முதலமைச்சரின் விரிவானமருத்துவ காப்பீடு திட்ட ஊழியர்கள் நல இயக்கம் Tn Cmchis

முதலமைச்சரின் விரிவானமருத்துவ காப்பீடு திட்ட ஊழியர்கள் நல இயக்கம் Tn Cmchis

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from முதலமைச்சரின் விரிவானமருத்துவ காப்பீடு திட்ட ஊழியர்கள் நல இயக்கம் Tn Cmchis, Medical and health, .

20/09/2023

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு நிகழ்வு காப்பீடு திட்ட ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேஜ் அணிந்து தங்கள் வாழ்வாதார பிரச்சனையை அரசிற்கு தெளிவு படுத்திய தருணம்
மேலும் விரைவில் மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து எங்கள் கோரிக்கை மற்றும் உடனடி தீர்வு வேண்டி அடுத்த கட்ட நகர்வை நோக்கி..







Health Department Tamilnadu

04/09/2023

விரைவில் நடக்க இருக்கும் நம் போராட்டம் மூலம் நம் அடுத்த கட்ட நகர்வை முன் வைக்க போகிறோம்

*நம் நலன் மீது அக்கறை இல்லை

*பல வருடங்களாக வார்டு மேலாளர்கள் சம்பளம் கேள்வி குறி!!!

*ஊழியர்கள் அனைவருக்கும் கீழ் உள்ள பணியாளர்கள் பயன் அடையும் அனைத்து சலுகைகள் பெற வழிவகை செய்ய வேண்டும்

*எங்கள் ஊழியர்கள் அனைவரும் கீழ் அதாவது தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் நேரடி நியமனம் பெற வழிவகை வேண்டும்

*எங்கள் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைவரும் பணிபாதுகாப்பு பெற மற்றும் இதர சலுகைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

இதற்கு தடை கல்லாக இருக்கும் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

14/08/2023

நியூஸ் தமிழ் செய்தியில் இன்று

14/08/2023

திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்வாதார பாதுகாப்பு முதல் மாநில மாநாடு நடைபெற்றது.

மாநிலத் தலைவர் மணிவண்ணன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் முத்தரசன் பேசியது:

மாநாட்டின் முக்கிய நோக்கம் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் அவர்களின் மனித நேய சிந்தனையில் கலைஞர் காப்பீடு திட்டம் உதயமாகி பின்னர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமாக பரிணமித்து, மக்களின் மருத்துவ பிணி போக்கும் மகத்தான திட்டமாக விளங்கி வருகிறது முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்.

தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் திட்டத்தை 15 ஆண்டுகாலமாக மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அரசாணை எண் 219 - ன் படி காப்பீடு திட்டத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள திருத்திய ஊதியம் நமக்கு பேரதிர்ச்சியை அளிக்கிறது.

ஏற்கனவே ரூபாய் 15,000 மாத ஊதியமாக பெற்று வரும் வார்டு மேலாளர்களுக்கு டையாலிசிஸ், டெக்னீசியன், கேத்லாப் டெக்னீசியன், ரூபாய் 12,000 மாத ஊதியம் எனவும் மாவட்ட ஆட்சியரின் தினக்கூலி அடிப்படையில் மாதந்தோறும் ரூபாய் 10,000 கூடுதலாக பல்நோக்கு பணியாளர்கள் பெற்று வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ரூபாய் 8,500 மாத ஊதியம் எனவும் நினைக்கப்பட்டுள்ளது .

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் நிலையில் புதிய அரசாணையின்படி ஏற்கனவே பெற்று வந்த ஊதிய மறுக்கப்பட்டு ஊதிய குறைப்புக்கு பணியாளர்கள் ஆளாக்கப்பட்டு இருப்பது குறித்து கடந்த 27 ம் தேதி அன்று சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் ஆகியோர்களை நேரில் சந்தித்து முறையீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள கோரிக்கைகளின் படி,

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்களின் ஊதிய குறைப்புக்கு வழிவகுக்கும் அரசாணை 219 ரத்து செய்ய வேண்டும்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் வார்டு மேலாளருக்கு அடிப்படை ஊதியம் ரூபாய் 20,000 ஆகவும், டயாலிசிஸ், டெக்னீசியன், கேத்லாப் டெக்னீசியன் அடிப்படை ஊதியம் ரூபாய் 18,000 ஆகவும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு ரூபாய் 16,000 ஆகவும், ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். வருடாந்திர ஊதிய உயர்வு 5% ராயல்டி போனஸ் வழங்கப்பட வேண்டும்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

தேசிய சுகாதார டிக் டாக் பண்ணி ஆளாளுக்கு வழங்கப்படும் விடுப்புகள் EPF,ESI மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் பணியாளர்களாக வரையறுக்கப்பட வேண்டும்.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணிபுரிந்து வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

13/08/2023
13/08/2023

ஒன்று பட்டால் மட்டுமே உண்டு வாழ்வு என்ற தாரக மந்திரம் தான் இன்று நமக்கு நம் மூத்தவர்கள் வழி நடத்துபவற்களால் அறிவுறுத்தப்பட்டது..

*கடந்த காலங்களை எண்ணி பாருங்கள் நாம் கடந்து வருகின்ற பாதையை

வார்டு மேலாளர்கள் என்ற பதவிக்கு ஏற்றார் போல் அந்த பதவியையும் அதனுடைய வேலையும் பார்த்தோம் அதற்கு மேல் நம் நிர்வாகம் வழங்கும் வேலைகளையும் பார்த்தோம்.தற்பொழுதும் பார்த்து வருகிறோம்

நாங்கள் ஒன்னும் மார்கெட்டிங் மனேஜேர் அல்லது sales மேனேஜர் இல்லை எங்களுக்கு perfomace கொடுக்க. எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகள் சரியாக செய்கிறோம் நாங்கள் கேட்பது நீதிமன்றம் அளித்த குறைந்த பட்ச ஊதிய உயர்வு

அதை கூட வழங்காமல் எங்களை காலம் தாழ்த்தி இபொழுது எங்களை போராட்டம் அளவுக்கு மாநாடு போடும் அளவுக்கு. கொண்டு வந்தது உங்களது நிர்வாக அலட்சியம் எங்கள் பல ஆண்டு விரக்தி தான்

இன்று மத்திய நகரமான திருச்சியில் நடந்த எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 13/2023

இதனால் எங்களுக்கு தற்போது வரை நாங்கள் பாதிக்கபட்ட சம்பள முரன் எல்லாவற்றையும் சேர்த்து 2012 முதல் தற்போது வரை பணியாற்றி கொண்டு இருக்கும் வார்டு மேலாளர்கள் மற்றும் இதர பணியாளர்களின் ஆண்டு தோறும் சம்பள உயர்வு நிலுவை தொகையினை கண்டிப்பாக வழங்க வேண்டும்.

இனிமேல் மேல் மட்டத்தில் உள்ளவர்களால் பல வருடங்களாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு எதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் முறைப்படி நடைபெறும்

13/08/2023

கோரிக்கைகள்

13/08/2023

13/08/2023

இந்த மாநாட்டிற்கு பின் எந்த ஒரு காப்பீடு திட்ட பணியாளர்களுக்கு மறைமுக அச்சுறுத்தல் எதுவும் ஏற்பட்டால் உங்கள் முன் அரசு பணியாளர் சங்கம் நிற்கும் என்றும் 1000 பேர் மருத்துவ அதிகாரி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த படும் என்றும் அரசு ஊழியர் TNGEW சங்கமாநில தலைவர் தோழர் P KUMAR அவர்கள் சூளுரை

13/08/2023

தோழர் முத்தரசன் ஐயா அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் ...

Photos from முதலமைச்சரின் விரிவானமருத்துவ காப்பீடு திட்ட ஊழியர்கள் நல இயக்கம் Tn Cmchis's post 13/08/2023

10/08/2023

அனைவருக்கும் மாலை வணக்கம்

ஆகஸ்ட் 10

இன்று மருத்துவத் துறை செயலாளர் அவர்கள் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வருகைப்புரிந்தார். அப்போது அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் மற்றும் துறைத் தலைவர்கள் உதவியுடன் அவரை சந்தித்துப் பேச அனுமதி கிடைத்தது. அப்போது CMCHIS ஊழியர்கள் அவரிடம் GO 219 குறித்து விரிவான நம்முடைய கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தைக் கொடுத்து அதனால் ஏற்படும் பாதிப்பையும் தெரிவித்தோம். பின்னர் அவர் இதை பற்றி விசாரித்து விரைவாக முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

10/08/2023

அணி திரண்டு வாரீர்.....

பணி பாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு கேட்டால் வேண்டுமென்றே தட்டி களிக்கும் போக்கை உடனே கைவிட்டு உடனடி நடவடிக்கை மூலம் எங்கள் வாழ்வாதார பிரச்சனையை போக்க வேண்டும்..

08/08/2023

பல வருடங்களாக முடங்கி இருந்தோம் எங்களுக்கு நல்லது நடக்கும் என்று பல ஆட்சிகள் மாறின காட்சிகளும் மாறின

மருத்துவ திட்ட குழு இயக்குனரும் மாறி கொண்டே இருக்கிறார்கள் இதுவரையிலும் எங்கள் வாழ்வில் மாற்றம் இல்லை

எங்கள் கோப்புகள் ஒவ்வொரு அதிகாரிகளால் கிடப்பில் தான் போட்டு வைக்க படுகிறது

எங்கள் சம்பளம் அன்றில் இருந்து இன்று வரை உயர்த்தப்படவில்லை

இன்று வரை எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை எனவே ஒன்று பட்டால் மட்டுமே உண்டு வாழ்வு..

எனவே முதல் மாநில மாநாடு கூடுகை நடைபெற விருகிறது அனைவரும் வாரீர்

கோரிக்கை நிராகரிக்க பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை மாநிலம் முழுவதும் தெரியும் அளவுக்கு எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்..

ஒன்று கூடுவோம் திருச்சியில்















மருத்துவ காப்பீடு திட்ட ஊழியர்கள் நல சங்கம் Tn Cmchis

Health Department Tamilnadu

04/08/2023

வெற்றி நமதே

03/08/2023

வரும் 13/08/2023 அன்று தமிழ்நாடு மருத்துவ காப்பீடு திட்ட ஊழியர்கள் நல சங்கம் Tn Cmchis சார்பில் முதல் மாநில மாநாடு மற்றும் பல்வேறு அம்ச கோரிக்கைகளை தமிழக அரசிடம் உடனே நிறைவேற்ற கோரி தீர்மான கூட்டம் நடைபெறுகிறது மருத்துவ காப்பீடு திட்ட ஊழியர்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர் ...

முதல் மாநில மாநாடு திருச்சியில்

அணி திரண்டு வாரீர் முக்கிய தலைவர்கள் நமக்காக நம் உரிமைக்காக குரல் கொடுக்க இருக்கின்றனர்..

இரண்டாம் முயற்சி வெற்றி பெறாவிடில் அடுத்த கட்ட நடவடிக்கை தமிழ் நாடு தெரியும் அளவுக்கு எங்கள் கள பணி இருக்கும்..

உடனே எங்க கோரிக்கை மீது கவனம் செலுத்த வேண்டும்...

03/08/2023

திருத்தி அமைக்கப்பட்ட அமைக்க போற அரசு ஆணையில்

கீழ்காணும் அனைத்து ஆணை வரைவுகளும் மருத்துவ காப்பீடு திட்ட ஊழியர்கள் நல சங்கம் Tn Cmchis எங்களுக்கும் வழங்க வேண்டும்

தமிழ்நாடுசுகாதார குழும இயக்ககத்தில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் புற ஆதார பணியாளர்களுக்காக விரைவில் அமல்படுத்த இருக்கும் Service bye-law வில் அடங்கியுள்ள முக்கிய அம்சங்கள்.

1) 60%ஊதிய உயர்வு.

2)வருடத்திற்கு 30 நாட்கள் தற்செயல் விடுப்பு.

3)மருத்துவ விடுப்பு.

4)கட்டாய விடுப்பு.

5)மகப்பேறு விடுப்பு.

6)மத ரீதியான விடுப்பு.

7) சம்பள பிடித்த விடுப்பு.

8) ரிஸ்க் அலவன்ஸ்.

9) சீருடை அலவன்ஸ்.

10) வாசிங் அலவன்ஸ்.

11) அரசு ஊழியர்களுக்கு இணையான மருத்துவ காப்பீடு.

12) வெளிப்படையான பணிநியமனம்.

13) பணி மூப்பு முன்னுரிமை.

14) வருடந்தோறும் 5% ஊதிய உயர்வு.

15) கூடுதல் பணிக்கான சிறப்பு ஊதியம்.

16) மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கான அனைத்து வசதிகள்.

17) அவசரகால (Pandamic) பணிகளுக்கான சிறப்பு ஊதியம்.

18) தமிழக அரசு மருத்துவ தேர்வு வாரியம்( MRP) மூலமாக நியமிக்கப்படும் பணியிடங் களுக்கு முன்னுரிமை.

19) அனைத்து வகை பணியாளர்களுக்கும் தேவை அடிப்படையில் பயணப்படி.

20) மலைப்படி, மற்றும் கடினமான இடங்களில் பணிபுரிவதற்கான ஊக்கத்தொகை.(as per Gov Norms)

21)ஆய்வகங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத இடங்களில் பணிபுரிபவர்களுக்கு கான சிறப்பு , பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல்.

22) தமிழக முதல்வர் பொது நிவாரண தொகையில் (CMPRF) பங்களிப்பு.

23) தமது பணியினை சிறப்பாக செய்யாதவர்களுக்கு (LOW PERFORMER) பணியிடைப் பயிற்சி.

24) வங்கி கடன் மற்றும் முன் தொகை பெறுவதற்கான வாய்ப்புகள்.

25) குடும்ப பாதுகாப்பு தொகை திட்டம் (FAMILY BENIFITS FUND SCHEME)

26) பணியின் போது உயிரிழந்த பணியாளருக்கு 10 லட்சம் இழப்பீடு தொகை.மற்றும் அவரது குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த நபருக்கு குழுமத்தில் இருக்கும் காலி இடங்களில் முன்னுரிமை.

27) பண்டிகை கால போனஸ். (பொங்கல்).

28) வருடம் ஒருமுறை இலவச முழு உடல் பரிசோதனை.

29) தொற்று நோய் பரவுதலை தடுப்பதற்கான தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை.

30) நடப்பு பெட்ரோல் டீசல் விலையை கணக்கில்கொண்டு பயணப்படி நிர்ணயம் செய்தல்.

31) வருடம் ஒருமுறை சிறப்பு பணி மாறுதல் கலந்தாய்வு.

32)பணிமாறுதல் பெறுபவர்களுக்கு முந்தைய பணியிடத்தில் பெற்று வந்த மிகை ஊதியம் மற்றும் பணி அனுபவம் கனக்கில் கொள்ளப்பட வேண்டும்.

33) ₹21000 க்கு குறைவாக ஊதியம் பெறும் ஒப்பந்த பணியாளர்களுக்கு தொழிலாளர் ஈட்டுறுதி வாரியம் (ESI)வழங்கும் மருத்துவ சலுகைகளுக்காக பிடித்தம்.

31/07/2023

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எங்கள் முக்கியமான கோரிக்கை

*பத்து வருடமாக எங்கள் சம்பளம் 8000 இல் இருந்து எங்கள் அதிக பட்ச சம்பளமே 15000/- தான்

* ஒவ்வொரு முறையும் எங்கள் சம்பளத்தை கொஞ்சமாவது உயர்த்தி தாருங்கள் என்று உயர் அதிகாரிகளிடம் எங்கள் நியாமான கோரிக்கையை முன்வைத்து 10 வருடங்கள் கழித்து விட்டன

*பல project director வந்தும் எங்களுக்கு ஒரு மாற்றமும் இல்லை,ஆனால் நம் காப்பீடு திட்டம் மூலம் பல ஏழை குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன...ஆனால் அவர்களுக்காக பணியாற்றும் ஊழியர்களின் குடும்பங்கள் போதுமான சம்பளம் இல்லாமல் திணறி வருகின்றன

*வார்டு மேலாளர்கள் என்ற பதவி அரசு மருத்துவமனைக்கு முக்கிய பங்கு வகிக்கும் பதவி அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் பல்வேறு துறை சார்ந்த பணிகளையும் வார்டு மேலாளர்கள் தான் பார்க்கின்றனர் ஆணால் ஊதியம் மட்டும் குடுக்க வேண்டாம் என்ற மனநிலையில் மருத்துவத்துறை தெளிவாக உள்ளது...

*நாங்கள் கேள்வி கேட்டால் எங்களது GO படி தான் வழங்கப்படும் சம்பளம் என்று கூறுகிறார்கள் கொஞ்சம் உயர்த்தி கேட்டால் 20 bedku ஒரு வார்டு மேலாளர் தான் உங்களுக்கு இவளோ சம்பளம் கொடுப்பதே பெருசு என்ற பதில் எங்களை அடுத்த கேள்வி கேக்காமல் தடுக்கிறது..

*முதலில் எங்களுக்கு go முரண்பாடுகளை களைந்து சம்பளம் விகிதத்தை முறைப்படுத்தி எங்கள் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

*மேலும் காப்பீடு திட்டத்தில் பணி புரியும் ஊழியர்கள் சம்பளம் அனைத்தும் முறைப்படுத்த வேண்டும்

31/07/2023

நம் தமிழ்நாடு முதல்வர் காப்பீடு திட்ட ஊழியர்கள் சங்கம் மூலம் தலைமை செயலர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசி நம்காக அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக உள்ளோம் என்று உறுதி அளித்துள்ளரகள்

இதுக்கு உறுதுணையாக இருந்து நமக்கு உதவி செய்த

வார்டு மேலாளர் பிரவீன் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய அய்யா குணசேகர் (communist) அவர்களுக்கும் நம் தலைவர் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி

31/07/2023

அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் 10 வருடத்திற்கு மேல் பணியாற்றி வரும் முதல்வர் காப்பீடு திட்ட வார்டு மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு எங்களுக்கும் இது வரை ஊதிய உயர்வும் வழங்கவில்லை பணி பாதுகாப்பும் வழங்கவில்லை இதற்காக பல்வேறு முறை முயற்சி செய்தும் ஒரு பயனும் இல்லை..காப்பீடு திட்டம் மூலம் பல்வேறு கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகின்றனர் ஆனால் அதில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நாங்கள் எந்த பயனும் அடையவில்லை ..

சம வேலைக்கு சம ஊதியமும் இல்லை

நீதிமன்றம் திருத்தி அமைத்த குறைந்த பட்ச ஊதியமும் வழங்கவில்லை

உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..

Videos (show all)

நியூஸ் தமிழ் செய்தியில் இன்று#tncmchis #tnhsrp #WardManager #tnhsp #TNHealth #pmjy #DMS
கோரிக்கைகள் #tncmchis #cmchis #tnhsrp #TNHealthminister #tnhsp #WardManager
தோழர் முத்தரசன் ஐயா அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் ...
#tncmchis #cmchisworkers#wardmanager

Website