Jaffna Vaidyeshwara College Students -World Associations

All students from JAFFNA VAIDYESHWARA COLLEGE to join

06/20/2024

முதலாம் வகுப்பிலிருந்து நீண்டகாலம் பள்ளித்தோழன் பிறேமச்சந்திரன் இறைவனடி சேர்ந்துவிட்டார் அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்,ஓம் சாந்தி ஓம் சாந்தி

06/10/2024

CONGRATULATIONS

05/11/2024

Welcome to all the students of JAFFNA VAIDYESHWARA COLLEGE

We are glad to tell you that in order to celebrate Mother’s Day we are gathering at Morningside library meeting room One May 12, 2024 Sunday at 2PM-4PM.

Light refreshments will be served , your presence is appreciated.

Address : Toronto public library( Morningside branch)
4279 Lawrence Ave. E., Scarbrough ,M1E 2S8

04/19/2024
01/22/2024

CONGRATULATIONS

Photos from Jaffna Vaidyeshwara College Students -World Associations's post 01/10/2024
Photos from Jaffna Vaidyeshwara College Students -World Associations's post 01/06/2024

WISH YOU ALL THE BEST K.S RAGU

Photos from Jaffna Vaidyeshwara College & OSA’s Events & News's post 11/18/2023

CONGRATULATIONS

Mobile uploads 11/08/2023

CONGRATULATIONS,

Timeline photos 11/08/2023

மெல்போர்ன், ஆஸ்திரேலியா - 25.05.2022

10/21/2023

Congratulations and THANKS for your Dedicated service

Photos from Jaffna Vaidyeshwara College Students -World Associations's post 05/22/2023

21.05.2023

கல்லூரியின் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று 31.04.2023 அன்று தேர்வு பெற்றவர்களுக்கு சிறப்பு நட்சத்திரச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

கல்லூரியின் நட்சத்திரங்கள் யாதெனில்:

கல்லூரியின் நட்சத்திரங்கள் தெரிவு என்பது கல்வி மட்டுமன்றி இணைப்பாடவிதானம், தலைமைத்துவம் மற்றும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றிலும் கவனம் செலுத்தி மாணவர்கள் தம்மை வளர்த்திடும் விதமாக தாயகத்தின் இளம் சமுதாயத்தை ஆரோக்கியமாக வளர்த்திடும் நோக்கமாகவும் மாணவர்களை ஊக்குவிக்கவும், பயிற்றுவிக்கவும் வேண்டும் என்கின்ற ஒரு நல்ல நோக்கத்தின் அடிப்படையை மனதில் கொண்டு கல்லூரியின் முன்னாள் மாணவரான திரு. சுப்பிரமணியன் மாதவன் அவர்களின் ஆலோசனை, பரிந்துரை, ஆகியனவற்றை முகாந்திரமாகக் கொண்டு அவரின் பணிவான வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த சிறப்பான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்க விடயம் காலப் போக்கில் ஒரு சிறப்புக்குரிய முன் உதாரணமான திட்டமாக வளர்ச்சி பெறும் எதிர் காலத்தை கணக்கிட்டு திட்டமிடல் என்பது நண்பன் மாதவனுக்கு உரிய தனி திறமை இத் திட்டத்தை முன் வைத்தமைக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் இதற்கான நட்சத்திர சின்னங்கள் சுவிஸ் பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்க விடயம்.

இந்த நட்சத்திர தெரிவானது ஆரம்ப பிரிவு மாணவர்கள் (தரம் 1 முதல் 5 வரை ஆன மாணவர்கள்), கனிஷ்ட இடைநிலை பிரிவு மாணவர்கள் (தரம் 6, 7, 8 வகுப்பை சேர்ந்த மாணவர்கள்), சிரேஷ்ட இடைநிலை பிரிவு மாணவர்கள் (தரம் 9, 10, 11 வகுப்பை சேர்ந்த மாணவர்கள்) மற்றும் உயர்தர பிரிவு மாணவர்கள் (தரம் 12, 13 வகுப்பை சேர்ந்த மாணவர்கள்) அடங்கிய பிரிவுகள் (Sections) ஒவ்வொரு பிரிவுகளிருந்தும் ஒவ்வொரு மாணவர் தெரிவு செய்வதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த பிரிவுக்கான நியமனங்கள் கல்வி அடைவுகளில் தொடர்ச்சியாக நல்ல மதிப்பெண்களை பெற்றிருத்தல் வேண்டும் (அனைத்து பாடங்களிலும் பெற்ற மதிப்பெண்களின் சராசரி சதவீதத்தால் கணக்கிடப்படும்) அத்துடன் இணைபாடவிதானங்களில் பங்கு பற்றி வெற்றியும் பெற்றிருத்தல் வேண்டும், தாமாக முன்வந்து கருமங்களை ஆற்றுதல், பிள்ளைகளின் பெற்றோர்கள் பாடசாலையின் செயற்பாடுகளில் பங்கு பற்றி பெற்றோர்களை அழைக்கின்ற போது பிள்ளைகள் சார்பாக வந்து கலந்துரையாடலை மேற்கொள்ளல், காலை பிரார்த்தனையின் போது முன்வந்து நற்சிந்தனை வழங்குதல், தேவாரம் / கிறிஸ்தவ ஜெபம் / இஸ்லாமிய கீதம் இசைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல், வரவு ஒழுங்காக இருத்தல் (95% மேற்பட்ட வரவு இருத்தல் வேண்டும்), பாடசாலையில் ஒழுக்க நியமனங்களை பின்பற்றி நடத்தல், அவர்களுடைய சீருடை பாடசாலை நியமனங்களை பின்பற்றியதாக இருத்தல், மாணவர்கள் பெரியோர்களை மதித்தல் மற்றும் கனம் பண்ணுதல், சமூகத்திற்காக தாமாக முன்வந்து பணியாற்றுதல், வீட்டு தோட்டம் பாடசாலை தோட்டங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுதல், குறைந்தபட்சம் மூன்று இணை பாடவிதான குழுக்களில் தம்மை இணைத்துக் கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்ற நியமனங்களின் அடிப்படையில் இந்த நட்சத்திர தெரிவுகள் தவணை தோறும் இடம் பெறும்.

2022 மூன்றாம் தவணையின் கல்லூரி நட்சத்திரங்களாக செல்வி. தருனிகா டினேஸ்குமார் (ஆரம்ப பிரிவு), செல்வி. சாருஜா சுரேஸ்குமார் (கனிஷ்ட இடைநிலை பிரிவு), செல்வி. ஜஸ்மிகா விநாயகமூர்த்தி (சிரேஷ்ட இடைநிலை பிரிவு), செல்வன். சிவநாதன் கௌசிகன் (சிரேஷ்ட இடைநிலை பிரிவு), செல்வி. வைஷ்ணவி சிதம்பரநாதநடராசா (உயர்தர பிரிவு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு 31.04.2023 அன்று சிறப்பு நட்சத்திரச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்கின்றோம்.

மாணவ நட்சத்திரங்களாக தெரிவாகி சிறப்பு நட்சத்திர சின்னங்களை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மாணவ நட்சத்திரங்களை தெரிவு செய்வதற்கும், அவர்களுக்கு சிறப்பு நட்சத்திர சின்னங்களை வழங்குவதற்கு இந்த வாய்ப்பை எமக்கு அளித்து நட்சத்திர சின்னங்களை வழங்குவதற்கு தேவையான முழு ஆதரவையும், ஏற்பாடுகளையும் செய்து உதவிய கல்லூரியின் மதிப்புக்குரிய அதிபர். திருமதி. வாசுகி தவபாலன் அவர்களுக்கும், ஆசிரியர்கள், கல்லூரி சமூகத்தினருக்கும், அத்துடன் சிறப்பு நட்சத்திர சின்னங்களை வழங்குவதற்கு உறுதுணையாக இருந்த சுவிஸ் பழைய மாணவர் சங்கத்தினருக்கும் இதற்கான நிதி அனுசரணை வழங்கிய திரு. நாகராஜா சிவபாலகுமார் (பாலன், சுவிஸ் கிளையின் உபதலைவர்) ஆகியோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எதிர்காலத்தில் சிரேஷ்ட மாணவத் தலைவர் தேர்வின் போது மாணவர்கள் எத்தனை சிறப்பு நட்சத்திரங்கள் பாடசாலையில் பெற்றுள்ளார்கள் என்பதை கல்லூரி நிர்வாகத்தின் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்

🙏நன்றி
🤝வணக்கம்
யோ. ஜெயமோகன்
யாழ் வைத்தீஸ்வரா கல்லூரி முன்னாள் மாணவன்.

Want your organization to be the top-listed Government Service in Toronto?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Toronto, ON

Other Public Schools in Toronto (show all)
Ossington Old Orchard Public School Ossington Old Orchard Public School
380 Ossington Avenue
Toronto, M6J3A5

Public School 380 Ossington Ave Toronto Ontario 416-393-0710

Frankland Community School Frankland Community School
Toronto, M4K3E1

We value: every student; a partnership of students, schools, family and community; the uniqueness and diversity of our students and our community; commitment and skills of our staf...

St. Joan of Arc Catholic Academy St. Joan of Arc Catholic Academy
959 Midland Avenue
Toronto, M1K4G4

St. Joan of Arc Catholic Academy, formerly known as Jean Vanier Catholic Secondary School, is a Roman Catholic high school in Toronto, Ontario, Canada as a member of the Toronto Ca...

Weidong PEI Weidong PEI
101-2 Lansing Square
Toronto, M2N6Z6

Szkoła Polska im gen Józefa Hallera przy Konsulacie Generalnym RP w Toronto Szkoła Polska im gen Józefa Hallera przy Konsulacie Generalnym RP w Toronto
Toronto, M8Y2T3

Szkoła Polska im gen Józefa Hallera przy Konsulacie Generalnym RP w Toronto

Metro Toronto Wildcats Football Club Metro Toronto Wildcats Football Club
78 Harrison Garden Boulevard Suite 214
Toronto, M2N7E2

The Metro Toronto Wildcats Football Club is a provincial non-profit sports organization and has been

Pleasant View Junior High School  (Gr 7 - 9) Pleasant View Junior High School (Gr 7 - 9)
175 Brian Drive, North York
Toronto, M2J3Y8

this school is one of the best school's ever you can make thousands of friends and memories, students always leave with more than they came with!

Comely ykk7 Comely ykk7
Feuh 34
Toronto, 56786

Bruce Public School Bruce Public School
51 Larchmount Avenue
Toronto, M4M2Y6

page maintained by the School Council of Bruce Junior Public School

Attractive bmf5 Attractive bmf5
Feuh 34
Toronto, 54732

Northlea Elementary & Middle School Northlea Elementary & Middle School
305 Rumsey Road
Toronto, M4G1R4

Northlea Elementary & Middle School