Thirukkural Maamalai
"Thirukkural Maamalai" English and Tamil Monthly Magazine
"International Thirukural Conference 2023"
Discussions with Honorable Education Minister Dharmendra Pradhan today
புதுடில்லி அருகே நொய்டாவில், அருமை நண்பர் திரு சோமாஸ்கந்தன் அவர்களின் பிறந்த நாளில், தம்பதி சமேதராக, அவர் நடத்தி வரும் வேத பாடசாலையில், வேதம் பயிலும் மாணாக்கர்களோடு, வாழ்த்தி வணங்கியதில் பெரு மகிழ்ச்சி. 17.09.2023
Listed
வணக்கம்.
திருக்குறள் உலக நூல்... ஐரோப்பியப் பயணம்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இந்திய மக்களின் நலனுக்காகவும், இந்திய மாணவர்களின் நலனுக்காகவும், பிரான்ஸ் நாட்டு அதிபர் திரு மேக்ரான் அவர்களுடன் கல்விசார் ஒப்பந்தங்கள் அடங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். அதில் மிகவும் முக்கியமானது இந்திய மாணவர்கள் தங்களது உயர் படிப்பை உயர்கல்வியை, பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து தொடர 5 ஆண்டுகள் வரை விசா வழங்குவது, பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவி திருக்குறளை யுனெஸ்கோ மூலம் உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்வது, யூ பி ஐ என்னும் பணப்பரிமாற்றத்தை பிரான்ஸ் நாட்டில் விரிவாக்கம் செய்வது என்பனவாகும்.
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பது போல் நாமும் மாண்புமிகு பாரத பிரதமரின் பிரான்ஸ் பயணத்தின் உடன் இருந்தோம். யுனெஸ்கோவுக்கு தேவையான ஆவணங்களையும், திருக்குறள் பிரெஞ்சு மொழி சார்ந்த ஆவணங்களையும், யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் டைரக்டர் ஜெனரல் அவர்களிடம் சமர்ப்பித்தோம்.
தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் இந்தியத் தூதரிடமும், உயர் அதிகாரியிடமும், திருக்குறள் தொடர்பான நூல்களையும் விபரங்களையும் வழங்கினோம். அவரும் அதை யுனெஸ்கோ தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரைத்தார்.
யுனெஸ்கோவின் இந்தியாவுக்கான நிரந்தர தூதரிடமும் ஐந்து மொழிகளுடன் கூடிய திருக்குறள் புத்தகத்தையும், இது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்தோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டு யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் டைரக்டர் ஜெனரலிடம் பரிந்துரை செய்துள்ளார்.
இது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறக் காரணமாக இருந்து வரும் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நமது நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல் ஆலோசனைப்படி இந்திய வெளியுறவுத்துறை அமைத்துக் கொடுத்த இந்த ஐரோப்பா திருக்குறள் பயணம் மிகச் சிறந்த முறையில் அமைந்தது.
நமது திருக்குறள் ஐரோப்பாவில் உரிய அங்கீகாரங்களோடு, பயணிக்கத் தொடங்கி விட்ட இந்தக் காலம் நம் வாழ்வின் மிக முக்கியமான காலம் என்ற மகிழ்ச்சியோடு நாம் தாய் நாடு திரும்பினோம்.
Hon’ble Prime Minister of India Shri. Narendra Modi signed a Memorandum of Understanding with French President Mr. Macron for the benefit of the people of India and for the benefit of Indian students. The most important of which is to provide visas for Indian students to continue their higher education in France for up to 5 years, to install a statue of Thiruvalluvar in France and take Thirukkural to the world through UNESCO, and to expand UPI money transfer in France.
We have been with the Honorable Prime Minister of India’s visit to France like a flower is accompanied by a fiber and a scent. We submitted the documents required by UNESCO and the Thirukkural French language documents to the Director General at the UNESCO headquarters.
Subsequently, we provided books and information related to Thirukkural to the Indian Ambassador in France and to the high officials. He also recommended it to the UNESCO headquarters.
We submitted the Tirukkural book in five languages and related documents to the Permanent Ambassador of UNESCO to India. He also accepted it and recommended it to the Director General at UNESCO Headquarters.
We returned to our motherland with the joy that this time we have started traveling is the most important time of our life with due acknowledgments of our trip to Europe.
India's External Affairs Ministry arranged this trip to Europe in a very good manner on the advice of the Hon'ble Prime Minister of India Shri. Narendra Modi.
We offer our gratitude to the Prime Minister of India, Shri Narendra Modi, who has been the reason behind such historic events.
www.thirukkuralmalai.org
https://twitter.com/VishalVSharma7/status/1680881466660536322?t=uZQHJYzz4LaopH3u91Ofjg&s=08
Vishal V. Sharma 🇮🇳 on Twitter “The teachings of the great Indian philosopher from are contained in the book “ ”. It multilingual version has been published by Kural Malai Foundation. ISBN: 978-81-947169-2-1. https://t.co/XnfBCu3Frm”
இந்த தமிழ் புத்தாண்டில், உங்கள் வாழ்த்துக்களுடன் "திருக்குறள் மாமலை" இதழ் ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. தொடர்ந்து பயணித்து தமிழ் செய்திகளையும், தமிழ் வளர்ச்சிச் செய்திகளையும் உங்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறந்த இதழாக வெளிவர உங்கள் ஆசிகளை வேண்டுகிறோம்.
https://youtu.be/r2JBZbQzDes
www.thirukkuralmalai.org
இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள்.
சத்தியத்தை இதயத்தில் ஏந்தி
இந்தியாவை உயர்த்திடுவோம்...
Let's carry the truth in our hearts and Raise India.
தமிழ் மொழி இந்தியாவின் பெருமை. அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை...
மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
Tamil language is the pride of India. It is our duty to protect it…
Honorable Indian Prime Minister Narendra Modi
Thanks for the Thirukkural Speech by Honourable Prime Minister of India Thiru
பெருமைக்குரிய சாதனையாளர் அய்யா திரு.ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களை வணங்கி
நினைவு கூர்வோம்...
"திருக்குறள் மாமலை", திருக்குறள் உலக நூல் அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் சபை சட்டத்திருத்தத்தில், திருக்குறளின் முக்கிய கருத்துக்கள் இடம் பெறச் செய்யும் நிலை, ஆகியன தொடர்பான கலந்தாய்வு., மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுடன்
நாள் : 26.05.2022
"Thirukkural Maamalai" discussion with Honorable Prime Minister of India
"திருக்குறள் மாமலை" மாத இதழ் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் பொற்கரங்களில்...
"Thirukkural Maamalai" discussion with Honorable Governor of Tamilnadu
For subscribe "Thirukkural Maamalai" and
Visit our website www.thirukkuralmalai.org
"திருக்குறள் மாமலை" இதழ் மே 2022 முன் அட்டை front wrapper
Discussion With Dr.Vel Raj vice chancellor Anna University for the changes of new syllabus ( Request to Put Thirukkural in new syllabus)
International Thirukkural Conference 2022
மாண்புமிகு தமிழக ஆளுநர். ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும் ஆளுநர் “கல்வெட்டில் திருக்குறள் 6” என்ற திருக்குறள் நூலினை வெளியிட்டார். முன்னதாக கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் 10 மாணவர்களுக்கு சிறந்த தமிழ் மாணாக்கர் என்ற சான்றிதழ் வழங்கியும், 5 தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கியும் கெளரவித்தார். குறள் மலை பெருநீதிப் பெருமகனார் விருது சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன், குறள் மலை வாழ் நாள் சாதனையாளர் விருது கோவை, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் நல்லா.ஜி.பழனிசாமி, குறள்மலை மனுநீதிச் சோழன் விருது, கோவை, மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் மனுநீதி மாணிக்கம் மற்றும் குறள்மலை சிறந்தகல்வியாளர் விருது கோவை, எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனத்தின் தலைவர் மணிமேகலை மோகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி கிருபாகரன் பேசுகையில் ஒவ்வொரு வீட்டிலும் திருக்குறள் ஒலிக்க வேண்டும் . நாம் இதில் உள்ள நல்ல விஷயங்களை வாழ்க்கைக்கு பயன்படுத்த வேண்டும். நாம் அனைவரும் இதன் முக்கியத்தினை குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும், திருக்குறள் மூலம் நமது கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். தமிழின் முக்கியத்தினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். மொழியை வளர்ப்பதன் மூலம் அம்மொழி பேசும் மக்களை வளர்த்தி, நாட்டை முன்னேற்ற முடியும் எனக் கூறினார்
விழாவில் தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி பேசியதாவது “நமது தேசம் புண்ணிய பூமி, சான்றோர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், வாழ்ந்த நாடு.. திருக்குறளில் எவ்வாறு முறையாக வாழ்வது என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. திருக்குறளின் மகிமை பாதுகாக்க வேண்டும். நாம் நல்ல மனிதராக வாழ திருக்குறளினை தினமும் படித்து, அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அமைதியான வாழ்க்கையை நடத்த திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வரியும் பல நல்ல விஷயங்களை எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு குறளிலும் உள்ள ஏழு வார்த்தைகளையும் உண்மையாக புரிந்து படித்தால் வாழ்க்கையில் எல்லோரும் போற்றும் நிலையை அடைய முடியும். திருக்குறள் நமது வாழ்க்கையை உயர்த்தும் ஏணியாக உள்ளது. வாழ்க்கையில் முன்னேற நல்ல செயல்களை பின்பற்றுங்கள். திருக்குறள் உலகிற்கு ஒரு உதாரணமாக உள்ளது என்று கூறினார்.
மேலும்இம்மாநாட்டில் 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை உருவாக்கப்பட வேண்டும், மலையிலே கல்வெட்டில் பதிக்கப்படும் திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் மற்றும் உலக நூலாக அறிவிக்கப்பட இருக்கும் திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பாடத்திட்டமாக திருக்குறளை சேர்க்க ஆவண செய்யவேண்டும் போன்ற மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறள் மலைசங்கத்தின் தலைவர் பி.ரவிக்குமார் இந்த நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து, நிறைவாக நன்றியுரை ஆற்றினார்.
A Historical Journey into the Universe...
"திருக்குறள் மாமலை" நவம்பர் 2021 மாத இதழின் அட்டைப்படம்
வணக்கம்.
உலகத் திருக்குறள் மாநாடு 2022 பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
நமது நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, தாங்களும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
முறையான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட பின் உங்களுக்கும், நமது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
மாநாட்டு தேதி 2022 ஜனவரி 6 மற்றும் 7
இடம் : ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி கோவை.
கட்டுரைகள் கவிதைகள் எழுத விரும்பும் நண்பர்கள் 15.11.2021 க்குள் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
[email protected]
www.thirukkuralmalai.org
9543977077
A Historical Journey into the Universe
காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜகத்குரு ஆசீர்வாதம்.
நமது “கல்வெட்டில் திருக்குறள் ஆய்வு நூல்”
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களில்..
"Thirukkural Maamalai" October 2021 Wrapper
www.thirukkuralmalai.org
A Historical Journey into the Universe
காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜகத்குரு ஆசீர்வாதம்.
நமது "திருக்குறள் மாமலை"
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களில்..
திருக்குறள் மாமலை மாத இதழை பெற subscribe பண்ணுங்க.
"திருக்குறள் மாமலை" ஆகஸ்ட் 2021 மாத இதழின் முன் அட்டை.
Front Wrapper of "Thirukural Maamalai" monthly magazine August 2021
Subscribe to get Thirukkural Maamalai monthly magazine.
பாரத தேசத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்மாநிலத் தலைவராக இன்று பொறுப்பு ஏற்க இருக்கும் திரு அண்ணாமலை அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
www.thirukkuralmalai.org
“திருக்குறள் மாமலை” ஜுலை 2021 மாத இதழ்
“Thirukkural Mamalai” July 2021 monthly magazine.