UVA News

UVA News

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UVA News, Community Service, .

13/01/2024

பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு IMF பாராட்டு

 சவாலான பொருளாதார சீர்திருத்தங்களுடன் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக ஜனாதிபதிக்கு பாராட்டு

 ஆசியாவிலேயே முதன்முறையாக ஆட்சியைக் கண்டறியும் அறிக்கையை (Governance Diagnostic Report) வெளியிடுவது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை பணிப்பாளர்கள் பாராட்டு

 இலங்கையின் சாதகமான முன்னேற்றங்கள் சர்வதேச உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களிடையே உலகளவில் நம்பிக்கையை அதிகரிக்கின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது மீளாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட சவாலான பொருளாதார சீர்திருத்தங்களைப் பாராட்டியது.

ஆசியாவின் முன்னோடி முயற்சியான ஆட்சியைக் கண்டறியும் அறிக்கையை (Governance Diagnostic Report) வெளியிடுவதில் இலங்கையின் முயற்சிளை இதன்போது பாராட்டினர்.

குறிப்பாக, கொள்கை சார்ந்த விடயங்கள் மற்றும் நிதித்துறையில் ஸ்திரத்தன்மை ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தால் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலப்பகுதியில் பணியாளர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின்படி இலங்கை நம்பிக்கையுடன் அரசாங்க வருமானத்தை உயர்த்தியுள்ளதாக சமீபத்திய சந்திப்பில் தெரியவந்துள்ளதாகவும், அதன் மூலம் சர்வதேச சமூகம், உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்கள் மற்றும் தனியார் கடன்வழங்குநர்களின் நம்பிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பணவீக்கத்தை கணிசமாகக் குறைப்பதில் இலங்கையின் வெற்றியை, பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும், நிதியியல் கொள்கை மற்றும் செலவுகளைக் குறைக்கும் இலங்கை அரசின் கொள்கைகளே அதற்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரிப்பு போன்ற சாதகமான முடிவுகள் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் அவதானித்துள்ளது.

குறிப்பாக மூலதனம் மற்றும் பொறிமுறை உருவாக்கம் ,மூன்றாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாகவும், தற்போதுள்ள ஆட்சிப் பொறிமுறையின் சீர்திருத்தங்களில் இது சாதகமான குறிகாட்டிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

IMF அதன் வரவிருக்கும் முறையான மறு ஆய்வு மற்றும் கட்டுரை 04 ஆலோசனையைத் திட்டமிட்டுள்ள நிலையில், புதிய அரச நிதி மேலாண்மைச் சட்டம், அரச-தனியார் கூட்டிணைவு தொடர்பான சட்டத்துடன் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், மின்சாரக் கட்டணங்கள் மற்றும் சொத்து வரிவிதிப்பு ஆகியன இலங்கை கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பகுதிகள் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், தற்போதைய சீர்திருத்தங்கள், நிதி சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் நிர்வாக நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உடனடி கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

வங்கிச் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் வங்கித் துறையின் மறுமூலதனமாக்கல் உள்ளிட்ட நிதி விடயங்களில் துரித கவனம் செலுத்த வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

ஆட்சிப் பொறிமுறையில் கவனம் செலுத்துதல், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவை அமுல்படுத்துதல் மற்றும் அது தொடர்பான செயல் திட்டங்களை வெளியிடுதல் மற்றும் அதன் ஆணையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையைப் புரிந்துகொள்வதற்காக அரசியலமைப்பு பேரவையுடனான சந்திப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களில் வெற்றியை அடைவதற்கு அரச ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திறன் அபிவிருத்தியில் இலங்கையின் பங்காளித்துவமும் சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பீடு செய்யப்பட்டது.

சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் முக்கியமான அரச சேவையின் திறனை வளர்ப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கமைய, இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் வாரங்களில் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இந்த முக்கிய பகுதிகள் குறித்து ஆழமாக கண்டறியும் எதிர்பார்ப்பில், இலங்கை அதிகாரிகளுடன் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளனர். மேலும் இது தொடர்பான விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுவதாக இதன்போது குறிப்பிடப்பட்டது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, உள்ளிட்ட அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Photos from UVA News's post 02/01/2024

TIN ஐ எவ்வாறு Online ல பதிவு செய்வதற்கான Link
👇👇👇👇
https://eservices.ird.gov.lk/Registration/TINRegistration/ShowRequestHeader

யாரும் Online ஊடாக இலவசமாக TIN க்கு Apply பண்ண முடியும்.. அல்லது அருகிலுள்ள Regional Office ல வழிகாட்டலை பெற முடியும்...

TIN எடுக்கவும் காசு கட்டுபவர்கள் உங்கள் பிள்ளைகளையாவது படிக்க வையுங்கள்.. உங்களை போல எழுத வாசிக்க தெரியாதவர்களாக வளர்த்து விடாதீர்கள் பிளிஸ்..

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிநபர் பதிவு இலக்கம் கட்டாயம் தேவை..

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தனிநபர் பதிவு இலக்கம் பதிவதற்குத் தேவைப்படும் விபரங்கள்

01.தேசிய அடையாள அட்டை இல.

02. முழுப்பெயர் ஆங்கிலத்தில் -

03.முழுப் பெயர் தமிழில்

04.திரு.திருமதி, செல்வி,டொக்ரர்,கப்ரன் போன்ற பெயர் எழுத முன்பாக இட வேண்டிய அடையாளங்கள்.
முதல் எழுத்துடன் பெயர் - ஆங்கிலத்தில்

05.முதல் எழுத்துடன் பெயர் - தமிழில்

06. பிறந்த திகதி ,பிறந்த நாடு

07. பால்- ஆண்,பெண்

08. தாய் மொழி - தமிழ்

09. இணையத்தளம் எதையாவது கொண்டிருந்தால் அதன் URL -யுஆர்எல்.

10. இரட்டைப் பிரசாவுரிமை கொண்டிருந்தால் எந்த நாட்டுப் பிரசாவுரிமை.

11.வருமானம் கிடைக்கும் வழி.- வியாபாரம் அல்லது ஊழியர் அல்லது முதலீடு அல்லது வேறுவழிகளில்.

12.தொழில்-
கணக்காளர்,கட்டிடக் கலைஞர், சமையல்,வைத்தியர்,பொறியியலாளர், நீதிபதி,சட்டத்தரணி, விரிவுரையாளர், வேறுதுறைகள்

13.உங்களது முகவரிக்கு அண்மித்ததாக உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகம்- உதாரணம்- யாழ்ப்பாணம்.

14- நிரந்தர முகவரி- ஆங்கிலத்தில் - வீட்டு இலக்கம்,வட்டார இலக்கம் இருப்பின்

15- நிரந்தர முகவரி- தமிழில் - வீட்டு இலக்கம்,வட்டார இலக்கம் இருப்பின்

16. உங்களது முகவரிக்குரிய தபால் குறியீட்டு எண் - உதாரணம் - யாழ்ப்பாண நகரம் 40 000,கைதடி 40016.

17.மாகாணம்,மாவட்டம்,பிரதேச செயலகப் பிரிவு,கிராம சேவகர் பிரிவுப் பெயர்.

18.வதிவிட முகவரி- அதற்குரிய தபால் குறியீட்டு எண்.

19.தொடர்பு தொலைபேசி இல. அலைபேசி,வீட்டு கேபிள் இல. அலுவலக தொலைபேசி இல. FAX -பக்ஸ் இல.

20- மின்னஞ்சல் முகவரி - இருந்தால் குறிப்பிடுக.

21- வங்கிக் கணக்கு விபரம் - வங்கியின் பெயர்,கணக்கு இல. ஒரு வங்கியை மட்டும் பதிய இடமுள்ளது.

22- குடியியல் நிலை - தனியாள்,திருமணமானவர்.

23- வாழ்க்கைத் துணையின் பெயர், தேசிய அடையாள அட்டை இல. தனிநபர் வரிப் பதிவு இல.

24- பிள்ளைகள் தொடர்பான விபரம்- விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை இல. அல்லது தனிநபர் வரிப்பதிவு இல.
பிள்ளையின் பெயர், பால்- ஆண், பெண், பிறந்த ஆண்டு,மாதம்,திகதி.

25- தனிப்பட்ட வியாபாரம் இருந்தால் அது தொடர்பாகப் பின்வரும் விபரங்கள்- வியாபாரத்தின் பெயர்,பதிவு இல.
வியாபாரத்தின் முதன்மையான செயற்பாடு, வியாபாரம் ஆரம்பித்த திகதி, வியாபாரத்தின் முகவரி, தபாலகக் குறியீட்டு இல.

26. தேசிய அடையாள அட்டையின் முன்பக்கம்,பின் பக்கம் ஸ்கான் செய்த மூலப்பிரதி JPG-ஜேபிஜி பிரதிகள்-- PDF -பிடிஎவ் தேவையில்லை.

07/09/2023

நாடளாவிய ரீதியில் நிலவிவரும் கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டி பரீட்சையினை மிக விரைவில் நடாத்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 4000 கிராம உத்தியோகத்தர்களை புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

07/09/2023

பிரதான பாதையில் ஒரு சக்கரத்தில் மோட்டார் சைக்கிளை சொலுத்திய குற்றத்தை நீதிமன்றில் ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு 130 000/=அபராதம்.

07/09/2023

சீனாவின் TikTok செயலியை அமெரிக்காவில் பயன்படுத்த தடை செய்ததால் சீனா தனது நாட்டில் iphone விற்பனையை தடை செய்ய தீர்மானித்துள்ளது.

Photos from UVA News's post 06/09/2023

பியகமவை முன்னுதாரணமாக கொண்டு முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்

- மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி உரை

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்தியடையாத பிரதேசமாக காணப்பட்ட பியகம பிரதேசம் வர்த்தக வலய ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளமையினால், இலங்கை முழுவதையும் முதலீட்டு வலயமாக மாற்றப்பட்டு பல்வேறு புதிய முதலீட்டு வாய்ப்புகள் உலகுக்கு திறக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் இன்று (06) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி, திருகோணமலை மற்றும் வடமாகாணத்தில் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான பல பகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அந்த பகுதிகள் அனைத்தும் வர்த்தக நகரங்களாக கட்டமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு மாவட்டங்களினதும் அபிவிருத்திக்காக முதலீட்டு வாய்ப்புகளை கொண்டு வருவதற்கு மக்கள் பிரதிநிதிகளின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அர்பணிப்புக்களை வலியுறுத்திய ஜனாதிபதி, கைத்தொழில் மயமாக்கல் எமது நாட்டுக்கு ஏற்றதல்ல என சிலர் கூறினாலும் இன்று பியகம முதலீட்டு வலயம் தெற்காசியாவின் சிறந்த வர்த்தக வலயமாக மாறியுள்ளதாகவும் பியகம, கட்டுநாயக்க போன்ற கைத்தொழில் மயமாக்கல் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டால், இன்று நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அதேநேரம், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மாணவர்களால் அன்பான வரவேற்பளிக்கப்பட்டது.
கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியிடப்பட்டதுடன் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை அமைத்தற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.

மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதியொருவரின் முதல் வருகையைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி, கல்லூரியின் விருந்தினர் நினைவு பதிவேட்டில் பதிவிட்டார். அதனையடுத்து கல்லூரியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

அதனையடுத்து கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமாரும் நிகழ்வில் உரையாற்றினார்.

இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, காதர் மஸ்தான், மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எச்.எம். நயீம் உள்ளிட்டவர்களும் மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

06.09.2023

31/08/2023

அனைத்து எரிபொருட்களின் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

Photos from UVA News's post 31/08/2023

கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகையின் 2023 எசல பெரஹெர நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததை அறிவிக்கும் சம்பிரதாய நிகழ்வு கண்டி ஜனாதிபதி மாளிகைளில் இன்று (31) உத்தியோகபூர்வமாக நடைபெற்றது. பெரஹெர வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டமை தொடர்பிலான ஆவணத்தை தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பெரஹெரவில் திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர்களுக்கு ஜனாதிபதியால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

29/08/2023

'அஸ்வெசும' குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம், வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஊனமுற்றோர், முதியோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

29/08/2023

அடையாளம் காணப்பட்ட 02 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளில், 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா ஏற்கனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்

14/08/2023

பாசாங்கு வார்த்தைகளை நம்பி மயங்கி விடாதீர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயன்று இருப்பதையும் இழந்து விடாதீர்கள். MTFE இல் முதலீடு செய்தவர்களின் அவல நிலை.

13/08/2023

மாட்டிறைச்சி பூஞ்சை (Fistulina hepatica) அல்லது காளை நாக்கு என்றும் அழைக்கப்படும் இது ஒரு வகை காளான் ஆகும். இது oak அல்லது chestnut மரத்தில் வளரக் கூடியது.

10/08/2023

பண்டாரவளை நகரில் நேற்று பாடசாலை மாணவி ஒருவர் விபத்திற்கு உள்ளான காட்சி.බන්ඩාරවෙල නගරයේ පාසල් සිසුවියක් අනතුරට ලක්වූ අයුරු

09/08/2023

#මීරිගම #දුම්රිය #අනතුර # #மீரிகம #புகையிரத #விபத்து

Photos from UVA News's post 09/08/2023

கிழக்குக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது.

கடந்த 07.08.2023 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து (பாட்டம் ட்ராலிங்) மூலம் மீன் பிடித்த இந்திய மீன்பிடி கப்பலுடன் 10 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

08/08/2023

விசேட செய்திகள்

பண்டாரவளை மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த ப்ரூக் சைட்(brook side) பிரதேசத்திற்கு செல்லும் பாதையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டடமொன்று இன்று பிற்பகல் பண்டாரவளை மாநகரசபை அதிகாரிகள் மற்றும் பொலிசாரின் மேற்பார்வையில் அகற்றப்பட்டது.

குறித்த சட்டவிரோத கட்டடத்தை முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஒருவரே நிர்மாணித்து இருந்ததாகவும், இதனால் குறித்த கட்டடத்தை அகற்றுவதில் பல தடங்கல்கள் இருந்து வந்ததாகவும், தாம் கடந்த காலங்களில் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரயத்தனங்களை அடுத்தே குறித்த கட்டடம் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

08/08/2023

நாடு முழுவதும் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

07/08/2023

Trincomalee flight crash

Photos from UVA News's post 07/08/2023

திருகோணமலை விமான விபத்தின் சில புகைப்படங்கள்.

07/08/2023

கெகிராவை பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ அறையினுள் உள்ள மலசலகூடத்தில் வெடிப்பு சம்பவம்.பொலிஸார் விசாரணை

07/08/2023

திருகோணமலையில் விமான விபத்து.பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்கு உள்ளானதில் 2வர் பலி

04/08/2023

ගෑස් මිලහි කිසිදු වෙනසක් නෑ. Shell gas අධ්‍යක්ෂ

04/08/2023

எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை. Shell gas நிறுவனம் அறிவிப்பு.இருந்த போதும் உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.

Photos from UVA News's post 04/08/2023

மல்லாவி குளத்தில் இலட்சக் கணக்கான மீன்கள் இறப்பு
***********************************************************************
மல்லாவி குளத்தில் விவசாயத்திற்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில்
இலட்சக்கணக்கான மீன் இறந்து காணப்படுகின்றன.

தற்போது நிலவுகின்ற கடுமையான வெயில் காரணமாக குறித்த குளத்தின் நீர்
மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீன் இறந்திருக்கலாம் என பிரதேச
வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மீன் குஞ்சுகள் சில மாதங்களுக்கு முன் கொள்வனவு செய்யப்பட்டு
குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

03/08/2023

இவ்வருடம் 290 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இறப்பர் சார்ந்த ஏற்றுமதி மூலம் 900 மில்லியன் டொலர்களும், தெங்கு தொடர்பான ஏற்றுமதி மூலம் 700 மில்லியன் டொலர் வருமானமும் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்

02/08/2023

துல்கிரிய பஸ் விபத்தில் ஒருவர் பலி තුල්හිරිය බස් අනතුරෙන් කාන්තාවක් මරුට thulhiriya bus accident

30/07/2023

නමෝ නමෝ මහතා 😎

Videos (show all)

பாசாங்கு வார்த்தைகளை நம்பி மயங்கி விடாதீர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயன்று இருப்பதையும் இழந்து விடாதீர்கள்....
பண்டாரவளை நகரில் நேற்று பாடசாலை மாணவி ஒருவர் விபத்திற்கு உள்ளான காட்சி.බන්ඩාරවෙල නගරයේ පාසල් සිසුවියක් අනතුරට ලක්වූ අයුර...
#meeraigama #train #container #accident #මීරිගම #දුම්රිය #අනතුර # #மீரிகம #புகையிரத #விபத்து
Trincomalee flight crash
துல்கிரிய பஸ் விபத்தில் ஒருவர் பலி තුල්හිරිය බස් අනතුරෙන් කාන්තාවක් මරුට thulhiriya bus accident
නමෝ නමෝ මහතා 😎
திஸ்ஸமகாராம மாத்தரை பஸ் வண்டி பந்தகிரிய சந்தியில் விபத்திற்கு உள்ளாகி உள்ளது. බඳගිරිය හන්දියේ දී අනතුර ට පත්වුන තිස්සමහා...
ඒක තමයි ඉස්පිරිතාලේ ඉස්සරහා මල්ශාලාවක් තියෙන්නේ..!
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்கள் இருவரும் Subair Mohamed Sareef AL Mohamed Nazeer  New York வீதிகளில் சைக்கிள்...
#demodara bus accident CCTV footage
தியதலாவை நகரில் மண்சரிவு அபாயம். தியதலாவை ஜும்மா பள்ளிவாசல் அமைந்துள்ள கட்டிடத்திற்கு பின் அ

Website