WeCare Construction services

Quality constructions for everyone,
WeCare supports every step in construction.Contracts
Project

Registered Architects,
Professional Civil Engineers,
Qualified Vaasthu Shasthra Consultants,
Registered Property Valuer for Banks and Income tax Dept. Civil Engineering Contractors and Consultants,
Property Dealers and Consultants,
Land Scape Planners and Estate Consultants,
Risk Management Experts in Construction Projects,
Land Promoters and Asset Developers,
Project Loan, Housing Loan Service Providers for Leading Banks and NBFCs,

02/01/2024

Create your infrastructure with WeCare Construction services ,professionally managed construction company. With ISO certification.

We offer.

# Planning
# Approvals
# Vasthu
# Consultation
# Civil Contract
# Project Funding
# Risk Management
and more.

Chief Designer.
Ar.Rish*tha.J.Kumar. B.Arch. A.I.I.A.
Registered Architect. Hyderabad.

WeCare Construction Services - Firm
( an ISO certified construction Co.)
Call 91 98 438 333 09

31/12/2023

DESIGN & BUILD

Want to plan your Dream Projects with Latest & Unique House plan!

Visit us on- www.wccs.co.in

WeCare Construction services Plan with all the amenities and happy space for your stay .

3 - D Elevation & House Plan starting at just Rs. 6999/-

Call us today and make your Dream come True
098 438 333 04
0452 4206875

WeCare Construction Services -Firm
( an ISO certified construction Co.)

31/12/2023
11/11/2023

Diwali wishes

30/10/2023

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..

2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.

தண்ணீர் :

3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.

4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.

5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.

6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.

சிமெண்ட் :

7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.

8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.

9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.

மணல் :

10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.

11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.

13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.

இரும்புக் கம்பிகள் :

14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.

செங்கல் :

17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.

18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.

19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.

20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.

21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.

22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.

23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.

24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.

25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.

26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.

27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.

28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.

29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.

31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.

32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.

33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.

34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.

35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.

37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.

38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.

39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.

40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.

42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.

43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.

44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.

45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :

46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.

47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.

48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.

49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.

50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.

Photos from WeCare Construction services's post 19/10/2023

Floor coat

13/08/2023

ON GOING RESTAURANT CONSTRUCTION IN MADURAI.

01/08/2023

Design and Build! !!!"

WeCare Construction Services, Offering,

Building concepts,
Building approval plans
Building Construction Consultations
Vaasthu tips
Project permission from compident authorities,
Project management
Civil CONTRACTS
Turn key Projects
Itemised Construction CONTRACTS
Project Loans
Project Insurance ,

We support each and every step in Construction,

For contact,

Voice calls 098 438 33304

WhatsApp 098 438 33309

Email [email protected]

Visit www.wccs.co.in

www.facebook.com/wecareconstructionservices

31/07/2023

உங்கள் கனவு இல்லம் உங்கள் பட்ஜெட்டில்
✅குறைந்த செலவில் சொந்தமாக வீடு, விரைவாக கட்டி குடியேறலாம்

✅30 வருட அனுபவம்

✅ தமிழகமெங்கும்


Enquires: +91 98 438 333 09
WeCare Construction services

28/07/2023

Call or WhatsApp 09843833309

Let us build your Dream Home in Coimbatore or Madurai

☑ Best Price Challenge*
☑ Quality Assurance
☑ Insured Work – Worry-Free
☑ On-Time Delivery
☑ All Govt. Approvals

WeCare Construction Services Firm
Visit www.wccs.co.in

27/07/2023

இப்போழுது உள்ள சூழ்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பால் சதுர அடிக்கு ரூ.150 முதல் ரூ 200 வரை கூடுதல் செலவாகுது...எனவே மாநகராட்சி பகுதிகளில் சதுர அடி ரூ.2400 நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 2300 செலவாகும்... ( ஒப்பந்த அடிப்படையில் எடுத்து வேலையை முடிக்க 6 மாதம் முதல் 10 மாதம் வரை ஆகும். ஒவ்வொரு மாதமும் கட்டுமான பொருட்களின் விலை ஏறிக்கொண்டே தான் இருக்கும். மாதம் மாதம் சதுர அடிக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை ஏறிக்கொண்டே இருக்கும். வேலையை முடிக்கும் போது சதுர அடிக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை ஏறிக்கொண்டே இருக்கும்.)

எனவே சிலர் குறைவான தொகைக்கு செய்வதாக சொன்னால் வேலையை ஒப்படைத்து சிக்கலில் மாட்டிக்காமல் இருப்பதே சிறந்தது இந்த துறையில் முறையாக செய்து நல்ல பேருடன் தொழில் செய்வோர் பத்து சதவீதம் பேர்தான் இருப்பர் இதற்கு பொறியாளர்கள் பக்கம் மட்டும் குறை இல்லை வீட்டுக்காரர்கள் பக்கம் குறை இருக்கு குறைவாக தொகையை சொல்வோர்களுக்கு வேலை தந்து சிக்கலில் தவிக்கின்றனர் இன்றைய கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வு கட்டுனர்களை நிலைகுலைய செய்துள்ளது...

கடந்த மாதத்தை விட இல்லை இல்லை கடந்த வாரத்தை விட என்று தான் சொல்ல வேண்டும் கம்பி டன்னுக்கு ரூ.15000 ஏறிவிட்டது... தற்போது விலை 85000/டன்னுக்கு சிமெண்ட் மூட்டை ரூ.50 ஏறிவிட்டது... தற்போது விலை 450முதல்470வரை ... செங்கல் ஜல்லி விலையும் அவ்வாறே ஏறியுள்ளது...எலக்ட்ரிக்கல்,பிளம்பிங்,பெயிண்டிங் மற்றும் மர சாமான்கள் விலை 30% சதவீதம் முதல் 50% சதவீதம் வரை ஏறிவிட்டது இதனால்தான் கட்டுமான தொகையையும் எற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.கம்பி,சிமெண்ட் விலை தற்போது ஏறிய விலையில் பாதி குறைந்தால்கூட சதுர அடிக்கு ரூ.50 தான் மேற்சொன்ன கட்டுமான தொகையில் குறையும்...

ஒரு பத்து சதுரம் வீட்டுக்கு இன்று தோராயமாக மொத்த வேலைக்கும் கணக்கிட்டால் 24முதல் 25 லட்சம் செலவாகும்...இதை ஒரு பொறியாளர் ஒப்பந்தமாக எடுத்து செய்தால் 1.5 முதல் 2 லட்சம் லாபம் கிடைக்கலாம்...குறைந்தது ஆறு மாத கால வேலை என்றாலும் மாதம் அந்த பொறியாளுருக்கு 25000 முதல் 30000 ரூபாய் கிடைக்கலாம்...ஒரு கொத்தனாரே இன்று மாதம் மாதம் ரூபாய் 28000 முதல் 30000 வரை சம்பாதிக்கிறார்...வேலைகள் அதிகமாக நடந்தால் நீங்க நினைப்பதுபோல் ஒருவர் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க இயலும்...
ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் இது நடப்பது மிகவும் அரிது.

ஆகையால்தான் இப்போது நிறைய பொறியாளர்கள் அவருக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவுக்காரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செய்யாமல் கன்சல்டிங் அடிப்படையில் வேலையை செய்து தருகிறார்கள் இங்கே பொறியாளருக்கு பண இழப்புக்கும் வேலை இல்லை...வீட்டுக்காரருக்கும் நாம் ஏமாந்தோமா என்ற எண்ணமும் ஏற்படப்போவதில்லை...அதேநேரம் கன்சல்டிங் முறை வேலையில் வீட்டுக்காரருக்கு பொருட்களை ஏற்பாடு செய்து தரும் பெரிய பொறுப்பு இருக்கு...மாதச்சம்பளத்துக்கு வேலை செய்வோர் இதற்கு பயந்தே மொத்த காண்ட்ராக்ட் விட்டுவிடுவர்...கட்டிட பொருட்களின் விலை மட்டும் ஏறவில்லை, இத்துடன் லேபர் சம்பளமும் அதிகமாகிவிட்டது. லேபரை குற்றம் சொல்ல ஒன்றுமில்லை ஏன் என்றால் மற்ற அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தினால் சம்பளமும் அதிகமாகிவிட்டது. கடந்த ஆண்டைக்காட்டிலும் கொத்தனார் சம்பளம் 100 ரூபாய் அதிகமாகி தற்போது 1000 சித்தாள் சம்பளம் 50 ரூபாய் அதிகமாகி தற்போது 500 மற்றும் நிமிர்ந்தாள் (ஆம்பளையாள்) சம்பளம் 100 ரூபாய் அதிகமாகி தற்போது 750 முதல் 850 ஆகிவிட்டது. இதைப் போல் எலெக்டிரிசன் , கம்பி கட்டுபவர்கள், ஆசாரி மற்றும் பெயிண்ட்டர்கள் சம்பளம் ஏறிவிட்டது. இதனால் சதுர அடிக்கு ரூபாய் 100 முதல் 200 அதிகமாகி விட்டது.

கட்டுமானத்தொழில் செய்வதும் சாதாரண விஷயம் கிடையாது என பலருக்கு புரிய வைப்பதற்காகவே இந்த பதிவு!!!!

நன்றிகள்.

வீ கேர் கட்டுமான சேவைகள்
மதுரை & கோவை.

25/07/2023

Design and Build! !!!"

WeCare Construction Services, Offering,

Building concepts,
Building approval plans
Building Construction Consultations
Vaasthu tips
Project permission from compident authorities,
Project management
Civil CONTRACTS
Turn key Projects
Itemised Construction CONTRACTS
Project Loans
Project Insurance ,

We support each and every step in Construction,

For contact,

Voice calls /Text or Whatsapp

098438 33309

Email [email protected]

Visit www.wccs.co.in

WeCare Construction services

21/07/2023

Call
Risk Management on 09843833309

17/07/2023

Plinth level completed

17/05/2023

Artificial water falls in MADURAI

Want your business to be the top-listed Home Improvement Business in Madurai?
Click here to claim your Sponsored Listing.

We Support every step in Construction,

An ISO certified Construction Co

Architects, Engineers, Valuers, Developers and Builders

Videos (show all)

Diwali wishes
Artificial water falls in MADURAI

Telephone

Address


105, 1st Floor, 2 Nd Main Road, Jaihindpuram, ( Near Bank Of India Jaihindpuram Branch )
Madurai
625011

Opening Hours

Monday 9:30am - 8:30pm
Tuesday 9:30am - 8:30pm
Wednesday 9:30am - 8:30pm
Thursday 9:30am - 8:30pm
Friday 9:30am - 8:30pm
Saturday 9:30am - 8:30pm

Other Architectural Designers in Madurai (show all)
Ornsoar Infra Ornsoar Infra
4/2A, Thangaraja Salai, Near Rajamuthiah Mandram, K. K, Nagar
Madurai, 625020

The Best construction and architecture Service Provider Around South district of Tamilnadu.

VGDM Architects VGDM Architects
Madurai, 625001

VEE AARR ESS Constructions VEE AARR ESS Constructions
49, 1ST FLOOR, LAKSHMIPURAM, 1ST Street, EAST VELI STREET
Madurai, 625001

A 25+ year experienced enterprise having constructed 150 plus projects of Residential and commercial spaces. Our mission is to provide our clients with the highest quality construc...

Arsh Associates Arsh Associates
No. B4/1, 2nd East Main Road, 80 Feet Road , Anna Nagar
Madurai, 625020

Arsh Associates has well experienced and knowledgeable Architects, who has the sound knowledge in wh

Arch Design_studio Arch Design_studio
Madurai, 625006

We can do Plan, design, and furnish interiors of residential, commercial, or industrial buildings. And architectural Realistic 3d renderings for exterior, interior, render walkthro...

Studio Zesty Studio Zesty
230, Bethel Nagar, By Pass Road, Ponmeni
Madurai, 625016

brick_space_architects_madurai brick_space_architects_madurai
Mahatma Gandhi Nagar
Madurai, 625014

All type of designing and construction works will done

elephants.and.cranes elephants.and.cranes
Palimpsest House, KMR Nagar, Opposite To 7th Day Adventist School, Kochadai
Madurai, 625016

Vyuham Design Studio Vyuham Design Studio
3a/2a/1-Anuppanadi Main Road
Madurai, 625009

The firm is led by Principal Architect Aswin Kumar in 2018. Our firm does a variety of architectural

House Front Elevation Design House Front Elevation Design
9 South Krishnan Koil 2nd Street
Madurai, 625009

3D Elevation Design Designerer, House Front Elevation Designer, CNC Lasercut Design Designer. Madurai, Tamil Nadu, India

Oyster Spaces Oyster Spaces
Madurai, 625020

Oyster Spaces is an Architectural and Interior Design firm based out of Chennai and Madurai. We prov

Dwellist Dwellist
Madurai, 625012

Dwellist is an independent design studio providing a wide range of services. Be it a cent or an acre