Election Department-Karaikal
Nearby government services
karaikal 609602
Karaikal, karaikal
Three Will Plaze South Street, karaikal
மாவட்ட தேர்தல் அலுவலகம், காரைக்கால்
Pink Polling Booth @ Karaikal
Let us Vote...!!!
வாருங்கள் வாக்களிப்போம்...!!!
காரைக்கால் மாவட்ட தேர்தல் துறையும் மற்றும் ஸ்வீப்பும் இணைந்து தயாரித்த தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய குறும்படம் C.D. ஒன்றை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி, திரு. அர்ஜூன் சர்மா, IAS மற்றும் முதுநிலை காவல் கண்காணிபபாளர் திருமதி. நிகாரிகா பட், IPS ஆகியோர் வெளியிட உதவி இயக்குநர் செய்தித்துறை திரு, K. குலசேகரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.பிறகு இந்த குருந்தகடு டைமன் தொலைக்காட்சி அலுவலர்கலிடம் ஒப்படைக்கப்பட்டது. 100 % வாக்கினை வலியுறுத்தியும்,வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இக்குரும்படம் டைமன்ட் தொலைக்காட்சியின் அனைத்து சானல்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வ ஏற்ப்படுத்தும் வண்ணம் ஒலிபரப்பப்படும். உடன் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி. ஷெர்லி மற்றும் திரு.ஞானமுருகன். திரு.கணேஷ்குமார்.திரு.கரிகாலன் மற்றும் திரு.திலகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்ட தேர்தல்துறையும் மற்றும் ஸ்வீப்பும் இணைந்து வரும் சட்டசபை தேர்தல் நடைபெருவதை
முன்னிட்டு பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.இவை அனைத்தும் 100 % சதவீத வாக்கினை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளாகும். இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை மேலவாஞ்சூர் மற்றும் பேட்டை கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் EVM மற்றும் VVPAT இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் ஒரு டெமோ பயிற்சியை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்கள். உடன் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தவறாமல் வாக்களிக்க வேண்டும். நேர்மையாக வாக்களிக்க வேண்டும். போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வையும் ஸ்வீட் அதிகாரிகள் மேற்கொண்டார்கள். மேலும் காரைக்காலில் அமைந்துள்ள சௌந்தரராஜன் மில் மற்றும் காட்ரேஜ் கம்பெனி ஆகிய இடங்களில் நேரில் சென்று அங்கே உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களிடம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்தும் மற்றும் இவிஎம் மற்றும் விவிபேட் இயந்திரத்தைக் கொண்டு எப்படி வாக்களிப்பது என்பது குறித்தும் ஒரு பயிற்சியையும் ஸ்வீப்ஊழியர்கள் செய்திருந்தார்கள். உடன் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஷெர்லி மற்றும் உடன் திரு.ஞானமுருகன். திரு, கரிகலன், திரு.கனேஷ்குமார் மற்றும் திரு.திலகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Let us Vote...!!! வாருங்கள் வாக்களிப்போம்...!!!
NSS Volunteers creating awareness through Mehendi to public for Voting
Regularly pasting stickers at gas cylinder
Regularly printing stickers at Colait milk packets
Awareness through cultural program at Nedungadu constituency
Placed selfie stand at District Election Office
EVM VVPAT demo at Soundarajan mills, Goodrj company Nedungadu constituency
Pasting stickers at public places by NSS volunteers to create awareness about elections
Install Voter Helpline App, Know your Voter Details and Ready for Vote...!!! Let us Vote...!!!
DEO's Inspection @ Karaikal.
இன்று (29.03.2021) மாலை, காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியானது திரு வீரவல்லபன் , காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், வட்ட ஆய்வாளர், டி.ஆர். பட்டினம், நிரவி காவல் நிலைய அதிகாரி, ஐ.ஆர்.பி.என் சண்டிகர், மற்றும் உள்ளூர் காவல்துறையினரால் மேற் கொள்ளப்பட்டது.
காவல்துறையினரின் அணிவகுப்பு
புதுவை அரசு காரைக்கால் மாவட்ட தேர்தல் துறையும் மற்றும் ஸ்வீப்பும் இணைந்து காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக இன்று (29.03.2021) மாலை 100% வாக்கினை வலியுறுத்தியும் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்ற அவசியத்தை உணர்த்தும் விதமாகவும் இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் எழுச்சியுடன் வாக்களிக்க வாரீர் போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி திரு அர்ஜூன் சர்மா, இ.ஆ.ப. அவர்கள் வாகனங்களில் ஒட்டி தொடங்கி வைத்தார்கள். பின்பு 100 சதவீத வாக்கினை வலியுறுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய தயார் நிலையில் இருந்த வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வாகனங்களில் 100 சதவீத வாக்கினை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டி காரைக்கால் மாவட்ட. தேர்தல் அலுவலகம் சார்பில் மக்களிடம் மிகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காரைக்கால் மாவட்ட தேர்தல் துறையின் இதுபோன்ற நடவடிக்கையால் காரைக்கால் மக்களிடையே மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது உடன் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி.ஷெர்லி, செய்தித்துறை உதவி இயக்குனர் திரு குலசேகரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
இன்று (29.03.2021) மாலை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான திரு அர்ஜூன் சர்மா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட துணை தேர்தல் அதிகாரி, மாவட்ட துணைத் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அனைத்து தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் அனைத்து நோடல் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகின்ற புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் கொரோனா நோய் தடுப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தேர்தல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் போன்ற அனைத்து அம்சங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
புதுவை அரசு காரைக்கால் மாவட்ட தேர்தல் துறையும் மற்றும் ஸ்வீப்பும் இணைந்து காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.இதன் ஒரு பகுதியாக 100% வாக்கினை வலியுறுத்தியும் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்ற அவசியத்தை உணர்த்தும் விதமாக கடற்கரைச் சாலையில் ரங்கோலி கோலப் போட்டி நடைபெற்றது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் மற்றும் பஜன் கோ, விநாயகாமிஷன்.அவ்வையார் கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரி
மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் கோலத்தை பதிவு செய்தார்கள். அனைத்து கோலங்களிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்றிருந்தது. ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு களித்தார்கள்.'இந்நிகழ்வை தேர்தல் நடத்தும் அதிகாரி RO IX திரு.சுபாஷ் அவர்கள் பார்வையிட்டு மாணவிகளை பாராட்டினார்கள். உடன் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி.ஷெர்லி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
காரைக்காலில் கடந்த 10 நாட்களாக கொரானா தொற்று அதிகம் பரவி வருவதாலும் தேர்தல் நெருங்குவதன் காரணமாகவும் முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மற்றும் மாவட்ட ஆட்சியருமான திரு.அர்ஜுன் சர்மா IAS அவர்கள் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் அவர்கள் தற்போது காரைக்காலில் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவுவதால் அரசியல் கட்சி பிரமுகர்கள் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் செல்பவர்கள் கொரானா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கும்படி ஆட்சியர் கேட்டுக் கொண்டார்கள். மேலும் பிரச்சாரம் செய்யப் போகும் போது மாஸ்க் அணிந்து கொண்டும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கும்படியும் கேட்டுக் கொண்ட ஆட்சியர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் பொது மக்களுக்கு கொரானா தொற்று எதுவும் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மேலும் வேட்பாளர்களுடன் ஓட்டு கேட்க வருபவர்களுக்கும் மாஸ்க் அணிந்து கொண்டு வரும்படி அறிவுறுத்தும் படியும் வேட்பாளர்களை கேட்டுக் கொண்டார்கள். இந்நிகழ்வில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிகாரிகா பட் IPS மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை மாவட்ட தேர்தல் அதிகாரி திரு S.பாஸ்கரன் மற்றும் ஆட்சியரின் செயலர் திரு.புஷ்பநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
காரைக்கால் மாவட்ட தேர்தல் துறையும் மற்றும் ஸ்வீப்பும் இணைந்து வரும் சட்டசபை தேர்தல் 2021 நடைபெருவதை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் 100% வாக்கினை வலியுருத்தி பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று மாலை ஞாயிற்றுக்கிழமை கடற்கரை சாலையில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் நடத்தும் அதிகாரி திரு ஆதர்ஷ் அவர்கள் தலைமை வகித்தார்கள். ஸ்வீப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி.ஷெர்லி மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
காரைக்கால் மாவட்ட தேர்தல் துறையும் மற்றும் ஸ்வீப்பும் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை 2021 நடைபெருவதை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் 100% வாக்கினை வலியுருத்தி பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி இன்று ஆட்சியரகம் எதிரே நடைபெற்றது இப்போட்டியை தேர்தல் பார்வையாளர்(கணக்கு) திரு.F.R.MEENA IRS மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி திரு அர்ஜுன் ஷர்மா IAS ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த மாரத்தான் போட்டி MOH பெட்ரோல் பங்க் வழியாக சென்று காமராஜர் சாலையை கடந்து CRC ஷெட் வழியாக புதிய பேருந்து நிலையம் கடந்து பாரதியார் வீதி வழியாக மீண்டும் MOH பெட்ரோல் பங்க் வந்து மாவட்ட ஆட்சியரகம் வந்தடைந்தார்கள். மேலும் மாணவர்களுக்கு வழியில் ஐந்து இடங்களில் குடிநீர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது மேலும் மாணவர்கள் ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடன் மருத்துவர் குழுவும் ஆம்புலன்ஸ் உடன் சென்று கொண்டிருக்கிறது.இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மேலும் மூன்றாவதாக பள்ளி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் என நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.மேலும் இதில் முதன்மை கல்வி அதிகாரி செல்வி A அல்லி மற்றும் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி.ஷெர்லி மற்றும் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். மேலும் ஸ்வீப்பின் திரு.ஞானமுருகன், திரு.கரிகாலன், திரு.கணேஷ்குமார் மற்றும் திரு.திலகர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
காரைக்கால் மாவட்ட தேர்தல் துறையும் ஸ்வீப்பும் இணைந்து கடற்கரை சாலையில் 100% சதவீத வாக்கினை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் தத்ரூபமாக செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேர்தல் பார்வையாளர் (கணக்கு) திரு. F.R.மீனா IRS மற்றும் தேர்தல் பார்வையாளர் (காவல்) திரு.P.N. மீனா IPS மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி திருஅர்ஜூன் சர்மா இ ஆப மற்றும் துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) திரு M ஆதர்ஷ் மற்றும் துனை மாவட்ட ஆட்சியர் (பே. மே.) திரு.S பாஸ்கரன் மற்றும் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி ஷெர்லி மற்றும் ஸ்வீப் அதிகாரிகள் திரு.ஞானமுருகன். திரு.கரிகாலன், திரு.திலகர் திரு. கணேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். காரைக்கால் மாவட்ட இலக்கு நூறு சதவீத வாக்குப்பதிவு போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மணல் சிற்பத்தை பார்வையிட்டு பலூன்களை பறக்க விட்டார்கள். மேலும் ஏராளமான பொதுமக்கள் வந்து பார்வையிட்டார்கள்.
cVigil App for Reporting of any MCC Violations...!!! Install it and be part of building stronger democracy...!!!
Election Awareness Rally @ Karaikal Organised by SVEEP Team, Office of the District Election Officer in collaboration with District NSS Cell.
Let us Think & Vote...!!!
வாக்காளர் விழிப்புணர்வு பொம்மலாட்டம்.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the organization
Telephone
Website
Address
GOVERNMENT HOUSE, NO. 1, DUPLEX Street, KARAIKAL DISTRICT, PUDUCHERRY UT
Karaikal
609602
First Floor, Kamarajar Administrative Complex, Madagady
Karaikal
Promote and develop the status of the SC/ST people and improve the socio-economic,educational status.
No. 62 PSR Nagar, Patchur, Karaikal
Karaikal, 609602
REGISTRATION OF PROPERTY RELATED SUGGESTIONS CAN BE HAD FROM ME THROUGH MY MAIL ID"[email protected]
Mariamman Koil Street, Karaikal
Karaikal
Our Motto:: Safe Karaikal -- On all aspects. We request You People to Help us to Help You
#1, Government House, Duplex Street
Karaikal, 609602
Official FB Page of Collectorate Karaikal