BHU TAMIL
Nearby schools & colleges
Banaras Hindu University
Banaras Hindu University
Bhu
221005
Bhu
You may also like
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BHU TAMIL, Education Website, Tamil section, Department of Indian Languages, Faculty of Arts, Banaras Hindu University, Varanasi.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 2023-2024 ம் ஆண்டு முனைவர் பட்ட சேர்க்கைக்கான அறிவிப்பும் விண்ணப்பமும்
http://bhuonline.in/
என்னும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறையில், இரண்டு தமிழ் முனைவர் பட்ட இடங்கள் உள்ளன. அவற்றுள் ஒரு இடம் நுழைவுத் தேர்வு (BHU-RET) வழியாகவும், ஒரு இடம் நுழைவுத் தேர்வின்றி Research Ability Test வழியாகவும் (BHU RET-EXEMPTED), நிரப்பப்படவுள்ளது.
உதவிப் பேராசிரியருக்கான யு.ஜி.சி தகுதித் தேர்வில் (UGC-NET) தேர்ச்சி பெற்றவர்கள் BHU RET-EXEMPTED வழியாக நுழைவுத் தேர்வின்றி Research Ability Test மூலம் சேர்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும். BHU-RET EXEMPTED வழியாக விண்ணப்பம் செய்வதற்கான இணைப்பு பின்வருமாறு:
https://bhu2.ucanapply.com/IntegrationRet2023MAIN/entrance/?app-id=UElZMjMwMDEyNw==
UGC-NET தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் BHU-RET வழியாக நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும். BHU-RET வழியாக விண்ணப்பம் செய்வதற்கான இணைப்பு பின்வருமாறு:
https://bhu2.ucanapply.com/IntegrationRet2023MAIN/entrance/?app-id=UElZMjMwMDEyNg==
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 8000/- வழங்கப்படும்.
ஆய்விற்குப் பயன்படும் பொருட்களை வாங்குவதற்கு ஊக்கத்தொகையாக (Contingency amount) ஆண்டிற்கு ரூ. 8000 வழங்கப்படும்.
வாய்ப்பை எதிர் நோக்கிக் காத்திருக்கும் மாணவர்களுக்காகப் பகிருங்கள்.
தொடர்புக்கு:
1. ஆகாஸ்.அ- 9514911685
[email protected]
2. ஆதிஸ்வரன்.செ- 9094589745
[email protected]
- முனைவர் பட்ட ஆய்வாளர்கள்
இந்திய மொழிகள் துறை
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
வாராணசி-221005.
Banaras Hindu University : Entrance Exam Final extra time of three days given to the desirous applicants seeking admission in B.V.Sc.&A.H. degree course (2023-24) to upload the certificates from September 15 - 17, 2023.
வாரணாசியில் பாரதியாரின் 102-வது நினைவு நாள் அனுசரிப்பு: இந்து பல்கலை. சார்பில் மரியாதை-
வாரணாசியில் பாரதியாரின் 102-வது நினைவு நாள் அனுசரிப்பு: இந்து பல்கலை. சார்பில் மரியாதை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி சுப்பரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டில் அவரது 102 ஆவது நினைவுநாள் அனுசர...
மகாகவி பாரதியாரின் 102வது நினைவு நாளை முன்னிட்டு வாரணாசி, அனுமன் காட் பகுதியில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறையின் சார்பில் துறைத்தலைவர் பேராசிரியர் திவாகர் பிரதான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள பாரதியாரின் நினைவு இல்ல நூலகத்தில் உள்ள திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பாரதியின் உறவினரும் இசைப் பேராசிரியருமான ஜெயந்தி முரளி முன்னிலை வகித்தார். மேலும் சுற்றுலாப் பயணிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவின் இறுதி நிகழ்வாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மொழியில் துறையில் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு வரலாற்றுத் துறை பேராசிரியர் கங்காதரன் மற்றும் மராத்தி துறைத்தலைவர் பிரமோத் பக்வான் படுவல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பாரதி பற்றிய ஆய்வுகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்து உரையாற்றினர். இந்நிகழ்ச்சியைத் தமிழ் பிரிவு உதவி பேராசிரியர் த. ஜெகதீசன் மற்றும் இந்திய மொழிகள் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அவர்களது அழைப்பினை ஏற்று 10 நாட்கள் 'தமிழ்நாடு தரிசனம்' சுற்றுலாவிற்கு வருகை தந்த மாணவர்களுடன் இன்று ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக இந்திய மொழிகள் துறையில் தமிழ் டிப்ளமோ பயிலும் 18 மாணவர்கள், அப்பிரிவின் உதவிப் பேராசிரியர்கள் ஜெகதீசன், விக்னேஷ் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tamil Nadu Darshan Tour
At the closing of Kashi Tamil Sangamam, TN Governor promised a tour program.
The invitation of the Hon'ble Governor of Tamil Nadu to Tamil diploma students to visit TN is now finally materialized and 18 students and 2 teachers of Tamil are going today. In 10 days of tour, they'll visit various places such as educational institutions, historical places, temples, museums and etc.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கலைப்புல வளாகத்தில் பொங்கல் விழா நேற்று (15-01-23) நடைபெற்றது.
இவ்விழாவி்ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப மையத்தின் மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களின் குடும்பத்துடன் வருகை தந்து சிறப்பித்தனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மொழிகள் துறைக்கு வருகை தந்தார். இந்திய மொழிகள் துறையில் ஒரு பிரிவாக உள்ள தமிழ்ப் பிரிவு செயல்பாடுகள் குறித்தும், வளர்ச்சி குறித்தும் இந்திய மொழிகள் துறைத் தலைவர் பேராசிரியர் திவாகர் பிரதான், மராத்திய துறைத் தலைவர் பேராசிரியர் பிரமோத் ப௧்வான் பட்வால் , ஜெர்மன் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.கே.நடராசன், தமிழ்ப் பிரிவு உதவி பேராசிரியர்கள் முனைவர் ஜெகதீசன், முனைவர் விக்னேஷ் ஆனந்த் ஆகியோருடன் கலந்துரையாடினார். அண்மையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட திருக்குறள் நேபாளி மொழிபெயர்ப்புக்கு பேராசிரியர் திவாகர் பிரதான் சிறந்ததோர் முன்னுரை எழுதி இருந்தார் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த சந்திப்பு அமைந்திருந்தது. இச்சந்திப்பின் நினைவாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள் திருக்குறள் இந்தி மொழிபெயர்ப்பு நூலை பேராசிரியர் திவாகர் பிரதானுக்கும், மராத்தி திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை பேராசிரியர் பிரமோத் பக்வான் பட்வாலுக்கும், திருக்குறள் பற்றிய ஆய்வு நூலை பேராசிரியர் எம்.கே.நடராஜனுக்கும் வழங்கி சிறப்பித்தார்.
மகாகவி பாரதியாரின் 141 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகக் கலைப்புலத்திலுள்ள இந்திய மொழிகள் துறையில் 11 மணியளவில் பாரதியாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய மொழிகள் துறைத் தலைவர் பேராசிரியர் திவாகர் பிரதான், மராத்திய துறைத் தலைவர் பேராசிரியர் பிரமோத் ப௧்வான் பட்வால் , முனைவர் ஜெகதீசன், முனைவர் விக்னேஷ் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டு பாரதியின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
மகாகவி பாரதியாரின் 101 ஆம் நினைவு நாளை முன்னிட்டு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகக் கலைப்புலத்திலுள்ள இந்திய மொழிகள் துறையில் இசை அஞ்சலி நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முனைவர் ஜெயந்தி முரளி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாரதிக்கு இசை அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து பேராசிரியர் கௌணமணி, பேராசிரியர் திவாகர் பிரதான், முனைவர் தவசிமுருகன், முனைவர் ஜெகதீசன், முனைவர் விக்னேஷ் ஆனந்த், திருமதி ஆனந்தி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாரதியின் படைப்புகள், அவரின் பங்களிப்புகள் முதலியவற்றைக் குறித்து உரையாற்றினர்.
#இசை_அஞ்சலி
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 101 ஆம் நினைவு நாளை முன்னிட்டு, வாராணசியில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முனைவர் ஜெயந்தி முரளி, பேராசிரியர் கௌணமணி, பேராசிரியர் திவாகர் பிரதான், முனைவர் தவசிமுருகன், முனைவர் ஜெகதீசன், முனைவர் விக்னேஷ் ஆனந்த், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறை ஆய்வு மாணவர்கள் முதலியோர் கலந்துகொண்டு பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து முனைவர் ஜெயந்தி முரளி, பேராசிரியர் கௌணமணி ஆகியோர் பாரதிக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
அனைவருக்கும் வணக்கம்.
முற்போக்குச் சிந்தனைகள் பலவற்றைத் தனது படைப்புகளின் வழி மக்கள் மனதில் விதைத்த, பன்மொழி புலமைப் பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு நாளை (11-09-2022) முன்னிட்டு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகக் கலைப்புலத்திலுள்ள இந்திய மொழிகள் துறையின் சார்பாக இரு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நிகழ்வு -1:
#பாரதி_சிலைக்கு_மாலை_அணிவித்தல்
நேரம்: காலை 9 மணி
இடம்: பாரதி சிலை, ஹனுமான் காட், வாராணசி.
நிகழ்வு -2:
#பாரதிக்கு_இசை_அஞ்சலி
நிகழ்த்துபவர்: முனைவர் ஜெயந்தி முரளி,
மேனாள் இசை உதவிப் பேராசிரியர்,
தேவிலால் சௌதிரி பல்கலைக்கழகம், ஹரியாணா.
நேரம்: காலை 11 மணி
இடம்: இந்திய மொழிகள் துறை, கலைப்புலம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாராணசி.
அனைவரும் வருக!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Website
Address
Varanasi
221005
Varanasi
Varanasi, 221007
Here you will be given all the important information related to government jobs.
Ahmedabad , Varanasi , Rajsthan, Noyada, Kolkata, Mumbai
Varanasi, NEWRTOVASTRALAHEMDABADGUJARAT
Antica Maritime provides all your needs around the Sea World & WSM leading We provide Officers, Engi
Central Institute Of Higher Tibetan Studies, Sarnath
Varanasi, 221007
First batch of sowa rigpa 21-22 NEET qualified students of sowa rigpa department faculty located in Varanasi central institute.
Varanasi
संस्कृता वाच् Saṃskṛtā Vāc Aacharya Dr. Lekhmani Tripathi. Traditional sanskrit education
C. L. EVERGREEN MEMORIAL SCHOOL, KANDAWA, KHAIRA Road, CHITAIPUR, VARANASI
Varanasi, 221005
Premier Institute for Academic and Entrance Examination