CCMedia
Media, Academy & Digital Marketing
விடுமுறை காலத்தை பயனுள்ள விதத்தில் கழிக்க மலையக கலாசார ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மலையக மாணவர்களுகான பரிசளிப்பு விழா விஸ்வம் காம்பஸ் மற்றும் மலையக கலாசார ஒன்றியம் மூலம் தகவல் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பிரதான மண்டபத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பிரதமரின் இணைப்பு செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான கௌரவ செந்தில் தொண்டமான் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மேலும் இந்த நிகழ்வுக்கு விஸ்வம் காம்பஸின் நிருவன தலைவர் பேராசிரியர் டெக்ஸ்டர் பெர்னான்டோ உட்பட மலையக கலாசார ஒன்றியத்தின் தலைவர் கே. ஜெ. சிவராஜேஸ்வரன் அவர்கள் மற்றும் மலையக கலாசார ஒன்றியத்தின் செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கொழும்பு மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான ரகு இந்திரகுமார் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லாவெரடு மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையே சந்திப்பு!
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லாவெரடு மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது பொருளாதாரம் வர்த்தகம், சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கு பிரான்ஸ் தூதுவர் நன்றி தெரிவித்தார் தூதரகங்கள் ஊடாகவும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேநேரத்தில் அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்திட்டத்தினூடாகவும் அமைச்சின் ஊடாகவும் சிறு நடுத்தர பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் அமைச்சரின் பரிந்துரைக்கு அமைய பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் செயற்றிட்ட அறிக்கை கையளித்தார்.
இதன்மூலம் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறு நடுத்தர உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைக்கு பிரான்ஸ் அரசு நேரடி பங்களிப்பை வழங்கும் என பிரான்ஸ் தூதுவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜீ, குமாரசிரி பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் மொஹமட் காதர், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, இ.தொ.காவின் கொழும்பு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரகு இந்திரகுமார், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் இந்திய வம்சாவளி மக்களின் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் சிரார்த்த தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மலர் கொத்து வைத்து மரியாதை செலுத்தினார்.
இதேவேளை சிரார்த்த தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலமையில் மலையக கலாச்சார ஏற்பாட்டில் ஒன்றியத்தின் மாணவப்பிரிவு மாணவர்களில் கா.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு மலையக கலாச்சார ஒன்றியமும் CCEM கல்வி நிறுவனமும் இணைந்து பதக்கங்களும், சான்றிதழ்களும்
மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மறைந்த தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கொழும்பு-12 பிரைட்டன் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், மற்றும் அரசியல் பிரமுகர்களும், கலைஞர்களும், ஊடகவியலாளர்களும் சமூக தன்னார்வலர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாட்டு மக்களையும் தன் குடும்பத்தையும் ஆழ்துயரத்திற்கு உள்ளாக்கிய 16 வயது சிறுமி செல்வி ஹிஷாலினியின் மரணம் மற்றும் இதுபோன்று இருளில் புதைந்த பல பெண்களின் ஆத்மா இறை சாந்திக்காக மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று கொழும்பு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பகவானில் நேற்று மாலை 6.30 மணி அளவில்
இ. தொ.கா கொழும்பு இளைஞர் அணி மற்றும் மலையக கலாச்சார ஒன்றியத்தினர் இணைந்து கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பணிப்புரையின் கீழ் இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.
நாட்டில் பல பாகங்களிலும் அல் நூர் அமைப்பினூடாக முன்னெடுத்து வரும் அபிவிருத்தி திட்டங்களை கௌரவிக்கும் முகமாக பொலன்னறுவை போதி ஓய விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சி பாசறையின் சிரேஷ்ட அத்தியற்சகர் திரு.சந்ரபால அவர்களினால் அல் நூர் அறக்கட்டளை நிறுவனத்தின் அதிதிகளுக்கு பதக்கமும், நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பொலன்னறுவை போதி ஓய விகாரை விஹாராதிபதியினை சந்தித்ததோடு அக் கிராம மக்களுக்களுக்கான உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. எஸ்.எம்.எம் முஷாரப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
அந்நூர் அமைப்பின் உதவியுடன் குடிநீர் பற்றாக்குறை மிக்க பிரதேசங்களில் 1000 குடும்பங்களுக்கு போதுமான குடிநீர் வசதியினை வழங்கும் ஆள்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறன.
அதற்கமைவாக இனங்காணப்பட்ட அம்பார மாவட்டத்தின் பொத்துவில் செங்காமம் மற்றும் ஹித்தாயபுரம் பிரதேசத்தில் அந்நூர் அமைப்பின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 50000 litre நீர் தாங்கி இரண்டு அமைக்கப்படுவதற்கான முதலாவதாக துளையிடும் பணிகள் சென்ற வாரம் ஆரம்பமாகி முடிவுற்றன.
நீரின் அவசர தேவை அங்கு மிகையாக உணரப்படுவதனால் நீர்ப்பம்பி பொறுத்தப்பட்டு நீரானது மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான தேவை அரசாங்கத்திற்கு ஏன் எழுந்தது?
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்த பல விடயங்கள் குறித்து கௌரவ பிரதமர் அவர்களும் ஜனாதிபதி அவர்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களோடும் வாழ்க்கைச் செலவு ஜனாதிபதி செயலணியினரோடும் இன்று ஆராய்ந்தனர்.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்தமை முக்கிய காரணமாகும்.
தற்போது மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதுடன் அது மேலும் அதிகரிக்கக்கூடுமென சந்தை போக்குகளின் மூலம் தெரியவருகின்றது.
இலங்கையானது எரிபொருள் இறக்குமதிக்காக பெருமளவு அந்நியச் செலாவணியைச் செலவிடும் ஒரு நாடு மட்டுமன்றி அந்த இறக்குமதியிலேயே நாட்டின் போக்குவரத்துச் சேவைகள் மின்சார உற்பத்தி என்பனவும் தங்கியுள்ளன.
இதன்மூலமே சில தொழிற்சாலைகளும் இயங்குகின்றன.
2019ஆம் ஆண்டில் மட்டும் எண்ணெய் இறக்குமதிக்காக 3,677 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணி செலவிடப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியைத் தடை செய்தமை மற்றும் சர்வதேச எண்ணெய் விலைகள் 2019ஆம் ஆண்டில் பீப்பாய் ஒன்றுக்கு 68.80 அமெரிக்க டொலர்களிலிருந்து 2020ஆம் ஆண்டு 45.57 அமெரிக்க டொலர்கள் வரை குறைவடைந்ததன் காரணமாக
2020ஆம் ஆண்டில் இந்தச் செலவை 2,325 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைத்துக்கொள்ள முடிந்தது.
இருப்பினும் தற்போது நிலவும் விலை அதிகரிப்பு காரணமாக, 2021ஆம் ஆண்டில் பீப்பாய் ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலர்களையும் கடந்திருக்கும் சூழலில்,
வாகன இறக்குமதித் தடையைத் தொடர்ந்தும் பேணுகின்ற போதும், மசகு எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணி சுமார் 4,000 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருக்கின்றது.
இந்தச் செலவு, மொத்த அந்நியச் செலாவணியை ஈட்டும் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும்.
விதைகள், உரம், உணவு, மருந்துப்பொருட்கள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை இறக்குமதி செய்யும் இந்த இறக்குமதி சார்ந்த நுகர்வு முறைமை உற்பத்தி சார்ந்த நுகர்வு முறைமைக்கு மாற்றப்பட வேண்டும்.
அதை நோக்கியே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
அந்நியச் செலாவணியை செலவிடுவதற்கு மேலதிகமாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனமாக இருக்கின்ற காரணத்தினால்,
ஒவ்வொரு வருடமும் இலங்கை வங்கியிலும் மக்கள் வங்கியிலும் கடனில் தங்கியிருக்கும் ஒரு நிறுவனமாகவே அது மாறியுள்ளது.
இந்த இரண்டு வங்கிகளுக்கும் சுமார் 652 பில்லியன் ரூபாய் கடனைத் தற்போது அந்த நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மேற்படி இரண்டு வங்கிகளுக்கும் இலங்கை மின்சார சபையும் சுமார் 85 பில்லியன் ரூபாய்கள் கடனைச் செலுத்தவேண்டி இருப்பதால் இதற்காக அரச வங்கிகள் வழங்கியுள்ள கடன்களுக்கு திறைசேரியினால் பிணைமுறிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் இக்கடன்களுக்காக அதிக வட்டியும் செலுத்த வேண்டியுள்ளது.
தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சுமார் 60 சதவீதமான எரிபொருள் பாவனை குறைக்கப்பட வேண்டும்.
எனவே போக்குவரத்துக்காக மின்சாரக் கார்களைப் பயன்படுத்துவதுடன் புகையிரத சேவைகளை முடியுமானளவு மின்சாரத்தினால் இயங்கும் சேவைகளாக மாற்ற வேண்டும்.
எரிபொருள்களால் இயங்கும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது முழுமையாக நிறுத்தப்பட்டு மின்சாரக் கார் பாவனை ஊக்குவிக்கப்பட்டு முச்சக்கர வண்டிகளுக்கும் மின்சார என்ஜின்களை வழங்குவதன் மூலம் போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.
எரிபொருள் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் நகரப் பிரதேசங்களின் வளி மாசடைவதுடன் மக்கள் மத்தியில் சுவாச நோய்களும் அதிகரித்து வரும் நிலையில் சூழல்நேய வலுச்சக்தி மூலங்களுக்கு விரைவாகச் செல்லவேண்டியது கட்டாயமாகியுள்ளது.
களனி திஸ்ஸ மின் நிலையத்தை எல்என்ஜி (LNG) மின் நிலையமாக மாற்றுவதன் மூலம் மின்சார சபையினால் எரிபொருளுக்காகச் செலவிடப்படும் அதிகப்படியான செலவுகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.
காலநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஏற்ப உரம், எரிபொருள், வன வளங்கள், திண்மக் கழிவுகள் போன்றன மக்கள் வாழ்வுக்கு உகந்த வகையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும்.
எனவே விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்களின் மீது தங்கியிருக்கும் நுகர்வு முறைமையை மாற்றுவதற்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பல முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்சார சபையின் மின்சார உற்பத்திக்காக, சுமார் 30 சதவீதமான எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், அதனை தவிர்ப்பதற்கு மீள்பிறப்பாக்கச் சக்தி வலு உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக, அனைத்து வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச கட்டிடங்களுக்கு சூரிய சக்தி மின் உற்பத்தித் தொகுதிகளை வழங்குவதன் மூலம் மக்கள் மீது சுமத்தப்படும் அதிக விலை அழுத்தங்களைக் குறைப்பது மட்டுமன்றி அந்த மின் அலகுகளை மின்சார சபைக்கு வழங்கி, வருமானம் ஈட்டவும் முடியும்.
எனவே இந்த விலை அதிகரிப்பானது சுதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொது நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் மட்டுமே ஆகும். இது நாட்டின் வங்கி முறைமையை பலப்படுத்தி குறைந்த வட்டி வீதத்தைப் பேணுவதற்கும் அந்நியச் செலாவணியை குறைத்து செலாவணி வீதத்தைப் பலப்படுத்தவும் மக்களின் சுகாதார நலன் பேணலைப் பாதுகாக்கவும் இறக்குமதியின் மீது தங்கி இருக்கும் நுகர்வுப் பொருளாதாரத்தை, தேசிய உற்பத்தியின் மீது தங்கியிருக்கும் முதலீட்டு நுகர்வுப் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.
After O/L or A/L?
Certificate in Mass Media
For more details: 0771997172
டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஜூன் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாமல் ராஜபக்ஷ அவர்கள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.
மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் 57 வது ஜனன தினத்தை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பணிப்புரையில் வெள்ளவத்தை ஸ்ரீ ஜினானந்த மகா விகாரையில் விசேட வழிபாட்டு பூஜை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் ஸ்ரீ ஜினானந்த சிறுவர் அபிவிருத்தி நிலைய சிறுவர் இல்லத்துக்கு மதிய உணவிற்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கொழும்பு மாவட்டத்துக்கான இளைஞர் அணி அமைப்பாளரின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டது.
“சைனோபாம்” இரண்டாவது தொகுதி தடுப்பூசிகள்...
சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி “சைனோபாம்” தடுப்பூசிகளை இன்று முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் சுகாதார துறைகளின் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளித்து நாட்டின் சில மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
5 இலட்சம் தடுப்பூசிகளுடன் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.869 விமானம் இன்று (26) அதிகாலை 12.05க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ சென் ஹொன் (Qi Zhen Hon) அவர்களினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் தடுப்பூசிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சீன அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக இந்த இரண்டாவது தடுப்பூசிகள் தொகுதி இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளது. அரசாங்கம் கொள்வனவு செய்வதற்காக கோரியுள்ள மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகளை இன்னுமொரு மாதத்திற்குள் வழங்கவும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பயனாக “சைனோவெக்” (Sinovac) தடுப்பூசிகளை இலங்கையிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
தடுப்பூசிகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சன்ன ஜயசுமன, டீ.வீ. சானக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜூன் மாதம் 07 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாட்டு காலத்தினை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள ஒழுங்குகளும் நடைமுறைகளும்:
நாளை அதிகாலை 04.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அதன்படி நாளை (25) ஆம் திகதி சில்லறை கடைகள், மருந்துக் கடைகள், மீன், இறைச்சி, மரக்கறி மற்றும் பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட முடியும்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் தினங்களில் அத்தியாவசிய நுகர்வு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மட்டும் வர்த்தக நிலையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.
பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் மற்றும் தளர்த்தப்படும் காலப்பகுதியில் மதுபான விற்பனை நிலையங்கள் முழுமையாக மூடப்படுதல் வேண்டும்.
நாளைய தினம் (25) வீடுகளிலிருந்து வெளியில் செல்வதற்கு அடையாள அட்டைகளின் இறுதி இலக்க முறைமை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.
நாளை (25) இரவு 11.00 மணி முதல் மே மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரை மீண்டும் முன்னர் போன்று பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
மே மாதம் 31ஆம் திகதி அதிகாலை 04.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
மே 31ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும் பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும்.
ஜூன் 04 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
ஜூன் 04ஆம் திகதி இரவு 11.00 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும் பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 07 ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும்.
விமானப் படையினால் ஆளில்லா விமானங்கள் மூலம் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோர் குறித்து தினமும் கண்காணிக்கப்படும்.
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதை இலகுபடுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் நடமாடும் விற்பனை வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.
பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் குறித்து அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பு தகவல் சேவையாகவும் 1965 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும்.
பிரதேச மட்டத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய முடியாதிருக்கும் மரக்கறி அறுவடைகளை அரசாங்கத்தின் மூலம் கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அறிவுறுத்தியுள்ளதை அடுத்து.
பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் உண்மையாகவே அத்தியாவசிய சேவைகளுக்கானதா என்பதை கண்டறிவதற்காக காவற் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்தார்.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் போது மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாதிருக்க ஜனாதிபதியினால் பல தீர்மானங்கள் மேற்கொள்ளபட்டது...
கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக நேற்று (21) இரவு 11.00 மணி முதல் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கும் போது மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாதிருக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.
கோவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் காலப்பகுதியில் தொழிற்சாலைகளை தொடர்ச்சியாக நடத்திச் செல்லுதல், மருந்தகங்களை திறந்து வைத்தல், பேக்கரி உற்பத்திகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுதல் மற்றும் விநியோகிப்பதற்கு முறைமையொன்றை வகுத்தல், கப்பல் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பிரதேச ரீதியாக நடமாடும் சேவைகளை மேற்கொண்டு எவ்வித தட்டுப்பாடும் இன்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டுக்கு சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ள அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை சதோச நிறுவனத்திற்கு வழங்குவதற்கும், நாடளாவிய ரீதியில் உள்ள சதோச களஞ்சிய சாலைகளில் மேற்கொள்ளப்படும் பொருள் பொதியிடல் வேலைகளுக்கு ஒரு லட்சம் தொழில் வாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை பயன்படுத்துவதற்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக பிரதேச செயலாளர்களின் ஊடாக தேவையான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கும், வீதித் தடை நடவடிக்கைகளை இளகுபடுத்துவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் நாளுக்கு முந்திய தினம் பொருட்களை கொண்டு செல்வதற்காக அனுமதியளித்தல், விவசாய நடவடிக்கைகள், அனைத்து நகரங்களிலும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட நாளாந்த சுத்திகரிப்பு நடவடிக்கைகள், வீதி அபிவிருத்தி மற்றும் ஏனைய நிர்மாணப் பணிகளை முன்னெடுத்தல் போன்றவற்றுக்கு இந்த பயணக் கட்டுப்பாட்டை தடையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
பீ சீ ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் அரச அல்லது தனியார் நிறுவனங்கள் பரிசோதனை பெறுபேறுகளின் படி தொற்றாளர்களை இனம்காணும் பட்சத்தில் குறித்த தொற்றாளருக்கு சிகிச்சையளிக்கும் பொறுப்பை அந்த நிறுவனத்திற்கே நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது ஆயுர்வேத வைத்திய சாலை முறைமை வசதிகளையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
மே மாதம் 25 மற்றும் 28 ஆகிய இரு தினங்களிலும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் மக்களுக்கு வீட்டிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமேயாகும். சில நாடுகளில் இருந்து தருவிக்கப்படவுள்ள தடுப்பூசிகள் இன்னும் சில நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளன. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி தற்போதிருக்கும் நிலைமையை விரைவாக கட்டுப்படுத்த வேண்டிய தேவையை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
அரச அதிகாரிகள் மற்றும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தேவையற்ற விதத்தில் ஊடகங்களில் மட்டும் வந்து மக்களை பயமுறுத்துவதற்கு பதிலாக ஏதேனும் விடயங்கள் இருந்தால் அது பற்றி நேரடியாக தனக்கு தெரிவிப்பது மிகவும் முக்கியம் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
இது வரை தீர்மானிக்கப்பட்டதும், இதன் பின்னர் தீர்மானிக்கப்படுவதும் சம்பந்தப்பட்ட விசேட நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரமே ஆகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மக்களுக்காக எந்தவொரு சரியான தீர்மானத்தையும் எடுப்பதற்கு தான் பின் நிற்கப் போவதில்லை என தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்தனர்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றி பெறச் செய்வதற்கு சுகாதார துறை வழங்கியுள்ள வழிகாட்டல்களை சரியான முறையில் பின்பற்றுவது பொது மக்களின் பொறுப்பும் கடமையுமாகும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பந்துல குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பதிரண, நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்த்தன, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனீ பெர்னாண்டோ புள்ளே, சஷீந்திர ராஜபக்ஷ, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் முப்படை தளபதிகள், சுகாதாரத் துறை அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
தேசிய படைவீரர்கள் தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் தலைமையில் பத்தரமுல்லை பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் உள்ள படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு அருகில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்றது.
மூன்று தசாப்த காலமாக இருந்துவந்த உள்நாட்டு யுத்தம் முடிவடநை்து இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதன்போது இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 28,619 படைவீரர்கள் தாய் நாட்டுக்காக தங்களது உயிர்களை அர்ப்பணித்தனர். இருபத்தேழாயிரத்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள் அங்கவீனமுற்றனர். சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அவர்களுக்காக தேசத்தின் மரியாதையை செலுத்தி படைவீரர்கள் தின நிகழ்வு இடம்பெற்றது.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் உட்பட நிகழ்வுக்கு வருகை தந்திருந்தவர்கள் உயிரிழந்த படைவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இலங்கை ரணவிரு அதிகாரசபையின் பதில் தலைவர் சோனியா கோட்டேகொடவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதைக்கு மத்தியில் விமானப் படையினர் விமானம் மூலம் மலர்களை தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதி அவர்கள், பிரதமர் அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உட்பட அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு மலர் வலயங்களை வைத்து படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
(Nanthoo [M.I.A] CCMedia)
இந்து பண்பாட்டு நிதியத்திற்கு கௌரவ பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு!
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) அலரி மாளிகையில் இந்து பண்பாட்டு நிதியத்திற்கான உறுப்பினர்களை நியமித்தார்.
இந்து சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் 1985 ஆம் ஆண்டு 31ஆம் இலக்க சட்டம் மூலமாக இந்து பண்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிதியத்தின் புதிய தலைவராக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டதுடன், இந்து பண்பாட்டு நிதியம் எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் மற்றும் உதவிப் பணிப்பாளர் திருமதி.கு.ஹேமலோஜினி ஆகியோர் பதவி வழியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முன்னாள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசன், மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு.பெ.சுந்தரலிங்கம், ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறங்காவலர் சபைச் செயலாளர் திரு. ஜி.வீ. சுப்பிரமணியன், தொழிலதிபர்களான தேசமான்ய துரைச்சாமி விக்னேஸ்வரன், திரு. ஏ.பி.ஜெயராஜ் ஆகியோர் கௌரவ பிரதமரினால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்து பண்பாட்டு நிதியத்திற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
நாம் இன்று 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை' நோக்கிப் பல சவால்களுக்கு மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்க நெறியான சமூகம் ஒன்றினை உருவாக்குவது எமது பிரதான இலக்காகும். அந்த இலக்கை அடைவதற்கு புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு திறம்பட செயற்பட்டு வருகின்றது.
இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் ஆன்மிகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்படுவது மிக முக்கியமானதாகும். அதற்கு ஒரு நபர் பின்பற்றும் மதம் உதவியாக அமையும். இந்த நாட்டில் நாம் பௌத்த தர்மத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை ஏனைய மதங்களையும் சமமாகவே மதிக்கின்றோம். இந்து மக்கள், இஸ்லாம் மக்கள், கிறிஸ்தவ மக்கள் என அனைவரும் தத்தம் மதங்களைப் பின்பற்றுவதற்கும், அவரவர் மத அனுட்டானங்களைப் பின்பற்றுவதற்கும் இந்நாட்டில் எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. அரசியலமைப்பின் ஊடாக எமது நாட்டில் மத நல்லிணக்கத்துடன் கூடிய சகவாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயற்பாடுகளிற்கு வலுச்சேர்க்கின்ற இந்துப் பண்பாட்டு நிதியத்தின் செயற்பாடு மிக முக்கியமானது.
இந்த இந்துப் பண்பாட்டு நிதியம், 1985 ஆம் ஆண்டு, 31 ஆம் இலக்கப் பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இலங்கைத்தீவில் வாழ்கின்ற இந்துக்களுக்கான சுபீட்சமானதொரு சூழலை உருவாக்கி, சமய மற்றும் ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாகும்.
இலங்கைத் தீவில் 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட இந்துக்கள் வாழ்கின்றனர். அவர்களது சமய மற்றும் ஆன்மீகப் பணிகளை மேம்படுத்தி ஊக்குவிக்கும் பொறுப்பு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும், இந்துப் பண்பாட்டு நிதியத்திற்கும் உண்டு.
இந்துப் பண்பாட்டு நிதியம் தனது இலக்கினை அடைவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது அவசியமாகும். இந்த நிதியத்தின் செயற்பாடுகளை மேன்மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நியமனம் இன்று உங்களுக்கு வழங்கப்படுகின்றது.
இந்து அறநெறி பாடசாலைகளின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தி, ஆன்மீக ரீதியிலும், ஒழுக்க ரீதியயிலும் சிறந்த இளம் தலைமுறையை உருவாக்குவதற்கு நீங்கள் தலைமைத்துவம் வழங்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதேபோன்று பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள இந்து ஆலயங்களின் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி நாடு முழுவதுமுள்ள இந்து ஆலயங்களின் தேவைகளை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.
அத்தேவைகளை பூர்த்திசெய்து இந்துப் பண்பாட்டு நிதியத்தின் இலக்கை அடைவதன் மூலம் சிறந்த இலங்கை சமுதாயத்தை உருவாக்குவதற்கு செயலாற்றுவது உங்களது பொறுப்பாகும்.இந்துப் பண்பாட்டு நிதியத்தின் மூலமாக சிறப்பான சேவையாற்றுவதற்கு இந்துப் பண்பாட்டு நிதிய உறுப்பினர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதான திரு.யோஷித ராஜபக்ஷ, பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா, பிரதமரின் இணைப்பாளர் திரு.செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளை கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் இவ்வாறு தான் நடந்து கொள்ள வேண்டும்
தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.
கொவிட் பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக கடந்த வியாழன் நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது.
நாளை அதிகாலையுடன் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட போதிலும் நாளாந்தம் இரவு 11 மணி முதல் 4 மணி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படுவதுடன் மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்து போக்குவரத்து கட்டுப்பாடு நீடிக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட போதிலும் கடமைக்கு செல்வதை தவிர வேறு நோக்கங்களுக்காக அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே வீட்டை விட்டு வெளியேற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அருகில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு செல்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படை தயாரித்த "வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு" உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிப்பு ...
சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இலங்கை விமானப்படையால் தயாரிக்கப்பட்ட வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு (HEATED HUMIDIFIED OXYGEN THERAPY) நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கோவிட் 19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், புத்தாக்கத் துறையில் சர்வதேச தூதுவரான வித்யாஜோதி, கலாநிதி பந்துல விஜே அவர்களின் எண்ணக்கருவில் பேராசிரியர் ரனில் டி சில்வா மற்றும் வைத்தியர் திலங்க ரத்னபால உள்ளிட்ட முன்னணி மருத்துவ நிபுணர்கள் குழுவின் பங்களிப்புடன் இந்த உபகரணத் தொகுதி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு அதிக அளவு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை ஒட்சிசனை முழு ஈரப்பதத்தில் வழங்குகிறது.
விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் வழிகாட்டுதலின் பேரில், விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பிரசன்ன மார்டினோவின் மேற்பார்வையில் விமானப்படையின் பொறியியல் பிரிவின் விமான பராமரிப்பு பிரிவினால் தயாரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வரையறைகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செயல்திறன் தரங்களை சரிபார்த்த பிறகு, இது இலங்கை தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மொரட்டுவை பல்கலைக்கழகம் இதன் மின் பாதுகாப்பு தரங்களின் இணக்கப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சாதனத்தை உற்பத்தி செய்வதற்காக 15 லட்சம் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தாலும், 300,000 லட்சம் ரூபா என்ற குறைந்த செலவில் உற்பத்தி நடவடிக்கைகள் நிறைவுபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது, 50 உபகரண தொகுதிகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், சுகாதாரத் துறையின் தேவைக்கேற்ப தொடர்ச்சியாக உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த சாதனத்தின் செயற்பாடு பற்றி ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் சஞ்சீவ முனசிங்க மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(Nanthoo [M.I.A] CCMedia)
பசுமை சமூக பொருளாதார மாதிரி ஒன்றை நோக்கி விசேட ஜனாதிபதி செயலணி…
காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை சமூக பொருளாதாரம் ஒன்றை இலங்கையில் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்துள்ளார்.
“காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணி“ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பெசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இந்த செயலணிக்கு ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் ஒரு ஆளுநர், 14 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 46 பேர் கொண்ட குழு இதில் அங்கம்வகிக்கின்றது.
அமைச்சர்களான ஆர்.எம்.சி.பீ.ரத்னாயக்க, சமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அழுத்கமகே, ரமேஷ் பத்திரன, ஆளுநர் அனுராதா யஹம்பத், இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, அருந்திக்க பெர்ணாண்டோ, ரொஷான் ரணசிங்க, கனக ஹேரத், ஜானக்க வக்கும்புர, மொஹான் டி சில்வா, விமலவீர திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர, சதாசிவம் வியாழேந்திரன், டி.பி.ஹேரத், சசிந்திர ராஜபக்ஷ, நாலக்க கொடஹேவா, சீத்தா அரம்பேபொல, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுளா திசாநாயக்க, கலாநிதி எம்.டப்பிளியு.என்.தர்மவர்தன, ஜயம்பதி மொல்லிகொட, ஜயந்த விக்கிரமசிங்க, பேராசிரியர் சுதிரா ரண்வல, கலாநிதி ஜீ.ஏ.எஸ்.பிரேமகுமார, விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய, கலாநிதி டி.எம்.ஜே.பி.சேனாநாயக்க, பேராசிரியர் எஸ்.ஆனந்த குலசூரிய, கலாநிதி டி.எல்.குணருவன், பேராசிரியர் பி.ஐ.யாப்பா, கலாநிதி எச்.எம்.ஜீ.எஸ்.பி.ஹிட்டிநாயக்க, கலாநிதி அசீஸ் முபாரக், கலாநிதி யசந்தா மாபட்டுன, கலாநிதி கிரிஷ் தர்மகீர்த்தி, சசித்ரா யாப்பா, விக்கி விக்கிரமதுங்க, ஹர்மந் குணரத்ன, தம்மிக்க கொப்பேகடுவ, தேவக விக்கிரமசூரிய, ஜீவிக்க அத்தபத்து, தில்ஷான் பெர்ணாந்து, மொஹமட் அனிஸ் ஜூனைட், திலித் ஜயவீர, விஜித் வெலிகல ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாவர்.
காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளுடன் பசுமை சமூக பொருளாதார மாதிரியை நோக்கி இலங்கையை மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி முன்வைத்த அமைச்சரவை விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள உரப் பயன்பாடு காணி, உயிர் பல்வகைத்தன்மை, திண்மக் கழிவுகள், கைத்தொழில், மீள்ப்பிறப்பாக்க சக்திவளம், குடியேற்றம், நகர மற்றும் சுற்றாடல் கல்வி ஆகிய விடயங்கள் குறித்து கருத்திற்கொண்டு அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதி அவர்களுக்கு பாரிய மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது.
தற்போது இரசாயன உரம், களைக்கொல்லிகள், பூச்சிக் கொல்லிகளுக்காக பெருமளவு செலவிட வேண்டியுள்ளது. இதன் மூலம் ஆறுகள், குளங்களின் நீர் மாசடைதல், மண் வளம் மாசடைவதுடன் இதனூடாக மக்களுக்கு ஏற்படும் நோய்கள் காரணமாக அவர்களது சுகாதார நிலைமைகள், வாழ்வாதார வழிகள் பாதிக்கப்படுகின்றன. நச்சுத்தன்மையற்ற உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதில் கஷ்டங்கள் அதிகரித்து வருகின்றது.
நாட்டுக்கு வெளியே செல்லும் அந்நியச் செலாவணியை நாட்டில் மீதப்படுத்துதல் உருவாகிவரும் பூகோள பொருளாதார மாதிரிகளுக்குள் அதன் உச்ச நன்மையை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளுதல், சூழல்நேய சமூக பொருளாதார மாதிரிக்கு மக்களை பழக்கப்படுத்துதல் உள்ளிட்ட சூழல்நேய விடயங்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. சுற்றாடலை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள மேலும் 24 விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தி செயற்படுவது இச்செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.
விவசாயத்திற்காக இரசாயன உரம் களைக்கொல்லிகள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக சேதன உர உற்பத்திகளை பயன்படுத்தி முழுமையாக இரசாயன விவசாய நடவடிக்கையிலிருந்து இயற்கை விவசாய நடவடிக்கைகளுக்கு மாறுவதற்கான வீதி வரைவு ஒன்றை தயாரிப்பது செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும்.
பொருளாதார புத்தெழுச்சி, வறுமையை ஒழிப்பதற்கான செயலணி மற்றும் கிராமத்துடன் உரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணியுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படுமாறு இந்த செயலணிக்கு ஜனாதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
(Nanthoo [M.I.A] CCMedia)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
8, Hunupitiya Cross Road, Colombo 02
Colombo, 00200
Sri Lanka’s Number One Breaking News Site And The Island’s Best Selling English Daily Newspaper!
Colombo, 10230
Imagebook is the sole Sri Lanka centric Stock Image Bank with over a million images, catering to all
Colombo
Aivarree.com is an modern news website which is publishing Local, International, Infotainment, Sports and financial news in Tamil and Sinhala languages and based in Colombo - Sri L...
Colombo, 00100
Hiru News Facebook - Premier No 1 news Page in Sri Lanka for accurate and timely news- www.hirunews.lk - 'when it happens' & 'as it happens' with creative and distinctive content ...
St' Paul's Girls' School
Colombo
Toward a True & Meaningful Communication.................