Mujeeb Ibrahim
Nearby law practices
Dehiwala 01
Kadawatha
10100
01
11300
Western
01
01
Colombo
Imbulgoda, Kirillawala
01
01
Western
01
Galle Road
Fight till the end.
LIFE Migration & Visa Consultancy We provide top end professional services in Migration Consultancy and Visa processing.
எமது கதைப்பமா நேரலையில் பல் துறை வித்தகர், சமூக ஆளுமை உவைஸ் மொஹிதீன் அவர்கள் பங்குபற்றி சிறப்பிக்கவுள்ளார்.
இந்த நேரலையில் நீங்களும் இணைந்து உவைஸ் மொஹிதீன் அவர்களுடன் கதைக்க வாழ்த்துக்களை சொல்ல மற்றும் உங்களது கேள்விகளை நேரலையில் தோன்றி கேட்க எமது "அட்மின் ஒன்லி - வட்சப்" குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
https://chat.whatsapp.com/BpwMd2mRnBGDI491gFTejr
இந்த நேரலை எமது https://www.youtube.com/ தளத்திலும் ஒளிபரப்பாகும், எமது யூரியூப் தளத்தையும் "Subscribe" செய்ய மறக்காதீர்கள்.
#கதைப்பமா
கனடாவிற்கு குடும்பத்தோடு குடிபெயர சிறந்த வழி உயர்கல்விக்காக இடம்பெயர்வதேயாகும்.
இது இலகுவானதும், விரைவானதுமான பாதையாகும்.
கனடாவிற்கு மாணவ வீசாக்கள் மூலம் குடும்பமாய் இடம்பெயரும் எண்ணமிருந்தால் தகுந்த ஆலோசனைகளை பெற LIFE MIGRATIONS இனை அணுக இயலும்.
😀😀😀
பிரித்தானியாவில்
வளமான எதிர்காலமொன்றிற்காக
உங்களது பிள்ளைகளின் உயர்கல்வியில்
முதலீடு செய்யுங்கள்.
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் பின்னடைவே!
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஆயுட்கால பிரதித் தலைவரும் அதனது ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவருமான சட்டத்தரணி, சமூக நேசன், மர்ஹூம் அல்ஹாஜ். AL. அப்துல் ஜவாத் BA அவர்களின் நினைவேந்தல்
NUM TAMIL பக்கத்தில்
இந்த நேரலை யூரியூப் தளமான https://www.youtube.com/c/NumTamilNZ தளத்திலும் ஒளிபரப்பாகிறது.
கொட்டகலையில் இருந்து ஸ்கொட்லாந்திற்கு...
சட்டத்தரணி சுரேஷ்குமார் LLB (Hons), Attorney at Law தனது சட்ட முதுமாணி மேற்படிப்பிற்காக பிரித்தானியா நோக்கி பயணமாகிறார்.
கபொத உயர்தரத்தில் 3 A சித்திகளுடன் தேர்ச்சிபெற்ற சுரேஷ், மலையகத்தில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தனது கல்விப்பயணத்தில் பல படிகளை வெற்றிகரமாய் கடந்தவர்.
பிரித்தானியாவில் சட்ட முதுமாணி கற்கை நெறியை சிறப்பாக நிறைவு செய்வதற்கு சுரேஷ்குமாரை வாழ்த்துகிறோம்.
அவரது இந்த அடைவில் பங்காளராக நாம் இருந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.
The Journey - Kotagala to Scotland !
An emerging lawyer from hill country
Mr. Sureshkumar LLB (Hons), Attorney at Law has enrolled with Scottish University for his Master degree in Law (LLM).
Suresh excelled with 3 A’s in his Advanced level examination and his attainments are thriving with many challenges.
We wish Sureshkumar to make success his Masters in Law and we really proud to be part of his journey towards Scotland.
Congratulations Sureshkumar .
With best regards,
~LIFE Migration & Visa Consultancy~
எமது வழிகாட்டுதலில்...
ஏறாவூரில் இருந்து பிரித்தானியாவிற்கு
சட்ட முதுமாணி (LLM) மேற்படிப்பிற்காக பயணிக்கவிருக்கும் பாத்திமா சஸ்னா LLB (Hons) அவரோடு இணைந்து செல்லும் கணவர் சட்டத்தரணி உபைதுழ்ழாஹ்...
இருவரையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
Congratulations on your visa grant Sazna Ubaidullah and Hamza Ubaidhullah!
Sazna is an LLB graduate got her visa grant to follow LLM in the UK. She is traveling with her husband Lawyer Ubaidullah.
We wish them both for the betterment and bright future in the UK.
~LIFE Migration & Visa Consultancy~
பிரித்தானியாவில் மேற்படிப்பை மேற்கொள்ள விரும்புவோருக்கான 2022 ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிகள் ஆரம்பமாகியுள்ளன.
இறுதி நேர சிரமம் மற்றும் ஏமாற்றங்களை தவிர்க்க இப்போதிருந்தே ஆயத்தமாகலாம்.
எதிர்வரும் மே மாத பருவகால கற்கை நெறிகளுக்கு பெப்ரவரி மாதமும், செப்டம்பர் பருவகால கற்கை நெறிகளுக்கு மே மாதமும் வீசா விண்ணப்பங்களை செய்ய இயலும்.
€ நீங்கள் பட்டப்படிப்பு தகைமை கொண்டவரா?
€ 35 வயதிற்கு குறைந்தவரா ?
€ திருமணமானவரா?
இதோ...குடும்பத்தோடு கனடா அல்லது பிரித்தானியாவிற்கு குடிபெயர்வதற்கான அருமையான வாய்ப்பு!
அந்த நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு இலகுவான வழிமுறைகள் !
குடும்பத்தோடு குடிபெயர்தல் (Family Migration)
_______________________________________
இந்தக்காலப்பகுதியில் பலரும் கேட்கிற கேள்வி...
குடும்பத்தோடு புலம்பெயர வழி ஒன்று கிடையாதா என்பதேயாகும்.
பல வழிகள் இருக்கின்றன.
ஆனால் அவை சட்டபூர்வமானதாக, முயற்சி செய்கின்றவர் ஏமாந்து போகாத வழியாக இருக்க வேண்டும்.
இப்போதைய கொரோனா சூழ்நிலையில் அனேகர் புலம் பெயர்ந்து செல்ல ஆசைப்படும் நாடுகள் எல்லாமே வெளிநாட்டில் இருந்து வருகிறவர்களுக்கு தங்களது எல்லைகளை மூடியுள்ள நிலையில் சில வகுப்பினருக்கு மாத்திரம் உள்நுழையும் அனுமதியை திறந்து வைத்திருக்கின்றன.
அந்த சிறப்பான வரவேற்பை பெற்ற தரப்பினர்தான் மாணவ வீசாக்களில் செல்வோரும் அவர்களைச்சார்ந்தோரும்.
Student visa க்களை பற்றி அதனை பெறுவதற்கான தகைமைகளை பற்றி முன்னைய குறிப்பில் தெளிவாக எழுதியுள்ளேன்.
இப்போது மாணவர்களுக்காக திறந்துள்ள கதவினூடாக ஒரு குடும்பம் சட்டபூர்வமாக புலம் பெயர்வது எப்படி என்பதை இங்கே பார்ப்போம்.
மாணவ வீசாக்களுக்கு விண்ணப்பிக்கின்றவர்கள் திருமணமானவர்களாக இருந்தால் தங்களது துணை மற்றும் பிள்ளைகளை தங்களோடு சார்புடையவர்களாக ( dependents ) செல்லும் நாட்டிற்கு அழைத்து செல்வதற்கு சட்டபூர்வமாக இடமிருக்கிறது.
அதற்கான நிபந்தனைகளாக விண்ணப்பதாரி ஒருவர் பட்டப்பின் படிப்பொன்றிற்கு விண்ணப்பிக்கின்றவராக இருக்கவேண்டும்.
அவரிடம் ஒரு பட்டப்படிப்பிற்கான தகைமையோ ( first degree qualification) அல்லது தொழில்வாண்மை சார் தகைமையோ ( Professional qualifications ) இருந்தால் பட்டப்பின்படிப்பிற்கு விண்ணப்பிக்க இயலும்.
உதாரணமாக மனைவி BA degree பெற்றிருந்தால் கணவர் மனைவியின் dependant ஆக குறித்த நாடுகளுக்கு செல்ல இயலும்.
அவ்வாறு dependant visa வில் செல்லும் ஒருவர் கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் முழு நேரமாக (full time) வேலைவாய்ப்பொன்றை பெற முடியும்.
மாணவ வீசாவில் செல்லும் பிரதான விண்ணப்பதாரி தனது கற்கை நெறியை நிறைவு செய்து விட்டு PSW என்கிற Post Study Work Visa வகைக்கு தனது வீசா நிலையினை மாற்றும் போதும் துணையாக சென்றவர் தொடர்ந்தும் அவரது dependant ஆக தனது வீஸாவினை நீடித்துக்கொள்வார்.
இது சட்டபூர்வமாக அந்த நாடுகளில் நிரந்தர குடியுரிமையினை ( Permanent residence- PR) குடும்பத்தோடு பெற்றுக்கொள்ள மீண்டும் புதிதாய் பிறந்திருக்கும் வழிமுறையாகும்.
இது யாருக்கு சாத்தியமென்றால் கணவனோ மனைவியோ பட்டதாரியாக அல்லது Professional qualifications உடையோராக இருந்து பட்டப்பின்கற்கை ஒன்றை மேற்கொள்ள தகுதியுடையோராக இருந்தால் அந்த குடும்பம் இலகுவாக குடிபெயர ( migrate) முடியும்.
விண்ணப்பதாரியின் வயதெல்லை 35 ஆக இருக்க வேண்டும் ( சில வேளைகளில் இதில் தளர்வுப்போக்கும் உண்டு)
அத்தோடு துணையாக செல்கிறவர் எந்த தடையுமின்றி முழு நேர வேலையொன்றைப்பெறவும் முடியும்.
இந்த வாய்ப்புகள் இப்போது கனடா, பிரித்தானியா போன்ற அதிகம் பேர் குடிபெயர உத்தேசிக்கும் நாடுகளுக்கு உடனடிச்சாத்தியமாக இருக்கிறது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளிலும் இந்த வாய்ப்புகள் இருந்த போதும் அந்த நாடுகள் தமது எல்லைகளை கொரோனா அச்சம் காரணமாக மூடிவைத்துள்ளதால் அங்கே இந்த வகை குடியேற்றம் தற்காலிகமாக இப்போது சாத்தியமில்லை.
கலாநிதி பட்டமொன்றிற்கு பல்கலைக்கழக அனுமதி பெற்ற எமது Client ஒருவர் குடும்பமாக நியூஸிலாந்து செல்ல வீஸா விண்ணப்ப வேலைகளை ஆரம்பித்த போது துரதிஸ்ட வசமாக நியூஸிலாந்து தனது எல்லைகளை மூடிக்கொண்டதால் அவர் வீட்டிலிருந்து online மூலமாக தனது PhD கற்கையினை தொடர்கிறார்.
எல்லை திறக்கப்பட்டதும் அவரும் குடும்பமாக குடிபெயர்வது சாத்தியமாகும்.
இவ்வாறு கற்றறிந்தோர் தமது குடும்பத்தோடு புலம்பெயர்ந்து வளமிக்க தேசமொன்றில் வாழ்வதற்கான சட்டபூர்வமான வாய்ப்புகள் உள்ளன.
அதில் உயர்கல்விக்காக மாணவ வீசாக்களில் செல்வோருக்கு தற்போது பிரித்தானியாவும், கனடாவும் திறந்து வைத்திருக்கும் வாய்ப்புகள் மிகவும் பெறுமதியானவை.
அந்த வாயல்கள் அடைக்கப்பட முன் பயன்பெற தகுதிபடைத்தோர் பயன்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது.
இது தொடர்பான வழிகாட்டுதல்களுக்கும், விபரங்களுக்கும் எம்மை தொடர்பு கொள்ளலாம்.
LIFE Migration & Visa Consultancy-
Call for details- 0777 715 788.
மாணவர் வீசாவின் மூலம் குடிபெயர்தல்
________________________________
அடிப்படை கேள்விகளுக்கான பதில்கள்.
பிரித்தானியா மற்றும் கனடாவில் சட்டபூர்வமாக குடியுரிமையினை பெறுவதற்கான சாத்தியம் இப்போது இலகுவாகியிருக்கிறது.
இரண்டு நாடுகளிலும் மாணவ வீசாக்களில் உயர்கல்விக்காக இடம்பெயரும் மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பினை நிறைவு செய்த பின்னர் POST STUDY WORK VISA எனும் படிப்பிற்கு பின்னதான வேலைக்கான வீசாக்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நடைமுறை கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய இரண்டு நாடுகளிலும் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது.
கனடாவிலோ பிரித்தானியாவிலோ பட்டப்படிப்பொன்றை நிறைவு செய்யும் மாணவர் ஒருவர் இரண்டு வருடங்கள் Post Study Work Visa வினை பெற முடியும்.
பட்டப்படிப்பின் பிறகு குறித்த நாடுகளில் குறிப்பிட்ட காலம் work visa வின் அடிப்படையில் வாழும் ஒருவர் இந்த நாடுகளில் நிரந்தர வதிவிடத்திற்கான (Permanent residency) அனுமதி கோரி விண்ணப்பிக்கும் வாய்ப்பையும் பெறுகிறார். அதன் பிறகு அவ்வந்த நாடுகளின் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது வரை சட்ட ரீதியான வாய்ப்புகள் உண்டு.
இந்த முறையில் மாணவ வீசாக்களில் பயணத்தை தொடங்கும் ஒருவருக்கான அடிப்படை தகைமைகள் எவை என்பதை இங்கே பார்ப்போம்
பட்டப்படிப்பொன்றிற்கு ( undergraduate studies) விண்ணப்பிக்கும் மாணவர் ஒருவருக்கு 27 வயதுக்குள் இருக்கவேண்டும்.
முதுமானி( Post graduate) பட்டப்படிப்பை மேற்கொள்ள விளையும் மாணவர் ஒருவருக்கான வயதெல்லை 35 ஆக கணிக்கப்படுகிறது.
இருந்த போதும் ஒருவரது தகைமை, தொழில் அனுபவம், ஆங்கிலப்புலமை, பொருளாதார பின்புலம் என்பவற்றின் அடிப்படையில் இந்த வயதுக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும், விதிவிலக்குகளும் உண்டு.
அடுத்து ஆங்கிலப்புலமை பற்றி விளக்க வேண்டுமெனில் கனடாவை பொறுத்த வரை IELTS போன்ற ஆங்கில அறிவை தரம் அறியும் பரீட்சை பெறுபேறுகள் கட்டாயமாகிறது.
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பலவற்றில் அவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லை. GCE OL மற்றும் AL பரீட்சைகளில் ஏதாவதொன்றில் Credit pass இருந்தால் போதுமானது.
சில UK பல்கலைக்கழகங்கள் தங்களது உள்வாரி ஆங்கிலப்பரீட்சை மூலம் மாணவர்களை பரீட்சிக்கின்றார்கள்.
இந்த அடிப்படைகளோடு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொண்டால் கனடா அல்லது பிரித்தானியாவில் சட்டபூர்வமாக நிரந்தர குடியுரிமையினை பெறும் வரையிலான இலக்கொன்றை அடைந்து கொள்ள முடியும்.
விரிவான விளக்கத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் எம்மை தொடர்பு கொள்ள இயலும்.
தொடர்பிலக்கம் - 0777 715 788.
மீண்டும் பிரித்தானியா வரவேற்கிறதா?
2008 ம் ஆண்டு மதியம் கடந்த பொழுதொன்றில் London Liverpool Street ரயில் நிலையத்தில் இறங்கிய போது அதன் பிரமாண்டம் ஒரு விமான நிலையத்தை போல ஆச்சரியத்தை தந்தது.
அந்த பிரமாண்ட ரயில் நிலையத்திலிருந்து சிறு நடை தூரத்தில் நான் செல்ல வேண்டிய கல்லூரி இருந்தது. அதன் முதல்வருடன் அன்று பின்னேரம் ஒரு appointment இருந்தது.
இலங்கை மாணவர்களை அந்த கல்லூரிக்கு கற்றல் நடவடிக்கைகளுக்கு அனுப்புவது தொடர்பாக கலந்துரையாடவும், அதையொட்டிய ஒப்பந்தமொன்றை செய்யவுமே அந்த meeting ஏற்பாடாகியிருந்தது.
ரயில் நிலையத்தின் பிரமாண்டத்தில் லயித்தவாறே வெளிச்செல்லும் திசையினை நோக்கி நடக்கும் போது ஓரிடத்தில் ஒரு கும்ப அளவிலான பெண்கள் குழுமியிருந்தார்கள்.
அருகில் சென்ற போது அவர்கள் இந்தியப்பெண்கள் என்பது புரிந்தது.
சுமார் ஐம்பதிற்கும் மேலானவர்கள் கூடிச்சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அதில் இருந்த ஒருவரிடம் பேச்சுக்கொடுத்த போது அவர்கள் யார் எதற்காக இங்கே கூடிக்கிடக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.
அதில் ஒருத்தி இவ்வாறு சொன்னாள்....
“நாங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு House maids ஆக வேலைக்கு போக இருந்தோம் ஆனால் எங்களுடைய agent, London இற்கு வருவது easy என்று இங்கே அனுப்பிவிட்டார்” என்றாள்!
அவர்களுக்கான English course அருகில் உள்ள கல்லூரியொன்றில் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ளதாகவும் அதுவரை அங்கே இருப்பதாகவும் அறிய முடிந்தது.
2010 ம் ஆண்டிற்கு முதல் பிரித்தானியாவில் குடியேற்றக்காரர்களுக்கு நல்ல வரவேற்பும் மவுசும் இருந்தது. அப்போது Labour party மத்தியில் ஆட்சியில் இருந்தது.
2010 இல் ஆட்சிக்கு வந்த Conservative party குடியேற்றக்காரர்கள் தொடர்பில் கடும் இறுக்கமான போக்கை கொண்ட கட்சியாகும்.
அது Liberal Democratic Party உடன் சேர்ந்து கூட்டாக ஆட்சி அமைத்த போதும் குடிவரவு தொடர்பான கடுமையான சட்டங்களை கொண்டு வந்தது.
அதன்காரணமாக மாணவ வீசாக்களில் முன்னர் இலகுவாக சென்றவர்கள் போல ( நான் ரயில் நிலையத்தில் சந்தித்தர்களை போல) 2010 இற்கு பிறகு நிலைமை இருக்கவில்லை.
புள்ளி அடிப்படையில் ( Points based system) வீசா வழங்குகிற நடைமுறை அமுலுக்கு வந்தது. அதிலும் உரிய புள்ளிகளை மாணவர்கள் பெற்ற போதும் “பணம் எங்கே இருந்து வந்தது? நீ இங்கே வந்தால் திரும்பி போகமாட்டாய்” போன்ற பல்வேறு காரணங்களை சொல்லி வீசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் போக்கும் உருவானது.
அந்த நிலைமை கடந்த பல ஆண்டுகள் தொடர்ந்த போதும் உண்மையான கற்றல் எண்ணத்தோடு செல்கிற மாணவர்களுக்கு (genuine students)வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து அண்மையில் பிரித்தானியா வெளியேறிய பிறகு ஏற்பட்ட பொருளாதார நிலைமைகளும் கொரோனாவினால் ஏற்பட்ட பின்னடைவுகளும் UK இன் வருமானக்கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை செலுத்தின.
ஏலவே 2010 இலிருந்து நடைமுறையிலிருந்த கடுமையான போக்கினால் UK பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை கண்டது.
இதனால் தேசிய வருமான இழப்பு பெருமளவில் நிகழ்ந்தது.
UK இழந்து கொண்டிருந்த அந்த சர்வதேச மாணவர் சந்தையினை அவுஸ்திரேலியா லாவகமாக கைப்பற்றிக்கொண்டது.
இந்த நிலையில்தான் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியதும், கொரோனாவும் நெருக்கடிகளை தோற்றுவிப்பதை உணர்ந்து கொண்ட பிரித்தானிய அரசு மாணவ வீசாக்களை வழங்குவதில் ஓரளவு நெகிழ்வுத்தன்மையினை கடைப்பிடிக்க தொடங்கியது.
புள்ளித்திட்டத்தில் ( points based system) உள்ள புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு வேறு சாட்டுகளை சொல்லி வீசா மறுக்கும் நடைமுறையினை கைவிட்டு பல்கலைக்கழக அனுமதியும், வங்கி மீதியும், போதிய ஆங்கில அறிவும் உள்ள மாணவர்களுக்கு எந்த தடங்கலும் இன்றி வீசா வழங்கும் நடையினை UK தற்போது கைக்கொண்டு வருவது மகிழ்ச்சி தரும் மாற்றமாகும்.
அத்தோடு முன்னர் இருந்த Post Study Work visa நடை முறையினை ரத்துச்செய்திருந்த இந்த Conservative அரசு மீண்டும் அந்த வீசா நடைமுறையினை எதிர்வரும் மாதம் முதல் மீள நடை முறைப்படுத்தப்போவதாகவும் அறிவுத்துள்ளது.
இதனால் பிரித்தானியாவிற்கு உயர்கல்விக்காக செல்கின்றவர்கள் தங்களது பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் இரண்டு வருடங்களுக்கு Work visa வில் அங்கே வேலைவாய்ப்பொன்றை பெறமுடியும்.
இந்த நடைமுறையினை சரியாக பின்பற்றும் ஒருவர் பின்னர் பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடம் (Permanent residency) கோரி விண்ணப்பிக்கவும் முடியும்.
கொரோனா நிலமைகளினால் அவுஸ்திரோலியாவும், நியூஸிலாந்தும் தமது எல்லைகளை மூடியுள்ள நிலையில் பிரிட்டனும் , கனடாவும் சர்வதேச மாணவர்களை வரவேற்றுக்கொண்டிருக்கின்றன.
பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ள மாணவ வீசாக்கள் தொடர்பான இந்த நெகிழ்வுப்போக்கை ஆர்வமுள்ளோர் சரியாகப்பயன்படுத்திக்கொள்ள சந்தர்ப்பமொன்று வாய்த்துள்ளது.
ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க தயார்.
விபரங்களுக்கு தொடர்பிலக்கம்- 0777 715 788.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Colombo
Colombo
The Law Writing Solution provides professional service on legal draftings, SOPs & Visa appeals, etc.
Colombo
I have Home made king � coconut wine refined over 2 years and grapes wine too....
Colombo, 01
VISION=To be recognized Globally as an innovative and efficient Human Capital solution partner. MISS
No. 73, MJC Fernando Mw, Idama, Moratuwa
Colombo, 10400
We specialise in supply of Heavy Industrial Machinery and Spares, Work-boats and Passenger Boats, Ma
No. 23 New Market Complex, Madiwela Road, Thalawathugoda
Colombo
Providing Immigration Services