Venkatakishnan
LIC, STAR HEALTH & ONLINE ELECTRONIC SALE'S
35 வயசு இளைஞர் என்ன பண்ணிடுவார்...??
30 நாள்_ல அமைச்சரவையே மாத்திட்டாரு🔥
கர்நாடக நண்பர் ஒருவர்.மிகச்சிறந்த அரசியல் திறனாய்வாளர் அவர்.ஜாதி,சமூகம்,வளர்ச்சி என எல்லா தளத்திலும் விரிவாக நடுநிலைமையோடு பேசக்கூடிய நபர்..
இந்த தேர்தல் பரப்புரைகள்,மோடியின் பேரணி மற்றும் உரைகள் என எல்லாவற்றையும் களத்தில் இருந்து பார்த்துள்ளார்.தேர்தலான இன்று பல தொகுதி பூத்துகளுக்கு சென்று வந்த பிறகு மாலை என்னை அழைத்து சில தகவல்களை பதிவு செய்திருந்தார்..
மோடியின் பேரணியின் போது,'இந்த நாடு எனக்கு என்ன செய்தது என்றும்,எனக்கு இந்த அரசியல்லாம் தேவையே இல்லை என்றும் எண்ண ஓட்டம் உடைய மக்கள் கூட்டம் மோடிக்காக 4 மணி நேரம் காத்திருந்தது பற்றி சொன்னார்.
அதில் 20 வயதுக்கு குறைவான ஒரு பெண் மயக்கம் வந்து தடுமாறிய பிறகும் அவள் வீட்டுக்கு போக மறுத்ததையும்,மோடி வந்த பிறகு அந்தப் பெண் சன்னதம் கொண்டதைப் போல கொண்டாடி வரவேற்றதையும் அவர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதே அதிர்ச்சியை தன் குரல் வழியே அப்படியே என்னிடம் கடத்தினார்..
வயதானவர்களும்,நடுத்தர வயது உள்ளவர்களும் ஒரு 'கருணாமூர்த்தி வருகிறான்,தர்மதேவன் வருகிறான்' என்பது போல வரவேற்றார்கள்..ஒரு கட்சி ஊழியனைப் போல பூக்களை வாரிப் பொழிந்தார்கள் என்றும் சொன்னார்..
மோடியினுடைய வீச்சு,அவருடைய மகிமை இளைஞர்களிடம் குறிப்பாக 16 வயதிலிருக்கும் மாணவ,மாணவிகளிடமே கூட சென்றுவிட்டது என்பது எதிர்காலம் என்ன என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டுவதாகவும் குறிப்பிட்டார்..2024 தேர்தல் வெற்றி மோடியை மையப்படுத்தியது என்கிற போது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதை விட அவர் மிக முக்கியமான ஒரு விஷயத்தை சொன்னார்.அது இன்னும் பேரதிர்ச்சி..
மோடி - யோகி மீது வருகிற மரியாதைக்குரிய நாயக பிம்பம் அண்ணாமலை மீதும் கர்நாடக மக்களுக்கு வருவதாக சொன்னார்.நான் இடைமறித்து ஆமாம் அவர் அங்கே பணி செய்துள்ளார்.மொழி சிறுபான்மையினர்கள் அதிகம் இருக்கிற மாநிலம்தானே அதனால் அண்ணாமலைக்கு ஈர்ப்பிருப்பதில் லாஜிக் உள்ளது என்றேன்..
ஆனால் அதை மறுத்த அவர்,அண்ணாமலையை உயர்த்திப் பிடிப்பது கன்னட மக்கள்.இன்னொரு மொழிக்காரனை அதுவும் இன்றைய நிலையில் ஒரு தமிழனை அவர்கள் சொந்த மகனைப் போல பார்ப்பது அதிசயம்.இது நடக்கவே வாய்ப்பில்லாத ஒன்று என்கிறார்.
"நான் மோடிக்காக வாக்களித்தேன்,நான் இந்துத்துவாவுக்காக வாக்களித்தேன்" என்று சொல்கிற கன்னட இளைஞர்களை போலவே "நான் அண்ணாமலைக்காக வாக்களித்தேன்" என்ற கன்னட இளைஞர்களையும் பார்க்கிற போது எனக்கு எதுவுமே புரியவில்லை என்றார்..
அவர் இதையெல்லாம் சொல்லிவிட்டு,என்னை தவறாக நினைத்துக் கொள்ளாதே, நான் என் மூளையை ஒரு நிமிடம் ஒதுக்கி வைத்துவிட்டு,நான் கண்டவற்றின் உணர்தலில் இருந்து என் மனதால் ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்வாயா என்றார்..கேளுங்கள் என்றேன்..
ஒருவேளை இங்கே பாஜக ஒரு மெஜாரிட்டி அரசை அமைத்தால் அண்ணாமலையை முதல்வராக நியமிக்க வாய்ப்புள்ளதா என்றார்..என்ன திடீர்னு பிரதமராகிறார் மு.க.ஸ்டாலின் மாதிரி ஆரம்பித்துவிட்டீர்கள் என்றேன்..
இல்லை,என் மூளைக்கு தெரிகிறது இது சாத்தியமில்லை என,ஆனால் அண்ணாமலைக்கு இங்கே கிடைக்கும் வரவேற்பு கற்பனைக்கு அப்பால் உள்ளது..நான் கன்னட லோக்கல் சேனல்களைத்தான் பெரும்பங்கு பார்க்கிறேன்.அது அவருக்கு தரும் முக்கியத்துவமும்,அவர் பேசாத மேடைகளில் மக்களே அவர் பேச வேண்டும் என்று கோஷிப்பதை எல்லாம் பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது என்றார்..
அப்போது நான் ஒன்றை யோசித்துப் பார்த்தேன்.கர்நாடக மக்களிடம் ஒரு அடிப்படை பண்பு உள்ளது.ஒரு அதிகாரி நேர்மையானவனாக இருந்தால் அவனை தூக்கி கொண்டாடுகிறார்கள்.அரசை எதிர்த்து கூட மக்களுக்கு நல்லதை அதிகாரிகளால் அங்கே செய்ய முடிகிறது..
அதிகாரிகளுக்கான மரியாதை இருக்கும் நிலமாக கர்நாடகம் உள்ளது.இதைப் போல தமிழகத்தில் பொது ஏற்பை பார்க்க முடிவதில்லை.
ஒரு நேர்மையாளனை எப்படி சிறுமை செய்யலாம்,அவனை காயப்படுத்தி எப்படி புறமுதுகிட வைக்கலாம் என்ற குரூர சிந்தனையை மக்களுக்குள் திராவிடம் விதைத்துவிட்டதாகவே உணர்கிறேன்.
"நீ ரொம்ப யோக்கியம்" என்ற புள்ளிக்குள் எந்த நேர்மையாளனையும் கொண்டு வந்து நிறுத்த, இங்கே ஒவ்வொருவரும் வேட்டைக்காரனாக உலவுகிறோம்..
இந்த நிலை கர்நாடகாவில் இல்லை,அங்கே ஊழலற்ற அதே சமயம் கருணை கொண்ட ஒரு அதிகாரியை மக்கள் தெய்வத்திற்கு நிகராக கொண்டு போகத் தயங்கவில்லை,அவனை தலைவனாக ஏற்கவும் தயாராக உள்ளார்கள் என்பது புரிகிறது..
இதையே அந்த நண்பரிடமும் பகிர்ந்து கொண்டேன்..எதிர்காலத்தில் தேசிய களத்தில் தென்னிந்திய நட்சத்திர முகமாக அண்ணாமலை உயர்வார்.இது 2024 லேயே மோடிக்கு பயன்பாடாக இருக்கும் என்பதையும் சொன்னேன்..
முழு மெஜாரிட்டியுடன் கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.அது நடந்துவிட்டால் பாஜகவின் தென்னிந்திய குஜராத் இனி கர்நாடகா என்பது மறுக்க முடியாத உண்மை..
ஜெய்ஹிந்த்!
பாஜக வளர்கிறது..
சொல்கிறார் ஜெ உதவியாளர்!
தமிழகத்தில் அழகாகவும், ஆழமாகவும் வேரூன்றிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. மெல்ல மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. கட்சிக்காக உழைத்தவர்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. கட்சியை நம்பி வருபவர்களையும் பாதுகாப்பாய் அரவணைத்துக் கொள்கிறது. கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு உயர் பதவி தந்து உழைக்கும் தொண்டர்களுக்கு ஒரு ஒளிமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர வாய்ப்பில்லை என்று பலர் சொல்லிக் கொண்டிருப்பதால் என்னவோ மாற்றுக் கட்சியில் வளர்ந்த பலர் பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு தயக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துவிடும் என்ற நிலை வரத்தான் போகிறது. அப்படி வரும் போது பலர் அதில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என்பதே உண்மை. நடக்கும் சூழ்நிலைகள் அதற்கு அச்சாரமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
பாரதிய ஜனதா கட்சி, ஆளுமை மிக்க கட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பிரதமர்; மறுபக்கம் அமித்ஷா என உலக அரங்கையும், இந்திய அரசியலையும் திகைத்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன அரசியல் சாணக்கியர் நான்தான் என்பதை அமித்ஷா அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தங்களது கட்சியின் மாநில தலைவர் மீது ஒரு விமர்சனம் வரும்போது அதை தவிடு பொடியாக்கும் விதத்தில் மாற்று கட்சித் தலைவர்களை சந்திக்கும் போது மாநில தலைவரையும் உடன் வைத்து ஆளுமையை மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார். அதன் மூலம் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் எங்களுக்கு உயர்ந்தவர் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இந்த செயல் ஒவ்வொரு தொண்டனையும் உற்சாகம் கொள்ளச் செய்திருக்கும். தொண்டர்களுக்கான மரியாதையை மாற்றுக் கட்சியினரிடம் உயர்த்தி இருக்கும். தமிழகத்தில் ஒரு நம்பிக்கையான கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது.
தமிழகத் தலைவர் அண்ணாமலையும் தனக்கென ரசிகர் கூட்டத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார். நான் சொல்வதை என் தலைமை கேட்கும் என்ற நிலை அவருக்கு ரசிகர் கூட்டத்தை மேலும் அதிகப்படுத்தும்..!
தொண்டர்களுடைய இதயத்தில் பாதுகாப்பான இயக்கம் என்ற நம்பிக்கையை விதைக்கத் தொடங்கி விட்டதால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி படுவேகமாக வளரும் என்றே நான் நினைக்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு உங்கள் ஊரில் பாரதிய ஜனதா கட்சி எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? என்பதை பார்த்துக் கொண்டிருப்பவர்களே இதற்கு சாட்சி..!