Mannady Kaka

Mannady Kaka

MannadyKaka மண்ணடி காக்கா

10/04/2024

நாகூர் பெருநாள் சிறப்புத் தொழுகை

Photos from Mannady Kaka's post 10/04/2024

நோன்புப் பெருநாள் 2024.
* تقبل الله منا ومنكم صالح الأعمال

10/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு.

‎تقبل الله منا ومنكم عملا صالحا

*தகப்பலல்லாஹு மின்னா வமின்கும் அமலன் ஸாலிஹன்*

தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நோன்பு பெருநாள் ஈதுல் பித்ர் நல் வாழ்த்துக்கள்…!!!*

அல்லாஹ் உங்கள் ஈருலக வாழ்விலும் அபிவிருத்திச் செய்வானாக...!!!

ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..!!! உங்களின் துஆக்களில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

09/04/2024

Taqabbalallahu Minna wa Minkum (تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَ مِنْكُمْ)

Eid Mubarak to you and your loved ones! May Allaah accept our prayers, good deeds and sacrifices and shower us with his blessings. Aameen.!

09/04/2024

🚩அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

🚩இன்ஷா அல்லாஹ்

🚩 நாளை 10/4/24 காலை 7:15 மணி அளவில் தோப்புத்துறை - தேத்தாக்குடி தெற்கு மஸ்ஜிதுல் முஸ்லிமீன் (JAQH மர்கஸ்) பின் புற வளாகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெறும்.

🚩அது சமயம் சகோதர சகோதரிகள் முன் கூட்டியே ஒழு செய்துவிட்டு வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🚩பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

🚩இங்ஙனம்

🚩 மர்கஸ் நிர்வாகம், ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - தோப்புத்துறை

08/04/2024

ரமழானின் முத்துக்கள்...

07/04/2024

சர்வதேச பிறை அடிப்படையில் நோன்பு துவங்கிய சகோதரர்களுக்கு பிறை தேடல் அறிவிப்பு!

06/04/2024

#இன்றையசிந்தனை
#தர்மம்
(7-4-24)

03/04/2024

தோழர் ஆர்.சச்சிதானந்தம் & நெல்லை முபாரக் - வெல்வது யார்.?

பத்தாண்டுக்கால மத்திய பாஜகவின் உணவு அரசியல், உடை அரசியல், கல்வி அரசியல், பாரபட்ச அரசியல் என சிறுபான்மை சமூகத்தை சிறுகசிறுக சிதைக்கும் செயல்பாட்டில் முழு ஒத்துழைப்பு வழங்கியது மாநிலத்தில் ஆண்ட அதிமுக அரசு.

தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் பற்றிய வெறுப்பு பேச்சினால் தான் வெளியே வந்தார்களே தவிர, பாஜகவின் கொள்கையை கண்டித்து வரவில்லை.

அண்ணாமலை என்ற நபரின் மீதுள்ள வெறுப்பினால் பாஜகவில் இருந்த இரத்ததில் ஊறி போன சங்பரிவார சிந்தனை தலைவர்கள் பலர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இவர்கள் எல்லாம் கட்சிதான் மாறியுள்ளனரே தவிர, கொள்கை மாறவில்லை.

காங்கிரஸிலும், பாஜகவிலும் இல்லாமல் தனித்து விடப்பட்ட அதிமுக குறைந்த 5 சீட்டு வென்றாலும் (வாய்ப்பேயில்லை) நாளை பாஜக ஆட்சி அமைக்க இந்த 5 சீட்டுடன் 'மோடி எங்கள் டாடி' என கோஷமிட்டவாறு பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பார்கள்.

இதுவெல்லாம் இஸ்லாமிய சமூகம் நன்கு அறிந்ததே

முஸ்லிம்கள் ஓட்டு பொதுவாகவே அதிமுகவிற்கு விழவே விழாது,

இதில் CAA NRC NPR சட்டம் இயற்ற காரணமான அதிமுகவை முஸ்லிம்கள் ஒரு போதும் ஆதரிக்கமாட்டார்கள்..

கூட்டணி என்ற பெயரில் தோற்கும் தொகுதியை SDPI க்கு வழங்கி, அதுவும் அதிமுகவின் சின்னத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முபாரக்கை நிறுத்தியுள்ளது.

ஒருவேளை நெல்லை முபாரக் வென்றால் அவர் sdpi எம்பி அல்ல, அதிமுக எம்பி... அதிமுகவின் கொறடாவின் உத்திரவுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

தனித்து sdpi நின்றால் இஸ்லாமிய ஓட்டுகள் மொத்தமாக கிடைத்திருக்கும்.

எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிட்டு பாஜக ஆதரவு நிலை எடுக்கும் அதிமுகவை நம்பவே நம்பாது இஸ்லாமிய சமூகம்.

Spdi கட்சியும் நெல்லை முபாரக்கும் எப்படி குட்டிகரணம் அடித்தாலும், இஸ்லாமிய மக்களின் ஓட்டை வாங்கிட முடியாது.

நேற்று வரை 'பாசிசத்தை எதிர்ப்போம்' என்று கோஷமிட்ட sdpi கட்சி..

உண்மையாக பாசித்தை நேரடியாகவும், கொள்கைரீதியாகவும் எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியை எதிர்த்து நிற்கிறது.

நாளைக்கு திமுகவும் பாஜக ஆதரவு நிலை எடுக்கலாம் என்று sdpi கருதினால் திமுக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதியை அதிமுகவிடம் கேட்டு வாங்கி நின்றிருக்க வேண்டும்..

பாசிச எதிர்ப்பு கட்சியான இடது சாரி கட்சிகள் நிற்கும் தொகுதியை sdpi தேர்ந்தெடுத்திருக்க கூடாது.

ஆனால் sdpi க்கு நோக்கம் பாசிச எதிர்ப்பு அல்ல, ஒரே ஒரு MP யாவது வேண்டும் அதற்கு எந்த நிலையில் கீழறங்கி போகலாம் என்ற பேராசை தான்..

இந்த பேராசைக்கு இஸ்லாமிய சமுதாயம் இணங்காது.

சிறுபாண்மையினரின் காவலர் எடப்பாடியார், அம்மா வழியில் உயிரை அர்ப்பணம் செய்வேன் என உணர்ச்சி பொங்க முபாரக் பேசினாலும்..

அதிமுக கட்சியினர் உட்பட மாற்று மதமக்களின் ஓட்டு கூட திண்டுக்கல் மண்ணின் மைந்தன் இல்லை என்பதால் நெல்லை முபாரக்கிற்கு கிடைக்காது.

எனவே நெல்லை முபாரக்கிற்கு தோல்வி உறுதி...

* திண்டுக்கலில் நன்மதிப்போடு வலம் வரும் தோழர் ஆர்.சச்சிதானந்தம் 37 வருட முழு நேர அரசியல் வாழ்க்கை.

26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக 1996 - 2006 வரை இரண்டு முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்.

திண்டுக்கல் என்றாலே கம்னியூஸ்ட் கட்சிக்கு என தனி செல்வாக்கு உண்டு.

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர்களும் ஆர்.சச்சிதானந்தம் பக்கபலமாக இருப்பவர்கள்.

பாசிசத்தை கொள்கை ரீதியாக எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் திண்டுக்கல் வேட்பாளர் தோழர் ஆர்.சச்சிதானந்தம்

குறைந்த பட்சம் 5 லட்சத்திற்கு அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவார்.

2 வது இடம் பாமக..
3 வது இடம் அதிமுக நெல்லை முபாரக்...

#கபீர்தக்கலை

Mohamed Yousuf Riaz

03/04/2024

ஏழை மக்களின் துயர்துடைக்கும்
நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

#தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிரமாங்களில் அடிப்படை வசதிக்கு கூட வழியில்லாத ஏழை எளியவர்களுக்கு உதவும் விதமாகமாகவும் அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுத்து அதை நிவர்த்தி செய்யும் விதமாக தர்மம் என்ற பெயரால் வீட்டுவாசல்களில் நாளுக்கு நாள் மிஸ்கீன்கள் பெருகிவரும் அவல நிலையை போக்கும் விதமாகவும், ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என்பது நமதூர் மக்களின் எண்ணமாக இருந்து வந்தது.

இந்த உன்னத எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக கடந்த 13.08.2005 சனிக்கிழமை அன்று மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகத்தில் வைத்து அலோசனை செய்யப்பட்டு “அல் பத்தாஹ் உதவும் அமைப்பு” (பைத்துல்மால்) என்ற பெயரில் ஓர் அமைப்பு அல்லஹ் மாபெறும் கிருபையால் துவங்கப்பட்டது. (அல் ஹம்துலில்லாஹ்)

அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள் :
• ஏழை,எளியவர்கள் (யாசிப்போர்கள்) இவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தர்மங்களை முறைப்படுத்துதல்.
• வட்டி கொடுமைகளிலிருந்து சமுதாயத்தை பாதுகாத்தல்.
• இயற்கை சீற்றம் மற்றும் பேரழிவுகளினால் பாதிக்கப் பட்டோருக்கு மத,இன பேதமின்றி உதவிக்கரம் நீட்டுதல்.
• ஏழைகளின் ஜனாஸா செலவுக்கு உதவி செய்தல்.
• ஏழை,எளிய சிறுவர்களின் கத்னா( சுன்னத்) செலவுக்கு உதவுதல்.
• ஏழை,எளிய மாணவர்களின் உலக மற்றும் மார்க்க கல்விக்கு உதவி செய்தல்.
• விதவைகள் மற்றும் கைவிடப்பட்டோர்களுக்கு அடிப்படை தேவைக்காக சிறிய தொகையை மாதம்தோறும் அளித்தல்.
• ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு வகைக்கு உதவிச் செய்தல்.
• வசதியற்றவர்களின் பழுது அடைந்த கூரை வீடுகளை செப்பனிடுதல்.
• மருத்துவ முகாம் அமைத்து ஏழை,எளியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்தல்.
• இரத்ததான முகாம் அமைத்து அவசர நிலைக்கு உதவி செய்தல்.
• பிரயாணத்தில் உடைமைகளை இழந்து பரிதவிப்பவருக்கு பிரயாண செலவுக்கு உதவி செய்தல்.

இவ்வாறான உன்னத உயரிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு அமைப்பு துவங்கபட்டது, துவங்கப்பட்ட நாள்முதல் பல சேவைகளை செய்து வருகிறது.

ஏழை மக்களின் துயர்துடைக்கும் இ ந் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.

அல் பத்தாஹ் உதவும் அமைப்பு (பைத்துல்மால்)
மஸ்ஜிதுல் முஸ்லிமீன் வளாகம்,
109/1,மர்க்கஸ் தெரு,தேத்தாகுடி தெற்கு,
தோப்புத்துறை, நாகை மாவட்டம்

போன்: ‭+91 98945 30893‬,+91 94881 30415‬
Whatsapp : +91 7200390093.

அமீரகத்தில் தொடர்புக்கு…
‭‬+971 56 231 8305‬, ‭+971 50 516 7561,. +971 56 251 8481

சவுதி அரேபியாவில்...
‭‬ +966 50 885 0755, +966 53 386 9247

சிங்கப்பூரில் தொடர்புக்கு...
‭+65 8366 4369‬, ‭ +91 73738 07071 (WhatsApp Call),

02/04/2024

வெயில் பொல பொலனு பொலக்குது

31/03/2024

மகத்துவமிக்க (லைலத்துல் கத்ர்) இரவின் சிறப்புப் பிரார்த்தனை...

அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ரை அடைந்தால் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன்.

அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன்
துஹிப்புல் அஃப்வ, ஃபஅஃபு அன்னீ"
(இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பை
விரும்புவன்; எனவே என்னை
மன்னித்துவிடு!)

30/03/2024

High Wycombe பகுதியில் யாரும் இருக்கீங்கலா?

28/03/2024

ரமழானில் கடைசி பத்து நாட்களில் அதிகம் ஓத வேண்டிய துஆ

28/03/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Mohamed Ibrahim Liyakkath, முகம்மது ஃபாருக், Niyamathullah Akbar, Mahaboob, Sun Graphics Naina Mohamed, Ayyappan Gammon, AB Akbar, Nataraj Rangasamy, Samiyullah Ansari, Palani Samy

27/03/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வா பராக்காத்துஹு

27/03/2024

ஸதக்கத்துல் ஃபித்ராவை முன்கூட்டியே வழங்குங்கள்!

#நோன்பில்_நிகழ்ந்த_தவறிலிருந்து #தூய்மைப்படுத்துவதற்காகவும் #ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)
உங்களுடைய #பித்ரா தொகைகள் சென்ற பல வருடங்களைப் போன்று இந்த வருடமும் முறையாக ஏழை எளிய மக்களிடம் சென்றடைய மேல் உள்ள எண்ணில் பித்ரா தொகையை செலுத்தி ஒத்துழைப்பு தாருங்கள்...

மஸ்ஜிதுல் முஸ்லிமீன் பள்ளிவாசல் (JAQH மர்கஸ்)
தேத்தாகுடி தெற்கு, #தோப்புத்துறை,
நாகப்பட்டினம் மாவட்டம்.

Photos from Mannady Kaka's post 27/03/2024

உடலை பட்டினி போடப்படும் போது என்ன நடக்கிறது?

படத்தில் இருப்பவர் ஜப்பானிய உடலியல் மூலக்கூறு உயிரியலாளர் யோஷினோரி ஓசுமி என்பவர். 2016 ஆம் ஆண்டில், அவர் உடலியல் மூலக்கூறில் "الإلتهام الذاتي" Auto phagy" உடல் தன்னையே உண்ணுதல் பற்றிய மருத்துவ ஆய்வுக்காக நோபல் பரிசை வென்றார்.

அதாவது உடல் 8 மணி நேரத்திற்கு குறையாமலும் 16 மணி நேரத்திற்கு கூடாமலும் பசியுடன் இருக்கும்போது, அது தன்னைத்தானே உண்ணுகிறது, அல்லது உடல் செல்கள் தன்னைத்தானே உண்டு புதுப்பித்துக் கொள்கிறது என்ற மருத்து உண்மையை கண்டு பிடித்தார்.

மேலும் இந்த செயல்முறை பற்றி ஓசுமி கூறும் போது, உடல் பட்டினியாக இருக்கும் போது, உடலின் அனைத்து திசுக்களில் இருந்தும் விசேட புரதங்கள் சுரந்து, அவைகள் பெரும் துடைப்பங்கள் போன்று
சுற்றித் திரிந்து, உடலில் காணப்படும் இறந்த செல்கள், புற்றுநோய் செல்கள் மற்றும் சிதைவுற்ற செல்களை மறுசுழற்சி செய்து, புதுப்பித்துவிடுகின்றன.

இப்போதும் கூட மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளை
வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உண்ணாமல் குடிக்காமல் பட்டினிக்கு உட்படுத்தி "பட்டினி சிகிச்சை"
அளித்து வருகின்றனர்.

2016 ஆம் ஆண்டு மருத்துவத்துக்காக நோபல் பரிசின் கருப்பொருளும் இதுவாகவே இருந்தது.

நோன்பு பற்றி வான் மறை வசனம் ஒன்று பின்வருமாறு கூறுகிறது:

"நீங்கள் நோன்பு நோற்பதானது உங்களுக்கே நன்மையானதாகும்."

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF

26/03/2024

தொட முடியாத உயரத்தில் உன் கனவுகள் இருந்தாலும், தொட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்யலாம்!

26/03/2024

அரசியலுக்காக ஒரு போதும் சகோதரத்துவத்தை உடைக்காதீர்கள்!
ரமலான் மாதத்தில் நன்மையை பெறுங்கள்! யாரையும் நோக அடிக்காதீர்கள்..

Want your business to be the top-listed Media Company in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

நாகூர் பெருநாள் சிறப்புத் தொழுகை
பழைய வீடியோதான்.. ஆனால் இப்போது இது இந்த நேரத்தில் தேவையானது...     நாட்டு  ⚖️ நடப்பு_
ஜம்மு-காஷ்மீர்: குல்மார்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தீ விபத்து; பனிக்கட்டிகளை வீசி தீயை அணைத்த உள்ளூர்வாசிகள்.
#அமைதியை_தேடி #வாழ்வியல்_கண்காட்சி! மற்றும் #பள்ளிவாசலை_பார்வையிடும்_நிகழ்ச்சி !ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (J...
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்படாத இஸ்லாமிய சிறைவாசிகள்..கால் நூற்றாண்டுக்கு மேலான சிறைவாசத்திற்குப் பின் வெளி...
சென்னை பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல்...
மனிதநேயம் மலரட்டும்!#சாப்பாடு தேடி அலைஞ்சோம்.பள்ளிவாசலில் கொடுத்தார்கள்...#இருக்க இடமின்றி தவித்தோம். பள்ளிவாசலைத் திறந்...
#பாலஸ்தீன், #இஸ்ரேல் வரலாறுகளை நன்கு அறிந்தவர்கள் போல் சமூக வலைதளங்களில் பாலஸ்தீன ஹமாஸ் இயக்க போராளிகளை ஏதோ ஒரு கொடூர தீ...
ஹஜ் பயணம் செல்ல...இந்தியா சவுதி இடையே  ரயில் பயணம் மூலம்  இந்தியாவிலிருந்து மக்காவுக்கு ரயிலில் சென்று ஹஜ்ஜை நிறைவேற்ற த...
ஆண்களை பாராட்ட  வேண்டாம்..!  தூக்கி கொண்டாடவும் வேண்டாம்..!! ஆண்களின் வாழ்வாதாரம் எப்படி திண்டாடி  போய் கொண்டு இருக்கிறத...
#கர்நாடக பாஜக நடத்துன போராட்டத்துல எவனோ தேன் கூட்டை கலைச்சுவிட்டுட்டான்.. தேனி தெறிக்கவிட்ருச்சு 🤣
Relax… கொஞ்சம்  ரெலாக்ஸ்...

Category

Website

Address


Mannady Street
Chennai
614809