Sri Vijayalakshmi Enterprises

எங்களிடம் கட்டிடம் கட்ட மணல்,செங்கல்,ஜல்லி,எம்-சாண்ட் , ஹாலோபிளாக்,பிளை-அஷ் ,கிரவல் கிடைக்கும்

26/01/2024
11/08/2023

❌மலிவான M Sand க்கு விழுந்து உங்கள் கட்டிட வலிமையை சமரசம் செய்யாதீர்கள்.
✅நாங்கள் நவீன தொழில்நுட்பத்தில் 100% கழிவு நீக்கப்பட்ட பிரீமியம் M SAND வழங்குகிறோம் 👌👌👌
தருமபுரியில் சிறந்த தரமான கிரஷர் மணல் வாங்க
அழையுங்கள்

Don’t fall for cheap quality Msand and compromise your building strength. We supply Premium M-sand
Best quality m sand in dharmapuri
Call - 📞9487864193

04/07/2023

கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

Photos from Sri Vijayalakshmi Enterprises's post 05/04/2023

எங்கள் நிறுவனத்தின் புது வரவு டாடா 912

08/01/2022

அடுத்த வாரம் முதல் அரசாங்கத்தால் மணல் விற்பனை செய்யப்படுகிறது தர்மபுரி மாவட்டத்தில் வேண்டுவோர் எங்களை தொடர்பு கொள்ளவும்

09/10/2021

#கட்டிடஅனுமதி பெறுவதற்கான வழிமுறை:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் இனி #கட்டிடஅனுமதி அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டி நெறிமுறைகளையும் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருந்தால், 3 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா அனைத்து மாநகராட்சி, நகராட்சி, மண்டல இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் உள்ளக் குறிப்புக்கள் இங்கே…

“ஒன்றிய, மாநில அரசின் கொள்கை முடிவுகளின்படி கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், கட்டிட விண்ணப்பங்களின் மீது இறுதி முடிவு எடுத்துக்கொள்ளும் பரிசீலனைக்கான கால அளவினை குறைக்கவும், பொதுமக்கள் கட்டிட விண்ணப்பங்களையும், ஆவணங்களையும், உரிமம் கட்டணங்களையும் தங்களது இருப்பிடத்திலிருந்தே இணையதளம் வாயிலாக செலுத்திட மென்பொருள் உருவாக்கப்பட்டு அனைத்து பணிகளும் இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொழில்சார்ந்த வல்லுநர்களைத் தகுதியின் அடிப்படையில் பதிவு செய்து கட்டணங்கள் வசூலித்தல், பதிவு சான்று அளித்தல், ஒவ்வொரு ஆண்டும் புது நிலைப்படுத்தி ஏப்ரல் மாதத்தில் மன்றத்தின் பார்வைக்காக வைத்து மற்றும் இணையதளத்தில் பதிவிடுதல் மற்றும் தவறு செய்யும் தொழில் சார்ந்த வல்லுநர்களின் உரிமம் ரத்து செய்வது குறித்தான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக முழு விவரங்களும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கட்டண விகிதங்கள் பொறுத்தவரையில், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் திட்ட மற்றும் கட்டிட அனுமதி உத்தரவுகளை விரைந்து வழங்கிடும் வகையில் தானியங்கி மென்பொருள் வாயிலாகக் கட்டண விகிதங்களைக் கணக்கீடு செய்து இணையதளம் மூலம் வசூலிக்க மென்பொருளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிறிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் விதமாக 1200 சதுர பரப்பளவிலான குடியிருப்பு கட்டிடங்களுக்குக் கள ஆய்வின்றி 10 நாட்களுக்குள்ளாக அனுமதி வழங்கப்படும் என்றும் அலுவலர்கள் தவறும் நிலையில் ஒப்புதலளிக்கப்பட்டதாகக் கருதி கட்டணங்கள் கணக்கீடு செய்யும் நிலைக்கு மாற்றப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தாயிரம் சதுரடி பரப்பளவு வரைவு திட்ட அனுமதி வழங்கிட உள்ளாட்சிகளுக்கு அதிகார பகிர்வு வழங்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாகக் கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதியினை உரியக் காலத்திற்குள் சீரிய முறையில் வழங்கிட மாநகராட்சி, நகராட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்டிட விண்ணப்பங்கள் மற்றும் வரைபடங்களைத் தயார் செய்யத் தகுதி வாய்ந்த தொழில் சார்ந்த வல்லுநர் பதிவுக்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே பெற்றுப் பதிவுச் சான்று வழங்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட விவரங்கள் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிப்பது அவசியம். மேலும், பொதுமக்கள் கட்டிட விண்ணப்பங்களையும், இணைப்பு ஆவணங்களையும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது.

உங்கள் கட்டிட விண்ணப்பங்களை http://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நகரமைப்பு ஆய்வாளர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இணையதளத்தில் ஆணையர் ஒப்புதல் அளித்தவுடன், கட்டணங்கள் கேட்பு மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் மனுதாரருக்கு அனுப்பப்படும். கட்டணங்கள் 15 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால் கோப்பு கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக அடுத்த 7 நாட்களில் மனுதாரருக்குத் தகவல் தெரிவித்துக் கோப்பு முடிக்கப்படும்.

பொதுமக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருந்தால் #3நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். விண்ணப்பத்தில் கூறியபடி கட்டடம் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும். தவறும் நபர்களின் மீது தகுந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிற துறைகளின் பெயரில் வசூலிக்கப்படும் கட்டணங்களை நகராட்சி/மாநகராட்சியின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்துவதாகத் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையர், கணக்கர் மற்றும் பொறுப்பானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

tnurbanepay.tn.gov.in

07/10/2020

மாற்று மணல் கட்டடத்திற்கு #நல்லதா?கெடுதல் ஏதும் வராதா? பலம் மிக்கதா? கான்கிரீட் கீழே விழுந்திடாதா? #பூச்சுக்கு சரியா வருமா?ஆற்றுமணலை விட பலம் குறைவுதானே?
இப்படி ஏகப்பட்ட கேள்விகள்; சந்தேகங்கள்.அவற்றுக்கான பதில்களும்,விளக்கமும்....
1. #மணலின் நிறத்திலும் கருப்பு நிறத்திலும் வருகிறதே, இதில் எது மாற்றுமணல்?
பாறையின் மேலடுக்குகளில் கிடைக்கக் கூடிய வெளிர் நிற கற்களை அரைத்து வரக்கூடியது மணல் நிறத்தில் இருக்கும். கீழடுக்குகளில் உள்ள கரும்பாறைகளை அரைத்தால் கிடைக்கக் கூடியது கருப்பு நிறத்தில் இருக்கும். இரண்டுமே மாற்றுமணல்தான். இருந்த போதும் ஒப்பீட்டளவில் கருப்புமணல்தான் #பலம் அதிகமுள்ளது. வெளிர்நிற மாற்றுமணல் சற்று பலம் குறைந்தது. எனவே #தரமான கட்டுமானங்களுக்கு கருப்புமணலே சிறந்தது.
2. #மாற்றுமணல் எங்கிருந்து வருகிறது?
மாற்றுமணல் என்பது கற்பாறைகளை கிரசர் மிசின் மூலம் அரைத்து பொடியாக்கி தயாரிக்கப் படுகிறது. ஏற்கனவே #கற்களை மிசின் மூலம் உடைத்து 40mm,20mm,12mm,6mm என பல அளவுகளில் ஜல்லிக்கற்கள் பல ஆண்டுகளாக தயாரிக்கப் பட்டு கட்டடப் பணியில் கான்கிரீட் போடவும் தாரோடு கலந்து #சாலை அமைப்புப் பணிகளிலும் பயன்படுத்தப் படுகிறது என்பதை நாம் அறிவோம். இப்போது அதைவிட சிறிதாக மணல் அளவில் உடைக்கப் படுவதே மாற்றுமணல். எளிமையாக சொன்னால் சிறிய சைஸ் ஜல்லிக்கல்தான் மாற்றுமணல்.
3. #கிரசர் தூசி அல்லது கிரசர் டஸ்ட்-க்கும் -க்கும் என்ன வித்தியாசம்?
கிரசர் தூசி என்பது ஜல்லி உடைக்கும் போது வரக்கூடிய கழிவுப் பொருள். அது கட்டட வேலைக்கு உகந்ததல்ல. ஆனால் என்பது சிறியஜல்லி போல் உடைக்கப் பட்டு #தண்ணீர் தொட்டியில் சுற்றும் சல்லடையின் மூலம் அலசப்பட்டு அதில் உள்ள கிரசர்தூசி நீக்கப் பட்டு சுத்தமான மணல் போல தயாரிக்கப் படுகிறது. இதனால் -ல் கிரசர்தூசி என்பதே இருக்காது.
4. ஆற்று மணல் போல கலவைக்கு பலம்(STRENGTH) தருமா?
நிச்சயமாக M SAND நல்ல பலம் மிக்க #கான்கிரீட்/கலவையை தரக் கூடியது.ஆற்றுமணல் சேர்த்த கான்கிரீட்டை விட
M SAND சேர்த்த #கான்கிரீட் கூடுதல் பலம் மிக்கது என்பது ஆய்வக சோதனைகளின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.மேலும் ஆற்றுமணலில் இயற்கையாகவே கலந்து வரக்கூடிய மாற்றுமணலில் இருக்காது.எனவே ஆற்றுமணலை விட மாற்றுமணல் தரம்மிக்க கலவையை தரக் கூடியது.
5. #மாற்றுமணலால் கட்டப்பட்ட கட்டடங்கள் நீடித்து நிற்குமா?
நிச்சயமாக நீடித்து நிற்கும். தமிழ்நாட்டிற்குத்தான் மாற்றுமணல் புதிதே தவிர (கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கூட சில ஆண்டுகளாக உபயோகிக்கப் படுகிறது)பல #மாநிலங்களில் பத்தாண்டுகளுக்கு முன்பே புழக்கத்திற்கு வந்து விட்டது. வெளிநாடுகளில் நீண்ட காலமாக உபயோகத்தில் உள்ளது.எனவே மாற்றுமணல் பயன்படுத்தப் பட்ட கட்டடங்கள் பல #ஆண்டுகளாக எந்த சேதமுமின்றி நீடித்து நிற்கிறதென்பது கண்கூடான உண்மை.
6. #மாற்றுமணலை பூச்சுக்கு பயன் படுத்த முடியுமா?
இயற்கை மணலில் இருக்கக் கூடிய வண்டல்,களிமண் போன்றவை மாற்றுமணலில் இருக்காது.இதனால் பூச்சுக்கலவையின் ஒட்டும் தன்மை சற்று குறைவாகவே இருக்கும்.அந்த குறையை சரி செய்யும் வகையில் தற்போது FINENESS அதிகமுள்ள (PLASTERING SAND) தயாரிக்கப் படுகிறது.மேலும் சிறப்பான பூச்சை தரக்கூடிய சில ும் விற்பனைக்கு வந்துள்ளது. வருங்காலத்தில் இன்னும் தரமான பூச்சினை உறுதி செய்யும் பொருட்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.மாற்று கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டுவது காலத்தின் கட்டாயம். அந்த வகையில்,மாற்றுமணலை எந்த வித #மனக்குழப்பமுமின்றி #கட்டுமானப் #பணிகளுக்கு பன்படுத்தி தரமான பலம்மிக்க கட்டுமானங்களை கட்டலாம்.👍👍
மேலும் உங்கள் கனவு இல்லங்களை உறுதியுடன் அமைத்திட தரமான M-SAND கிடைக்கும்
தொடர்புக்கு --9994321388

Photos from Sri Vijayalakshmi Enterprises's post 30/09/2020
Photos from Sri Vijayalakshmi Enterprises's post 20/06/2020

இன்று எங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தருமபுரி மாவட்ட பசுமைத் தயாகம் சார்பாக கொரானா தடுப்புக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிகம் ஆல்பம்-30 எனும் ஹோமியோபதி மருந்தினை வழங்கினோம்

16/04/2019

தேர்தல் வரும், போகும் ...

ஆனால் நம்மல சுத்தி இருக்கறவங்களின் நட்பு என்றைக்கும் இருக்க கூடியது!

நான் ஓட்டு போடும் கட்சிக்கு நீ போடல!

நீ போட்ட கட்சிக்கு நான் போடலனு நட்புகளை முறைத்து கொள்ளாதீர்கள்.

இது அரசியல் இங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் இருக்கும் சுய விருப்பு வெறுப்பு இருக்கும்! தான் அறிந்து கொண்ட மட்டும் சிந்திக்கும் மனநிலை இருக்கும்!

இவையெல்லாம் மனித உறவுகளுக்குள் எந்த பிரிவையும் ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள்.

அரசியல் வேறு தனிமனித உறவுகள் வேறு!

15/11/2018

மலேசிய மணல்..

நம் நாட்டில் வேளாண்மைக்கு அடுத்து அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை தருவது கட்டடத் தொழில்.ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக நலிவடைந்து கொண்டிருக்கும் தொழிலும் அதுதான்.அதற்கு காரணங்கள் பல உண்டு என்ற போதும் மணல் தட்டுப்பாடு ஒரு முக்கியக் காரணி.அதற்கும் மேலாக மணல் மீதான அரசின் கொள்கைகள் கட்டடத் தொழிலை புதைக்குழிக்குள் தள்ளிவிட்டது.

ஆற்றுமணலை அரசு தன்பொறுப்பில் எடுத்துக் கொண்ட 2003 தொடங்கி இன்றுவரை தமிழகஅரசின் செயல்பாடுகளை அவதானித்த வகையில் சில செய்திகளை நினைவூட்டுகிறேன்.

*2003ல் LIFTING&LOADING CONTRACT என்ற முறையில் தமிழக ஆறுகளை தனியாருக்கு தாரை வார்த்தது.இதனால் PWD, பேருக்கு கட்டுப்படுத்தும் துறையாக மாறியது.

*இயற்கை வளங்களைப் பற்றிய எவ்வித அடிப்படை புரிதலுமின்றி கட்டுப்பாடின்றி மணலை அள்ள அனுமதித்து வெளிமாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் விற்பனை செய்தது.

இனி கடந்த இரண்டாண்டு குழப்பத்தைப் பற்றி..

*முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு விழாவில் மதுரை வைகையாற்றில் மேடைப் போட்டு பேசும் போது இன்னும் மூன்றாண்டுகளில் தமிழக ஆறுகளில் மணல் அள்ளுவது முற்றிலும் தடை செய்யப்படும்;அதற்கு பதிலாக மாற்றுமணல் பயன்பாடு
ஊக்குவிக்கப்படும் என்றார்.ஆனால் இன்றுவரை அரசு தரப்பில் அதற்கான உருப்படியான எந்ந செயல்பாடுகளும் நடக்கவில்லை.

*மணல் குவாரிகளுக்கு அரசு அனுமதி அளிப்பதும் நீதிமன்றங்கள் தடை செய்வதுமான கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டுள்ளது.

*தமிழக ஆறுகள் மணலின்றி மலடான பின்பும் சவுடுமண் என்ற பெயரில் கரையோரங்களில் உள்ள மணலையும் சூறையாடும் செயல்களும் அரசின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில் வெளிநாட்டிலிருந்து தனியார் நிறுவனம் இறக்குமதி செய்த மணல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
உரிய வரிகளை செலுத்திய பின்பும் அந்த மணலை விற்பனை செய்ய தமிழக அரசு தடைப் போட்டது.இதனை எதிர்த்து நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது.

அதனை எதிர்த்து வழக்காடிய அரசு வெளிநாட்டு மணலில் 85% சிலிக்கான் இருப்பதால் கட்டுமானத்திற்கு உகந்ததல்ல என அறிக்கை தாக்கல் செய்தது.அதன்பிறகும் பலவித தடைகளை ஏற்படுத்தி அந்த மணலை விற்க விடாமல் தடுப்பதில் முனைப்புக் காட்டியது.

தற்போது நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பின் காரணமாக தமிழக அரசு (தரமற்றதென அரசே கூறிய)சென்னை துறைமுகத்தில் இறக்கப் பட்ட வெளிநாட்டு மணலை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட்டுள்ளது.
ஒரு யூனிட்(100 கனஅடி)மணல் 9990 ரூபாய் என விலை நிர்ணயித்துள்ளது.மேலும் லாரி வாடகை,இறக்குக்கூலி உட்பட 13000 ரூபாய் ஆகிறது.ஆனால் "கடை விரித்தேன் கொள்வாரில்லை"என்ற நிலையில் வாங்க ஆளில்லாமல் மீண்டும் ஒரு சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது.

இனி தமிழக அரசு என்ன செய்யப் போகிறதென்பதை கட்டடத் தொழிலில் இருப்போர் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

15/11/2018

மாற்று மணல்(M SAND) கட்டடத்திற்கு நல்லதா?கெடுதல் ஏதும் வராதா?பலம் மிக்கதா?கான்கிரீட் கீழே விழுந்திடாதா?பூச்சுக்கு சரியா வருமா?ஆற்றுமணலை விட பலம் குறைவுதானே?
இப்படி ஏகப்பட்ட கேள்விகள்; சந்தேகங்கள்.அவற்றுக்கான பதில்களும்,விளக்கமும்....

1.மணலின் நிறத்திலும் கருப்பு நிறத்திலும் வருகிறதே,இதில் எது மாற்றுமணல்?
*பாறையின் மேலடுக்குகளில் கிடைக்கக் கூடிய வெளிர் நிற கற்களை அரைத்து வரக்கூடியது மணல் நிறத்தில் இருக்கும்.கீழடுக்குகளில் உள்ள கரும்பாறைகளை அரைத்தால் கிடைக்கக் கூடியது கருப்பு நிறத்தில் இருக்கும்.இரண்டுமே மாற்றுமணல்தான்.இருந்த போதும் ஒப்பீட்டளவில் கருப்புமணல்தான் பலம் அதிகமுள்ளது.வெளிர்நிற மாற்றுமணல் சற்று பலம் குறைந்தது.எனவே கான்கிரீட் போன்றவற்றுக்கு கருப்புமணலே சிறந்தது. செங்கல்கட்டு போன்ற பணிகளுக்கு வெளிர்நிற மாற்றுமணலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

2.மாற்றுமணல் எங்கிருந்து வருகிறது?
*மாற்றுமணல் என்பது கற்பாறைகளை கிரசர் மிசின் மூலம் அரைத்து பொடியாக்கி தயாரிக்கப் படுகிறது.ஏற்கனவே கற்களை மிசின் மூலம் உடைத்து 40mm,20mm,12mm,6mm என பல அளவுகளில் ஜல்லிக்கற்கள் பல ஆண்டுகளாக தயாரிக்கப் பட்டு கட்டடப் பணியில் கான்கிரீட் போடவும் தாரோடு கலந்து சாலை அமைப்புப் பணிகளிலும் பயன்படுத்தப் படுகிறது என்பதை நாம் அறிவோம். இப்போது அதைவிட சிறிதாக மணல் அளவில் உடைக்கப் படுவதே மாற்றுமணல். எளிமையாக சொன்னால் சிறிய சைஸ் ஜல்லிக்கல்தான் மாற்றுமணல்.

3.கிரசர் தூசி அல்லது கிரசர் டஸ்ட்-க்கும் எம் சாண்டுக்கும் என்ன வித்தியாசம்?
* கிரசர் தூசி என்பது ஜல்லி உடைக்கும் போது வரக்கூடிய கழிவுப் பொருள்.அது கட்டட வேலைக்கு உகந்ததல்ல.ஆனால் M SAND என்பது சிறியஜல்லி போல் உடைக்கப் பட்டு தண்ணீர் தொட்டியில் சுற்றும் சல்லடையின் மூலம் அலசப்பட்டு அதில் உள்ள கிரசர்தூசி நீக்கப் பட்டு சுத்தமான மணல் போல தயாரிக்கப் படுகிறது.இதனால் M SANDல் கிரசர்தூசி என்பதே இருக்காது.

4.M SAND ஆற்று மணல் போல. கலவைக்கு பலம்(STRENGTH) தருமா?
* நிச்சயமாக M SAND நல்ல பலம் மிக்க கான்கிரீட்/கலவையை தரக் கூடியது.ஆற்றுமணல் சேர்த்த கான்கிரீட்டை விட
M SAND சேர்த்த கான்கிரீட் கூடுதல் பலம் மிக்கது என்பது ஆய்வக சோதனைகளின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.மேலும் ஆற்றுமணலில் இயற்கையாகவே கலந்து வரக்கூடிய CHEMICAL IMPURITIES மாற்றுமணலில் இருக்காது.எனவே ஆற்றுமணலை விட மாற்றுமணல் தரம்மிக்க கலவையை தரக் கூடியது.

5.மாற்றுமணலால் கட்டப்பட்ட கட்டடங்கள் நீடித்து நிற்குமா?
* நிச்சயமாக நீடித்து நிற்கும். தமிழ்நாட்டிற்குத்தான் மாற்றுமணல் புதிதே தவிர (கோவை,திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கூட சில ஆண்டுகளாக உபயோகிக்கப் படுகிறது)பல மாநிலங்களில் பத்தாண்டுகளுக்கு முன்பே புழக்கத்திற்கு வந்து விட்டது. வெளிநாடுகளில் நீண்ட காலமாக உபயோகத்தில் உள்ளது.எனவே மாற்றுமணல் பயன்படுத்தப் பட்ட கட்டடங்கள் பல ஆண்டுகளாக எந்த சேதமுமின்றி நீடித்து நிற்கிறதென்பது கண்கூடான உண்மை.

6.மாற்றுமணலை பூச்சுக்கு பயன் படுத்த முடியுமா?
* இயற்கை மணலில் இருக்கக் கூடிய வண்டல்,களிமண் போன்றவை மாற்றுமணலில் இருக்காது.இதனால் பூச்சுக்கலவையின் ஒட்டும் தன்மை சற்று குறைவாகவே இருக்கும்.அந்த குறையை சரி செய்யும் வகையில் தற்போது FINENESS அதிகமுள்ள P SAND(PLASTERING SAND) தயாரிக்கப் படுகிறது.மேலும் சிறப்பான பூச்சை தரக்கூடிய சில ADDITIVESகளும் விற்பனைக்கு வந்துள்ளது.வருங்காலத்தில் இன்னும் தரமான பூச்சினை உறுதி செய்யும் பொருட்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

7.மாற்றுமணலால் வேறு நன்மைகள் ஏதும் உள்ளதா?
*ஆற்றுமணலை அளவின்றி அள்ளுவதன் மூலம் விவசாயம், குடிநீர்,நிலத்தடிநீர் போன்றவை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி இயற்கைவளங்கள் குறைந்து சுற்றுச் சூழல் சீர் கெட்டு நம் வருங்கால சந்ததிகளும் பாதிப்புக்குள்ளாவார்கள். ஆகவே இயற்கைவளத்தை காத்து நல்லதொரு புவிச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமெனில் மாற்று கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டுவது காலத்தின் கட்டாயம்.அந்த வகையில்,மாற்றுமணலை எந்த வித மனக்குழப்பமுமின்றி கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி தரமான பலம்மிக்க கட்டுமானங்களை கட்டலாம்.

எண்ணமும் எழுத்தும்:
பொறியாளர்.அ.வீரஜோதிமணி.

02/07/2017

Started new manufacturing unit of Hallow and Solid block

06/03/2017

மணலுக்கு மாற்றாக கருங்கல் ஜல்லிகளை உடைத்துத் தயாரிக்கப்படும் மாற்று மணலான ‘எம்.சாண்டு’ பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. இந்த மணலைப் பொறுத்தவரை கட்டுமானத் துறையின் தரக்கட்டுப்பாடான ‘ஐ.எஸ்.383’ தரத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. தரத்தில் ஆற்று மணலைவிட இவை மிகச் சரியாக இருப்பதாகவே சொல்கிறார்கள். நிறத்தைப் பொறுத்தவரை அவை சிமெண்ட்டோடு சேரும்போது எந்த வித்தியாசங்களையும் கொண்டிருக்காது என்றும் விளக்குகிறார்கள். குறிப்பாக உலகின் மிக உயரமான கட்டடமான, துபாயில் இருக்கும் புர்ஜ் கலீஜா (Burj Khalija) இதைக் கொண்டு கட்டப்பட்டது என்றும் ஆதாரத்தைத் தருகின்றனர்.

03/03/2017

செயற்கை மணல் ஆற்று மணலுக்கு மாற்றாக கருதப்படுகிறது. கல் உடைக்கும் குவாரிகளில் வீணாகும் மண் துகள்கள்தான் இந்த செயற்கை மணல். அந்த மண் துகள்களை கொண்டு செயற்கை மணலை தயாரிக்கிறார்கள். இது மணல் தட்டுப்பாட்டை குறைப்பதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் உதவுகிறது. அதேவேளையில் ஆற்று மணலுக்கு நிகரான தரத்துடன் இந்த செயற்கை மணல் தயாரிக்கப்படுகிறது. இந்த மணலை பயன்படுத்தும்போது சிமெண்ட் பயன்பாடும் குறைய வாய்ப்பிருக்கிறது. அத்துடன் ஆற்றுமணலை சலித்து பயன்படுத்தும்போது குறிப்பிட்ட அளவு கழிவுகள் வெளியேறும்.

ஆனால் செயற்கை மணலில் அந்த பிரச்சினை ஏற்படுவதில்லை. இந்த மணல் தட்டுப்பாடின்றி கிடைப்பதால் கட்டுமான பணிக்கு தொய்வு ஏற்பட வாய்ப்பில்லை. வெளிநாடுகள், மற்ற மாநிலங்களில் இந்த மணலை பயன்படுத்தி நிறைய கட்டுமானங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இந்த மணலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து

10/02/2017

தற்பொழுது இருக்கும் மணல் தட்டுப்பாட்டை போக்க மணலுக்கு மாற்றாக கருதப்படும் M-SAND எங்களிடம் கிடைக்கும்..மணலை விட விலை குறைவு மற்றும் சுற்றுசூழலுக்கு ஏற்றது.

08/12/2015

தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்ட மணல் குவாரி கடந்த ஒரு மதமாக நிறுத்தப்பட்டது ஆகயால் மணல் தட்டுப்பாடு ஏறபட்டது.இதை பயன்படுத்தி சிலர் மணல் மார்க்கெட் நிறுவி முன்று மடங்கு விலை வைத்து விற்கிறார்கள் அதை தடுத்து மீண்டும் மணல் குவாரி பெர்மிட் குடுத்து மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் லோக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் முலம் மனு அளிக்கப்பட்டது

22/10/2015

ஆயுதபூஜை புகைப்படம்

22/10/2015

Sri Vijayalakshmi Enterprises's cover photo

06/09/2015

Timeline Photos

06/09/2015

வீடு மற்றும் கட்டிடம் கட்ட மணல்,செங்கல்,ஜல்லி மற்றும் அணைத்து பொருட்களும் ஒரே இடத்தில குறைந்த வாடகைக்கு சப்ளை செய்யப்படும்

05/09/2015

Sri Vijayalakshmi Enterprises

Want your business to be the top-listed Hardware Service in Dharmapuri?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


434, Kumaraswamy Pet
Dharmapuri
636701

Opening Hours

Monday 6:15am - 7pm
Tuesday 6:15am - 7pm
Wednesday 6:15am - 7pm
Thursday 6:15am - 7pm
Friday 6:15am - 7pm
Saturday 6:15am - 7pm

Other Building Material Stores in Dharmapuri (show all)
I Leaf STEEL DOORS & Windows I Leaf STEEL DOORS & Windows
51/5-A, DSP Complex, Opposite To DDCC Bank
Dharmapuri, 636701

GALVALUME Steel Doors and GalVanishes Steel doors, Smart Lock, Smart Viewer, Fiber doors, WPC Doors, Steel Windows