සමස්ත ලංකා කෝවිල් මිතුරෝ - Samastha Lanka Kowil Mithuro

සමස්ත ලංකා කෝවිල් මිතුරෝ - Samastha Lanka Kowil Mithuro

அகில இலங்கை கோவில் நண்பர்கள்
உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

Photos from සමස්ත ලංකා කෝවිල් මිතුරෝ - Samastha Lanka Kowil Mithuro's post 03/04/2024

Online trading opportunities training come on join with us 👍🏻🔥

Photos from உருத்திர சேனை රුත්ර සේන Rudra Sena's post 21/11/2023
16/11/2023

#கதிர்காமம் தலம் பற்றி இந்தியாவிலிருந்து கதிர்காமத்தை தரிசித்த பக்தர் ஒருவரால் தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட தகவல்கள்

இந்தியாவினை தாண்டி உலகெல்லாம் பல இடங்களில் சிறப்பான முருகன் ஆலயங்கள் உண்டு , அவற்றில் முதலிடத்தில் இருப்பது இலங்கையின் கதிர்காமம்

உண்மையில் அறுபடை வீடுகள் என்பது ஆறு அல்ல, கதிர்காமத்தையும் சேர்த்து ஏழு அதுதான் தொடக்கமானது, ஆனால் இலங்கையில் பவுத்த தரப்பிடம் அவ்வாலயம் இருந்துவிட்டதால் இங்கே தமிழகத்துக்குள் ஆறு என சுருக்கி கொண்டார்கள்

உலகின் மிக மிக பழமையான இந்து ஆலயத்தில் குறிப்பாக முருகபெருமான் ஆலயத்தில் அதுவும் ஒன்று

அது காலத்தால் மிக மிக முந்தையது, ஆனால் அது மிக பிரமாண்டமாக எழாமல் போக காரணங்கள் சில உண்டு

இந்துஸ்தானத்தில் எல்லா பழமையான ஆலயங்களும் சிறியதாக இருந்து பெரியதாக எழும்பியவை, மதுரை, திருவரங்கம், திருவாரூர், நெல்லை, திருசெந்தூர் என எல்லாம் சிறியதாக இருந்து இந்து மன்னர்களால் பெரிதாயின‌

ஆனால் கதிர்காமம் பவுத்த மன்னர்களிடம் சிக்கிகொண்டது, அவர்களுக்கு கதிர்காமம் குலதெய்வம் இன்றளவும் அது சிங்களவர் கையில் உண்டு எனினும் பிரமாண்டமாக்கவில்லை

அது எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிட்டார்கள் அல்லது தொட அஞ்சினார்கள்

உண்மையில் எல்லோருக்கும் அதனை தொட அச்சம் இருந்திருக்கின்றது, அதன் சக்தி அப்படியானது

முருகன் ஆலயங்களில் தனித்துவமும் பழமையுமான அந்த ஆலயத்தின் சிறப்புக்கள் கொஞ்சமல்ல, மகா சுவாரஸ்யமும் ஆச்சரியமும்நிறைந்தது

அக்காலத்தில் தலைமன்னார் ஊடாக இலங்கையின் இந்துக்கள் இங்கு திருப்பயணமாக வருவதும் இங்கிருந்து கதிர்காமத்துக்கு திருயாத்திரை செல்வதும் வழமையாய் இருந்தன, பின்னாளில் இது முறிந்துபோயிற்று அதற்கு அன்னிய ஆட்சி மிக முக்கிய காரணம்

இந்த ஆலயத்தினை பற்றி கொஞ்சம் விரிவாக காணலாம்

கதிர்காமம் என்பது இருவகை பொருளில் அமைந்தது, முதலாவது கதிர் என்றால் ஒளி காம என்றால் விருப்பம் , முருகப்பெருமான் தான் தேர்ந்துவிரும்பிய இடத்தில் ஒளிவடிவாய் இருக்கின்றார் என்பது

இரண்டாவது கதிரை என்றால் ஆசனம் என்றொரு பொருள் உண்டு. முருகபெருமான் அரியாசனமாக அமர்ந்த இடம் என்பதால் கதிரைகாமம் என்பது கதிர்காமம் ஆயிற்று என்பார்களும் உண்டு

ஜோதிவடிவில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் இம்மலைக்கு ‘ஜோதிஷ் காமகிரி’ என்றொரு பெயர் உண்டு என தக்ஷிண கயிலாய மான்மியம் கூறுகிறது.

இதன் வரலாறு நீண்டது கந்தபுராண காலத்தில் இருந்தே இது உண்டு, திருசெநதூர் போல மிக பழமையானது

பொது யுகத்துக்கு முன்னரான 500ம் ஆண்டில் விஜயன் என்ற அரசன் கதிரை ஆண்டவருக்கு ஒரு கோயில் அமைத்தான் என என்று "யாழ்ப்பாண வைபவமாலை" எனும் நூல் குறிப்பிடுகிறது.

பொது யுகத்துக்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டில் சிபி சோழன் சக்கரவர்த்தி காலத்தில், எல்லாளன் என அவன் அழைக்கபட்ட காலத்தில் வாழ்ந்தவன் என கருதபடும் சிங்களர்களின் நாயகன் துட்ட காமினி எனும் துட்ட கெமெனு இந்த அலயத்தில் வணங்கித்தான் எல்லாளனை வென்றதாகவும், அந்த வெற்றிக்கு காணிக்கையாகத்தான் இந்த ஆலயத்தை மேம்படுத்தினான் என்பது ‘கந்த உபாத்’எனும் சிங்கள நூல் சொல்லும் செய்தி

எனினும் காலவோட்டத்தில் பல மாறுதல்கள் நடந்திருக்கின்றன இப்போதிருக்கும் தோற்றம் 15ம் நூற்றாண்டில் ராஜசிங்கன் எனும் மன்னனால் அமைக்கபட்டது என்கின்றன குறிப்புகள்

இந்த ஆலயம் இலங்கை வரலாற்றில் முக்கியமானது, வேட்டுவ மக்களின் ஆலயமாகத்தான் தொடக்கத்தில் இருந்திருகின்றது, பின்னாளில் பவுத்தர்கள் பெருகினாலும் அவர்கள் குலதெய்வமாக முக்கிய ஆலயமாக இதுதான் திகழ்கின்றது

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இலங்கையின் தொன்மமான மதம் இந்து, பின்னாளில் பவுத்தம் பெருகினாலும் இந்து ஆலயத்தை அவர்களால் மாற்றமுடியவில்லை மரபை விடமுடியவில்லை அப்படியே தொடர்ந்துவிட்டாகள்

சிங்களவருக்கும் தமிழருக்கும் மூல தெய்வம் ஒன்று என பறைசாற்றி நிற்கும் இந்த ஆலயமே இலங்கை ஒருகாலத்தில் இந்துநாடு அதுவும் முருகனை வழிபட்ட நாடு என்பதை தெளிவாக சொல்கின்றது

இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்கு முருகபெருமான் சிலை கிடையாது, உற்சவராக வேல் மட்டும் நிறுவபட்டிருக்கும், கர்ப்பகிரகத்தில் ஒரு யந்திர தகடு மட்டுமே இருக்கும், அது ஒரு பேழையில் வைக்கபட்டிருக்கும்

தலமை அர்ச்சகர் மட்டும், கப்புராளைமார் என அழைக்கபடும் அவர் மட்டும் அங்கு செல்லவும் பூஜை செய்யவும் அனுமதிக்கபடுவார்

இந்த தகட்டை எழுதி தந்தவர் திருமூலர் போல ஒரு மகாஞானி, அவர் பெயச் கமலகிரி மிக நீண்ட காலத்துக்கு முன்பே இலங்கைக்கு வந்து வாழ்ந்திருக்கின்றார், முத்துலிங்க சுவாமி என அங்கு வசித்த அவரின் சமாதி அந்த ஆலயத்தின் அருகிலேதான் உண்டு

சிதம்பரத்துக்கு திருமூலர் போல இந்த கதிர்காமத்துக்கு அவர் வரைந்து தந்த யந்திரம்தான் மூல கருவறையில் பேழையில் உண்டு

அந்த கப்புராளைமார் எனும் தலமை பூசாரி மட்டும் வாயினை கட்டிகொண்டு அங்கு பயபக்தியாய் பூசை செய்வார், அந்த மூலஸ்தானத்தின் அதிர்வு அங்கு இனம்புரியா சூட்சுமத்தை பரப்பும். தள்ளி இருந்தே அதை உணரமுடியும் என்பது அங்கு சென்றோர் சொல்லும் நிஜம்

இதனை ஆங்கிலேயர்களும் பதிவு செய்திருக்கின்றார்கள்

இந்த கோவில் மலையடிவாரத்தில் உண்டு, மலையில் வேல் ஒன்று நிறுவபட்டிருக்கின்றது

இந்த ஆலயத்தின் மூல ஸ்தானத்தில் ஏழு திரைகள் உண்டு, ஏழு திரைகளிலும் முருகப்பெருமான் படமும் அடியார் படமும் உண்டு

தமிழகத்தின் அருணகிரிநாதரும் இடம்பெற்றிருக்கின்றார்

‘மணிதரளம் வீசி அணி அருவி சூழும் மருவு கதிர்காமப் பெருமாள் காண்’ என்று அருணகிரியார் திருபுகழில் எழுதியதால் செய்யபட்ட பெருமை அது

சீதா பிராட்டியாரைத் தேடி இலங்கை வந்த அனு மன், அவளிடம் ராமபிரானின் மோதிரத்தை அளித்து, பிறகு கதிர்காமப் பெருமானை வணங்கிச் சென்றதாக திருப்புகழில் அருணகிரிநாதர் சொன்னதும் கவனிக்கதக்கது

மலையில் இருந்து கிடைக்கும் விபூதிதான் அங்கே பிரசாதம் , அம்மலை திருவண்ணாமலை மலை போல் அவ்வளவு புனிதமானது

கதிர்காமத்தின் முருகன் ஆலயம்தான் சிங்களர் கையில் உண்டே தவிர அருகிருக்கும் பிள்ளையார் சந்நிதி அதற்கு சற்றுத் தூரத்தில், தெய்வானை அம்மன் கோயில் உள்ளது. இது தமிழர்களாலேயே பெரும்பாலும் வணங்கபட்டு வருவதோடு இதன் நிர்வாகவும் இந்துக்கள் வசமே உண்டு

அங்குள்ள தெய்வானை சன்னதி பிள்ளைவரம் தருவதில் பிரசித்தியானது

ஆடிமாதம் திருவோணம் அங்கு மகா விஷேஷம், அந்த பவுர்ணமியன்று பெரும் விழா நடக்கும், அப்போதுதான் கர்ப்பகிரஹ யந்திர பேழை யானைமெல் ஏற்றபட்டு ஊர்வலமாக கொண்டுவரபடும்

அந்த பேழை வலம் வரும்போது இனம்புரியா அமைதியும் மகிழ்வும் ஒரு நிறைவும் அங்கே நிறைந்திருக்கும் என்பது பக்தர்கள் மெய்சிலிர்க்க சொல்லும் அனுபவம்

கதிர்காமமே மூத்த அறுபடை வீடு, சூரபத்மனை முருகபெருமான் அழித்த அந்த காலகட்டங்களில் இருந்து அது தொடர்கின்றது

"வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள"

என்பது சிலப்பதிகார வரி

அதாவது முருகப்பெருமான் வீசிய வேலால் தென் கண்டமே மூழ்கியது என்பது பொருள், அப்போது தப்பி பிழைத்ததுதான் இலங்கை தீவு

அந்த தீவில் இருக்கும் தொன்மமான ஆலயம் எனும் வகையில் அது அப்போதே வேல் ஊன்றி தொடங்கபட்டது, தொடக்கத்தில் முருகன் உருவம் இருந்திருக்கலாம் என்பது ஒரு வாதம்

பின்னாளில் பவுத்த எழுச்சியில் அது அகற்றபட்டு பின் மீள வரும்போது சித்தர்களும் ஞானியரும் இங்கிருந்து சென்று இந்துமதத்தை மறுபடி ஸ்தாபிக்கும் போது அப்பேழையும் யந்திரதகடும் வைக்கபட்டு வேல் ஊன்றபட்டிருக்கலாம் என்பதும் இன்னொரு வாதம்

எது எப்படியாயினும் முருகபெருமானின் தலங்களில் பழமையானதும், மிக சிறப்பு வாய்ந்ததும் சக்திய்வாய்ந்ததும் அதுதான்

இது புத்தமதம் வாழ உருவான நாடு என சிங்களவர்கள் சொல்லிகொண்டாலும் அவர்களின் பூர்வீகம் இந்து மதம் என்பதை அசைக்கமுடியாமல் சொல்வதும் அந்த ஆலயம்தான்

எந்த அளவுக்கு சிங்களவர்கள் அதனை கொண்டாடுகின்றார்கள் என்றால், முருகபெருமான் பெயரில் காசோலை எனும் செக் எழுதிபோட்டால் காணிக்கை பெட்டியில் போட்டால் அது வங்கியில் செல்லுபடியாகும்

அந்த அளவுக்கு மூல தெய்வம் அது

சிங்களவரில் கிறிஸ்தவர் பவுத்தர் இந்துக்கள் என எல்லா தரப்பாலும் ஜாதி இனம் மொழி கடந்து வணங்கபடும் பெரும் ஆலயம் அது, இலங்கையின் காவல் தெய்வம் என அந்த முருகனைத்தான் வணங்குகின்றார்கள்

முருகன் தமிழ்கடவுள் என்பதெல்லாம் அரசியலுக்கான விளம்பரம், கதிர்காமத்தில் அவர் சிங்களனுக்கான பெரும் தெய்வமாகத்தான் நின்றுகொண்டிருக்கின்றார்

அவர்கள் அரசின் உச்ச பீடங்களும் பவுத்த பீடத்தின் தலமையும் ஓடி ஓடி சென்று பணியும் ஆலயம் அது

1918ல் இந்த ஆலயத்துக்கு செல்வோரை தடைசெய்து அதனால் மதம்மாற்றலாம் என சில ஆலோசனைகளில் பிரிட்டிஷ் அரசு அனுமதியின்றி செல்ல தடைவிதித்தது, சென்றால் பெரும் தொகை அபராதம் என அறிவித்தது

ஆனால் மக்கள் போராடி அதனை மீட்டனர், பின் நிலமை சுமூகமாயிற்று, எல்லோருக்குமான வழிபாடுகள் தொடர்ந்தன‌

பழனி , திருசெந்தூர் பாத யாத்திரை போல இலங்கையின் பல இடங்களில் இருந்தும் கதிர்காமம் செல்லும் யாத்திரை பிரசித்தியானது, கலவரசூழலால் அது பாதிக்கபட்டபோது அதை மீள தொடங்கியவர் ஒரு அமெரிக்கர்

பெட்ரிக் ஹரிகன் எனும் அமெரிக்கர் 1972ல் அதை மீள தொடங்கி இப்போதுவரை அது பிரசித்தியாக நடக்கின்றது

அங்கு ஒவ்வொரு நாளும் திருவிழா, ஆடிமாதம் திருவோணம் பெருவிழா

நல்ல முருகபக்தன் கதிர்காமத்தை ஒருகாலமும் தவறவிட கூடாது, முருக பக்தர்கள் இந்தியாவின் தமிழகத்துக்குள் மட்டும் தங்கள் திருயாத்திரைகளை சுருக்குதல் சரியல்ல‌

முருகபெருமானை மனதார வேண்டிகொண்டால் அவரே தன் அதிமுக்கிய ஆலயத்துக்கு தன் பக்தர்களை அழைத்து செல்வார், மனமார வேண்டினால் வாய்ப்பு நிச்சயம் வரும்

அங்கு சென்று அந்த அற்புதமான யந்திரத்தின் சூட்சும அருள் வீசும் ஆலய சன்னதியில் வழிபட்டால் கோடிநன்மை முருகபெருமான் அருளால் கைகூடும்

சஷ்டியில் முருகபெருமானை வழிபடுவோர் அந்த ஆலயத்தையும் மனதார் நினைந்து வணங்கினால் கூடுதல் பலன் நிச்சயம் உண்டு, அவ்வளவுக்கு முருகப்பெருமானின் அருள் சூரிய கதிர்போல் எல்லா இடமும் வீசும் கதிர்காமம் அது

14/11/2023

கந்த சஷ்டி பற்றிய (25) தகவல்கள்...

1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். சூரபத்மனை வதம் செய்தது திருச்செந்தூர். தாரகாசுரனை வதம் செய்தது திருப்பரங்குன்றம். இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

5. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

6. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

7. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

8. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

9. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

10. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

11. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

12. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

13. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

14. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

15. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

16. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

17. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

18. முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

19. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

20. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

21. முருகப்பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகை யில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.

22. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

23. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

24. வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் கந்தனுக்குரிய விரதங்கள் ஆகும்.

25. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

14/11/2023

ஒருவனுக்கு ஒருத்தி தான் பிறகு முருகனுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர்கள்
என்று தவறான எண்ணத்துடன்
சித்தரித்து பேசுபவர்களுக்கான தெளிவுரை இது!!!

தமிழ் கடவுள் முருக பெருமானின் துணைவியர்கள் இருவர் 1. தெய்வானை அம்மன் 2. வள்ளி அம்மன்.

1. தெய்வானை அம்மன் : தேவலோக பெண்ணான தெய்வானை அம்மனின் கையில் உள்ள மலர் குமுத மலர். குமுத மலர் சந்திரனை பார்த்து தான் மலரும். இது தேவலோகத்திற்கு உரிய மலர். முருகப் பெருமானின் இடதுகண் சந்திரன்.

தெய்வானை இச்சா சக்தி ஆவார்.

2. வள்ளி அம்மன் : வேடர் குலத்தில் பிறந்த வள்ளி அம்மனின் கையில் உள்ளமலர் தாமரை மலர். தாமரை மலர் சூரியனை தான் பார்த்து மலரும். இது பூலோகத்திற்கு உரிய மலர். முருக பெருமானின் வலது கண் சூரியன்.

வள்ளி அம்மன் கிரியா சக்தி ஆவார்.

3. முருக பெருமான் கையில் உள்ள வேல் ஞான சக்தி ஆகும். இது அறியாமையை அகற்றுவதற்கு.

வேட குறமகளை மணந்து பூலோக மனிதர்களையும், தேவலோக தெய்வானையை மணந்து
விண்ணுலகையும் காக்கின்றார். வள்ளி அம்மன் குறவர் இனம் ,தெய்வானை தேவரினத்து பெண்.

மனித , தேவர் இனங்களுக்கு அப்பாற்பட்டவர் இறைவன் என்பதை உணர்த்துகிறார்.

ஏழை பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் மனிதனிடம் இருக்குமே தவிர, இறைவனிடத்தில் இல்லை.

முருகப்பெருமான் அனைவரிடத்தும் கருணை கொண்டவர்.

முருகப் பெருமானை 1. களவு 2. காமம்
3. பொய் 4. பொறாமை 5. அகந்தை 6. ஆசை இத்தகைய ஆறு தீய குணங்களை அறவே அழித்து "சரவண பவா" என்ற ஆறெழுத்து மந்திரத்தை நினைத்து உள்ளன்போடு உருகி முருகனை வணங்குபவர்களுக்கு இச்ச சக்தி+ஞான சக்தி+கிரியா சக்தி கொண்டு இம்மையிலும், மறுமையிலும் சகல செளபாக்கியங்களையும் தருவார் என்பதை உணர்த்தவே இரண்டு தேவியர்களுடன் காட்சி தருகிறார்.

ஐயம் என்றால் திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறையில் பாருங்கள் முருகனின் இருபுறத்திலும் சூரிய சந்திரர்கள் (இடது வலது கண்களாக) இருக்கிறார்கள்.

இது தெரியாமல் பலர் தவறான கருத்துகளை பதிவுசெய்கின்றனர். தயவு செய்து இனிமேலாவது இரண்டு மனைவியர்கள் ஏன்?? ஏன்?? என்று வினாவுகின்றவர்களுக்கு இந்த உகந்த விளக்கத்தை தந்து புரியவையுங்கள்.
🦚 *ஓம் சரவணபவ* 🔱

24/02/2023

🙏

02/02/2023

🙏🙏🙏🙏

09/01/2023

ஒரு சிலர் இந்த கட்டு எதற்காக இருப்பது என்று புரியாமல் மிதித்து செல்வதையே என் கண்ணூடாக பார்த்திருக்கின்றேன்

உங்களது குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்

கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே.

ஏன் தெரியுமா?

• ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் ..

• பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் ...

• இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ...

• பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்

• உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் ..

• அந்த படியை தாண்டும் போது, " நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்..

• இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா " என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும் ...

• அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம் ...

• ஒரு கோயில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும் ...

• எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம் ...

நன்றியுடன் பகிர்கிறோம் 💚

08/01/2023

🙏🙏🙏🙏🙏

31/12/2022

🙏🙏🙏

Photos from සමස්ත ලංකා කෝවිල් මිතුරෝ - Samastha Lanka Kowil Mithuro's post 30/12/2022

2023 சனிப்பெயர்ச்சி பலன்கள் சதவீதத்தில் ..!

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி எதிர்வரும்
17 ஜனவரி 2023 முதல் 29 மார்ச் 2023 வரை சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். அதன் பின்னர் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு செல்வார். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி
7 மார்ச் 2026 வரை சனி பகவான் கும்ப ராசியில் சஞ்சரிப்பார் என்கிறது. அதாவது 3 ஆண்டுகள் கழித்து சனிப் பெயர்ச்சி நிகழும்
இச் சனிப்பெயர்ச்சியால் அதீத பலனடையும் ராசிகள்:

1.மேஷம்_93%
2.ரிஷபம்_75%
3.மிதுனம்_80%
4..கன்னி_95%
5.தனுசு_93%

14/12/2022

குலதெய்வத்தை வணங்குங்கள்,
உங்கள் வம்சத்தைக் காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம்தான்.

08/12/2022
06/12/2022

* #தீப_வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்தத் தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.*

வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை. இந்தக் கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திருவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.

* #தீபம்_ஏற்ற_வேண்டிய_இடங்களும்_விளக்குகளும்:*

கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.

பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.

திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.

மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

* #தீபத்தின்_வகைகள்:*
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

* #சித்ர_தீபம்*
வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

* #மாலா_தீபம்*
அடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

* #ஆகாச_தீபம்*
வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

* ீபம்*
தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

* #படகு_தீபம்*
கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.

* #சர்வ_தீபம்*
வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகம்.

* #மோட்ச_தீபம்*
முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

* #சர்வாலய_தீபம்*
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

* #அகண்ட_தீபம்*
மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

* #லட்ச_தீபம்*
ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.

* #மாவிளக்கு_தீபம்*
அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.

21/11/2022

48 நாட்கள் கொண்ட " #ஒரு_மண்டல_ரகசியம்"

இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் மட்டும் அல்ல.

சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ?

அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.

அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ?

அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்.

நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ?

அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.

ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்
எப்படி என்கிறீர்களா...?

இதோ இப்படி,,,,

கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள் 9+12+27=48

எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன.

இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் ( மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத ) கை கூடுகின்றன.

நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.
இன்னும் சந்தேகமா ?

ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....! இந்த யோக அறிவியல் உண்மை விளங்கும்.
ஓம் சிவாய நம.

20/11/2022

கீழே 👇அமர்ந்துள்ள நிலையில் இருக்கும் ஐயப்பன் புகைப்படம் பந்தள அரச குடும்பத்தினர் காலம் காலமாக வைத்து வணங்கும் ஐயப்பனின் உண்மையான உருவபடம்!!!

அரச குடும்ப முன்னோர்கள் ஐயப்பனை எப்பொழுதும் கண்டு கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்டி வணங்கி அந்த ஐயப்பனே அருள் தந்து அருவுருவமாக வந்து அமர்ந்து தன்னை ஓவியமாக வரையச்சொல்லி அருள் தந்து ஓவியமாக வரையப்பட்டு பந்தள ஐயப்பன் வாரிசு அரண்மனை குடும்பத்தினர் அவர்கள் பொக்கிஷமாக வைத்து வணங்கி வரும் ஓவியம் இது!!!

பச்சிளம்பாலகனாய் கருணை வடிவாய் ஐயப்பன் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காண கண் கோடி வேண்டும்!!! சுவாமியே சரணம் ஐயப்பா!!!!

13/11/2022

#குளிகை__நேரமும்__சிறப்பும்

பஞ்சாங்கத்தில் முக்கிய நேரங்களான நல்ல நேரம், எமகண்டம், ராகு காலம், குளிகை காலம் இவைகளில் குளிகை காலமானது ஒன்றை விரிவுபடுத்தி தரக்கூடியதாகும். இதற்கு காரிய விரித்தி நேரமாக கருதப்படுகிறது.

சனியின் புதல்வரான மாந்தியின் காலமே குளிகை காலமாக கருதப்படுகிறது.

இத்தகைய இந்த குளிகை காலமானது செய்யும் காரியத்தில் அதிஷ்டத்தையும் விரிவையும் தரக்கூடியது என்பது ஐதீகம். காரிய அனுகூலம் சார்ந்த விடயங்களை ஆரம்பிக்கவும் லாபகரமான விடயங்களை தொடங்கவும் குளிகையை பயன்படுத்த வேண்டும்.

சுமார் 3¾ நாழிகை (1½ மணிநேரம்) கொண்டது இந்த குளிகை காலம் ஆகும். வார நாட்களில் குளிகை நேர விபரம் வருமாறு. (சூரிய உதயத்திற்கு ஏற்ப வித்தியாசப்படும்.)

ஞாயிறு - 3 - 4:30 மாலை
திங்கள் - 1:30 - 3 மதியம்
செவ்வாய் - 12 - 1:30 பகல்
புதன் - 10:30 - 12 பகல்
வியாழன் - 9 - 10:30 காலை
வெள்ளி - 7:30 - 9 காலை
சனி - 6 - 7:30 காலை

இத்தகைய குளிகை காலம் வரும் நேரத்தில் மேற் கொள்ள கூடிய காரியங்களாக,
* நகை வாங்குவது,
* காணி வாங்குவது,
* சொத்துக்கள் வாங்குவது,
* கடனில் ஒரு பங்கு கொடுப்பது,
* வங்கி கணக்கு ஆரம்பிப்பதும் பணம் வைப்பிலிடுவது.
* புதிய வியாபாரம் ஆரம்பிப்பது.
* தானங்கள் புண்ணிய காரியங்கள் செய்வது.
* பரிகாரம் செய்வது.
* மந்திரங்கள் சொல்வது, உபாசனை செய்வது.

மேற்படியான காரியங்களை செய்யலாம்.

செய்ய கூடாத காரியங்களாக,

* திருமணம் செய்வது அதிலும் மாங்கல்ய தாரணம் வைக்க கூடாது.

* மரண சடங்குகளை ஆரம்பிப்பதோ, பிரேத உடலை இறுதி கிரியைக்கு எடுப்பது ஆகாது.

* சொத்துக்கள் விற்பது,
* வீடு திருத்தம் செய்வது.
* கடன் வாங்குவதும் கொடுப்பதும்.
* அடகு வைப்பது.
* அறுவைசிகிச்சை செய்வது.
* மருந்து உண்ணுவது.
* மருத்துவரை பார்க்க செல்வது.
* வரன் பார்க்க கூடாது.
* தாலி கயிறு மாற்றுவது
* கும்பாபிஷேகம் செய்வது.

மேற்படியான காரியங்களை தவிர்ப்பதும் நல்லது. இத்தகைய குளிகை காலத்தில் வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

படித்தது

08/11/2022

🕉

07/11/2022

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர ஆலயத்தில் நாளை காலை 08-11-2022 எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் இடம்பெற்று 12:00 மணிக்கு நடை சாத்தி. சந்திரகிரஹணத்தை முன்னிற்று மாலை 03:00 மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டு அணைத்து பூஜைகுளுடன் மாலை 05:00 மணிக்கு ஆலயம் நடை சாத்தப்படும் . 09-11-2022 அடுத்த நாள் காலை புதன்கிழமை அதிகாலை பிராசித்த தீரத்துடன் பூஜைகள் நடைபெறும் . ஓம் நம சிவாய 🙏. ( நிகழ் உள்ள முழு சந்திர கிரகணமானது டெல்லி, பாட்னா மற்றும் ராஞ்சி போன்ற பல இந்திய நகரங்களில் தெரியும். இந்த சந்திர கிரகணமானது மாலை 5:32 மணிக்கு தொடங்கி மாலை 6:18 மணிக்கு முடியும். கொல்கத்தா, சிலிகுரி, பாட்னா, ராஞ்சி, குவஹாத்தி உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் மட்டுமே முழு சந்திர கிரகணத்தைக் காண முடியும்.

06/11/2022

🕉🕉🕉

27/10/2022

ஆறுபடை வீடு 🦚 முருகனுக்கு அரோகரா 🙏
சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா?
மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன. ஆரோக்கியத்திற்கு சுவாமிமலை, உறவுக்கு திருப்பரங்குன்றம், பொருளாதார வசதிக்கு சோலைமலை, பாதுகாப்புக்கு திருச்செந்தூர், ஆளுமை திறனுக்கு திருத்தணி, ஞானம் பெற பழநி ஆகிய தலங்களை தரிசிக்கலாம்.
அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது? இதைப் புரிந்து கொள்ள நாம் நக்கீரரைத்தான் துணைக்கு அழைக்க வேண்டும். அவர்தானே தமிழில் முதன்முதலாக கடவுளைப் போற்றி நூல் எழுதியவர்.
புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள். அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள். இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.
ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.
பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.
செந்தமிழ்க் கடவுளாம் செந்திலங்கடவுளின் செம்மையான பண்புகளைப் பாராட்டி அவனிடம் அருள் பெறலாம் என்று எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை. தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.
ஆற்றுப் படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.
அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.
சரி. நக்கீரர் எந்த வரிசையில் ஆற்றுப்படை வீடுகளை பட்டியல் இடுகிறார்?
முதற் படைவீடு – திருப்பரங்குன்றம்
இரண்டாம் படைவீடு – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
மூன்றாம் படைவீடு – திருவாவினன்குடி (பழனி)
நான்காம் படைவீடு – திருவேரகம் (சுவாமிமலை)
ஐந்தாம் படைவீடு – குன்றுதோறாடல் ( திருத்தணி )
ஆறாம் படைவீடு – பழமுதிர்ச்சோலை
மேலே குறிப்பிட்டிருப்பதுதான் நக்கீரர் பாடிய ஆற்றுப்படை வீடுகளின் வரிசை. கந்தன்கருணை பாடலில் ஒவ்வொரு படைவீட்டுக்கும் சொல்லப்பட்ட முருகன் வாழ்க்கை நிகழ்வுகளை நக்கீரர் ஆற்றுப்படை வீடுகளோடு தொடர்பு படுத்தவில்லை. பின்னாளில் ஆறுபடை வீடுகளோடு முருகனின் வாழ்க்கை நிகழ்வுகளும் தொடர்புபடுத்தப்பட்டன.
காலங்கள் மாறினாலும் கருத்துகள் மாறினாலும் கந்தப் பெருமான் தமிழர்களுக்குச் சொந்தப் பெருமானாய் ஆறுபடைவீடுகளிலும் வீற்றிருந்து அன்பு மாறாமல் அருள் புரிந்து கொண்டிருக்கிறான். கால மாற்றத்தில் தமிழ்நாடு என்று மாநிலம் உருவான போதும் ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அமைந்ததும் தற்செயல் அல்ல முருகனின் தமிழ்த் தொடர்பே என்பதும் கருதத்தக்கது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரனின் ஆற்றுப்படை வீடுகளுக்கு நாமும் செல்வோம். நல்லருள் பெறுவோம்.
திருப்பரங்குன்றம்: தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.
திருச்செந்தூர்: அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.
பழனி: ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக் கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.
சுவாமிமலை: தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.
திருத்தணி: சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.
பழமுதிர்ச் சோலை: தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.
என்பது ஐதீகம்.
கருணை கடலே கந்தா போற்றி

21/10/2022

*நாளை ஐப்பசி மாத தேய்பிறை சனி மஹா பிரதோஷம் சகல பாவங்களும் போக்க சிவன் கோவிலில் இப்படி வழிபாடு செய்யுங்கள்.*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
சனி பகவான் கொடுக்கும் தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கு சனி பிரதோஷத்தை முறையாக வழிபட்டால் நல்ல பலன்களை காணலாம். மேலும் வாழும் காலத்திலும், வாழ்ந்த பின்னரும் பிரச்சினைகள் இன்றி சுகபோக வாழ்வு அமைய, ஈசனை நோக்கி விரதமிருந்து வழிபடும் இந்த பிரதோஷ வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது. சகல, பாவங்களையும் போக்கும் இந்த சனி பிரதோஷத்தில் சிவனை எப்படி வழிபடுவது.?
☘️
கர்ம வினைகளுக்கு பலனாக சனி பகவான் ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, பாத சனி என்று விதவிதமாக நமக்கு தொல்லைகளை கொடுத்து வருவார். ஒருவர் நல்லது செய்தாலும் தீமை விளைவதும், தீமைகள் செய்தாலும் நல்லது நடப்பதும் அவரவரின் பாவ புண்ணிய பலன் ஆகும். இந்த துன்பங்களிலிருந்து சுலபமாக விடுதலை செய்யக் கூடிய இந்த அற்புத வழிபாடு தான் பிரதோஷ விரதம்.
☘️
சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது. அதில் சோமவார பிரதோஷம் எனப்படும் திங்கட் கிழமையில் வரும் பிரதோஷம், சனி பிரதோஷம் எனப்படும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் பிரசித்தி பெற்றது. vஇந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவ ஆலயங்களில் விசேஷமான பூஜைகள் நடை பெற்று வருகின்றன.
☘️
நாளை ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய இந்த சனி பிரதோஷம் ரொம்பவே சக்தி வாய்ந்தது. அதிகாலையில் எழுந்து நீராடி சுத்தமான ஆடை உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ள வேண்டும். பின்னர் நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் நீராகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சிவனை நினைந்து விரதம் இருக்க வேண்டும்.
☘️
அன்றைய நாள் முழுவதும் சிவ நாமங்களை உச்சரிக்க வேண்டும். ‘ஓம் நமச்சிவாய’ என்கிற மந்திரத்தை நீங்கள் வேலை செய்யும் பொழுது உச்சரித்துக்s கொண்டே இருக்கலாம். பிரதோஷ காலம் என்பது 4.30 மணியிலிருந்து 6 மணி வரையிலான காலகட்டம் ஆகும். இந்த ஒன்றரை மணி நேரம் சிவாலயங்களுக்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். சோமசூக்த பிரதட்சணம் எனும் வலம் வருதலை மேற்கொண்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் கடந்து நல்ல நிலையை அடையலாம். சோமசூக்த பிரதட்சணம் என்பது தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடையும் பொழுது ஆலகால விஷம் தோன்றியது. அந்த ஆலகால விஷம் கடலில் கலந்த பொழுது அங்குமிங்கும் தேவாசுரர்கள் ஓடி திரிந்தனர். இதே போல சோமசூக்த பிரதட்சணம் வித்தியாசமான முறையில் வலம் வருதலை குறிக்கிறது.
☘️
பிரதோஷத்தில் சிவாலயம் சென்றதும் முதலில் நந்தி பகவானை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு இடது புறமாக சென்று சண்டீஸ்வரரை வழிபட்டு மீண்டும் நந்தி பகவானை நோக்கி அதே வழியில் வந்து தரிசனம் செய்ய வேண்டும். பிறகு அங்கிருந்து வலது புறமாக சென்று சக்தியின் ஸ்வரூபமாக விளங்கும் கோமுகி என்னும் தீர்த்தத்தை அடைந்து அங்கு வரும் அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டு பின்னர் மீண்டும் நந்தி பகவானை mவந்தடைய வேண்டும். பிறகு மீண்டும் இடது புறமாக சென்று சண்டீஸ்வரரை தரிசித்து வந்த வழியே நந்தி பகவானை அடைந்த பின்னர் தான் சிவபெருமான தரிசிக்க வேண்டும்.
☘️
இவ்வாறு தரிசித்து பிரதோஷ பூஜையில் அபிஷேகத்திற்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கிக் கொடுத்து சிவாலயத்தில் அமர்ந்து பிரசாதத்தை உண்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து பதினொரு பிரதோஷங்கள் செய்வதன் மூலம் சகல விதமான பிரச்சனைகளும், நீங்கி சௌபாக்கியம் உண்டாகும்.

Website