மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி #Mettur, #SathasivamForMettur , #PMKForMettur, #PMK

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது: இனியும் தாமதிக்காமல் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வ 17/03/2024

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது: இனியும் தாமதிக்காமல் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்.

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேர் கைது: இனியும் தாமதிக்காமல் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வ பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடித....

செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? பா. 16/03/2024

செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வினா.

#தமிழைத்தேடி #மருத்துவர்அய்யா

செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? பா. தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத.....

15/03/2024

தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது:
மீனவர் சிக்கலுக்கு உடனடியாக நிரந்தரத்
தீர்வு காண நடவடிக்கைகள் தேவை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரியமாக மீன் பிடிக்க உரிமையுள்ள இடங்களில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் முடிவே இல்லாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்தனர். அதனால், அந்தப் பகுதிகளில் ஏற்பட்ட பதட்டமும், கவலையும் விலகுவதற்கு முன்வாகவே மேலும் 15 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருப்பதை சகித்துக் கொள்ள முடியாது.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்வது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது தான் இலங்கை அரசின் நோக்கமாக உள்ளது. இந்த உண்மையை தெரிந்திருந்தும் அதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நியாயமல்ல.

இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மீனவர்கள் கைது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும் அதையே அறிவுரையாக வழங்கியிருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு: சமூகநீதியையும், நேர்மையையும் கடைபிடித 14/03/2024

அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு: சமூகநீதியையும், நேர்மையையும் கடைபிடித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்.

அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு: சமூகநீதியையும், நேர்மையையும் கடைபிடித பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை – அறிவியல் கல்லூர....

13/03/2024

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்கள் பிரதிநிதித்துவமும், அதன் மூலம் அதிகாரமும் வழங்கப்பட்டால், அது மக்களுக்குத் தான் நன்மையாக இருக்கும். மருத்துவம், கல்வி, விவசாயம் ஆகிய அனைத்தும் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். 👌👌👌

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்.

சரக்குந்து மீது பேருந்து உரசியதில் படியில் பயணித்த 4 மாணவர்கள் சாவு: இன்னும் எத்தனை உயிர்களை 13/03/2024

சரக்குந்து மீது பேருந்து உரசியதில் படியில் பயணித்த 4 மாணவர்கள் சாவு: இன்னும் எத்தனை உயிர்களை இழக்க போகிறோம்?

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை.

சரக்குந்து மீது பேருந்து உரசியதில் படியில் பயணித்த 4 மாணவர்கள் சாவு: இன்னும் எத்தனை உயிர்களை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் என்ற இட.....

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு 12/03/2024

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு.

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் முகநூல் பதிவு இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. மனிதர்கள் ஈட்டக்கூட.....

10/03/2024

கமான் காக்கைஸ்...!
உங்களுக்கு இனி தீபாவளி தான்!!

08/03/2024

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு; பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க தில்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50% ஆக உயர்ந்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயர்த்தப்படவில்லை. 2023-ஆம் ஆண்டின் கடைசி 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை கடந்த அக்டோபர் மாதத்தில் தான் தமிழக அரசு அறிவித்தது. அதற்கு முன்பு வரை மத்திய அரசுப் பணியாளர்களுக்கு மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்து 6 மாதங்களுக்குப் பிறகு தான் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதியத்தை தமிழக அரசு உயர்த்தி வந்தது. இப்போதும் அதேபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தாமதப்படுத்தக் கூடாது.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட்டு விட்டால், அதன்பிறகு ஜூன் மாதத்தில் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க முடியாது. எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக , அமைச்சரவையைக் கூட்டி 4% அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.

இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட வேண்டும்.

07/03/2024

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்று பட்டு உழைப்போம்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்துச் செய்தி.

உலகின் ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.

ஒரு காலத்தில் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்த பெண்களுக்கு இப்போது ஓரளவு உரிமைகளும், விடுதலையும் கிடைத்திருந்தாலும் கூட இன்னும் பாதுகாப்பு கிடைக்கவில்லை. 21ஆம் நூற்றாண்டு பிறந்து, கால் நூற்றாண்டாகியும் பெண்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதற்கு புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தான் வலி மிகுந்த எடுத்துக்காட்டு.

ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும்; சாதனைகளை படைக்க வேண்டும் என்பன தான் நமது உயர்ந்த நோக்கங்கள். அந்த நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே, உலகம் முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பாதுகாப்பாக நடமாட வேண்டும்; அதற்கான சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க உலக மகளிர் நாளான இந்த நன்நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துக! – பா.ம.க. தலைவர் ம 06/03/2024

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துக! - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துக! – பா.ம.க. தலைவர் ம மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கோரி...

05/03/2024

தலைமைச் செயலக உதவியாளர் பணிக்கு தேர்வு முடிந்து 15 மாதங்களாகியும் இறுதிப் பட்டியல் வெளியாகவில்லை: கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர்/ உதவி பிரிவு அலுவலர் பணிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி V-A தேர்வு கடந்த 2022-ஆம் ஆண்டு திசம்பர் 18-ஆம் நாள் நடைபெற்ற நிலையில், அதன்பின் 15 மாதங்களாகியும் தேர்வில் தேர்ச்சி பெற்றோரின் இறுதிப் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் தலைமைச் செயலக பணிக்கான தேர்வு எழுதிய தேர்வர்கள் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

தலைமைச் செயலக உதவியாளர்/ உதவிப் பிரிவு அலுவலர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றோரின் பட்டியல் வெளியிடப்படாததற்கு தமிழ்நாடு அரசுப் பனியாளர் தேர்வாணையத்தின் அலட்சியம் தான் காரணம் ஆகும். 2022-ஆம் ஆண்டு திசம்பரில் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் 8 மாதங்களுக்குப் பிறகு 2023 திசம்பர் ஒன்றாம் நாள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 14-ஆம் நாள் சான்றிதழ் சரிபார்ப்பு இணையவழியில் நடைபெற்றது. தேர்வாணையம் நினைத்திருந்தால் அடுத்த ஒரு வாரத்தில் தேர்ச்சி பெற்றோர் பட்டியலை வெளியிட்டு, அடுத்த சில வாரங்களில் கலந்தாய்வு நடத்தி முடித்திருக்க முடியும்.

ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து 5 மாதங்களாகி விட்ட நிலையில் இன்னும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படவில்லை. இந்த தாமதத்தை நியாயப்படுத்த முடியாது. இறுதிப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால் தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 658 பேரும் தங்களுக்கு வேலை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பிலும், மன உளைச்சலிலும் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை இனியும் காத்திருக்க வைக்கக் கூடாது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக தொகுதி V-A பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும். அதனடிப்படையில் இம்மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தி , பணி நியமன ஆணைகளை வழங்க தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் பெண்கள் காக்கப்படும், மதிக்கப்படும் நிலையை உருவாக்குவோம்! 05/03/2024

தமிழ்நாட்டில் பெண்கள் காக்கப்படும், மதிக்கப்படும் நிலையை உருவாக்குவோம்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள்.

தமிழ்நாட்டில் பெண்கள் காக்கப்படும், மதிக்கப்படும் நிலையை உருவாக்குவோம்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள். இந்தியாவின் ஆக்கும் சக்திகளாகவும், காக்கும் சக்திகளாகவும...

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! 05/03/2024

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை.

#தமிழைத்தேடி

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க நடவ.....

முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்! 04/03/2024

முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்! - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்

முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முத.....

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழப்பு: உச்சநீதிமன்றத்தில் விரைவாக தடைய 01/03/2024

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழப்பு: உச்சநீதிமன்றத்தில் விரைவாக தடையாணை பெற வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழப்பு: உச்சநீதிமன்றத்தில் விரைவாக தடைய பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டி...

01/03/2024

பாட்டாளி சமூக ஊடக பேரவையில் இணையுங்கள்!

அனைவருக்கும் உரிமை
அனைவருக்கும் வளர்ச்சி

தமிழக மக்கள் உரிமை பெற்று வளர்ச்சி பெறவேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அரசியலில் வலிமை பெற வேண்டும். அந்த வகையில் வரும் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பரப்புரை செய்து வலிமை சேர்க்க வேண்டியது இளைஞர்களின் கடமை.

எங்களுடன் இணைந்து பாட்டாளி சமூக ஊடக பேரவையில் பணியாற்ற விரும்புவோர் பதிவு செய்க (இணைப்பு படத்தில் மற்றும் பின்னூட்டத்தில் உள்ளது).

புள்ளியியல் துறை பணியாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும்! 29/02/2024

புள்ளியியல் துறை பணியாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

புள்ளியியல் துறை பணியாளர்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணிய...

28/02/2024

படத்தில் உள்ள இணைப்பைச் சொடுக்கி மருத்துவர் அய்யா அவர்கள், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மற்றும் பாமக தலைவர்கள், நிகழ்வுகளின் படங்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! 28/02/2024

பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை

பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு...

பாலாற்றில் புதிய தடுப்பணைக்கு அடிக்கல்:தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா?உடனடியாக தடுத்து ந 26/02/2024

பாலாற்றில் புதிய தடுப்பணைக்கு அடிக்கல்:தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா?உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்

பாலாற்றில் புதிய தடுப்பணைக்கு அடிக்கல்:தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா?உடனடியாக தடுத்து ந பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய த.....

3 ஆண்டுகளில் 152 பேர் உயிரிழப்பு: மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்! 22/02/2024

3 ஆண்டுகளில் 152 பேர் உயிரிழப்பு: மனித - விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்! - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை

3 ஆண்டுகளில் 152 பேர் உயிரிழப்பு: மனித – விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒர....

19/09/2023

"தியாகிகளை போற்றுவோம்"

தமிழினப் போராளி மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற தொடர் சாலை மறியலில் உயிர் நீத்த தியாகி மேச்சேரி அமர்த்தனூர் மயில்சாமி அவர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவர் அய்யா அவர்களின் கரங்களால் வீடு கட்டுவதற்கான 1199 சதுரடி வீட்டுமனை பத்திரம் மயில்சாமி துணைவியார் வசந்தா அவர்கள், மகன் ஊடகப் பேரவை நிர்வாகி மாதவனிடம் வழங்கினார்.

மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்திக் அவர்களும், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் அவர்களும் உடன் இருந்தனர்.

27/02/2023

*மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் S.சதாசிவம் MLA அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!*

மேட்டூர் தொகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க சட்டமன்றத்தில் மேட்டூர் தொகுதி மக்களின் குரலாக ஒலித்து மக்கள் பணியே மகேசன் பணி என தினந்தோறும் தொகுதிக்குள் வலம் வந்து மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்வு கண்டு அனைவரிடத்திலும் எளிதாக பழகக்கூடிய மிகவும் எளிமையான சட்டமன்ற உறுப்பினர் எனவும் பெயர் எடுத்து காவிரி நாயகராக திகழ்ந்து, மேட்டூரில் புதிய பேருந்து நிலையம் பெற்றுத் தந்த மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணார் S.சதாசிவம் MLA அவர்களுக்கு மேட்டூர் தொகுதி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி!....

Photos from மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி's post 20/02/2023

#தமிழைத்தேடி #தமிழினப்போராளி

17/02/2023

"மருத்துவர் அய்யா அவர்களின் தமிழைத் தேடி பரப்புரை பயணம்" இணையவழி விளக்கக் கருத்தரங்கம்

பிப்ரவரி 17, வெள்ளி
மாலை 7.00 மணி நேரலை

https://fb.watch/iLfNrf5n48/

15/02/2023

பி என் பட்டி பேரூரில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்று விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

09/02/2023
Photos from மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி's post 30/01/2023

நேற்று இரவு மேட்டூர் அருகே புதுசாம்பள்ளி நடைபெற்ற பேருந்து தீ விபத்தை இன்று நேரில் சென்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் S Sadhasivam Mettur Mla பார்வையிட்டார் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்களும் உடனிருந்தனர்

Want your business to be the top-listed Business in Mettur Dam?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Mettur Dam