Erode Kathir Page

Erode Kathir Page

மனிதம், மனித ஆற்றல் மற்றும் நேர்மறை குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

13/06/2024
02/06/2024

'நான் மன அழுத்தத்தில் இல்லை’ என்று யாராவது சொன்னால், 'நிஜமாகவா.....!' என அவர்களைச் சந்தேகிக்கும் அளவிற்கு, எங்கு நோக்கினும் ‘தாம் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன்’ எனச் சொல்லும் மனிதர்கள் மிகப் பரவலாகத் தென்படுகின்றனர்.

காசு பணம்
கல்வி
பொருள்
வீடு
வேலை
தொழில்
சொத்து
அதிகாரம்
வெற்றி
புகழ்
உறவு
மரியாதை
அடையாளம்...
உள்ளிட்ட எல்லாமும் வாழ்க்கையில் முக்கியம்தான்.

இவற்றில் எந்த ஒன்றினாலும் மன நிம்மதி தொலைந்து அழுத்தத்திற்குள் இழுக்கப்படுகின்றோம் என்றால், அது தேவை என்பதைத் தாண்டி வியாதியாக மாறிவிட்டது என்று அர்த்தம்.

அந்த மனசுகிட்ட மனுசங்க படுறபாட்டைவிட, இந்த மனுசங்ககிட்ட அந்த குட்டியூண்டு மனசு படுறபாடு இருக்கே! 😊😊

இளைதாக முள்மரம் களைக!

- ஈரோடு கதிர்

Send a message to learn more

31/05/2024

நம்மைச் சார்ந்தவர்களுக்கு
நாம் செய்யும் சில செயல்கள், முயற்சிகள்
பழக்கமில்லாத,
விருப்பமில்லாத,
அறிந்திடாததாகக்கூட இருக்கலாம்.

ஆனால், அந்தச் செயல் நமக்கு நன்கு கை வரும். அறிந்ததாகவும், பிடித்ததாகவும்கூட இருக்கும்.

அதே சமயம், எவரும் செய்யாத ஒன்றை நாம் மட்டுமே தனித்துச் செய்கிறோமே, அது சரியா தவறா என்ற சந்தேகமும்கூட வரலாம்.

ஒருகட்டத்தில் நம்மைச் சாந்தவர்களில் யாரோ ஒருவருக்கு நாம் செய்துகொண்டிருப்பது வித்தியாசமானதாக, அவசியமானதாகத் தோன்றும்.

இதற்குள் காலம் கணிசமாக கடந்திருக்கும்.
ஒவ்வொருவராய் நம் பக்கம் திரும்புவார்கள்.

அதுவரை மிக முக்கியமாகத் தேவைப்படுவது
”நமக்குப் பிடித்ததை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதுதான்!”

~ ஈரோடு கதிர்

Send a message to learn more

10/05/2024

தம் பிள்ளைகள் குறித்து பெரும் பதட்டத்துடனும் பரிதவிப்புடனும் பேசும் பெற்றோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று மட்டும் மூன்று பேர். ஒற்றுமை என்னவெனில் மூன்று பேருடைய சிக்கல்களும் ஏறத்தாழ 90% ஒரே மாதிரியானவைதான்.

• புகார்களில் இருப்பவர்கள் குறிப்பாக பையன்கள். புகார்களும் கடுமையானவை. கணிசமான எண்ணிக்கையில் கல்லூரிப் படிப்பைத் தொடர மறுக்கின்றனர். சிலருக்கு கல்லூரி வருகைப் பதிவு போதாமல் தேர்வு எழுத முடியாத நிலை.

• பையன்களும் தாளவியலா செயல்கள் செய்கின்றனர்தான், மறுக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், என்னிடம் பகிரப்பட்ட அளவில், பிள்ளைகளின் அந்தச் சிதைவுகளுக்கு பிள்ளைகள் மட்டுமே, எல்லோரும் மிக எளிதாகச் சொல்வதுபோல செல்ஃபோன்கள் மட்டுமே முற்றிலும் காரணமல்ல.

• நானறிந்த வரையில் அந்தப் பிள்ளைகளின் சிதைவுகளுக்கு மிக முக்கியமான காரணம் பெற்றோர்கள். பெற்றோர்களின் கடந்த கால செயல்பாடுகளின் விளைவே பிள்ளைகள் இம்மாதிரியான சிதைவுகளுக்குள் தங்களை ஆட்படுத்திக்கொள்கின்றனர். பெற்றோர்களில் சிலர் மட்டுமே ஒப்புக்கொள்கின்றனர். பலரும் மறுக்கவே செய்கின்றனர்.

• செல்ஃபோன் பயன்பாடு, மொபைல் கேம், பைக் பயன்பாடு, பொய் பேசுதல், புகைப்பிடித்தல் மற்றும் இன்னபிற செயல்கள் உள்ளிட்ட அவர்கள் செய்யும் பெரும்பாலான ஒவ்வாத செயல்கள் வேறொன்றிலிருந்து தப்பிக்க தன்னையறியாமல் விழுந்து சிக்கிக்கொண்டவை மட்டுமே. ’முன்பெல்லாம் இப்படி இல்லையா, அதென்ன இப்ப மட்டும்’ எனும் பூமர் வசன ஒப்பீட்டிற்கு வாதம் செய்ய என்னால் இயலாது. காரணம் 2000ற்குப் பிறகு பிறந்த பிள்ளைகளின் டிசைன் வேறு. இதை ஒப்புக்கொள்வதும், புரிந்துகொள்வதுமே தீர்வின் முதல் நிலை.

• சிக்கலை ஓரளவு உணர்ந்ததுமே, முழுவதுமாக அறிந்துகொள்ள முயலாமல் உடனடியாகத் தீர்வு தேட முற்படுகின்றனர். நெருங்கியவர்களிடம்கூட சொல்லாமல், ரகசியமாக, தப்பும் தவறுமாகத் தீர்வு தேடுகின்றனர்.

• ஒன்றை அவர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிக்கல்கள் கண்களுக்குத் தெரிவதுபோல் புறத்தில் இல்லை. உடனே மருந்திட்டு சரி செய்ய. மிகப் பெரும்பாலும் அகத்தில். அதாவது மனதில். அதைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நிச்சயம் காலம் பிடிக்கும். அதற்கு சரியான நபர்கள் அமைய வேண்டும்.

• மனம் திறக்க பிள்ளைகளுக்கு சூழல் அமைய வேண்டும். சரி செய்பவர் மற்றும் சரியாக வேண்டியவர் ஆகியோர் இடையே ஓர் இசைவு ஏற்பட வேண்டும். சிலருக்கு அதுவரை இருந்த வாழ்வியல் முறையே மாற வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் அயர்ச்சி கொள்ளாத பொறுமை வேண்டும்.

- ஈரோடு கதிர்

Send a message to learn more

27/04/2024

கடந்தேகும் மனிதர்களில் ஒரு உறவைப் பூக்கச் செய்ய, நொடிப்பொழுதில் ஒரு மெல்லிய புன்னகை மிகப் போதுமானதாக இருப்பதுபோல், எந்த வகையிலும் முன்பின் அறிமுகமோ, தொடர்போ, அவசியமோ இல்லாமல் ஒரு எதிரியைச் சம்பாதிக்க, ஒவ்வாத ஒற்றைச் செயல் அல்லது ஒற்றைச்சொல் போதும்.

அந்தக் கணத்தில் தோன்றும் சிறு பகை, பெரும் பகையாக மாறி எஞ்சிய வாழ்க்கை முழுதும் தொடர்ந்த வரலாறுகளும் இங்குண்டு.

உடன் பிறந்த உறவுகளிலும்கூட தலைமுறைகளாக பகையைத் தொடர்ந்தவர்களும், தொடர்கிறவர்களும் இங்குண்டு.

பலரின் வாழ்க்கையில் இப்பெரும் பகைகளுக்குப் பின்னால் இருப்பது குறித்து ஆராய்ந்தால், அவை யாவற்றிற்கும் காரணம் ஒரு சிறு முடிச்சே எனும் ஆச்சரியக் கசப்பே மிஞ்சும்.

மகத்தான மனித உறவுகளைவிட தருணம், சொல், அவமதிப்பு, புறக்கணிப்பு, ஏமாற்றுதல் எனும் சிறு முடிச்சுகள் எவ்விதம் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது எப்போதும் புரியாத புதிர்தான்.

இப்படியான எல்லாக் கோபங்களுக்கும், பகைகளுக்கும் பின்னால் மறந்துபோன புன்னகைகளும், உறவுகளுக்கிடையே உலர்ந்துபோன உறவின் கதகதப்புகளும் பெருந்தொகையில் உயிர்ப்பின்றி கனத்துக் கிடக்கும்.

அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் வழிகளும், முறைகளும் தெரியாமல் தவிக்கும் அவலம்தான் மனித குலத்தின் பலவீனம் என்றும் சொல்லலாம்.

- ஈரோடு கதிர்

25/04/2024

பொதுவாக எதிலும் போட்டி பொறாமை கூடாது என்பார்கள். போட்டி என்பதை நான் தவறாகக் கருதுவதில்லை.

அதுதான் பல வெற்றிகளை வசப்படுத்தியிருக்கும், தன்னையே தனக்கு அடையாளம் காட்டியிருக்கும். அதுவரை 'இவ்வளவுதான் இயலும்!’ என வகுத்து வைத்திருக்கும் எல்லைகளை மாற்றியமைக்கும்.

பெரும்பாலும் போட்டியிடும் மனம் வாய்த்தவர்கள், தான் அதற்கு தகுதியானவர் என உணர்ந்திருப்பார்கள், ஈட்ட வேண்டிய வெற்றியில் தமக்கு உரிமை உண்டு என அறிந்திருப்பார்கள்.

தகுதியும், உரிமையும் தமக்கு கிடையாது, ஆனாலும் வெற்றி வேண்டுமென என ஆசைப்படுவோர், அந்த ஆசைக்கு அவர்கள் வைத்திருக்கும் ஒரே அளவுகோல் 'ஏன் அவங்க மட்டும்தான் பதினொரு மாசத்துல பொறந்தாங்களா!?' என்பது போன்ற இயலாமை எனும் பொறாமை மட்டுமே.

பொறாமையை மேம்போக்காக குணம் என்பார்கள். என்னைப் பொறுத்தவரையில் அது குணம் அல்ல. தம் வேர்களில் நஞ்சு மட்டுமே பருகும் நோய்.

அந்த நோயின் தன்மை குறித்து இரண்டாயிரம் வருடங்கள் முன்பே ஒரு மனிதன் யோசித்திருக்கும் விதம் பெரும் ஆச்சரியமூட்டுகின்றது.

பொதுவாக எதிரிகளை வீழ்த்த திட்டம் தீட்டுவது மனித இயல்பு. உதாரணத்திற்கு அப்படியொரு எதிரியே வாய்த்திருந்து அந்த எதிரி ஒருவேளை கெடுதல் செய்ய வேண்டும் எனத் திட்டம் தீட்ட (ஒன்னார் வழுக்கியும் ) மறந்துபோயிருந்தாலும், 'அய்யகோ என் எதிரி என்னை வீழ்த்த திட்டம் தீட்ட மறந்துபோய்ட்டானே இப்ப நான் என்ன செய்வேன். பிரச்சனையை போர்த்திக்காம தூக்கம் வராதே' என்றெல்லாம் பதட்டமடைய வேண்டியதில்லை.

யாரையேனும் நினைத்து, உள்ளுக்குள் சுமக்கும் பொறாமை எனும் நஞ்சு போதும் (அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்) ஒட்டுமொத்த நிம்மதியை, மகிழ்ச்சியை வீழ்த்தி அழிப்பதற்கு.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடுஈன் பது - குறள் 165

இரண்டாயிரம் வருடங்கள் ஆனாலும் என்ன, பொறாமை எனும் அக்னிக்குஞ்சு மனப் பொந்துகளில் கண் சிமிட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.

எல்லாவற்றையும் ரசித்து வாசித்துக் கடந்து போய்விடுவதில் என்ன இருக்கின்றது...!

சிலவற்றை உள்வாங்கித் தெளிவதும், ஓரிரு சொட்டுகள் அறிவு நீரை அதன் வேர்களில் வார்ப்பதுவுமே முக்கியத் தேவை!

~ ஈரோடு கதிர்

Send a message to learn more

31/03/2024

எதே... பிதாகரஸ் தியரமா...

ரைய்ட்ட்ட்டு.... வழி கண்டுபிடிச்சு வீட்டுக்கு போன மாதிரிதான்....

30/03/2024

இருவருக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான பரிசுதான்...

ஆனால் அது கிடைக்கும் நேரம், சூழல் மற்றும் தருணத்தைப் பொறுத்து மகிழ்ச்சியின் அளவில் வேறுபாடு உண்டு.

Send a message to learn more

28/03/2024

Simply............. wow

22/03/2024

உலக தண்ணீர் தினம்

21/02/2024

ஒரு வேளை உணவு...

10/02/2024

சில உதவிகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது ;)

28/01/2024

என்னென்னவெல்லாம் நடக்குது இந்த உலகில்... ;)

Want your public figure to be the top-listed Public Figure in Erode?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

மக்கள் இதை சைக்கிள் ஸ்டேண்ட் ஆக்கிட்டாங்க போல ;)
அடேய் பேரண்ட்ஸு.... என்னைய வச்சு காமடி கீமடி பண்ணலையேஇப்படிக்குதோழர் பச்சப்புள்ள
What a consistent reverse drive!
முயற்சி திருவினையாக்கும்.வேறு வினையாக்கினால் கம்பேனி பொறுப்பல்ல ;)
Awesome
இசை எனும் மாயம்
சுதாரிப்பு
தோற்காமல் இரு!

Category

Telephone

Address

Erode

Other Writers in Erode (show all)
The Bodhi Mantra The Bodhi Mantra
Erode, 638455

The Bodhi Mantra illustrates the view of the modern buddha.

Sangee_kavithaigal Sangee_kavithaigal
Erode

மனதின் மௌனங்களை மைப் போட்ட கண்ணீரால் ஓயாமல் ஒப்பாரி செய்யும் ஒற்றைக்கால் ஒழுங்கற்ற என் பேனா...

KadhalKavidhaigal KadhalKavidhaigal
Erode, 638002

உன்னை உன்னிடமே வைத்து பார்க்கமுடியாத பொழுதுகளில் ஞாபகங்களில் வைத்து கவிதையாக பார்த்து விடுகிறேன்

writer_indhumathi_ writer_indhumathi_
Erode

writing down my feelings in the form of poem... co-author and compiler �� medical student and dancer

gow4529 gow4529
Erode

Samel Yugalin Emrys Samel Yugalin Emrys
Erode

📝 #Writer 🧘 #Philosopher 📚 #WisdomSeeker Exploring life's depths through words and wisdom 🌊🧠📖