A.Ganeshamurthi,Erode-Loksabha MP

A.Ganeshamurthi,Erode-Loksabha MP

You may also like

WASTE BOYS
WASTE BOYS

He has been Member of TamilNadu Legislative assembly

Photos from A.Ganeshamurthi,Erode-Loksabha MP's post 21/11/2023

விடுதலை போராட்ட வீரரும்,
இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தின் முதுபெரும் தலைவரும்,
தகைசால் தமிழருமான
தோழர் என்.சங்கரய்யா அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு கலந்து கொண்டு அவரது போராட்ட வாழ்விற்கு அஞ்சலி செலுத்தினோம்.

நேற்று(20.11.2023) CPI(M) ஏற்பாடு செய்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் திரு.முத்துசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திரு. அந்தியூர் செல்வராஜ் அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்களோடு கலந்து கொண்டு அவரது மக்கள் பணியை நினைவு கூர்ந்தோம்.

அ.கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

Photos from A.Ganeshamurthi,Erode-Loksabha MP's post 30/09/2023

தியாகி க.ர. நல்லசிவம் அவர்களின் வாழ்கை வரலாற்று சுவடுகள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது.

#நல்லசிவம்

17/09/2023

சமூகநீதி நாள்.

சமூக சீர்திருத்தம்,
சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகளை களைதல், பெண் விடுதலை இவற்றுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய, பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள்.
அதுவே சமூக நீதி நாளும்.
அவரது பகுத்தறிவின் பாதைவழி பயணிப்போம்.
அ.கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

#பெரியார்

15/09/2023

திராவிட போர்வாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 பிறந்த நாள் விழா மாநாடு மதுரையில், தலைவர் Vaiko அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த மாநாட்டில் Durai Vaiko அவர்கள் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது.

திரு. அ. கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

#அண்ணா

15/09/2023

பேரறிஞர் அண்ணா.

மதாராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியவர்.
சுயமரியாதை திருமண சட்டத்தை கொண்டுவந்தவர்.
பேருந்துகளை நாட்டுடைமையாக்கியவர்.
இந்தி எதிர்ப்பு என்பதன் மூலம் தாய் மொழிக்காக்க யுத்தம் புரிந்தவர்.
மாநில சுயாட்சி கொள்கைகளை வகுத்தளித்தவர்.

திராவிட நில பரப்பில் தந்தை பெரியாரின் போர் வாவாளாய் முழங்கியவர்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் மத, சாதிய வாத சக்திகளை வீழ்த்த உறுதிகொள்வோம்.
#அண்ணா

Photos from A.Ganeshamurthi,Erode-Loksabha MP's post 14/09/2023

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (13.09.2023) அன்று,மாண்புமிகு வீட்வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு. முத்துசாமி அவர்களின் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், பெருந்துறையில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்திலிருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் திரு.அந்தியூர் ப.செல்வராஜ் அவர்கள் மற்றும் அரசு அலுவலகர்களுடன், நானும் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தேன்.

திரு. அ. கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

Photos from A.Ganeshamurthi,Erode-Loksabha MP's post 26/08/2023

பசிப்பினியற்ற தமிழ்நாடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களால் தொடங்கப்பட்ட முன்னோடி திட்டமான மாணவர்களுக்கு "காலை உணவு திட்டத்தை"
மொடக்குறிச்சி ஆரம்பப் பள்ளியில் துவக்கி வைத்து மகிழ்ந்தேன்.

"வரலாற்றின் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட திட்டம்" வெற்றி பெற வாழ்த்துக்கள்.

திரு அ. கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

16/08/2023

15.08.2023
விடுதலை நாளில்

அவல்பூந்துறை பேரூராட்சி செம்மண் குளிக்காட்டுவலசில் 76 ஆவது விடுதலை நாள் விழாவில் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினேன். அப்பொழுது பள்ளிக்கு ரோட்டரி சங்கத்தின் மூலமாக ஆரோ தண்ணீர் சுத்தம் செய்யும் எந்திரம் மற்றும் கலர் ஜெராக்ஸ் மெஷினும் வழங்கப்பட்டது.

அ. கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

15/08/2023

விடுதலை நாள் வாழ்த்துக்கள்.

அனைவருக்குமான இந்திய திருநாட்டை, சமரசமில்லா ஒருமைப்பாட்டை கொண்ட சுதந்திரத்தை நோக்கிய I.N.D.I.A.வை உருவாக்குவோம்.

சாதியவாத, மதவாத வகுப்புவாத சக்திகளிடம் இருந்து மக்களை காப்பதே நமது கடமையாக இந்த நாளில் உறுதி கொள்வோம்.

07/08/2023

டாக்டர் கலைஞர் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்

டெல்லி அண்ணா அறிவாலயத்தில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினோம்.

முத்தமிழ் அறிஞர் டாகடர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, டெல்லி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., திருச்சி சிவா எம்.பி., சண்முகம் எம்.பி., உள்ளிட்ட அனைவர்களோடு இணைந்து மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினோம்.

16/07/2023

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் புதிய அமைக்கப்பட்ட நியாவிலை கடை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன்.

17.80 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த கடையை மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் திரு.முத்துசாமி அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திரு அ. கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்

14/07/2023

கருத்தருங்கு மற்றும் கையெழுத்து இயக்க நிகழ்வு.

அனைவரும் கலந்து கொள்ளவும்.

அ. கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

14/06/2023

தலைமைச் செயலகத்தில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை!

வைகோ கடும் கண்டனம்

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்து சென்றதற்குப் பின்னர் ஒன்றிய பாஜக அரசு தனது மிரட்டல் வேலைகளை தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து மின்சாரத்துறை மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட வந்தபோது, முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும், சோதனை நிறைவுபெற்றவுடன் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் என்று நினைத்து தலைமைச் செயலகத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறது. மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், இவ்வாறு அமலாக்கத்துறை அத்துமீறி நுழைவது மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன.

தமிழ்நாட்டிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத்துறையை பயன்படுத்துவதும், திமுக அரசை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.06.2023

18/05/2023

தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுக்கு கிடைத்த வெற்றி!

வைகோ அறிக்கை

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில், நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, “ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்றும், காளைகளை வற்புறுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர்” என்றும் விலங்குகள் நல அமைப்புகளால் வாதிடப்பட்டது. இதையடுத்து, “ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு. பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததால், விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழக அரசு வாதிட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அமர்வு வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு தொடர்பாக, ‘தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறி உள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், “ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டு இருக்கிறது.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.05.2023

Photos from A.Ganeshamurthi,Erode-Loksabha MP's post 14/05/2023

திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதக்கூட்டம் மற்றும் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரு EVKS Elangovan அவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது.

நிகழ்வில் திக தலைவர்
திரு. ஆசிரியர் அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

#மதிமுக30

Photos from Durai Vaiko's post 13/05/2023
13/05/2023

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவு;
மக்கள் சக்தி வென்றது!

வைகோ அறிக்கை

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாஜக வெல்ல முடியாத அரசியல் சக்தி என்ற மாயத் தோற்றத்தை உடைத்து எறிந்து இருக்கின்றது.

2018 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கர்நாடக மக்கள் பாஜகவை வீழ்த்தினார்கள். மதசார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது.

ஆனால், பாஜக குதிரைப் பேரம் நடத்தி, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆளுநர் துணையோடு குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது.

கர்நாடகத்தை காவிமயமாக்கும் நடவடிக்கையில் இறங்கிய ஆர்.எஸ்.எஸ் -இந்துத்துவ சக்திகள், சிறுபான்மை இஸ்லாமியர், கிறிஸ்தவ மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. இஸ்லாமிய மக்களின் பண்பாட்டு உரிமைகளைப் பறித்தன.

இந்துவத்துவ சோதனைச் சாலையாக மாற்றப்பட்ட கர்நாடகாவில்,, முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்தது.

பாஜகவின் ஏதேச்சாதிகார, மதவெறி அரசியலுக்கு கர்நாடக மக்கள் தக்கப் பாடம் புகட்டி இருக்கிறார்கள்.

இந்தியாவில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்துவத்துவக் கும்பலை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்பதை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெள்ளிடை மலையாக நிருபித்து இருக்கிறது.

பாசிசத்தை வேரறுக்க கர்நாடகாவில் மக்கள் சக்தி வெகுண்டு எழுந்தது போல, 2024 நாடாளுமன்றத்தேர்தலிலும் இந்தியா முழுவதும் நடக்கும்.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போகும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
சென்னை - 8
‘தாயகம்’
13.05.2023

06/05/2023

30 ஆண்டுகளாக
ஆதாயமில்லா மக்கள் பணி... சமரசமில்லா மக்கள் நலன்...

#மதிமுக30 #வைகோ #துரைவைகோ #மே6

05/05/2023

மாமேதையை போற்றுவோம்!

மனிதகுலத்திற்கு தனது ஆயராது உழைப்பின் மூலம் வர்க்க பேதத்தை ஒழிக்க மார்க்சியம் என்ற தத்துவத்தை வழங்கிய கரால் மார்க்ஸ் அவர்கள் பிறந்த நாளில் அவரது புகழை போற்றுவோம்.

அவர் வழங்கிய வர்க்க ஒழிப்பு தத்துவத்தை கடைப்பிடிப்போம்.

05/05/2023

ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்!

வைகோ அறிக்கை

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி இன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் திராவிட மாடல் குறித்து அவர் விமர்சித்துள்ளார். “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது” என்று கூறி உள்ளார்.

ஆர்.என்.ரவி இந்தப் பேட்டியில் திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றி இருப்பது விஷமத்தனமானது; கடும் கண்டனத்திற்கு உரியது.

மனுதரும நீதியை மறுத்து மனித நீதிக்கான குரல், சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை,ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மக்களின் நலன், மொழி, இனம், பண்பாட்டு உரிமை, அரசியல், பொருளாதாரத்துறைகளில் தமிழ்நாட்டின் உரிமைப் பாதுகாப்பு,மாநில சுயாட்சிக்கான குரல் இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல். இதனை வெற்று முழக்கம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முகாரி இராகம் பாடுவது அவரது இந்துத்துவ ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
ஆர்.எஸ் .எஸ் கோட்பாடுகளை ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு உளறிக் கொட்டக் கூடாது. ஆளுநர் பதவியை விட்டு வெளியேறிப் பேசட்டும்.

திராவிட இயக்கக் கருத்தியலை இழிவுப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.05.2023

05/05/2023

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்
30 ஆம் ஆண்டு தொடக்க விழா!

கழகப் பொதுச்செயலாளர் வைகோ
தாயகத்தில் கொடியேற்றி, இனிப்பு வழங்குகிறார்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை 06.05.2023 சனிக் கிழமை காலை 9.30 மணி அளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்குகிறார்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
05.05.2023

29/04/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க
மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
திரு சு.முத்துசாமி அவர்கள்
(27.04.2023) அன்று காலை 10.30 மணியளவில்,

ஈரோடு மாநகராட்சிக்குபட்ட கச்சேரி வீதி என்ற பெயரை
"திருமகன் ஈ.வெ.ரா சாலை"என பெயர் மாற்றம் செய்து வழிகாட்டி
பெயர் பலகையினை‌ திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி தலைவர்அவர்கள் , மாநகராட்சியின் மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அ.கணேசமூர்த்தி
ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர்.

22/04/2023

ரமலான் நாள் வாழ்த்து!

எல்லையற்ற நிலப்பரப்பை ஆட்சி செய்தபோதிலும், ஓர் ஏழையைப் போலவே வாழ்க்கைச் சூழலை வகுத்துக் கொண்டு வாழ்ந்த அண்ணல் பெருமானார் நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை என்ற அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி நேர்மையுடனும், தூய்மையுடனும் செயல்படுவோம் என்று நானிலத்திற்கு அறிவிக்கும் நாள்தான் இந்த நாள்.

இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ந்து கொண்டாடி மகிழ்ந்திடும் இந்த நன்னாளில் மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, வாஞ்சை, நேர்மை, பொறுமை, திறமை, ஒற்றுமை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ. கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

22/04/2023

உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும்
சட்ட முன்வரைவை திரும்பப் பெறுக!

வைகோ அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத்தில், நேற்று (ஏப்ரல் 21) தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும், தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023 சட்ட முன்வரைவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை என வாரத்தில் 6 நாட்களுக்கு 48 மணி நேரம் பணி, ஒரு நாள் ஓய்வு என்பதுதான் நடைமுறையில் இருக்கின்றது. இதனை 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் தொழிலாளர் நலத்துறை ஏற்கனவே பரிந்துரை செய்திருக்கிறது.

ஒன்றிய அரசின் பரிந்துரையைச் செயல்படுத்தும் முயற்சியாக சட்டமன்றத்தில் 65ஏ சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

தற்போது கொண்டுவந்திருக்கின்ற சட்டத் திருத்த முன் வரைவு பற்றி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், “அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது. விரும்பக் கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்று அளித்துள்ள விளக்கம் பொருத்தமற்றது.

8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டு, தொழிற் நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இச்சட்டம் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளித்துவிடும்.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடைய தொழிலாளர்களின் வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மை (குடநஒibடைவைல) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் துறை, மென்பொருள்துறை ஆகிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். ஒட்டுமொத்த பணி நேரம் வாரத்திற்கு 48 மணி நேரம் என்பது மாறாது. 4 நாட்கள் வேலை செய்துவிட்டு, 3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு இருப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது ஆகும்.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அமைப்புச்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

தற்போது 8 மணி நேரம் வேலை என்ற சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் பணியாளர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் பணிச் சூழல்தான் இருக்கிறது.

மேலும், தொழிலாளர்கள் மிகை வேலை மூலம் ஈட்டும் ஊதியமும் இச்சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுவிடும், வேலையின்மை பெரும் ஆபத்தும் இருக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தை தொழில் நிறுவனங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவும் கூடாது.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டம் இயற்றி உள்ளன. அதே நிலை தமிழ்நாட்டிலும் உருவாவதை தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட திராவிட மாடல் அரசு அனுமதிக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது.

எனவே ஒட்டுமொத்த தொழிலாளர் நலனுக்கு எதிரான 65ஏ சட்டத் திருத்த முன்வரைவை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
22.04.2023

17/04/2023

தொழிலாளர் நலன் காக்க
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக!

வைகோ வேண்டுகோள்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அரசு உருவாக்கித் தந்த தொழிலாளர் தொழில் வாரியான அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியங்களைப் பாதுகாத்து, மாநில தொழிலாளர் சட்டங்களான தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நலச் சட்டம், தமிழ்நாடு மீன் தொழிலாளர் நல சட்டம் ஆகியவைகளைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ்நாடு அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பு (ருnடிசபயnளைநன றுடிசமநசள றுடிசமநசள குநனநசயவiடிn) நீண்ட காலமாக அறவழியில் போராடி வருகிறது.

பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு, தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல், கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியுள்ள அநீதிகளுக்கு எதிராகவும், அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பு தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி வருகிறது.

நீதியரசர் கிருஷ்ணய்யர் தலைமையில் கட்டட தேசிய தொழிலாளர் சங்கம் போராடிப் பெற்ற இரண்டு தொழிலாளர் நலச் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்டதைக் கண்டித்தும் இந்தக் கூட்டமைப்பு போராடி வருகிறது.

ஒன்றிய அரசின் தொழிலாளர் நல 44 சட்டங்களை ரத்து செய்து, கொண்டுவரப்பட்ட 4 தொகுப்புச் சட்டங்களையும் புறக்கணித்து, கலைஞர் அரசு நிறைவேற்றிய 36 நலவாரியங்களையும் பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்படுத்த வேண்டும் என்ற இந்தக் கூட்டமைப்பின் வேண்டுகோளை மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆதரிக்கிறது.

இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்து, திராவிட மாடல் ஆட்சியை மிகச் சிறப்புடன் நடத்தி வரும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழக அரசு, தொழிலாளர் கூட்டமைப்பின் நியாயமான இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
17.04.2023

Photos from A.Ganeshamurthi,Erode-Loksabha MP's post 16/04/2023

காங்கேயம் நகராட்சி மற்றும் காங்கேயம் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையின் சார்பாக நவீன எரிவாயு தகன மேடை பொதுமக்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் திரு M.P.Saminathan அவர்களோடு கலந்து கொண்டேன். மேலும் இந்த நிகழ்வில் திமு கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அ. கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

14/04/2023

சமத்துவ நாள் வாழ்த்துக்கள்!!

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு M. K. Stalin அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக நிற்கும் சனாதன சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்து,
இந்திய அரசமைப்பு தந்தையாக விளங்கும் அம்பேத்கர் அவர்களது பிறந்த தினத்தை சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும்.

அ. கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

Photos from A.Ganeshamurthi,Erode-Loksabha MP's post 02/04/2023

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இன்று பிறந்த நாள் விழா காணும் தலைமை கழகச் செயலாளர் திரு Durai Vaiko அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தலைவரின் போர்வாளாக வளம் வர வாழ்த்துகிறேன்.

அ.கணேசமூர்த்தி
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்.

Vaiko MDMK

Photos from A.Ganeshamurthi,Erode-Loksabha MP's post 25/03/2023

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள்!!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு பயணிகளுக்கு திருமண உதவி மற்றும் தாலிக்கு தங்கம் மற்றும் மாணவர்களுக்கு உதவித்தொகைக்கு வழங்குதல் உள்ளிட்ட பல திட்டங்களை துவக்கி வைத்தார்.

மக்களுக்கான திட்டங்களில் கலந்து கொண்டு துவக்கி வைத்தேன். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் அரசியல் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்
அ.கணேசமூர்த்தி.



Vaiko Durai Vaiko MDMK M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam

Want your public figure to be the top-listed Public Figure in Erode?
Click here to claim your Sponsored Listing.

அ. கணேசமூர்த்தி

மதிமுக பொருளாளர்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

2009-2014 நாடாளுமன்ற உறுப்பினர்

2019-2024 ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்

Videos (show all)

ஈரோடு இடைத்தேர்தலில் திரு EVKS Elangovan அவர்களின் வெற்றி என்பது எதிர்வரும் ஒன்றிய தேர்தலுக்கான முன்னோட்டமாக தமிழ்நாட்டி...
கை சின்னத்திற்கு வாக்களித்து திரு. EVKS Elangovan அவர்களை பெரு வாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்வோம்.திரு. அ. கணே...
மதவாத சக்திகளை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்க கை சின்னத்தில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திரு EVKS Elangova...
தமிழ்நாடு முதன்மை பெறஈரோடு இடைத்தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திரு E...
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியே!தமிழக அரசின் வெற்றி!!தமிழ்நாடு முதல்வர் திரு M. K. Stalin அவர்களது சிறப்பான ஆ...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS Elangovan அவர்களுக்கு கை சின்னத்தில் வெற்றி பெற செய்வோம்.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி...
இடைத்தேர்தலில் EVKS அவர்கள்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை வென்று அம்பானிக்கு துணை போகும் மதவாத சக்திகளுக்கு முடிவு க...
தேர்தல் பிரச்சாரத்தில் துரை வைகோ அவர்கள்.ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றியை நமதாக்குவோம்!!#Vaiko #DuraiVaiko #MDMK #கை #EVKSE...
மதவாத சித்தாந்தத்தை தமிழ் மண்ணில் திணிக்க துடிக்கும் பாஜக வை தேர்தல் களத்தில் வீழ்த்துவோம்.இடைத்தேர்தலில் கை சின்னத்திற்...

Category

Website

Address

Erode

Other Politicians in Erode (show all)
Anthiyur Nithin Anthiyur Nithin
Erode

மாவட்ட (து)அமைப்பாளர் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி

Vengai R Lenin Veerapandiyan Vengai R Lenin Veerapandiyan
Erode

Human. A1B+ Life is like a book: what matters is how good it is, not how long it is........! http:

Yuvaraj TNBJP Yuvaraj TNBJP
Erode

வாழ்க பாரதம்! வளர்க பாரதம்!! ஜெய் மோடி சர்க்கார்!!!

MalathiRaja Itwing dmk MalathiRaja Itwing dmk
Punjaipuliyampatti
Erode

bhavanisagar south dmk

S.D தங்கமுத்து B.sc, பெரியசேமூர் பகுதி செயலாளர் S.D தங்கமுத்து B.sc, பெரியசேமூர் பகுதி செயலாளர்
Periyasemur
Erode, 638004

மக்களால் நான் மக்களுக்காக நான் ����

KKC Balu B.E., KKC Balu B.E.,
Perundurai
Erode, 638056

கேகேசி பாலு BE, மாநில பொருளாளர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி.

என்.நல்லசிவம் ஈரோடு வடக்கு மாவட்டச்செயலாளர் என்.நல்லசிவம் ஈரோடு வடக்கு மாவட்டச்செயலாளர்
Erode, 638452

Erode Northern District Secretary, Dhiravida munnetra kazhakam(D.M.K), Ex Secretary of the Union Cor

Erode Parthiban Erode Parthiban
Erode

ஈரோடு தெற்கு மாவட்ட மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்🖤❤️ என்றும் அண்ணன் உதயநிதி அவர்கள் வழியில் 🏴🚩

Thulasimani Santhanam Thulasimani Santhanam
Erode

தகுதி என ஒன்று நன்றே பகுதியால் பாற்ப?

Modakkuruchi Gowtham Modakkuruchi Gowtham
Modakkuruchi, Sivagiri, Erode
Erode

கடமையை தவறாது புரியும் மக்கள் தலைவரு

Malathi Raja itwing Dmk Malathi Raja itwing Dmk
Bhavanisagar
Erode

bhavanisagar south Dmk

S.M. SIRAJ S.M. SIRAJ
S. K. C. Road
Erode, 638001

DMK PARTY OF TAMILNADU MY LEADER OF M.K. STALIN