CPM - Jaihindpuram Madurai

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மதுரை மேற்கு 2ஆம் பகுதிக்குழு

🔴LIVE: Sitaram Yechury | மறைந்த சீதாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி 24/09/2024

https://www.youtube.com/watch?v=fqBP4H62MtI

🔴LIVE: Sitaram Yechury | மறைந்த சீதாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி Sitaram Yechury | மறைந்த சீதாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி Subscribe to Sun News Channel to stay upd...

19/09/2024
15/09/2024

இன்று மதுரை மேற்கு 2ஆம் பகுதிக்குழு, 78 வது வார்டு, ஜீவா நகர் 2வது தெரு கிளையின் மாநாடு சிறப்பாக, மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர் விஜயராஜன், பகுதிக்குழு உறுப்பினர்கள் S.R.பாலாஜி, R. சக்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியது.

சாக்கடை கழிவுகள் கலந்து சாக்கடை நதியாக செல்லும் கிருதுமால் நதியை சுத்தம் செய்திட

சுந்தரராஜபுரம் பூங்காவில் புதிய 25 லட்சம் லிட்டர் டேங்க் கட்டியதால் புதிதாக அந்த பகுதியில் இருக்கும் மாநகராட்சி இடத்தில் பூங்கா அமைத்து கொடுத்திட

சொக்கு கொத்தன் ஊருணியில் உடற்பயிற்சி கூடம் & நீச்சல் குளம் அமைத்து கொடுத்திட

பாதாள சாக்கடை, பழுதடைந்த சாலைகளை சீரமைத்திட

மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு உடனடியாக வழங்கிட

வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய கிளை செயலாளராக தோழர் ஆர் பாண்டியராஜன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

புரட்சிகர வாழ்த்துக்கள்

When CPI(M)'s Sitaram Yechury Recalled His Political Stint In His Farewell Speech In Rajya Sabha 12/09/2024

https://www.youtube.com/watch?v=yi_WJI2t0j4

When CPI(M)'s Sitaram Yechury Recalled His Political Stint In His Farewell Speech In Rajya Sabha Sitaram Yechury, CPI(M)'s veteran leader passed away on September 12th. Recalling his political stint in Rajya Sabha back in 2017, he shared how one can expa...

12/09/2024

செவ்வணக்கம் தோழரே!!

உங்களை இழந்து நிற்கும் நாங்கள், நீங்கள் விதைத்த விதையை ஏற்று அந்த பாதையில் பயணிப்போம்.

செவ்வணக்கம்

08/09/2024

கல்வித்துறை உயர் அதிகாரிகளால் தடுமாறும் தமிழக கல்வித்துறை
ஆர் எம் பாபு
இடதுசாரி செயற்பாட்டாளர்

தமிழ்நாடு அரசுப் பள்ளியில் வலதுசாரிகளை / ஹிந்துத்துவவாதிகளை அழைத்துவந்து ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டிருப்பதும் விநாயகர் சதுர்த்தி தொடர்பான அதிகாரிகளின் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை தரப்பட்டதும், பள்ளிகளில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளால் போலி என்சிசி கேம்ப் நடத்தி பாலியல் சீண்டல்களுக்கு மாணவர்கள் உள்ளாவது எனபல்வேறு சர்ச்சைகள் கல்வித்துறை அமைச்சகத்தின் முன் நிற்கிறது

இப்படிப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் 28 மிக தெளிவாக "அரசு கல்விக்கூடங்கள் அல்லது அரசின் உதவி பெரும் கல்விக்கூடங்களில் மத ரீதியாக எந்த ஒரு நிகழ்வையும் நடத்தக்கூடாது" என்பது விதி. இப்படி இந்த அடிப்படை சட்டங்களை கூட மதிக்காத வகையில் பள்ளிக்கல்வி துறையில் இருக்கும் CEO போன்றோர்களின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த CEO அதிகாரிகளும் ஒரு காலத்தில் ஆசிரியராக இருந்து தான் இந்த பொறுப்புக்கு வந்து இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட்டு பொறுப்பற்று நடப்பது கவலை அளிக்கிறது.

ஒரு பக்கம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான விதத்தில் கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ஒன்றிய அரசின் கல்விக்கான நிதி உதவியை தர மறுக்கும் ஒன்றிய அரசு..

மத்திய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதும். உரிமையுடன் அந்த நிதி ஒதுக்கீடை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று ஒன்றிய அரசை அழுத்தம் கொடுத்து கேட்பதுவும் பாராட்டுக்குரியது.

அதே விதத்தில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இப்போது கல்வி பயிலும் மாணவர்களை எந்த திசையில் அழைத்து செல்கிறார்கள் என்றே புரியாத புதிராக இருக்கிறது.

ஒரு பக்கம் ஆளுநர் உள்ளிட்ட வலதுசாரி சிந்தனையாளர்கள் தமிழக கல்வியை எந்தவித ஒப்பீடும் இல்லாமல் தொடர்ச்சியாக சரியில்லை என்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். கல்விக்கூடங்கள், பல்கலை கழகங்கள் என்று அனைத்தின் மீதும் வலதுசாரி ஹிந்துத்துவா பேர்வழிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு இடதுசாரிகள் ஆதாரங்களை வைத்து விவாதத்து அவர்கள் கருத்துக்களை எதிர்கொள்கிறார்கள்.

2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதாகவும், தமிழ்நாட்டிற்கென மாநில அளவில் ஒரு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, மாநில கல்விக் கொள்கை குழுவென்று உருவாக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை முறையீட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆகவே, கனத்த இதயத்துடன் குழுவில் இருந்து விலகுவதாக பேராசிரியர் ஜவஹர் நேசன் தெரிவித்ததை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டி உள்ளது.

கோரிக்கைகள்

ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் பெற்றோர் ஆசிரியர் கழகம், கண்காணிப்பு குழு போன்றவை எல்லாம் பெயரளவிற்கே இருக்கிறதே தவிர இதற்கான கூட்டங்கள், முடிவுகள் என்று எதையும் இந்த அரசாங்கம் இதுவரை செய்யவில்லை. ஆகவே இனி வரும் காலங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்ற குழுக்கள் குறிப்பிட்ட காலங்களில் கூடி அந்த கல்வி நிறுவனம் குறித்த மதிப்பீடுகள், ஆலோசனைகள் இவற்றை பெற்று நடப்பதற்கான முயற்ச்சியை இந்த அரசு உடனடியாக எடுக்க வேண்டும்,

கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ உதவி செய்துவரும் அதிகாரிகள், ஊழியர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்திட மகாவிஷ்ணு போன்ற பிற்போக்கு கும்பலின் அமைப்புகளை தடை செய்திட, கல்வியில் ஜனநாயகம் அறிவியல் பூர்வமான விசயங்களுக்கு எதிராக உள்ள ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பலை தடை செய்திட மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையை பல்வேறு பெயர்களில் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

மாநில அளவில் கல்வியாளர்கள், மாணவர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களை அமைத்து, மாணவர் – ஆசிரியர் நலன்சார் திட்டங்கள் குறித்து பரிசீலித்துத் திட்டமிடவேண்டும்.

பெற்றோர் – மாணவர் – ஆசிரியர் கூட்டுப் பொறுப்பிலும், ஜனநாயக – முற்போக்கு சக்திகளின் பங்கேற்பிலும் வாசிப்பு இயக்கங்கள், கல்வி – மாணவர் நலன்சார் உரையாடல்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வழிவகை செய்திடவேண்டும்.

இந்த கோரிக்கைகளை தமிழக அரசின் கல்வித்துறை பரிசீலிக்குமா?

ஆர் எம் பாபு
இடதுசாரி செயற்பாட்டாளர்

தேங்கா பொருக்கியா தமிழரசன் உளறி தள்ளிய சீமான் !! | Seeman | Thangapandian 01/09/2024

https://www.youtube.com/watch?v=Ec1jrBCMdxk

Director TPK இயக்குனர் கௌதமன் அவர்களே,

தோழர் தமிழரசன் விழா ஏற்பாட்டுக்கும் அதில் கலந்துகொண்டமைக்கும் நன்றி.

இங்கே தோழர் தமிழரன், புலவர் கலியபெருமாள் போன்றோர் பற்றி பேசிய சீமான் சிதறு தேங்காய் பொறுக்கிகள் என்ற பொருள் பட பேசி இருப்பதை ஒரு தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு கூட புரியவில்லையா?

தான் தான் முழு தேங்காய் பொருக்கி என்பதாக பொருள்பட, மற்றவர்கள் எல்லோரும் சிதறு தேங்காய் போருக்கியவர்கள் என்று பேசியது எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள்?

ஏற்கனவே பிரபாகரனை முனியாண்டி விலாஸ் சமையல் காரர் போன்ற தோற்றத்தை கொடுத்த சீமான், தோழர் என்ற வார்த்தையை மிக கேவலமான வார்த்தையாக நினைக்கும் சீமான், தோழர் தமிழரசன் விழாவில் அழைத்து அவரை அவமானப்படுத்திய அனைவருக்கும் தமிழரசனின் தோழராக ஆர் எம் பாபு வன்மையாக கண்டிக்கிறேன்.

என்றைக்கு சீமான் தேர்தல் அரசியலுக்கு வந்தானோ அன்றே அவன் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஒவ்வாதவன் என்பதை நாங்கள் அறிவோம்.

மீண்டும் மீண்டும் தமிழ்த்தேசியம் என்ற பெயரில் அதை கேவலபடுத்த இன்னும் விடமாட்டோம். முன்னெடுக்க யார் முனைந்தாலும் அவர்களும் தமிழ்த்தேசிய விரோதிகளே என்பதை வெளிப்படுத்தி அவர்கள் முகத்திரையை கிழிப்போம்.

நீங்கள் கூட ஒரு வன்னியர் என்ற அடிப்படையிலே தான் தோழர் தமிழரசனுக்கு பாராட்டு மழை பொழிய இதை முன்னெடுத்தீர்கள் என்பது கூட உங்கள் மேல் நான் வைக்கும் குற்றச்சாட்டு. ஜெய் பீம் படத்தை குறித்த உங்கள் பார்வை உங்களை சாதியவாதி என்பதை முத்திரை குத்தியது.

இயக்குனர் கவுதமண் அவர்களே கவுதம புத்தர் பெயரை உங்களுக்கு சூட்டிக்கொண்டு அந்த புத்தத்திற்கு எதிராக நடப்பதும் கூட ஒரு வித வேடமே.

நட்பு முரணோடு

ஆர் எம் பாபு

தேங்கா பொருக்கியா தமிழரசன் உளறி தள்ளிய சீமான் !! | Seeman | Thangapandian | ARAKALAGAM : https://rzp.io/l/ARAKALAGAMJoin this channel to get access to perks:https://www.youtube.com/channel/UCdjlFUoJxsPQ...

31/08/2024

*அருந்ததியர் உள் ஒதுக்கீடும் அரசியல் கட்சிகளின் குழப்பங்களும்*

இந்தியாவில் தமிழகத்தில் மூன்று விதமாக சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

பொது பிரிவு - 31%
பிற்படுத்தப்பட்டோர் - 50%
பட்டியலினத்தவர் - 18%
பழங்குடியினர் - 1%

இங்கே ஒவ்வொரு பிரிவிலும் கூட பாதிக்கப்பட்டோர், விளிம்பு நிலை மக்கள் இருக்கிறார்கள் என்பதை கணக்கில்கொண்டு தான் குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் களில் இரண்டாக பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 30%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 20% என்று உள் ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதே போல பட்டியலினத்தில் அருந்ததியர்கள் குறிப்பாக செருப்பு தைப்போர், தூய்மை பணியாளர்கள் இந்த பிரிவில் வருகிறார்கள். இவர்கள் மிகவும் நலிந்தவர்களாக, சமூகத்தில் கடை நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் எப்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு ஒதுக்கப்பட்டதோ அப்படியான நகர்வாக அருந்ததியர்களுக்கு 3% ஒதுக்கப்பட்டது.

இன்று இதை எதிர்த்து போராடுபவர்கள் குறிப்பாக சாதீய கண்ணோட்டத்தில் மட்டுமே நின்றுகொண்டு பறையர்களும் பள்ளர்களும் அந்த பின்புலம் கொண்ட கட்சியினர் மட்டுமே போராடி வருகிறார்கள். இந்த இரு பிரிவினருமே பட்டியலினத்தில் இன்று கொஞ்சம் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அருந்ததியர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீண்டும் மீண்டும் போராடுபவர்களிடம் புரிதல் நிலையை உருவாக்கிட வேண்டும் என்பதோடு அவர்களையும் சேர்த்த சமூகமாகவே பயணிக்க வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்.

சமூக நீதி என்று பேசிக்கொண்டு பார்ப்பனியர்களை எதிர்த்து நின்றவர்கள் இன்று அருந்ததியர்களுக்கு எதிராக குறுகிய கண்ணோட்டத்தில் இந்த அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பது மிகப்பெரிய வரலாற்று பிழை என்பதோடு இதை மன்னிக்க முடியாது.

ஆர் எம் பாபு

24/08/2024

https://x.com/i/status/1827299281344106788

நாம் தமிழர் கட்சியின் தம்பிகளுக்கு நல்ல விதத்தில் அறிவுரை கூறும் தகுதியை சீமான் எப்போதோ இழந்துவிட்டார். அவருக்கே நாகரீக மொழியில் பேச கற்றுக்கொடுக்க வேண்டியது இருக்கிறது விரைவில் இந்த சமூகம் கற்றுக்கொடுக்கும் என்றே நம்புவோம்.

சீமான் எனும் நபர் முதலில் தூய்மை வாத அரசியல் என்ற பெயரில் மொழி வெறுப்பு அரசியலை விதைத்தார். திராவிடம் என்பதற்கு எதிரான அரசியலை கட்டமைத்து (திராவிடத்தில் அதிமுக வராது என்பது அவரது அகராதி) திமுகவை எதிர்த்தார்.

சீமானை விமர்சனம் செய்யும் ஒவ்வொருவரையும் தனிமனித வெறுப்பு மற்றும் ஒருமையில் பேசி வந்தார்.

இப்போது ஓர் அதிகாரியை எதிர்க்கிறேன் என்ற பெயரில் தனிமனித சாதி ரீதியாக, அவரது குடும்பத்தை விமர்சித்து வந்துகொண்டு இருக்கிறார். இதை அவரது பின்னால் தொடரும் தம்பிகள் செய்து வருகிறார்கள்.

ஒரு கம்யுனிஸ்ட் ஆக அதிகாரத்தில் இருப்போரை எதிர்க்கிறோம்.. அவர்களை எதிர்த்து தான் போராட்டங்களை கட்டமக்கிறோம். ஒவ்வொரு நாளும் போராடுகிறோம். அதே அதிகாரி நடவடிக்கை எடுக்கிறார். சட்ட விரோதம் என்றால் நாங்கள் நீதிமன்றம் செல்கிறோம். மேலே முறையிடுகிறோம். எந்த இடத்திலும் அவரை தனிமனித விரோதமாக பேசுவது எழுதுவது கிடையாது. இது தான் நம் ஜனநாயகம் நமக்கு கற்றுக்கொடுத்த சட்டம் நமக்கு அளித்து இருக்கும் உரிமை.

ஆகவே சீமானை பின்தொடரும் தம்பி தங்கைகள் நாட்டு நடப்பை கண்டு திருந்த பாருங்கள். இல்லாவ்ட்டால் உங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிட கூடும்.

இன்னும் சீமான் ஏமாற்ற முடியாது. NTK தம்பி தங்கவேல் அந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர். நீங்கள் இந்த சீமான் மாதிரியான கொள்கைகளை கொண்டு சேர்க்காதீர்கள் என்றும் உங்களிடமும் வேண்டுகிறோம்.

நன்றி

ஆர் எம் பாபு

x.com

13/08/2024

நேற்றைய தினம் புதிய தலைமுறையில் கார்த்திகேயன் நெறியாளராக *உயர் கல்வி குறித்தும், தேசிய புதிய கல்விக்கொள்கை குறித்த விவாத மேடையில் கல்வியாளர் என்ற போர்வையில் பாஜகவின் ஊதுகுழலாக காயத்திரி என்பவர் கலந்துகொண்டார்.

குறிப்பாக இந்த தேசிய புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்திய தனியார் கல்வி நிறுவனங்களான எஸ் ஆர் எம், சவிதா, சாஸ்த்ரா போன்ற கல்வி நிறுவனங்கள் முதல் இடங்களில் வந்து இருக்கிறது என்ற கருத்தை பதிவிட்டார்.

அரசாங்க கல்வி நிறுவனங்களும் இந்த கொள்கைகளை கடைபிடித்தால் முதலிடத்தை பிடிக்க முடியும் என்றார்.

அதோடு போகிற போக்கில் இந்த பேராசிரியர் பிராடுத்தனம் எல்லாம் தமிழகத்தில் நடக்கிறது என்றார்.

இந்த பேராசிரியர் பிராடுத்தனம் நடந்ததே இவர் சொல்லும் அந்த தனியார் கல்லூரிகளில் தான் என்பதை மறந்துவிட்டு மறைத்துவிட்டு சங்கியாக உளறிக்கொண்டு இருந்தார்.

இப்படிப்பட்ட சங்கிகளை வைத்துக்கொண்டு இருக்கும் சவிதா நிறுவனம் இனி என்ன எல்லாம் தடுமாரப்போகிறதோ?

ஆர் எம் பாபு

https://www.youtube.com/watch?v=7S4whcKWZxs

இந்த காயத்திரி எனும் கல்வியாளர் தான் பணியாற்றும் சவிதா கல்லலூரி

CBI Raid in Pon Manickavel IPS House - Karikalan exposes Pon Manickavel | DSP Kathar Baasha case 11/08/2024

https://www.youtube.com/watch?v=ErEy0CCnE9A

பொன் மாணிக்கவேல் எப்போதும் ஒரு சங்கியாக நாடகம் போட்டு விளம்பரம் தேடி வந்தவர் என்று பல முறை பதிவுகள் செய்து இருந்த நிலையில், இப்போது தான் அவர் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறார்.

ஆர் எம் பாபு

CBI Raid in Pon Manickavel IPS House - Karikalan exposes Pon Manickavel | DSP Kathar Baasha case CBI Raid in Pon Manickavel IPS House - Karikalan exposes Pon Manickavel | DSP Kathar Baasha case ...

19/07/2024

*வேலைகளுக்கான போட்டி தேர்வுகள் என்பதே
வெறும் கண்துடைப்பு நாடகம் தானா? தேசத்தின் பாதுகாப்பு துறையான இந்திய ராணுவத்தில் ஆட்சேர்க்கையிலும் முறைகேடா?*
ஆர் எம் பாபு

நாட்டில் மருத்துவம் பார்ப்பதற்காக மருத்துவர் சேர்க்கைக்கான தேர்வை தேசிய தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) நடத்தும் NEET தேர்வுகளில் பல்வேறு குழப்பங்களும் ஊழல்களும் முறைகேடுகளும் நடந்துவரும் நிலையில் இப்போது அக்னி பாத் என்ற திட்டத்தின் கீழே நாட்டின் பாதுகாப்பு துறையில் ஆட்கள் தேர்வு செய்வதிலும் பல்வேறு குழப்பங்கள் முறைகேடுகள் நடந்து வருவது மிகுந்த அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கிறது.

அக்னி பாத் எனும் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்வதே அடியாட்களை தேர்வு செய்வது என்ற விமர்சனத்திற்கு மத்தியில் மத்திய பிரத்சம் ஜபல்பூரில் நிதிஷ் குமார் திவாரி எனும் உயர் சாதி ஹிந்துவை தேர்வு செய்து இருப்பது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அக்னி பாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு முகாமை செப்டம்பர் மாதம் 2022 ஆண்டு உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் 2022 அன்று நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் நவம்பர் 26, 2022 அன்று அறிவிக்கப்பட்டது.

தேர்வில் கட் ஆப் (CUT OFF) மதிப்பெண் 169 என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 159 மதிப்பெண் பெற்ற நிதிஷ் குமார் திவாரி தேர்வானதும், 167 மதிப்பெண் பற்ற மாணவர்கள் தேர்ச்சி அடையாத நிலையை அறிந்த பல மாணவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை கோரி விண்ணப்பித்த நிலையில் பல்வேறு அத்ர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்து இருக்கிறது.

RTI பதில் படி, நிதிஷ் குமார் திவாரி (ரோல் எண் - 140241) ஒருங்கிணைந்த உடல் தேர்வு (88) மற்றும் எழுத்துத் தேர்வில் (71) 159 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நவம்பரில் அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலில் நிதிஷ் குமாரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது (பட்டியலை கீழே காணலாம்).

மேலே கொடுக்கப்பட்ட தேர்ச்சி அடிப்படையில் நிதிஷ் குமார் திவாரிக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.

நிதிஷ் குமார் பெற்ற மதிப்பெண் குறித்த RTI பதில்

இந்த நிலையில் சக மாணவர்கள், தங்களுக்கான மதிப்பெண் விபரங்களை RTI மூலம் பெற்ற நிலையில் நிதிஷ் குமார் திவாரியை விட அதிகமான மதிப்பெண் பெற்று இருப்பது தெரிய வருகிறது.

சுஜீத் குமார் ராவத் (160.5), விகாஸ் சிங் (163), அபிஷேக் வர்மா (165.5), சச்சின் சிங் (166.5) மற்றும் சவுரப் சிங் (167). ஆகியோர் நிதிஷ் குமார் திவரியை விட அதிக மதிப்பெண்கள் பெற்ற இந்த தகவல்களை சேகரித்த பின்னர் சட்ட போராட்டத்தை முன்னெடுத்து நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தனர்.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றும், ஆயுதப்படை தீர்ப்பாயம் (AFT) மட்டுமே இதை விசாரிக்க முடியும் என்றும் வாதிட்டார். இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் டிசம்பர் 13, 2022 அன்று வழக்கைத் தள்ளுபடி செய்து, மாணவர்களை AFT ஐ அணுகுமாறு கேட்டுக் கொண்டது. மனுதாரர்கள் AFT-யை அணுகியபோது, "ஆயுதப்படை தீர்ப்பாயம் ஆயுதப்படையில் இருப்போருக்கானது. மனுதாரர்கள் ராணுவத்தில் பணியாற்றவில்லை என்பதால், AFT-க்கு இந்த விஷயத்தைக் கேட்க உரிமை இல்லை" என்று கூறப்பட்டது.

AFT ஆல் நிராகரிக்கப்பட்ட பிறகு, மீண்டும் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை அணுகி அனைவரின் மதிப்பெண்கள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்..

நீதிமன்றத்தில் இந்திய அரசு மற்றும் பிற தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் (டிஎஸ்ஜி) புஷ்பேந்திர யாதவ், தனி நபர் சார்ந்த தகவல்கள் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மதிப்பெண்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க முடியாது என்று வாதிட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விஷால் அரசு தரப்பு வாதத்தை நிராகரித்து, மாணவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும் எந்த போட்டித் தேர்விலும், அவர்களின் மதிப்பெண்களை வெளியிடுவது தனிப்பட்ட தகவல் அல்ல என்று கூறினார்.

நீதிமன்றம் இந்திய ராணுவத்திற்கு 15 நாட்களுக்குள் அனைவரின் மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என்று 01-07-2024 அன்று உத்தரவிட்ட நிலையில் இந்த நிமிடம் வரை முழு விபரமும் தாக்கல் செய்யப்படவில்லை. அதுமட்டுமன்றி, தேர்வான, பணி நியமனம் பெற்ற நபரான நிதிஷ் குமார் திவாரியை உடல் தகுதி இல்லை என்று கூறி பணியில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிகிறது.

நீதிமன்ற படி ஏறி சட்ட போராட்டத்திற்கு பின்னரும் விடை கிடைக்காத பல வழக்குகள் இன்றும் தூங்கிக்கொண்டு தான் இருக்கிறது.

வெளிப்படைத்தன்மை இல்லாத அனைத்துமே இப்படி ஊழலுக்கும் முறைகேட்டிற்கும் வழி வகை செய்யும். இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுப்பதில் இத்தனை முறைகேடு என்பது பாதுகாப்பு சார்ந்த விஷயத்திலும் கூட இந்த அரசாங்கம் உரிய வகையில் முன்னேற்பாடுகள் இல்லாது நடந்து வருவதை காட்டுகிறது.

ஆர் எம் பாபு

14/07/2024

*தோழர் நன்மாறன் அவர்களை நினைவு கூர்ந்த நிகழ்வு*

கேரளத்தை சேர்ந்த பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்ந்தவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர். மதுரையில் நடக்கும் *காதலை போற்றுவோம்* நிகழ்ச்சிக்காக வந்தார்.

அமிர்தா விரைவு வண்டியில் பயணித்து மதுரை வந்து சேர்ந்தார். இரவில் அவராக ஒரு மூன்று சக்கர வாகனத்தில் ஏறி அவருக்கு ஒதுக்கப்பட்ட கம்யூன் அறையில் தங்கிக்கொண்டார்.

காலையில் சில இடங்களுக்கு செல்லவேண்டும். செல்வதற்காக மதுரை மாவட்டக்குழு வாகனம் இருந்தாலும் வேண்டாம் ஆட்டோவில் செல்கிறேன் என்று பயணித்தார்.

ஆட்டோ ஓட்டுனர் பெயரை மலையாளம் கலந்த தமிழில் விசாரித்துவிட்டு, அந்த தொழில் சார்ந்த பிரச்சனைகளை குறித்து கேட்டுக்கொண்டார்.

அப்போது வந்த ஓர் ஆட்டோ ஓட்டுனர் (திமுக சின்னமும் கொடியும் இருந்தது) திரு முத்துவேல் (திரு மு.க அவர்களின் தந்தை பெயர் கொண்டவர்) இவரை பார்த்து புரிந்து கொண்டவராக, "எங்கேயோ உங்களை பார்த்து இருக்கிறேன்" என்று சொல்ல.. சிரித்தார்.. பின் "நான் பாராளுமன்ற உறுப்பினர்" என்றார்

ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாதவனுங்க இம்புட்டு பந்தா பகட்டு செய்யுரானுங்க.. 10 செக்யுரிட்டி கார்டு வச்சிட்டு சுத்துறானுங்க.. நீங்க என்னங்க இப்படி எளிமையாக இப்படி இருக்கிறீங்க என்று ஆட்டோ ஓட்டுனர் கேட்டார்.

அதற்கும் ஒரு சிறு புன்னகை மட்டும் உதிர்த்துவிட்டு *கம்யுனிஸ்ட் என்றால் எளிமை தானே.. எங்க முன்னாள் முதல்வர் காலம் சென்ற E.K. நாயனார் கூட இப்படி எளிமையுடன் தான் இருப்பார். எல்லா கம்யுனிச்ட்களும் இப்படி தானே இருக்கவேண்டும்"* என்றார்.

காலம் சென்ற தோழர் நன்மாறனை மீண்டும் நம் கண்முன்னே நிறுத்திய நிகழ்வை கேரளத்தில் இருந்து வந்த தோழர் ரஹீம் செய்து இருப்பதாகவே இருந்தது.

இன்றல்ல என்றுமே கம்யுனிஸ்ட்களின் அழகே எளிமையும் தன்மையும் தானே தோழர்களே!!

நன்றி

ஆர் எம் பாபு

03/07/2024

*செங்கோல் உண்மையில் 'நந்தி த்வஜா (Nandi Dhwaja) ஆகும்.*

அதற்கும் இறையாண்மைக்கும் நீதிக்கும் சம்பந்தம் இல்லை.

இந்த துவஜா தேர் நாளில் - அதாவது, கிரிஜா கல்யாணத்திற்கு அடுத்த நாள் ரதோத்ஸவத்தில் சிவன் கோவில்களில் காட்சிப்படுத்தப்படுகிறது. இது பட்டடக்கல்லில் உள்ள சாளுக்கிய விருபாக்ஷா கோயிலில் உள்ளது.

செங்கோலின் பழமையானது (அதன் பெயர் ராஜதண்டா) 1,300 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சி பாப்ஜி ராவ் மற்றும் இ சிவ நாகி ரெட்டி ஆகியோர் கூறுகின்றனர்.

அவர்களின் கூற்றுப்படி, செங்கோல் - முதலில் நந்தி த்வஜா என்று அழைக்கப்பட்டது - கர்நாடகாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான பட்டடகல், விருபாக்ஷா கோவிலின் தெற்கு சுவரில் செதுக்கப்பட்ட சிவ-நடராஜ சிற்பத்தின் இடது கையில் காணப்படுகிறது. பாதாமி சாளுக்கியப் பேரரசர் விக்ரமாதித்யா-II (733-45 CE) ராணி லோகமஹாதேவியால் 745 CE இல் கட்டப்பட்டது.

பல்லவர்களை சாளுக்கியர்கள் வென்றதன் அடையாளமாக இக்கோயில் கட்டப்பட்டது. பல்லவ-சாளுக்கியப் போர்கள் நன்கு அறியப்பட்டவை.

விருபாக்ஷா கோவிலில் நடராஜர்-சிவன் புகைப்படம் இதோ. ரத நாளில் கர்நாடகாவில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் நந்தி துவஜா காட்சியளிக்கிறது.

27/06/2024

*நல்லா இருந்த நாடும் நாசமாக்கிய நரேந்திரரும்*

நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி அனைவருக்குமே எழும் வகையில் தான் பல்வேறு மாநிலங்களிலும் ஒன்றியத்திலும் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவைகளிலும், சட்டப்பேரவை மேல்சபைகளிலும், மாநிலங்களவையிலும், மக்களவையிலும் துணை சபாநாயகர் என்ற பொறுப்புகளில் கூட தேர்வு செய்து அவர்களை நியமிக்க இயலாத அளவுக்கு தான் நம் நாட்டின் ஜனநாயகம் சென்று கொண்டு இருக்கிறது.

இந்திய பாராளுமன்றத்தில் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் சென்ற முறை துணை சபாநாயகர் என்ற ஒருவருக்கான தேர்தலும் நடக்கவில்லை. நியமிக்கப்படாமல் 5 ஆண்டு காலங்கள் ஆட்சி நடைபெற்று அந்த கால கட்டத்தில் தான் எப்போதும் நடைபெறாத விதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் தற்காலிக இடை நீக்கம் செய்து முக்கியமான சட்ட மசோதாக்களை நிறைவேற்றிய படலம் நடந்தது.துணை சபாநாயகர் நியமனம் பற்றி குரல் எழுப்பும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் கூட துணை சபாநாயகர் நியமனங்கள் இல்லாதது தான் மிகவும் வருந்தத்தக்க ஒன்றாக இருக்கிறது.

ஆந்திரப்பிரதேசம் (காங்கிரஸ்), மத்திய பிரதேசம் (பாஜக)], ஒரிசா (பாஜக), ராஜஸ்தான் (பாஜக), தெலுங்கானா (காங்கிரஸ்), உத்தரபிரதேசம் (பாஜக), உத்தரகாண்ட் (பாஜக), போன்ற மாநிலங்களில் துணை சபாநாயகர் தேர்தல் நடத்தி நியமிக்கப்படவில்லை.

பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மேல்சபைகளிலும் கூட துணை சபாநாயகர் தேர்தல் நடத்தி அந்த பொறுப்புக்கு உரிய நபர்களை நியமனம் செய்யாத நிலையில் தான் இருக்கிறது.

இப்போது பாராளுமன்றத்தில் துணை சபாநாயகர் தேர்தல் நடத்தி அந்த பொறுப்புக்கு உரியவர்களை நியமிப்பார்களா? என்பதுவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பொதுவாக சபாநாயகர், துணை சபாநாயகர் என்போர்கள் சபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட நடுநாயகமான ஒருவரை நியமிப்பதுவும் எதிர்க்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி கொடுப்பதுவும் காலம் காலமாக நடந்துவந்த மரபுகளை எல்லாம் மீறி செயல்படும் போக்கு இந்திய ஜனநாயக நாட்டுக்கு ஒரு இழுக்காகவே பார்க்கப்படுகிறது.

*நல்லா இருந்த நாடும் நாசமாக்கிய நரேந்திரரும்*

ஆர் எம் பாபு

12/06/2024

Election Commissions Mismatching Information are damaging the reputation of the Election Commission of India along with the IAS Officers Knowledge
R M Babu
Freelance Journalist
The Election Commission of India is headed and managed by the Senior most IAS Officers under the Honorable President of India. Due to the incorrect and mismatching data published by the Election Commission, it is doubted and questions were raised. This sort of mismatches are disturbing us and at time we are thinking about the quality of those Officers and the UPSC Board as an Institution which selected them as IAS Officers.
Mr. Sathya Prabhu Sahoo who had acted in an Voting Awareness Advertisement which was very well received by the Public and the Fair Numbers also expected from him to appreciate further more.
In Tamil Nadu the Elections for 39 Parliament Constituency was over and results were declared. The Elected Member of Parliaments will be taking their oath. But the Election Process and the data published in the Election Commission websites have the following mismatches and discrepancies:
1. The Election Commission of India, Tamil Nadu published the Electors information on their website https://www.elections.tn.gov.in/PCwise_Gendercount_01012024.aspx?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR0E3Jtc1pZeLYCJR6SSxXnMslO-LNcclf3lXby0ZNsvJ1zm2fjgU7atI9o_aem_AU9QENEVjJID0Vb_mnSPNrndmOAXMTgaw4a0toOZDN1sXLNFgtgpf7TG4WO_CkteunyNRf2_4l53yeujcFAUTmc3

This above total Electors Count 6,23,33,925 and the Count of Votes 4,34,58,875.

There is a difference in Electors Count as per the CEC, Tamil Nadu & CEC, Delhi is 4,43,577

Minimum difference is 5,526 Electors in Madurai Parliament Constituency and maximum difference is in Thiruvallur 27,893 Electors. Not even single constituency in Tamil Nadu is matching with both the CEC, TN and CEC, Delhi.

The % of Polled was announced by the ECI, Delhi for Each Constituency. The Difference between the Electors of CEC Delhi and CEC, Tamil Nadu is coming around 1% of the Polled Votes.
3. Constituency-wise the Results were published by the CEC, which is available in their website
https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS222.htm
Here, if we compare with the Votes Counted (Valid Votes + Rejected Votes) should be matching with the Count of Votes announced by the CEC on 25-05-2024. But there are differences in each constituency. All the 38 Constituencies, the counted votes are lesser than the Polled Votes as per the CEC 25-05-2024. In one Constituency Thiruvallur the Counted Votes are higher by 12,318 than the Polled votes as per the CEC 25-05-2024.

4. The next difference and mismatch is Votes Counted and Form 20. Constituency-wise Form 20 is uploaded in the CEC, TN Site. In 5 Constituencies

Overall, the following discrepancies and mismatches are found in the CEC.

• CEC, Delhi and CEC TN Elector Count is not matching.
• Counted Votes and CEC Polled Votes is not matching
• Counted Votes and Form 20 is not matching

We as a common man, we rely and trusting the Indian Administrative Service Officers and the State Administration is managed by them. It is a sample of mismatch compiled and managed by them. This give a bad impression on the Election Commission of India along with the UPSC Board Officers who were the Returning Officers of the Parliament Constituency.

Already we have a Retired IPS Officer Mr. Annamalai, by giving baseless information, the reputation of that Institution is under question mark. Now the above data mismatches will create further more damage to those institutions.

We would like to hear from the Election Commission as well as from the Returning Officers for this discrepancies and mismatches.

R M Babu
Leftist & Independent Journalist

06/06/2024

*வடநாட்டு அரசியல் வாரிசுகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள பாடம் இருக்கிறது*

தோழர்களே,

நாம் வளர்ந்த மாநிலம், அவர்கள் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் என்றெல்லாம் வடநாட்டு மக்களை இகழ்ந்து பேசும் இந்த சம காலத்தில் வடநாட்டில் இருக்கும் இளம் தலைமுறை அரசியல் வாரிசுகள் எதிர்க்கட்சி தலைவர்களை குறிப்பாக தனது தந்தை வயதுடையவர்களை மரியாதையாகவே பேசுகிறார்கள்.

அகிலேஷ் யாதவ் மாயாவதி அவர்கள் கூட்டணி / எதிர்க்கட்சியாக இருந்த போதும் கூட பூபாஜி (தந்தையின் சகோதரி - அத்தை) என்றும் தேஜஸ்வி யாதவ் தனது கூட்டணி / எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் தாவு (தந்தையின் அண்ணன் - பெரியப்பா) என்றே தான் அழைக்கிறார்.

விமர்சனங்களில் எந்த இடத்திலும் அவமரியாதையான சொற்களை பயன்படுத்துவதில்லை. அவர்கள் அரசியல் விமர்சனம் மட்டுமே வைக்கிறார்கள்.

அவர்கள் வீட்டு நிகழ்வுகளில் இவர்கள் கலந்துகொள்வது இவர்கள் வீட்டு நிகழ்வுகளில் அவர்கள் கலந்துகொள்வது என்றெல்லாம் உண்டு.

தமிழக வாரிசு அரசியல்வாதிகளும் கொஞ்சம் அவர்களிடம் இருந்து கற்று அந்த நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

ஆர் எம் பாபு

05/06/2024

அண்ணாமலையின் ரசிகர்கள் கூறுவது உண்மையா?

தமிழகத்தில் வாடகை வாயர்களாக இருந்தவர்கள் இங்கே அனைத்து தொகுதியிலும் பாஜக தோற்ற பின்னரும் தமிழகத்தில் வளர்ந்திருப்பதாக ஒரு ஜோடனை செய்கிறார்கள். அதை பார்க்க முடிகிறது.

ஆனால் இவர்களை 2019 உடன் ஒப்பிட்டால் எந்த பெரிய வளர்ச்சியும் அடையவில்லை. இவர்களோடு கூட்டணி சேர்ந்ததால் அந்த கூட்டணி கட்சிகள் தான் சிறுமை அடைந்திருக்கிறது என்பதை காண முடியும்.

கூட்டி கழித்து கூட்டணி கட்சிகளை தனது சின்னத்தில் போட்டியிட வைத்து அதற்கு முன்னர் அவர்கள் போட்டியிட்டபோது இருந்த செல்வாக்கை அந்த வாக்குகளை மறைத்து ஒரு பிம்பத்தை பாஜக கட்டமைக்கிறது. அது உண்மையான பிம்பம் அல்ல.

எப்போதும் போலவே போலிகள் உலாவுகிறார்கள். பாஜக என்றாலே பொய்யர்கள். இப்போது இவர்களை போலிகள் எனவும் சொல்லலாம்.

ஆர் எம் பாபு

Savukku Shankar Redpix Felix Gerald arrested - Kaliyappan exposes savukku shankar | Savukku Wife 14/05/2024

https://www.youtube.com/watch?v=L7HlaTkXk9U

தோழர் நிலவு மொழி Nilavumozhi Senthamarai (சங்கரின் முன்னாள் மனைவி) அவர்களின் பதிவு.

"சங்கரின் கைது திட்டமிடப்பட்டது, மனித உரிமைக்கு எதிரானது. சாதாரண மக்கள் vs வொயிட் காலர் கிரிமினல்ஸ், அரசியல்வாதிகள், அல்லக்கைகள் சிறையை எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. சிறை அவர்களுக்கு வழங்கும் அடையாளமும், சாதாரண மக்களுக்கு வழங்கும் அடையாளமும் பெருமளவில் மாறுபடும்.

ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எனக்கு தெரிந்த சங்கருக்கு மாத சம்பளம் 35 ஆயிரம். தினமணில வந்த மாத 10,000₹ சேர்த்து என்னோட டெலிவரி செலவுக்கு வைச்சது.

மாலதிக்கு பத்துகோடி மதிப்புள்ள சொத்து வாங்கிக்கொடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், எனது மகனிற்கு 2000₹ வழங்கமாட்டேன் என நீதிமன்றத்தில் நின்றான். திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆன மாதிரி, இன்னைக்கு சங்கரோட கார் மதிப்பு மட்டுமே பல இலட்சங்கள்.

அரசியல்வாதிகளின் ஏகபோக வாழ்விற்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக நிற்கும் சங்கரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து எனக்கு கவலையில்லை. அந்த தனிப்பட்ட வாழ்க்கையே பினாமியாக இருக்கும்பட்சத்தில், அதை வெளிக்கொணருவதில் தவறில்லை.

தூத்துக்குடி கலவரத்திலிருந்து, ஸ்ரீமதி இறப்பு வரை அவன் ஆதரவுக்கரம் நீட்டியது மக்களுக்கு இல்லை. மணல் மாஃபியாவிலிருந்து, காசா கிராண்ட், ஜிஸ்கொயர் போன்ற நிறுவனங்கள் வரை ஆரம்பித்து பின் அமைதிகாத்த அவனின் கள்ளமெளனம் கேள்விக்குரியது.

4மாத குழந்தையுடன், எனது பெற்றோருடன் இருந்த பொழுது, என்னைக் குறித்து சவுக்கு தளத்தில் ஆபாசமாக எழுதுவேன் என மிரட்டியதோடு, அப்பொழுது VAO வேலை செய்த எனது அப்பாவை வேலையை விட்டு தூக்க வழிவகை செய்வேன் எனவும் மிரட்டினான் அவன்.

அதன் பின்பு, அவன் சம்மந்தப்பட்டவற்றை முழுவதுமாய் நிராகரித்தேன். எவ்வித பின்னணியுமின்றி, அவனது மிரட்டல்களை, ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என துப்பிச் சென்றேன். அப்படியான மிரட்டல்களே இன்று அவனுக்கு பல மடங்கு அன்பளிப்புகளுடன், கோடிகளில் புரள வைத்திருக்கிறது போலும்.

அரசியல் காரணங்களுக்காகவே அவன் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. ஆனால், மனித உரிமை ஆர்வளர்களுக்கு, அரசு அடக்குமுறையை தினந்தினம் அனுபவிக்கும் சாதாரண ஏழை, நடுத்தர வர்க்க மனிதர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா? திடீரென கோடியில் புரளுபவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா?"

நிலவு மொழி

Nilavumozhi Senthamarai

Savukku Shankar Redpix Felix Gerald arrested - Kaliyappan exposes savukku shankar | Savukku Wife Savukku Shankar Redpix Felix Gerald arrested - Kaliyappan exposes savukku shankar | Savukku Wife #...

29/04/2024

https://youtu.be/CEyjp5CAaIc?si=tfOHryyaf2kFoJ3i

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மேற்கு 2 ஆம் பகுதிக்குழு தோழர்களின் ஆக்கப்பூர்வ பதிலடி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

27/04/2024

கேரளா தேர்தலும் இடதுசாரிகளும்

நான் அடிக்கடி கேரளம் தொழில் விஷயமாக சென்று வருகிறேன். அப்போது கேரளத்தில் இருக்கும் அரசியல் நிலவரத்தை எனக்கு தெரிந்த அரசியல் சார்ந்தவர்களிடமும் பொதுமக்களிடமும் கருத்து கேட்பது உண்டு. இப்படி கடந்த மூன்று மாதங்களாக எனது உரையாடல்கள் வந்த செய்திகள் என்று பல கருத்துக்களை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் கேரளத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசும்போது குறிப்பாக இடதுசாரி நண்பர்களிடம் பேசும்போது கூட, “கேரள மக்கள் இந்தியா கூட்டணியின் பக்கம் தான் இருக்கிறார்கள். கம்யுனிஸ்ட்களுக்கு வாக்களித்தாலும் அது ஒன்றிய ரீதியில் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை தான் எடுக்கும் என்பதால் நேரடியாக காங்கிரஸ் கட்சிக்கே இந்த முறையும் வாக்களிப்பார்கள்” – என்றார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், “கேரளத்தில் ராகுல் காந்தி போட்டியிடாத நிலை இருக்கிறது. அப்படி அவர் போட்டியிடாவிட்டால் கேரளத்தில் இடது சாரிகள் 5 இடங்களிலும் மீதி இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும்” என்றார்கள்.

ஒரு மாதம் முன்னர் “கேரளத்தில் LDF 7 இடங்களிலும் UDF 13 இடங்களிலும் வெற்றி பெரும்” என்றார்கள்.

தேர்தலுக்குக் பிந்தைய நிலை பற்றி கேட்டபோது “LDF குறைந்த பட்சம் 10 - 13 இடங்களிலும் மீதி இடங்களிள் UDF வெற்றி பெரும்” என்றார்கள்.

இது தான் இடதுசாரிகள். தேர்தல் நாள் அன்று யார் மக்களுக்கானவர்கள் என்று யோசிக்கும்போது அங்கே அவர்கள் கண் முன் தெரிவது இடதுசாரிகளும் அவர்களின் சேவையும் தான்.

இன்குலாப் ஜிந்தாபாத்

ஆர் எம் பாபு

Want your organization to be the top-listed Non Profit Organization in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் நரேந்திர மோடி ஒன்றிய அரசின் அவலட்சணமான ஆட்சியை கண...
இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் நரேந்திர மோடி ஒன்றிய அரசின் அவலட்சணமான ஆட்சியை கண...
இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் நரேந்திர மோடி ஒன்றிய அரசின் அவலட்சணமான ஆட்சியை கண...
இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் நரேந்திர மோடி ஒன்றிய அரசின் அவலட்சணமான ஆட்சியை கண...
ஊழல் கரையை மாற்றும் சங்கி ஃப்ரிட்ஜ்
மதநல்லிணக்க மனித சங்கிலி இனிதே நடைபெற்றது.

Address


Madurai
625011

Other Madurai non profit organizations (show all)
Arasiyalkalam - Politics in India Arasiyalkalam - Politics in India
Madurai

Political Leaders - Arasiyalkalam by http://arasiyalkalam.blogspot.com/

SEDC SEDC
Madurai

Senaithalaivar Entrepreneur Development Centre Motto is Identify ,Organize and Provide Business Support for Our Community Business People.

IESK Kedndra Foundation IESK Kedndra Foundation
Madurai
Madurai, 625001

Every thing for all.

SSEED TRUST - Madurai SSEED TRUST - Madurai
Madurai, 625020

SSEED is a non-profit organisation established in 2003, by a team of like minded individuals headed by our Founder Dr. MP Sekaran. Our goal is to ensure water, environment and food...

Nonviolent Economy Network Nonviolent Economy Network
Natham Road, Majagram, Kadavur, Chathirapatti
Madurai, 625014

We built nonviolent economics on reciprocity and mutuality, cooperation, and sustainability, with a focus on valuing a balanced environment and peace rather than simply generating ...

Pasi Foundation Pasi Foundation
Maruthu Pandiyar Street
Madurai, 625001

Al Yusr Foundation Al Yusr Foundation
Madurai, 625020

Al Yusr Foundation is a social charitable trust to reach irrespective of community. food/Education/Medical services

YOUNG WOMEN Christian Association YOUNG WOMEN Christian Association
Vallabai Road
Madurai, 625002

https://ywcamaduraitn.com/

Aatral IAS Academy Aatral IAS Academy
Madurai

Fully Aided Training Centre for UPSC, TNPSC and other government exams.