S.K.Rajen
Official page of S.K.Rajen
Broadcaster, presenter and producer. Based in London
மன்னார் நலன்புரிச் சங்கம் - பிரான்ஸ்
பெருமையுடன் வழங்கும் 'மன்னார் இன்னிசை இரவு 2023'
உங்கள் நுழைவுச்சீட்டுகளுக்கு தொடர்புகொள்ளுங்கள்
டிசம்பர் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30க்கு
ESPACE VENISE - 30 Route de Groslay, 95200 Sarcelles
London - South Harrow Praba Restaurant ஆதரவில்
யாழ் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி
பழைய மாணவர் சங்கம் - லண்டன்
பெருமையுடன் வழங்கும் 'கலாச்சார மாலை 2023'
டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை
Kingsbury High School (Upper School)
Princes Avenue Kingsbury London NW9 9JR
மன்னார் நலன்புரிச் சங்கம் - பிரான்ஸ் வழங்கும்
'மன்னார் இன்னிசை இரவு 2023'
விசேட விலைச் சலுகை - டிசம்பர் 7ம் திகதி வரை
நர்த்தனாலயா & ASCES நாட்டியக் கல்லூரியின் ஆசிரியர்
'பரதசூடாமணி' ஸ்ரீ.தயாளசிங்கம் அவர்களின் மாணவி
செல்வி.அதிசயா நடராஜா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்
நர்த்தனாலயா & ASCES நாட்டியக் கல்லூரியின் ஆசிரியர்
'பரதசூடாமணி' ஸ்ரீ.தயாளசிங்கம் அவர்களின் மாணவி
செல்வி.அதிசயா நடராஜா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்
அணிசேர் கலைஞர்கள்
நட்டுவாங்கம்: 'பரதசூடாமணி' ஶ்ரீ. தயாளசிங்கம்
குரலிசை: 'கலைமாமணி' ஶ்ரீமதி. ராதா பத்திரி
மிருதங்கம்: ஶ்ரீ. நெல்லை டி .கண்ணன்
வயலின்: 'சங்கீத பூஷணம்' கோமளா கந்தையா
'சங்கீத கலாஜோதி' பிரசாத் பரமேஸ்வரலிங்கம்
புல்லாங்குழல்: 'வேணுகானமணி' ஶ்ரீ. பிச்சையப்பா ஞானவரதன்
இன்று மாலை 6 மணிக்கு
பரிஸ் மாநகரில் உங்களை சந்திக்கிறேன்
நர்த்தனாலயா & ASCES நாட்டியக் கல்லூரியின் ஆசிரியர்
'பரதசூடாமணி' ஸ்ரீ.தயாளசிங்கம் அவர்களின் மாணவி
செல்வி.அதிசயா நடராஜா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Narthanalayam | Théâtre du Blanc Mesnil
இலங்கையின் இசை முத்துக்கள் பயஸ் - ரட்ணம் இரட்டையர்கள் இணைந்த 'Super Sons' நான்கு தசாப்தங்களை நிறைவு செய்திருக்கின்றது என்பதை அறியும் பொழுது ஆச்சரியம் கலந்த மகிழ்வு மேலிடுகிறது.
எமது அன்புச்சோதரர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்கள், பயஸ் - ரட்ணம் இரட்டையர்களை 1990ஆம் ஆண்டில் எமக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த ஆண்டிலேயே ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர்களை அழைத்து வந்தார். இசை நிகழ்ச்சிகள் வழங்கி இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினோம். எங்கள் கலைஞர்களின் கலைத்திறமைகளைக் கண்டு கலாபிமானிகள் அதிசயித்தார்கள், ஆனந்தமடைந்தார்கள், பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள்.
பயஸ் - ரட்ணம் இணைந்த 'Super Sons' இசைப்பயணம் பல்லாண்டுகள் தொடர, இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
வசந்தகீதங்கள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள்.
- எஸ்.கே.ராஜென்
கலையே வாழ்வாக அமைதல் கிடைத்தற்கரிய பெரும் செல்வம். வாழ்வில் இணைந்து நாடகக் கலையில் சேர்ந்தே பயணிக்கும் கலைத்தம்பதியரை ஈழத்துக் கலையுலகு பெற்றுக்கொண்டமை பெருமைக்குரியதே!
நாடகக் கலைஞர் க.பாலேந்திரா அவர்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாய் இருந்து ஈழத்து நாடகத்துறையை மேன்மையுற வைக்கும் ஆனந்தராணி பாலேந்திரா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
ஈழத்து அரசிலில், இளைஞர் பேரவைக் காலத்திலிருந்து அறிந்து கொண்ட ஒருவர். ஈழமக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதில் துடிப்போடு இயங்கிவந்த சி.புஸ்பராஜா அவர்களை, இன்று (30/11/2023) அவரது பிறந்தநாளில் நினைவேந்தல் புரிவது எம் கடமைகளில் ஒன்று.
வரும் சனிக்கிழமை டிசம்பர் 2ம் திகதி மாலை 6 மணிக்கு
பரிஸ் மாநகரில் உங்களை சந்திக்கிறேன்
நர்த்தனாலயா & ASCES நாட்டியக் கல்லூரியின் ஆசிரியர்
'பரதசூடாமணி' ஸ்ரீ.தயாளசிங்கம் அவர்களின் மாணவி
செல்வி.அதிசயா நடராஜா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Narthanalayam | Asces Tamil | Théâtre du Blanc Mesnil
நவம்பர் 27 வெளியீடு 'நிலம்' குறும்படம்
இன்று ஐரோப்பிய நேரம் இரவு 8 மணிக்கு
https://youtu.be/Ce43c54cfBg?si=Q8ALam4s7o3p9kCM
'நிலம்' குறும்பட தயாரிப்பாளர் சுதன்ராஜ் அவர்களுடன் ஓர் நேர்காணல்
'நிலம்' குறும்பட தயாரிப்பாளர் சுதன்ராஜ் அவர்களுடன் ஓர் நேர்காணல்
'நிலம்' குறும்பட தயாரிப்பாளர் சுதன்ராஜ் அவர்களுடன் ஓர் நேர்காணல் ► Subscribe → https://www.youtube.com/skrajen?sub_confirmation=1'நிலம்' குறும்பட தயாரிப்ப...
இன்று 26/11/2023 பிரித்தானிய நேரம் மாலை 7 மணிக்கு
'நிலம்' குறும்பட தயாரிப்பாளர் சுதன்ராஜ் அவர்களுடன் ஓர் நேர்காணல்
நவம்பர் 27 வெளியீடு
இயக்குனர் கதிரின் 'நிலம்'
கதை - எழுத்து - தயாரிப்பு: சுதன்ராஜ்
www.youtube.com/
'வண்ணைக் கலைவாணர்' நாடக மன்ற நிறுவனர்களில் ஒருவரான கலைஞர் இரா.பற்குணம் அவர்கள் காலமானார்.
ஈழத்து நாடகக் கலைத்துறையின் ஒரு விருட்சம், 'வண்ணைக் கலைவாணர்' நாடக மன்றத்தின் கலைத்தூண் சரிந்தது. ஈழத்துக் கலையுலகம் தனது கலைப்புதல்வர்களைத் தொடர்ச்சியாக இழந்து வருகின்றது.
யாழ்ப்பாணம் 'நாச்சிமார் கோவிலடி' என்றதுமே கலைஞர்கள் ஒவ்வொருவரும் நினைவுக்கு வருவார்கள். இசை, நாடகக் கலைஞர்கள் நிறைந்த இடமான நாச்சிமார் கோவிலடிப் பகுதிக்கு மாலை நேரத்தில் சென்றால், ஒரு பெரிய கலைஞர் கூட்டத்தையே தரிசிக்கலாம்.
அந்தப் பகுதியில் மிக நீண்ட காலம் கலைப்பணியாற்றியவர், குறிப்பாக நாடகக் கலையில் சிறந்தோங்கி விளங்கியவரான கலைஞர் இராசையா பற்குணம் அவர்கள் 2023 நவம்பர் 20ம் திகதி தாயகத்தில் காலமானார்.
'வண்ணை கலைவாணர்' நாடக மன்றத்தின் உருவாக்கத்தில் முன்னணி வகித்தவர். அந்த மன்றத்தினூடாக பல நாடகங்களை மேடையேற்றிவர்.
நடிகர்கள் பலரை 'வண்ணை கலைவாணர்' நாடக மன்றத்தின் ஊடாக வளர்த்தெடுத்தவர், அவர்கள் கலைத்துறையில் புகழடைந்த பொழுது பார்த்து மகிழ்ந்து பாராட்டி வாழ்த்தியவர்.
ஈழத்தின் ஒப்பற்ற கலைஞர்களாக விளங்கிய எஸ்.ரி.அரசு, கணபதிப்பிள்ளை - வில்லுப்பாட்டு சின்னமணி, எஸ்.லோகநாதன், திருநாவுக்கரசு, கிருஷ்ணமூர்த்தி போன்ற பல கலைஞர்களுடன் பணியாற்றி அவர்களின் புகழுக்குக் காரணமாக அமைந்தவர்.
இவர்களைப் போன்று பல கலைஞர்கள் இவரால் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்றும் அவர்கள், கலைஞர் பற்குணம் அவர்களின் கலைப்பாதையைப் பின்பற்றி வருகின்றார்கள்.
'வண்ணை கலைவாணர்' நாடக மன்றத்தால் மேடையேற்றப்பட்ட பல நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்துப் புகழ் பெற்றவர்.
கலையரசு க.சொர்ணலிங்கம், நாடகர் ஏ.சி.தாசீசியஸ், ஏ.ரகுநாதன் போன்றோருடன் கலைத்தொடர்பைப் பேணி வந்த ஒரு மாபெரும் நாடகக் கலைஞரை ஈழதேசம் இழந்து நிற்கிறது.
'நடிகமாமணி' என்ற விருதினை அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையினார் இவருக்கு வழங்கினார்கள். இலங்கை அரசின் 'கலாபூசணம்' விருதினை வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலைஞர் இரா.பற்குணம் அவர்களுக்கு வழங்கி மாண்பேற்றியிருந்தார்.
அத்துடன், நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பிரிவு 'கலைஞானச்சுடர்' என்ற பட்டத்தை கலைஞர் பற்குணம் அவர்களுக்கு வழங்கியது.
இவ்வாறு பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுக்கொண்டவர் 'வண்ணைக் கலைவாணர்' நாடக மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான கலைஞர் இரா.பற்குணம் அவர்கள் இன்று எம்மோடு இல்லை.
அவரை இழந்து நிற்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.
'மலையகம் 200 - இலண்டன்' மாநாட்டில் பங்குபற்றியிருந்த வேளையில்
பரிஸில் சூப்பர் சிங்கர் - சரி கமா பா பாடகர்களுடன் 'MANNAR NIGHT 2023'
டிசம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30க்கு
Espace Venise - 30 Route de Groslay, 95200 Sarcelles
🔴 LIVE: லண்டனில் 'மலையகம் 200' மாநாடும் - ஓவியக்கண்காட்சியும்
நவம்பர் 18 சனிக்கிழமை
பிற்பகல் 2:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
Sudbury Methodist Church
809 Harrow Road, Wembley, HA0 2LP
🔴 LIVE: லண்டனில் 'மலையகம் 200' மாநாடும் - ஓவியக்கண்காட்சியும் | 18-11-2023 ► Subscribe → https://www.youtube.com/skrajen?sub_confirmation=1லண்டனில் 'மலையகம் 200' மாநாடும்...
பிரியமான கௌசி ரவிசங்கர் எமை விட்டுப் பிரிந்து 10 ஆண்டுகள் பறந்தோடிவிட்டன. பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய ஒலிபரப்பாளர் கௌசியை எமது உறவுகள் எவரும் மறந்துவிடவில்லை!
புலம்பெயர்ந்து வாழும் ஈழதேச மக்களின் வானொலிக்கலை வரலாற்றில் தனியிடம் வகித்து, தரமான நிகழ்ச்சிகள் பலவற்றைத் தயாரித்தளித்தவர். தாயக நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்.
இன்று கௌசி ரவிசங்கர் நினைவு நாள் - 18/11/2013
அவர் என்றென்றும் எம்மோடு வாழ்கிறார்.
எஸ்.கே.ராஜென்
18.11.2023
லண்டனில் 'மலையகம் 200' மாநாடும் - ஓவியக்கண்காட்சியும்
நவம்பர் 18 சனிக்கிழமை
பிற்பகல் 2:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை
Sudbury Methodist Church
809 Harrow Road
Wembley
HA0 2LP
இலங்கை வானொலி வழியாக நேயர்கள் இதயம் நிறைந்த 'சொல்லாயன்' என மாணவர்களால் மாண்பேற்றப்பட்ட மதி அழகன், செய்திகள் அளிக்கை செய்து வானொலி நேசர்களைக் கவர்ந்த வி.என்.மதி அழகன் அவர்கள் என்றென்றும் மகிழ்வுடன் வாழ்ந்திட இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
பரிஸில் சூப்பர் சிங்கர் - சரி கமா பா பாடகர்களுடன்
'MANNAR NIGHT 2023' | December 10 | ESPACE VENISE
பரிஸில் சூப்பர் சிங்கர் - சரி கமா பா பாடகர்களுடன் 'MANNAR NIGHT 2023' | December 10 | ESPACE VENISE ► Subscribe → https://www.youtube.com/skrajen?sub_confirmation=1VS CO Cash & Carry பேராதரவுடன...
லண்டனில் 'மலையகம் 200'
ஓவியக் கண்காட்சியும் - கலை நிகழ்வுகளும் - உரைகளும்
நவம்பர் 18 சனிக்கிழமை பிற்பகல் 2:30 முதல் இரவு 8:30 வரை
Sudbury Methodist Church
809 Harrow Road, Wembley, HA0 2LP
கனடா 'தமிழோசை' சிறிகாந்தா அவர்கள் லண்டன் வந்துள்ளார்.
அவரை South Harrow Praba Restaurantல் சந்தித்தோம்.
பரிஸ் லா சப்பல் ஆயினி சார்ல் (Aayini S.A.R.L) உரிமையாளர், வர்த்தகத் துறையில் தளராது தனித்துவமாகப் பயணம் புரியும் மதிவாணன் கோபாலபிள்ளை (கோபு) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
ஈழநல்லூர் அருணா இசைக்குழுவின் இசைக்கலைஞர் எஸ்.சண்முகரட்ணம் காலமானார்.
ஈழத்திருநாட்டின் வடபுலத்தில் இசைக்குழுக்கள் தோற்றம் பெற்று வளர்ச்சிகண்டன. கண்ணன் கோஷ்ரி, இரட்டையர் இசைக்குழு, மண்டலேஸ்வரன் இசைக்குழு, கலாலயா இசைக்குழு, ஈழநல்லூர் அருணா இசைக்குழு, ரங்கன் இசைக்குழு, ராஜன்ஸ் இசைக்குழு, பீட்னிக்ஸ் இசைக்குழு என்ற அன்றைய காலகட்ட வரலாற்றில் ஈழநல்லூர் அருணா இசைக்குழு ஒரு தனித்துவமான இடத்தை மக்கள் மத்தியில் வகித்தது.
அதற்கு ஈழநல்லூர் அருணா இசைக்குழுவில் அங்கம் பெற்ற கலைஞர்களே காரணமாக அமைந்தார்கள். அருணா இசைக்குழுவின் இயக்குநர் அருணா அவர்களின் இரத்த உறவுகளே அதிகளவில் அக்குழுவில் அங்கம் பெற்றிருந்தனர்.
அத்தனை குடும்பங்களும் அருணா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிகள் மூலமான வருமானத்திலேயே இயங்கிவந்தன. போர்ச் சூழலுக்குள்ளும் இயங்கிய இசைக்குழு, இப்பொழுதும் இயங்கிவருகின்றமை பெருமைக்குரியதே.
ஈழநல்லூர் அருணா இசைக்குழுவில் அங்கம் பெற்றவர்கள் எல்லோருமே அருணா இசைக்குழுவைத் தங்கள் இசைக்குழுவாகவே கருதிச் செயற்பட்டனர். இதில் முக்கியமான தாளவாத்தியக் கலைஞராக நான்கு தசாப்தங்களுக்கு மேலாகப் பணியாற்றியவர்
அருணாவின் அன்புச் சகோதரரான எஸ்.சண்முகரட்டணம் அவர்கள்.
அவர் தனது இசைமீட்டலை உடல் நலன்குன்றிய நிலையில் நிறுத்தியிருந்தார். ஆயினும் அவரது சுவாசிப்பு இசையாகவே இருந்தது. அந்த இசைச்சுவாசிப்பையும் அவர் இன்று (14.11.2023) நிறுத்திவிட்டார்.
மிருதங்க இசைபயின்று அதன் வழியே, தபேலா, டோல்கி போன்ற தோல்வாத்தியக்கருவிகளை மிக இலாவகமாக மீட்டி வந்தவர், அருணா இசைக்குழு இசை நிகழ்ச்சிகளை விறுவிறுபாக்கயவர் இசைக்கலைஞர் எஸ்.சண்முகரட்ணம் அவர்கள்.
அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.
பார்த்தவர் நெஞ்சங்களிலும், குரலைக் கேட்டவர் நெஞ்சங்களிலும், ஏழு தசாப்த காலங்களுக்கு மேலாக வீற்றிருக்கும் 'இசையரசி' பி.சுசீலா அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். P.Susheela
மன்னார் நலன்புரிச் சங்கம் - பிரான்ஸ் வழங்கும் 'MANNAR NIGHT 2023'
மன்னார் நலன்புரிச் சங்கம் - பிரான்ஸ் வழங்கும் 'MANNAR NIGHT 2023' | நேர்காணல் | மன்னார் இன்னிசை இரவு ► Subscribe → https://www.youtube.com/skrajen?sub_confirmation=1VS CO Cash & Carry பேராதரவுடன்மாற்றுத்திறனாளிகளின் வாழ்வ...
ஈழத்து இசைக்குழுக்களின் வரலாற்றுடன் வாழும் இசைக்கலைஞர். இசைக்குழுக்களில் அங்கம் பெற்ற ஒவ்வோர் இசைக்கலைஞர்கள் பற்றிப் பேசி மகிழ்வதில் எப்பொழுதும் பிரியமாக இருப்பவர். ஈழத்தின் வட புலத்தில் இசைக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல், அந்த இசைக்குழுக்களிலே அங்கம் பெற்று இசை மீட்டி கலாரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நினைவுகளையெல்லாம் இப்பொழுதும் இனிமையாகப் பேசிவருபவர். தாயகத்தில் மாத்திரமல்ல புலம் பெயர்ந்து வாழும் தேசத்திலும் ஈழத்து இசைக்கலையுடன் பயணம் புரியும் இனிய நண்பர் எம். குருநாதன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மன்னார் நலன்புரிச் சங்கம் - பிரான்ஸ்
பெருமையுடன் வழங்கும் 'மன்னார் இன்னிசை இரவு 2023'
உங்கள் நுழைவுச்சீட்டுகளுக்கு தொடர்புகொள்ளுங்கள்
டிசம்பர் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30க்கு
ESPACE VENISE - 30 Route de Groslay, 95200 Sarcelles
பிரான்ஸில் புதிய சட்டம்! வெளிநாட்டு மக்கள் திண்டாட்டம்!
'அகரம்' நிசா பீரீஸ் விளக்குகிறார் |
பிரான்ஸில் புதிய சட்டம்! வெளிநாட்டு மக்கள் திண்டாட்டம்! நிசா பீரீஸ் விளக்குகிறார் | Nisha Peiris ► Subscribe → https://www.youtube.com/skrajen?sub_confirmation=1பிரான்ஸில் புதிய சட்டம்! வெளிநாட்...
வரலாற்றின் வழித்தடத்தில் | November 11
வரலாற்றின் வழித்தடத்தில் November 11 ► Subscribe → https://www.youtube.com/skrajen?sub_confirmation=1
இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள், செய்தி அளிக்கையாளர்கள் வரிசையில் ஒவ்வொருவருக்கும் வரலாறு உண்டு. இலங்கை வானொலியில் செய்திகள் அளிக்கைபுரிவதில் ஒரு தனித்துவமான ஆளுமையாளர் நடேச சர்மா அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது.
இலங்கை வானொலியில் ஒலித்த குரல்களில் நடேச சர்மா அவர்களின் குரலை அன்றைய வானொலி நேயர்கள் மறக்க மாட்டார்கள், அவர்கள் நெஞ்சங்களில் நடேச சர்மா வாழ்ந்து கொண்டே இருப்பார். ஆழ்ந்த இரங்கல்.
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்
பெருமையுடன் வழங்கும் '18வது தென்னங்கீற்று' கலைமாலை
12/11/2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு
Salle Jeanne D'Arc
50 Place de Torcy, 75018 Paris
Métro: Marx Dormoy
நர்த்தனாலயா & ASCES
நாட்டியக் கல்லூரியின் ஆசிரியர்
'பரதசூடாமணி' ஸ்ரீ.தயாளசிங்கம் அவர்களின் மாணவி
செல்வி.அதிசயா நடராஜா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்
டிசம்பர் 2ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு
Théatre du Blanc-Mesnil
1-5 Place de la Libération, 93150 Le Blanc-Mesnil
Narthanalayam | Asces Tamil | Théâtre du Blanc Mesnil
தமிழ் திரைக்கலையின் அடையாளமாக உலகில் வலம் வருபவர் 'உலகநாயகன்' கமல்ஹாசன். திரைத் துறையில் கற்றதையும், உழைத்ததையும் அந்தத் துறைக்கே உரமாக்கி மகிழும் ஒரே தமிழ்த் திரைப்படக்கலைஞர் கமல் தான். 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர், 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் சேர்ந்த ஒரு கலவை 'கலைஞானி' கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். Kamal Haasan
மன்னார் நலன்புரிச் சங்கம் - பிரான்ஸ்
பெருமையுடன் வழங்கும் 'MANNAR NIGHT 2023'
10 டிசம்பர் 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30க்கு
லண்டனில் புகழ் பெற்ற 'RAINBOW' இசைக்குழுவினருடன் சூப்பர் சிங்கர், சரி கம பா, தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர்கள், ஐரோப்பிய முன்னணி பாடகர்கள் கலந்து சிறப்பிக்கும் 'மன்னார் இன்னிசை இரவு'
ESPACE VENISE
30 Route de Groslay, 95200 Sarcelles
கண்முன்னே கரைந்து மடிந்த ஈழத்தில் புகழ் பெற்ற கண்ணன் கோஷ்ரியின் பிரதான பாடகர் ஸ்ரனி சிவானந்தன்
'கலையரங்கம்' - வீரகேசரி வார வெளியீடு 05/11/2023
பரிஸில் கோவிலூர் செல்வராஜனின் பொன்விழாவும் நூல்கள் அறிமுகமும்
- வீரகேசரி வார வெளியீடு 05/11/2023
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
London
London
A graduate from the Poor School 2001. Rebecca is continuing to enjoy a varied career in fim, stage and screen.
London
Digital product designer at ustwo specializing in creating, visualizing and prototyping interactive
London
Dave Allison is a visual artist from London. He attempts to create interesting, beautiful and origin
87 Great Eastern Street
London, EC2A3HY
Master Simon Wong has been painting for over 60 years.
Crystal Palace
London
www.georgeharrisphoto.co.uk www.instagram.com/rookeryensemble
London
Enter Shikari is a band from St Albans, England. https://linktr.ee/entershikariofficial