Stone Quarry, Crusher & Lorry Owners Association

This account belongs to STONE, QUARRY, CRUSHER OWNER ASSOCIATION- TAMILNADU. Maintained by - IEMS

02/04/2024

தூத்துக்குடி மாவட்டம்

கல்குவாரி கிரஷர் உரிமையாளர்கள் சங்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 28.03.2024 சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 𝐆𝐒𝐓 𝐍𝐨𝐭𝐢𝐜𝐞 சம்பந்தமாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 29/03/2024

𝐓𝐡𝐨𝐨𝐭𝐡𝐮𝐤𝐮𝐝𝐢 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭
During the monthly meeting in the Thoothukudi district on 𝐌𝐚𝐫𝐜𝐡 𝟐𝟖, 𝟐𝟎𝟐𝟒.

𝐊𝐞𝐲 𝐇𝐢𝐠𝐡𝐥𝐢𝐠𝐡𝐭𝐬

1. Owners of quarries and crushers are required to submit a 𝐗𝐞𝐫𝐨𝐱 𝐜𝐨𝐩𝐲 𝐨𝐟 𝐆𝐒𝐓 𝐧𝐨𝐭𝐢𝐜𝐞 notice that they receive to the association.

2. This allows the association to respond on their behalf. Failure to provide this copy will result in the association intervening in the response process.

3. An appeal has been lodged in the Supreme Court to seek a stay on the 𝐑𝐞𝐯𝐞𝐫𝐬𝐞 𝐂𝐡𝐚𝐫𝐠𝐞 𝐌𝐞𝐜𝐡𝐚𝐧𝐢𝐬𝐦 (𝐑𝐂𝐌) 𝐆𝐒𝐓.

4. To participate in this legal action, individuals must be registered members of the association. 𝐌𝐞𝐦𝐛𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐅𝐨𝐫𝐦𝐬 are available at the association office.

5. Participation in the 𝐒𝐮𝐩𝐫𝐞𝐦𝐞 𝐂𝐨𝐮𝐫𝐭 case is restricted to members of the association's group.

6. The meeting emphasized the importance of collective 𝐀𝐜𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐂𝐨𝐨𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 within the industry to address common issues and opportunities effectively.

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 13/03/2024

𝐃𝐢𝐧𝐝𝐢𝐠𝐮𝐥 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭

The Dindigul Quarry, Crusher & Lorry Owners Association organized a meeting to make crucial choices about several issues on 12.03.2024 @ 𝑺𝑳 𝑴𝒂𝒉𝒂𝒍 𝑵𝒊𝒍𝒂𝒌𝒐𝒕𝒕𝒂𝒊.

𝑲𝒆𝒚 𝒑𝒐𝒊𝒏𝒕𝒔 𝒅𝒊𝒔𝒄𝒖𝒔𝒔𝒆𝒅 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒎𝒆𝒆𝒕𝒊𝒏𝒈.

1. Owing to the 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭-𝐈𝐦𝐩𝐨𝐬𝐞𝐝 𝐏𝐞𝐧𝐚𝐥𝐭𝐢𝐞𝐬 for excessive 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐮𝐬𝐞, there was a discussion on methods to increase manufacturing expenses while ensuring compliance with legal limits.

2. Initiating 𝐥𝐞𝐠𝐚𝐥 𝐚𝐜𝐭𝐢𝐨𝐧 and imposing penalties on dealers who stock and sell tainted goods.

3. To organize the Quarry industry that adheres to government regulations

11/03/2024

𝐃𝐢𝐧𝐝𝐮𝐠𝐚𝐥 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭

The Dindigul district's Stone Quarry, Crusher & Lorry Owners Association had a meeting with the newly appointed Deputy Director of mineral mines.

During the meeting, the association's leader, secretary, and treasurer, along with others, demonstrated their respect by presenting the Deputy Director with a shawl.

This act demonstrated their appreciation for the Deputy Director's work in the mining sector.

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 09/03/2024

𝐃𝐢𝐧𝐝𝐮𝐠𝐚𝐥 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭- 𝟎𝟗.𝟎𝟐.𝟐𝟎𝟐𝟒

A meeting with Crushers, Quarry operators, and Owners of M sand businesses.

The main aim of the gathering was to establish new prices for M sand, P sand, and C sand. After thorough discussions, all participants collectively agreed on the updated pricing framework. Additionally, a photograph was taken to capture the moment everyone reached a consensus during the meeting.

**

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 03/11/2023

01-11-23 அன்று அதிகாலை கோயம்பத்தூர் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்களின் புதிய அலுவலக திருப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் மாநில சங்க தலைவர் திரு.K.சின்னசாமி அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

Focused Sectors:


Key Highlights:

02/11/2023

குவாரி தொழில் செய்யலாமா இல்லை, குவாரிகளை அரசங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு செல்லலாமா? என்று முடிவெடுக்கும் நிலைக்கு சுரங்க உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஜூலை மாதம் நடந்த ஒரு வார வேலைநிறுத்தத்தின் போது அரசங்கத்திடம் வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்ற படவில்லை மாறாக மைனிங் பீஸ் எனப்படும் ராயல்டி தொகையை இரு மடங்கு அதிகமாக்கி விட்டனர்.

புதிதாக கனிம வளத்துறை செயலாளர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் உத்திரவால் பல இடங்களில் சோதனை நடக்கிறது.

சில மாவட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு பைன் போட முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நமது சங்க உருபினார்கள் அபராதம் மற்றும் ராயல்டிக்கு தீர்வு வேண்டி அரசுக்கு பல்வேறு கோரிக்கை விடுத்து வருகின்றனர், மாநில அளவில் கனிமவள அதிகாரிகளுடன் பேச்சு வார்தை நடத்தி வருகின்றனர், நவம்பர் முதல் வாரதிற்குள் தீர்வு கிடைக்க செய்ய வேண்டும் என்று வலியுறித்தி வருகின்றனர்.

Focused Sectors:


Key Highlights:

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 01/11/2023

25-10-23 அன்று நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது
சேலம் மாவட்டத்தின் உறுப்பினர் தொகை, மற்றும் வருட சந்தா தொகை சுமார் 9,00,000 ( ஒன்பது லட்சம் ரூபாய்) யினை
சேலம் மாவட்ட தலைவர் திரு.ராஜா அவர்கள் மாநில தலைவர் திரு.K.சின்னசாமி ,பொதுச்செயலாளர் திரு.இரா.ஜெயராமன், பொருளாளர் திரு. பால சுப்ரமணியன் ஆகியோரிடம் வழங்கினார்.

Focused Sectors:


Key Highlights:

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 31/10/2023

25-10-23 அன்று சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்ட நம் மாநிலத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கு முதற்கண் நன்றி!

இக்கூட்டத்தில் நம் மாநில பொதுச்செயலாளர் திரு.இரா.ஜெயராமன் பல்வேறு கருத்துக்களை எடுத்து கூறினார்.

இக்கூட்டத்தில் நம் மாநில தலைவர் திரு.K.சின்னசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் திரு.K.சுப்பிரமணியம்

காஞ்சி-செங்கை :-
திரு.உதயராஜன்

கரூர் :- திரு.சுப்பிரமணியம்

சேலம் :- திரு.ராஜா

ராணிப்பேட்டை :- திரு.ருத்திர சேகரன்

விழுப்புரம் :- திரு.பாபு

திருவண்ணாமலை :- திரு.சுப்பிரமணி
திரு.வாஞ்சிநாதன்

மதுரை :- திரு.பிரபு

தூத்துக்குடி :- திரு.காசிராஜன்

பெரம்பலூர் :-
திரு.நந்தகுமார்
திரு.சத்தியராஜ்
திரு.ஜெயராம்

திண்டுக்கல் :-
திரு.பாலு

கோயம்புத்தூர் :-
திரு.கப்பல் நந்தகுமார்.

ஆகியோர் கலந்துக்கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் நாம் நம் முந்தைய கோரிக்கைகளை பற்றி ஆலோசனை செய்தும் அதனை தொடர்ந்து சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம்.

கோரிக்கைகள்

* 26-6-23 அன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது அதனை தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள், நமது துறை செயலாளர் மற்றும் நமது துறை இயக்குனர் அவர்கள் பேச்சுவார்த்தையின் போது 10 நாட்களுக்குள் கூட்டுக்குழு அமைத்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.
ஆனால் அக்கோரிகைகள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

*தமிழக முழுவதும் உள்ள குவாரிகளை வரைமுறைப்படுத்திதர ஒப்புதல் அளித்தனர் அதுவரை குவாரி அளவீடு செய்யும் பணியை செய்வதில்லை என்றும் இயக்குனர் உறுதி அளித்தார்.
ஆனால் தற்போது இயக்குனர் அவர்களின் செயல் தொழிலை முடக்கும் நோக்கத்துடன் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

* கொரோனா கால நீட்டிப்பு உத்தரவு பெரும்பாலான மாவட்டங்களில் கொடுத்த பர்மீட்டுகளை கனிமவளத்துறை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

* சமூக ஆர்வலர் என்ற பெயரில் வரும் பொய்ப் புகார்களின் அடிப்படையில் குவாரிகளுக்கு இடையூறு செய்தல், குவாரி அளவீடு செய்தல், பர்மீட்டுகளை நிறுத்துதல் போன்ற செயல்களால் தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழல் அனைத்து மாவட்டங்களிலும் உருவாகியுள்ளது.

* பேச்சுவார்த்தையின் போது வாகனங்களுக்கு Transit Pass தேவையில்லை என்றும் GST பில் மட்டுமே போதுமானது என்றும் முடிவு செய்யப்பட்டது ஆனால் தற்போது Transit Pass இல்லை என்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

* எந்த முன் அறிவிப்பும் இன்றி விழுப்புரம், தூத்துக்குடி, கரூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போன்ற மாவட்டங்களில் தற்போது குவாரி அளவிடும் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.

* நமது தொழிலில் குவாரிக்கு பர்மிட் ஒவ்வொரு முறையும் கொடுக்கும் பொழது மாவட்ட உதவி இயக்குனர் (A.D.Mines) குவாரியை பார்வையிட்ட பின்பு தான் நாம் கேட்கும் பர்மீட்டுகளை கொடுத்து வந்தார்கள். இன்று தேதி வரை இந்த நடைமுறைகளை தான் கடைப்பிடித்து வருகிறார்கள்.மேலும் (A.D.Mines) மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன் தான் பர்மீட்டுகளை குவாரி உரிமையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

தீர்மானம்

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும்,மற்றும் அரசாங்க உட்கட்டமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் ஜல்லி மற்றும் M-Sand வினியோகம் செய்தும் அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டியும், அதை மேலும் உயர்த்த செய்ய வேண்டியவை குறித்தும், அமைதியான முறையில் தொழில் புரிந்து வரும் குவாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாததால் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி குவாரி,கிரசர் தொழிலை செய்ய முடியாமல் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்பதை கருத்தில் கொண்டும்.

மேலும் குவாரி உரிமையாளர்கள் கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு அனைத்து லாரி சங்கத்துடன் இணைந்து கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டமாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்படக்கூடும் என்பதை மனதில் கொண்டும் அதற்கு ஏற்ப நாம் செயல்படுவோம்.

Focused Sectors:


Key Highlights:

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 28/10/2023

தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் சென்னை நந்தனத்தில் அமந்துள்ள Orchid Residency-யில் நடைபெற்றது.

தேதி: 25.10.2023 அன்று புதன்கிழமை
நேரம்:காலை 10 மணி அளவில்.

தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் மாநில சங்க தலைவர் திரு.K.சின்னசாமி அவர்கள் தலைமையில்,

பொதுச்செயலாளர் திரு.இரா.ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

லாரி மற்றும் கல்குவாரி நிர்வாகிகளும், உரிமையாளர்களும் இந்நாட்களில் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர், அதில் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்னும் ஆலோசனை வளங்கவே இந்த கூட்டம் நடைபெற்றது.

லாரி மற்றும் கல்குவாரி நிர்வாகிகளும், உரிமையாளர்களும் மேற்கொள்ளும் இன்னைலகள் என்னென்ன?

1. கல்குவாரிகள் அளந்து அபராதம் விதிப்பது தொடர்கிறது.

2. Transit pass இல்லை என்ற காரணத்தை கூறி வாகனத்தை பறிமுதல் செய்து வாகன உரிமையாளரையும் கல்குவாரி உரிமையாளரையும் கைது செய்யும் நடவடிக்கை துவங்கியுள்ளனர்.

3. மேலும் சில கல்குவாரிகளுக்கு permit-யை நிறுத்துவது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டு நமக்கு மிகப்பெரிய பெரிய அபராத தொகையை விதித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆகையால் நமது உறுபினார்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதே இந்த ஆலோசனை கூட்டதின் நோக்கம். இது போன்ற கடினமான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்று கூடி கலந்து ஆலோசித்து முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், மண்டல நிர்வாகிகளும், மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் மிகச்சிறப்பாகவே நடைப்பெற்றது. இதுபோலவே என்றும் நாம் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்

Focused Sectors:

Key Highlights:

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 13/10/2023

11-10-2023 அன்று மாலை 7 மணியளவில் தென்காசி மாவட்ட கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் அச்சங்க அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்க,
தலைவர் திரு.R.N.குமார்,
செயலாளர் திரு.A.C.ஜெகதீஷ்,
பொருளாளர் திரு.S.சையது இப்ராஹிம்
ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது ,

தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் மாநில சங்க தலைவர் திரு.K.சின்னசாமி அவர்கள் மற்றும்,

பொதுச்செயலாளர் திரு.இரா.ஜெயராமன் அவர்களும் கலந்துகொண்டனர்.

மத்திய-மாநில அரசின் சட்டத் திட்டத்தின்படி குவாரி, மற்றும் கிரஷர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயக்கப்பட வேண்டும்.

இக்கூட்டதில் எடுக்கப்பட்ட முடிவுகள்

*முறையாக வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு நடைச்சீட்டு ( Royalty) செலுத்த வேண்டும் என்றும்.
*SEIAA கமிட்டியில் குவாரி விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றும்.
*அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் குவாரி ,மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்.
*போலி M-Sand ஆலைகளை தடைச்செய்வது என்றும்.
*மாவாட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பதை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

இக்கூட்டத்தில்,
மாநில பொருளாளர் திரு.K.பாலசுப்பிரமணியம் அவர்கள்,
தேனி திரு.தண்டபாணி அவர்கள்,
தேனி திரு.சின்னராஜா அவர்கள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தை தென்காசி மாவட்ட நிர்வாகிகள் இரவு விருந்துடன் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். கூட்டம் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

கலப்படங்களை தவிர்த்து அரசாங்க வழிகாட்டின் படி தரமான பொருட்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், கல்குவாரி தொழிலாளர்கலுக்கும் மற்றும் உரிமையாளர்களுக்கும் எந்த ஒரு இடையூறும் இன்றி தங்களது பணிகளை தொடரவும் நமது சங்கம் அயராது பாடுபடுகிறது. மக்களின் நலனையும் தொழிலாளர் நலனையும் முதன்மையாக கொண்டே நமது சங்கம் இயங்கி வருகிறது.

Focused Sectors:


Key Highlights:

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 06/10/2023

தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க மதுரை மண்டல கலந்தாய்வு கூட்டம் கடந்த மாதம் 23 அன்று மதுரை மண்டல குழுத் தலைவர் திரு. S. A. லியாகத்அலி அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் சங்க மாநிலத் தலைவர் திரு. K. சின்னசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் சங்க பொதுச்செயலாளர், திரு, J. K. ஜெயராமன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மண்டலத்தில் கல்குவாரிகளின் தற்போதைய நிலவரம் என்ன? என்பதையும் பணிகள் சீராக நடைபெறுகிறதா? என்பதையும் அறிந்துககொள்ள வேண்டியே இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Focused Sectors:


Key Highlights:

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 20/09/2023

தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் அசோசியேஷன்
செயலாளர், திரு. J.k ஜெயராமன்
அவர்களது முன்னிலையில்
காஞ்சிபுரம் கல்குவாரி கிரஷர் அசோசியேஷன்
தலைவர் , திரு. உதயம் K. தனசேகர்
அவர்க்கள் தலைமையில் XCMG - XE250LC-K HYHYDRAULIC EXCAVATOR அறிமுக நிகழ்ச்சி நாள் 15-09-2023 @ 4PM நடைபெற்றது.

Focused Sectors




Key Highlights:

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 07/08/2023

KARUR QUARRY AND CRUSHER OWNERS ASSOCIATION
Habitat for Humanity

கரூர் குவாரி மற்றும் கிரஸ்சர் உரிமையாளர்கள் சங்கம்

குவாரி மற்றும் கிரஸ்சர் உரிமையாளர்கள், எம் சாண்ட் உற்பத்தியாளர்கள் எதற்காக இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டும் ?

• M - SAND ( எம் சாண்ட்) யில் புதிய தொழிநுட்ப முறை செயல்படுத்துதல் ( NEW TECHNOLOGY IMPLEMENTATION )

• M - SAND ( எம் சாண்ட்) உடைய BIS CERTIFICATION வாங்கும் முறைகள் மற்றும் வழிமுறைகள்

• M - SAND ( எம் சாண்ட்) யின் RETAIL MARKET ( சில்லறை சந்தை) - தங்களது வியாபாரத்தை எப்படி பெருகச்செய்வது

• புதிய தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் அறிவுரைகள் ( TECHNOLOGICAL GUIDANCE)

• M - SAND ( எம் சாண்ட்) யின் வணிக மேம்பாட்டிற்கான வணிக ஊக்குவிப்பு மற்றும் விளம்பர முறைகள் ( BUSINESS PROMOTION & ADVERTISEMENT METHODS )

• M - SAND ( எம் சாண்ட்) துறையின் வருங்கால திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை ( FORECAST OF M-SAND INDUSTRY )

• வரும் செப்டம்பர் மாதம் பதினைந்தாம் நாள் ( SEPTEMBER 15 th 2023 ) வெள்ளிக்கிழமையன்று , RESIDENCY , KARUR யில் நடைபெறுகிறது .

EVENT BY :
HABITAT , CHENNAI [ RESEARCH AND DEVELOPMENT]

PROJECT INCHARGE :
S.V.SURIYA
PH:NO : 9585288192
MAIL ID :[email protected]

Pre Registration:
S.V.SURIYA
PH:NO: 9585288192

MANAGING DIRECTOR
திரு.ராஜ் கணேஷ்,
IEMS - சென்னை,
PH:NO: 9962253522

Focused Sectors



Key Highlights:

08/07/2023

-சேலம் மாவட்டம்-
“சங்கங்களின் ஒற்றுமையில் சேலம் மாவட்டம் ; கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சி”

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக, நடைபெற்று வந்த வேலை நிறுத்தப்போராட்டம். முடிவடைந்த நிலையில், தற்போது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்குவாரி, கிரஷர் நிறுவனங்கள் கட்டுமான உற்பத்திப்பொருட்கள் தயாரிக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கல்குவாரி, கிரஷர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தங்களின் முழு பங்களிப்பையும், ஒற்றுமையையும் தந்ததுடன். தொடந்து அவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும் மும்முரமாக இருந்தனர்.

அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்று ஆவண செய்வதாக அறிவித்ததை தொடந்து சேலம் மாவட்டத்தில் தற்போது கல்குவாரி, கிரஷர் நிறுவனங்களின் வேலைகள் தொடர்வதால் பொதுமக்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கப்படுகின்றது.

05/07/2023

-திருப்பூர் மாவட்டம்-
“போராட்டத்திற்கு ஆரதரவளித்த அனைத்து சங்கங்களுக்கும் நன்றி ; பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்”

திருப்பூர் மாவட்ட கல் குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் அவர்கள் வேலை நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

எங்களது போராட்டம் தொடர்பாக சென்னையில் அமைச்சர், அதிகாரிகள், கல்குவாரி உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்தது. எங்களது பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சில கோரிக்கைகளை, அரசு தரப்பு மற்றும் கல்குவாரி தரப்பு என இரு தரப்புகளில் இருந்தும் குழு ஒன்றை அமைத்து பிரச்சினைகளை ஆராய்ந்து, அதன் பின்னர் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற எங்களது வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைத்து சங்கங்களுக்கும், எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களது போராட்டத்தால் கட்டுமான பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இனி வழக்கம் போல், கல்குவாரி கிரஷர், டிப்பர் லாரிகள், வாகனங்கள் இயக்கப்படும் என்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 05/07/2023

“வழக்கம் போல் தங்கள் வேலைகளை துவங்கிய கல்குவாரி, கிரஷர் நிறுவனங்கள்”

கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடத்தி வந்த போராட்டம். அரசு அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சொன்னதன் அடிப்படையில், போராட்டமானது கைவிடப்பட்டதை தொடர்ந்து. இன்றுமுதல் கல்குவாரி, கிரஷர் தொழிற்சாலைகள் வழக்கம் போல் இயங்கியது.

04/07/2023

"கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் தொடர்ந்து வந்த காலவரையற்ற போராட்டம் முடிவுற்றது"

கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் மாநில சங்கத்தின் தலைவர் சின்னசாமி அவர்கள் இன்று [04/07/2023] அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற கல்குவாரி சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பேராட்டத்தில் கலந்துகொண்டனர். அமைச்சரைப் பார்க்க, மாவட்டத்திற்கு 5 முதல் 10 பேர் வரை வந்திருந்தனர். அனைவரின் முன்னிலையிலும் அமைச்சர் கடந்த ஒரு மணி நேரமாக விளக்கமளித்தார். நேற்று காலையில் இருந்து Director of Geology mines Mr.நிர்மல்ராஜ் IAS மற்றும் secretory MR.ரவீந்தர் ரெட்டி IAS மற்றும் அமைச்சர் அவர்களுடன் கடந்த சில தினங்களாக மூன்று முதல் நான்கு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தபெற்ற நிலையில். இன்று [04/07/2023] காலை உறுப்பினர்கள் அனைவரையும் வரவழைத்து, அவர்கள் அனைவரிடமும் அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார் என்பதை தெளிவாக எடுத்துக்கூறினார். நம்முடைய பிரச்னைகளையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்து ஒரு குழுவை நியமிக்க இருக்கிறார். அமைச்சர் அமைக்கும் குழுவில் நமது சங்க உறுப்பினர்களும் அந்த குழுவில் இருப்பார்கள்.
நமது சங்க உறுப்பினர்களை உள்ளடக்கிய அந்தக் குழுவின் மூலமாக ஒவ்வொரு பிரச்சனையாக ஆராய்ந்து, அவற்றை தீர்த்து கொடுப்பதாக அமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளதனால். கடந்த ஒன்பது நாட்களாக கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சார்பாக நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுகிறோம். கடந்த ஒன்பது நாட்களாக போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த நமது உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வரும் காலங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்பொழுது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம், நம் பிரச்சனைகளில் இருந்து மீள முடியும் என்பதை கருத்தில் கொண்டு எப்பொழுதும் ஒற்றுமை காப்போம். நமது சங்கம் வளரவேண்டும் - அனைவரும் வளர வேண்டும் - ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்போம். இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறினார்.

29/06/2023

“கல்குவாரிகளை அதிகளவில் ஏலம் விட வேண்டும் ; ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏலம்”

கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டுமுறை மட்டுமே ஏலம் நடத்தப்பட்டது. ஏலம் தொடர்ந்து நடக்காத காரணத்தால், குவாரிகளுக்கு தேவையான உபபொருட்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை

இதனால் சரியான முறையில் ஏலம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏலம் நடத்தினால் பொதுமக்களுக்கு தேவையான கட்டுமானப்பொருட்களை தடையின்றி வழங்க முடியும்.

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 29/06/2023

“சாமானிய மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டுமான பொருட்கள் கிடைக்க ; கல்குவாரி நிறுவனங்களை அதிகரிக்க வேண்டும்”

சிறுகனிம வளங்கள் மிகுந்து காணப்படும் அனைத்து மாவட்டங்களிலும் அதிகளவில் கல்குவாரி தொழிற்சாலைகள் இயங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் கற்கள் எடுக்கப்பட முடியாத காரணத்தால் பிற மாவட்டங்களில் அதிகளவில் கல்குவாரிகள் அமைக்க அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.

சிறுகனிம வளங்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் அதிகளவில் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டால், சாமானிய மக்களுக்கு கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் விரைவில் கொண்டுசேர்க்கப்படும். அரசிற்கும் அதிகளவு வருமானம் கிடைக்கும்.

29/06/2023

“கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் ; கல்குவாரி வளர்ச்சி மேற்கொள்ள வேண்டும்”

கல்குவாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவை சுரங்க பகுதி என அறிவித்து அப்பகுதியில் வேறு எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்று குவாரிகளுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், கல்குவாரிகளுக்கும் 30 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து கல்குவாரி வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 29/06/2023

“குவாரி அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முறையை ; தொகுப்பாக மாற்றி முறையாக மாற்றிட வேண்டும்”

5 ஹெக்டேருக்கு மேல் கல்குவாரி தொழிற்சாலைகள் அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்க முகாம் நடத்தப்பட்டு அதன் பிறகு உரிமம் வழங்கப்படுகின்றது.

5 ஹெக்டேருக்கு மேல் கல்குவாரிகள் அமைப்பதை ஒரு தொகுப்பாக மாற்றி 25 ஹெக்டேராக அதிகரிக்க வேண்டும். மேலும், கல்குவாரிகளை புதுப்பிக்க விண்ணப்பித்தால் அதனை புதுப்பிக்க 2 ஆண்டுகள் வரை கால தாமதம் ஆகாமல் விரைவாக புதுப்பித்து தர அரசு முயற்சி செய்ய வேண்டும்.

29/06/2023

“கல்குவாரிகள் இயங்க புதிய நடைமுறையை மாற்றிடுக ; பழைய நடைமுறையை அமல்படுத்துக”

2014-ஆம் ஆண்டுக்கு முன்னால் இருந்த பழைய நடைமுறையை கல்குவாரி தொழில் இயங்க அரசு அனுமதியளிக்க வேண்டும். குவாரிகளில் உடைத்தெடுக்கப்படும் கற்களுக்கு உரிய பர்மிட் தொகையை செலுத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

கள ஆய்வு என்ற பெயரில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கல்குவாரிகளுக்கு வந்து ஆய்வு நடத்தி எங்களை சிரமத்திற்கு ஆளாக்க வேண்டாம். கள ஆய்விற்கு வரும் அதிகாரிகளுக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் நாங்கள் தர தாயாராக இருக்கின்றோம். ஆனால், கள ஆய்வை முறையான அறிவிப்போடு நடத்திட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

29/06/2023

“குவாரி ஓனர்களை மிரட்டும் போலி ஆர்வர்களும் ; அவர்கள் கொடுக்கும் போலி ஆதாரங்களும்”

சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் கல்குவாரிகளுக்கு எதிராக அரசு அதிகாரிகளுக்கு புகார்கள் அளிக்கப்படுகிறது. அந்த புகாரை அடிப்படை ஆதாரமாக வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, கல்குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டு முடக்கிவிடும் சூழலுக்கு நாங்கள் தள்ளப்படுகின்றோம்.

இதன் பின்னணியில் இருப்பது சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் நடமாடும் போலி சமூக ஆர்வலர்கள் எங்களுக்கு தொந்தரவு தந்துகொண்டிருக்கின்றனர். போலி சமூக ஆர்வளர்களையும், அவர்கள் கொடுக்கும் புகார்களையும் அரசும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து “இணைந்த கரங்களாக” எங்கள் தொழில் நிறுவனங்களை காப்பாற்ற ஒத்துழைக்க வேண்டும்.

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 29/06/2023

"76 ஆயிரம் கோடி மதிப்பிலான கனிமவளத்திருட்டு ; கனிமவளம் காக்க நடவடிக்கை வேண்டும்"

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கல்குவாரி கிரசர் தொழில் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியதால் தற்போது, குவாரி நிறுவனங்களை நடத்தமுடியாத அளவில் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றோம்.

தமிழ்நாடு முழுவதும் அரசு நிலங்களில் சுமார் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமவளத்திருட்டு நடக்கிறது. எனவே, உரியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 29/06/2023

“கல்குவாரி கிரஷர் உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ; 5,000 கோடி வருவாய் இழக்கும் தமிழக அரசு”

தமிழக கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், சுமார் 5,000 கோடி மதிப்பிலான வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் தமிழக அரசிற்கு ஏற்பட்டுள்ளது.

கல்குவாரி உரிமையாளர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மேலும் வலுப்பெறவும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கவும் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். இதனால், தமிழக அரசிற்கு சுமார் 5,000 கோடி மதிப்பிற்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

29/06/2023

“கல்குவாரி, கிரசர் ஊழியர்கள் போராட்டம் ; தமிழக அரசுக்கு ஏற்படும் கடும் வருவாய் இழப்பு”

வணக்கத்திற்குறிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கோருவது. தமிழகம் முழுவதும் கடந்த 26/06/2023 திங்கட்கிழமை முதல் 28/06/2023 புதன் கிழமை வரை தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வேலை நிறுத்தம் நடைபெறுவதால், அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான தொழில்கள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக சுமார் 2,500 கல்குவாரி நிறுவனங்கள் 3,000 கிரசர் தொழிற்சாலைகள் மற்றும் 55,000 லாரிகள் இயங்காமல் முடங்கிய நிலை உள்ளது. இதனால், தமிழகத்தில் பல நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் கட்டுமான தொழில்கள் முடங்கியுள்ளன.
குறிப்பாக சென்னை மெட்ரோ CMRL பணிகள், குடிசை மாற்று வாரிய பணிகள், தனியார் கட்டுமான நிறுவனங்கள், பொதுமக்கள் வீடு கட்டும் திட்டங்கள், கருங்கல், ஜல்லி, M-SAND போன்ற அடிப்படையான கட்டுமான பொருட்கள் கிடைக்காததால் அவர்களது வேலைகளையும் நிறுத்தம் செய்துள்ளனர். இதனால், சுமார் 30,00,000 கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல், 55,000 லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் போன்றோரின் வாழ்வாதாரமும் பாதிப்படுகிறது. இதனால் தமிழக அரசிற்கு அதிகளவு வருவாயை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கல்குவாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழகம் முழுவதும் முடங்கிக்கிடக்கும் கல்குவாரி, கிரஷர் தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க எங்களுடன் கலந்தாலோசித்து, ஆவண செய்ய வேண்டும் என்பதை, தமிழ்நாடு மணல் லாரி உரிமையளர்கள் சங்கம் சார்பாக பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி வணக்கம்

Photos from Stone Quarry, Crusher & Lorry Owners Association 's post 06/04/2023

IMMSE - International Mining and Mines Safety Expo
Date: March 16/17/18/19 - 2023
Venue: Codissia, Coimbatore
session-58.

Want your organization to be the top-listed Non Profit Organization in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

“கல்குவாரிகளை அதிகளவில் ஏலம் விட வேண்டும் ; ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏலம்” கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டுமுறை மட்டுமே ஏலம் நட...
“கல்குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க வேண்டும் ; கல்குவாரி வளர்ச்சி மேற்கொள்ள வேண்டும்”கல்குவாரிகளுக்கு அனுமதியளி...

Telephone

Website

Address

3/142, Kangayampalayam Post, Sulur
Coimbatore
641401

Other Environmental Conservation in Coimbatore (show all)
Journal of Threatened Taxa Journal of Threatened Taxa
12 Thiruvannamalai Nagar, Saravanampatti
Coimbatore, 641035

JoTT is an international, monthly, online, truly open access, peer-reviewed journal on biodiversity,

Save Soil Bokaro Save Soil Bokaro
Isha Yoga Center, Velliangiri Foothills, Ishana Vihar Post
Coimbatore, 641114

Save Soil is a global movement launched by Sadhguru, to address the soil crisis by bringing together

Greenviro Global Pvt. Ltd. Greenviro Global Pvt. Ltd.
Coimbatore

Greenviro Global, a global GreenTech startup which has pioneered the process of turning agro-waste i

Western ghats Western ghats
Sugnadhavanam, Sethumadai, Pollachi, Coimbaotre
Coimbatore, 642133

Yes....its a Mother for lot many species,it feeds for lot many for ages.... .Dear mother give me a w

Save me friend Save me friend
Coimbatore
Coimbatore, 641107

Save me friend, I am your friend, call me nature.....

Project Organic Coimbatore Project Organic Coimbatore
Agarm Iyarkai Velanmai Pannai (Thangavel Ayya Thottam), AG Pudur, Irugur
Coimbatore, 641062

A Community of Families who are Healing themselves and Earth! Soil&Human Health restoration has begun

CCCA CCCA
A-07, Dynasty, Sunderesa Iyer Layout, Trichy Road
Coimbatore, 641018

Coimbatore Corporation Contractors Association (CCCA) is an association formed before 25 (Twenty-Fi

ENVIS Amrita ENVIS Amrita
Coimbatore

Arulagam Arulagam
4/347, 60 Feet Main Road, NGGO Colony Post, Asokapuram
Coimbatore, 641022

Voice for the voiceless | Wildlife Conservation | Tribal Welfare | Nursery & Afforestation

Voyce india Voyce india
VoyceIndia, No. 20, 3rd Floor, SKC Building, Mill Road
Coimbatore, 641001

Voice Of Youth for Clean Environment (VOYCE) is an organization created for the purpose of promoting

VOYCE VOYCE
Coimbatore, 641001

VOYCE Voice Of Youth for Clean Environment Cleanliness in Public Places Honesty in Public walk of Li