Jungle Voice - வனத்தின் குரல்

Jungle Voice - வனத்தின் குரல்

This page “Jungle Voice “ is not the official page of Tamil Nadu Forest Department.

23/06/2023

ஆந்திரா - திருமலை கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் தாத்தாவுடன் சென்ற 5 வயது குழந்தை கௌசிக்கை சிறுத்தை ஒன்று பின்பக்கமாக கவ்வி புதருக்குள் இழுத்து சென்றது.

சம்பவத்தை நேரில் பார்த்த பக்தர்கள் மற்றும் அருகில் இருந்த காவலர்கள் சிறுத்தையிடமிருந்து குழந்தையை காப்பாற்றி,

திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை நடைப்பெறுகிறது.

Photos from Jungle Voice - வனத்தின் குரல்'s post 23/06/2023

பாம்பன் அடுத்துள்ள தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை,

கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் கடற்கரை மணலில் புதைப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Photos from Jungle Voice - வனத்தின் குரல்'s post 23/06/2023

மேட்டுப்பாளையத்தில் வாயில் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிக்க முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் வர உள்ளது.

சிகிச்சைக்கு தயார் நிலையில் வனத்துறை மருத்துவர்கள் உள்ளனர்

22/06/2023

கோவை மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில்,

மருதமலை சாலையில இரண்டு குட்டி யானைகள் சாலையின் நடுவே பெரிய யானைகளின் பாதுகாப்புடன் விளையாடிக் கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

22/06/2023

கர்நாடகாவிலுள்ள வனப்பகுதியொட்டிய கிராமத்தின் ஒரு வீட்டின் கிணற்றில் விழுந்த சிறுத்தை ஒன்று,

அது மேலே வர "ஏணி" வைத்தாலும் நீண்ட நேரம் மேலே வராமல் உள்ளே பயந்து கொண்டிருந்ததை உணர்ந்த வனத்துறையினர்,

ஒரு கம்பில் நெருப்பை மூட்டி அதன் அருகில் காட்ட, நெருப்பை கண்டு ஆவேசத்துடன் மேலே ஏறி வனப்பகுதியில் ஓடியது.

Photos from Jungle Voice - வனத்தின் குரல்'s post 22/06/2023

உலக மழைக்காடுகள் தினம் - ஜூன் 22

நம்மகிட்ட சொல்லிக்கிற அளவுக்கு மழை காடுகள் இல்லை என நினைக்காதீங்க .

ஆமஸான், காங்கோ, போர்னியோ மற்றும் நமது அந்தமான் நிக்கோபார் போன்ற பெரு மழைக் காடுகளை இயற்கை உருவாக்கியிருந்தாலும் மனிதனுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அதன் பெருவளத்தை இத்தனை நாள் பாதுகாத்து வந்திருக்க முடியாது.

நம்முடைய மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் காடுகளை Evergreen Forest என Classify செய்யப்பட்டிருந்தாலும் நம்முடைய பெருஞ்செல்வம் அது தான்.

அதன் அடிவாரத்திலும் சில பள்ளத்தாக்குகளிலும் பசுமை போறாத காரணத்தால் அவை காப்புக்காடுகளாகவும் சில சமயங்களில் மாறிவிடுகிறது.

தென்மேற்கு பருவமும் வடகிழக்கு பருவமும் அதன் மீது தன் காதல் மழையை கொட்டித்தீர்த்து வளப் படுத்தினாலும் அறியாமை, அலட்சியம், வன்மம், பேராசை காரணமாக நாம் தான் அதன் பசுமையை கெடுத்து வருகிறோம்.

முதற்கட்டமாக குறைந்தபட்சம் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து உதவுவதே அதற்கு நாம் செய்யும் பெரும் உபகாரமாகும்.

நாம் ரசித்த நம் இயற்கை நாளை நம் பேரக்குட்டிகளுக்கும் வேண்டும்.

:- Nasrath S Rosy

22/06/2023

மருதமலை அடிவாரம் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

21/06/2023

யானைகள் நடமாட்டம் எதிரொலி

மருதமலை மற்றும் அனுபாவி சுப்பிரமணியசாமி கோவில்களுக்கு மலை பாதை வழியாக செல்வதற்கு வனத்துறை கட்டுப்பாடு.

மருதமலையில் காலை 7 மணி முதல் 5 மணி வரையிலும், அனுபாவியில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி.

20/06/2023

அரிக்கொம்பன் (20.6.2023) பற்றிய update:

அரிகொம்பன் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் கடந்த 13 நாட்களாக புற்கள், செடிவகைகள் மற்றும் தாவரங்களை உண்டு வருவதாக கூறப்படுகிறது.

காப்பக ஊழியர்கள் தந்த தகவல் மற்றும் கேமராவில் பதியப்பட்ட படங்கள் மூலம் யானை கோதையாறு ஆற்றின் அருகே ஆரோக்கியமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

18/06/2023

திருநெல்வேலி வனச்சரக அதிகாரிகள், கோழிக் கழிவுகளை தூண்டில் போட்டு கழுகுகளை வேட்டையாடிய 3 பேரை கைது செய்தனர்.

வேட்டையாடப்பட்ட நான்கு கழுகுகள் உயிருடன் மீட்கப்பட்டன

17/06/2023

மத்திய பிரதேசம் - கட்னி மாவட்டத்தில் தேசிய பறவையான மயிலின் இறகுகளை பிடிங்கி சித்தரவதை செய்து ரீல் வீடியோ பதிவிட்டு, பின்னர் தலைமறைவாகி இருந்த குற்றவாளிகளை வனத்துறையினர் கைது செய்தனர்.

16/06/2023

நாமக்கல் - கொல்லிமலையில் உணவு தேடி உலா வரும் கரடியின் வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.

16/06/2023

Update on Arikomban (16.6.23)
Field Director KMTR has given a press release on the present status of Arikomban.

அரிக்கொம்பன் காட்டு யானை, புதிய வாழ்விடத்தில் நல்ல மேய்ச்சலுடன் வசதியாக இருக்கிறது

நீர்த்தேக்கங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.

அரிக்கொம்பன் முத்துக்குழிவயல் சதுப்பு நிலங்களில் உணவு தேடுகிறது.

16/06/2023

கோவை ஆனைகட்டி அடுத்த பாலூர் கிராமத்திற்குள் வழி தவறி வந்த குட்டி யானைக்கு உணவு அளித்த பழங்குடியின மக்கள்.

16/06/2023

ரியல் "ஸ்நேக்பாபு"

14/06/2023

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மாவட்டம் - தண்ணீர் தேடி 7 காட்டு யானைகள் கூட்டமாக கிராமத்தில் புகுந்தது.

14/06/2023

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் அருகே பன்னாரி- மைசூர் சாலையில் நடந்து சென்ற யானையை,

வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யும் காட்சி

Photos from Jungle Voice - வனத்தின் குரல்'s post 14/06/2023

கோவை - மதுக்கரை வனச்சரகம் ஆலந்துறை முகாசிமங்கலம் பகுதியில் காட்டு யானை விரட்டும் போது வனத்துறையினர் வாகனத்தை சேதப்படுத்திய ஒற்றை யானை, வனத்துறை ஊழியர்கள் லேசான காயம்

13/06/2023

தமிழ்நாடு வனத்துறை சார்பில் 200 எலக்ட்ரிக் பைக்குகளும், 50 பொலிரோ ஜீப்புகளும் வனத்துறையின் முன்கள ஊழியர்களின் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வன நவீன மயமாக்கல் திட்டம் மற்றும் பல்லுயிர் திட்டத்தின் கீழ் வனவிலங்கு மீட்பு மற்றும் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 35 கேம்பர் வேன்களும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Photos from Jungle Voice - வனத்தின் குரல்'s post 13/06/2023

பொறுப்பில்லாத பொதுஜனம்...!!

சுற்றுலா என்கிற பெயரில் வனப்பகுதியில் பிராந்தி பாட்டில்களையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் வீசிச்செல்லும் மடையர்களை என்ன வென்று சொல்வது...!?

கடந்த வாரத்தில் பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட்டில் இருந்து லோயர் கோதையாறு வரைக்குமான வனப்பாதையில் குமரி மாவட்ட வனஆர்வலர்கள் குழு களமிறங்கியது.

வனத்துறை உதவியோடு இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு குழு வீதம் தூய்மை பணியில் ஈடுபட்டபோது மிக அதிர்ச்சியாக இருந்தது.

சூழியல் சுற்றுலா மூலம் குற்றியாறு அருவிக்கு வருபவர்கள் விட்டு சென்ற... உடைத்து போட்ட பாட்டில்களும் பிளாஸ்டிக் கழிவுகளும் 20 மூடைகளுக்கு மேல் தேறியது.

இத்தனைக்கும் வன விலங்குகள் நடமாட்டம் மிக்க பகுதி இது. இதற்கு நேர் மேலே உள்ள அப்பர் கோதையார் வனத்தில்தான் அரிக்கொம்பனை விட்டிருக்கிறார்கள்.

யானைகளும், காட்டுமாடுகளும், கடமான்களும் நிறைந்த பகுதி இது.

இந்த உடைந்த பாட்டில்கள் அவைகளின் பாதங்களை காயப்படுத்தினால் எத்தனை பெரிய துன்பம் அது...!?

குற்றியாறு இரட்டை அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை சீரோ பாயிண்ட் சோதனை சாவடியில் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்க பட வேண்டும்.

குடித்துவிட்டு பாட்டில்களை காட்டிற்குள் உடைத்து உடைத்து வீசும் குடியன்களே... நீங்கள் இந்த பூமியில் பெரிய பருப்பு ஒன்றும் கிடையாது. வனம் உன் சொந்த வீடும் கிடையாது.

ஒரு அழையா விருந்தாளியை போல வனத்துக்குள் போய் வரும் குடியன்களே... வனத்தை நாசப்படுத்தாதீங்கடா...

:- Pasumai Shahul

13/06/2023

நீர்யானை உணவை மெல்லும் போது, 12,600 kPa அழுத்தத்தில் மெல்கின்றது.

இது ஒப்பிடுகையில், சிங்கத்தின் மெல்லும் சக்தி வெறும் 4500 kPa மட்டுமே.

Photos from Jungle Voice - வனத்தின் குரல்'s post 11/06/2023

அரிக்கொம்பன் யானை பற்றிய தற்போதைய நிலை

UPDATE ON ARIKOMBAN IN KMTR

11/06/2023

குழந்தை போல் ஆழ்ந்த உறக்கத்தில் காட்டுயானை

10/06/2023

இன்று மதியம் 3.30 மணி அளவில் மருதமலை படிக்கட்டை கடந்த ஒற்றை ஆண் யானை.

VC- Srini Subramaniyam

10/06/2023

Great Barbet (பெரிய குக்குறுவான்)

இவை இந்திய துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு ஆசிய குக்குறுவான் ஆகும்.

இவை 3,000 மீ உயரம் வரையுள்ள மலைக் காடுகளில் வாழ்கிறது.

இக்குக்குறுவான்கள் இமாலய அடிவாரத்தில் இருந்து மலையின் மத்தியப் பகுதி வரை இனப்பெருக்கம் செய்கிறது.

இப்பறவைகள் வட இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.

பெயரிலேயே குறிப்பிட்டது போல குக்குறுவான் இனத்திலேயே பெரியப் பறவை இது ஆகும்.

பழங்களையும் ,பூச்சிகளையும் உண்ணும் இப்பறவைகள் மரத்தின் துளைகளில் கூடு அமைக்கிறது.

தங்கள் குஞ்சுகளை இணைகள் இரண்டும் சேர்ந்தே கவனித்துக் கொள்கிறது.

10/06/2023

இந்தியாவின் முதல் மற்றும் பெரிய வன உயிரின பூங்காவான நமது வண்டலூர் பேரறிஞர் அண்ணா வன உயிரின பூங்காவின் அழகை, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் வன விலங்குகளின் இயல்பை காட்டும் ஆவணப்படம். படக்குழுவினருக்கு எனது வாழ்த்தும், பாராட்டும். நன்றி

- மா. மதிவேந்தன், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர்

09/06/2023

23 வயதான ரஷ்ய சுற்றுலாப் பயணி விளாடிமிர் போபோவ், எகிப்திய கடற்கரை ரிசார்ட்டில் நீந்துவதற்காக கடலுக்குச் சென்றபோது, ​​

சுறாவின் (Tiger Shark) தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட காணொளி வைரலாகி வருகிறது.

09/06/2023

லண்டனில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா - கோடைகாலம் மற்றும் நீச்சல் கற்றுக் கொள்ள புதிதாக நிரம்பிய குளத்தில் முதல் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளும் சுமத்ரா புலி குட்டிகள்.

சட்டவிரோத வேட்டை மற்றும் வாழ்விட அழிவு காரணமாக தொடர்ந்து அழியும் நிலையில் சுமத்ரா புலி இனங்கள் உள்ளன

Videos (show all)

ஆந்திரா - திருமலை கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் தாத்தாவுடன் சென்ற 5 வயது குழந்தை கௌசிக்கை சிறுத்தை ஒன்று பின்பக்கமாக க...
கோவை மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், மருத...
கர்நாடகாவிலுள்ள வனப்பகுதியொட்டிய கிராமத்தின் ஒரு வீட்டின் கிணற்றில் விழுந்த சிறுத்தை ஒன்று, அது மேலே வர "ஏணி" வைத்தாலும்...
மருதமலை அடிவாரம் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையின...
திருநெல்வேலி வனச்சரக அதிகாரிகள், கோழிக் கழிவுகளை தூண்டில் போட்டு கழுகுகளை வேட்டையாடிய 3 பேரை கைது செய்தனர்.  வேட்டையாடப்...
நாமக்கல் - கொல்லிமலையில் உணவு தேடி உலா வரும் கரடியின் வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.
கோவை ஆனைகட்டி அடுத்த பாலூர் கிராமத்திற்குள் வழி தவறி வந்த குட்டி யானைக்கு உணவு அளித்த பழங்குடியின மக்கள்.
ரியல் "ஸ்நேக்பாபு"
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் அருகே பன்னாரி- மைசூர் சாலையில் நடந்து சென்ற யானையை,வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யும்...
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மாவட்டம் - தண்ணீர் தேடி 7 காட்டு யானைகள் கூட்டமாக கிராமத்தில் புகுந்தது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் 200 எலக்ட்ரிக் பைக்குகளும், 50 பொலிரோ ஜீப்புகளும் வனத்துறையின் முன்கள ஊழியர்களின் பயன்பாட்டு...
நீர்யானை உணவை மெல்லும் போது, 12,600 kPa அழுத்தத்தில் மெல்கின்றது.இது ஒப்பிடுகையில், சிங்கத்தின் மெல்லும் சக்தி வெறும் 45...

Website