TAX Associates
Tax Associates service
Our ongoing mission is to be the most professional,creative,and helpful tax co Are you ready to step into the future with us?
Tax Associates service
Our ongoing mission is to be the most professional, creative, and helpful consulting agency around. We approach each of our clients with fresh eyes and develop custom-made strategies that are catered to their specific needs. Our deep industry knowledge is the key to helping solve Tax issues, big and small. we audit and consulting grow to your industries
We know change i
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அரசிடம் வைக்க பட்ட கோரிக்கை நிறைவடைந்ததில்
மகிழ்ச்சி!
பல லட்ச கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைய என்னால் முடிந்த தூண்டு கொள் முயற்சி. அரசு செவி சாய்த்து கொள்கை முடிவை பரிசிலனை செய்து திட்டம் நிறைவேற்றியதற்கு நன்றி
*நிலத்தின் பட்டா மாற்றம் கோப்பினை RTI மூலம் பெறுவது எப்படி???.*
*தகவல்அறியும்உரிமைச்சட்டம்* 2005 பிரிவு 6 (1) மற்றும் 6(3) மற்றும் 7(1)ன்கீழ் பதிவு அஞ்சல் மூலம் தகவல் வேண்டி மனு.
*அனுப்புனர்:*............. Age :-....../2023 தபெ,.................,
No:- ......, .....................(கிராமம்) .....................(அஞ்சல்) ....................... (வட்டம்)................. (மாவட்டம்)
Pim Code :- ....................
whatsapp எண்:.....................
*பெறுநர்:*
பொதுத் தகவல் அலுவலர் அவர்கள்,
வட்டாச்சியர் அலுவலகம்................................................... மாவட்டம்.
*பொருள்:*
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 (1) ன் கீழ் மற்றும் பிரிவு 7(1) ன் படி ...............மாவட்டம் , .............வட்டம், .................வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சர்வே எண் 167, மற்றும் 12 அதன் உட்பிரிவுகள் , சமந்தப்பட்ட பற்றிய தகவல் வழங்க வேண்டி விண்ணப்பம்:
*அலுவலர் அவர்களுக்கு,*
1. மேற்படி கிராமத்தில் சர்வே எண்——–UDR நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு முன்பு யாருடைய பெயரில் பட்டா இருந்தது மற்றும் பட்டா எண் மற்றும் அதன் சான்றிட்ட நகல் தர வேண்டுகிறேன் .
2. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ————UDR நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கு முன்பு உள்ள FMB வரைபடம் சான்றிட்டநகல் தர வேண்டுகிறேன் ,
3. மேற்படி கிராமத்தில் இருந்த சர்வேஎண்—— தற்போது எந்த வருவாய் கிராமத்தில் பதிவேட்டில் உள்ளது அதன் சர்வே எண்கள் மற்றும் உரிமையாளர் விபரம் தர வேண்டுகிறேன் .
4. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ————- க்கு உரிய இடம் தற்போது என்ன வகையான நிலம், தற்போது யாருடைய அனுபவத்தில் உள்ளது, அதன் உரிமையாளர் பெயர் விபரம் தர வேண்டுகிறேன்.
5. மேற்படி கிராமத்தில் சர்வே எண்———- க்கு உரிய இடம் வேறு கிராமத்துடன் இணைக்கபட்டிருந்தால் அதன் விபரம் மற்றும் மூல ஆவணம் நகல் தர வேண்டுகிறேன் .
6. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ——— க்கு உரிய இடம் உட்பிரிவு செய்யப்பட்டு இருந்தால் உட்பிரிவு செய்யப்பட்ட போது சமர்பிக்கப்பட்ட மூல ஆவணங்களை சான்றிட்ட நகல் தர வேண்டுகிறேன் மேலும் தற்போதைய உட்பிரிவு செயப்பட்ட சர்வே எண் மற்றும் பட்டா எண் அதனுடைய சான்றிட்ட நகல் தர வேண்டுகிறேன் .
7. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ———பதிலாக புதிய சர்வே எண் வழங்கப்பட்டிருந்தால் அந்த புதிய சர்வே எண் விபரம் தர வேண்டுகிறேன் .
8. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ——- க்கு தற்போதைய உரிமையாளர் பெயர் மற்றும் பட்டா எண் மற்றும் எந்த ஆவணங்கள் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது அதன் மூல ஆவணங்களை சான்றிட்ட நகல் தர வேண்டுகிறேன் .
9.மேற்படி கிராமத்தில் சர்வே எண் —– க்கு கிராம நிர்வாக அலுவலரின் அலுவலக பதிவேட்டில் மேற்படி சர்வே எண்கள் மற்றும் அதற்குரிய பட்டா சமந்தப்பட்ட பதிவுகள் பதியப்பட்டுள்ள பக்கங்களின் சான்றிட்ட ஒளி நகல் தர வேண்டுகிறேன் .
10. மேற்படி கிராமத்தில் சர்வே ————சர்வே எண்கள் மற்றும் அதன் உட்பிரிவுகள் உரிய கீழ்க்கண்ட ஆவணங்களை சான்றொப்பமிட்ட நகல் தர வேண்டுகிறேன்.
10.1. UDR க்கு முந்தய FMB வரைபடம் நகல் தர வேண்டுகிறேன்,
10.2.O.S.R (Old Settlement Register) நகல்தர வேண்டுகிறேன் ,
10.3. R.S.R (Re-Settlement “ A”Register) நகல்தர வேண்டுகிறேன் ,
10.4. S.L.R (Settlement Land Register ) நகல் தர வேண்டுகிறேன் ,
10.5 UDRகை சிட்டா நகல் தர வேண்டுகிறேன்,
10.6 UDR “A” Register (அ –பதிவேடு )நகல்தர வேண்டுகிறேன் ,
11. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ———சர்வே எண்கள் விவசாயநிலம் எனில் அதற்கான தீர்வை செலுத்தப்பட்டுருந்தால் யாருடைய பெயரில் தீர்வை செலுத்தப்பட்டது அதன் 1979 முதல் தற்போது வரை சான்றிட்ட நகல் தர வேண்டுகிறேன்.
12. மேற்படி கிராமத்தில் சர்வே எண் ——–சர்வே எண்களுக்கு உரியநிலம் முன்பு வரிசைப்படுத்தப்பட்ட பட்டா எண் விபரம் மற்றும் மேற்படி பட்டா எண்க்கு தற்போதைய உரிமையாளர் பெயருக்கு முந்தைய உரிமையாளர் பெயர் தங்கள் பதிவேடுகளின்படி தர வேண்டுகிறேன் .
13. மேற்படி கிராமத்தில் ——— சர்வே எண்ணுக்கு உரிய தற்போதைய சிட்டா எண் என்ன? அதன் நகலை வழங்கவும் மேற்படி புலஎண்களுக்கு உட்பட்டுவரும் சர்வே எண்கள் யாருடைய பெயரில் முதன் முதலில் சிட்டா வழங்கப்பட்டது? சிட்டா பெயர் மாற்றம் செய்ய மேற்படி புல எண்களுக்கு மனு பெறப்பட்டதா ஆம் எனில் எப்போது ? தற்போது சிட்டா மற்றும் அடங்கல் யாருடைய பெயரில் உள்ளது அதன் நகலை வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்.
14. மேற்படிமேற்படி கிராமத்தில் சர்வே எண் ——-சர்வே எண்களுக்குஉரிய தற்போதைய நில வரைபடத்தின் நகல் தர வேண்டுகிறேன் .
15. மேற்படிமேற்படி கிராமத்தில் சர்வே எண் ——-சர்வே எண்களுக்கு பசலிக்கான தீர்வை காரணமாக பசலி(தீர்வை ) வரி 1899 ஆம் ஆண்டு முதல்2021 ஆண்டு வரை யாருடைய பெயருக்கு வழங்கப்பட்டது. கொடுத்த இரசீதின் நகலை தரவேண்டுகிறேன்.
17. மேற்படிமேற்படி கிராமத்தில் சர்வே எண் ——க்கு அதன் மொத்த அளவுகள் எத்தனை சென்ட், உட்பிரிகள் அவற்றின் நகல்களை தரவேண்டுகிறேன்.
தங்கள் உண்மையுள்ள
இடம்:
நாள்: .
எட்டு வகையான பட்டாக்கள் -
தெரிந்து கொள்வோம்
*********************************
ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும்.
ஒன்று பத்திரம்,
இன்னொன்று பட்டா.
பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம்,
பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம்.
இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்!
பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர்.
பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும்.
கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும்.
அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!!
1. யு.டி.ஆர் பட்டா:
********************************************
யூ.டிஆர்.பட்டா
மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து (வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து நம்முடையது பிறருடையைது என ஒமுங்குபடுத்தும் வேலையை போல்) மிக பெரிய அளவில் 1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யு.டி.ஆர. பட்டா (Updating Data Registry ) தந்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.
அதாவது மேனுவல் ஆவணங்கள் கணினி மயமானது முதல் இப்பொழுது வரை இதனை தான் பட்டா ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம், தற்பொழுது இவை எல்லாம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு விட்டது.
மேனுவல் பட்டா
இப்பொழுது நடக்கும் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் இந்த பட்டாவில் தான் நடக்கிறது. பட்டாவில் பெயரை சேர்த்தல், பட்டாவில் பெயரை மாற்றுதல், பட்டாவில் சர்வே எண் உட்பிரிவு செய்தல், போன்ற வேலைகளுக்கு இன்னும் பலர் அரசு,எந்திரத்துடன் போராடி வருகின்றனர்.
இன்னும் பலர், பட்டாவில் தந்தை பெயர் பிழை, தன் பெயர் பிழை, சர்வே எண் பிழை, அளவு பிழை என்று அதனை திருத்துவதற்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் நிறைய இளம் தலைமுறையினர் தன் பூட்டன் ,தாத்தா, பங்காளி ,அப்பா பெயரில் இருக்கும் பட்டாவை மாற்றாமல் நிலுவையில் வைத்து இருக்கிறார்கள்.
இவர்கள் பட்டாவை கிராம கணக்கரிடம் கொண்டு சென்றால் தான் பல நிதர்சனங்கள் புரியும்.
2. நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா:
**********************************************************************
தோராய பட்டா பின்பக்கம்
தோராய பட்டா முன்பக்கம்
யூ.டி.ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள், அளந்தார்கள்! நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள்ளைகாரன் காலத்திலேயே வகை படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது.
பெரும்பாலும் நத்தம் நிலம் பழைய ஊர்களிலேயே அமைந்து இருக்கும்.அந்த நத்தம் நிலத்திற்குதான் தோராய மற்றும் தூய பட்டா வழங்கினர்.
தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கியது.
நத்தம் நிலவரித்திட்ட தோராய பட்டாவில் ( பிழைகள், தவறுகள் இருக்கலாம் ) அதில் ஏதாவது சிக்கல்கள்,பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்க்கு கால அவகாசம் கொடுத்து கொடுக்கும் பட்டா, “தோராய பட்டா” இது ஒரு தற்காலிகமான பட்டா!
முழுமை விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம நிலவரி திட்ட தூயப்பட்டா ஆகும்
அதாவது கல்யாண பெண் மேக்கப்க்கு முன் மேக்கப்புக்கு பின் என்பதில் இருக்கும் வித்தியாசம்தான் தோராய பட்டாவுக்கும் தூயபட்டாவுக்கும் உள்ள வித்தியாசம். பெரும்பாலும் இரண்டு பட்டாவும் மேனுவலாகவே இருக்கும். பட்டா ஆவணத்தின் பின்புறம் நிலத்தின் வரைபடம் அளவுகளுடன் வரையபட்டு இருக்கும்.
ஒரு சிலர் தோராய பட்டா வாங்கியதும் பட்டா வாங்கிவிட்டாடோம் என்ற சந்தாதோஷத்தில் இருந்து விடுவார்கள். அதில் அளவுபிழைகள் இருக்கிறதா என நிலத்தை அளந்து ஒப்புமைபடுத்தி சரி பார்த்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் நத்தம் நிலத்தில் இதுவரை இவ்வளவு இடம் நீ அனுபவிக்கிறாய் என ஆவணபடுத்தபடவில்லை, தோராய பட்டா வழங்கும் போது நீங்கள் அனுபவிக்கும் இடம் ஆவண படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
தூய பட்டா:
நத்தம் நிலத்திறகு அரசு பட்டா வழங்குவது பொதுமக்களுக்கு என நினைக்க வேண்டாம். வரி விதிக்காமல் நீங்கள் அனுபவிக்கும் நிலத்தை வரி விதிப்புக்குள் கொண்டு வரவும், சாலை, குளம் ,பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகள் ஆகா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும் போது
பை புராடக்டாக தங்களுக்கு பட்டா வழங்கபடுகிறது.
எனவே நிலவரிதிட்ட தோராய பட்டா வழங்கும் போது நிலத்தின் அளவுகளை கட்டாயம் சரி பார்க்கவும் இன்னும் பலர் தோராய பட்டா வாங்கியதுடன் நின்று விடுவர். தூயபட்டா அடுத்த ஆறுமாதத்துக்குள் கொடுத்து இருப்பர். அதனை அணுகி வாங்காமலேயே தோராய பட்டாவையே நிரந்தரபட்டா என்று நினைத்து கொண்டு இருப்பர்.
3. ஏ.டி கண்டிசன் பட்டா :
*********************************************************************
ஏ.டி.கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டுமனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பர்.
மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி , பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார்.
அப்படி ஒப்படை செய்யும் போது , கொடுக்கும் பட்டா ஏ.டி.பட்டா ஆகும். அது பெரும்பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.
பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனிவட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும்.
முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்க கூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்
இதே தன்மையில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு 5௦ சென்டில் இருந்து ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும்.
4. நில ஒப்படை பட்டா:
*********************************************************************
நில ஒப்படை பட்டா
வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும். !
முன்னாள் ராணுவ வீரர்கள் , பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள் , நலிவுற்றவர்கள், அரவாணிகள், போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும். அதனை நில ஒப்படை பட்டா என்பர். இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். இதனை டி.கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.
5. டி.எஸ்.எல்.ஆர் பட்டா:
*********************************************************************
டி.எஸ்.எல்.ஆர் பட்டா
டி.எஸ்.எல்.ஆர் பட்டா என்பது டவுன் சர்வே லேன்ட் ரெகார்ட் ஆவணம் . இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்களை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கபடும் ஆவணகளில் இருந்து பொதுமக்களுக்கு ஒரு EXTRACT எடுத்து கொடுப்பார்கள் . இந்த TSLR EXTRACT என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும் .
கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும், இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது , அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும்.
ஆனால் கிராம பகுதி சர்வேகளில் ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்கலாம். அதனால் அதிக துல்லியமும் , எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யபடுகிறது.
6. தூசி பட்டா:
****************************************************************
தூசி பட்டா
கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் “C” பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் தூசி பட்டா என்று அழைக்கபடுகிறது.
அரசு நிலத்தின் மேல் இருக்கும் (புளியமரங்கள், பனை மரங்கள் , கனி தரும் மரங்கள், ) மரங்களை அனுபவிக்க பராமரித்து கொள்ள , மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா இதனை மர பட்டா என்றும் அழைப்பர்.
7. கூட்டு பட்டா:
*************************************************************************
தனிப்பட்டாவுக்கு நேர் எதிர் கூடுப்பட்டா , கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண் உட்பிரிவு, FMB – சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது, உதாரணமாக ஒரு பெரிய கேக்கை (யார் யாருக்கு எத்தனை துண்டு, எந்த பக்கம் என்று சொல்லாமல் ) நான்கு மகன்களிடம் கொடுத்து நீங்களே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் தான்.
நிலத்தில் நான்கு பேரோ, மூன்று பேரோ, இரண்டு பேரோ, அல்லது பல பேரோ ஒவ்வொரு மூலையில் நின்று அனுபவிப்பர். அவர்கள் பெயர்கள் எல்லாம் பட்டாவில் இருக்கும் ஆனால் சர்வே எண் உட்பிரிவு, அளவு பிரிவு, FMB உட்பிரிவு, செய்யப்பட்டு இருக்காது, பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா சிறந்தது, கூட்டு பட்டவை விட தனிப்பட்டா சிறந்தது.
தனி பட்டா மற்றும் கூட்டு பட்டா
8, தனிபட்டா:
***************************************************************
தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும் . மேற்படி நிலத்தின் சர்வே எண்ணில் தனியாக சப் டிவிசன் செய்யப்பட்டு இருக்கும். பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம்.
புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப்பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர், நில அளவு, புல எண் உட்பிரிவு, FMB சப் டிவிசன் , ஆகியவற்றில் 1௦௦% தெளிவாக இருக்கும்.
யு.டி.ஆர் பட்டா,நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா ஏ.டி.கண்டிசன் பட்டா , நில ஒப்படை பட்டா , டி.எஸ்.எல்.ஆர் பட்டா, தூசி பட்டா, ஆகிய 6 பட்டாவும் யாருக்கு எத்தன்மையில் வழங்கபடுகிறது என பிரிக்கப்பட்டு இருக்கிறது .
தனிபட்டா கூட்டுபட்டா என்பது பட்டா ஆவணத்தின் தன்மையை பொறுத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.
*எந்த ஆவணத்தை எங்க கேட்கணும்*
*இவை அனைத்தும் கிராம நத்தம்* *தவிர்த்து*
OSR(Original Settlememt Record)-survey done -1864 to 1898 first apply to district collector office then appeal to MRO(சென்னை record ஆபீஸ்) in Egmore, CHENNAI.
RSR(Resurvey Settlement Record)- survey done b/w 1901 to 1938= first apply district collector, then to 4 zonal office of surveys and last appeal to Chepauk office.
SLR - 1950 to 1955 ). It is in british metric system, units are in Acres, Cents, link(66feet) chain). First apply district collector office. ஜமீன், இனாம் நிலம் பற்றிய details தேட தேவைப்படும்.
SLR FMB -Units in British Metric system,
Apply directly or through RTI to chepauk Office.commisionerate of survey and settlememt records. (Used for FMB errors-survey errors, size errors(அளவு பிழை ), oulook error (உருவ பிழை)
RSLR-1955-1960. first apply district collector office.
A-Register--survey done during UDR time1980-1988).
It is a ledger that contains names,who owns private land and what extent.Also what is public lands like lake, pond, poramboku land and the extent (விஸ்தீரணம்).
So to find owner of a land before UDR patta, also it contains old Survey Number mentioned in old sale deed registered before 1980, we need A-register copy.
So, apply for village A register in VAO Office and Tahsildhar office.
UDR Patta or Computerised patta -1979 to 1987 tahsildhar or district collector (surveying and computerising except கிராம நத்தம், மாநகராட்சி, நகராட்சி).it is for nanjai, punjai and manavaari).
UDR FMB -Current FMB in VAO records i. e., UDR FMB -it is for individual survey --units are in metric system i. e., meters, square meters, hectares) Apply to VAO office and tahsildhar office.
1991-CLR -Compurisation of Land Records present in District Collector Office).
Village FMB -A0(A zero)size paper, 85 Rupees per page.
Apply directly or through RTI to chepauk Office.commisionerate of survey and settlememt records. (Used for FMB errors-survey errors, size errors(அளவு பிழை ), oulook error (உருவ பிழை ).
அடங்கல் --பயிர் ஆவண பதிவேடு --கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சர்வே என்னில் தற்போது யார் விவசாயம் செய்கிறார்கள், என்ன பயிர், எவ்வளவு hecter இல் பயரிட படுகிறது. Owner of the land may be different from the cultivator.apply in VAO or tahsildhar office.
நத்தம் நிலவரி திட்டம் for residential land l--not yet computerised. Only few villages computerised.
தோராய பட்டா -temporary பட்டா given during survey of நத்தம் நிலவரி திட்டம். Usually comes with time frame. i. e., objections like name, size should be corrected within given time.
தூய பட்டா - பட்டா given after objections corrected in தோராய பட்டா.இடத்தோட classification is mentioned as கிராம நத்தம்.
TSLR Extract -மாநகராட்சி, நகராட்சி, apply in city's tahsildhar office.
Assignment patta like AD condition patta or HSD பட்டா or ராணுவ வீரர்,தமிழ் புலவர், சுதந்திர போராட்ட தியாகிக்கு கொடுக்கபடும் பட்டா ---Apply in tahsildhar or collector office.
OSR (Original Settlememt Record)-கணக்கெடுப்பு முடிந்தது-1864 முதல் 1898 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பியுங்கள் பிறகு எழும்பூர், MADRAS இல் MRO (சென்னை ரெக்கார்டு ஆபீஸ்)
RSR (Resurvey Settlement Record)-சர்வே செய்யப்பட்டது b / w 1901 to 1938 = முதலில் மாவட்ட ஆட்சியர், பிறகு 4 மண்டல கணக்கெடுப்பு மற்றும் சேப்பாக் அலுவலகத்தில் கடைசி முறையீடு செய்யவும்.
SLR-1950 to 1955). பிரிட்டிஷ் மெட்ரிக் அமைப்பில் உள்ளது, யூனிட்டுகள் ஏக்கர், சென்ட்டுகள், இணைப்பு (66 அடி) சங்கிலி) உள்ளது. முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பியுங்கள். ஜமீன், இனாம் நிலம் பற்றிய விபரங்கள் தேவைப்படும்.
பிரிட்டிஷ் மெட்ரிக் அமைப்பில் SLR FMB-Units,
நேரடியாகவோ அல்லது RTI மூலமாக சேப்பாக்க அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கவும். சர்வே மற்றும் செட்டில்மெம்ட் ரெக்கார்டுகளைத் துவக்குங்கள். (FMB பிழைகள்-கணக்கெடுப்பு பிழைகள், அளவு பிழைகள் (அளவு பிழை), oulook error (உருவ பிழை.
RSLR-1955-1960. முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பியுங்கள்.
A-Register -- UDR நேரத்தில் செய்யப்பட்ட கணக்கெடுப்பு 1988).
தனியார் நிலம் யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் பெயர்கள் அடங்கியிருக்கிறது. ஏரி, குளம், பொரம்போக்கு நிலம் மற்றும் அளவிலான (விஸ்தீரணம்) பொது நிலங்கள் என்ன.
எனவே UDR பட்டாவுக்கு முன் ஒரு நிலத்தின் உரிமையாளரை கண்டுபிடிக்க, 1980 க்கு முன் பதிவு செய்யப்பட்ட பழைய விற்பனையில் குறிப்பிடப்பட்ட பழைய கணக்கெடுப்பு எண்ணும் உள்ளது, எங்களுக்கு A-பதிவு நகல் தேவை.
எனவே, VAO அலுவலகம் மற்றும் Tahsildar அலுவலகத்தில் கிராம A பதிவுக்கு விண்ணப்பிக்கவும்.
UDR பட்டா அல்லது கம்ப்யூட்டரிஸ் பட்டா-1979 to 1987 தஹ்சில்டர் அல்லது மாவட்ட ஆட்சியர் (ஆய்வு மற்றும் கம்ப்யூட்டரிசிங் கிராம நத்தம், மாநகராட்சி, நகராட்சி). இது நஞ்சை, புஞ்சை மற்றும் மானாவாரி ஆகியவற்றுக்கானது).
UDR FMB-தற்போதைய FMB VAO பதிவுகள் i. e., UDR FMB-இது தனிநபர் கணக்கெடுப்புக்கானது -- யூனிட்டுகள் மெட்ரிக் அமைப்பில் உள்ளன. இ., மீட்டர், சதுர மீட்டர், ஹெக்டேர்) VAO அலுவலகம் மற்றும் tahsildhar அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
1991-CLR-மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலப் பதிவுகளைக் கணக்கிடுவது).
கிராமத்து FMB-A0 (A Zero) சைஸ் பேப்பர், ஒரு பக்கத்திற்கு 85 ரூபாய்.
நேரடியாகவோ அல்லது RTI மூலமாக சேப்பாக்கம் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கவும். சர்வே மற்றும் செட்டில்மெம்ட் ரெக்கார்டுகளைத் துவக்குங்கள். (FMB பிழைகள்-கணக்கெடுப்பு பிழைகள், அளவு பிழைகள் (அளவு பிழை), oulook error (உருவ பிழை)
அடங்கல் --பயிர் ஆவண பதிவேடு --கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சர்வே என்னில் தற்போது யார் விவசாயம் செய்கிறார்கள், என்ன பயிர், எவ்வளவு hecter இல் பயரிட படுகிறது. Owner of the land may be different from the cultivator.apply in VAO or tahsildhar office.
நத்தம் நிலவரி திட்டம் for residential l -- இன்னும் கணினிப்படுத்தப்படவில்லை. சில கிராமங்கள் மட்டுமே கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
நத்தம் நிலவரி திட்டம் கணக்கெடுப்பின் போது தோராய பட்டா பட்டா கொடுக்கப்பட்டது. வழக்கமாக காலச் சட்டத்துடன் வரும். அதாவது பெயர், அளவு போன்ற ஆட்சேபனைகளை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் திருத்திக் கொள்ள வேண்டும்.
தூய பட்டா - பட்டா given after objections corrected in தோராய பட்டா.இடத்தோட classification is mentioned as கிராம நத்தம்.
TSLR Extract -மாநகராட்சி, நகராட்சி, apply in city's tahsildhar office.
Assignment patta like AD condition patta or HSD பட்டா or ராணுவ வீரர்,தமிழ் புலவர், சுதந்திர போராட்ட தியாகிக்கு கொடுக்கபடும் பட்டா ---Apply in tahsildhar or collector office.
8 மாவட்டங்களை தவிர 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி. கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரையில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு https://t.co/IukobOOIyP
TNCoronaUpdates on Twitter “8 மாவட்டங்களை தவிர 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி. கோவை, திருப்பூர், சேலம், கரூர.....
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
No 4/750 Muthamil Nagar 2 Nd Street, Paraniputhur Main Road, Iyyapanthangal, Near Prabha Hardwares, , Poondhamalli Trunk Road, Porur-600116, Opp Andra Bank
Chennai
600122
Opening Hours
Monday | 9am - 8pm |
Tuesday | 9am - 8pm |
Wednesday | 9am - 8pm |
Thursday | 9am - 8pm |
Friday | 9am - 8pm |
Saturday | 9am - 8pm |
Chennai, 600044
Individual and Company Accounting and Tax preparation and TDS returns. Upload PF and ESI for the emp
Chennai, 603110
GST Suvidha Kendra is one stop solution for multiple services like GST Service, IT Return Service, UTI PAN Services, Company Services, E-Way Bill Service and many more at effective...
Chennai
TAX E-FILING FOR SALARY EMPLOYEES, PROVIDING GOOD SERVICES AND GET REFUND MOONLIGHT TAX FILING NUNGAMBAKKAM CHENNAI 9500068973
Chennai, 600015
Premium tax consultants for you and your business. We are the one of the very few top firms in India/
No 51, Rattha Tek Meadows, Tower A, 4th Floor, OMR, Sholinganallur
Chennai, 600119
Tax Village offers various services related to Taxation, Auditing & Consultation.
Chennai, 600116
One Stop Business Solutions to Start / Run your Business without struggle
Mannivakkam
Chennai, 600048
Simplify your tax filing with Moshi Tax Services, your trusted partner for accurate and timely income tax preparation. Established in 2018
Chennai, 600077
* GST filing * Income Tax return filing * Book keeping services * TDS filing
Chennai
Income Tax##Internal and Management Audit##GST##Virtual CFO##Fund raising
Plot No. 46, Shop No. 2 , 1st Floor , 19th Street, Balaji Nagar , Puzhuthivakkam
Chennai, 600091
Smartcorp is one of the preferred brands in MSME sector that offers professional services in different areas of expertise - Accounting/Book Keeping / Statutory Compliance, Internal...