Comrade Memes
இடதுசாரி அரசியல், சமூகம், செய்திகள்
"Comrade Memes" அன்றாட அரசியல், சமூகம், செய்திகள் மற்றும் நிகழ்வுகளை மக்களிடம் சுவாரஸ்யமான வழியில் கொண்டுசெல்லவதே இந்த பக்கத்தின் நோக்கம்..
உடம்பு முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க தினமும் தூங்கி எழுந்தவுடன் பயிர்ச்சி செய்யுங்கள்!!👏🏽👏🏽👏🏽
மனிதத்தை போற்றிய பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல். இது போல் பல பள்ளிவாசல்கள் உண்டு
தோழர் சங்கரய்யா அவர்களின் திருவுருவ படத்திறப்பு விழா இன்று மாலை முத்தையாபுரம் தோப்பு பஜாரில் தூத்துக்குடி புறநகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் அவர்கள் தோழர் சங்கரய்யா அவர்களின் படத்தினை திறந்து வைத்து பேசினார்.தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன்பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு பேசினார்
மேலும் கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் மஜித் சாமுவேல் ஞானதுரை மதிமுக நக்கீரன் விசிக ஆட்டோ.கணேசன் தவாக மாரிச்செல்வம் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலகுழு உறுப்பினர் பூமயில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து உள்ளிட்ட தோழர்கள் புகழஞ்சலி உரையாற்றினர்.
அனைவரும் வருக
பாபர் மசூதியை - ஒரு வழிபாட்டுத்தலத்தை - இடித்து
தாங்கள் போலி பக்தர்கள் என்பதை பாஜகவினர் நிரூபித்த நாள் இன்று! மெய்யான பக்தர்கள் அந்த இழிசெயலாள் வெட்கித் தலைகுனிந்த நாள் இன்று!
வடக்கே காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி சாதிவாரிக் கணக்கெடுப்பை
காங்கிரஸ் வலியுறுத்தியதால் என்கின்றனர் சங்கிகள். இதிலிருந்து
இவர்கள் உயர்வருணத்து வெறியர்கள், பஞ்சம-சூத்திர இந்துக்களுக்கு
எதிரானவர்கள் என்பது உறுதியாகிறது. இதை வடமாநில இந்துக்களுக்கு
புரிய வைத்தால்தான் விடிவு. - பேரா அருணன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, ஒருங்கிணைப்பாளர்.
வடக்கே பாஜக வெற்றிக்கு உதயநிதியின் சனாதன எதிர்ப்பே காரணம் என்கிறார் ஒரு தமிழ்நாட்டு பாஜக தலைவர். ஆனால் இவர்களது
சனாதனத்தில் மனு சாஸ்திரம் உண்டா, இல்லையா என்பதற்கு
மட்டும் இப்பவும் பதில் சொல்ல மறுக்கிறார்கள். அதைப் பற்றிப்
பேசக் கூடாது என்பதே அவர்களின் ஆசையாக உள்ளது! - பேரா அருணன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, ஒருங்கிணைப்பாளர்.
இந்துத்துவா அரசியலை எப்படி எதிர்கொள்வது?
எதிர்க்கட்சிகள் இந்துத்துவா அரசியலுக்கு எதிரான ஒரு உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
விலைவாசி ஏற்றம் மற்றும் வேலையின்மை பிரச்சனையால் பெரும்பாலான இந்துக்கள் அல்லலுற்று வருகின்றனர். பிஜேபி ஆட்சியில் அம்பானி மற்றும் அதானி போன்ற இந்துக்கள் தான் பலனடைந்து உள்ளனர் என்பதை விரிவாக எடுத்துச் செல்ல வேண்டும்.
R. விஜய் சங்கர், முன்னாள் ஆசிரியர், பிரண்ட் லைன்
🌀🌧️🌀மிக்ஜாம் புயல் - தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து, புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க சிபிஎம் எம்.பி பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்.
#கம்யூனிஸ்ட்
எலி வளை தொழில் நுட்பம் மூலம் 41 சுரங்க பணியாளர்களை காப்பாற்றியவர்கள்: ஃபெரோஸ், முன்னா குரேஷி, ரஷீத், இர்ஷாத், நசீம், மோனு, அங்குர், ஜத்தின், சவுரப், தேவேந்தர், வகீல் ஹாசன். அனைவருக்கும் வணக்கம்.
பா.ஜ.க.வும் முதல்வர் தமியும் கூறியபடி உத்தர்காண்டிலிருந்து அனைத்து முஸ்லீம்களையும் வெளியேற்றி இருந்தால் இப்பொழுது யார் இந்த பணியை செய்திருப்பார்கள்? இந்து - முஸ்லீம் தொழிலாளர்கள் இணைந்துதான் இதனை வெற்றிகரமாக முடித்தனர்.
ஒற்றுமையே வலிமை!
- சுபாஷிணி அலி
17 நாட்களாக உயிருக்கு போராடிய சுரங்க தொழிலாளர்களை, இயந்திரங்களாலும் மீட்க முடியாதவர்களை, மீட்டெடுத்த rat mine workersல் கணிசமானவர்கள் இஸ்லாமியர்கள். மீட்பில் ஈடுபட்ட (அனைத்து மத) தொழிலாளிகளுக்கும் வாழ்த்துக்கள். இதுதானே இந்தியா? இந்த குணாம்சத்தை மாற்ற முயலும் மதவெறியை மாய்ப்போம்!
"சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது": அமித் ஷா.
அப்படியெனில், அதை எதிர்த்து மக்கள் போராடுவதை யாராலும் தடுக்க முடியாது. அது மோடி அரசுக்கு முடிவு கட்டும்.
"140 கோடி இந்தியர்களுக்காக திருப்பதியில் பிரார்த்தனை செய்தேன்": மோடி.
மக்களே ! மக்களே ! இந்த போலிகளிடமிருந்தும் மோசடிக்காரர் களிடமிருந்தும் பொய்யர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்!! - இது கடவுளின் கெஞ்சல். - சு. பொ. அகத்தியலிங்கம், முற்போக்கு எழுத்தாளர்.
"140 கோடி இந்தியர்களுக்காக திருப்பதியில் பிரார்த்தனை செய்தேன்": மோடி.
ஏதோ அவரால் முடிந்தது! ஒரு பிரதமரால்
இதற்கு மேல் என்ன செய்ய முடியும்..?
கிராமப்புற உழைப்பாளிகள் தின ஊதியம் அதிகம் பெறும் 5 மாநிலங்கள்:
கேரளா
ஜம்மு-காஷ்மீர்
இமாசல பிரதேசம்
தமிழ்நாடு
ஹரியானா.
5ல் 3 பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள்.
மிகக்குறைந்த ஊதியம் பெறும் மாநிலங்கள்:
மத்திய பிரதேசம்
குஜராத்
ஒடிசா
திரிபுரா
மகாராஷ்ட்ரா
5ல் 4 பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்.
"சேரி மொழி" மோசமானது எனப் பதிவிட்டதுமல்லாமல்,
அதை அபத்தமாக நியாயப்படுத்தியும் வருகிறார் குஷ்பு.
இது பற்றி தமிழ்நாடு பாஜக தலைவர்களின் கருத்து என்னவோ?
சேரியிலே இந்துக்கள் வாழவில்லையா? - பேரா அருணன் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்.
அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம்: கியூபாவின் சாதனை நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ நினைவு தினம்
இந்தியாவுக்கு மட்டுமான கண்டுபிடிப்பாளர்கள் பிராமணர்கள்...!!!
இவர்கள் கண்டுபிடிப்பவை எல்லாம் இந்தியாவுக்கும் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவை! மற்றநாடுகள் இந்த கண்டுபிடிப்புகளுக்கு எந்தவகையிலும் சொந்தங்கொண்டாட முடியாது!
அர்ச்சனை செய்தால் வேலை கிடைக்கும்
அபிஷேகம் செய்தால் மாப்பிள்ளை கிடைக்கும்
கும்பாபிஷேகம் செய்தால் மழை பெய்யும்
தீபாராதனை செய்தால் நல்ல பெண்கிடைக்கும்
ஹோமம் செய்தால் செல்வம் பெருகும்
யாகம் செய்தால் பதவி கிடைக்கும்
அங்கப்பிரதட்சணம் செய்தால் நோய்தீரும்
சகஸ்ரநாமம் சொன்னால் படிப்பு வரும்
ராமநாமம் சொன்னால் தைரியம் வரும்
கோயிலுக்குப்போனால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்து நிம்மதி வந்து மனநோய் தீரும்
மூத்திரம் கேன்சரை குணப்படுத்தும்
சாணி தொற்றுநோயை விரட்டும்
மண்சோறு தின்றால் குழந்தைபிறக்கும்
திருநீறு ஜலதோஷத்தை போக்கும்
ஓம் சொன்னால் காஸ்மிக் எனர்ஜி கிடைக்கும்
யாகம் செய்தால் ஆபத்துகள் போய்விடும்
கைதட்டினால் கோவிட் 19 வைரஸ் பயந்து ஓடிவிடும்
விளக்குபிடித்தால் கொரோனிவைரஸ் தற்கொலைசெய்து செத்துப்போயிடும்
வேதம் ஓதினால் வாயிலிருந்து பிறக்கமுடியும்
தோள்,மார்பு, கால்களில்கூட யோனி முளைக்கும்
பூமியை பாயாக சுருட்டி தூக்கிட்டுப்போக முடியும்
பாம்புகள் பால்குடிக்கும்
குடிக்கிற பாயாசம் நேராக கர்ப்பப்பையை அடைந்து குழந்தைப்பேறை தரும்
திருநள்ளாறு கோபுரத்துக்கு நேர்மேலாக ரேடியோ அலைகள் செல்லாது
ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறப்பது
யானைத்தலையை மனிதவுடலில் இணைப்பது
சூரியனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் டெக்னிக்
மான்கள் மனிதக்குட்டி போடுவது
அக்கினி சட்டியிலிருந்து மனிதர்கள் பிறப்பது
அறுபதாயிரம் வருடங்கள் வாழ்வது
குதிரைகள் மனிதர்களை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்கிற டெக்னிக்
யானையை சுமக்கிற அளவுக்கு பெரிய எலியை வளர்ப்பது
நட்சத்திரங்களை கோள்களாக மாற்றும் பயங்கர ஜோசிய டெக்னிக்குகள்
முதுகில் தடவினால் கோடுவிழும் டெக்னிக்
குரங்குகள் மலையை தூக்கிக்கொண்டு பறக்கும் டெக்னிக்
வாய்க்குள்ளே பிரபஞ்சத்தை காட்டுகிற டெக்னிக்
யாகம் செய்து மழைபெய்விக்கிற டெக்னிக்
யக்ஞம் செய்து எதிரிநாடுகளை அழிக்கிற நவீன தொழில்நுட்பம்
இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை இந்தியாவுக்குள் மட்டும் பயன்படுத்திக்கொள்கிற வகையில் கண்டுபிடித்து தந்தவர்கள் பயங்கரமான மூளையில் பலமுள்ள பிராமணர்கள் மட்டுமே....!!!
மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில்
15 கோடி கல்விக்கடன் வழங்கி
இந்திய அளவில் சாதனை.
சு. வெங்கடேசன் எம் பி பெருமிதம்
மதுரை மாவட்டத்தில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் சு. வெங்கடேசன் எம் பி தலைமையில்
வெள்ளியன்று மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை மதுரை மாவட்டத்தில் கல்வி கடன் கொடுப்பது 40 கோடி, 45 கோடி என்பதாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு நாம் எடுத்த முயற்சி மதுரை மாவட்டத்தில் 118 கோடி கல்வி கடன் என்பது கொடுக்கப்பட்டது. நூறு கோடிக்கு மேல் கல்விக்கடன் பெற்றுக்கொடுத்த முதல் மாவட்டமாக மதுரைமாவட்டம் மாறியது.
அதே போல 2022 ஆம் ஆண்டு பெற்றுக் கொடுத்த கல்விக்கடன் என்பது 138 கோடி ரூபாய். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் கொடுக்கப்பட்ட கல்வி கடன் என்பது 1100 கோடி அதில் 10 சதவீதம் 138 கோடி மதுரையில் மட்டுமே பெற்று கொடுத்திருக்கின்றோம். அந்த பெருமை இங்கு உள்ள வங்கி அதிகாரிகளையும், மாவட்ட நிர்வாகத்தையும் சேரும். அவர்களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நடந்து முடிந்துள்ள கல்விக்கடன் முகாம் தேசிய அளவில் பெரும் சாதனையை படைத்துள்ளது. இன்றைய முகாமிலேயே 15 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறெங்கும் இவ்வளவு தொகை ஒரே நாள் முகாமில் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
இன்றைய முகாமில் வழங்கப்பட்ட கல்விக் கடன் விபரம்; கனரா வங்கி 15 நபர்களுக்கு 4 கோடியே 51 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரீஜனல் - 1: 12 பேருக்கு 23 லட்ச ரூபாயும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - ரீஜினல் - 4: ஐந்து நபர்களுக்கு 1 கோடியே 23 லட்சத்து 3 ரூபாயும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஐந்து நபர்களுக்கு 1 கோடியே 90 லட்சத்து 38 ஆயிரம். இந்தியன் வங்கி 20 பேருக்கு 1 கோடியே 25 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும். பேங்க் ஆப் இந்தியா 15 நபர்களுக்கு 92 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும். பேங்க் ஆப் பரோடா எட்டு நபர்களுக்கு 2 கோடி 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயும். சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆறு பேருக்கு 32 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயும். எச்டிஎப்சி வங்கி இரண்டு பேருக்கு 7 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும். பெடரல் பேங்க் ஒரு நபருக்கு 2 லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் முகாமில் வழங்கியுள்ளார்கள் மொத்தம் 115 மாணவர்களுக்கு
14 கோடியே 55 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் கல்வி கடனாக முகாமில் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர இன்றைக்கு வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
மாணவருக்கு கிடைக்கக்கூடிய கல்வி ஒரு நபர் சார்ந்த விஷயம் அல்ல ஒரு குடும்பம் சார்ந்து ஒரு தலைமுறை சார்ந்த விஷயம் அந்த வகையில் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுக்கும் விஷயத்தில் வங்கிகள் இலகுவாக இருக்க வேண்டும் அந்தப் பொறுப்பை மாநில அரசும் மத்திய அரசும் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இதை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் வலியுறுத்துவேன் மேலும் தொடர்ந்து அதை செய்து தர வேண்டும் என்றும் போராடுவேன்.
மாநிலத்திலேயே அதிக கல்விக்கடன் கொடுக்கும் முதல் மாவட்டமாக மதுரையை மாற்றி இருக்கின்றோம். நாடாளுமன்ற கல்வி நிலைக் குழுவில் இதற்காக மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளோம். அதற்காக வங்கிகள் இன்றைக்கு பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மாவட்ட நிர்வாகத்தின் பெரும் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார் சு. வெங்கடேசன் எம் பி.
இன்றைய நிகழ்வுக்கு கல்லூரியின் துணை முதல்வர் பியூலா ஜெர்சி வரவேற்று பேசினார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அணில், தலைமை வகித்தார், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் தி. நாகராஜன், மதுரை மாவட்ட திட்ட இயக்குநர் சௌந்தர்யா, கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம், மதுரை வடக்கு மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி ஆகியோர் பங்கெடுத்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்தும் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானங்களை வரவேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் நாகை மாலி அவர்களின் உரை...
"விழித்தெழுவாய் ஹிந்து மக்களே"
- எச்.ராஜா.
பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லை. தமிழகக் கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழி இல்லை. அனைத்து சாதியினரும் மடாதிபதிகள் ஆக முடியவில்லை. விழித்தெழுவாய் இந்து மக்களே! - பேரா அருணன் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்.
"ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்": மோடி.
ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பது இவர்தானே, இந்தியா முழுவதற்கும் குறைத்திருக்கலாமே?
வாயைத் திறந்தாலே வடை சுடுகிற சத்தம்தான்..! - பேரா அருணன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்.
"நமது கடமைகளைக் கூறுவதுதான் சனாதன தர்மம்":
ஆர்எஸ்எஸ் தலைவர் விவேகானந்தன்.
அந்தக் கடமைகளில் வருணாசிரமம் எனும் சாதியமும்,
பெண்ணடிமைத்தனமும், சமஸ்கிருத ஆதிக்கமும் உண்டா,
இல்லையா? இந்தக் கேள்விக்கு ஏன் பதில் சொல்ல மறுக்கிறது
ஆர்எஸ்எஸ்! - பேரா அருணன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்.
ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் பயின்ற மூன்று இளம் செயற்பாட்டாளர்கள்! மூன்று பாதைகள்!
கன்னையா குமார்- CPI இயக்கத்திலிருந்து காங்கிரசுக்கு!
ஷேலா ரஷித்- CPI(ML) தீவீர இடது சாரி இயக்கத்திலிருந்து மோடி ஆதரவு நிலைக்கு.
உமர் காலித் - இன்னும் சிறையில் 1000 நாட்களுக்கும் மேலாக!
#முதல் நபரின் பாதை - சமரசம். #இரண்டாம் பாதை - துரோகம் மற்றும் கோழைத்தனம்.
#மூன்றாம் பாதை - அரசியல் உறுதி.
புரட்சிக்கான பாதையும் கம்யூனிஸ்டாக இருப்பதும் மலர்களால் ஆன பாதை அல்ல என்றார் லியோ ஷோச்சி தனது “சிறந்த கம்யூனிஸ்டாக இருப்பது எப்படி?” எனும் புகழ்பெற்ற நூலில்!
- தோழர் அன்வர்.
தோழர் சங்கரய்யா: நூற்றாண்டை அர்த்தப்படுத்தும் போராளி!
திரைப்பட இயக்குநர் தோழர் ராஜுமுருகன் RajuMurugan
சக மனுசனோட துன்பத்தைப் பத்தின நினைப்பும், அதுக்காக போராடணும்கிற தவிப்பும்தான் ஒரு கம்யூனிஸ்ட்டை உயிரோடவே வெச்சிருக்கு. அதைப் புரிஞ்சுக்கங்க...
புது நூற்றாண்டைக் காணும் மனிதர்கள் அபூர்வம்! அதனினும் அபூர்வம், அந்த நூற்றாண்டையே அர்த்தப்படுத்துவது போல வாழும் மனிதர்கள். அப்படியொரு மகத்தான மனிதர், தலைவர்தான் தோழர் என்.சங்கரய்யா. அவர் காலமானார் என்ற செய்தி மழையோடு வந்து சேர்ந்தது. எத்தனையோ பெரும் மழையையும், கடும் வெயிலையும், புயல்களையும் கண்ட பொது வாழ்வு அவருடையது என்பதை நினைத்தால் அவ்வளவு வியப்பாக இருக்கிறது.
அதிகார பீடத்துக்காகவோ, சுயநலத்துக்காகவோ துளியும் சமரசம் செய்து கொள்ளாத, ‘எல்லோருக்கும் எல்லாமும்’ என்ற சோஷலிசத்துக்கான இலக்கு ஒன்றையே மூலதனமாக்கிக் கொண்ட ஓர் உண்மையான கம்யூனிஸ்ட்டின் போராட்ட வாழ்க்கை தோழர் என்.சங்கரய்யாவுடையது. முதலாளித்துவமும், பணமும், அதிகார வன்மமும் தீர்மானிக்கும் இன்றைய தேர்தல் அரசியல் யுகத்தில், தோழர் சங்கரய்யாவின் வாழ்வும், அவரது அப்பழுக்கற்ற அரசியலும் வருங்காலத் தலைமுறைக்கென கல்வெட்டாக எழுந்து நிற்கிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது பிறந்தவர்... முதலாளித்துவ, மதவாத அரசியலுக்கெதிரான ஜனநாயகப் போராட்டம் உச்சத்தில் இருக்கும்போது மறைந்திருக்கிறார். இடைப்பட்ட இந்த நூற்றாண்டில், விடுதலைப் போர் தொடங்கி இந்தித் திணிப்பு எதிர்ப்பியக்கம், தொழிற்சங்க, விவசாய சங்கப் போராட்டங்கள் என எத்தனை எத்தனை போராட்டங்கள்... உடல் நலிவுற்ற நிலையிலும் ஜல்லிக்கட்டு போராட்டம் வரை ஓயாத கலகக்காரரின் குரல் தோழர் சங்கரய்யாவுடையது.
அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்த போதெல்லாம், பல முக்கியமான கேள்விகளை அவரிடம் கேட்டிருக்கிறேன். ஒரு முறை, “இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் எங்கே இருந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “நாடு விடுதலையானபோது நானும் தோழர்களும் சிறையில் இருந்தோம். ஆகஸ்ட் 14ம் தேதி இரவுதான் எங்களின் ஜெயில் கதவைத் திறந்துவிட்டார்கள்” என்று அவர் சிரித்தார். சுதந்திரப் போராட்ட காலத்தில் நான்கு ஆண்டுகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்த சங்கரய்யா, நாடு விடுதலையான பிறகும் உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக நான்கு ஆண்டுகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார். மொத்தம் எட்டு ஆண்டுகள் சிறை வாழ்க்கை, மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ஒருவரின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமைக்குரியது.
மதுரை மாநகரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மாணவர்களைத் திரட்டிய சங்கரய்யாவை, பட்டப்படிப்பின் இறுதித் தேர்வுக்கு 15 நாள்களே இருந்த நிலையில், ஆங்கிலேய அரசு கைது செய்தது. அப்போது அவர், 18 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். அவரால் பட்டப்படிப்பை முடிக்க முடியாமல்போனது. தேச விடுதலைக்காகக் கல்வியையே துறந்துவிட்டு சிறைவாசம் அனுபவித்த சங்கரய்யாவின் அந்தத் தியாகமும் போராட்டமும் அதன் பிறகு எத்தனையோ சிறைகளை, தடைகளை எதிர்கொண்டேயிருந்தன.
“உங்கள் வாழ்க்கை, போராட்டங்களால் நிறைந்தது. எதுக்காக இப்பிடி ஒரு வாழ்க்கை... பேசாம இதையெல்லாம் விட்டுட்டு நிம்மதியா போயிரலாம்னு எப்பவாவது தோணியிருக்கா?” என்று அவரிடம் ஒரு முறை கேட்டேன். ஒரு நொடி கூட தாமதிக்காமல் சட்டென்று அவரிடமிருந்து பதில் வந்தது. “அப்படியொரு சிந்தனை ஒருபோதும் வந்ததில்லை. நாம இன்னும் அதிகமாச் செயல்படணுமே, போராடணுமே... இந்தப் போராட்டம் பத்தலையேங்கிற குற்றவுணர்வுதான் எனக்கு வந்திருக்கு. உண்மையான கம்யூனிஸ்ட்டுக்கு நீங்க சொல்ற மாதிரி ஒரு நினைப்பு வரவே வராது... சக மனுசனோட துன்பத்தைப் பத்தின நினைப்பும், அதுக்காக போராடணும்கிற தவிப்பும்தான் ஒரு கம்யூனிஸ்ட்டை உயிரோடவே வெச்சிருக்கு. அதைப் புரிஞ்சுக்கங்க...” என்று குரலுயர்த்தினார் தோழர் சங்கரய்யா.
80 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவனாக, ‘We are not job hunters... We are freedom hunters’ எனக் களத்தில் முழங்கிய ஒரு குரல் 102 வயதிலும் சுதி குறையாமல் இருந்ததன் ரகசியம் இதுதான்.
தோழர் என்.சங்கரய்யா மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். ‘சங்கரய்யாவின் சங்கநாதம்’ என்றுதான் அவரது பேச்சைக் குறிப்பிடுவார்கள். வெண்கலக் குரலில் அவர் பேசத் தொடங்கினால், அனல் பறக்கும். அவரது குரலைப் பற்றி மூத்த தோழர் ஒருவர், “சுதந்திரப் போராட்டக் காலத்துல தெருமுனைக் கூட்டங்கள்ல மைக் இல்லாமலே கத்திக் கத்தியே பேசிப் பழகிட்டாரு. மைக்லயும் அப்பிடியேதான் பேசுவார். அவரது கொள்கை முழக்க உரைகளைக் கேட்டா, நம் நரம்புகள் புடைக்கும். அவரது பேச்சைக் கேட்டுட்டுப் போய்ப் படுத்தா ராத்திரியெல்லாம் அவரோட குரல் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கும்...” என்றார். உண்மைதான்... நூறு வயதில் கூட அவரது குரலில் அந்த அதிர்வு அப்படியேதான் இருந்தது.
“ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமைப்படுத்துவதை, கீழ்மைப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அப்படியொரு அநீதி எங்கு நடந்தாலும், அதை எதிர்த்து நிற்கும் எவரும் கம்யூனிஸ்ட்டே” என்று சங்கரய்யா அடிக்கடி சொல்வார். இந்தச் சமூகத்தில் இருக்கும் வர்க்க, பொருளாதார, சாதிய வேற்றுமைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அவற்றை மொத்தமாக அடித்து நொறுக்குவதற்கு கம்யூனிசம்தான் சிறந்த ஆயுதம் என்பதை இளமைப் பருவத்திலேயே நன்கு உணர்ந்தவர் சங்கரய்யா. ஆகவேதான், ‘மார்க்சியமே மனித குலத்துக்கு வழிகாட்டும்’ என்ற தனது நிலைப்பாட்டில் தன் இறுதி மூச்சுவரை உறுதியாக இருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் என எத்தனையோ பொறுப்புகளை தோழர் சங்கரய்யா வகித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, தான் நேசிக்கும் கொள்கையில் தடம் மாறாமல், மானுடத்தை நேசிக்கும் மகத்தான தோழராகவே இருந்தார்... வரலாற்றிலும் இருப்பார். சாதி மறுப்புத் திருமணங்களை அவர் பெரிதும் ஊக்குவித்தார். எண்ணற்ற சாதி மறுப்புத் திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி வைத்த சங்கரய்யா, தனது குடும்பத்திலும் ஏராளமான சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி முன்னுதாரணமாக விளங்கினார். சாதி ஆணவப்படுகொலைகளை அவர் கடுமையாகக் கண்டித்து வந்தார்.
எத்தனையோ அபத்தமான, ஆபத்தான அரசியல் ஆளுமைகள், ‘ஐகான்’களாகி இந்தத் தலைமுறையின் முன்னால் பரவிக்கிடப்பதைப் பார்க்கும்போது, பயமாக இருக்கிறது.
இனியொரு என்.எஸ் தோழர் எப்போது வருவார்...?
தோழர் சங்கரய்யா: நூற்றாண்டை அர்த்தப்படுத்தும் போராளி! தோழர் சங்கரைய்யா
எது தேசத்தின் கேள்வி? "இடதுசாரிகளுக்கு இந்த தேசத்தில் எதிர்காலம் இருக்கிறதா என்பதல்ல கேள்வி. இடதுசாரிகள் இல்லாமல் இந்த தேசத்திற்கு எதிர்காலம் இருக்கிறதா என்பதே..." - பேரா. பிரபாத் பட்நாயக் பொருளாதார அறிஞர்
தோழர். பிரதாப சந்திரன் என்ற சங்கரய்யா
1. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆத்தூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் தோழர்.சங்கரய்யாவின் மூதாதையர்கள்.
2. இவரது முன்னோர்கள் பரம்பரையாக கிராம அதிகாரிகளாக இருந்தவர்கள். இவரது தந்தை நரசிம்மலு கிராம அதிகாரியாக வேலை செய்ய விருப்பமில்லாமல் பொறியாளர் பட்டம் பெற்றார்.
3. கோவில்பட்டியில் ஜப்பான் கம்பெனியில் மெக்கானிக்கல் இஞ்சினியராக வேலை பார்த்த போது 1922 ஜூலை 15 தோழர். சங்கரய்யா கோவில்பட்டியில் பிறந்தார்.
4. பிரதாப சந்திரன் என்று மகனுக்கு பெயர் சூட்டினார் நரசிம்மலு. ஆனால் நரசிம்மலுவின் அப்பா எல்.சங்கரய்யா தனது பெயரை பேரனுக்கு வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் பிரதாப சந்திரன் என்ற பெயர் சங்கரய்யாவாக மாறியது.
5. தோழர். சங்கரய்யாவோடு சேர்த்து உடன் பிறந்தவர்கள் 9 பேர். அண்ணன் இராஜமாணிக்கம். தம்பிகள் இராமசாமி, இராமகிருஷ்ணன், இராசேந்திரன். தங்கைகள் லட்சுமி காந்தம்மாள், ஞானாம்பாள்,மீனாட்சி, அங்கம்மாள்.
6. தோழர்.சங்கரய்யா தூத்துக்குடி மேலூர் சி.வ. பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார்.
அவரது தந்தை நரசிம்மலு பம்பாய் சென்று பாய்லர் பொறியியல் படித்து வெற்றி பெற்று மதுரை நகரசபையில் நீரேற்று நிலைய சூப்பிரெண்டாக பணி ஏற்றார். அவரது குடும்பமும் மதுரைக்கு இடம் பெயர்ந்தது.
7. மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளியில் 9 ம் வகுப்பும், மதுரை யூனியன் கிறிஸ்தவப் பள்ளியில் 10,11 வகுப்புகள் படித்து 1937 ல் தேர்ச்சி பெற்றார்.
8. மதுரை அமெரிக்கன் கல்லுரியில் வரலாறு பாடத்தை விருப்பமாகத் தேர்வு செய்து 1939 ல் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். அதே கல்லூரியில் பி.ஏ. கடைசி ஆண்டு வரை படித்தார்.
9.அமெரிக்கன் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராக செயல்பட்ட தோழர்.சங்கரய்யா
சுயமரியாதை இயக்கம் மீது பெரும் மரியாதை வைத்திருந்தார். 1938-ல் இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று ராஜாஜிக்குக் கறுப்புக்கொடி காட்டுகிறார்.
10.1939 மதுரையில் தாழ்த்தப்பட்ட மக்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் போராட்டம் அவருக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
11. அமெரிக்கன் கல்லூரி மாணவர் சங்கத் தலைவராக செயல்பட்டு,1940 ல் தோழர். ஏ.கே.கோபாலனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறார். மதுரை மாணவர் சங்க செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
12.பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் வெள்ளை அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சங்கரய்யா 1941 மார்ச் மாதம் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதானார். படிப்பே நின்றுவிட்டது. மகனை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற தந்தையின் ஆசையும் நிராசையானது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
13. வேலூர் சிறையில் தான் காமராசர்,கே.பாலதண்டாயுதம்,பட்டாபி சீதாராமையா, அப்துல் ரஹ்மான் சாகிப் ஆகியோரோடு தொடர்பு ஏற்படுகிறது. சிறைக் கொடுமைகளுக்கு எதிராக 19 நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருக்கிறார். இதனால் 1941 ஜூலையில் இராஜமகேந்திரபுரம் சிறைக்கு மாற்றப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். மற்றவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
14.காமராஜர் பிரதம செயலாளருக்கு விண்ணப்பக் கடிதம் எழுதியதன் பேரில் மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்படுகிறார். 1942 ஜூன் வரை சிறையிலிருந்து பிறகு விடுதலை செய்யப்படுகிறார்.
15.சிறையிலிருந்து விடுதலையானவுடன் சேலத்தில் நடைபெற்ற சென்னை மாகாண மாணவர் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் மாகாணத்தின் செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார்.
16.1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக மாணவர்களை ஒன்று திரட்டும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதையொட்டி திருநெல்வேலியில் நடைபெற்ற மாணவர்கள் ஊர்வலத்திற்கு தலைமை ஏற்கிறார். போலீஸ் தடியடி நடத்தியதில் காயம் ஏற்படுகிறது.
17. மாணவர் இயக்க வேலைகளைத் திட்டமிட விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளம் கிராமத்தில் மாகாண மாணவர் பயிற்சி முகாம் நடத்துகிறார். முகாமை போலீஸ் சுற்றி வளைக்கிறது. மாணவர்களை போராட தூண்டியதற்காக கைது செய்யப்படுகிறார்.
18. 1942 அக்டோபரில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் மீண்டும் அடைக்கப்படுகிறார். அவரை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் நடந்ததால், கேரளத்தின் கண்ணனூர் சிறைக்கு வெள்ளை அரசு அவரைக் கொண்டு சென்று அடைத்தது.
19.கண்ணனூர் சிறையில் அவர் இருந்த போதுதான் கையூர் தோழர்கள் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அதைத் தொடர்ந்து சிறையில் தோழர்களுடன் உண்ணாவிரதம் இருக்கிறார். கண்ணனூரிலிருந்து தஞ்சாவூர் சிறைக்கு மாற்றப்படுகிறார்.
20.தஞ்சாவூர் சிறையில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஆர்.வெங்கட்ராமன், மதுரை வைத்தியநாதய்யர் ஆகியோருடன் இருந்தார். 1944 மேமாதம் விடுதலை செய்யப்படுகிறார்.
22 வயது நிரம்பிய அதே 1944 ம் ஆண்டு தான் அவரது தந்தை நரசிம்மலு இறக்கிறார். குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்கும் நிலைக்கு ஆளாகிறார்.
21.1944 ல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வெளி வந்தவுடன் மாணவர் அமைப்பின் பொறுப்பிலிருந்து விலகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றார்.
22.நேதாஜியின் ஐ.என்.ஏ இராணுவத்தினரை கைது செய்யும் வெள்ளை அரசைக் கண்டித்தும், ஜவஹர்லால் நேரு காஷ்மீருக்குள் நுழைய தடை விதித்ததைக் கண்டித்தும் பெரும் போராட்டங்கள் நடந்தது.1946 பம்பாய் கப்பல் மாலுமிகள் நடத்திய புரட்சிக்கு ஆதரவாக மதுரையில் பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் தோழர். சங்கரய்யா.
23. இதே ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் பி.ஜி.ஜோசி பங்கேற்ற பெரும் பொதுக்கூட்டத்தை மதுரையில் நடத்தினார்.
சங்கரய்யா.
24.அரசை சதி செய்து வீழ்த்த முயற்சி செய்ததாக 1946 ல் மதுரை சதி வழக்கை போட்டது வெள்ளை அரசு. பி.இராமமூர்த்தி, சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
25.சிறப்பு நீதிபதி ஹசீன் என்பவரால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என அறிவிக்கப்பட்டு 1947 ஆகஸ்ட் 14 ம் தேதி மாலை 6 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாசலில் பிரமாண்ட வரவேற்பு நடந்தது. மறுநாள் இந்தியா விடுதலை அடைந்தது.
26.கம்யூனிஸ்ட் தோழர் பொன்னுச்சாமியின் மகள் நவமணியை 1947 செப்டம்பர் 18 திருமணம் செய்தார். நவமணியின் சகோதரரும் சகோதரியும் கம்யூனிஸ்ட் இயக்க நாடகத்தில் நடித்தவர்கள். நவமணி கிறிஸ்தவர் என்பதால், குடும்பத்தில் சிலர் எதிர்த்தாலும் உறுதியாக நின்றார்.
27. 1948 மார்ச்சில் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் பங்கேற்ற சங்கரய்யா தலைமறைவாக தமிழகம் திரும்பினார்.1948 முதல் 1951 வரை தலைமறைவாகவே சங்கரய்யா செயல்பட்டார்.
சலவைத் தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்திருக்கிறார். தோல் நோய்கள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம்கூட போக முடியாத நிலை.
28.கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை விலக்கப்பட்ட பிறகு 1952 தஞ்சை மாவட்டம் வள்ளுவக்குடியில் நடைபெற்ற மாநில சிறப்பு மாநாட்டில் மாநில செயற்குழு மற்றும் மாநில நிர்வாக குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.
29.தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 1967ல் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு 1977, 1980 ஆம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1957, 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
30.ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். 1963-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதிவந்த அவர், 1966-ல் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார்.
31.1962 ல் இந்திய-சீன யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் ஓராண்டு காலம் இருந்தார்.அங்கிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டு விடுதலையானார்.
32.1964 ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது 35 தேசியக் கவுன்சில் உறுப்பினர்கள் பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். அந்த 35 பேரில் தோழர் சங்கரய்யாவும் ஒருவர். 35 பேரில் கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர்.வி.எஸ்.அச்சுதானந்தன் மட்டுமே தற்போது நம்மோடு வாழ்கிறார்.
33.சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்களின்போது அமைதியை உருவாக்க களப் பணியாற்றினார். 1998-ல் கோவையில் மதநல்லிணக்கப் பேரணியை (1998) நடத்தினார். மதவாத சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்களும், தேச பக்தர்களும் கடமையாற்ற அழைத்தார். 1997-ல் மதுரையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீவிர நிலச் சீர்திருத்தமே தீர்வு என்று முழங்கினார்.
34.கல்லூரி மாணவராக இருக்கும்போதே,
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு,
8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை,
3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை,
15 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்,இந்திய இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவர், மகத்தான வழிகாட்டி
என தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணித்த மக்கள் தலைவர்
தோழர்.என்.சங்கரய்யா.
35. 2021 ல் தமிழ்நாடு திமுக அரசு தகைசால் தமிழர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.அப்போது விருதுக்கான ரூ10 லட்சம் காசோலையும் சங்கரய்யாவிடம் வழங்கப்பட்டது. ஆனால் விருதாக தாம் பெற்ற ரூ10 லட்சம் காசோலையை தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி- கொரானா நிவாரண நிதிக்கே திரும்பி வழங்கி 'தகைசால்' தமிழர் என்ற விருதுக்கும் பெருமை சேர்த்தார் தியாகி சங்கரய்யா.
36. சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிக்கையொன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார். அதன்படி, தோழர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க சங்கி ஆளுநர் ரவி கடைசி வரை ஒப்புதல் கொடுக்கவே இல்லை. இதனால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்ற முறையில், நவம்பர் 2, 2023 வியாழன் அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் தமிழக உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி.
சங்கரய்யா என்பது பெயரல்ல
சமதர்மத்தின் சங்கநாதம்.!
வீரவணக்கம்.!!
செங்கொடியின் வேரானாய் - நீ
செந்தமிழின் நாவானாய்?
உதிரம் சிந்தி உழைப்போரின்
உரிமைப் போரானாய் என் தோழா!
நாட்டின் விடுதலைக்காய் - நீ
கொடுஞ்சிறையில் வாடினாய்!
மக்கள் நல்வாழ்வுக்காய் - நீ
பலமுறை சிறை பட்டாய்!
தோழன் என்றொரு சொல்லிற்கு மேல்
இன்னொரு சொல்லை நீ விரும்பாய்
கட்சியின் கட்டளைக்கு மேலொரு
கட்டளையை யோசித்தும் நீ அறியாய்!
சங்கரய்யா வெறும் சொல் அல்ல
மாபெரும் உந்து விசை நீ எமக்கு
சங்கரய்யா என்றாலே வரலாறு
செங்கொடி போல் எந்நாளும்.
- சு.பொ.அகத்தியலிங்கம் Su Po Agathiyalingam
இடதுசாரி எழுத்தாளர்
வறுமையின் நிறம் சிவப்பல்ல வறுமையை போக்க வந்த நிறமே சிவப்பு... செவ்வணக்கம் தோழர்
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Website
Address
Chennai
Chennai
600001
Patric Church Street
Chennai, 600016
Christian Communication Centre is committed to assist with men and misson to fulfill His will in this
859 & 860 Anna Salai
Chennai, 600002
Business Line is the leading resource on Indian business. http://www.thehindubusinessline.com
Chennai
Biotechnologist2020.com (BT2020) is the first and largest Indian Bio Network (Career development & R
BLOCK 5, GC , BAJAJ APARTMENTS, 5TH Street, NANDANAM EXTN
Chennai, 600035
Blogs | Videos | Podcasts | Audio tours | Workshops | Walking tours and Local experiences
Express Network Private Limited, Express Gardens, 2nd Main Road, Ambattur Industrial Estate
Chennai, 600058
The True Picture. Always. For the Best of India News, Entertainment, Cricket, Business, Lifestyle updates, log on to https://www.newindianexpress.com
7th Floor, Sigma Wing, Raheja Towers #177, Anna Salai
Chennai, 600002
#Galatta is the most authentic source for news related to movies, events, celebrities and TV content
15, Karpagam Garden 1st Main Road, Adyar
Chennai, 600020
Official page of YOCee, news website for children. Student reporters contribute news stories. Visit - https://yocee.in
Chennai, 600052
Red Hills, is a neighbourhood in the northwestern part of Chennai, Tamil Nadu, India. The name was derived from the red hills that was mostly present in this area in early stage....
Chennai, 600024
Boomerang is a international media organisation was founded in 2021. We provide authent ic news from around world and srilanka in tamil and English languages.