Agnich Siragukal
Agnich siragukal our main motive women's education, sports and empowerment do service and plan on it
பெண்கள் மாதவிடாய் சமயத்தில் உடல் ரீதியாக வலியால் சோர்வடைகிறார்கள் அதனால் அவர்களுக்கு ஒய்வு அவசியம் இதனை அக்னிச்சிறகுகள் ஏற்க்கிறது ஆனால் அந்த ஒய்வின் போது அவர்கள் கோவில் செல்லாகூடாது மற்றும் மாலையிட்ட பக்தர்களை தொடுவதை தீட்டு என்று கூறி தள்ளி வைப்பதை ஏற்க்க முடியவில்லை... உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் #அக்னிச்சிறகுகள் #மாறுவோம்மாற்றம்செய்வோம்
அக்னிச்சிறகுகளின் Lets Talk About Periods விழிப்புணர்வு போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வைக்கப்படுகிறது,மாதவிடாய் பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதே இதன் நோக்கம்,இந்த நிகழ்வை கூடலூர் அக்னிச்சிறகுகள் தலைமையேற்று நடத்துவர்கள்.
Contest conduct:
Socila media partner :
அனைவருக்கும் வணக்கம், அக்னிச்சிறகுகளின் Lets talk About Periods விழிப்புணர்வு நிகழ்வில் எங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்பும் சமுகநீதி செயல்பாட்டாளர்கள், சமுகதின் மீது ஆர்வம் கெண்ட அன்பு தோழர்கள், தோழிகள் அக்னிச்சிறகுகளை தொடர்பு கொள்ளுங்கள், தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் Lets Talk about Periods விழிப்புணர்வு நிகழ்வை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்போம். தீண்டாமை எந்த விதத்திலும் வந்தாலும் ஒன்றினைந்து எதிர்ப்போம், மாதவிடாய் ஒன்றும் தீட்டல்ல என்று உறைக்க சொல்வோம். #மாறுவோம்மாற்றம்செய்வோம் #அக்னிச்சிறகுகள்
சமுக வலைதளதில் ஒரு பெண்ணை Deep AI மூலம் ஆபசமாக பதிவு செய்தாள் அதற்க்கு கடுமையான தண்டனை அவசியம், இதற்க்குள் பாமர மக்கள் வருவர்களா இல்லை பணம் படைத்தவர்களுக்கு மட்டுமா.. இன்று நடிகை தன்னை ஆபசமாக தவறாக பதிவிட்டார்கள் என்று வருத்தப்படுவது அதற்க்கு புகர் அளித்த உடனே சட்டம கொண்டுவருவது எல்லாம் வரவேற்க்க பட வேண்டியது தான், ஆனால் அந்த நடிகையின் சமுகவளத்தளம் பக்கதில் அவர் பதிவிடும் பதிவுகளும் மிகவும் ஆபசா பதிவாகதான் உள்ளது அதற்க்கு தண்டனை உண்டா?? நடிகைகள் சற்று சமுக பொறு்புடன் நடந்து கொணடாள் பல பாலிய குற்றங்களை தடுக்களாம். #அக்னிச்சிறகுகள் #மாறுவோம்மாற்றம்செய்வோம் #பெண்மையைபோற்றுவோம்
அக்னிச்சிறகுகளின் மகிழ்வித்து மகிழ் தீபவளி கொண்டாடதில்... எங்களுடன் இனைந்து ஆதரவற்ற முதியவர்களுக்கு 22 புடைவைகள் வாங்கி கொடுத்த திருமதி.வள்ளி அறிவழகன், என் அம்மாக்கு✨❤️🫰 நன்றிகள் பல, பசங்களோட வாழ்க்கையில அவங்க விருப்பபடி வாழ அனுமதித்து எப்பையும் பக்க பலமா இருக்குற என் அம்மாக்கு இந்த தருணத்துல நன்றி சொல்லனும். #அக்னிச்சிறகுகள் #மாறுவோம்மாற்றம்செய்வோம்
குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர். அடிமை விலங்கை உடைத்தெறிவதற்கான போராட்டத்தில் வாய்ப்பூட்டு சட்டத்தை எதிர்கொண்டவர்.
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் ஐயா உ.முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளான இன்று அவரது பணிகளை நினைவுகூர்வோம்.
பிற்படுத்தப்பட்ட - ஏழை - எளிய - விளிம்பு நிலை மக்களின் ஏற்றத்துக்காக உழைத்த முத்துராமலிங்கனாரின் பணிகளை போற்றுவோதில் பெறுமை கொள்கிறு #அக்னிச்சிறகுகள்
கல்வி மட்டுமே நமது ஆயுதம்,
நமக்கான தேவையை, உரிமையை கேட்டு பெறுவதற்க்கு, படிக்காம வாழ்க்கையில முன்னேறுன ஒரு 10 பேர உதரணமா சொல்ல முடியும்னா,படிச்சி முன்னேறுன 1000 பேர உதரணமா கட்டலாம்,நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியத சொத்து கல்வி மட்டுமே. அதனலா படிச்சிக்கோ கூடவே பெரியாரையும், அம்பேத்கரையும்,சேர்த்து படி மனிதனை மனிதனாய் மட்டுமே பார்க்க. #அக்னிச்சிறகுகள்
கல்வி மட்டுமே நமது ஆயுதம்,
நமக்கான் தேவையை, உரிமையை கேட்டு பெறுவதற்க்கு, படிக்காம வாழ்க்கையில முன்னேறுனா 10 நபரதான் காட்ட முடியும் ,படிச்சி முன்னேறுன 1000 நபர கட்டலாம், அதனலா படிச்சிக்கோ கூடவே பெரியாரையும், அம்பேத்கரையும்,சேர்த்து படி மனிதனை மனிதனாய் மட்டுமே பார்க்க. #அக்னிச்சிறகுகள்
அக்னிச்சிறகுகளின் மகிழ்வித்து மகிழ் , இதன் நோக்கம் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற கூற்று போல நம்முடைய மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சி அடைவோம், நம்முடைய வாழ்வில்
எளிதாக கிடைக்கும் பல விஷயங்கள்,மற்றவர்களுக்கு கனவாக மட்டுமே உள்ளது, இந்த வருடதின் தீபாவளியை அக்னிச்சிறகுகளுடன் இனைந்து ஆதரவு இல்லா குழைந்தைகள், முதியவர்களுடன் கொண்டாட உங்களை அன்புடன் அழைகின்றோம், உங்களாள் முடிந்த உதவிகளை செய்யுங்கள், உணவு , பட்டாசு மற்றும் ஆடைகள் அல்லது நீங்க பயண்படுத்திய ஆடைகள்,கொடுத்து அவர்களின் சிரிப்பில் தீபஒளி திருநாளை கொண்டாடுவோம் அக்னிச்சிறகுகளுடன் இனைந்து #அக்னிச்சிறகுகள் #மாறுவோம்மாற்றம்செய்வோம்
வணக்கம் சிறகுகள், அக்னிச்சிறகுகளின் தலைமை பொறுப்பினை வரும் 1-11-2023 t முதல் 1-01-2024 வரை என் தம்பி Mr.Povarasan Rajlakshmi அவர்கள் செயல்படுவார், இக்கால கட்டத்தில் Lets talk About periods, மகிழ்வித்து மகிழ்,புத்தக வெளியிட்டு நிழ்ச்சி, இவரின் தலைமையில் நடைப்பெறும், அனைத்து சிறகுகளும் இவருக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
#அக்னிச்சிறகுகள் #பெண்மையைபோற்றுவோம்
அக்னிச்சிறகுகளின் Lets talk about periods விழிப்புணர்வு நிகழ்வில் நம்முடன் இனைந்துள்ள, தன் செய்கின்ற செயலை நன்கு அறிந்து எளிய மக்களின் குரலயாய் செயலாற்றி வரும் தோழர்.SINEGA BALAMURUGAN. அவர்களுக்கு அக்னிச்சிறகுகள் சார்பாக நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். #அக்னிச்சிறகுகள்
அமைதி நிழலாகி அகிலம் போற்றும்..
அணையாத சுடராகி கருணை கொடுக்கும்..
கவின் முகிலாகி உண்மை உரைக்கும்..
உயர்ந்த சிகரமாகி எண்ணிய வரத்தின்..
ஏற்ற வடிவமாகி உலகமே வாழ்த்தும்..
ஒப்பற்ற தலைவனாகி மணம் இல்லாத..
மகான் வடிவமாகி மக்கள் மனதில்..
மனித தெய்வமாகி வாழும் அறிவியல்..
துறை வித்தகராகி சிங்காரம் கொண்ட..
சிற்ப சிலையாகி நிற்கும் பிதாமகர்..
கலாம் ஐயா.... அவரின் பிறந்த நாள் அன்று அவரை வணங்கி வாழ்த்துக்கள் கூறுவதில் பெறுமை கொள்கிறது #அக்னிச்சிறகுகள்
அக்னிச்சிறகுகளின் Lets talk About Periods விழிப்புணர்வு நிகழ்ச்சி அடுத்து நம்ம கோயம்பத்தூர் SSN கல்லூரியில் நடைப்பெற உள்ளது... அனைவரும் ஒன்றினைவோம், மாறுவோம் மாற்றம் செய்வோம் #அக்னிச்சிறகுகள்
தமிழ்நாடு வளரலனு யாரவது சொண்ணா அவங்க மீதும் அவன் கொண்ட கொள்கை மீதும் சந்தேக படுங்க ... காலம் காலமாக இலவசகங்களை கொடுத்து கெடுத்து வச்சிருங்கானு என் மக்களை பிச்ச எடுக்க வைக்கிறயானு கேட்ட... அவர் அடிதட்டு மக்களின் வலியை தெரியாதவர்கள்.. கிரமபுறங்களிள் இலவச கல்வி, இலவச மிதிவண்டி, இலவச அரிசி, இட ஒதுக்கீடு, இன்னும் நிறைய ... பலரது வாழ்க்கையை மாற்றி உள்ளது... இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல என்று இக்கால தலைமுறைக்கு புரிய வைக்க வேண்டும். மாறுவோம் மாற்றம் செய்வோம் #அக்னிச்சிறகுகள்
வணக்கம் சிறகுகள், அக்னிச்சிறகுகளின் தங்கமகள் விருது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆரம்பம்... இந்த முறை நம்முடன் Connact இனைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடைப்பெறும் தங்கமகள்/மகன் நிகழ்வாக நடைப்பெறும், இதற்க்கான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.
மது வேண்டாம் என்றார்.!
மாதுவை மதி என்றார்.!
பகட்டு வேண்டாம் என்றார்.!
பக்குவமாய் வாழ் என்றார்.!
வன்முறை வேண்டாம் என்றார்.!
அஹிம்சை வேண்டும் என்றார்.!
அவர் வேண்டாம் என்றதை.!
எல்லாம் வேண்டுமென சேர்த்துவிட்டு.!
வேண்டும் என்றதை வேண்டாம்.!
என ஒதுக்கி தள்ளிவிட்டு கொண்டாடுகிறோம்....!
காந்தி பிறந்தநாள் என்பதால் இன்று மதுக்கடைகள் அடைப்பு சோகத்தில் மதுப்பிரியர்களின் புலம்பல் சத்தம்..!
இரவில் பெண்கள் பயம்மின்றி சென்றால் அதுதான் முழு சுதந்திரம் என்றார் அண்ணல், பாவம் அவர் இறந்து விட்டார் அவர் இருந்து இருந்தால் பகலிலும் பாதுகாப்பு இருந்தால் சுதந்திரம் என சொல்லிருப்பார்..!
அக்னிச்சிறகுகளின் மகிழ்வித்து மகிழ் வரும் அக்டோபர் 2ம் தேதி அன்று தனது இரண்டாம் நிகழ்வை செயல்படுத்தும் அனைவரும் ஒன்றினைவோம் மாறுவோம் மாற்றம் செய்வோம் #அக்னிச்சிறகுகள்
பாலும் தெளி தேனும்
பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு...... ✨😇
சங்கதமிழ் மூன்றுடன் சேர்த்து
சாதி, மதம், இனம், மொழி என்ற பாகுபாடு இல்லாமல் மனிதம் மட்டுமே நிலைத்து இருக்க மக்கள் மனதில் நல்லெண்ணங்களை கொடு. அனைவரும் ஒற்றுமையுடன் எந்தவித பாகுபாடு இன்றியும் வாழ அரோக்கியத்தை கொடு. ✨😇❤️
கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும்
பகுத்தறிவு தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என்று உறக்க சொல்லி சாதி, மத வேறுபாட்டையும், பெண்கள் அடிமைத்தனத்தையும், மூட நம்பிக்கைகளையும் வேரோடு அளிக்க வேண்டும் என்று போராடிய பல தேசத் தலைவர்களில் முக்கியமானவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் அன்று அவரை வணங்குவதில் பெருமை கொள்கிறது #அக்னிச்சிறகுகள்
சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற சமுக நீதியை கற்பித்து,ஏழையின் சிரிப்பில், இறைவனை காணலாம் என அறிவுறுத்தி, வன்முறை இரு புறமும் கூர்மையான ஆயுதம் என தன் தம்பிகளுக்கு எடுத்துரைத்து கருத்தியல் மற்றும் சட்டம் ரீதியான போரட்டங்களை முன்னெடுத்து பல முன்னெடுப்புகளை மேற்கொண்ட மனிதர்.. பகுத்தறிவு பகலவன் பெரியாரின் மாணவனாய் தன் திறன்மிகு செயல்களாள் தமிழ்நாடு பெற்றுக்கொடுத்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் அன்று அவரை வணங்குகவதில் பெறுமை கொள்கிறது #அக்னிச்சிறகுகள்
வணக்கம் சிறகுகள், தமிழ்யை தன் மூச்சாய் கொண்டு தமிழ் பேச்சாலும் தன் கவிதையாலும் நம்மை கவர்ந்து, சமூகநீதி, பகுத்தறிவு, மனிதநேயம், சுயமரியாதை, மனிதநேயம், சமுகத்தின் அவலம் ஆகியவற்றை தன் கவிதைகளாள் முழக்கம்மிட்ட என் தங்கை மற்றும் தம்பியின் வைர வரிகளை அனைவரும் அறிய செய்ய, #அக்னிச்சிறகுகள் Notion press publisher உடன் கைகோர்த்து வரும் தைபொங்கல் திருநாளிள் தமிழ் புத்தக கண்காட்சியில் கவிதை புத்தகமாக முதல் பதிவை வெளியிடுகிறது... இந்த பதிவை வெளியிடுவதில் பெறுமை கொள்கிறது #அக்னிச்சிறகுகள்.
Agnichsiragukal makizhvithu makizh, the purpose of this is to share our happiness with others and be happy like the saying that we will see God in the laughter of the poor, the happy days of our life (birthday, anniversary, wedding, success, happy days) feed children and adults, help students' education, share your happiness with them with .
அக்னிச்சிறகுகளின் மகிழ்வித்து மகிழ் , இதன் நோக்கம் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற கூற்று போல நம்முடைய மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சி அடைவோம், நம்முடைய வாழ்வின் மகிழ்ச்சியான நாட்களை ( Birthday, anniversary, wedding, success, happie days) குழந்தைகள், பெரியவர்களுக்கு உணவளித்து, மாணவர்களின் கல்விக்கு உதவியும் உங்கள் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அக்னிச்சிறகுகளுடன் இனைந்து #அக்னிச்சிறகுகள் #மாறுவோம்மாற்றம்செய்வோம்
தமிழ் என் மூச்சு என்று பாடிய பாரதி போன்று, நிறைந்த மன்றதில் சான்றோர்களையும் , பார்வையாளர்களையும், மாணவர்களையும் ஒரு மணிதுளி கூட கவனம் அகலாமல் தன் தமிழ் பேச்சால் அனைவரயும் கட்டி போடும் என் தம்பி சாரதி, எந்த அவையாக இருந்தாலும் தன் பேச்சால் தன்னுடைய அவையாக மாற்றி கொள்வதால் அந்த தமிழே மகுடம் சூடியது... இன்னும் நீ செல்ல வேண்டிய தூரமும் அதிகம், நீ சாதிக்க வேண்டியதும் அதிகம்... அது அவனுக்கு கடினமும் இல்லை.. தம்பி சாரதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவதில் மகிழ்ச்சியும் பெறுமையும் அடைகிறது #அக்னிச்சிறகுகள்
அக்னிச்சிறகுகளின் மகிழ்வித்து மகிழ் என்ற நிகழ்வு வரும் 23-09-2023 அன்று முதல் தன் செயல் பாட்டை துவங்கும் முதல் நிகழ்வாக தாகம் அறக்கட்டளை உடன் இனைந்து செய்யப்படும்... #அக்னிச்சிறகுகள் #மாறுவோம்மாற்றம்செய்வோம் #பெண்மையைபோற்றுவோம் #தற்கொலைதீர்வுஇல்லை #கல்விக்குகைகொடுப்போம்
நாளை என்பது நிச்சயம் இல்லை என்பதற்க்கு தினமும் ஒரு சாட்சியை இந்த இயற்க்கை கற்றுக்கொடுகிறது... இதற்க்கிடையில் மற்றவரை காயப்படுத்தமால் வாழ்வோம். #அக்னிச்சிறகுகள்
வணக்கம் என் அன்பான தங்கைகள், தம்பிகளுக்கு நம் அனைவரும் இனைந்து 30-08-23 அன்று சிறப்பாக lets talk About periods விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம், என் எதிர்பார்ப்பை மீறி சிறப்பாக செய்து முடித்தீர்கள், எனக்கு இந்த அற்புதமான team யை கொடுத்த என் தம்பிக்கு( Poovarasan) நன்றி. உங்களை பற்றி தனி தனியே சொல்ல நிறயை இருக்கிறது, hardwork,dedication , perfection ah நம்ம Srimathi, தன்னுடய பேச்சால எல்லாரையும் கட்டி போடும் சாரதி, தன் தமிழ் கவிதையால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கவியரசன், முதல் முறை மேடை பேச்சை கலக்கிய என் தம்பிகள் ,தங்ககைகள், தன் junior's கு பக்க பலமா இருந்து வழிநடத்தி கடைசி வரை இருந்த Akash and Praveen. நான் பார்த்த குழுவில் கூடலூர் அக்னிச்சிறகுகள் அடுத்து என்னை வியப்புக்குள்ளாக்கியது நீங்கள் மட்டுமே.... நீங்கள் தான் இந்த நிகழ்வின் வெற்றிக்கு முழுக்காரணம்...நன்றிகள் பல. #அக்னிச்சிறகுகள்
அ முதல்👱♀️
ஃ வரையினுள்🧑🎓
இவ்வுலகத்தை🌎
உ ள்ளடக்கிய
என்னுடைய
ஐயங்களை
களைந்தாயே✨✨
சாதி ,மதம் .மொழி, என எதனுள்ளும் அடக்கமுடியாத ... கற்றலை மட்டுமே உயிர் மூச்சாய் கருதும் எங்கள் ஆசிரியர்களுக்கு #அக்னிச்சிறகுகள் சார்பாக ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் கூறுவதில் பெறுமை கொள்கிறது. #கல்விக்குகைகொடுப்போம்
#அனைவரும்ஒன்றினைவோம் #பெண்மையைபோற்றுவோம்
பெண்ணியம்( Feminism) ஏன் பேசப்படுகிறது நம் சமுகதில அனைவரும் சமம் என்ற நிலை பார்க்கப்படுவது இல்லை அதனால் பெண்ணியம் பரவலாக பேசப்படுகிறது.... உனக்கான வாழ்வியல் உன் விருப்ப படி அமைத்து கொள்வது உன் உரிமை அந்த உரிமையை யாரு கொடுப்பது?, சுதந்திரம் என்பது யாரும் கொடுப்பது அல்ல கொடுத்தால் அது சுதந்திரம் அல்ல... ஆனால் பெண்ணியம் என்னவென்று புரிதல் இல்லாமல் ,சில ஆண்களின் மீதனான கோவத்தால் பெண்ணியம் இது போன்று சமுகத்தில் தினிக்கப்படுகிறது. பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்கள் என சொல்வதை விட்டு அனைவரும் சமம் என்று சொல்லி பழகுவோம் ✨✊. #அக்னிச்சிறகுகள் #மாறுவோம்மாற்றம்செய்வோம்
அக்னிச்சிறகுகளின் நிலவெண்ப ஈகை தினம் அனைத்து மாதமும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது இன்றுடன் தனது மூன்றாம் ஆண்டை நிறைவு செய்வதுடன், பலரது பசி தீர்த்து, சமுகநீதிக்காக பல நிகழ்வுகளை நடத்தி இன்றுடன் தன் செயலையும் நிறைவுப் பெறுகிறது நிலவெண்ப ஈகை தினம்.... இனி அக்னிச்சிறகுகள் இந்த நிகழ்வை செயல்படுத்தாது, பலரது ஆசிகள், பாரட்டுகளுக்கு நன்றிகள். வரும் மாதம் முதல் ✨"மகிழ்வித்து மகிழ்"✨ திட்டம் செயல்படும் இதன் நிகழ்வுகள் 23-09-2023 அன்று அறிவிக்கப்படும் #அக்னிச்சிறகுகள்
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசு மேலும் 30,122 பள்ளிகளில் விரிவுப்படுத்தி உள்ளது, இன்று (25-08-2023) தமிழ்நாடு முதலைமைச்சர் M. K. Stalin அவர்கள் தொடங்கி வைக்கிறார், இந்த திட்டத்தால் பல மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள், நமது முதல்வருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் கூறுவதில் பெறுமை கொள்கிறது #அக்னிச்சிறகுகள்
வணக்கம் சிறகுகள், வரும் (25-08-2023) முதல் அக்னிச்சிறகுளின் கல்விக்கு கைகொடு்போம், ( 2023-2024)கல்வி ஆண்டுக்கான கல்வி உதவி தொகைக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம். உங்களை பற்றிய Bio data, ஏன் உதவி தொகை தேவைப்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய தகவல்களுடன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முறைகள்
"Email- [email protected]
WhatsApp: 7338833112"
துப்புறவு அக்கா/ அண்ணாக்கள் தன் செய்கின்ற வேலையை ஒரு நாள் நிறுத்தினாள் என்னவாகும், கழிவுகளை அகற்ற, மலக்குழிகளை அள்ள அவர்கள் வேண்டும் ஆனால் அவர்களை மதிக்க மாட்டோம், அவர்களும் நம்மை போன்றவர்கள் தான... அவர்களுக்கு ஊதியமும் குறைவு மரியாதையும் குறைவு, முதலில் மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்வோம் பிறகு கடவுளுக்கு சேவை செய்யலாம். #மாறுவோம்மாற்றம்செய்வோம் #அக்னிச்சிறகுகள்
பெண்ணியம்( Feminism) ஏன் பேசப்படுகிறது நம் சமுகதில அனைவரும் சமம் என்ற நிலை பார்க்கப்படுவது இல்லை அதனால் பெண்ணியம் பரவலாக பேசப்படுகிறது.... உனக்கான வாழ்வியல் உன் விருப்ப படி அமைத்து கொள்வது உன் உரிமை அந்த உரிமையை யாரு கொடுப்பது?, சுதந்திரம் என்பது யாரும் கொடுப்பது அல்ல கொடுத்தால் அது சுதந்திரம் அல்ல... ஆண்களை விட பெண்கள் உயர்ந்தவர்கள், பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்கள் என சொல்வதை விட்டு அனைவரும் சமம் என்று சொல்லி பழகுவோம் ✨✊. #அக்னிச்சிறகுகள் #மாறுவோம்மாற்றம்செய்வோம்
தியகமும், அர்பணிப்பும்,தன் உயிரைய் பொருட்படுத்தாமலும் பல தலைவர்கள் போரடி பெற்ற சுதந்திரத்தின் 75வது ஆண்டு தினம் இன்று.... வந்தே மாதரம் 🧡🤍💚
✨பாரத மாதவின் பிள்ளைகளை நிர்வாணமாக்கியது...
✨ஹரியான இரண்டு தனிபட்ட நபர்களின் பகை மதம் கலவரமானது
✨புத்தக பையில் சாதி வெறியால் வீச்சருவ
✨மாதவிடாய் தீட்டாக்கி பெண்ணடிமையானது
✨பெண் பாதுகாப்பு இன்றும் கேள்வி குறியானது
✨கல்வியால் கடன்சுமையும் ,தற்கொலையும் அதிகமானது....
இவற்றை ஒழிக்க மீண்டும் ஒரு சுதந்திர போரட்டத்தை முன்னெடுப்போம், அனைவருக்கும் அக்னிச்சிறகுகளின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். #அக்னிச்சிறகுகள்
அக்னிச்சிறகுகளின் Lets Talk About Periods awareness event தமிழகத்தில் முன்னெடுப்புக்கு காரணமான எங்கள் சிறகுகளின் செல்ல தங்கை Hansiya அவர்களுக்கு சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவதில் பெருமை கொள்கிறது அக்னிச்சிறகுகள். எல்லா நலமும் வளமும், பெற்று இன்னும் பல சாதனைகள் பெற வாழ்த்துகிறோம், சிறகுகள் என்றும் உங்களுக்கு உறுதுனையாக இருக்கும். #அக்னிச்சிறகுகள்
தியகமும், அர்பணிப்பும்,தன் உயிரைய் பொருட்படுத்தாமலும் பல தலைவர்கள் போரடி பெற்ற சுதந்திரத்தின் 76வது ஆண்டு தினம் இன்று.... வந்தே மாதரம் 🧡🤍💚
✨பாரத மாதவின் பிள்ளைகளை நிர்வாணமாக்கியது...
✨ஹரியான இரண்டு தனிபட்ட நபர்களின் பகை மதம் கலவரமானது
✨புத்தக பையில் சாதி வெறியால் வீச்சருவ
✨மாதவிடாய் தீட்டாக்கி பெண்ணடிமையானது
✨பெண் பாதுகாப்பு இன்றும் கேள்வி குறியானது
✨கல்வியால் கடன்சுமையும் ,தற்கொலையும் அதிகமானது....
இவற்றை ஒழிக்க மீண்டும் ஒரு சுதந்திர போரட்டத்தை முன்னெடுப்போம், அனைவருக்கும் அக்னிச்சிறகுகளின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். #அக்னிச்சிறகுகள்
நமக்கு ரொம்ப புடிச்சவங்க நம்ம விட்டு போன,நம்ம கிட்ட பேசாம Avoid பண்ண அவங்க கிட்ட காரணம் கேட்காதிங்க அவர்களுக்கு ஏற்றார் போல காரணம் சொல்லப்படும்..💔 நம்ம கூட இல்லாம இருக்குறது அவர்களுக்கு சாந்தோஷம் ஏன்றால் நீ நகர்ந்து சென்று.... நல்ல மனச விட்டு அழுங்க💔🥺..... அப்புறம் உன் வேலைய பாரு போ.... #அக்னிச்சிறகுகள் #தற்கொலைதீர்வுஇல்லை
சாதிதான் சமுகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.. நெல்லை நாங்குநேரியில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய ரீதியான மோதலால் வீடு புகுந்து சதிஷ்குமார் மற்றும் அவரது தங்கைய வெட்டிய 6 சிறுவர்கள் கைது செய்து கூர் நோக்கு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும் . 💔💔 #அக்னிச்சிறகுகள்
வணக்கம் சிறகுகள், அக்னிச்சிறகுகளின் Lets talk About periods awareness event இந்த மாதம் மகிழ்வித்து மகிழ் நாளிள் சென்னை கல்லூரியில் நடைப்பெறும்... இந்த நிகழ்வின் தலைவராக Mr.Poovarasan Rajalakshmi மற்றும் துனை தலைவியாக Miss.Srimathi Srinivasan அவர்களை அக்னிச்சிறகுகள் நியமிக்கிறது, நம் குழுவில் இருக்கும் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்வோம். #அக்னிச்சிறகுகள் .
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the organization
Telephone
Website
Address
600032
Opening Hours
Monday | 9am - 5pm |
Tuesday | 9am - 5pm |
Wednesday | 9am - 5pm |
Thursday | 9am - 5pm |
Friday | 9am - 5pm |
Saturday | 9am - 5pm |
No. 72, Velachery Main Road, Guindy
Chennai, 600032
Blue Cross of India is a private and charitable organization, which runs a hospital and rehabilitation centre for injured and unwell stray animals such as dogs, cats, cattle and bi...
Blue Beach Road, Neelankarai
Chennai, 600115
Compassion without awareness is merely an Intention; Compassion with awareness leads to Action
4/192, Ellaiamman Kovil Street, Behind J8 Police Station, Neelankarai
Chennai, 600041
Educating and Empowering through Entertainment. Nalamdana’s vision is to effect positive social chan
1/288 East Coast Road, Kottivakkam
Chennai, 600041
We believe that all persons are bound together in a common humanity and that each one whether handicapped or not, has a unique value in the love of God. All human persons are equal...
Egmore
Chennai, 600008
Voice Of People is a Social Community that came into existence for the refinement of society for the
Near Sangeetha, GN Chetty Road, T Nagar
Chennai, 600017
MAGAL is an organization which is working to develop and uphold standards and create an environment in which every woman and girl can exercise her human rights and live up to her f...
Kundrathur
Chennai
we are teaching parai dance, karakattam, oyilaatam, saattaikuchi attam, katta kaal attam, silambam and other traditional art forms to goverment & private children homes and visua...
2/167
Chennai, 600117
All For one, One for All, Employer and Employees Welfare Society, 80G Available