Saudi News - சவூதி நியூஸ்

Saudi News - சவூதி நியூஸ்

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saudi News - சவூதி நியூஸ், News & Media Website, .

24/08/2024

சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

தாய்நாட்டிலிருந்து குடும்ப சூழல், பொருளாதார தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளுக்கு வந்திருக்கும் நாம், பொழுது போக்கு மற்றும் வேறு சில தேவைகளுக்காக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறோம்.

ஆனால், இதில் பலர் உணர்ச்சி வசப்பட்டு பல்வேறு கருத்துக்களை தேவையின்றி பதிவுகளாகவும், கமெண்டுகளாகவும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இது போன்ற பதிவுகளுக்கு லைக், ஹார்ட் உள்ளிட்ட சிம்பல்களையும் கருத்தாக தெரிவிக்கின்றனர்.

ஆனால், ஆர்வ மிகுதியால் செய்யப்படும் இதுபோன்ற செயல்களால் ஏற்படும் பின்விளைவுகளை குறித்து பலரும் சிந்திப்பதில்லை. எனவே, இதுபோன்ற செயல்பாடுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு சவுதி தமிழ் நியூஸ் வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.

இது போன்ற ஆர்வக்கோளாறு பதிவுகளை கண்ணுற நேரிட்டால், அதனை கண்டு கொள்ளாமல் கடந்து செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

10/03/2024
05/03/2023

சவுதியில் வங்கி அதிகாரிகள் போல் பேசும் கும்பல் கைது

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் தம்மாமில் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த 13 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

14/12/2022

ரவுண்டானாவில் நுழைபவர்கள் ரவுண்டானா உள்ளே இருப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

12/12/2022

ஜித்தா சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பம்

இலக்கியம், பதிப்பகம் மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜித்தா சர்வதேச புத்தகக் கண்காட்சி சூப்பர்டோம் மையத்தில் தொடங்கியது.

400க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் டிசம்பர் 8 முதல் 17 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 900க்கும் மேற்பட்ட உள்ளூர், அரபு மற்றும் சர்வதேச பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

புத்தகக் கண்காட்சியின் போது 100க்கும் மேற்பட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். டிஜிட்டல் வெளியீடு மற்றும் அறிவியல் புனைகதைகளை பகுப்பாய்வு செய்யும் இரண்டு மாநாடுகள் புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து நடத்தப்படும். சவூதி அரேபியாவில் இந்த விவகாரங்களை பகுப்பாய்வு செய்யும் மாநாடுகள் நடைபெறுவது இதுவே முதல் முறை.

சவூதி மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாசகர்கள் மற்றும் சிறந்த எழுத்தாளர்களை ஒன்றிணைக்கும் விவாத அமர்வுகள், கவிதை வாசிப்புகள், பட்டறைகள் மற்றும் புத்தக பேச்சுக்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட கலாச்சார நிகழ்வுகள் ஜித்தா புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து நடத்தப்படும். இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையத்தால் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது புத்தகக் கண்காட்சி ஜித்தா ஆகும்.

ஜூன் மாதத்தில் மதீனா புத்தகக் கண்காட்சியும், அக்டோபரில் ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட்டன. எதிர்வரும் மார்ச் மாதம் கிழக்கு மாகாண புத்தகக் கண்காட்சியுடன் அடுத்த வருட புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகும்.

28/08/2022

அரபி பேச கற்று கொள்ள நமது யூடியூப் சேனலில் இணையாதவர்கள் இணைந்து கொள்ளுங்கள் …

27/11/2021

ஏழு நாடுகளில் இருந்து சவுதி அரேபியா நுழைவதற்கு தடை

புதிய வகை கொரோனா தென்பட்டதன் காரணமாக ஏழு நாடுகளில் இருந்து சவுதி அரேபியா வருவதற்கு சவுதி உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் சவுதி தடை செய்யாத நாடுகளில் 14 நாட்கள் தனிமை படுத்திய பிறகு சவுதி அரேபியாவிற்கு நுழையலாம்.

21/02/2021

உத்தரகாண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு மன்னர் சல்மான் இரங்கல்

மன்னர் சல்மான், உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிப்பாறை உடைந்து சரிந்ததில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதிக்கு தனது இரங்கல் செய்தியில், இறந்தவரின் உறவினர்கள் மற்றும் இந்திய மக்களுக்கு தனது இரங்கலை தெரிவிப்பதாகவும், அதேபோல் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என்று நம்புவதாகவும் கூறியிருந்தார்.

சவுதி மகுட இளவரசர், துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் இரங்கல் செய்தியை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.

:

Website