Speak English fluently with varshini
Nearby schools & colleges
Chennai
600003
600003
600003
600003
600003
600052
600003
600062
757041
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Speak English fluently with varshini, Language school, Chennai.
Same and similar.
கிட்டதட்ட ஒரே அர்த்தம் வந்தாலும் ரெண்டும் ஒன்னு கிடையாது.
Sameனா ஒரே போல இருக்குறது. எந்த மாற்றமும் இல்லாம.
Similarனா ஒரே போல இருக்குறது ஆனா சில வித்தியாசங்களோட... (ஒத்த_ஒரு வகைப்பட்ட)
இத புரிஞ்சுக்க ஈசியான உதாரணம் ரெண்டு பனைமரம் இருந்தா palm trees are sameனு சொல்லலாம். இதுவே ஒரு பனை மரம் ஒரு தென்னைமரம் இருந்தா coconut trees and palm trees are similar னு சொல்லுவோம்
Hope this was useful
Ramyavarshini
Communication trainer
Silver-tongued wannabes
நிறைய பேர் I have a good news னு சொல்றாங்க. ஆனா newsன்றது ஒரு uncountable noun. அது முன்னால a போடுறது தப்பு. I have good news இல்லைனா i have some good news னு சொல்லனும்.
அதே போல money ஒரு uncountable noun. A moneyனு சொல்ல கூடாது. பணம்னா எண்ண கூடியது தானே னு தப்பா புரிஞ்சுக்குறாங்க. அதுக்கு rupees dollars dirhams மாதிரி value குடுத்தா தான் அது countable. A rupee, a dollarனு சொல்லலாம். ஆனா a money ன்றது தப்பு.
Hope this was useful
Communication trainer
Silver-tongued wannabes
LET'S_LEARN
ENGLISH_SERIES
டெல்லி போயிருக்கியானு ஒரு ஃப்ரெண்ட் இன்னொரு ஃப்ரெண்ட்கிட்ட பேசும்போது கேட்குறாருனு வெச்சுப்போம். அப்போ அவரு YES I HAVE GONE TO DELHI னு பதில் சொல்றாரு. அதாவது நா டெல்லி இதுக்கு முன்னால போயிருக்கேன்னு சொல்றாரு. நம்மள்ல பல பேரு இப்டி தான் சொல்வோம். ஆனா அது தப்பு. GONE னா இப்ப போயிருக்குறதா மீனிங். அதாவது பேசும் ஆள் அங்க இல்லை. போயிட்டு வந்தாச்சு(2 WAY)னா I HAVE BEEN TO DELHI.
HE HAS GONE TO THE BANK அவர் பேங்க்குக்கு போயிருக்காரு. இப்ப இங்க இல்லைனு அர்த்தம்.
HE HAS BEEN TO THE BANK. அவர் அந்த பேங்க்குக்கு போயிருந்திருக்காரு (அவருக்கு பேங்க் பத்தி தெரியும்னு சொல்ல யூஸ் பண்ணுவோம்ல)..
Simple ஆ போயிட்டு வந்தாச்சு னா been
போயிருக்காங்க னா gone.
Hope this was useful
Ramyavarshini
Communication trainer
Silver-tongued wannabes
9150556253
நம்மள்ல பல பேரு டிகிரி முடிச்சு இருந்தா கூட இங்கிலீஷ்ல பேசனும்னா வராது. பல ஸ்போக்கன் க்ளாஸ் சேர்ந்தும் இங்கிலீஷ் பேச வராதீங்க கூட இருக்காங்க. காரணம் பயிற்சி இல்லாதது. பல இங்கிலீஷ் க்ளாஸ்ல grammar னு சொல்றாங்க இலக்கணத்த சொல்லி தர்றாங்களே தவிர பேச பயிற்சி தர்றது இல்ல.
அத கவனத்துல வெச்சு டிசைன் செய்ய பட்டதுதான் எங்க Communication training. தினமும் பல தலைப்புகள்ல/முறைகள் பேச பயிற்சி தர்றோம். Grammar mistakes அதாவது இலக்கண தவறுகளும் திருத்தப்படும். மேலும் தகவல்களுக்கு 9150556253.
's_learn
இன்னைக்கு ஒரு interesting topic கத்துக்குக்கலாம்.
இங்லீஷ்ல tautology னு ஒரு பதம் இருக்கு. ஒரே விஷயத்தை அடுத்து அடுத்து வேற வார்த்தைல சொல்றது. உதாரணமா
**In my opinion, i think ஒப்பினியன்னாலே what do you think about தான். கூடவே i think சொல்றது.
**Both the parents பேரண்ட்ஸ்னாலே ரெண்டு பேரும்தான். இதுல both உபயோகிக்குறது
**I received a free gift கிஃப்ட்னாலே ஃபீதான். இதுல ஃப்ரீ னு உபயோகிக்குறது ..
**see him personally பாக்குறதுனாலே நேரம்தான். அதுல personally உபயோகிக்குறது.
Hope this was useful
Ramyavarshini
Communication trainer
Silver-tongued wannabes
இன்னைக்கு IN TIME, ON TIME, AT TIME, BY TIME க்கு அர்த்தம் பாக்கலாம்.
IN TIME -not late (doing before something starts) எதாவது ஒன்னு ஆரம்பிக்கும் முன்னாடியே பண்றதோ போய் சேருறதையோ குறிக்க உபயோகிப்போம். உதாரணமா if we leave now we'll be in time for the movie. (இப்போ கிளம்பின படத்துக்கு சரியான நேரத்துல போய் சேருவோம்)
ON TIME - happens at planned time எதாவது நேரம் குறித்து இருந்தா அந்த நேரம் மாறாம நடக்குற விஷயம். உதாரணமா train arrives on time today. (இன்னைக்கு ட்ரெயின் குறித்த நேரத்துல வரும்)
BY TIME - இதுல BY க்கு அடுத்து நேரத்தை அப்டியே குறிப்பிடுவோம். BY 10 AM மாதிரி. அர்த்தம் Not late than than 10 (10 மணி னா 10 மணிக்கு முன்னாலேயே கொஞ்சம் கூட பின்னாடி கிடையாது)
AT 10 AM - இதுல ATக்கு அடுத்து நேரத்தை அப்டியே குறிப்பிடுவோம். இதோட அர்த்தம் Something is fixed.
உதாரணமா school starts At 10 am.
Ramyavarshini
Communication trainer
Silver-tongued wannabes
's_learn
_SERIES
A/AN இத எங்க போடலாம் பல பேருக்கு குழப்பமா இருக்கும். அதுக்கு ஒரு சின்ன ட்ரிக்.
ஒரே ஒரு எண்ண கூடிய பொருள் இருந்தா A அல்லது AN போடனும். சரி இப்போ எங்க A போடனும் எங்க An போடனும்? சிம்பிளா vowel sound வரக்கூடிய இடத்துல an போடுங்கனு சொல்வாங்க. அந்த vowel sound என்னனு பாக்குறதுக்கு பதிலா வேற ஒரு ட்ரிக் இருக்கு.
எந்த வார்த்தைக்கு முன்னால a/an போடனுமோ அந்த வார்த்தைய அப்படியே தமிழ்ல எழுதுங்க. அது உயிர் எழுத்துல ஆரம்பிச்சா an போடுங்க. உயிர்மெய்ல ஆரம்பிச்சா a போடுங்க.
உதாரணமா egg- எக். உயிர் எழுத்து. அதனால an egg. Book- புக் உயிர்மெய். அதனால a book.
Hope this was useful
Ramyavarshini
Communication trainer
Silver-tongued wannabes
's_learn
_series
Continuously continually ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு பார்ப்போம். கேட்க ஒரே மாதிரி இருந்தாலும், ரெண்டும் வேற வேற.
Continuouslyனா நிறுத்தாம ஒரு விஷயத்தை செய்யிறது. உதாரணமா she danced Continuously for 1 hour னா விடாம தொடர்ந்து ஒரு மணி நேரம் டான்ஸ் ஆடினா னு அர்த்தம்.
continuallyனா ரிப்பீட்டட் ஆக்ஷன்ஸ்(actions). ஒரே மாதிரி அடிக்கடி நடந்துட்டே இருக்க விஷயம்.
உதாரணமா i continually tell my kids i love them. அதாவது அடிக்கடி ஒரே மாதிரி லவ் யூ சொல்வேன்னு அர்த்தம்.
Hope this was useful
Ramyavarshini
Communication trainer
Silver-tongued wannabes
's_learn
_series
I talk to him
I speak to him
I talk with him
I speak with him
இதுல என்ன வித்தியாசம்னு இன்னைக்கு தெரிஞ்சுப்போம்.
Talk to இல்லைனா talk with நாம டெய்லி casual conversation க்கு யூஸ் பண்ணுவோம்
உதாரணமா i talk to my friends at the office.
Speak நாம formal conversation க்கு யூஸ் பண்ணுவோம்.
உதாரணமா wants to speak to the manager
எப்பவும் ஒரு மொழிய பேசுறாங்கனு சொல்றதுக்கு speak தான் உபயோகிப்போம். உதாரணமா i can speak German. இதுல talk உபயோகிக்க கூடாது.
Ramyavarshini
Communication trainer
வேலைக்கு தயாராகி கொண்டு இருக்கிறீர்களா? Interview எதிர்கொள்ள பயமா? எளிமையாக புரியும் விதத்துல tell me about yourself ல இருந்து why should we hire you வரை எப்படி பதில் சொல்றதுனு ரெண்டே நாள்ல கத்துக்கலாம். இது கூடவே resume எழுதுவது எப்படினும் சொல்லி தர்றோம். கூடவே ஒரு mock interview லயும் கலந்துப்பீங்க.
இதுல கலந்துக்க ஃபீஸ் உண்டு. உங்க எதிர்காலத்தோட அடித்தளம் அமைக்க ஃபீஸ் 1500 இரண்டு நாட்களுக்கு. மேலும் விவரங்களுக்கு இன்பாக்ஸ்ல மெஸேஜ் பண்ணுங்க
ஒரு மொழிய பேசாம பழகாம கத்துக்கவே முடியாது.
இங்கிலீஷ்ல பேச வாய்ப்பு தளம் கிடைக்கலைனா, உங்களுக்கான போஸ்ட் தான் இது.
ஒவ்வொரு சனி ஞாயிற்றுக் Google meet ல கலந்துரையாடல் முறைல session வைக்கிறோம். அங்க நீங்க பல தலைப்புகள் பேசலாம். உங்களோட grammar தவறுகள சரி செய்ய trainers உதவியா இருப்போம். ஒரு sessionக்கான தொகை ₹250. மேலும் தகவல்களுக்கு இன்பாக்ஸ் பண்ணுங்க.
Ramyavarshini
Communication trainer
I am in hospital
I am in the hospital ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா?
Hospital ல patient ஆ இருக்கோம்னா i am in hospital. இதுவே அங்க வேற எதாவது வேலையா, யாரையாவது பார்க்க போனாலோ,டாக்டரா இருந்தாவோ i am in the hospital.
இதுவேதான் school,church மாதிரி இடங்களுக்கும். படிக்க போயிருந்தா i am in school. பசங்கள drop பண்ண போயிருந்தா in the school.
Hope this was useful.
For more learnings join class at silver-tongued wannabes
Ramyavarshini
Communication trainer
இங்கிலீஷ் கத்துக்கனும், பேசனும் ஆனா படிக்க க்ளாஸ் போக டைம் தான் ஒதுக்க முடியலைனு ஃபீல் பண்றவங்கள்ல நீங்களும் ஒருத்தரா? அப்ப இந்த போஸ்ட் உங்களுக்கு தான்.
எங்க இருந்தாலும் எப்ப வேணும்னாலும் படிக்க whatsapp class இருக்கே. ஆடியோ மூலமாகவும் நோட்ஸ் மூலமாகவும் உங்களால தெளிவா இங்கிலீஷ்ல பேச கத்துக்க முடியும்.
இந்த கோர்ஸ்ல ஜாயின் பண்ண நீங்க பண்ண வேண்டியதெல்லாம் இன்பாக்ஸ்ல interested னு மெஸேஜ் பண்ணுங்க. உங்க இங்கிலீஷ் லெவல்ல பாத்துட்டு அதுக்கு ஏத்த மாதிரி அடிப்படைல இருந்து அட்வான்ஸ்ட் லெவல் வரை உங்களால இங்கிலீஷ் கத்துக்க முடியும். எங்ககிட்ட கத்துகிட்ட ஸ்டூடண்ட் ஃபீட்பேக் போட்டிருக்கேன்.
கோர்ஸ்ல சேர இன்பாக்ஸ்ல மெஸேஜ் பண்ணுங்க
I will have biriyani today
I am going to have biriyani today
ரெண்டு வாக்கியங்களுக்கும் என்ன வித்தியாசம்னு பார்ப்போம்.
I will have biriyani today னா அப்பதான் முடிவு எடுத்து உடனே சொல்றது.
I am going to have biriyani todayனா plan பண்ணி என்ன சாப்பிடுறதுனு முன்னாடியே முடிவு எடுத்து வெச்ச ஒன்னு..
Hope this was useful
Ramyavarshini
Communication trainer
lets_learn
A group of CROWS is called MURDER
A group of OWLS is called PARLIAMENT
A group of CATS is called CLOWDER
A group of EAGLES is called CONVOCATION
A group of ELEPHANTS is called PARADE
A group of RAVENS is called UNKINDNESS
Ramyavarshini
Communication trainer
Quite- குவைட் (அதிக அளவுல, ரொம்பவே)
உதாரணமா :
i am quite sure about that
நா அத பத்தி ரொம்ப தெளிவா இருக்கேன்
She has quite a lot of friends அவளுக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க
Quiet - குவையட் (ரொம்ப அமைதியா, சத்தமில்லாம)
The room was quiet (room அமைதியாக இருந்தது)
She climbed the stairs quietly அவள் சத்தமே இல்லாம படிகளை ஏறினாள்
(ரெண்டுமே சேர்த்து எப்டி உபயோகிக்கிறதுனு பார்ப்போம்) The exam hall was quite quiet exam hall ரொம்பவே அமைதியாக இருந்தது.
Ramyavarshini
Communication trainer
People னா மக்கள். நிறைய மனிதர்களாக குறிப்பிட உபயோகிப்போம். இதோட plural அதாவது பன்மை peoplesனு எழுதுவாங்க. People ஓட plural people தான். இதுவே ஏசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்காவை பல ஊர் மக்கள் கலந்து இருந்தா peoplesனு சொல்லலாம்.
இதே தான் fish க்கும். Fish ஓட plural fish தான். இதுவே நெத்திலி வஞ்சிரம், சீலா னு கலந்து இருந்தா fishes.
Hope this was useful
Ramyavarshini
'S_LEARN
SAY & TELL
ரெண்டுக்கும் அர்த்தம் சொல்றதுதான். ஆனா
SAY
(i)யாருக்கு ஒரு விஷயத்தை சொல்றோம்னு mention பண்ண தேவையில்லாத இடங்கள்ல யூஸ் பண்ணுவோம்.
உதாரணமா He said he was tired
(ii)யாருக்கு சொல்றோம்னு mention பண்ணவும் உபயோகிப்போம் உதாரணமா he said to me he was tired.
(iii) யாராவது சொன்ன விஷயத்தை அப்டியே திரும்ப சொல்ல யூஸ் பண்ணுவோம்.
உதாரணமா he said " i will win the match".
Tell
இதோட அர்த்தமும் சொல்றதுதான். ஆனா இங்க நீங்க யாருக்கு சொல்றீங்கனு கண்டிப்பா மென்ஷன் பண்ணியே ஆகனும்.
உதாரணமா we told them we were waiting.
இருந்தாலும் lies stories jokes truth இந்த வார்த்தைகள் கூட tell use பண்ணினாலும் யாருக்கு சொன்னோம்னு mention பண்ண தேவையில்லாதது.
உதாரணமா he loves telling stories.
Rule : Told பக்கத்துல to வராது
Said பக்கத்துல to வரும்.
Hope this was helpful
Ramyavarshini
Communication trainer
Hear and listen
ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் பாக்கலாம்.
ரெண்டுமே காதுல கேட்கப்படுகின்றன விஷயங்கள குறிக்கிறது. ஆனா hearக்கு நீங்க எந்த முயற்சியும் போட வேணாம். அதாவது கேள்விபடுற விஷயங்கள்.
Listen பண்ண உங்களோட முயற்சி/ விருப்பம் முக்கியம். விருப்ப பட்டு கேட்குறது தான் listen
Hope this was useful
Communication trainer
ஐஸ் வைக்காதனு சொல்றதுக்கு don't butter me upனு சொல்லலாம்
Hope this was useful
Speak English fluently with varshini Ramyavarshini
Communication trainer
மருமகளுக்கு daughter in law, மருமகனுக்கு son in law னு தெரியும்.
பொண்ணோட அம்மா அப்பா, பையனோட அம்மா அப்பா மொத்தமா மென்ஷன் பண்ண parents in law னு சொல்லனும்.
அதுவே சம்பந்திய இங்லீஷ்ல co parent in law னு சொல்லனும்.
hope this was useful
Ramyavarshini
marriage? wedding?? வித்தியாசம் என்ன
Marriage னா திருமண பந்தம். ஒரு ஆணும் பெண்ணும் ஒரு திருமண உறவுல சட்டபடி/ சம்பிரதாயப்படி இருக்குறது.
weddingனா திருமண சடங்கு. அதாவது marriage ceremony. தாலி கட்டியோ மோதிரம் போட்டோ திருமணமாக நடத்த படுற ஃபங்ஷன் தான் wedding.
i went to attend a marriageனு சொல்றதோ, i have a marriage functionனோ சொல்ல கூடாது.. அது wedding ceremony.
hope this was useful
Ramyavarshini
communication trainer
The இத தி/தீ னு உச்சரிப்பீங்களா? "த" னு உச்சரிப்பீங்களா?
அடுத்த வார்த்தை vowel soundல வந்தா, அதாவது a,e,i,o,u soundல வந்தா தீ னு உச்சரிக்கனும். தீ எர்த் (The earth), தீ ஆரஞ்ச் the orange.
இதுவே அடுத்த எழுத்து consonants soundல இருந்தா த னு சொல்லனும். த புக் (The book) The table த டேபிள்
hope this was useful
communication trainer
Ramyavarshini
நாளைக்கு ஞாயிறு. நான்வெஜ், மீன், மட்டன்னு ப்ளான் போட்டுட்டீங்களா?
மீன் கடை, இறைச்சி கடைய என்னனு சொல்லுவீங்க???
fish market, meat shop னு நினைச்சிருந்தா தப்பு.
fishmongers - மீன் விற்கும் கடை
fishmonger - மீன் வெட்டுபவர்
butchers - கசாப்புக்கடை
butcher - இறைச்சி வெட்டுபவர்
Hope this was useful
communication trainer
Ramyavarshini
older or elder?
**old - older - oldest (பொருட்கள்/மனிதர்களை பழமையானனு குறிப்பிட உபயோக படுத்துறது)
**old - elder - eldest (மனிதர்களை மூத்தவர்களை குறிப்பிட மட்டும் உபயோகப்படுத்துற வார்த்தை)
**older பொருட்களை சொல்ல கூட யூஸ் பண்ணலாம்
**ஆனா elderஅ அப்டி பொருட்களோட யூஸ் பண்ண கூடாது.
elder கூட to தான் கண்டிப்பா போடனும். she is elder to me - ✔✔
elder than தவறு she is elder than me - ✖✖
**older than னு சொல்லலாம், அதே போல பொருட்களோட பழமை தன்மைய சொல்ல older, oldest னு குறிப்பிடலாம்.
It is older than that
hope this was useful
communication trainer
Ramyavarshini
நம்ம ஃப்ரெண்ட்ஸ் கூடவோ வேலை பண்றவங்க கூடவோ க்ரூப்பா படத்துக்கோ சாப்பிடவோ போயிட்டுஅவங்கவங்க பில்ல அவங்கவங்க பே பண்றத
let's go Dutch னு சொல்லலாம்
hope this was useful
communication trainer
Ramyavarshini
STAYCATION னா vacationக்கு வெளிய போகாம வீட்டுலயே வெக்கேஷன கொண்டாடுறது. (vacation-விடுமுறை)
WORKATION னா விடுமுறைல வேலை பண்ணிட்டே சம்பாரிக்கிறது. ((work from home கிடையாது)) யூரோப் பிடிச்சா அங்க வேலை பண்ணிட்டே விடுமுறைய கழிக்கிறாப்ல எதாவது வேலை பாக்குறது workation.
Hope this was useful.
Ramyavarshini
communication trainer
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Website
Address
Chennai
600003
54/6 Bakath Singh Street, Ambal Nagar, Karayanchavadi
Chennai, 600056
Karthik IELTS training academy is dedicated to train aspirants who want to do higher studies abroad
23/C, Kamaraj Salai, KK Nagar
Chennai, 600078
Dwaraka Gurukul offers training from the basic to the advanced level in the French language. We also train students for competitive exams.
Ambattur
Chennai
Unlock your English potential! English excellence starts at Kalpa English Academy. Join now.
Madipakkam Chennai 91
Chennai, 600091
A2 Certified with 3+ years French Teaching Experience... A1 & A2 Certification Courses offered.
Chennai
Avvai is a social initiative by Talaash Research Consultants, exclusively to impart high quality Tam
4/51 Kanadasan Nagar
Chennai, 600118
🌍16+ Years of Experience in Coaching .Learn English and communication with us. Ace your Career
13, Mount Poonamalli High Road
Chennai, 600089
AdrstaEdu is where people get guidance to achieve their goals by preparing them for international ex
Y-132 , Y Block Main Street , Anna Nagar
Chennai, 600040
Nerd factory focuses on blending knowledge with skills and make a professional out of an individual.
No. 148, 2nd Floor, Drive Muthulakshmi Salai, LB Road Adyar
Chennai, 600020
Aksentuate Academy - A best professional training and overseas placement institution
Kerala Samajam, Avadi
Chennai, 600054
എവിടെയെല്ലാം മലയാളി അവിടെയെല്ലാം മലയാളം
No. 4, 7th Street, Tansi Nagar, Velachery
Chennai, 600042
NIHON EDUTECH PRIVATE LIMITED focuses on tech-enabled talent solutions to train in Japanese language
Kodambakkam
Chennai, 600024
Spoken Hindi & Spoken Tamil