Uthaman

உண்மையை உரக்கச் சொல்வோம்

04/10/2023
02/10/2023
18/09/2023
18/09/2023
22/08/2023

விவரமான விற்பனையாளர்... ❤️

29/03/2023

#மனித #நேயத்தின் #மற்றொரு #பெயர் #ஆட்டோ #ரவி...

ரவி என்கின்ற ரவிச்சந்திரன்....மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் கடந்த 25 வருடங்களாக ஆட்டோ ஒட்டிவருகிறார்.பழைய வண்ணாரப்பேட்டையில் வாடகை வீட்டில் மனைவி, இரண்டு மகள்களுடன் வாழ்க்கையை நடத்திவருகிறார்.

சென்னைக் வரும் பல்வேறு மாநில பயணிகளுடன் பேசி பேசி கொஞ்சம் இந்தி கொஞ்சம் தெலுங்கு கொஞ்சம் மலையாளம் பேசக்கூடியவர்.
சமீபத்தில் அவர் செய்த ஒரு காரியத்தால் இன்று மக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார்.
அப்படி அவர் செய்த காரியம் என்ன?

கோல்கத்தாவை சேர்ந்தவர் சங்கரதாஸ்(52)தன் தொழில் நிமித்தமாக சென்னை வந்தவர் சேப்பாக்கத்தில் இருந்து ரவியின் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டார்.

சங்கரதாஸ்க்கு தமிழ் தெரியாது, இந்தியில் தான் போகவேண்டிய இடத்தை சொல்லிக்கொண்டே வந்தவருக்கு திடீர் என பேச்சு தடைபட்டது, கண் இருண்டது, வேர்த்து கொட்டியது, அப்படியே மயக்கம் போட்டு ரவியின் தோளில் சாய்ந்தார்.
வண்டியில் வந்த பயணி இப்படி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாரே என நினைத்த ரவி கொஞ்சமும் தாமதிக்காமல் பக்கத்தில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் அங்கே சங்கரதாசை பரிசோதித்த டாக்டர் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது உடனே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகச்சொன்னார்.

ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை என்ற நிலையில் அவர்கள் உடனே ஆம்புலன்ஸ் வைத்து ராஜீவ்காந்தி மருத்துவமனை அனுப்பிவைத்தனர்.

ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு ஆம்புலன்சில் சங்கரதாசுடன் ரவி பயணம் சென்றார், வழியில் சங்கரதாஸ் விடாமல் வாந்தி எடுக்க எல்லாவற்றையும் தனது உடம்பில் தாங்கிக்கொண்டார்,ஒரு கட்டத்தில் கையிலும் வாங்கிக்கொண்டார்.

ஆஸ்பத்திரியில் சங்கரதாசை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்து வந்திருந்தாலும் இவரை உயிருடன் பார்த்திருக்கமுடியாது, ஆனாலும் இவரது உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது,உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தவேண்டும், அந்த கருவி வெளியில்தான் வாங்கவேண்டும் அதுவும் உடனே வாங்கவேண்டும் இல்லாவிட்டால் உயிர்பிழைக்க முடியாது என்றனர்.

சங்கரதாஸ் பையில் இருந்த செல்போனை எடுத்து கோல்கத்தாவில் உள்ள அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டபோதுதான் தெரிந்தது சென்னைக்கு ரயிலில் வரவே காசில்லாத குடும்பம் அது என்று.

ரவி கொஞ்சமும் யோசிக்காமல் தனது ஆட்டோ ஆர்சி புக்கை அடமானம் வைத்து முப்பதாயிரம் ரூபாய் திரட்டினார் நண்பர் ஒருவரிடம் நிலமையை சொல்லி 27 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார் 57 ஆயிரம் ரூபாயை டாக்டர்களிடம் கொடுத்து நம்ம தமிழ்நாட்டை நம்பிவந்த ஒருவர் ஆதரவில்லாமல் இறந்தார்னு ஒரு கெட்ட பெயர் வரக்கூடாது டாக்டர் இந்தாங்க என்னால புரட்ட முடிந்ததுன்னு 57 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

ஆமாம் சொந்த ஆட்டோவை அடமானம் வைச்சு இவரை காப்பாத்த துடிக்கிறீங்களே?இவரு யாரு உங்களுக்கு தெரிஞ்சவங்களா?என டாக்டர்கள் கேட்க, இவரு யாரு எதுன்னுல்லாம் தெரியாது, என் ஆட்டோவுல வந்த பயணி, என்னை காப்பத்துன்னு கேட்டு தோள்ல சாஞ்சா சக மனுஷன் அவ்வளவுதான், என்றதும் டாக்டர்கள் வியந்து போய் பேஸ் மேக்கருக்கு மிச்சம் தேவைப்பட்ட பணத்தை அவர்களே தங்களுக்குள் பங்கிட்டு கட்டி பேஸ்மேக்கரை வாங்கிவந்து மருத்துவர் ரவிசங்கர் தலைமையில் வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்தனர்.

இதற்குள் பத்து நாட்களாகிவிட்டது இந்த பத்து நாட்களும் சங்கரதாசிற்கு தானே காப்பாளராக இருந்து வார்டு வார்டாக கூட்டிச் செல்வது மருத்துவபரிசோனைகளுக்கு உட்படுத்துவது படுக்கவைப்பது சாப்பிடவைப்பது நேரநேரத்திற்கு மருந்து கொடுப்பது என பார்த்துக்கொண்டார்.
பகல் முழுவதும் சங்கரதாசை பார்த்துக்கொள்வார் இரவில் ஆட்டோ ஒட்டி அந்த வருமானத்தை வீட்டு செலவிற்கு கொடுத்துவிடுவார் காலையில் வீட்டில் பால் போட்டு எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி வந்துவிடுவார்.தாளிக்காத உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டும் ஒட்டல் ஒட்டலாக அலைந்து வாங்கிவந்து கொடுப்பார்.

இப்படியே இருபது நாட்கள் சங்கரதாசை கண்ணும் கருத்துமாக பார்த்து உடல் நல்லபடியாக தேறியதும் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ததும் சென்னையில் மூன்று வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் சென்றார் காரணம் சங்கரதாஸ் பிழைக்கவேண்டும் என்று அங்கெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தார்.

பிறகு நல்லபடியாக கொல்கத்தாவிற்கு ரயிலில் அனுப்பிவைக்கும் போது சங்கரதாஸ் பேசவே இல்லை கட்டித்தழுவி கண்ணீர்விட்டு அழுதார் அங்கே மொழிக்கு வழியேயில்லை அன்புதான் மேலோங்கியிருந்தது.

கிட்டத்தட்ட இருபது நாட்கள் கழித்து தனது ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்த ரவியை எங்கேப்பா இருபது நாளாக்காணோம் என்று அவரது நண்பர் கேட்டிருக்கிறார் இப்படி ஒரு விஷயம் நடந்துருச்சு அதான் வரமுடியலை என்று சொல்லியிருக்கிறார்.
என்னப்பா இவ்வளவு நல்ல விஷயம் செஞ்சுருக்கே இது நாலு பேருக்கு தெரியட்டும் என்றபடி தனக்கு தெரிந்த ஊடகங்களுக்கு சொல்லியிருக்கிறார்.

இதன் மூலம் இவரை தொடர்புகொண்ட எடிட்டர் மோகன் தன் பங்கிற்கு அடகு வைத்த ஆட்டோ ஆர்சி புக்கை மீட்டுக்கொடுத்திருக்கிறார்.இதே போல அடுத்தடுத்து பலரும் உதவி செய்ய முன்வர அதெல்லாம் வேண்டாம் நான் மனிதனாக என் கடமையை செய்தேன் அதற்கு எதற்கு வெகுமதி பாராட்டு எல்லாம் என்றபடி அடுத்த பயணியின் அழைப்பை ஏற்று ஆட்டோவை செலுத்துகிறார்.,,...

15/12/2022

இந்த வீடியோ உருவாக்கி பகிர்ந்தவர்க்கு நன்றி...

16/10/2022
16/10/2022
20/08/2022
22/07/2022

செஸ் விளம்பரத்தில்
ஏ ஆர் ரகுமானுக்கும் செஸ் விளையாட்டுக்கும் என்ன சம்பந்தம்
#உலகச்_சாம்பியன், ரோட்டோரமா நின்னு போட்டோ எடுத்திருக்கிறார்
தமிழன் என்று சொல்கிறான் தமிழ் இளைஞனுக்கு விளம்பரத்தில் முக்கியத்துவம் இல்லை
பிரக்ஞானந்தா
சகோதரருக்கு வெற்றி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
| | |

12/07/2022

முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று!

06/07/2022

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

06/07/2022

பெற்றோர்கள் கைவிட்டாலும் முயற்சியை விடவில்லை: 12ம் வகுப்பில் ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸ் ஆன ஒட்டிப்பிறந்த வீணா-வாணி

04/07/2022

3 மகன்களை கலெக்டர், என்ஜினியர், டாக்டராக்கிய துப்புரவு பெண் தொழிலாளி- 30 ஆண்டுகள் வெளிவராத தெய்வத்தாயின் ரகசியம்..!

04/07/2022

சேவை கட்டணம் விதித்தால், 1915 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் - மத்திய அரசு

04/07/2022

தன் மகனின் கல்விக்காக தன்னுயிரை
மாய்த்துக் கொண்ட தாய்
மயிலாடுதுறையை சேர்ந்த ஒரு மாணவன் விருதுநகரில் உள்ள ஒரு தன்னாட்சி பெற்ற கலைகல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்று வந்தான் ஏதோ தவறு செய்து விட்டதாக கல்லூரியை விட்டு நீக்கப்பட்டான் அவனை மீண்டும் மன்னித்து படிப்பை தொடர வாய்ப்பு கோரி கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை சென்று அழுது கெஞ்சியும் மன்னிப்பு கடிதம் கொடுத்தும் படிக்க அனுமதிக்காத காரணத்தால் அவனது
தாயா் மனமுடைந்து இறந்தே
போனாா்
மாணவர்கள் அறியாமையாள் செய்யும் தவறுகளை கண்டித்து திருத்தி நல்வழிபடுத்தி இந்த சமூகத்துக்கு கொடுப்பதே நல்ல கல்வி நிறுவனத்தின் நல்ல ஆசிரியர்கள் இந்த நாட்டுக்கு செய்யும் கடமை தண்டனை என்ற பெயரில் ஒருவனின் எதிர் காலத்தையே சூனியமாக்குவது நியாயமா அதனால் அவனின் பெற்றோருக்கு ஏற்ப்படும் மன வேதனையையும் மாண்போடு கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டதால் இன்று ஒரு உயிர் பலி இப்போது அந்த குடும்பமே நிலை தடுமாாிநிற்க்கிறது தமிழ்்நாடு கல்வித்துறை தன்னாட்சி அதிகாரத்தை கல்வி நிறுவனங்குக்கு வழங்கும்போது மாணவர்்களின் கல்வி பாதுகாப்புக்கும் வழிவகையை செய்யவேண்டும் கல்வி கண்திறந்த விருது நகரில் தன் பிள்ளையின் கல்வி பாதிக்கப்பட்டதால் வாழ்வையே முடித்து கண்மூட வழி வகுப்பது மிகுந்த வேதனை யான தலைகுனிவான அவமாணமான செயல் பெருந்தலைவர் பிறந்த மண் என பெருமை பேசவேவேதனையாக உள்ளது

28/06/2022

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை என்று தெரிகிறது.

24/06/2022

😢❤️❤️ 18 வருடங்கள் கழித்து தனக்குப் பிறந்த குழந்தையை பெற்றுக் கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தும் உருக்கமான காட்சி... 😢❤️❤️

24/06/2022

திருமதி.திரௌபதி முர்மு. 59 வயது.
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். முன்னாள் ஜார்க்கண்ட் ஆளுனர். கணவரையும் தன் இரு மகன்களையும் இழந்தவர். ஆதரவுக்கு இருப்பது ஒரே மகள். அரபிந்தோ ஒருங்கிணைந்த கல்வி & ஆராய்ச்சி மையத்தில் உதவிப் பேராசிரியராகவும், பின் ஒரிசா மாநில அரசாங்கத்தில் இளநிலை அதிகாரியாகவும் பணியாற்றியபின் பாஜகவில் சேர்ந்து படிப்படியாக அரசியல் வாழ்வில் முன்னேறியவர். இரண்டு
முறை பாஜக ச.ம.உ. இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.16 லட்சம் மட்டுமே.
இவரே பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர்.
தாங்கள் அனைவரும் சமூகநீதிக் காவலர்கள் என்று பறை சாற்றிக்கொள்ளும் எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிஹாரின் மிக மிக முன்னேறிய பவர்ஃபுல் ஜாதியான காயஸ்த் பிரிவினரான யஷ்வந்த் சின்ஹாவை தங்களது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ள நிலையில், சமூக நீதியின் கடும் விரோதியாக, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் பரம்பரை எதிரியாக, அனைத்து எதிர்க்கட்சிகளாலும் கருத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ள பாஜகவால் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண்மணி.
வெற்றி யாருக்கு? நம் அடுத்த ஜனாதிபதி யார்? காலம் பதில் சொல்லும்.

24/06/2022

"ஹோட்டல் துறையில் மிகப்பெரிய பிரச்னை, உணவை வீணாக்குதல் தான். வாடிக்கையாளர்கள் எப்போதும் பிடிக்காத உணவை இது வேணாம், அது வேணாம்னு சொல்ல மாட்டாங்க. உப்பு, ஊறுகாய் ஆரம்பித்து தயிர், சேமியா, பாயசம் வரை எல்லாத்தையும் வாங்கிட்டு, பாதியை இலையிலேயே வச்சிட்டு கைகழுவிடுவாங்க. இதை சரி செய்ய என்ன செய்யலாம்னு யோசிச்சோம். அப்ப உதிச்சதுதான் இந்த திட்டம். வீண் பண்ணாம சாப்பிட்டால், இலைக்கு 5 ரூபாய் திருப்பிக் கொடுக்கலாம்னு முடிவுசெய்து, அதை உடனே நடைமுறைப்படுத்தினோம்"

-RHR ஹோட்டல், கோவை

19/06/2022
Photos from Uthaman's post 17/06/2022

வடசென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகளான ரேவதி இந்திய அளவில் குத்து சண்டை போட்டியில் கலந்து கொள்ள இன்று மத்திய பிரதேசம் செல்கிறார். குமுதம் சார்பாக வாழ்த்துக்கள்.
அடுத்து தாய்லாந்தில் நடக்க இருக்கும் போட்டியில் கலந்து கொள்ள ரேவதிக்கு sponsorship தேவைப்படுகிறது. அவருக்கு உதவ விரும்புவோர் 98402 65003 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

14/06/2022

ஆஹா என்ன அழகு !! எத்தனை அழகு !!
கோடி மலர் கொட்டிய அழகு !!

Want your business to be the top-listed Computer & Electronics Service in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Chennai
600021

Other Computer services in Chennai (show all)
SFirst Mobile Service SFirst Mobile Service
3rd Main Road, Rajalakshmi Nagar, (opp. To Registrar Office) Velacheri
Chennai, 600042

Mobile Service Center in Velachery, Chennai. We provide secured mobile service for all brand mobiles

smily_boopathi smily_boopathi
Chennai

Laptop computer services

Kavin Computers Kavin Computers
No. 193, Pammal Main Road, Pammal
Chennai, 600075

Kavin Computers - Laptop & Desktop Service in Pammal Chennai, Also Xerox, Lamination Services also provide here.

Reboot Productions Reboot Productions
Chennai, 600034

PROFESSIONAL SOLUTIONS FOR MEDIA PRODUCTION. VST Installation, System Sales and Service, All Pro Audio Equipments.

Acer Laptop Service Centre Acer Laptop Service Centre
Celexsa Technologies Private Limited, 1/609 (Land Mark : Back Side To, Old Mahabalipuram Road, Seevaram, Oggiyamduraipakkam
Chennai, 600097

Acer Laptop Service Centre 'Acer Laptop service & Accessories Sales in OMR , Chennai, We can Sale Acer OEM (Original Equipment Manufacturer) products Like Chargers, Batteries, Keyb...

AR INFO TECH AR INFO TECH
13/13c, Kamarajar 2nd Cross Street, Srinivasa Nagar, Padi, Chennai/
Chennai, 600050

SALES & SERVICE |BRANDED & ASSEMBLED - NEW & SECOND HAND| |LAPTOP & DESKTOP & PRINTER & CCTV CAMERA|

Ranga Infotech Ranga Infotech
No. 9F, Madras Thiruvallur High Road
Chennai, 600050

We offer affordable laptop repair and service in PADI.

VLEADIT COMPUTER SALES & SERVICE VLEADIT COMPUTER SALES & SERVICE
FLAT NO. G2, GANESH FLATS, NO. 127, 4th Street, SECRETRIAT COLONY, KILPAUK
Chennai, 600010

SINCE MAY 2001 VLEADIT ARE IN COMPUTER SALES & SERVICE. WE ARE LENDING OUR COMPUTER SERVICE TO VARIO

HYFIX serviz care HYFIX serviz care
No:11 Ata Complex, 1st Floor, Agaram Main Road Thiruvancherry Tambaram Selaiyur Chennai
Chennai, 600073

mobile laptop tablet serviz care

EduInfotech EduInfotech
Plot No. 24, New Door No. 28, Old Door No. 24, 2nd Main Road Kalaimagal Nagar, Ekkaduthangal Chennai –
Chennai, 600032

A pioneer in the area of Computer Sales, Services, CCTV Cameras Sales, Service, installation and Used

Varsa Computer Service Chennai Varsa Computer Service Chennai
RR B 106 Rosedale Padur
Chennai, 603103