Vaigarai Velicham Official
வைகறை விடியலில் உண்மையை காணுவோம்!..
பெருநாள் வாழ்த்துக்கள்
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்
நீதி அமைதிக்கான மக்கள் இயக்கம்
வைகறை வெளிச்சம் வாசகர் வட்டம்.
அக்டோபர் 7 2023 ல் அல் அக்சா புயல் என்ற பெயரில் ஒரு போரை இஸ்லாமிய போராளிகள் தொடங்கினர்.
இந்த போரின் விளைவாக அல் அக்ஸா பள்ளிவாசலில் உள்புக முடியாத நிலைகள் வந்தது.
ஆனால் கடைசியில் 22/3/2024 வெள்ளிக்கிழமை அன்று ஒரு லட்சம் பேர் ஜும்மா தொழுதார்கள் போராளிகளின் அழைப்பை ஏற்று.
அடுத்து 29/3/2024 ஜும்மாவில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேரும் தராவிஹ்ல ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரும் கலந்து கொண்டார்கள் தற்போது 40 ஆயிரம் பேர் அங்கே இஃதிகாப் இருக்கிறார்கள்.
மொத்தத்தில் இந்தப் போரின் பயனாக அல் அக்சாவை முஸ்லிம்கள் தங்களதாக்கிக் கொண்டார்கள்.
ஆனாலும் யூதர்கள் அதை விடுவதாக இல்லை அனைவரும் ஒன்றிணைந்து அக்சாவை மீட்போம்.
தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் நீதி மற்றும் அமைதிக்கான மக்கள் இயக்கம் வைகறை வெளிச்சம் வாசகர் வட்டம் சார்பாக வருடந்தோறும் ரமலானின் கடைசி ஜும்மாவில் துண்டறிக்கைகள் வெளியிட்டு முஸ்லிம் சமுதாயத்தினரை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம் .
இவன் :
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேசன் டிரஸ்ட், நீதி மற்றும் அமைதிக்கான மக்கள் இயக்கம்,
வைகறை வெளிச்சம் வாசகர் வட்டம்.
நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றோம்!!!
உடல்நலமுடன் வீடு திரும்ப துஆ செய்வோம்
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சகோதரர் திருச்சி வசீம் அவர்கள் உடல்நல குறைவால் பெரம்பலூர் மருத்துவமனையில் உள்ளார். இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்து அவர் நலமுடன் வீடுதிரும்ப இறைவனிடத்தில் அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்.
ரமழானே வருக!
பெருமானார் (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்திற்கு முந்தைய ஷாபான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் ரமழானை வரவேற்று ஆற்றிய உரை!
மக்களே!
உங்களுக்கு எதிரே அருளை அள்ளி வழங்கிடும் ஒருமாதம் வருகின்றது. அது அருளின் மாதம், கருணையின் மாதம், பாவமன்னிப்பை வழங்கிடும் மாதம். எல்லா மாதங்களின்றும் (அல்லாஹ்விடம்) சிறந்த மாதம். அதன் நாட்கள் ஏனைய எல்லா நாட்களையும் விட சிறந்த நாட்கள். அதன் இரவுகள் இரவுகளிலெல்லாம் சிறந்த இரவுகள். அதன் மணித்துளிகள், மணித் துளிகளிளெல்லாம் சிறந்த மணித்துளிகள்.
அது அல்லாஹ்வின் விருந்தினராக ஆகிட உங்களை அழைக்கும் மாதம். அது அல்லாஹ்வுடன் நெருங்கி இருப்பவர்களோடு நீங்களும் இருக்க உங்களை அழைக்கும் மாதம். நீங்கள் விடும் ஒவ்வொரு மூச்சும் அல்லாஹ்வின் புகழைப்பாடுகின்றது. உங்களுடைய தூக்கம் ஒரு வணக்கம். உங்களுடைய செயல்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
உங்களுடைய வேண்டுதல்களுக்கு துஆக் களுக்குப் பதில் அளிக்கப்படுகின்றது. ஆகவே உங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியமான உடலைத் தந்திடும்படி கேளுங்கள். உங்கள் இதயத்தை விசாலாமாக்கித் தரும்படி கேளுங்கள். இதன் வழி நீங்கள் நோன்பு நோற்கும் தினத்தில் ஆரோக்கியத்தையும் அவனுடைய அருள் மறையை ஒதும் ஆரோக்கியத்தையும் கேளுங்கள் பெறுங்கள். இந்த மாண்புமிகு மாதத்தில் பாவ மன்னிப்பைப் பெற முடியாதவர்களே. சோகத் திற்குக் சொந்தக்காரர்கள். அந்த நியாயத் தீர்ப்பு நாளின் பசியையும், தாகத்தையும். நோன்பு காலத்தின் பசியோடும், தாகத்தோடும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஏழைகளுக்கு வாரி வழங்குங்கள், முதியவர்களை கண்ணியப்படுத்துங்கள். இளையவர்களிடம் இரக்கம் காட்டுங்கள். உங்களுடைய இரத்தப் பந்தங்களிடம் நல்ல உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நாவைப் பேணுங்கள், பார்த்திட அனுமதிக்காதவற்றிலிருந்து உங்கள் பார்வையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
கேட்கக் கூடாது என விலக்கப்பட்டவற்றிலிருந்து காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதாதைகள் மீது அன்பு காட்டுங்கள். அதனால் உங்களின் மீது அல்லாஹ்வின் அன்பு காட்டப்படும்.
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கேளுங்கள். துஆவிற்காக அல்லாஹ்விடம் உங்கள் கைகளை இந்த நேரங்களில் உயர்த்துங்கள். ஏனெனில் அந்த நேரம் நேரங்களிலெல்லாம் சிறந்தது. அல்லாஹ் தன் படைப்பினங்களை இந்த மாதத்தில் கருணையோடு பார்க்கின்றான். அவர்கள் கேட்பவற்றிற்குப் பதில் சொல்லுகின் றான். அவர்கள் அவனிடம் கேட்பவற்றை யெல்லாம் கொடுக்கின்றான்.
மக்களே! உங்கள் ஆத்மாக்கள் உங்கள் செயல்களைச் சார்ந்தே இருக்கின்றன. ஆத்மாக்களை பாவமன்னிப்புக் கொண்டு விடுதலை செய்யுங்கள். அவற்றின் அழுத்தங்களை. பாரங்களை நீண்ட நேரம் "சஜ்தா" செய்வதன் மூலம் எளிதாக்குங்கள். இதை உங்கள் நினைவில் நிறுத்துங்கள். அல்லாஹ் தன் ஆளுமையைக் கொண்டு உறுதியளிக்கின்றான்.
"தொழுபவர், நீண்டநேரம் சஜ்தா செய்பவர் இவர்களுக்கு இந்த பிரபஞ்சத்தின் அதிபதியின் முன் அவர்கள் நின்றிடும்போது எந்தத் தண்டனையுமில்லை. எத்த பயமுமில்லை.
மக்களே! இந்த மாதத்தில் நோன்பு நோற்கும் ஒரு மனிதனுக்கு. நோன்பு துறக்க விருந்து தரும் ஒருவர், ஒருவரை விடுதலை செய்தவராவார். அவருடைய கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிலர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள்.
எங்களில் எல்லோருக்கும் நோன்பாளிகளை அழைத்து விருந்து வைக்கும் அளவுக்கு வசதி இல்லையே?
இதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள்
"நீங்கள் நோன்பு துறக்க வைக்கும் விருந்து ஒரு மிடறு தண்ணீராக இருந்தாலும் அல்லாஹ் இந்தப் பெருங்கூலியைத் தருகின்றான்."
இந்த மாதத்தில் சிறந்த ஒழுக்கங்களை பேணும் ஒருவர் "சிராத்' பாலத்தை எளிதாகக் கடந்து விடுவார். அடுத்தவர்களின் குறைகளுக்கு ஈடு செய்பவர் பலன் பல அடைவார்.
அல்லாஹ் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்மீது கொள்ளும் கோபத்தையும் குறைத்துக் கொள்வான்.
ஓர் அநாதையைக் கண்ணியப்படுத்துபவரை அல்லாஹ் நியாயத் தீர்ப்பு நாளில், கண்ணியப் படுத்துவான். தனது இரக்கத்தை விசாலப்படுத்துபவர் மீது நியாயத் தீர்ப்பு நாளில் அல்லாஹ் தன் இரக்கத்தை விசாலப்படுத்துவான்.
"தன் உறவினர்களின் உறவைத் துண்டிப்பவரிடமிருந்து அல்லாஹ் தன் இரக்கத்தை துண்டித்து விடுவான். இந்த மாதத்தில் (ரமழான் மாதத்தில்) சிறப்பான தொழுகையை தொழு பவருக்கு அல்லாஹ் நரகத்தை தூரமாக்குவான். இந்த மாதத்தில் கூடுதலான நஃபிலான, பரிந் துரைக்கப்பட்ட ஒரு தொழுகையை நிறைவேற்றுபவருக்கு அல்லாஹ் 70 நஃபீலான பரிந்துரைக்கப்பட்ட தொழுகைகளின் நன்மையைக் கொடுப்பான்.
இந்த மாதத்தில் கடமையாக்கப்பட்ட தொழுகையை நிறைவேற்றுபவனுக்கு அல்லாஹ் 70 தொழுகைகளின் நன்மையைக் கொடுப்பான். இந்த மாதத்தில், அதிகமான தொழுகைகளை தொழுபவரின் சுமை நியாயத் தீர்ப்பு நாளில் எளிதாக்கப்படும்.
இந்த மாதத்தில் திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை ஓதுபவருக்கு இதர மாதங்களில் மொத்த திருக்குர் ஆனையும் ஓதிய நன்மை கிடைக்கும்.
மக்களே! இந்த மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறந்திருக்கும். ஆகவே அல்லாஹ்விடம் உங்களுக்கு அதை ஒருபோதும் உங்களுக்கு மூடிவிட வேண்டாம் என துஆச் செய்யுங்கள்.
இந்த மாதத்தில் நரகத்தின் வாசல்கள் மூடியே இருக்கும். உங்கள் விஷயத்தில் அது எப்போதும் மூடி யே இருக்கட்டும் என துஆச் செய்யுங்கள்.
இந்த மாதத்தில் ஷைத்தானை கட்டிப் போட்டிருப்பான் அல்லாஹ். அந்த ஷைத்தான் ஒருபோதும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்திட அனுமதிக்க வேண்டாம் எனத் துஆச் செய்யுங்கள்.
ஆதாரம் - பைஹக்கி.
- தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்
மேட்டுப்பாளையத்தில் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கு நிகழ்வாக மால்கம் X (எ) மாலிக் அல்ஷாபாஸ் கருத்தரங்கம்
25/02/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 : 30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது.
முதல் நிகழ்வாக சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்று கொண்டு இன இழிவை ஒழித்த தோழர் சிகா மார்க்ஸ் (எ) உமர் முக்தார் அவர்கள் "தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நிகழ்வுகளையும் , தாழ்த்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாம் மட்டுமே தீர்வு என்று ஆணித்தரமாகவும் நேர்த்தியாகவும் பேசி முடித்தார்".
இரண்டாவது நிகழ்வாக இமாம் முஹம்மத் இல்யாஸ் பாகவி (காட்டூர் சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் தலைமை இமாம்) அவர்கள் "இஸ்லாத்தின் ஓரிறைக் கோட்பாட்டையும், ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிமுகம் செய்து வைத்தார்".
மூன்றாம் நிகழ்வாக தோழர் தொல் குடிமைந்தன் (கோவை வடக்கு மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி) அவர்கள் "மால்கம் X அவர்களின் அமெரிக்க நிறவெறிக் கொள்கைக்கு எதிராக போராடிய வரலாற்றையும், தானும் தான் சார்ந்து இருக்கின்ற கட்சியும் தன்னுடைய தலைவரும் எந்த அளவிற்கு இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய மக்களுக்கும் நெருக்கமாக இருக்கின்றோம் என்று விரிவாக எடுத்துரைத்தார்."
இறுதியாக சகோதரர் முஹம்மத் ரஃபின் (நீதி அமைதிக்கான மக்கள் இயக்கம் மதுரை) அவர்கள் "மால்கம் X அவர்களின் முழு வரலாற்றையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் என்னென்ன தாக்கங்களை உண்டாக்கும் என்றும் பேசி முடித்தார். பார்வையாளர்கள் கேட்ட இஸ்லாத்தைப் பற்றியான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
(குறிப்பு : வந்திருந்த அனைத்து விருந்தினர்களுக்கும் பங்கேற்பாளர்ளுக்கும் விருந்து உபசரிப்போடு நிகழ்வு முடிந்தது)
இவன் :
நீதி அமைதிக்கான மக்கள் இயக்கம்,
வைகறை வெளிச்சம் வாசகர் வட்டம்,
தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட்.
மேட்டுப்பாளையம்.
ஒரே நொடியில் தீண்டாமை ஒழிந்து விடும் என்னும் நூல் வெளியீட்டு விழா
நாகர்கோவில் வடசேரி எஸ்.ஜி.எஸ் ஹாலில் வைத்து 25-02-2024 ஞாயிறு அன்று ஒரே நொடியில் தீண்டாமை ஒழிந்து விடும் என்னும் நூல் வெளியீட்டு விழா மிக சிறப்பாக நடைப் பெற்றது அல்ஹம்துலில்லாஹ்
இதில் நூல் ஆசிரியர் வழக்கறிஞர் சின்னசாமி அவர்களும், குமரி மாவட்ட தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் தலைவர் ஜின்னா, செயலாளர் அப்துல் பாஸித், திருப்பூர் மாவட்ட தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் செயலாளர் காதர் மைதீன், ஆதி தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மார்த்தையன் அவர்களும் மற்றும் ஆதி திராவிட சேவா கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரசாத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்
இதில் பிரசாத் அவர்கள் நூலை வெளியிட்டார் சுமார் 85 பேர் கலந்துக் கொண்டு தீண்டாமை விடுதலை தீர்வை அறிந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர். கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது
நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது இதில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் இறைவன் ஹிதாயத் வழங்கிடுவானாக
நன்றி ஒளி திரை பதிவு - ஆசிஃப்கனி
இவண்:
அன்பகம் தாஃவா குழு
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸட்
வைகறை வெளிச்சம்
( YouTube )
வஃபாத் அறிவிப்பு
கும்பகோணம், நோபிள் மெரைன் மற்றும் ஹலீமா அறக்கட்டளையின் நிறுவனர் M.ஷாகுல் ஹமீது,
மர்ஹீம் M.லியாக்கத் அலி,
M.பஷீர் முஹம்மது ஆகியோர்களின் சகோதரர் M.அஷ்ரப் அலி அவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்று வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா கும்பகோணம், ஸ்ரீநகர் காலணயில் அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இன்று காலை 11:30 மணியளவில் பழைய மீன் மார்க்கெட், காஜியார் பள்ளியில் நல்லடக்கம் செய்ய இருக்கின்றார்கள்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கிட அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
- அன்பகம் தாஃவா மதரஸா - கும்பகோணம்,
- தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்
மேட்டுப்பாளையத்தில் மால்கம் X (எ) மாலிக் அல் ஷாபாஸ் கருத்தங்கம் ...
ஒரே நொடியில் தீண்டாமை ஒழிந்து விடும் புத்தகம் வெளியீட்டு விழா....
இடம் : நாகர்கோவில் வடச்சேரி.
நேரம் : காலை 10 : 15 மணி
நாள் : 25/02/2024 ஞாயிற்றுக்கிழமை.
ஃபிப்ரவரி மால்கம் X மாதம்
இனவெறி, நிறவெறியால் பாதிக்கப்படும் மக்களுக்கு "இஸ்லாமே தீர்வு" என கூறி அமெரிக்க நிறவெறிக் கொள்கைக்கு எதிராக போராடிய மாவீரன் மால்கம் X அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்திட அழையுங்கள் ...
சகோதர சமுதாயத்தவர்களுக்கு 50% தள்ளுபடி விலையில் ...
மால்கம் X
(வேர்கள் வெளியீட்டகம், மண்ணடி, சென்னை)
விலை: ரூ.120
தொடர்புக்கு: 7401213394, 8148129887, 8870960662
இஸ்லாம்தான் தீர்வு - தந்தை பெரியார்
தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்நாளில் 300முறை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்துள்ளார்கள். அன்று சீலையம்பட்டியில் பல கிராமத்தைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின், அவர்களை, தன்சொந்த செலவில் சென்று பாராட்டினார்.
18-03-1947இல் தந்தை பெரியார் அவர்கள், திருச்சி பொன்மலையில் ஆற்றிய உரை வரலாற்றுச்சிறப்புமிக்கது. அந்த உரையைத்தான் பின்னர் திராவிடர் கழகம் இன இழிவு ஒழிய இஸ்லாம் ஒன்றே நன்மருந்து என்றத் தலைப்பில் வெளியிட்டது. இந்த நூலை நாம் வைகறை வெளிச்சம் இதழில் வெளியிட்டோம்.
பெரியாரின் கருத்துப்படி திராவிடர்களின் ஆதிமார்க்கம் "இஸ்லாம்தான்" இதனை இன்னும்பல வரலாற்று ஆய்வுகள் உண்மைப்படுத்துகின்றன. வைக்கப் போராட்டம் என்ற வரலாற்றுப் புகழ்பெற்றப் போராட்டத்தின்போது பெரியார் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளப் பரிந்துரைத்தார்கள். அதில் 52பேர் இஸ்லாத்தை ஏற்றார்கள். இன்னும் பல்வேறு மாநாடுகளின்போதும் 3000, 7000 பேர் என இஸ்லாத்தைத் தழுவினார்கள். -ஆதாரம் இன இழிவு ஒழிய இஸ்லாம் ஒன்றே நன்மருத்து, வெளியீடு திராவிடர் கழகம்.
பெரியாரின் மிக முக்கியமான முடிவு :
ஆகஸ்ட் 15,1947இல் ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் பெற்ற விடுதலை விடுதலை அல்ல. தீண்டாமை கொடுமைகளிலிருந்தும் நாம் பெறும் விடுதலையே உண்மையான விடுதலை. அந்த விடுதலையை இஸ்லாம் மட்டுமே பெற்றுத் தந்திட இயலும். அதனால் இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்தான் முடியும் என்றார்.
- நீதி அமைதிக்கான மக்கள் இயக்கம் & வைகறை வெளிச்சம் மாத இதழ்
மால்கம் X மாதத்தை முன்னிட்டு....
நமது மேட்டுப்பாளையத்தில் கருத்தரங்க நிகழ்ச்சி.....
அனைவரும் இந்நிகழ்வு முழுவதும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
நாகை மாவட்டத்தில் தாஃவா
நாகை மாவட்டம் அந்தப்பேட்டை கிராமத்தில் நேற்று 17/02/24 வீடு வீடாக சந்தித்து இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்
இவண்:
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் -
நாகை, திருவாரூர் வட்டம்.
"ஃபாலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு" புத்தகம் வேர்கள் பதிப்பகத்தில் மீண்டும் வெளிவந்துள்ளது ஆர்டர் செய்ய : 7401213394, 8148129887, 8870960662
தஞ்சாவூரில் தாஃவா
07.02.2024 அன்று தஞ்சாவூர் மாவட்டம், தெற்கு மானோஜிபட்டி, நீலகிரி ஊராட்சி, அம்பேத்கர் நகரில் வழக்கறிஞர் பெ.சின்னசாமி அவர்களின் தலைமையில் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்பு (தாஃவா) செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சிந்திப்பீர் செயல்படுவீர், ஒரே நொடியில் தீண்டாமை ஒழிந்துவிடும், சிக்கல் நாயக்கன் பேட்டையிலிருந்து புனித மக்கா மாநகரம் வரை இலக்கியங்கள், வாருங்கள் விடுதலைக்கான வழியை காணுங்கள் என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
அன்பகம் தாஃவா குழு - தஞ்சாவூர் மாவட்டம்
பிப்ரவரி வந்து விட்டாலே ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரலாக பணியாற்றி பல லட்சம் மக்களை 20 ம் நூற்றாண்டில் மீட்ட மால்கம் x பெயர் உலகெங்கும் ஒலிக்க ஆரம்பித்து விடும்.
வெள்ளை கிறிஸ்தவர்கள் இனரீதியாக ஒதுக்கி விலங்குகளை விட கேவலமாக நடத்தி அவர்களை சொல்லொனா துயரத்தில் ஆழ்த்திய போது அதற்கு விடை தேட இஸ்லாத்தை கண்டெடுத்து இன இழிவை தானும் போக்கி பல லட்சம் மக்களை மீட்டார்.
அவரால் மீட்க பட்ட பிரபல குத்து சண்டை வீரர் முஹம்மது அலி ஏறத்தாழ 20 லட்சம் மக்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டு இஸ்லாமாக்கினர்.
அவர்களது அந்த உழைப்பு அப்படியே தேவைப்படும் பகுதியாக இந்தியா உள்ளது. காரணம் இங்குள்ள ஜாதியால் ஒடுக்க படும்முறை.
இஸ்லாம் ஒன்றே சமத்துவம் வாழ்வில் காட்டும் வழியாக உள்ளது. இதை ஓடுக்குவோறும் ஒடுக்க படுவோறும் மால்கம் x அவர்களை நினைவு கூறும் மாதத்தில் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
சாதி மொழி இன நிற வேற்றுமைகளை வைத்து மனிதனை ஓடுக்கும் அவலத்தில் இருந்து விடுதலை பெற்ற இஸ்லாமியர்கள் தான் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற உழைப்பது கடமையாகும்.
மால்கம் x வரலாறு புத்தகம் வேர்கள் பதிப்பகத்தில் கிடைக்கும்
பில்கீஸ் பானு வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி___ நீதி நிலைக்குமா?
திருப்பூர் புத்தகத் திருவிழா - ஃபிப்ரவரி,2024
இன்று 3.2.2024 சனிக்கிழமை 20வது திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இதில் தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்டின் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் துண்டு பிரசுரத்தை வழங்கினோம்.
ஒரு சில நாட்களுக்கு முன்னால் நான் எனது நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தேன்......
முதல் நாள் இரவு முழுவதும் கார் ஓட்டுனதுநாள ஓய்வுங்கிறதே எனக்கு இல்ல அப்போதான் ஊட்டி போர வழியில குன்னூர்ல ஒரு (பள்ளிவாசல) இருந்தது அத பார்த்துட்டு கொஞ்ச நேரம் இங்க தங்கிட்டு போகலாம் னு நண்பர்கள் எல்லாரும் முடிவு பன்னோம்...
எனக்கு பயம் எதுவும் இல்ல இருந்தாலும் ஒரு தயக்கத்தோடதான் போனேன்..... அங்க உள்ள போனதும் ஆலிம்சா (ஓதுவர்) எங்கள (என்ன) ஒரு சிரிப்போடதான் வரவேற்றார்.. அங்க போகவும் எங்களுக்கு தேவையான தங்குவதற்கு இடம் வசதி ஒரு பல் துலக்க (பேஸ்ட்) முதற்கொண்டு ரெடி பன்னி தந்தாறு அந்த அளவுக்கு ஒரு பாசத்த காட்டுனாரு.....
(அந்த பள்ளிக்கு நான் போகவும் நீ ஒரு இந்து நீ ஏன் இங்க வரனு யாரும் என்ன எதுவும் கேக்கல)....
போகும் போது கூட அடுத்த முறை வந்த...இங்க வந்துட்டு போங்கபான்ற அந்த ஒரு பாசம் பந்தத்த நினைக்கும் பொழுது ஒன்னு தோணுச்சு எத்தன சங்கிங்க இராமன் வேசம் போட்டு வந்தாலும்......
#குறிப்பு
(தமிழ்நாட்டுல) நீ என்னதான் கோவிலுக்குள்ள மற்ற மதத்தினர் வரக்கூடாதுனு சட்டத்தாள எங்கள பிரித்தாளும் நாங்க எப்போதும் ஒற்றுமையாதான்டா இருப்போம் சங்கிகளா.....
- ஆனந்தூர் புகழேந்தி
வீடியோக்கான லிங்க் முதல் கமண்டில்......!
வீடியோக்கான லிங்க் முதல் கமண்டில்.......!
அயோத்யா அனைவருக்கும் சொந்தம்!
அயோத்யா நகரத்தை கட்டமைத்த முஸ்லிம்கள்!
அயோத்யா அனைவருக்கும் சொந்தம்!
அயோத்யா நகரத்தை கட்டமைத்த முஸ்லிம்கள்!
வீடியோக்கான லிங்க்
https://youtu.be/5K0I2hofDCY
கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து!
ஆசிரியர் மு.குலாம் முஹம்மது பேட்டி
ACT Fibernet - இன் வாடிக்கையாளர் சேவை மிகவும் மோசமாக இருக்கும். அதனால் அந்த கம்பனி இண்டர்நெட் நெட்வொர்க் எடுக்காதீங்கனு பல பேர் சொல்லி கேட்ருக்கேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் எனக்கே சொந்த அனுபவம் இருக்கின்றது.
ஆனால் வேறு வழியின்றி கடந்த ஏழு மாதங்களாக இந்த கம்பனியின் நெட்வொர்கை தான் பயன்படுத்தி வருகின்றோம்.
வழக்கமாக மாதக்கடைசியில் ஏதேனும் கோளாறு வந்து அதை சரி செய்வதற்கு இரண்டு நாட்கள் நம்மை பாடாய் படுத்தி விடுவார்கள்.
இந்த முறை சென்னை மழையின் பெருவெள்ளத்தில் இந்த சேவையும் பாதிக்கப்பட்டது. இது போன்ற இயற்கை பேரிடர்களின் போது இப்படி நடப்பது இயல்புதான். ஆனால் அதை சரி செய்ய ஆறு நாட்கள் ஆகிறது என்பது இந்த நிறுவனத்தின் மோசமான கையாலாகத்தனத்தை தான் வெளிப்படுத்துகிறது.
இதற்கு நடுவில் மோசமான வாடிக்கையாளர் சேவை வேறு நம்மை பாடாய் படுத்துகிறது.
Customer care க்கு Call செய்தால், பத்து நிமிட காத்திருப்புக்கு பின் கால் கட்டாகிவிடுகிறது.
ஏரியா இஞ்சினியர், மேனேஜர் என எவனும் போன் எடுக்க மாட்டான். எப்போ கால் பன்னாலும் பிஸினுதான் வரும்.
மெஸ்ஸேஜ் பண்ணி கேட்டா, "இரவு 9 மணிக்குள் வந்துவிடும்" என்று வாக்களிப்பார்கள். ஆனால் ஒருத்தனும் வந்து எட்டி பார்க்கமாட்டான்!
இப்படியான ஒரு சிரமத்திற்குள் சிக்கியிருப்பதால்.........
அடுத்த நெட்வொர்க் மாறி, இண்டர்நெட் வந்தவுடன் தொடர்ந்து பதிவுகளை போடுகின்றோம். அதுவரை வாசயர்கள் எங்களோடு இணைந்திருங்கள்!
- அட்மின் வைகறை வெளிச்சம்
Act Fibernet
அக்டோபர் 7 தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள் எங்கே?
முன்னால் மலேசிய பிரதமர் எழுப்பிய கேள்விகள்!
_________________________________________________
எமது இதர வீடியோக்களையும் காணலாமே....!
01. முஸ்லிம்களின் வீழ்ச்சியும்! எழுச்சியும்!
https://youtube.com/playlist?list=PLMgGCu467ZObVqEwdZTn7C27N6xCImNM8&si=luQsmcnT_voaB2ii
02. பத்திரிகை துறை வகுப்பு - மு.குலாம் முஹம்மது
https://youtube.com/playlist?list=PLMgGCu467ZOYbF5e7VB20fg0Q2RxW2EiD&si=U1-69ql1mS2DtYI8
03. சிலுவைப்போர் 2.0 - மேலைநாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக தொடுத்த மறு உயிர் பெற்ற போர்!
https://youtube.com/playlist?list=PLMgGCu467ZOYbF5e7VB20fg0Q2RxW2EiD&si=U1-69ql1mS2DtYI8
04. தேசப்பிரிவினைக்கு யார் காரணம்?
https://youtube.com/playlist?list=PLMgGCu467ZOY7kzGLMloyeAsZpU3m0I5P&si=X8dOPmrD9PNMt60z
________________________________________________
#பாலஸ்தீன் #ஹமாஸ் #காசா #ஜெருசலம் #உலகப்போர் #ஹவ்தி #ஏவுகணை #குலாம் #முஹம்மது #ஈரான் #போர் #ஐநா #நாடுகள் ஐக்கிய #நாடுகள் #வைகறை #வெளிச்சம் #ஹசன் #நஸ்ரல்லாஹ் #லெபனான் #ஹிஸ்புல்லாஹ் #அரபு #நாடுகள் #எகிப்து
கிருஸ்தவத்தில் ஜாதி இருக்கு¡
இஸ்லாம் மட்டுமே தீர்வு!
வீடியோக்கான லிங்க்
https://youtu.be/7aQfbfCKXsc
------------------------------------
வைகறை விஷன் எனும் நமது புதிய சேனல்! வழக்கம் போல் சப்ஸ்கிரைப் செய்து தங்களது ஆதரவுகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சேனல் லிங்க்
https://youtube.com/?si=IQQveHdRpNb8-KxI
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Mannady Street
Chennai
600001
Patric Church Street
Chennai, 600016
Christian Communication Centre is committed to assist with men and misson to fulfill His will in this
859 & 860 Anna Salai
Chennai, 600002
Business Line is the leading resource on Indian business. http://www.thehindubusinessline.com
7th Floor, Sigma Wing, Raheja Towers #177, Anna Salai
Chennai, 600002
#Galatta is the most authentic source for news related to movies, events, celebrities and TV content
15, Karpagam Garden 1st Main Road, Adyar
Chennai, 600020
Official page of YOCee, news website for children. Student reporters contribute news stories. Visit - https://yocee.in
Chennai, 600052
Red Hills, is a neighbourhood in the northwestern part of Chennai, Tamil Nadu, India. The name was derived from the red hills that was mostly present in this area in early stage....
Chennai, 600024
Boomerang is a international media organisation was founded in 2021. We provide authent ic news from around world and srilanka in tamil and English languages.
Chennai
#JOBOFFERNEWSCHANNELTAMIL for daily updates of Private jobs from TamilNadu & Puducherry. Subscribe : https://youtube.com/channel/UCOBy77e8rHWdZDPAeAocnAA