போது, அன்றைய நாளில் வந்த அத்தனை புத்தகங்களும் எனது மேசையில் இருந்தன.

வைத்திய பீடத்திற்கு எடுபட்ட பின், பைத்துல்மால் நிதியம் ஸ்கொலர்ஷிப்பை நிப்பாட்டியது. ஆனால் இந்த SMM Hussain நிறுவனம், அவர்களது Prince streetஇல் உள்ள கண்ணாடிக் கடைக்கு என்னைக் கூப்பிட்டு, மாதம் 2000/-தந்தார்கள். முதல் இரண்டு வருடங்களுக்கு அதை எடுத்திருக்கிறேன். பின் எனது நிதி நிலமை சீரானபின் அதை எடுக்கவில்லை. கையில் காசில்லாமல், வீட்டில் கேக்கவும் விருப்பமில்லாமல், கொழும்பு முழுக்க நடந்தே திரிந்த நாட்களில், இந்த 2000/- மிகப் பெரிய உதவி.

இந்த வருடமும் ஸ்கொலர்ஷிப்பிற்காக விண்ணப்பங்களை கோரியுள்ளார்கள். சில நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் சிபாரிசின்றி கிடைக்காது. ஆனால் எந்த ஒரு சிபாரிசும் இன்றி, இவர்கள் எனக்கு தந்தார்கள். தேவையுடையவர்கள் அப்ளிகேஷனை அனுப்புங்கள்.

Dr. Ahamed Nihaj

🔥Join with us

✨எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்✨

https://chat.whatsapp.com/FGamrPYlx9AD0rRGTrGl4h

முகநூலில் 🤙
https://www.facebook.com/neclanka.tk

நமது telegram channel இல் இணைந்து கொள்ள- 👇👇👇

Telegram Channel
https://t.me/neclanka

🔥 நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்🔥

❤️Forward This Message💙

09/01/2024

மருத்துவ துறைக்கு (Medicine) தெரிவாகும் வெட்டுப் புள்ளி இருந்தும் தாம் விரும்பிய துறையை? தெரிவு செய்த மாணவர்கள்!
==============================

கொழும்பு மாவட்டத்திலிருந்து 2022ம் ஆண்டில் உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி திறமை அடிப்படையில் (Merit) சித்தியடைந்த இரண்டு மாணவர்கள் உட்பட மருத்துவ கற்கைக்கு விண்ணப்பிக்க போதிய தகைமை பெற்றிருந்த ஐந்து மாணவர்கள் மருத்துவ துறையில் கற்க விண்ணப்பிக்காது தாம் விரும்பிய ஏனைய துறைகளை தெரிவு செய்துள்ளனர்.

இதில் மூவர் Biochemistry (BSc in Biochemistry & Molecular Biology) துறையிலும் ஏனைய இருவர் முறையே சட்டம் (Law) மற்றும் பல்வைத்திய (Dental) துறையையும் தெரிவு செய்துள்ளனர்.
தகவல் உதவி: Faslin Majeed

🛑 வைத்தியராவதுதான் உச்ச கட்ட Achievement; அப்படி ஆனால்த்தான் சமூக அந்தஸ்து எனும் மாயக்கண்ணாடியை உடைத்தெறிந்து தான் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்த அவர்களது Brave Decisionக்கு முதல் கண் வாழ்த்துக்கள்.

இலங்கை சட்ட கல்லூரிக்கு #நேரடியாக நுழைய கலைத்துறை ஊடாக மாத்திரமே முடியும் என்ற கட்டுப்பாடு 2006 கல்விச் சீர்திருத்தத்தினூடாக விலக்கப்பட்டதைத் தொடர்ந்து கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தனது Passionஆன Lawஐ தெரிவு செய்திருக்கிறார்? ஒருவர்.

அதேபோல் மருத்துவத் துறைக்கு ஒரு புள்ளியில் தட்டுப்பட்டு Dental செல்ல நேர்ந்ததே என Mental ஆகி அங்கலாய்ப்போர் மத்தியில் Wanted ஆக சென்று தெரிவு செய்த தம்பிக்கும் வாழ்த்துக்கள்.

உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி Dental வைத்தியர்களுக்கு MBBS வைத்தியர்களை விட நல்ல வருமானமும், வேலை வாய்ப்புகளும் மலிந்து கிடக்கின்றன.

#ஆனால் Medicineக்கு பதிலாக
BSc in Biochemistry & Molecular Biologyஐ தெரிவு செய்வது Tricky.
Biochemistry & Molecular Biology துறைகளுக்கு USA , Canada போன்ற மேற்கத்திய நாடுகளில் அதிக கிராக்கி உள்ளதோடு, அதிக சம்பளதையும் வழங்குகின்றன.

ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் அரச துறையில் பல்கலைக்கழக விரிவுரையாளர் அல்லது பட்டதாரிகளுக்கான பொது வேலை வாய்ப்புக்களே உள்ளன.

அத்துடன் தனியார் & அரச துறையில் Laboratory Technician, Medical Technologist என்ற குறைந்த வேலை வாய்ப்புகளே உள்ளன. ஏனெனில் எமது சிறிய நாட்டில் அத்துறைகள் விருத்தியடைவில்லை. எதிர்காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவித்து வாய்ப்புகள் பெருகலாம்.

ஆக Unpopular / புதிய Degreeகளை தேர்வு செய்யும்போது வெறும் Passion என்பதைத் தாண்டி நமது எதிர்கால இலக்கு என்ன? நம்மை சார்ந்திருப்போர் & பக்கபலமாக இருப்போர் என்பனவற்றில் தெளிவாக இருக்க வேண்டும்.

என்னோட கணிப்பு சரியாக இருந்தால் மருத்துவ துறையை விடுத்து Biochemistryஐ தெரிவு செய்த மூவருக்கும்:

✅ 01. Degree முடித்து 3 / 5 வருடங்களுக்கு தன் உழைப்பில் தங்கி இருக்கும் குடும்ப சூழல் இருக்காது.

✅ 02. தன்னை மேலை நாடொன்றுக்கு அனுப்பி மேற்படிப்பைத் தொடர குடும்ப வசதி இருக்கும்.

✅ 03. வெளிநாட்டிலிருந்து கயிற்றைக் கொடுக்க உறவினர் யாராவது இருக்க வேண்டும்.

உயிரியல் விஞ்ஞானத் துறையில் சிறந்த பெறுபேற்றை பெற்றார் என்பதற்காக தனக்கு விருப்பமில்லாத இரத்தம், புண், அருவருப்பு, இரவு பகல் பாராது உறக்கமின்றிய ஒரு மன அழுத்தம் நிறைந்த வைத்திய துறையை தெரிவு செய்யத்தான் வேண்டும் என்றில்லை.

படித்துவிட்டார் என்பதற்காக மாத்திரம் சகிப்புத் தன்மை, சேவை மனப்பான்மை வந்துவிடப் போவதில்லை.

அப்படி ஒரு தெரிவை செய்து வாழ்நாள் முழுக்க அவதிப்படுவதை விட தனக்கு பொருத்தமான / விருப்பமான துறையை தெரிவு செய்வது மேல்.

ஆனால்;
மருத்துவத் துறைக்குள் உள்நுழைந்தால் நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டிய ஒரு தேசபந்து. இரத்தம், நோய், நோயாளிகள் என வெளியேற முடியாத ஒரு முட்டு சந்து என்ற மாயையும் களையப்பட வேண்டும்.

உண்மையில் Biochemistry என்பது மருத்துவ கற்கையில் முதல் இரு ஆண்டுகளில் கற்பிக்கப்படும் 3 பாடங்களில் ஒன்று. (Human Anatomy, Physiology & Biochemistry)

அதே நேரம் மருத்துவ கற்கையை பூர்த்தி செய்தபின் பட்டப்பின் படிப்பாக
MSc in Molecular Biology
MSc in Biomedical Informatics என்று Inservice Traing பெற்று அத்துறைகள் நோக்கி செல்லும் இலவச வாய்ப்பை இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் (PGIM - மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவகம்) பெற முடியும்.

அதேபோல் விஞ்ஞான Degree முடித்த ஒருவர் Kelani பல்கலைக்கழகத்தில் MSc in Biochemistry & Molecular Biology கற்க முடியும்.
BSc Degree என்பது ஒரு ஐந்திலாமுச்சந்தி. அதிலிருந்து வேண்டிய பாதைக்கு வாகனத்தைச் செலுத்த முடியும்.

இன்று வேறு Degreeகள் முடித்தவர்களும் LAW வெளிவாரியாக கற்க முடியும்.

ஆக இங்கே எல்லா துறைகளுக்கும் By Pass Route உண்டு.
Sanath Jayasooriya போல் Risky Shot அடிக்க முன் அணியை காப்பாற்ற Aravinda De Silva Backupக்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

By: Dr Ziyad Aia

🔥Join with us

✨எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்✨

https://chat.whatsapp.com/FGamrPYlx9AD0rRGTrGl4h

முகநூலில் 🤙
https://www.facebook.com/neclanka.tk

நமது telegram channel இல் இணைந்து கொள்ள- 👇👇👇

Telegram Channel
https://t.me/neclanka

🔥 நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்🔥

❤️Forward This Message💙

20/12/2023

BSc - காலடியில் கிடைக்கும் பொக்கிஷம்

இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் எமது உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் மருத்துவ, பொறியியல் துறைகளை மாத்திரமே இலக்காக கொண்டு படிக்கப் போகிறார்களோ!

காலடியில் கிடைக்கும் பொக்கிஷத்துக்கு எப்போதும் மதிப்பில்லை என்பார்கள்!
அப்படியானதொரு பொக்கிஷம் தான் BSc degree.

BSc யா?? அது Teaching Degree ஆச்சே!
BSc எல்லாம் ஆட்கள் செய்வாங்களா... BSc ஐத் தவிர வேறு எதுவேண்டுமானாலும் Okay!

எமது பாசையில் சொல்லப் போனால்..
BSc செய்வது "நோண்டி"!
எனும் மனப்பாங்கு தான் எம் மாணவர்கள் மத்தியில் இருந்து வருகிறது!

BSc degree இற்கு மேற்குலகப் பெயர் Natural Science Degree!
Physics, Mathematics, Biology, Chemistry, Zoology, Statistics, Computer science, Botany...... என்று BSc இனுள் வரும் பாடத்துறைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்!

இலங்கையில் BSc இற்கு பெருமளவு முக்கியத்துவம் இல்லை. இருப்பினும் America, Britain, Russia, China, Japan, Germany, Australia, Sweden.... என உலகின் எந்த வளர்ச்சியடைந்த நாட்டை எடுத்தாலும், அந்த நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமே Natural Science பட்டதாரிகளாகத் தான் இருப்பார்கள்!

Researchers, Scientists, Professors, Lecturers, Teachers, Technologists என எத்தனையோ விதமான துறைகளில் அவர்களின் பங்கு இருக்கும்.

உணவு உற்பத்தி, சக்திமுதல்கள், ஆயுதங்கள், இரசாயனம், அணுச்சக்தி முகாமை, விண்வெளி ஆய்வுகள் என அத்தனைக்கும் அடிப்படையே Science Degree holders தான்!

அவர்கள் இன்றேல் எந்த வல்லரசு நாடும் இயங்காது என்பதே யதார்த்தம்!

இலங்கை இன்னும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே இருப்பதற்கு, Medicine, Engineering இற்கு கொடுப்பது போல் Natural Science இற்கு முக்கியத்துவம் கொடுக்காததே பிரதான காரணம் என்பேன்!

விஞ்ஞானப் பிரிவு மாணவர்களையும் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு இது பற்றி சரியாக அறிவூட்டப்படவில்லை!
எந்த ஆசிரியரையோ, பெற்றோரையோ, நலன்விரும்பிகளையோ எடுத்தாலும் Medicine/Engineering இற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!

இலங்கையில் ஏனைய துறைகளுக்கு தொழில்வாய்ப்பு குறைவு என்பதுவும் அதற்கான காரணமாக இருக்கலாம்!
எங்கள் Education System .... பேசி வெடக் நே!

ஆனால், இலங்கையில் BSc செய்து சாதிக்க முடியாதா?!!
என்றால், "முடியும்" என்பதே தக்க பதில்.

Medicine/Engineering தான் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களை அதை நோக்கியே பயணிக்க விடுங்கள்!

அடுத்தவர்களுக்கு BSc பற்றி தெளிவூட்டுங்கள்.

அதில் முக்கியமானது,
BSc ஒரு Teaching Degree அல்ல. Teaching ஒரு Option தான்!

BSc ஐ சரியாக படிச்சால் உங்களுக்கு என்ன கிடைக்கும்.

உலகின் பெரிய பல்கலைக்கழகங்களில் Full scholarship உடன் PhD செய்து, Doctorate முடிக்கலாம்.
ஒரு Scientist ஆகலாம். ஒரு Professor ஆகலாம். Cambridge, Oxford, MIT போன்ற பல்கலைக்கழகங்களில் கூட உயர் மதிப்பு கிடைக்கும்.
ஏன், உங்களுக்கு Nobel Prize கூட கிடைக்கலாம். அடுத்த Einstein ஆகலாம்!

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.
BSc இல் விருப்பமான பாடத்தை திறம்பட படித்து, Special செய்து, 1st class/ 2nd upper இல் Pass ஆக வேண்டும். பின்னர் , உங்களுக்கு MPhil/PhD இற்கு விண்ணப்பித்து அடுத்த நான்கு வருடங்களில் Doctorater முடிக்கலாம்!

BSc இல் Class எடுக்காதவர்களுக்கும் பல வழிகளில் இந்த இலக்கை அடைய இடமுண்டு.

நான் இவற்றை வெறும் கட்டுக்கதையாக சொல்லவில்லை. எல்லாமே உண்மை.
என்னுடன் BSc படித்த பல நண்பர்கள் இப்போது America, Australia, Germany, New Zealand, UK, Netherlands என பல நாடுகளில் PhD செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சிலர் PhD முடித்தும் விட்டார்கள். சில Research Institute களில் Researchers ஆக இருக்கிறார்கள். University களில் Lecture பண்ணுகிறார்கள்.

ஒன்று தெரியுமா.. 3A எடுத்து Medicine/Engineering ஐ கைவிட்டுவிட்டு BSc செய்து Professors/Researchers ஆன முன்னுதாரணங்களும் இங்குண்டு.

Working Visa / Student visa இற்கு Key Money தேடுவதை விடவும், MSc/PhD இற்காக வெளிநாடு சென்று, அதுவும் Full scholarship இல், எதிர்காலத்தை கட்டமைப்பது சிறந்தது தானே!

ஆசிரியர்களே!
Medicine/Engineering இனைத் தவிர்த்து இப்படியும் ஒரு வழி உண்டு என்பதை மாணவர்களுக்கு உணர்த்துங்கள். எமது சமூகத்தில் BSc பற்றிய தெளிவு மிகவும் குறைவு.
பெரும்பான்மையினர் இதை எப்போதோ புரிந்து விட்டார்கள்!

BSc இற்கு பெரிதளவில் Demand இல்லை. Demand வரமுன் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!
University Admission இல் BSc இற்கு Apply பண்ணிக்கொள்!

Ifham Aslam
BSc Hons Physics
PgD Medical Physics
20.12.2023

09/12/2023

முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட Batticaloa Campus இல் Bachelor of Applied Information Technology Degree பாடநெறிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ADMISSION NOW OPEN 2024!

Bachelor of Applied Information Technology Degree Program is a unique three year UGC approved job-oriented degree program (Weekdays / Weekend) offered by the Sri Lanka Telecom (SLTC) Research University conducted by International Campus of Science and Technology (ICST) University Park, Punanai.

Fill the Google Form and submit.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScUJf3hMXqb_OsE34_9TIynCkSkt1rukn02qQTKvr5poB-1dw/viewform?mibextid=Zxz2cZ&fbclid=IwAR2XD_SOoyYwf_WdXL3qmK2PE0owYhiyrzqdF9bXH0fxM2RNZ6i-pYzUxps

🔥Join with us

✨எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்✨

https://chat.whatsapp.com/FGamrPYlx9AD0rRGTrGl4h

முகநூலில் 🤙
https://www.facebook.com/neclanka.tk

நமது telegram channel இல் இணைந்து கொள்ள- 👇👇👇

Telegram Channel
https://t.me/neclanka

🔥 நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்🔥

❤️Forward This Message💙

07/12/2023

வவுனியா பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் இம்முறை O/L எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு
--------------------------------

இம்முறை O/L எழுதி பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் இலக்காக கொண்ட இந்நிகழ்ச்சியில் இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சியில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்படும்.

*A/L கற்பதற்கான நிபந்தனைகள் (துறை ரீதியாக)
*கற்கை நெறிகளும், விண்ணப்பிப்பதற்கான தேவைப்பாடுகளும்;
*இலங்கையின் தொழில் மற்றும் கல்வித் தகைமைகள் (NVQ & SLQF)
*13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சி
*துறை மற்றும் பாடத்தெரிவுகளுக்கான வழிகாட்டல்கள்
*O/L சித்தி பெறத்தவறியவர்களுக்கான வழிகாட்டல்கள்

முடியுமானவர்கள் கலந்து பயன்பெறுங்கள்.

நன்றி.

🔥Join with us

✨எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்✨

https://chat.whatsapp.com/FGamrPYlx9AD0rRGTrGl4h

முகநூலில் 🤙
https://www.facebook.com/neclanka.tk

நமது telegram channel இல் இணைந்து கொள்ள- 👇👇👇

Telegram Channel
https://t.me/neclanka

🔥 நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்🔥

❤️Forward This Message💙

03/12/2023

9A / 8Aக்களும் மருத்துவராகும் கனவுகளும்: அகலக் கற்றல் Vs ஆழக் கற்றல்:

O/L பரீச்சையை பொறுத்தவரை எல்லா பாடங்களிலும் 9A / 8A / 7A & Bs என பெறுபேறுகள் பெறுவது சாதாரணமல்ல. அதற்கு எல்லா பாடங்களிலும் விரிவான பரந்துபட்ட ஆற்றல் தேவை.

ஆனால் அப்படிப்பட்ட மாணவர்கள் எத்துறையில் சிறப்பு தேர்ச்சியை அல்லது தமது ஆர்வத்தை காண்பிக்கிறார்கள் என்பதை அறியாமல் A/Lஇல் வெறுமனே அவர்களை மருத்துவராக்க வேண்டும் என்று Biological Scienceஇல் திணிப்பது பிற்காலத்தில் பெரும் தவறாகி விடுகிறது.

இப்போதெல்லாம் 9A / 8A எடுப்பதெல்லாம் Just Like that என்றாகிவிட்டது.

ஒரு மாவட்டத்தில் மருத்துவ & பொறியியல் துறைக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை விட 9A/8A எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்நாட்களில் அதிகம்.
ஆக By default 9A/8A/7A எடுத்த எல்லா மாணவர்களுக்கும் அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவம் கற்க வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை.

O/L கற்கை என்பது பல விடயதானங்களில் பரந்துபட்ட அறிவை காண்பிப்பது. பொதுவாக மனனமிடல் அதற்கு உதவும்.

ஆனால் Advanced Level என்பது குறிப்பிட்ட ஒரு துறையில் ஆழ்ந்த அறிவை காண்பிப்பது. அதிலும் Bio & Mathsஐ பொறுத்தவரை மனனமிடலை விட Problem solving ஆற்றல் இருக்கவேண்டும்.
அது ஒவ்வொரு மாணவனுக்கும் வேறுபடும்.

ஒரு மாணவன் கணிதம் நன்றாக செய்கிறான், விடயங்களை விஞ்ஞான ரீதியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் ஏனைய O/L பாடங்களில் பெரிதாக பிரகாசிக்காமல் விடலாம். ஆனால் அவன் பின்னாளில் A/L Bio & Mathsஇல் இலகுவாக புள்ளிகளைப் பெறுவான்.

ஆக இங்கு Bio & Matchsஇல் perform பண்ண 9A/8A எடுக்க வேண்டும் என்பதோ 9A/8A எடுத்தவர்கள் எல்லோரும் Bio & Maths தான் படிக்க வேண்டும் என்றில்லை.

அவர்களுக்கு எந்தெந்த துறையில் ஆழ்ந்த ஆற்றல் மற்றும் ஆர்வம் இருக்கிறதோ அத்துறைக்கு செல்வதே சிறந்தது.

9A எடுத்து A/L Bio just Pass Results எடுக்கத் தவறியவர்கள் பல பேரை கண்முன்னே கண்டுள்ளோம்.

மனனம் செய்யும் ஆற்றல் Biology பாடத்துக்கு வேண்டுமென்றால் உதவலாம். Physics , Chemistry போன்ற பாடங்களுக்கு அதற்கும் மேல் IQ, Problem solving ஆற்றல்கள் அவசியம். அவை தன்னுள் உள்ளதா? அந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியுமா? என்பதை மாணவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். (One size is not fit for all.)

இல்லையேல் Chemistry workout ஆகவில்லை.
பிசிக்ஸி பிச்சிக்கிச்சி என்ற நிலைகளை தவிர்க்க முடியாது.

முன்பெல்லாம் Biological Scienceஐ பொறுத்தவரை வைத்தால் குடுமி , சிரைத்தால் மொட்டை என்ற நிலைதான் இருந்தது. அதாவது Bio படிக்கும் ஒருவர் நன்றாக புள்ளிகளைப் பெற்று Medicine/Dental/Veterinary இன்றேல் வெறும் Biological Science (BSc) Degree. அதற்கும் கீழ் College of Education or A/L Pass Marks கூட இல்லை. (அந்த நிலையில் 3rd SIEஇல் Arts Notes படித்து Pass ஆனவர்களும் உண்டு.)

ஆனால் இந்நாட்களில் மருத்துவ கற்கைகளுக்கு நேரடியாக தெரிவாகாவிட்டாலும் Allied Health Sciences எனும் மருத்துவத் துறைசார்ந்த ஏனைய பல Degreeகள் உள்ளன. பலர் மருத்துவத் துறைக்கு தெரிவாகி MBBSஓடு நிற்க Allied Health Sciences படித்த பலர் தமது தகைமைகளை படிப்படியாக உயர்த்தி நல்ல நிலையில் உள்ளதை கண்முன்னே காணலாம்.

இன்று Bio & Maths படித்தவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் Law செய்யலாம்.

ஏதாவது Degreeயை முடித்து அதன் பின்னர் SLEAS / SLAS பரீட்சைகளில் தோற்றி நிர்வாகத் துறைக்கு வரலாம்.

ஆக நல்ல பெறுபேறு பெறும் பிள்ளைகளால் மருத்துவத் துறைக்கு நேரடியாக தெரிவாக முடியாவிட்டாலும் துவண்டு போகாமல் ஏனைய Paramedical subjects ஊடாக தமது ஆற்றல்களை வெளிப்படுத்தலாம்.

மாணவர்களும் பழைய பஞ்சாங்கங்கள் மற்றும் Update ஆகாத அப்பறசிண்டிகளிடம் Advise வாங்காமல் நவீன Job Matketஇல் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு தம்மை தயார் படுத்திக் கொள்ளவேண்டும்.

இன்று உயிரியல் விஞ்ஞான துறையில் Molecular Biology, Bioinformatics, Health Informatics, Data science என பல கற்கைகளும் அவற்றுக்கு வெளிநாடுகளில் அதிக Demandஉம் உள்ளன.

ஆகக் குறைந்தது A/L கற்க ஆரம்பிக்கும் ஒவ்வொரு மாணவனும் இறுதியாக வெளியான "பல்கலைக்கழக மானியங்கள் ஆணைத்துழு"வின் பல்கலைக்கழக பாடவிதானங்கள் தமது துறை சார்ந்த பல்கலைக்கழக பாடநெறிகள் அவற்றுக்கான பாடத் தேர்வுகள் பற்றி இப்போதே கற்றறிய வேண்டும்.

By:- Dr. A.I.A.Ziyad

🔥Join with us

✨எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்✨

https://chat.whatsapp.com/FGamrPYlx9AD0rRGTrGl4h

முகநூலில் 🤙
https://www.facebook.com/neclanka.tk

நமது telegram channel இல் இணைந்து கொள்ள- 👇👇👇

Telegram Channel
https://t.me/neclanka

🔥 நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்🔥

❤️Forward This Message💙